Everything posted by தமிழ் சிறி
-
அனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சன்ட் பிரம்மாண்ட திருமண விழா.
FULL VIDEO - Anant Ambani & Radhika Merchant Full Wedding Event Video
-
அனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சன்ட் பிரம்மாண்ட திருமண விழா.
உலகமே வியந்து பார்க்கும் பிரம்மாண்ட திருமணம்
-
அனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சன்ட் பிரம்மாண்ட திருமண விழா.
திருமணம் என்றாலே கொண்டாட்டம்தான். அதிலும் இந்தியாவின் நம்பர் ஒன் தொழிலதிபரும், ஆசியாவின் நம்பர் ஒன் பணக்காரருமான ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானியின் இல்லத் திருமண விழா என்றால் சொல்லவா வேண்டும். உலகையே இந்த திருமணம் பிரமிக்க வைத்துள்ளது. ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானியின் இளைய மகன் அனந்த் அம்பானிக்கும் என்கோர் ஹெல்த்கேர் நிறுவன தலைமை செயல் அதிகாரி விரேன் மெர்ச்சன்டின் மகள் ராதிகா மெர்ச்சன்டுக்கும் கடந்த ஜனவரி மாதம் 7 -ஆம் தேதி திருமணம் நிச்சயிக்கப்பட்டது. குஜராத்தி மொழியில் கோல் தானா (“Gol Dhana”) என்ற அழைக்கப்படும் நிச்சயதார்த்த விழாவில் உலக அழகி ஐஸ்வர்யோ ராய், தீபிகா படுகோன், ரன்வீர் சிங் உள்ளிட்ட பிரபலங்கள் வருகை தந்து வாழ்த்தினர். https://tamil.news18.com/national/anant-ambani-radhika-merchant-marriage-full-schedule-1522477.html
-
தமிழ் மக்கள் கூட்டணியின் முதலாவது தேசிய மாநாடு!
எமது தனித்துவத்தை ஏற்கும் ஒரு அரசியல் யாப்பு உதயமாக வேண்டும் – சி.வி.விக்னேஸ்வரன்! எம்முடைய இன்றைய அவலம் ஒற்றையாட்சி அரசியல் யாப்பு மூலம் வந்ததே என்பதை எமது தமிழ் மக்கள் ஆழ உணர வேண்டும் என்பதுடன், எமது தனித்துவத்தை ஏற்கும் ஒரு அரசியல் யாப்பும் உதயமாக வேண்டும் என தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். யாழ். தந்தை செல்வா கலையரங்கத்தில் இன்று இடம்பெற்ற தமிழ் மக்கள் கூட்டணியின் தேசிய மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இவ்விடயம் தொடா்பாக அவா் மேலும் தொிவிக்கையில், எம்முடைய இன்றைய அவலம் ஒற்றையாட்சி அரசியல் யாப்பு மூலம் வந்ததே என்பதை எமது தமிழ் மக்கள் ஆழ உணர வேண்டும். எமது தனித்துவத்தை ஏற்கும் ஒரு அரசியல் யாப்பு உதயமாக வேண்டும். தமிழ்ப்பேசும் மக்கள் வேண்டுவது ஒற்றையாட்சி அரசியல் யாப்பின் கீழான 13வது திருத்தச் சட்டத்தை அல்ல. எமக்கு சர்வதேசச் சட்டத்தின் கீழ் தரப்பட்டிருக்கும் சுயநிர்ணய உரிமையையே நாங்கள் கேட்கின்றோம். தமிழ்ப் பொது வேட்பாளர் இந்தக் கருத்தையே தமிழ்ப்பேசும் மக்களிடையே முன்னிறுத்த இருக்கின்றார். வடகிழக்கில் ஐக்கிய நாடுகள் மக்கள் தீர்ப்பைக் கோரி தேர்தல் நடத்தட்டும். தமிழ்ப்பேசும் மக்கள் எதனைக் கோருகின்றார்களோ அதனை வழங்க ஐக்கிய நாடுகள் முன்வரவேண்டும் என்ற கருத்தை சர்வதேசத்தின் முன் முன்னிலைப்படுத்தவே தமிழ் பொது வேட்பாளர் காத்து நிற்கின்றார். 13ஐத் தருவதால் எமது மக்களுக்கு விடிவு காலம் ஏற்படாது. ஏற்கனவே 13ன் கீழுள்ள பல அதிகாரங்கள் மத்திய அரசாங்கத்தினால் எம்மிடம் இருந்து பறித்தெடுக்கப்பட்டுள்ளன. இப்போது இருப்பது வெறும் கோதே! மேல்த்தோலே! அதிலும், தரப்பட்டிருக்கும் மிக சொற்ப பொலிஸ் அதிகாரங்களைக்கூட வழங்க முடியாது என்று ஒரு வேட்பாளர் கூறியுள்ளார். நாம் ஜனாதிபதித் தேர்தலில் வெல்ல வேண்டும் என்று போட்டியிடவில்லை. எமது தனித்துவத்தை உலகறியச் செய்யவும் எமது ஜனநாயக உரித்தை ஐக்கிய நாடுகள் மூலம் பரீட்சித்துப் பார்க்க ஒரு வேண்டுதல் மேடையாக இத்தேர்தலைப் பாவிக்கவுமே நாம் ஒரு தமிழ் பொது வேட்பாளரை முன்னிறுத்த உத்தேசித்துள்ளோம். நாங்கள் பொது வேட்பாளரை நிறுத்த இருக்கின்றோம் என்றவுடன் மூன்று முக்கிய சிங்கள வேட்பாளர்களும் தமது சேனை பரிவாரங்களுடனும் படைகளுடனும் இங்கு வந்து 13ஐத் தருகின்றோம் என்று சொல்லிச் சென்றுள்ளார்கள்” என தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் மேலும் தொிவித்தாா். https://athavannews.com/2024/1393051
-
தமிழ் மக்கள் கூட்டணியின் முதலாவது தேசிய மாநாடு!
தமிழ்த் தேசியம் சார்ந்த கட்சிகள் மக்களிடமிருந்து அந்நியப்பட்டுள்ளன – சிறீதரன்! தமிழ்த் தேசியம் சார்ந்த கட்சிகள் அன்று மக்களிடமிருந்து அந்நியப்பட்டு நிற்கின்றன. இந்த நிலைமையைச் சீர்செய்ய தமிழ் தேசிய அரசியல் மறுசீரமைப்பு முயற்சிகளை விரைவுபடுத்த வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார். தமிழ் மக்கள் கூட்டணியின் தேசிய மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இவ்விடயம் தொடா்பாக அவா் மேலும் தொிவிக்கையில், கொள்கை ரீதியாக ஒன்றுபட்டுச் செயற்படுகின்ற ஏனைய தமிழ் அரசியல் கட்சிகளையும் அரவணைத்தவாறு புலம்பெயர் தேசக் கட்டமைப்புகளுடனும் இணைந்த வகையில் தமிழர்களின் தாகம் வெல்ல உழைப்பதே இங்குள்ள ஒவ்வொருவரினதும் முதன்மைக் கடமையாகும். கடந்த எட்டுத் தசாப்தங்களுக்கு மேலாக ஈழத்தமிழர்களின் சுதந்திரத்துக்காக, அவர்களின் இறையாண்மையை நிலை நிறுத்துவதற்காக, சிங்கள பௌத்த ஒடுக்குமுறை ஆட்சியாளர்களுக்கு எதிராக, இரத்தமும் சதையுமாக நடைபெற்று வருகின்ற போராட்ட வலியின் நீட்சியில் உருவான, ஈழத்தமிழர்களின் சுதந்திரத்திற்கான அரசியல் இயக்கங்களில் ஒன்றாகத் தன்னைக் கட்டமைத்துக் கொண்டுள்ள ‘தமிழ் மக்கள் கூட்டணியின்’ முதலாவது தேசிய மாநாட்டில் உரையாற்றக் கிடைத்த இந்த சந்தர்ப்பத்தை, காலத்தேவை கருதிய வரலாற்றுச் சந்தர்ப்பங்களில் ஒன்றாகவே நான் பார்க்கிறேன். இன்று தமிழ்த் தேசியம் சார்ந்த கட்சிகள் மக்களிடமிருந்து அந்நியப்பட்டு நிற்கின்றன. இங்கு தான் உரிமை அரசியலை சலுகை அரசியல் வெல்கிறது. இந்த நிலைமையைச் சீர்செய்ய தமிழ் தேசிய அரசியல் மறுசீரமைப்பு முயற்சிகளை விரைவுபடுத்த வேண்டும். கொள்கை ரீதியாக ஒன்றுபட்டுச் செயற்படுகின்ற ஏனைய தமிழ் அரசியல் கட்சிகளையும் அரவணைத்தவாறு புலம்பெயர் தேசக் கட்டமைப்புகளுடனும் இணைந்த வகையில் தமிழர்களின் தாகம் வெல்ல உழைப்பதே இங்குள்ள ஒவ்வொருவரினதும் முதன்மைக் கடமையாகும் என்பதை வலியுறுத்த விரும்புகிறேன். எமது சிந்தனைகளை மீள் வடிவமைப்புக்கு கொண்டுவருவதன் மூலம் காலத்தின் வேகத்துடனும், பூகோள மாற்றங்களுடனும் எமது மக்களின் அபிலாசைத் தளங்களிலிருந்து தடம்புரளாது பயணிக்க வேண்டியுள்ளது. இந்த நெருக்கடிமிக்க சூழலை எளிதாகக் கையாள்வதாயின், தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்களும், பிரதிநிதிகளும், புலத்திலிருந்தவாறு இனத்தின் விடுதலைக்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வரும் உறவுகளும் ஒருங்குசேர தம் அரசியற் பயணத்தை முன்கொண்டு செல்வதற்கான எதிர்கால வழி வரைபடம் ஒன்றையும் அதுசார் கொள்கை வகுப்புகளையும் உருவாக்க வேண்டும். அத்தகையதோர் தளத்தில் நின்று எல்லாத் தரப்பினரையும் இணைத்துச் செயலாற்றுவதன் தேவையுணர்ந்த ஒருவனாக, அந்தத் தளத்தின் இணைப்புப்பாலமாக இருந்து என் எல்லா இயலுமைகளைக் கடந்தும் ஈழத்தமிழினத்தின் அரசியல் வேட்கையைச் சுமந்த பயணத்தின் பங்குதாரராக செயலாற்றுவதில் எனக்கிருக்கும் விருப்பையும், கடமையையும் நான் இவ்விடத்தில் வெளிப்படையாகவே பதிவு செய்கிறேன்” என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் மேலும் தொிவித்தாா். https://athavannews.com/2024/1393048
-
சம்பந்தர் காலமானார்
சம்பந்தன் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த காலகட்டத்தில்... சிறைக் கைதிகள் விடுதலை சம்பந்தமாக அவரை, கைதிகள் சார்பில் இருவர் சந்திக்க சென்ற போது... அவர்களை நிமிர்ந்து கூட பார்க்காமல், பத்திரிகை படிக்கும் சாட்டில், தனது முகத்தை மறைத்துக் கொண்டு இருந்து வந்தவர்களை அவமானப் படுத்தி அனுப்பிய காணொளியை குறிப்பிடுகின்றீர்கள் என நினைக்கின்றேன். நானும் அந்தக் காணொளியை தேடினேன் கண்டு பிடிக்க முடியவில்லை. யாழ் களத்திலும் அந்தக் காணொளி இணைக்கப் பட்டிருந்தது. எங்கு உள்ளது என்று தெரியவில்லை.
-
தமிழ் மக்கள் கூட்டணியின் முதலாவது தேசிய மாநாடு!
தமிழ் மக்கள் கூட்டணியின் முதலாவது தேசிய மாநாடு! தமிழ் மக்கள் கூட்டணியின் முதலாவது தேசிய மாநாடு யாழ்ப்பாணத்தில் இன்று நடைபெற்றது. தந்தை செல்வா கலையரங்கில் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் தலைமையில் தேசிய மாநாடு இடம்பெற்றது இந்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் யாழ் பல்கலைக்கழக அரசறிவியல் துறைத் தலைவர்.கணேசலிங்கம் ஆகியோர் சிறப்பு அதிதிகளாக கலந்துகொண்டு உரையாற்றியிருந்தனர். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா , வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் சர்வேஸ்வரன் , யாழ் மாநகர சபையின் முன்னாள் முதல்வர் வி. மணிவண்ணன் உள்ளிட்டவர்களுடன் கட்சியின் மத்திய குழு உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். https://athavannews.com/2024/1393039
-
சம்பந்தர் காலமானார்
குமாரசாமி அண்ணை... சம்பந்தர் செய்த வேலைக்கு அந்திரட்டி மட்டும் வைச்சு செய்ய வேணும் என்றுதான் யோசித்து இருந்தனான். ஆனால் சம்பந்தரின் தோல்வியைப் பற்றி சமூக ஊடகங்களில் அரசியல் ஆய்வாளர்கள்... நார், நாராக கிழித்து எழுதும் போது... இந்த மனிதன் தனது சுயநலத்துக்காக எவ்வளவு கீழ்த்தரமான வேலை எல்லாம் செய்திருக்கு என்று வாசிக்க கடுமையான கோவம் ஏற்படுகின்றது. ஆட்டுத்திவசம் மட்டுமல்ல.... அதுக்குப் பிறகும் சம்பந்தனை கிழித்து தொங்க விட்டால்தான் இருக்கின்ற மிகுதி அரசியல்வாதிகளுக்கு ஒரு படிப்பினையாக அமையும்.
- சம்பந்தருக்குப் பிறகு? - நிலாந்தன்
-
சம்பந்தர் காலமானார்
சம்பந்தருக்குப் பிறகு? - நிலாந்தன் சம்பந்தர் எதை விட்டுச் சென்றிருக்கிறாரோ அங்கிருந்துதான் அடுத்த கட்டம் தொடங்கும். சம்பந்தர் எதை விட்டுச் சென்றிருக்கிறார்? சம்பந்தர் சிதறிப்போன தன் பலத்தைத் தானே உணராத ஒரு தமிழ்ச் சமூகத்தை விட்டுச் சென்றிருக்கிறார். சம்பந்தரின் வழி தமிழ் மக்களுக்கு எதைப் பெற்றுத் தந்திருக்கிறது என்பதனை இரண்டு தளங்களில் ஆராயலாம். முதலில் அனைத்துலக அளவில். இரண்டாவதாக உள்நாட்டுக்குள். அனைத்துலக அளவில் சம்பந்தர் தமிழ்மக்களின் மெய்யான பலம் எது என்பதைக் கண்டுபிடித்திருக்கவில்லை. தமிழ் மக்களின் துயரங்களுக்கெல்லாம் எது காரணமோ அதுதான் தமிழ் மக்களின் மெய்யான பலமும். அதுதான் தமிழ் மக்களின் புவிசார் அமைவிடம். அந்த அமைவிடம் காரணமாகத்தான் இனப்பிரச்சினை பிராந்தியமயயப்பட்டது. பின்னர் பூகோளமயப்பட்டது. அந்த அமைவிடம் காரணமாகத்தான் திம்புவிலிருந்து ஒஸ்லோ வரையிலும் பேச்சு வார்த்தைகள் நடந்தன. அந்த அமைவிடம் காரணமாகத்தான் ஈழத்தமிழர்கள் பேரரசுகளின் இழுவிசைகளுக்குள் சிக்கிக் கிழிபடும் மக்களாக மாறியிருக்கிறார்கள். எனவே எது ஈழத் தமிழர்களின் துயரங்களுக்கெல்லாம் ஊற்றுமூலமாக இருக்கின்றதோ அதையே வெற்றிக்குரிய அடிப்படையாக மாற்றுவதில் சம்பந்தர் வெற்றி பெறவில்லை. அவர் ஈழத் தமிழ் அரசியலை பெருமளவுக்கு சர்வதேச மயநீக்கம் செய்வதிலும் பிராந்திய மயநீக்கம் செய்வதிலும் ஆர்வமாகக் காணப்பட்டார். இந்தியாவிடம் போனால் சிங்களமக்கள் கோபிப்பார்கள் என்று கருதி இந்தியாவின் அழைப்பை நிராகரித்தார். அதுபோலவே ஐநாவில் பரிகார நீதியை கேட்க அவர் விரும்பவில்லை. அதாவது இனப்படுகொலைக்கு எதிரான பரிகார நீதியை அவர் கேட்கவில்லை. மாறாக நிலை மாறு கால நீதியைத்தான் சம்பந்தர் ஆதரித்தார். அதற்குரிய ஐநாவின் தீர்மானத்தில் அவர் பங்காளியாகவும் இருந்தார். ஆனால் ” 6 ஆண்டுகளாக ஒரு பரிசோதனையை செய்தோம் அதில் தோல்வி அடைந்து விட்டோம்” என்று சுமந்திரன் 2021ஆம் ஆண்டு வவுனியாவில் வைத்து கூறினார். எனவே பரிகார நீதியும் இல்லை; நிலைமாறுகால நீதியும் இல்லை. இப்பொழுது ஐநாவில் ஒரு பலவீனமான சான்றுகளைச் சேகரிக்கும் அலுவலகம் இயங்கிக் கொண்டிருக்கிறது. இதுதவிர புலம்பெயர்ந்த தமிழர்கள் தங்களால் இயன்றதைச் செய்து இனப்படுகொலைக்கு எதிரான நீதியைக் கோரும் போராட்டத்தில் குறிப்பிடத்தக்க அளவுக்கு முன்னேறியிருக்கிறார்கள். குறிப்பாக கனடாவில் குறிப்பிட்ட செல்லக்கூடிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஆனால் அவற்றை எல்லாம் அடுத்தடுத்த கட்டத்துக்கு வளர்த்துச்செல்லத் தேவையான ஒரு அரசியல் தலைமைத்துவத்தை தாயகத்தில் இருந்து சம்மந்தர் வழங்கத் தவறினார். அதனால் அவர் இனப்பிரச்சினையை உள்நாட்டுக்குள் சுருக்க விரும்பிய சிங்களபௌத்த அரசுக் கட்டமைப்புக்குத் துணைபோனார் என்பதுதான் சரி. அதாவது சர்வதேச அளவில் சம்பந்தர் தமிழ் மக்களின் அரசியலை குறிப்பிடத்தக்க அளவுக்கு தோற்கடித்து விட்டார். இனப்பிரச்சனை எனப்படுவது சாராம்சத்தில் ஒரு அனைத்துலகப் பிரச்சினைதான். அதற்கு அனைத்துலகத் தீர்வுதான் உண்டு. உள்நாட்டுத் தீர்வு கிடையாது. எனவே இனப்பிரச்சினையை அதன் சர்வதேச, பிராந்தியப் பரிமாணங்களில் இருந்து வெட்டி எடுப்பது என்பது தமிழ் மக்களைத் தோற்கடிப்பதற்குச் சமம். சம்பந்தர் அதைத்தான் செய்தார். உள்நாட்டில் அவர் என்ன செய்தார்? யாழ்ப்பாணத்தில் அவருடைய இறுதி நிகழ்வு அதற்குச் சான்று. நூற்றுக்கணக்கானவர்கள்தான் அதில் பங்குபற்றினார்கள். அவருடைய கட்சி அவரை ஒரு முதுபெரும் தலைவர் என்று அழைக்கின்றது. ஆனால் ஒரு முதுபெரும் தலைவரின் பூதவுடல் எடுத்துவரப்பட்ட வழிநெடுக மக்கள் காத்திருந்து மலர் தூவவில்லை. அதுமட்டுமில்லை, அவருடைய கட்சித் தொண்டர்கள்கூட ஆயிரக்கணக்கில் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தவில்லை. அதைவிட முக்கியமாக, சம்பந்தரின் பூத உடல் அடுத்த நாள் விமானத்தில் எடுத்துச் செல்லப்படுவதற்கு இடைப்பட்ட இரவில் தந்தை செல்வா கலையரங்கில் ஓர் அறையில் விடாது சுற்றும் விசிறிகளின் கீழே அனாதையாக வைக்கப்பட்டிருந்தது என்ற செய்தி. அது மிகத் தோல்விகரமானது. சில கட்சி உறுப்பினர்கள் அந்த அறைக்கு வெளியே நின்று இருக்கலாம். ஆனால் ஒரு முதுபெரும் தலைவரின் உடல் ஒர் இரவு முழுவதும் அனாதையாக விடப்பட்டிருந்தமை என்பது சம்பந்தரின் அரசியல் தோல்வியை காட்டுகின்றது. பொதுவாக ஊரில் ஒரு கிராமவாசி இறந்தால், இரவில் அந்த உடலைத் தனியே விட மாட்டார்கள். அந்த உடலுக்கு அருகே யாராவது உறங்குவார்கள். ஒரு குத்துவிளக்கு அல்லது மெழுகுதிரி கால்மாட்டில் தொடர்ந்து எரிந்து கொண்டிருக்கும். யாராவது தேவாரம் பாடுவார்கள் அல்லது ஜெபம் பண்ணுவார்கள். இடைக்கிடை பெண்கள் ஒப்பாரி வைப்பார்கள். ஆனால் சம்பந்தருக்கு தந்தை செல்வா கலையரங்கில் இவை எவையும் இருக்கவில்லை. சம்பந்தரின் தோல்வியை மதிப்பிட அது ஒன்றே போதும். நவீன தமிழ் அரசியலில் ஆகக்கூடிய ஆசனங்களைப் பெற்ற ஒரு கூட்டணி அவருடைய கையில் கொடுக்கப்பட்டிருந்தது. 22 ஆசனங்கள். ஆனால் கடந்த 15 ஆண்டுகளிலும் அந்த ஆசனங்களின் தொகை குறைந்து இப்பொழுது மொத்தம் 13 ஆசனங்கள். அவைகூட சம்பந்தரின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கவில்லை. முதலில் ஆயுத மோதல்கள் முடிந்த கையோடு சம்பந்தர் கூட்டமைப்பைப் புலி நீக்கம் செய்தார். அதன்பின் படிப்படியாக சர்வதேச நீக்கம், பிராந்திய நீக்கம் செய்தார். கஜேந்திரகுமார் அணி வெளியேறத்தக்க சூழ்நிலைகளை ஏற்படுத்தினார். அடுத்த கட்டமாக ஆயுதப் போராட்ட மரபில் வந்த பங்காளிக் கட்சிகள் விலகிப் போகக்கூடிய நிலைமைகளை அவருடைய பட்டத்து இளவரசர் ஏற்படுத்தினார். முடிவில் தமிழரசுக் கட்சி மட்டும் மிஞ்சியது. இப்பொழுது அதுவும் இரண்டாக உடைந்து நீதிமன்றத்தில் நிற்கின்றது. அதுமட்டுமல்ல, அவருடைய காலத்தில் கிழக்கில் வடக்கை எதிர்த்துக்கொண்டு தெற்குடன் கைகோர்க்கும் ஒரு கட்சி மேலெழுந்து விட்டது. மேலும் கடந்த ஜனவரி மாதம் நடந்த கட்சித் தலைவருக்கான தேர்தலின்போது யாருக்கு செயலாளர் பதவி கொடுப்பது என்ற விவாதங்களில் திருகோண மலையா? மட்டக்களப்பா? எது உண்மையாகக் கிழக்கைப் பிரதிநிதித்துவப்படுத்துவது? என்ற ஒரு விவாதமும் எழுந்தது. அதாவது சம்பந்தரின் காலத்தில் கிழக்கில் உப பிரதேசவாதம் ஒன்றும் உற்பத்தி செய்யப்பட்டது. ஆயின், சம்பந்தர் தமிழரசியலை எங்கே கொண்டு வந்து விட்டிருக்கிறார்? இந்த தோல்வி எங்கிருந்து வந்தது? சம்பந்தரின் அரசியல் வழியின் விளைவு அது. சிங்கள மக்களைப் பயமுறுத்தககூடாது என்று அவர் உறுதியாக நம்பினார். ஆனால் தமிழ் மக்களின் பயங்களை ; கூட்டுக் காயங்களை; கூட்டுத் துக்கத்தை கூட்டு மனவடுக்களை அவர் பொருட்படுத்தவில்லை. ஆயுத மோதலுக்கு பின்னரான ஒரு சமூகத்தில் கூட்டுக் காயங்களுக்கும் கூட்டுத் துக்கத்துக்கும் கூட்டச் சிகிச்சையாக அமையவில்லை ஒரு அரசியலை; பண்புரு மாற்ற அரசியலை முன்னெடுத்திருக்க வேண்டிய ஒரு தலைவர் அவர். ஆனால் அவர் அதைச் செய்யவில்லை. செய்யத் தேவையான அரசியல் உள்ளடக்கம் அவரிடம் இருக்கவில்லை. 2009 மே மாதம் தோற்கடிக்கப்பட்ட ஆயுதப் போராட்டம் ஒரு விளைவுதான். அது மூல காரணம் அல்ல. மூல காரணம் இன ஒடுக்கு முறைதான். அதாவது இலங்கைத்தீவின் இனப்பல்வகைமையை ஏற்றுக்கொள்ளாமை. யுத்த வெற்றிகளின் மூலம் மூலகாரணம் மேலும் வீங்கித் தடித்தது. அது யுத்த வெற்றியை அரசியல் வெற்றியாக மாற்ற விரும்பவில்லை. மாற்றவும் முடியாது. ஏனென்றால் அது ஓர் இனப்படுகொலை. போரில் வெற்றி பெற்ற ராஜபக்சக்கள் யுத்த வெற்றியை அடிப்படையாக வைத்து ஒரு கட்சியைக் கட்டி எழுப்பினார்கள். அதன்மூலம் யுத்த வெற்றிவாதத்துக்கு தலைமை தாங்கினார்கள். யுத்த வெற்றி வாதம் எனப்படுவது நாட்டைத் தொடர்ந்தும் பிளவுண்ட நிலையிலே பேணுவதுதான். வென்றவர்களும் தோற்றவர்களுமாக நாடு தொடர்ந்து பிளவுண்டிருக்கும். இவ்வாறு யுத்த வெற்றிவாதிகள் நாட்டைப் பிளவுண்ட நிலையில் பேணும்பொழுது தோற்கடிக்கப்பட்ட தரப்பின் தலைவராகிய சம்மந்தரோ “பிளவுபடாத இலங்கைக்குள்; பிரிக்கப்பட முடியாத இலங்கைக்குள்” என்று மந்திரம்போல சொல்லிக் கொண்டு, சிங்கள மக்களின் பயங்களைப் போக்குகிறோம் என்று புறப்பட்டு, இறுதியிலும் இறுதியாக யுத்த வெற்றிவாதிகளால் தோற்கடிக்கப்பட்டார். யுத்தவெற்றி வாதம் எனப்படுவது, சிங்கள பௌத்த இனவாதத்தின் 2009க்கு பின்னரான “அப்டேட்டட் வேர்சன்” தான். யுத்தவெற்றி வாதமானது தொடர்ந்து ஒடுக்கு முறைகளையும் ஆக்கிரமிப்பையும் முன்னெடுத்துக் கொண்டிருக்க, அதாவது நாட்டைப் பிளவுண்ட நிலையிலே தொடர்ந்தும் பேண, சம்பந்தாரோ நேசக்கரம் நீட்டிக் கொண்டிருந்தார். முடிவில் யுத்த வெற்றி வாதம் சம்பந்தரின் வழியைத் தோற்கடித்தது. அவருடைய விசுவாசத்துக்கு பரிசாக எதிர்க்கட்சித் தலைவரின் மாளிகையை இறக்கும்வரை அவருக்கு வழங்கியது. இப்படித்தான் சம்பந்தர் தோற்கடிக்கப்பட்டார். தென்னிலங்கையோடு தன்னை சுதாகரித்துக் கொள்வதற்காக அவர் வகுத்த வழியின் விளைவாக கூட்டமைப்பு உடைந்தது. முடிவில் அவருடைய தாய்க்கட்சியும் உடைந்து விட்டது.சம்பந்தர் தோற்றுப் போனார். தோல்வியுற்ற ஒரு தலைவராகத்தான் அவர் இறந்து போயிருக்கிறார். அவருடைய உடல் யாழ்ப்பாணத்தில் தனித்து விடப்பட்டிருந்த அந்த இரவிலிருந்து எதிர்காலத் தலைவர்கள் கற்றுக் கொள்ள வேண்டும். எனவே இப்பொழுது தொகுத்துப் பார்க்கலாம். சம்பந்தர் தமிழ் மக்களைச் சிதறடித்து விட்டார். தமிழ் மக்களின் அடிப்படைப் பலங்களைப் பொருத்தமான விதங்களில் கையாளத் தவறி, தமிழ் மக்களைத் தனிமைப்படுத்தியிருக்கிறார். முடிவில் தானும் தனிமைப்பட்டுப் போனார். எனவே சம்மந்தருக்கு பின்னரான தமிழ் அரசியல் என்பது, சம்பந்தர் சிதறடித்தவற்றை சேர்த்துக் கட்டுவதுதான். சம்பந்தர் தமிழ் மக்களின் எந்தெந்த பலங்களைச் சிதறடித்தாரோ, அவற்றை எல்லாம் மீண்டும் ஒன்றிணைப்பதுதான். எந்தெந்த கட்சிகளை சிதறடித்தாரோ, அவற்றை எல்லாம் ஒன்றாக்குவதுதான். சம்பந்தருக்கு பின்னரான தமிழ் அரசியல் என்பது ஒன்று திரட்டும் அரசியலாக இருந்தால்தான் அது அதன் கடந்த 15 ஆண்டு கால தோல்வியின் தடத்திலிருந்து வெளியே வரலாம். இங்கேதான் ஜனாதிபதித் தேர்தலில் ஒரு தமிழ்ப் பொது வேட்பாளர் என்ற தெரிவு கால முக்கியத்துவம் பெறுகின்றது. இந்த ஆண்டு ஜனாதிபதி தேர்தல் நடந்தால், அதில் தமிழ் மக்களுக்கு ஒரே ஒரு தீர்க்கதரிசனமான தெரிவுதான் உண்டு. ஒரு பொது வேட்பாளரை நிறுத்துவது. ஒரு பொது நிலைப்பாட்டின் கீழ் தமிழ் மக்களை ஒன்றாக்குவது. சம்பந்தரின் வழியிலிருந்து விலகி வருவதென்றால் அதைவிட வேறு வழி இல்லை. சிதறடிக்கப்பட்டவற்றை ஒன்று சேர்ப்பது. https://www.nillanthan.com/6820/
-
மரணத்தின் பின்னும் மன்னிக்கத் தயார் இல்லாத தமிழ் மக்கள்
உண்மைதான்... கிடைத்த சந்தர்ப்பங்களை எல்லாம் பயன்படுத்தத் தெரியாமல் கெடுத்துப் போட்டு, ஒன்றும் தெரியாதவர்கள் மாதிரி இருக்கின்றார்கள். உண்மையிலேயே இவர்களுக்கு அரசியல் அறிவு, அறவே இல்லை என்பதுதான் சோகமான விடயம். இவர்கள் அரசியலை விட்டு ஒதுங்கி வேறு தொழிலை செய்வதே உத்தமம்.
-
சிரிக்க மட்டும் வாங்க
- சிரிக்கலாம் வாங்க
- தமிழீழ ராணுவம் (TEA)இயக்கத்தின் தலைவர் தம்பாப்பிள்ளை மகேஸ்வரன் அவர்கள் மரணமடைந்துள்ளார்
மற்றைய இயக்கங்கள் போல இவரும் இவரின் இயக்க உறுப்பினர்களும் எந்தவித காட்டிக்கொடுப்புகள் கூட்டிக்கொடுப்புகள் என்றில்லாமல் கௌரவமாக புலிகள் இயக்கத்துக்கு எந்தவித இடையூறும் செய்யாமல் தங்களது ஆயுதங்களையும் வாகனங்களையும் புலிகளிடம் கொடுத்துவிட்டு வெளியேறியவர் அஞ்சலிகள் தமிழீழ விடுதலை இராணுவத்தின் தலைவர் மகேஸ்வரன் Prashanthan Navaratnam- பரீட்சைக்கு செல்ல மறுத்த மகள் – தீ மூட்டிக்கொண்ட தாய் பலி
பரீட்சைக்கு செல்ல மறுத்த மகள் – தீ மூட்டிக்கொண்ட தாய் பலி. கடந்த 10ஆம் திகதி நடைபெற்ற க.பொ.த சாதாரணதரப் பரீட்சையின் நடனபாட செய்முறைப் பரீட்சைக்கு மகள் செல்ல மறுத்ததால் தாயார் தனக்கு தானே தீமூட்டி உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் கடந்த 10ஆம் திகதி இடம்பெற்றது. பற்றிமா வீதி பண்டத்தரிப்பு பகுதியைச் சேர்ந்த 48 வயதுடைய 5 பிள்ளைகளின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார். மகள் நடன பாட செய்முறை பரீட்சைக்கு செல்லா விட்டால் தான் மண்ணெண்ணெய் ஊற்றி எரிவேன் என தெரிவித்து தனது உடலில் மண்ணெண்ணெய்யை ஊற்றியுள்ளார். அதன் பின்னர் தீக்குச்சியை பற்றவைத்த நிலையில் மகளிடம் பேசிக்கொண்டு இருந்தவேளை திடீரென அவரது ஆடையில் தீப்பற்றி எரிய ஆரம்பித்துள்ளது. இந்நிலையில் அவர் மீது பரவிய தீ அணைக்கப்பட்டு தெல்லிப்பழை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். https://athavannews.com/2024/1392976- மரணத்தின் பின்னும் மன்னிக்கத் தயார் இல்லாத தமிழ் மக்கள்
மன்னிப்பு கிடைக்காத சம்பந்தனின் ஆத்மா... எங்கு உத்தரித்து, அலைந்து கொண்டு திரியுதோ... இதற்குத்தான்... வாழும் காலங்களில் உதவி செய்யா விட்டாலும் உபத்திரவம் செய்யாமல் இருக்க வேண்டும். சம்பந்தனுக்கு நடந்ததை பார்த்து, மற்றைய அரசியல்வாதிகள் தம்மை சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். இல்லையேல்.. தமிழ் மக்கள், பழஞ் செருப்பை சாணியில் தோய்த்து அடிக்கும் காலமும் வரும்.- கருத்து படங்கள்
- சம்பந்தர் காலமானார்
அரசியலில் இருந்து சுமந்திரன் வெளியேற வேண்டும் – காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்! சுமந்திரன், ஸ்ரீதரன், மாவை, குகதாசன், டெலோ, புளொட் போன்ற பிரமுகர்கள் மற்றும் அமைப்புக்கள் தமிழ் அரசியலில் இருந்து வெளியேற வேண்டும் என காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர் சங்கம் தெரிவித்துள்ளது. வவுனியாவில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் சார்பில் தமிழர் தாயக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்க செயலாளர் கோ. ராஜ்குமார் நடத்திய ஊடக சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடா்பாக அவா் மேலும் குறிப்பிடுகையில், சம்பந்தனின் தமிழர் விரோத நிலைப்பாடும் கொள்கைகளும் அவரது மறைவுடன் இல்லாமல் போய்விட்டது. காணாமல் ஆக்கப்படட குழந்தைகளின் தாய்மார்களாகிய நாங்கள் இந்த மாற்றங்களையும் புதிய தலைமையையும் வரவேற்கிறோம். சம்பந்தனின் கீழ் பணியாற்றிய நபர்களை தமிழர்கள் ஆதரிக்கவில்லை. சம்பந்தனின் தமிழர் விரோதக் கொள்கைகளை விமர்சிக்காத எம்.பி.க்கள் பதவி விலக வேண்டும் என்று தாய்மார்கள் கோருகின்றனர். சம்பந்தனின் இறுதிப் பயணத்தின் போது மரியாதை இல்லாதது அவரது கொள்கைகளை தமிழர் நிராகரிப்பதையே காட்டுகிறது. அரசியல் சலுகைகளைப் பெறுவதற்கான பயனற்ற முயற்சிகள், சிங்கள அரசாங்கங்களுடனான ஒத்துழைப்பு, வெளிப்படைத்தன்மை இல்லாமை, போர்க்குற்றப் பொறுப்புக்கூறலுக்குப் போதிய வாதங்கள் இல்லாமை மற்றும் இடம்பெயர்ந்த தமிழர்கள் புறக்கணிப்பு ஆகியவற்றால் அவரது பதவிக்காலம் குறிக்கப்பட்டது. சுமந்திரன், விக்னேஸ்வரன் போன்ற கொழும்பு தமிழ் அரசியல்வாதிகளை தமிழீழத்தில் இறக்குமதி செய்தமை மற்றும் எதிர்க்கட்சித் தலைமைக்கு சிங்கள அரசாங்கத்தை ஆதரித்தமை, சம்பந்தனுக்கு சிங்கள மாளிகை எடுப்பதற்கு தொடர்பான சுமந்திரன் சம்பந்தன் நாடாளுமன்ற விவாதம் ஆகியன தமிழர்களை மேலும் அந்நியப்படுத்தியது என தமிழர் தாயக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்க செயலாளர் கோ. ராஜ்குமார் மேலும் குறிப்பிட்டுள்ளாா். https://athavannews.com/2024/1392938- அரசியலில் இருந்து சுமந்திரன் வெளியேற வேண்டும் – காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்!
அரசியலில் இருந்து சுமந்திரன் வெளியேற வேண்டும் – காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்! சுமந்திரன், ஸ்ரீதரன், மாவை, குகதாசன், டெலோ, புளொட் போன்ற பிரமுகர்கள் மற்றும் அமைப்புக்கள் தமிழ் அரசியலில் இருந்து வெளியேற வேண்டும் என காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர் சங்கம் தெரிவித்துள்ளது. வவுனியாவில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் சார்பில் தமிழர் தாயக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்க செயலாளர் கோ. ராஜ்குமார் நடத்திய ஊடக சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடா்பாக அவா் மேலும் குறிப்பிடுகையில், சம்பந்தனின் தமிழர் விரோத நிலைப்பாடும் கொள்கைகளும் அவரது மறைவுடன் இல்லாமல் போய்விட்டது. காணாமல் ஆக்கப்படட குழந்தைகளின் தாய்மார்களாகிய நாங்கள் இந்த மாற்றங்களையும் புதிய தலைமையையும் வரவேற்கிறோம். சம்பந்தனின் கீழ் பணியாற்றிய நபர்களை தமிழர்கள் ஆதரிக்கவில்லை. சம்பந்தனின் தமிழர் விரோதக் கொள்கைகளை விமர்சிக்காத எம்.பி.க்கள் பதவி விலக வேண்டும் என்று தாய்மார்கள் கோருகின்றனர். சம்பந்தனின் இறுதிப் பயணத்தின் போது மரியாதை இல்லாதது அவரது கொள்கைகளை தமிழர் நிராகரிப்பதையே காட்டுகிறது. அரசியல் சலுகைகளைப் பெறுவதற்கான பயனற்ற முயற்சிகள், சிங்கள அரசாங்கங்களுடனான ஒத்துழைப்பு, வெளிப்படைத்தன்மை இல்லாமை, போர்க்குற்றப் பொறுப்புக்கூறலுக்குப் போதிய வாதங்கள் இல்லாமை மற்றும் இடம்பெயர்ந்த தமிழர்கள் புறக்கணிப்பு ஆகியவற்றால் அவரது பதவிக்காலம் குறிக்கப்பட்டது. சுமந்திரன், விக்னேஸ்வரன் போன்ற கொழும்பு தமிழ் அரசியல்வாதிகளை தமிழீழத்தில் இறக்குமதி செய்தமை மற்றும் எதிர்க்கட்சித் தலைமைக்கு சிங்கள அரசாங்கத்தை ஆதரித்தமை, சம்பந்தனுக்கு சிங்கள மாளிகை எடுப்பதற்கு தொடர்பான சுமந்திரன் சம்பந்தன் நாடாளுமன்ற விவாதம் ஆகியன தமிழர்களை மேலும் அந்நியப்படுத்தியது என தமிழர் தாயக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்க செயலாளர் கோ. ராஜ்குமார் மேலும் குறிப்பிட்டுள்ளாா். https://athavannews.com/2024/1392938- பொது வேட்பாளரை நிறுத்துவதற்கான உடன்படிக்கை கைச்சாத்து!
பொது வேட்பாளரை நிறுத்துவதற்கான உடன்படிக்கை கைச்சாத்து! எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழர் தரப்பில் இருந்து ஒரு பொது வேட்பாளரை நிறுத்துவதற்கான உடன்படிக்கையொன்று எதிர்வரும் 22 ஆம் திகதி திங்கட்கிழமை கைச்சாத்திடப்படவுள்ளது. தமிழ்ச் சிவில் சமூகத்தினருக்கும் தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகளுக்கு இடையிலும் இந்த உடன்படிக்கை யாழ்ப்பாணத்தில் வைத்து கைச்சாத்திடப்படவுள்ளது கடந்த காலங்களில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல்களில் தமிழ் மக்கள் எவருக்கும் வாக்களித்தும் எந்தவித பயனும் இல்லை என்று தமிழ்க் கட்சியினரும் சிவில் சமூகத்தினரும் பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளனர். இதனால் தமிழ் மக்களின் நிலைமையையும், தமிழ் மக்களின் பிரச்சினைகள் மற்றும் தேவைகளை வெளிப்படுத்தும் வகையிலும் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எந்தவொரு சிங்கள வேட்பாளருக்கும் ஆதரவை வழங்காது தமிழர் தரப்பில் இருந்து பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவதற்கான நடவடிக்கைகள் சிவில் சமூகத்தினராலும் அரசியல் கட்சிகளாலும் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வந்தது. இந்தநிலையில் இதற்குப் பல்வேறு அமைப்புகளும் பல்வேறு கட்சிகளும் ஆதரவு வழங்கியுள்ள நிலையில் இதன் அடுத்த கட்டமாக தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகளுக்கும், சிவில் சமூகத்தினருக்கும் இடையில் முதலாவதாக ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்படவுள்ளது. அதன்படி, இரு தரப்பினர்களுக்கும் இடையிலும் பல்வேறு விடயங்களை உள்ளடக்கி இந்த ஒப்பந்தம் கைச்சாத்தாகியதைத் தொடர்ந்து தமிழ்ப் பொது வேட்பாளர் தெரிவு உள்ளிட்ட ஏனைய அனைத்து விடயங்கள் தொடர்பிலும் அடுத்தகட்ட நடவடிக்கைகள் மிகத் தீவிரமாக முன்னெடுக்கப்படவுள்ளன. https://athavannews.com/2024/1392917- பிரச்சினையில் இருந்து தப்பியோடத் தொிந்தவா்கள் தமிழ் அரசியல்வாதிகள் – வியாழேந்திரன்!
பிரச்சினையில் இருந்து தப்பியோடத் தொிந்தவா்கள் தமிழ் அரசியல்வாதிகள் – வியாழேந்திரன்! நாட்டிற்கும், நாட்டு மக்களுக்கும் பிரச்சினை வந்தால் எவ்வாறு தப்பியோடுவது என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டு தமிழ் அரசியல்வாதிகள்தான் என இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்துள்ளார். இலங்கையில் மிக உயரமான வெளிச்ச வீடுகளில் ஒன்றாகவுள்ள மட்டக்களப்பு முகத்துவாரம் பாலமீன் மடு வெளிச்சவீடு சுமார் 30 வருடங்கள் பின் புனரமைக்கப்பட்டு மக்களின் பாவனைக்கு கையளிக்கும் நிகழ்வு நேற்று மாலை நடைபெற்றது. இராஜாங்க அமைச்சர் எஸ் வியாழேந்திரனால் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அமைச்சருக்கு விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கு இணங்க, கடற்தொழில் அமைச்சு மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் ஆகியோரின் நிதி ஒதுக்கீட்டில் மட்டக்களப்பு மாநகர சபையினால் புனரமைப்பு செய்யப்பட்டு கையளிக்கப்பட்டது. 1913 ஆண்டு கட்டப்பட்ட 111வருடங்கள் பழமையான இந்த வெளிச்சவீடானது மீனவர்களின் கடல்கரை விளக்காகவும், வெளிநாட்டவர்களின் சுற்றுலா பிரதேச தளமாகவும் காணப்பட்டது. சுமார் 7.5 மில்லியன் ரூபா நிதியொதுக்கீட்டில் மீள் புனர்நிர்மாணம் செய்யப்பட்டுள்ளது. மாநகர ஆணையாளர் சிவலிங்கம் தலைமையில் இடம்பெற்ற வெளிச்ச வீடு கையளிக்கும் நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் ஆகியோர் பிரதம அதிதியாக கலந்துகொண்டனர். இந்த நிகழ்வில் பொறியியலாளர் சித்திராதேவி லிங்கேஸ்வரன், முன்னாள் மாநகர சபை உறுப்பினர் சிவானந்தராஜா உட்பட மாநகர சபை உத்தியோகத்தர்கள் ஊழியர்கள் மீனவ சங்க அமைப்புகளின் பிரதிநிதிகள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர். https://athavannews.com/2024/1392944- பெண்ணின் தலைக்குள் 77 ஊசி – மந்திரவாதி கைது
பெண்ணின் தலைக்குள் 77 ஊசி – மந்திரவாதி கைது. ஒடிசா மாநிலத்தின் போலாங்கிர் பகுதியை சேர்ந்தவர் ரெஷ்மா பெஹரா 19 வயதான பெண்ணின் தலையில் இருந்து 77 ஊசிகள் எடுக்கப்பட்டுள்ளன. சில காலங்களாக பல பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வந்த இவர் கடந்த 2021 ஆம் ஆண்டில் மந்திரவாதி ஒருவரை சந்தித்துள்ளார். அதன்பிறகு சில காலம் எந்த பிரச்சினையும் இல்லாமல் ரெஷ்மா வாழ்ந்து வந்துள்ளார். இந்த நிலையில், திடீரென தலையில் தாங்க முடியாத வலி ஏற்பட்டு மருத்துவமனையில் ரெஷ்மா அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தலை பகுதியில் சிடி ஸ்கேன் எடுக்கப்பட்டது. அதில் ரெஷ்மா தலையில் ஊசிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதற்காக அறுவை சிகிச்சை செய்து கொண்ட ரெஷ்மா தலையில் இருந்து முதற்கட்டமாக எட்டு ஊசிகள் எடுக்கப்பட்டன. எனினும், அவரது உடல்நிலையில், மாற்றம் இல்லாததால் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இரண்டு முறை அறுவை சிகிச்சை செய்யப்பட்டதில் ரெஷ்மா தலையில் இருந்து மொத்தம் 77 ஊசிகள் எடுக்கப்பட்டுள்ளன. தற்போது நலமுடன் இருக்கும் ரெஷ்மா அறுவை சிகிச்சைக்கு பிந்தைய பரிசோதனைகளை எடுத்துக் கொண்டு வருகிறார். “இதுவரை இரண்டு அறுவை சிகிச்சைகளின் மூலம் 77 ஊசிகள் பெண்ணின் தலையில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது. நல்வாய்ப்பாக ஊசிகள் எதுவும் எலும்பு பகுதியில் சேதம் ஏற்படுத்தவில்லை. மாறாக தசை பகுதியில் லேசான காயங்கள் மட்டுமே ஏற்பட்டுள்ளது,” அவருக்கு சிகிச்சை மேற்கொண்ட வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய மந்திரவாதி கைது செய்யப்பட்டுள்ள நிலையில், ரெஷ்மா போன்று வேறு யார்யார் இத்தகைய பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர் என்பது குறித்து காந்தபாஞ்சி பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். https://athavannews.com/2024/1392939- உக்ரைன் ஜனாதிபதி – டிரம்ப் விசேட தொலைபேசி உரையாடல்!
உக்ரைன் ஜனாதிபதி – டிரம்ப் விசேட தொலைபேசி உரையாடல்! ரஷ்ய பயங்கரவாதத்திற்கு எதிரான எங்களுடைய திறனை வலுப்படுத்த உதவியமைக்கு அமெரிக்காவுக்கு உக்ரைன் எப்போதும் நன்றியுடன் இருக்கும் என ஜனாதிபதி ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் எதிர்வரும் நவம்பரில் ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ளதுடன், இதில், குடியரசு கட்சிக்கான வேட்பாளராக முன்னாள் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் அறிவிக்கப்பட்டுள்ளார். இந்த தேர்தலை முன்னிட்டு, பல்வேறு வெளிநாட்டு தலைவர்களிடம் டிரம்ப் ஆதரவு கோரி பேசி வரும் நிலையில், உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி மற்றும் டிரம்ப் ஆகிய இருவரும் தொலைபேசி வழியே பேசி கொண்டுள்ளனர். அமெரிக்காவின் ஜனாதிபதி தேர்தலுக்கான குடியரசு கட்சிக்கான வேட்பாளராக நியமிக்கப்பட்டதற்காக, எனக்கு உக்ரைன் ஜனாதிபதி வாழ்த்துகளை தெரிவித்தாகவும் அடுத்த அமெரிக்க ஜனாதிபதியாக உலகத்திற்கு நான் அமைதியை கொண்டு வருவேன் எனவும் முன்னாள் ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்துள்ளார். மேலும், பல உயிர்களை பலி வாங்கி, எண்ணற்ற குடும்பத்தினரை துன்பத்தில் ஆழ்த்திய போரை முடிவுக்கு கொண்டு வருவேன் எனவும் டிரம்ப் தெரிவித்துள்ளார். இதேபோன்று உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி வெளியிட்ட எக்ஸ் பதிவில், அமெரிக்காவின் ஜனாதிபதி தேர்தலுக்கான குடியரசு கட்சி வேட்பாளராக நியமிக்கப்பட்டதற்காக, டிரம்புக்கு வாழ்த்துகளை தெரிவித்து கொண்டதாகவும் பென்சில்வேனியாவில் நடந்த அதிர்ச்சிகர கொலை முயற்சிக்கு கண்டனமும் தெரிவித்தாக அவர் பதிவிட்டுள்ளார். https://athavannews.com/2024/1392920- இரசித்த.... புகைப்படங்கள்.
- சுமந்திரன் தமிழ் தேசிய உணர்வற்றவர் : சிறிதரனே மீண்டும் தலைவராக வேண்டும்.
தமிழ் - சிங்கள கலவரத்தை தூண்ட வேண்டிய அவசியம் ஏற்பட்டால்... நமது பக்கத்து நாடே.... முழுமையான் ஏற்பாட்டை சிங்களத்துக்கு செய்து கொடுக்கும். அந்தளவு தமிழ் மக்கள் மீதான எரிச்சலில்.. பக்கத்து நாட்டுக்காரன் இருக்கின்றான். - சிரிக்கலாம் வாங்க
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.