Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழ் சிறி

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by தமிழ் சிறி

  1. ஆளுநர் பன்வாரிலால் புரோகித். அரசியல் செல்வாக்கு இருந்தால்... கொலை, கொள்ளை, பாலியல் தவறுகள் என்று எந்தக் குற்றத்தில் இருந்தும் காப்பாற்றப் படுவார்கள். இதற்கு... 5 வருட விசாரணை என்று மக்களின் வரிப்பணத்தை வேறு விரயமாக்குகின்றார்கள்.
  2. கல்லுரி பேராசிரியையாக இருந்து கொண்டு, தோல் வியாபாரம் செய்திருக்கு. வெட்கம் கெட்டது. 😡
  3. முதியோர் இல்லத்திற்கு அன்னதானம் •••••••••••••••••••••••••••••••••••••••••••••••••• செய்யப் போறீங்களா, •••••••••••••••••••••••••••••• ஒரு நிமிடம் இதை படியுங்கள். ஒரு முதியோர் இல்லத்துக்கு சென்று, அங்குள்ள நிர்வாகியிடம் கொஞ்சநேரம் பேசிக்கொண்டிருந்தேன். எனக்கு 10 ஆண்டுகளாக அவரோடு பழக்கம் உண்டு.அந்தச் சமயத்தில் அங்கு வந்த ஒரு நன்கொடையாளர், தன் மகளின் பிறந்தநாளை முன்னிட்டு ஒரு வேளைக்கு மட்டும் அன்னதானம் அளிக்க விரும்புவதாகக் கூறினார். மேலும் "குறித்தநாளில் பகல் 12 மணிக்கு வாழைப்பழம், Sweet, பீடா, வடை, பாயாசத்தோடு சாப்பாடு முதியோர் இல்லத்துக்கு வந்துவிடும். உணப்பொருட்களை கொண்டு வந்த பாத்திரங்களை திரும்பவும் ஓட்டலுக்கு கொடுக்கும் போது மிகவும் சுத்தமாக துலக்கி கொடுக்கவேண்டும்." என்றார். அவர் குறிப்பிட்ட அந்த ஓட்டல் மிகவும் காஸ்ட்லி. ஒரு Special Meals க்கு ரூ. 150/- வாங்குகிறார்கள். அவர் போனதும் அந்த முதியோர் இல்ல நிர்வாகி சில விஷயங்களை சொன்னார். பெரும்பாலான முதியோர் இல்லங்களில் சொந்தமாக சமையல் கூடமும், சமைப்பதற்க்கு ஆட்களும் உண்டு. முதியோர்களின் உடலுக்கு ஏற்றவகையில் எளிதில் ஜீரணமாகும் மற்றும் எந்த அலர்ஜியும் ஏற்ப்படுத்தாத உணவைத் தான் இங்கு சமைக்கிறோம். நம் மக்களின் ஆர்வக்கோளாறு மிகுதியால், புண்ணியம் சம்பாரிக்கும் வெறியில் ஒரு நல்லநாள், விஷேசம் என்றால் அன்னதானம் செய்கிறேன் என்கின்ற பெயரில் புரோட்டா, சில்லி பரோட்டா, கொத்து புரோட்டா, தந்தூரி உணவுகள், Sweet, நூடுல்ஸ், Fried Rice என்று வாங்கி அன்னதானமளிக்க வந்து விடுகிறார்கள். (70 வயது பாட்டிக்கு இங்கு சாம்பாரில் போடும் பருப்பே ஜீரணம் ஆகாமல் Acidity பிரச்சனை ஆகிறது.) குழைந்து போன சாதமும், இட்லியை சாம்பாரில் உறப்போட்டு கரைத்து குடிக்கும் பெரியவர்களுக்கு புரோட்டாவும், சிக்கன் குருமாவும் குடுத்தால் என்ன ஆகும்❓ குறிப்பாக நாம் வழக்கமாக ஓட்டலில் சாப்பிடும் சாம்பார், வத்தக்குழம்பே இவர்களுக்கு ஒத்துக்கொள்ளாது. ஓட்டல் சாப்பாடு எல்லாம் 40 வயசு வரை உள்ள ஆட்களுக்குத்தான். இவ்வளவு உப்பும், காரமும் தொடர்ந்து 2 நாள் சாப்பிட்டால் 4-5 நாட்களுக்கு இந்த முதியோர்கள் எதுவுமே சாப்பிடமுடியாமல் அவஸ்தைப்படுவார்கள். போன மாதமெல்லாம் ஒருத்தர் சாப்பாட்டுடன் ஐஸ்கிரீமை நல்ல குளிர்காலத்தில் வந்து முதியோர் இல்லத்தில் குடுத்துவிட்டு போகிறார். (இதற்கும் அவர் ஒரு Software கம்பெனியின் மேலாளர். 1 இலட்சத்துக்கும் மேல் மாத சம்பளம் வாங்குகிறார்.) ஆரம்பகாலங்களில் இப்படி அன்னதானம் செய்ய வந்தவர்களிடம், எங்களிடம் பணமாக கொடுத்துவிடுங்கள் என்று சொல்லிப் பார்த்தோம்... சிலர் மளிகை பொருட்களாக வாங்கிக்கொடுத்தார்கள். ஆனால் பலரும் அவர்கள் கண்முன்னே எல்லாம் நடக்கவேண்டும், அவர்கள் கையால் 4 பேருக்கு உணவு பரிமாற வேண்டும் என்று அடம் பிடிக்கிறார்கள். (பணமாக நேரடியாக கொடுக்கவோ, அல்லது மளிகை பொருட்களை நாங்கள் வெளியில் விற்று விடுவோம் என்று தவறாக எண்ணி பலரும் முன்வருவதில்லை.) ஒரு முதியோர் இல்லத்தில் சாப்பாட்டு செலவுக்கு நிகராக மருத்துவ செலவு உண்டு... கட்டணமே இல்லாமல் ஒரு சேவை போல் இங்குள்ள முதியோர்களுக்கு அடிப்படை பரிசோதனைகள் செய்ய சில நல்ல மருத்துவர்கள் இருப்பதால்தான் கொஞ்சமாவது சமாளிக்கமுடிகிறது... ஓட்டலில் ஒரு நபருக்கு ரூ. 100/- க்கு மேல் ஒரு சாப்பாட்டுக்கு செலவு ஆகிறது. ஆனால் நாங்களே இங்கு சமைக்கும் போது ஒரு நபருக்கு ஒருவேளை சாப்பாட்டுக்கு அதிகபட்சம் 45/- ரூபாய்க்குள் அடங்கிவிடுகிறது. அதுவும் எந்தவித பக்கவிளைவுகளும் இல்லாத முதியோர்களுக்கான சாப்பாடு. ஒருவர் முதியோர் இல்லத்துக்கு கொடுக்கும் பணம் என்பது பல செலவுகளுக்கு உதவும் மருத்துவம், போர்வை, சோப்பு, எண்ணெய், பல்பொடி, கிருமிநாசினி, உடை, கட்டிடம் / தோட்ட பராமரிப்பு, ஊழியர்கள் சம்பளம், முடி திருத்துவோர் சம்பளம்... என்று பல வகைப்படும். ஒருவன் பசியில் இருப்பதை விட கொடுமையான விஷயம், நாம் குடுத்த உணவு செரிக்காமல் / சாப்பிட்ட உணவு வெளியெற முடியாமல் அவஸ்தை படுவதுதான்...ஆர்வக் கோளாரில் புண்ணியம் சம்பாரிக்க ஆசைப்பட்டு, பெரும்பாவத்தை தேடாதீர்கள். நம்பிக்கை தான் வாழ்க்கை. நாம் செய்யும் உதவி மற்றவருக்கு பயனுள்ளதாக அமையட்டும் கோபாலகிருஷ்ணன். Mantras and Miracles
  4. பொலிஸ்காரர்: 120 ஐரோ தண்டப் பணமும், 3 புள்ளிகளும் உமக்கு கிடைக்கின்றது. வாகன சாரதி: அந்தப் புள்ளியை வைத்து நான் என்ன செய்ய? பொலிஸ்காரர்: இன்னும் ஐந்து புள்ளிகளை சேர்த்து, உமக்கு ஒரு சைக்கிள் வாங்கும். 😂
  5. இன்று பிறந்த நாளைக் கொண்டாடும், தோழர் புரட்சிகர தமிழ்தேசியனுக்கு... உளம் கனிந்த இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். 🎂 வாழ்க வளமுடன். 🙏
  6. காஸா சிறுவர் நிதியம்: பங்களிப்புச் செய்வதற்கான கால எல்லை நீடிப்பு. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரையின் பேரில் ஆரம்பிக்கப்பட்ட காஸா சிறுவர் நிதியத்திற்கு பங்களிப்புச் செய்வதற்கான கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளது நன்கொடையாளர்களுக்கு இந்த நிதியத்திற்குப் பங்களிப்புகளை அளிப்பதற்காக வழங்கப்பட்ட கால அவகாசம் 2024 ஏப்ரல் 30ஆம் திகதியுடன் முடிவடைய இருந்தது. ஆனால் நாடளாவிய ரீதியில் பொதுமக்களினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையின்படி, 2024 மே 31 வரை காலத்தை நீட்டிக்க தீர்மானிக்கப்பட்டது. ‘காசா சிறுவர் நிதியத்திற்கு’ பங்களிக்குமாறு ஜனாதிபதி அலுவலகம் கேட்டுக் கொண்டதற்கிணங்க, நாடளாவிய ரீதியில் உள்ள பொது மக்கள் இன, மத பேதமின்றி அதனுடன் கைகோர்த்தனர். இம்முறை நோன்பு துறக்கும் நிகழ்வுகளுக்காக அமைச்சுக்கள் மற்றும் அரச நிறுவனங்கள் ஒதுக்கப்பட்ட நிதியை இந்த நிதியத்திற்கு வழங்கியதோடு இதன் முதற்கட்டமாக ஐக்கிய நாடுகள் சபையின் உத்தியோகபூர்வ முகவரகத்தின் ஊடாக ஜனாதிபதி ரணில் விக்கரமசிங்க அண்மையில் பலஸ்தீன அரசாங்கத்திடம் ஒரு மில்லியன் அமெரிக்க டொலர்களைக் கையளித்திருந்தார். நன்கொடையாளர்களுக்கு 2024 மே 31 வரை தொடர்ந்து பங்களிக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதோடு பங்களிக்க விரும்பும் நன்கொடையாளர்களாக இருந்தால், அந்த நன்கொடைகளை ‘இலங்கை வங்கி தப்ரபேன் கிளையில் (747) 7040016’ எனும் வங்கிக் கணக்கில் அன்பளிப்புத் தொகையை வைப்பு செய்ய முடியும். அதன்பின்னர் பற்றுச்சீட்டை 077-9730396 என்ற எண்ணுக்கு Whatsapp ஊடாக அனுப்புமாறு ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது. இதற்கிடையில், காஸா பகுதியில் வாழும் குழந்தைகளுக்குத் தேவையான நிவாரணங்களை வழங்குவதற்காக இலங்கை அண்மையில் வழங்கிய நிதியுதவிக்கு ஐக்கிய நாடுகள் சபையின் நிவாரண மற்றும் பணி தொடர்பான முகவர் அமைப்பின் ஆணையாளர் நாயகம் பிலிபே லெஸரினிஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு எழுதிய கடிதத்தில் தனது பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2024/1380290
  7. இந்திய பிரதமர் மோடிக்கு ஆதரவு தெரிவித்து பிரித்தானியாவில் பேரணி! பிரித்தானிய தலைநகர் லண்டனில் உள்ள இந்திய வம்சாவளியினர் சிலர் பா.ஜ., மற்றும் பிரதமர் மோடிக்கு ஆதரவளித்து பேரணி நடத்தியுள்ளனர். இந்தியாவில் லோக்சபா தேர்தல் நடந்துவரும் நிலையில், பிரித்தானிய தலைநகர் லண்டனில் உள்ள பா.ஜ., ஆதரவாளர்களான இந்திய வம்சாவளியினர் பா.ஜ., கொடியுடன் பேரணியாக சென்றுள்ளனர். ‘ரன் பார் மோடி’ என்ற பெயரில் இந்திய வம்சாவளியினரின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இப்பேரணியில், சுமார் 500 பேர் பங்கேற்றிருந்தனர். பேரணியில் ஈடுபட்டவர்கள், இந்திய தேசிய கொடி மற்றும் பா.ஜ., கொடிகளை ஏந்தியபடி பிரதமர் மோடிக்கு ஆதரவாக கோஷம் எழுப்பியவாறு இவ்வாறு பேரணியில் ஈடுபட்டனர். குறித்த பேரணியானது, லண்டனிலுள்ள புகழ்பெற்ற டவர் பிரிட்ஜ் அருகே முடிவுக்கு வந்தது. இதேவேளை, இந்திய பிரதமர் மோடிக்கு இந்தியா மட்டுமல்லாமல் உலக நாடுகளிலும் ஆதரவாளர்கள் உள்ளனர். அதன்படி, வெளிநாடுகளில் வசிக்கும் இந்திய வம்சாவளியினரில் பெரும்பாலானோர் மோடிக்கு தொடர்ந்து ஆதரவளித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1380197
  8. இலங்கை மத்திய வங்கியில் வேலை செய்தவர். நல்ல ஒரு பேச்சாளர். ஆழ்ந்த அனுதாபங்கள்.
  9. நேற்றுத்தான்... மனித முகத்துடன் பிறந்த ஆட்டுக்குட்டியை பார்த்தோம். 😮 இன்று குதிரை முகத்துடன் ஒரு பெண்ணை பார்க்கின்றோம். உலகம் ரொம்ப கெட்டுப் போச்சு. 😂 @நந்தன், @விசுகு, @ஈழப்பிரியன், @Kapithan, @Kandiah57 இந்தக் கூத்தை ஒருக்கா பாருங்கோ.... 😂
  10. பொது வேட்பாளர் இனவாதத்தைத் தூண்டுவாரா? நிலாந்தன்! ஜனாதிபதி தேர்தலில் ஒரு தமிழ்ப் பொது வேட்பாளரை நிறுத்தினால் அவர் இனவாதத்தைத் தூண்டிவிடுவார், அதன்மூலம் ராஜபக்சக்களையும் அவர்களின் பொது வேட்பாளராக வரக்கூடிய ரணில் விக்கிரமசிங்கவையும் வெல்ல வைப்பதற்காக அவர் மறைமுகமாக உதவுவார் என்ற ஒரு வாதம் சில அரசியல்வாதிகளினாலும்,யாழ்ப்பாணத்திலிருந்து வரும் சில ஊடகங்களிலும் தொடர்ச்சியாக முன்வைக்கப்படுகின்றது.ஊடகங்களின் ஆசிரியர் தலையங்கங்களிலேயே அது தொடர்பாக எழுதப்படுகின்றது.ஒரு தமிழ்ப் பொது வேட்பாளர் இனவாதத்தை தூண்டுவாரா?அவர் யாரோ ஒரு சிங்கள வேட்பாளரை நோக்கிச் செல்லும் வாக்குகளை கவர்வதன்மூலம்,அவரைத் தோற்கடித்து, அவருக்கு எதிராக நிற்கக்கூடிய மற்றொரு பிரதான சிங்கள வேட்பாளரை வெல்லவைக்கும் உள்நோக்கத்தோடு களம் இறக்கப்படுகின்றாரா? இக் கேள்விக்கு விடையாக சில கேள்விகளையே திருப்பிக் கேட்கலாம்.சிங்கள பௌத்த பெருந்தேசிய வாதம் இப்பொழுது உறங்கு நிலையிலா உள்ளதா? அது இனிமேல்தான் தூண்டி விடப்படுவதால் விழித்தெழப்போகின்றதா ? .அப்படி என்றால் கிழக்கில் மேய்ச்சல் தரையை ஆக்கிரமிப்பது யார்? குருந்தூர் மலையில் மரபுரிமைச் சின்னங்களை ஆக்கிரமிப்பது யார்? வெடுக்கு நாறி மலையில் மரபுரிமைச் சொத்துக்களை ஆக்கிரமிப்பது யார்? பயங்கரவாதத் தடைச்சட்டத்தை புதிய வடிவத்தில் கொண்டுவர வேண்டும் என்று கேட்பது யார்? இனப் பிரச்சினைக்கு தீர்வாக 13ஐக் கடக்க கூடாது என்று சிந்திப்பது யார் ? 2009க்கு பின்னரும் ஆக்கிரமிப்பு ஒடுக்குமுறையும் அப்படியே உள்ளன.இனவாதம் உறங்கு நிலைக்குச் சென்று விட்டது என்று கூறும் எந்த ஒரு தமிழ் அரசியல்வாதியும் ஒடுக்குமுறையை மறைமுகமாக நியாயப்படுத்துகிறார் என்றுதான் ஏடுத்துக்கொள்ள வேண்டும். எனவே சிங்கள பவுத்த பெருந்தேசிய வாதத்தை இனிமேல்தான் ஒரு தமிழ் பொது வேட்பாளர் உசுப்பேத்த வேண்டும் என்பதல்ல.அது ஏற்கனவே ஆக்கிரமிப்பு மனோநிலையுடன் செயற்பட்டுக்கொண்டுதான் இருக்கின்றது. மேலும் ஒரு தமிழ் பொது வேட்பாளர் நாட்டை பிரிக்கச் சொல்லிக் கேட்கப் போவதில்லை. அவர் தமிழ் மக்களை ஒரு தேசமாக இருக்க விடுமாறு தான் கேட்கப் போகின்றார். தமிழ் மக்கள் ஒரு தேசமாக இருக்கவிரும்புவது குற்றமா ? இலங்கைத்தீவின் இனப்பிரச்சினை எனப்படுவது தமிழ் மக்களை ஒரு தேசமாக ஏற்றுக்கொள்ள மறுப்பதுதான்.இலங்கைத்தீவில் தமிழ்,சிங்கள,முஸ்லிம், மலையகம் ஆகிய நான்கு தேசிய இனங்கள் உண்டு என்பதனை ஏற்றுக்கொள்ள மறுப்பதுதான் இனப்பிரச்சினை. அதாவது தமிழ் மக்களின் தேசிய இருப்பை ஏற்றுக் கொள்ள மறுப்பது. எனவே தமிழ் மக்கள் தங்களுடைய தேசிய இருப்பை வெளிப்படுத்தும் விதத்தில் தமது தேசிய விருப்பை வெளிப்படுத்தும் விதத்தில் ஒரு பொது வேட்பாளரை நிறுத்துவதனால் தென்னிலங்கையில் இனவாதம் தூண்டிவிடப்படும் என்று சொன்னால், தமிழ் மக்கள் இனவாதத்தைத் தூண்டாமல் முன்வைக்கக்கூடிய கோரிக்கைகள் எவை? கடந்த 2015இல் இருந்து 2018 வரையிலும் ஒரு புதிய யாப்பை உருவாக்கும் விடயத்தில் சம்பந்தர் சிங்கள மக்களை கோபப்படுத்தாமல் இருக்க வேண்டும் என்பதற்காக எப்படியெல்லாம் விட்டுக் கொடுத்தார் ? தமிழ் மக்களுக்கு அது சமஸ்டிப் பண்புடைய ஒரு தீர்வு என்று கூறினார். ஆனால் சிங்கள மக்களுக்கு சிங்கள கட்சிகள் அது ஒற்றையாட்சிக்குட்பட்டது என்று கூறின. அதற்கு எக்கிய ராஜ்ய என்று ஒரு புதுப் பெயரை வைத்தார்கள். ஒன்றுபட்ட இலங்கைக்குள் பிரிக்கப்படாத,பிரிக்கப்பட முடியாத இலங்கைக்குள் என்றெல்லாம் சம்பந்தர் வார்த்தைகளைத் தெரிந்து எடுத்துப் பேசினார். விளைவாக அவருக்கு என்ன கிடைத்தது? எதிர்க்கட்சித் தலைவரின் மாளிகை கிடைத்தது. மற்றும்படி தமிழ் மக்களுக்கு என்ன தீர்வு கிடைத்தது? 2015இலிருந்து தொடங்கி ஒரு பரிசோதனை செய்தோம் அதில் தோல்வியடைந்து விட்டோம் என்ற பொருள்பட சுமந்திரன் வவுனியாவில் வைத்து 2021ஆம் ஆண்டு கூறினார்.அது ஜெனிவாவை நோக்கி ஒரு கூட்டுக் கடிதத்தை உருவாக்குவதற்காக கூட்டப்பட்ட கூட்டம். அதில் அவர் நிலைமாறு கால நீதி என்ற பரிசோதனையில் தாங்கள் தோற்றுப் போய்விட்டதை பகிரங்கமாக ஒப்புக்கொண்டார். இங்கு சம்பந்தரும் சுமந்திரனும் மட்டும் தோற்கவில்லை. செல்வநாயகம் தோற்றிருக்கிறார். அமிர்தலிங்கம் தோற்றிருக்கிறார். அதற்கு முன்பு ராமநாதன் தோற்றிருக்கிறார். கடந்த ஒரு நூற்றாண்டு முழுவதும் ஐக்கிய இலங்கையை கட்டி எழுப்புவதற்காக தமிழ் தலைவர்கள் முன்னெடுத்த எல்லா முயற்சிகளுமே தோற்கடிக்கப்பட்டிருக்கின்றன.இவ்வளவு தோல்விகளுக்கு பின்னரும் ஒரு புதிய பரிசோதனையைச் செய்யலாம் என்று சிந்தித்தால்,அது சிங்கள பௌத்த இனவாதத்தைத் தூண்டிவிடும் என்று சில அரசியல்வாதிகளும் ஊடகங்களும் கூறுகின்றன. அவர்கள் உண்மையாகவே இனவாதம் தூண்டி விடப்படும் என்று அஞ்சுகிறார்களா?அல்லது அவர்கள் டீல் செய்ய விரும்பும் அரசியல்வாதி தோற்றுவிடுவார் என்று அஞ்சுகிறார்களா? அப்படியாயின் அதற்கும் ஒரு தீர்வு உண்டு.ஓர் அரசியல் விமர்சகர் கூறுவதுபோல,தமிழ் மக்கள் தமது முதலாவது விருப்பு வாக்கை பொது வேட்பாளருக்கும் இரண்டாவது விருப்பு வாக்கை தங்களோடு உடன்படிக்கைக்குவரும் ஒரு சிங்கள வேட்பாளருக்கும் வழங்கலாம் என்று வைத்துக்கொள்வோம். ஆனால் அந்த சிங்கள வேட்பாளர் அனைத்துலகக் கண்காணிப்பின் கீழ் தமிழ் மக்களோடு ஒரு பகிரங்க உடன்பாட்டுக்கு வர வேண்டும். வந்தால் அவருக்கு தமிழ் மக்கள் தங்களுடைய இரண்டாவது விருப்பு வாக்கை வழங்கலாம்.பொது வேட்பாளரைக் காட்டிப் பயமுறுத்தும் அரசியல்வாதிகளும் ஊடகங்களும் இதற்குப் பதில் கூறட்டும். கடந்த 15 ஆண்டுகளாக தமிழ் மக்களின் வாக்குகளை,அதுவும் கேந்திர முக்கியத்துவம் மிக்க வாக்குகளை, வெற்றுக் காசோலையாக யாரோ ஒரு சிங்கள வேட்பாளரை நோக்கித் திருப்பிவிட்ட அரசியல்வாதிகள் இப்பொழுது தமிழ்ப்பொது வேட்பாளர் என்றதும் பதட்டமடைகிறார்கள்,மிரட்சியடைகிறார்கள்.இனவாதத்தைத் தூண்டி விடப் போகிறீர்கள் என்று எச்சரிக்கிறார்கள். ஆனால் கடந்த 15 ஆண்டுகளாக கேந்திர முக்கியத்துவம் மிக்க தமிழ் மக்களின் வாக்குகளை யாரோ ஒரு சிங்கள வேட்பாளரை நோக்கித் திருப்பி,அதன் மூலம் இவர்கள் தமது சொந்த வாக்காளர்களுக்குப் பெற்றுக் கொடுத்த தீர்வு என்ன? கடந்த 15 ஆண்டுகளாக நடந்த எல்லா ஜனாதிபதி தேர்தல்களின் போதும் தமிழ் மக்கள் ராஜபக்சங்களுக்கு எதிராக என்ற நிலைப்பாட்டில் இருந்து வாக்களித்திருக்கிறார்கள்.அவ்வாறு ராஜபக்ஷைகளுக்கு எதிராக என்று சிந்தித்த ஒரே காரணத்துக்காக,2010ல் சரத் பொன்சேகாவுக்கு வாக்களித்தார்கள்.அவர் ராஜபக்சகளின் ஆணையை ஏற்று யுத்தத்தை வழி நடத்தியவர்.அதன்பின் அதே ராஜபக்சகளின் அமைச்சரவையில் இறுதிக்கட்டப் போரில் பதில் பாதுகாப்பு மந்திரியாக இருந்த மைத்திரிபால சிறிசேனவுக்கு வாக்களித்தார்கள்.அதன் பின் 2019 ஆம் ஆண்டு சஜித்துக்கு வாக்களித்தார்கள். இவ்வாறாக மூன்று தடவைகளும் ராஜபக்சவுக்கு எதிராக என்ற ஒரே புள்ளியில் தமிழ் மக்கள் ஒப்பீட்டளவில் ஒற்றுமையாக நின்று முடிவெடுத்தார்கள். ஆனால் இங்கு ஒன்றை சுட்டிக்காட்ட வேண்டும் ராஜபக்சக்கள் மட்டும் இனவாதத்துக்கு தலைமை தாங்கவில்லை. இலங்கைத்தீவில் இன ஒடுக்கு முறை என்பது நன்கு நிறுவனமயப்பட்ட ஒன்று.குறிப்பிட்ட காலகட்டத்தில் அதற்கு தலைமை தாங்கும் நபர்களை,குடும்பங்களை வைத்துக்கொண்டு அதனை அந்த குடும்பங்களின் குற்றமாக மட்டும் கருதக்கூடாது. அது ஒரு கட்டமைக்கப்பட்ட ஒடுக்குமுறை. சிங்கள பௌத்த அரசு இயந்திரம் என்ற கட்டமைப்பு அதை முன்னெடுக்கின்றது. எனவே இதில் ராஜபக்ச என்ற ஒரு குடும்பத்துக்கு எதிராக மட்டும் சிந்திப்பது என்பது அதன் கட்டமைப்பு சார்ந்த, நிறுவனமயப்பட்ட பரிமாணத்தை குறைத்து மதிப்பிடுவதுதான். அந்தக் கட்டமைப்பின் கைதிதான் ரணில். அந்தக் கட்டமைப்பின் கைதிதான் சஜித்.அந்தக் கட்டமைப்பின் கைதிதான் அனுரகுமார. எனவே அந்தக் கட்டமைப்புக்கு வெளியில் எந்த ஒரு ஜனாதிபதி வேட்பாளரும் கிடையாது. இதில் குறைந்த தீமை கூடிய தீமை என்ற வாதத்துக்கு இடமில்லை. அது ஒரு கட்டமைப்பு சார்ந்த ஒடுக்கு முறை. அதற்கு எதிராக தமிழ் மக்கள் தங்களை ஒரு தேசமாக கட்டமைப்பதுதான் தற்காப்பானது;பொருத்தமானது.அந்த அடிப்படையில் ஒரு குடும்பத்துக்கு எதிராக என்று சிந்தித்து வாக்களித்த மக்கள் தங்களை ஒரு தேசமாக கட்டி எழுப்புவதற்காக வாக்களித்தால் என்ன? கடந்த 15 ஆண்டுகளாக ஒரு குடும்பத்துக்கு எதிராக என்று கருதி யார் யாருக்கு வாக்களித்தார்களோ அவர்கள் யாருமே எதையுமே தமிழ் மக்களுக்குத் தீர்வாகப் பெற்றுத் தரவில்லை. அதாவது இலங்கைத் தீவின் பல்லினத்தன்மையை ஏற்றுக் கொள்ளும் விதத்தில் ஒரு புதிய யாப்பு இன்றுவரை உருவாக்கப்படவில்லை. அதை உருவாக்க எந்தத் தலைவராலுமே முடியவில்லை. ஏனென்றால் அவர்கள் அனைவரும் அந்தக் கட்டமைப்பின் கைதிகள். இப்படிப்பட்ட ஒரு பின்னணியில்,இம்முறை ரணில் விக்கிரமசிங்க ராஜபக்சக்களின் பொது வேட்பாளராக நியமிக்கப்படலாம் என்று தெரிகிறது. எனவே தமிழ் மக்கள் அவருக்கு வாக்களிக்கும் வாய்ப்புகள் ஒப்பீட்டளவில் குறைவு. படித்த ஆங்கிலம் தெரிந்த நடுத்தர வர்க்கம் சிலசமயம் அவருக்கு வாக்களிக்கக்கூடும். ஆனால் தமிழ்க் கூட்டு உளவியல் எனப்படுவது அவருக்கு நெருக்கமாக இல்லை.அடுத்தது சஜித்.ஓய்வு பெற்ற படைத்தளபதிகள் இப்பொழுது அவருடைய கட்சியில்தான் சேர்கிறார்கள்.அவர் தெளிவாகக் கூறுகிறார், 13 பிளஸ்தான்,அதைத் தாண்டிச் செல்லமாட்டேன் என்று. இலங்கைத்தீவின் பல்லினத்தன்மையை அங்கீகரித்து ஒரு புதிய யாப்பை உருவாக்க அவர் தயாரில்லை. அடுத்தது அனுர.அவரிடமும் தீர்வு இல்லை. பொருத்தமான ஒரு தீர்வை முன்வைத்து சிங்கள மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்ய அவர் தயாரில்லை. சிங்கள பௌத்த வாக்குகளை இழப்பதற்கு அவர் தயாரில்லை. அதனால்,இந்த மூன்று வேட்பாளர்களில் யாருக்கு வாக்களித்தாலும் அது தமிழ் மக்களின் நீதிக்கான போராட்டத்தின் தார்மீக நியாயத்தை பலவீனப்படுத்திவிடும்.எனவே தமது நீதிக்கான போராட்டத்தின் அடிப்படையாக இருக்கின்ற தங்களை ஒரு தேசமாக அங்கீகரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை நடைமுறைச் சாத்தியமான வழியில் வெளிப்படுத்துவதற்கு இந்தத் தேர்தலை தமிழ்மக்கள் பயன்படுத்தினால் என்ன?அரசாங்கமே ஒழுங்குபடுத்துகின்ற ஒரு தேர்தலை ஒரு மறைமுக பொதுசன வாக்கெடுப்பாக மாற்றினால் என்ன? கடந்த 15 ஆண்டுகளாக கேந்திர முக்கியத்துவம் மிக்க தமிழ் வாக்குகளை வெற்றுக் காசோலைகளாக பயன்படுத்தியதே ஒரு அரசியல் தவறு. கேந்திர முக்கியத்துவம் மிக்க அமைவிடத்தில் காணப்படும் தமிழ் மக்கள் எல்லாப் பேரரசுகளினதும் இழு விசைகளுக்குள் காணப்படுகிறார்கள்.பேரரசுகளின் போட்டோ போட்டிக்குள் தமிழ் வாக்குகளின் பேர பலம் அதிகமானது. 2015 ஆம் ஆண்டு அதுதான் நடந்தது. எனவே தமிழ் மக்களின் புவிசார் அமைவிடத்தைக் கருதிக்கூறின், தமிழ் வாக்குகள் கேந்திர முக்கியத்துவம் மிக்கவை. அவற்றை வெற்றுக் காசோலையாக வீணாக்கலாமா? https://athavannews.com/2024/1380098
  11. தனது ஆய்வு கப்பல் இலங்கை கடற்பரப்புக்குள் வர அனுமதியளிக்காததால் சங்கடத்தில் அமெரிக்கா ! அமெரிக்க ஆய்வு கப்பலுக்கு இலங்கை அனுமதி மறுப்பு : அரசாங்கத்தின் தீர்மானத்தால் கடும் அதிருப்தியில் வொஷிங்டன் அமெரிக்க ஆய்வுக் கப்பலொன்று இலங்கை கடற்பரப்புக்குள் வருவதற்கு இலங்கை அரசாங்கம் மறுப்பு தெரிவித்துள்ளதால், அமெரிக்கா கடும் அதிருப்தி அடைந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்நிலையில், குறித்த ஆய்வுகப்பலில், பல்கலைக்கழக மாணவர்களே வருகைத் தருவதாகவும், அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்வதற்காகவுமே அனுமதி கோரியதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இலங்கை கடல் பரப்புக்குள் ஆய்வு நடத்துவதற்காக அமெரிக்க கப்பல் வரவில்லை எனவும், எரிபொருள், உணவு மற்றும் குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய காரணிகளுக்காக கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட அனுமதி கோரப்பட்டிருப்பதாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது. எனினும், அதற்கான அனுமதியை மறுத்துள்ள இலங்கை அரசாங்கம், எந்தவொரு பிற நாடுகளின் ஆய்வுக் கப்பல்களுக்கும் இனி இலங்கை கடல் பரப்புக்குள் வருவதற்கு அனுமதி கிடையாது என தெரிவித்துள்ளது. மேலும், எந்தவொரு ஆய்வு கப்பலையும் இலங்கை கடற்பரப்பிற்குள் இனி அனுமதிக்கப் போவதில்லை என்ற கொள்கை ரீதியான தீர்மானத்துக்கு அமையவே அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக இலங்கை பதிலளித்துள்ளது. இதேவேளை, சீனாவின் ஆய்வுக் கப்பலுக்கும் தடை விதித்துள்ளதாக சுட்டிக்காட்டிய இலங்கை அரசாங்கம், எந்தவொரு நாட்டின் ஆய்வுகளுக்கும் இனி இலங்கைக்குள் வருவதற்கு அனுமதி கிடையாது என்ற தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும், குறித்த கப்பலின் தேவைகளை, சர்வதேச கற்பரப்பிற்குள் சென்று பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. இதனிடையே குறித்த அமெரிக்க ஆய்வுக் கப்பல், சென்னை துறைமுகத்துக்குள் செல்ல அனுமதி கோரப்பட்டுள்ள போதிலும் அங்கும் இதுவரை அனுமதி அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1380126
  12. நாகப்பட்டினத்திலிருந்து – காங்கேசன்துறைக்கிடையிலான கப்பல் சேவை மீண்டும் ஆரம்பம்! தமிழ்நாடு – நாகப்பட்டினத்திலிருந்து, யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை வரையான கப்பல் சேவைகள் எதிர்வரும் 13ஆம் திகதி மீண்டும் ஆரம்பமாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கப்பல் சேவைக்காக கொள்வனவு செய்யப்பட்ட ‘சிவகங்கை’ கப்பல், மே மாதத்தின் முதல் வாரத்தில் அந்தமானில் இருந்து சென்னை நோக்கி பயணிக்கவுள்ளதாக குறிப்பிடப்படுகிறது. அங்கு மறுசீரமைப்புப் பணிகள் நிறைவடைந்த பின்னர், மே மாதம் 11 ஆம் திகதி நாகை மாவட்டத்தில் இருந்து காங்கேசன்துறைக்கு பரீட்சார்த்த சேவையில் ஈடுபடவுள்ளது. அதன்படி, மே மாதம் 13ஆம் திகதி தொடக்கம் ஒவ்வொரு நாளும் கப்பல் சேவைகள் நாகையிலிருந்து காலை 8 மணிக்குப் புறப்பட்டு மதியம் 12 மணிக்கு காங்கேசன்துறையை வந்தடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர், பிற்பகல் 2 மணிக்கு காங்கேசன்துறையிலிருந்து புறப்பட்டு மாலை 6 மணிக்கு நாகையை சென்றடையும் என குறிப்பிடப்படுகின்றது. இந்த கப்பல் சேவையில், இரு வழிப் பயணத்துக்காக அண்ணளவாக 34 ஆயிரத்து 200 ரூபா அறவிடப்படவுள்ளதுடன் ஒவ்வொரு பயணியும் தம்முடன் 20 கிலோ வீதம் 3 பொதிகளை எடுத்துச் செல்ல முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது. https://athavannews.com/2024/1380121
  13. ஆசிய பெருங்கடல் பாதுகாப்பில் இலங்கை : கண்காணிப்பு விமானத்தை வழங்கும் அவுஸ்திரேலியா! ஆசிய பெருங்கடல் பிராந்தியத்தின் பாதுகாப்பு நடவடிக்கைகளில் பணியாற்றுவதற்கு இலங்கைக்கு சிறப்பு கண்காணிப்பு விமானத்தை அன்பளிப்பாக வழங்குவதற்கு அவுஸ்திரேலியா தீர்மானித்துள்ளது. அவுஸ்திரேலிய வெளிநாட்டலுவல்கள் மற்றும் வர்த்தக திணைக்களத்தின் (தெற்கு மற்றும் தென்கிழக்காசிய பகுதி) பிரதி செயலாளர் மிச்சேல் சங் இதற்கான இணக்கப்பாட்டைத் தெரிவித்துள்ளார். மிச்சேல் சங்கின் அண்மைய இலங்கை விஜயத்தின்போது, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சாகல ரத்நாயக்கவை சந்தித்து கலந்துரையாடியிருந்தார். இதன்போது ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட இணக்கப்பாடுகளுக்கு அமையவே சிறப்பு கண்காணிப்பு விமானத்தை அவுஸ்திரேலியா இலங்கைக்கு வழங்குகிறது. சட்டவிரோத குடியேற்றங்கள் மற்றும் ஆள் கடத்தல் என்பவற்றை தடுப்பது உள்ளிட்ட இலங்கையின் கடல் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு முதற்கட்டமாக இந்த விமானம் வழங்கப்படுவதாக மிச்சேல் சங் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1380118
  14. ரஷ்ய எல்லை பகுதியில் சுட்டு வீழ்த்தப்பட்ட 68 யுக்ரேனிய ஏவுகணைகள். யுக்ரேன் வான்பாதுகாப்பு ஒத்துழைப்பினை விரைவுபடுத்தவுள்ளதாக பென்டகன் அறிவித்துள்ளது யுக்ரேனுக்கான ராணுவ ஒத்துழைப்பின் ஒரு பகுதியாக வான் பாதுகாப்பு ஏவுகணைகள் அனுப்பிவைக்கப்படவுள்ளதாகவும் அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் லொய்ட் ஒஸ்டின் தெரிவித்துள்ளார் ரஷ்ய படையினரின் வான் அச்சுறுத்தல் அதிகரித்துவருவதனால் அவசரமாக தமக்கு பாதுகாப்பு ஒத்துழைப்பு தேவைப்படுவதாக யுக்ரென் ஜனாதிபதி வொலேடிமிர் ஸெலன்ஸ்கி அமெரிக்காவிடம் கோரிக்னை முன்வைத்திருந்தார் இந்த நிலையில் யுக்ரேனுக்கு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்ட 60 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியிலான ராணுவ உதவியில் 6 பில்லியன் பெறுமதியான வான்பாதுகாப்பு உதவித்தொகை அனுப்பி வைக்கப்படவுள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது இதேவேளை யுக்ரேனில் ரஷ்யா இன்று அதிகாலை பாரிய விமானத் தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்த தாக்குதலில் கார்கிவ் நகரில் உள்ள வைத்தியசாலை சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது ரஷ்ய எல்லை பகுதியில் சுமார் 68 யுக்ரேனிய ஏவுகணைகள் சுட்டுவீழ்த்தப்பட்டதாக ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். https://athavannews.com/2024/1380087
  15. ஓம்... கோசான். இப்போ நீங்கள் எழுதியது நினைவிற்கு வருகின்றது. 🙂
  16. கீழே நன்னிச்சோழன் சென்ற மார்கழி மாதம் இணைத்த தலைப்பில்... துரையப்பா இலங்கை போய் கனடா சீருடையுடன் இலங்கை காவல்துறையின் அணிவகுப்பில் கலந்து கொண்டதன் சாதக, பாதகங்களை பலர் அலசி இருந்தார்கள்.
  17. அண்மையில் எங்கோ வாசித்த செய்தியில்.... ரஷ்ய, சீனர்கள் இலங்கையிலேயே கடைகளை திறந்து வியாபாரம் செய்கின்றார்களாம். வரும் நாட்டு சுற்றுலாப் பயணிகளும் அவர்களின் கடையில்தான் பொருட்களை கொள்வனவு செய்வதால்... உள்ளூர் வியாபாரிகள் மனவருத்தத்தில் இருப்பதாக வாசித்தேன். இந்திய சுற்றுலாப் பயணிகளை பற்றி சொல்லத் தேவையில்லை. அவர்கள் ஊரில் இருந்து வரும்போதே புளிச்சாதத்தை கட்டிக் கொண்டு வந்து கைலாயம் வரை போகக் கூடிய ஆட்கள். இவர்களிடமிருந்து... அந்நிய செலவாணியை எடுக்கிறதெண்டால், "கல்லில் நார் உரிக்கிற வேலை" கண்டியளோ.... 😂 🤣
  18. ஸ்ரீலங்கா பாஸ்போட்டுக்கு.... அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, அவுஸ்திரேலியா.... இலவச விசா கொடுக்குமா. என்று ஒருக்கால் கேட்டு சொல்லுங்கள். 🤣

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.