Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழ் சிறி

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by தமிழ் சிறி

  1. இவ்வளவு பாதுகாத்ததும்... இந்த ஒன்றுக்குத்தானா. 😂 🤣
  2. "நியூயோர்க் ஸ்ரைலில்" சாரம் கட்டும் முறை. 😂 🤣
  3. மலிபன் பிஸ்கெட்டுகளின் ரசிகன் நான். இப்போதும் இங்குள்ள தமிழ்க்கடைக்குப் போனால்... இரண்டு பக்கற் பிஸ்கெட்டாவது வாங்கிக் கொண்டு வருவேன். அதன் வரலாறை அறியத் தந்த ஈழப்பிரியனுக்கு நன்றி. 🙂
  4. காணொளியில் உள்ளது போல் சாரம் கட்டினால்.... காலையில் கட்டிய சாரம் இரவு படுக்கப் போகும் மட்டும் அவிழாது. 😂 🤣
  5. மான்செஸ்டர் விமான நிலைய சம்பவத்தின் புதிய மற்றும் தெளிவான வீடியோ. இவர்கள் ஒரு பிரித்தானிய போலீஸ் பெண்ணை தாக்கி மூக்கை உடைத்த குற்றவாளிகள். ஒழுங்கையும் ஒழுக்கத்தையும் மீட்டெடுத்த மான்செஸ்டர் காவல்துறைக்கு பாரிய ஆதரவு.
  6. பாகிஸ்தான் இளைஞர்கள் மீது பிரித்தானிய பொலிஸார் தாக்குதல்! பிரித்தானியாவில் மான்செஸ்டர் விமானநிலையத்தில் பொலிஸார் அதிகாரிகள் சிலர், பாகிஸ்தானை சேர்ந்த இளைஞர்களை காலால் தாக்கும் காணொளியொன்று சமூக ஊடகங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதல் நேற்றிரவு நடத்தப்பட்டுள்ள நிலையில், ரோச்டேல் பொலிஸ் நிலையத்திற்கு வெளியே, நூற்றுக்கும் மேற்பட்டோர் ஆரப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து சம்பவத்துடன் தொடர்புடைய பொலிஸ் அதிகாரி ஒருவர், பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த வீடியோவில், இளைஞர் ஒருவர் தரையில் விழுந்து கிடப்பதையும், அவரை நோக்கி இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள், மின்சாரம் பாய்ச்சும் துப்பாக்கியை நீட்டும் காட்சிகள் பதிவாகியுள்ளன. அத்துடன், மற்றொரு இளைஞனின் தலையை பொலிஸ் அதிகாரி ஒருவர் காலால் மதிப்பதையும் அவதானிக்க முடிகின்றது. மேலும், மற்றொரு இளைஞர் மீது மிளகு தண்ணீர் வீசி, அவரின் கழுத்தை மடக்கி இளைஞனை கீழே தள்ளும் காட்சியும் பதிவாகியுள்ளது. அத்துடன், தற்போது வைரலாகி வரும் இந்த வீடியோவில், நபர் ஒருவரை ஒரு பொலிஸ் உத்தியோகத்தர் தரையில் வீழ்த்துவதையும் கைகளை பின்பக்கமாக இழுத்து வைத்திருப்பதையும், அந்த நபரை அதிகாரி ஒருவர் காலால் உதைப்பதையும் காணமுடிகின்றது. இதில் பொலிஸாரின் தாக்குதலுக்கு இலக்கான ஒரு இளைஞன் தான் சாதாரண மக்கள் எனக் கூறுவதையும் அவதானிக்க முடிகின்றது. இந்த சர்ச்சைக்குறிய வீடியோ வெளியானதை தொடர்ந்து பிரித்தானிய, பொலிஸார் குறித்து கேள்வி எழுந்துள்ளது. பொலிஸார் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட பின்னரே இந்த சம்பவங்கள் இடம்பெற்றதாகவும், இதில் பெண் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவருக்கு காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் மான்செஸ்டர் பொலிஸார் தெரிவித்துள்ளனர். எவ்வாறாயினும், இந்த தாக்குதலுக்கு இனவெறியே காரணம் என மெட்ரோபொலிட்டன் காவல்துறையின் முன்னாள் சிரேஸ்ட அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார். https://athavannews.com/2024/1393611
  7. 22 சிங்கள பாடசாலைகளில் ஆசிரியர் பற்றாக்குறை: வவுனியாவில் போராட்டம்! வவுனியா தெற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட 22 சிங்கள பாடசாலைகளில் ஆசிரியர் பற்றாக்குறை காணப்படுவதாகத் தெரிவித்து வலயக்கல்வி பணிமனை முன்பாக நேற்று ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது. இதன்போது 22 சிங்கள பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையினால் மாணவர்களின் கற்றல் செயல்பாடுகளை முன்னெடுக்க முடியாத நிலை காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் இணைந்து வவுனியா தெற்கு வலயக்கல்வி பணிமனைக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணி நேரமாக இடம் பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் அதிகளவான மக்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1393527
  8. சுவியர்.... வயலில் நடக்கும் போது, நரி கடித்தால், அரசாங்கத்திடம் இருந்து நல்ல காசு எடுக்கலாம். ஆனால் நரிதான்... கடிக்க மாட்டேன் என்று ஓடி ஒளிக்கிறது. 😂
  9. அட... இன்று காலை நான், நடந்த வயல். 👍 😂 நரி... கூச்ச சுபாவம் உள்ளது என்று சொல்வார்கள். மனித நடமாட்டத்தை கண்டவுடன் ஓடி ஒளித்து விடும். ஓநாய்தான் ஆபத்தானது. இந்த வயலில் ஓநாய் இல்லை என்று நினைக்கின்றேன். ஆனாலும் மனதில் ஒரு வித பயத்துடன்தான் நடப்பது. 🤣
  10. 🚶‍♀️🚶🚶🏼‍♂️🚶‍♀️🚶🚶🏼‍♂️ அப்படி சொல்லாதீங்க.... விடிய 4:30 க்கு எழுந்து,பக்கத்தில் உள்ள வயல் பகுதியில் 7 கிலோ மீற்றர் வேக நடை, நடந்து போட்டு வந்திருக்கின்றேன். 🚶🏼‍♂️🚶🚶‍♀️
  11. சாரத்துடன் அந்தப் பார்வை... நல்லாயிருக்கு. 👍 ஜட்டி... போட்டுக் கொண்டுதான் , நிலம் கொத்த வேணும். 😂 இல்லாட்டி... பூரான், பூச்சி கடித்துப் போடும். 🤣 இப்பதான்... பார்த்து, கருத்து எழுதியிருக்கு அல்வாயான். 😂 🤣
  12. ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் சரத் பொன்சேகா! 2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடப் போவதாக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். இதை அவர் தனது X கணக்கில் அதிகாரப்பூர்வ அறிவித்துள்ளார். இதேவேளை அண்மையில் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவினால் “இராணுவ தளபதி தேசத்துக்கு வழங்கிய வாக்குறுதி – இந்த யுத்தம் அடுத்த தளபதி வரையில் நீடிக்க இடமளியேன்” என்ற தலைப்பில் எழுதப்பட்ட நூல் வெளியீட்டு விழா நடைபெற்றிருந்தது. இதன்போது பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவின் சேவைக்கு பாராட்டு தெரிவித்த ஜனாதிபதி, யுத்தத்தை வெற்றிகொண்டது மாத்திரமன்றி, பல்வேறு அரசியல் சவால்களுக்கும் முகம்கொடுத்தவர் என்ற வகையில் எதிர்காலத்தில் நாட்டிற்கு பெரும் சேவையாற்ற முடியும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1393494
  13. பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு இழப்பீடு வேண்டும் – சஜித் கோாிக்கை! தகனமா, அடக்கமா என்ற விவகாரத்தில் மன்னிப்புக் கேட்டு பிரச்சினையில் இருந்து தப்பி ஓட முயற்சிக்க வேண்டாம் எனவும் பாதிக்கப்பட்ட முஸ்லிம் மக்களுக்கு அரசாங்கம் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார். நாடாளுமன்றத்தில் விசேட கூற்று ஒன்றை முன்வைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார். கொரோனா காலப்பகுதியில் இலங்கையில் முன்னெடுக்கப்பட்ட கட்டாய தகனக் கொள்கைக்கு மன்னிப்பு கேட்பதென்பது ஒரு சிறந்த விடயம் எனவும் இந்த தீர்மானத்திற்கு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் அமைச்சரவையில் அங்கம் வகித்த அமைச்சர்கள் ஆதரவளித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும், இதன் மூலம் முஸ்லிம் மக்களின் சமய, கலாசார உரிமைகள் முற்றாக மீறப்பட்டதாகவும் நாட்டில் இனவாதமும் மதவாதமும் முன்னெடுக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டள்ளார். முஸ்லிம்களை இலக்கு வைத்து அடக்கமா தகனமா என்ற தீர்மானம் எந்த நபரின் அறிக்கையின் அடிப்படையில் எடுக்கப்பட்டது? இது தொடர்பாக ஆலோசனை வழங்கியது யார்? இந்த ஆலோசனை தொடர்பாக அரசியல் தலைமைகள் பரிசீலித்து ஆராய்ந்து பார்க்காததன் காரணம் என்ன போன்ற விடயங்களையும முன்வைக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். உலக சுகாதார ஸ்தாபனத்தின் ஆலோசனைகளை கைவிட்டு, முஸ்லிம் மக்களுக்கு எதிராக இவ்வாறான குற்றச் செயலைச் செய்ய தவறான தீர்மானங்களை எடுத்தவர்களைக் வெளிப்படுத்தி, தகனமா அடக்கமா விவகாரத்தில் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஆனால், முஸ்லிம் மக்களிடம் மன்னிப்புக் கேட்டு பிரச்சினையில் இருந்து தப்பி ஓட முயற்சிக்க வேண்டாம் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேலும் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2024/1393496
  14. பௌத்த கல்வியை அபிவிருத்தி செய்யும் பொறுப்பை விட்டுக்கொடுக்கப் போவதில்லை! “நாடு எவ்வாறான சவால்களுக்கு முகம் கொடுத்தாலும் பௌத்த கல்வியை அபிவிருத்தி செய்யும் பொறுப்பை ஒருபோதும் விட்டுக்கொடுக்கப் போவதில்லை” என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அலரிமாளிகையில் நேற்றைய தினம் இடம்பெற்ற மாணவர்களுக்கான புலமைப்பரிசில் வழங்கும் திட்டத்தின் ஆரம்ப விழாவில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” ஜனாதிபதி நிதியத்தில் இருந்து புலமைப்பரிசில்கள் வழங்கும் வேலைத்திட்டத்தின் புதிய கட்டத்தை இன்று நாம் ஆரம்பித்துள்ளோம். சமய மாணவர்களுக்கும் இந்த புலமைப்பரிசில்களை வழங்க நாம் நடவடிக்கை எடுத்துள்ளோம். இவர்களுக்கான நிதிகளை அவர்களின் வங்கிக் கணக்குகளுக்கு நாம் மாற்றியுள்ளோம். இந்த உதவித் திட்டத்திற்கு ஒரு பின்னணி உள்ளது. கடந்த 4 வருடங்களில் இந்நாட்டு மக்கள் எதிர்கொண்டிருந்த துன்பங்களை நான் சொல்லத் தேவையில்லை. பொருளாதாரத்தின் வங்குரோத்தினால் மக்கள் பாதிக்கப்பட்டனர். தற்போது நாட்டின் பொருளாதாரம் ஸ்திரமாகியுள்ளது. எனவே அரசாங்கம் என்ற வகையில் நாம் மக்களுக்கு நிவாரணம் வழங்க கடமைப்பட்டுள்ளோம். அதற்காக அஸ்வசும, உறுமய போன்ற பல்வேறு திட்டங்களை நாம் நடைமுறைப்படுத்தியுள்ளோம். குறைந்த வருமானம் பெறுகின்ற குடும்பங்களைச் சேர்ந்த திறமையான மாணவர்களின் கல்வியைத் தொடர்வதற்கும் நாம் நடவடிக்கை எடுத்துள்ளோம். ஜனாதிபதி நிதியத்தின் ஊடாக பல புலமைப்பரிசில் திட்டங்களை தற்போது நான் அறிமுகப்படுத்தியுள்ளேன். நாட்டில் துறவிக் கல்விக்கான கற்றல் செயற்பாடுகள் எந்த காரணத்திற்காகவும் வீழ்ச்சியடைவதை நான் அனுமதிக்க மாட்டேன். பௌத்த சமய ஒழுங்கு முறையில் அதிக கவனம் செலுத்தியுள்ளோம். நாட்டில் புதிய தலைமுறைக்கா பிக்குகளை கட்டியெழுப்புவதற்கு தேவையான பின்னணியை நாம் தயார் செய்ய வேண்டும். அதற்காக அரசாங்கம் செய்யக்கூடிய முக்கியமான செயற்பாடுதான் இந்த புலமைப்பரிசில் திட்டமாகும். நாட்டில் தொடர்ந்து பௌத்த கல்வியை முன்னெடுத்துச் செல்ல வேண்டும். நாட்டில் எந்தப் பிரச்சினைகள் ஏற்பட்டாலும் இந்த கடமையில் இருந்து எவரும் மீறிச் செல்லமுடியாது. நாடு எவ்வாறான சவால்களுக்கு முகம் கொடுத்தாலும் பௌத்த மதக் கல்வி தொடர்ந்து ஊக்குவிக்கப்படும்” இவ்வாறு ஜனாதிபதி தெரிவித்துள்ளார். https://athavannews.com/2024/1393521
  15. ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கும் விஜயதாச ராஜபக்ஷ! 2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் தன்னையும் வேட்பாளராக முன்னிறுத்தப் போவதாக நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இன்று நடைபெற்றுக்கொண்டு இருக்கும் விசேட செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்ட அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை சஜித் பிரேமதாச, அநுர குமார திசாநாயக்க, திலித் ஜயவீர, சரத் பொன்சேகா ஆகியோர்கள் தாங்கள் ஜனாதிபதி வேட்பாளர்கள் பட்டியலில் உள்ளமை குறிப்பிடத்தக்கது https://athavannews.com/2024/1393530
  16. அம்பானி வீட்டு கல்யாண செலவு மட்டுமல்ல பரிசுகளும் கோடியில் தான் கிடைத்துள்ளது! ஆனந்த் அம்பானி – ராதிகா மெர்ச்சண்ட் தம்பதிக்கு கொடுக்கப்பட்ட திருமண பரிசுகள் தொடர்பான சில தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. உலகப்பெரும் பணக்காரர்களில் ஒருவரான அம்பானி, சுமார் 5 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் தனது மகன் ஆனந்த் அம்பானியின் திருமணத்தை நடத்தி முடித்துள்ளார். இவர்களது திருமணம் மற்றும் ரிசப்ஷனுக்கு உலகம் முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கானவர்கள் பங்கேற்றாலும், முக்கிய பிரபலங்கள் தவறாமல் இடம்பெற்றிருந்தனர். திருமண பரிசாக முகேஷ் அம்பானி மற்றும் நீதா அம்பானி சார்பாக விலையுயர்ந்த கார், நூறு கோடி ரூபாய் வைரம் மற்றும் முத்துக்கள் அடங்கிய நகைகள் பரிசளிக்கப்பட்டது. அத்தோடு, Palm Jumeirah வில் சுமார் 3 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் சொகுசு மாளிகையை பரிசாக வழங்கியுள்ளனர் முகேஷ் அம்பானி – நீதா தம்பதி. இதன் மதிப்பு சுமார் 640 கோடி ரூபாய் என்கிறது தரவுகள். இந்த சொகுசு மாளிகையில் 10 படுக்கையறைகள் மற்றும் ஒரு தனி கடற்கரையும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமல்லாது, திருமணத்தில் பங்கேற்ற பல முக்கிய பிரபலங்கள் ஆடம்பர பரிசுகளை வழங்கியுள்ளனர். திருமண விழாவில் பங்கேற்ற பாலிவுட் நடிகர் ஷாருக்கான், சுமார் 40 கோடி ரூபாய் மதிப்பில் ஃபிரான்ஸில் உள்ள பிளாட்டை பரிசாக வழங்கியுள்ளனர். அதேபோல், 16 கோடி ரூபாய் மதிப்பிலான புது வகை ஸ்போர்ட்ஸ் பைக்கை பரிசாக வழங்கியுள்ளார் சல்மான் கான். தொடர்ந்து, 20 கோடி ரூபாய் மதிப்பிலான ரோல்ஸ் ராயல்ஸை ரன்வீர் சிங் – தீபிகா படுகோன் தம்பதி பரிசாக வழங்கியுள்ளனர். இதேபோல், ரன்பீர் கபூர் – ஆலியா பட் தம்பதியினர் 9 கோடி மதிப்பிலான Mercedes car ஐ பரிசாக வழங்கியுள்ளனர். அக்‌ஷய் குமார் 60 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்க பேனாவை வழங்கியுள்ளார். நடிகர் – நடிகைகள்தான் பரிசளித்தார்களா என்றால் இல்லை. உலகப்பணக்காரர்கள் தொடங்கி பேஸ்புக், கூகுள் நிறுவனங்களின் தலைமை நிலைய அதிகாரிகள் வரை முக்கிய பிரபலங்கள் பரிசுகளை வாரி வழங்கியுள்ளனர். ஃபேஸ்புக் தலைமை நிலய அதிகாரி மார்க் செக்கர்பர்க் 300 கோடி ரூபாய் மதிப்பிலான ஜெட் விமானத்தை வழங்கியுள்ளார். 180 கோடியில் தனியார் சொகுசு கப்பலை பில்கேட்ஸும், 100 கோடி ரூபாயில் ஹெலிகாப்டரை சுந்தர் பிச்சையும் பரிசாக வழங்கியுள்ளனர். இத்தோடு புகழ்பெற்ற அமெரிக்க மல்யுத்த வீரர் ஜான் சீனா 3 கோடி ரூபாய் மதிப்பிலான Lamborghini காரை பரிசளித்துள்ளார். https://athavannews.com/2024/1393475
  17. கடவுச்சீட்டு தரவரிசைப் பட்டியலில் சிங்கப்பூர் முதலிடம்! உலகின் மிகவும் சக்திவாய்ந்த கடவுச்சீட்டு தரவரிசைப் பட்டியலில் சிங்கப்பூர் முதலிடம் பிடித்துள்ளது. அந்தவகையில் சிங்கப்பூர் கடவுச்சீட்டைப் பயன்படுத்தி 195 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்க முடியும் என தெரிவிக்கபட்டுள்ளது. இதில் இலங்கை கடவுச்சீட்டு 84ஆவது இடத்தை பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. சர்வதேச விமான போக்குவரத்து சங்கத்தின் தரவுகளின் அடிப்படையில் உலகின் சக்திவாய்ந்த 199 நாடுகளின் கடவுச்சீட்டுகளின் தரவரிசையை ஹென்லி பாஸ்போர்ட் இன்டெக்ஸ் தற்போது வெளியிட்டுள்ளது. அந்த வகையில் உலகின் மிகவும் சக்திவாய்ந்த கடவுச்சீட்டு தரவரிசையில் சிங்கப்பூர் முதலிடம் பிடித்துள்ளது. மேலும், பிரான்ஸ், இத்தாலி, ஜேர்மனி, ஜப்பான் மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகள் இந்த தரவரிசையில் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளன. இந்த நாடுகளின் கடவுச்சீட்டைப் பயன்படுத்தி 192 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2024/1393513

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.