Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் சிறி

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by தமிழ் சிறி

  1. தமிழரசுக்கட்சி தொடர்பான வழக்கினை முடிவுறுத்தத் தீா்மானம் – சுமந்திரன் அறிவிப்பு! தமிழரசுக்கட்சி தொடர்பான வழக்கில் எதிராளிகள் அனைவரது மறுமொழியையும் ஒருநிலைப்பாடாக பதிவுசெய்து வழக்கை முடிவுறுத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். தமிழரசுக்கட்சியின் மத்தியகுழு கூட்டம் வவுனியா இரண்டாம் குறுக்குதெருவில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இன்று காலை இடம்பெற்றது. அதன் பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இவ்விடயம் தொடா்பாக அவா் மேலும் தொிவிக்கையில், எதிராளிகள் அழைத்துள்ள ஆட்சேபனைகள் தொடர்பாக வழக்காளி தன்னுடைய நிலைப்பாட்டை தெரியப்படுத்த வேண்டும் என்ற காரணத்திற்காகவே கடந்த தவணை வழக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. ஆனால் இந்த வழக்கில் வழக்கை முடிவுறுத்த வேண்டும் என்ற நோக்கத்திற்காக நாங்கள் குறுகிய தினத்தை கேட்டிருக்கின்றோம். அன்றையதினம் வழக்காளி நீதிமன்றிலே தெரிவித்த விடயத்துடன், எதிராளிகள் ஏழு பேரும் அழைத்திருக்கின்ற ஆட்சேபனைகளின் அடிப்படையில் மூன்று வித்தியாசமான நிலைப்பாடுகள் எடுக்கப்பட்டது. குறிப்பாக நானும் கட்சியின் பொதுச்செயலாளரும் நிர்வாக செயலாளரும் ஒரு நிலைப்பாட்டையும், மாவைசேனாதிராஜா மற்றும் யோகேஸ்வரன் ஆகியோர் வேறொரு நிலைப்பாட்டையும் சிறிதரன், குகதாசன் ஆகியோர் இன்னொரு நிலைப்பாட்டையும் எடுத்திருப்பது சுட்டிக்காட்டப்பட்டது. இதனால் கட்சி ஒரு பொதுவான நிலைப்பாட்டை எடுக்காத சூழ்நிலையில் நாங்கள் எப்படி எமது நிலைப்பாட்டை இதற்கு தெரியப்படுத்துவது என்று அவர்கள் கேள்வி எழுப்பியிருந்தனர். இருப்பினும் கட்சி தற்போது ஒரு நிலைப்பாட்டிற்கு வந்துள்ளது. வழக்காளி கோரும் நிவாரணங்களை வழங்கி தெரிவுகளை மீள செய்வதற்கு நான் இணங்குகின்றேன் என்று சிறிதரன் கூறியிருந்தார். அதனை நீதிமன்றிலே நான் சொல்லியிருக்கின்றேன். இப்போது நாங்கள் ஒருமித்த நிலைப்பாட்டிற்கு வந்துள்ள காரணத்தினால் நாங்கள் ஏழுபேரும் எட்டாவது எதிராளியான ரத்தின வடிவேலும் இணைந்து, வழக்கிலே எமது மறுமொழியை ஒரு நிலைப்பாடாக பதிவுசெய்து வழக்கை முடிவுறுத்துவதற்காக வழக்காளியோடு இணக்கப்பாட்டிற்கு வருகிறோம் என்று கூறி வழக்கை முடிவுறுத்துவதற்கு தற்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்காக வழக்காளியின் சட்டத்தரணியோடு நான் பேசியிருக்கின்றேன். ஏனையவர்களின் சட்டத்தரணிகளுடன் பேசி பொது நிலைப்பாட்டிற்கு இணங்கிகொள்வதுடன், எதிர்வரும் மாதம் 14 ஆம் திகதி வவுனியாவில் மத்தியகுழு மீண்டும் கூடி அந்த மறுமொழியின் வரைபை மத்தியசெயற்குழுவிற்கு சமர்ப்பித்து அதன் அங்கிகாரத்தை பெறவேண்டும். அதனை அடுத்த தவணையில் நீதிமன்றில் சமர்ப்பித்து அதன் பின்னர் எமது இணக்கப்பாட்டை செய்யலாம் என்று தீர்மானித்திருக்கின்றோம் என மேலும் குறிப்பிட்டுள்ளாா். https://athavannews.com/2024/1388257
  2. இராணுவ அணிவகுப்பு மரியாதை ஒண்டும் குடுக்க வேண்டாம் எண்டு சொல்லுங்கோ. ராஜீவ் காந்திக்கு, துவக்கு பிடியாலை அடித்த மாதிரி.. அடித்துப் போடுவான் சிங்களவன்.
  3. எது பேரழிவு? யாருக்குப் பேரழிவு? நிலாந்தன்! ரணில் தேர்தலை வைப்பாரோ இல்லையோ, அவர் என்ன தந்திரங்களைச் செய்வாரோ இல்லையோ,வடக்கில் தேர்தல்களம் சூடு பிடிக்கத் தொடங்கிவிட்டது.குறிப்பாக,பொது வேட்பாளர் என்ற விடயத்தை மையப்படுத்தி தேர்தல் களம் சூடுபிடித்த தொடங்கிவிட்டது. இங்கு கவனிக்க வேண்டிய விடயம் என்னவென்றால்,பொது வேட்பாளரை எதிர்க்கிறவர்கள் யாரோ ஒரு தென்னிலங்கை வேட்பாளருக்குத்தான் தமிழ் வாக்குகளைச் சாய்த்துக் கொடுக்கப் போகிறார்கள். எந்த ஒரு தென்னிலங்கை வேட்பாளர் தமிழ் தரப்பு ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு சமரசத்துக்கு தயாராக இருக்கிறாரோ அவருக்கு தமிழ் வாக்குகளை சாய்த்து கொடுப்பது என்று மேற்படி தமிழ் அரசியல்வாதிகள் வெளிப்படையாக கூறுகிறார்கள். எனவே அவர்கள் தமிழ் வாக்குகளை சாய்த்துக் கொடுக்கப்போகும் மூன்று தென்னிலங்கை வேட்பாளர்களையும் சற்று விரிவாகப் பார்க்கலாம். அதில் முதலாவதாக ரணில். அவர் ஜனாதிபதியாகப் பதவியேற்ற பின்னிருந்து இனப்பிரச்சினையை வடக்கின் பிரச்சினையாகச் சுருக்கிப் பேசி வருகிறார். மேலும் அதை ஒரு விதத்தில் பொருளாதாரப் பிரச்சினை என்ற தொனிப் படவும் பேசுகிறார்.மாகாண சபைகளை பலப்படுத்தும் விடயத்தில் ரணில் தன்னை ஏமாற்றி விட்டதாக விக்னேஸ்வரன் கூறுகிறார். யாப்பில் உள்ளபடி மாகாண சபைகளுக்கு உள்ள அதிகாரங்கள் பலவற்றை கடந்த மூன்று தசாப்தங்களுக்கு மேலாக தொடர்ச்சியாக வந்த இலங்கை அரசாங்கங்கள் உருவி எடுத்து விட்டன. அவ்வாறு எடுக்கப்பட்ட அதிகாரங்களை மீளப் பெறுவதற்கு ஒரு குழுவை உருவாக்கி, அக்குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் இயங்குவது என்று ரணில் விக்னேஸ்வரனுக்கு ஒப்புதல் கொடுத்தார்.ஆனால் தன்னைப் பல மாதங்களாக அவர் ஏமாற்றி வருகிறார் என்று விக்னேஸ்வரன் கூறுகிறார்.ரணில் இப்பொழுது தெளிவாக கூறுகிறார்,காணி அதிகாரம் போலீஸ் அதிகாரம் இல்லை என்று. அதாவது 13மைனஸ் சஜித்தும் தெளிவாகக் கூறுகிறார்,இரண்டு அதிகாரங்களும் இல்லை, சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்கு வேண்டுமானால் போலீஸ் அதிகாரம் தரலாம்.அதாவது சுற்றுச்சூழல் போலீஸ். இதற்குமப்பால் சஜித்திடமும் அது தொடர்பாக தெளிவான வாக்குறுதிகள் இல்லை. கடந்த வாரம் யாழ்ப்பாணத்திற்கு வந்திருந்தபொழுது, அவர் யாழ்ப்பாணம் பிஷப் ஹவுஸில் கத்தோலிக்க மத குருக்களைச் சந்தித்தார். சந்திப்பின்போது அவர் வாக்குறுதியளிக்கும் 13 பிளஸ்இற்குள் காணி போலீஸ் அதிகாரங்கள் உண்டா என்று ஒரு மதகுரு கேட்டிருக்கிறார்.காணி அதிகாரம்,போலீஸ் அதிகாரம் போன்றன உடனடிக்கு விவாதிக்கப்படக்கூடிய விடயங்கள் அல்லவென்றும்,அவை தேசிய மட்டத்தில் ஆழமாக விவாதிக்கப்பட வேண்டும் என்றும் கூறியிருக்கிறார். அதாவது 13 மைனஸ். மூன்றாவது அனுர, அவர் மாகாண சபையை இப்போது இருக்கும் வடிவத்தில் ஏற்றுக்கொள்வார் போல் தெரிகிறது.ஆனால் அவருடைய கட்சி நீதிமன்றத்திற்கு சென்று பிரித்த வடக்கு கிழக்கை மீண்டும் இணைப்பது தொடர்பாக ஒரு வார்த்தையும் கூறவில்லை.அது தமிழ் மக்களின் தாயகம் என்றும் அவர் கூறவில்லை.அதோடு ஏனைய இரண்டு வேட்பாளர்களைப்போலவே காணி போலீஸ் அதிகாரம் தொடர்பாக அவரிடமும் தெளிவான வாக்குறுதிகள் இல்லை. அதாவது மூன்று பிரதான தென்னிலங்கை வேட்பாளர்களும் நடப்பில் பிரயோகத்தில் உள்ள 13ஐக்கூடக் கடக்கத்தயாரில்லை.சமஷ்டி எல்லாம் தரமாட்டார்கள்.ஆனால் யாப்பை திருத்துவோம் என்று பொதுப்படையாகச் செல்வார்கள். ஆயின்,யாராவது தென்னிலங்கை வேட்பாளருக்கு தமிழ் வாக்குகளைத் திரட்டிக் கொடுக்க முற்படும் தமிழ் அரசியல்வாதிகள் இந்த மூவரில் யாரை நோக்கிக் கையை நீட்டப் போகிறார்கள்? எல்லாருமே 13மைனஸ்தானே? யாரும் சமஸ்டியைத் தருவதாகக் கூறவில்லையே? அவர்கள் தங்களுடைய சிங்கள வாக்காளர்களுக்கு உண்மையாக இருக்கிறார்கள்.நேர்மையாக இருக்கிறார்கள்.பொய் சொல்லவில்லை. இதைத்தான் தமிழ்மக்களுக்கு கொடுப்பேன் என்று உறுதியாகக் கூறுகிறார்கள். சரி,அவர்களுக்கு தமிழ் வாக்குகளை சாய்த்துக்கொடுக்க வேண்டும் என்று தலைகீழாக உழைக்கும் தமிழ் அரசியல்வாதிகள் இதில் யாரைத் தெரிவு செய்யப் போகிறார்கள் ? யாரையும் தெரிவு செய்ய முடியாது. ஆனால் அவர்கள் பொது வேட்பாளரை எதிர்க்கிறார்கள். அதாவது தென் இலங்கை வேட்பாளர்களில் யாரோடும் சமரசம் செய்ய முடியாத நிலை. அதற்காக தமிழ் பொது வேட்பாளரையும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றால் இதன் பொருள் என்ன ? சில தமிழ் அரசியல்வாதிகள் கூறுவதுபோல தென்னிலங்கை வேட்பாளர்கள் எதைத் தரக்கூடும் என்பதைப் பார்த்து முடிவெடுப்போம் என்று அவர்கள் கூறுவது உண்மை இல்லையா? அப்படியென்றால் வேறு எந்த அடிப்படையில் அவர்கள் முடிவெடுக்க போகின்றார்கள்? யாழ்ப்பாணம் பிஷப் கவுசில் கலந்துரையாடும் பொழுது,சஜித் பிரேமதாச பொது வேட்பாளர் என்ற விடயத்தை முன்னிறுத்துவது தமிழ் மக்களுக்கு உள்ள ஜனநாயக உரிமை என்று கூறியிருக்கிறார். அதே சமயம் தனிப்பட்ட முறையில் அது பொது வேட்பாளர் மட்டுமல்ல பொதுவான பேரழிவாகவும் அமையும் என்று கூறியிருக்கிறார். அது என்ன பேரழிவு? தமிழ்மக்கள் தங்கள் வாக்குகளை ஒரு பொது வேட்பாளருக்கு கொடுப்பதனால் என்ன அழிவு வந்து விடப் போகிறது ? யாருக்கு அழிவு வரப்போகிறது?தமிழ் மக்களுக்கா?அல்லது தென்னிலங்கை அரசியல்வாதிகளுக்கா?அல்லது தென்னிலங்கை அரசியல்வாதிகளுக்கு விசுவாசமாக நிற்கும் தமிழ் அரசியல்வாதிகளுக்கா ? தமிழ்மக்களை ஒரு தேசமாகத் திரட்டுவதுதான் தங்களுடைய முதன்மை நோக்கம் என்று பொது வேட்பாளர் அணியினர் கூறுகிறார்கள்.மேலும் தமிழ் அரசியலில் நேர்மையான கண்ணியமான ஒரு அரசியல் பாரம்பரியத்தை பலப்படுத்துவதுதான் தங்களுடைய அடுத்த நோக்கம் என்று கூறுகிறார்கள். அதாவது நமது வாக்காளர்களுக்கு பொறுப்புக்கூறும் ஓர் அரசியல் பாரம்பரியத்தை பலப்படுத்த வேண்டும் என்று அவர்கள் கேட்கிறார்கள். இவை எப்படிப் பேரழிவில் முடியும்?தமிழ்மக்கள் தங்களைப் பலப்படுத்துவது பேரழிவா? தமிழ்மக்கள் தங்களை ஒற்றுமைப்படுத்துவது பேரழிவா? தமிழ் அரசியலை ஒரு சரியான பண்பாட்டில் தடம் ஏற்றுவது பேரழிவா? தென்னிலங்கை வேட்பாளர்களிடம் ஏமாற மாட்டோம் என்று கூறுவது பேரழிவா? சஜித் அதைத் தனிப்பட்ட அபிப்பிராயமாகச் சொல்லியிருக்கலாம்.ஆனால் அதுதான் மூன்று தென்னிலங்கை வேட்பாளர்களின் அபிப்பிராயம். சஜித்துக்கு போகக்கூடிய வாக்குகளை தமிழ் பொது வேட்பாளர் கவர்வாராக இருந்தால், அது தனக்கு வெற்றி வாய்ப்புகளை அதிகப்படுத்தலாம் என்று கருதக்கூடிய தென்னிலங்கை வேட்பாளர்கள் உள்ளூர சந்தோஷப்படலாம். ஆனாலும் தமிழ் மக்கள் ஒரு தேசமாக பலப்படுத்தப்படுவதை அவர்கள் பேரழிவாகத்தான் பார்ப்பார்கள். ஏனென்றால், தமிழ் மக்களை ஒரு தேசிய இனமாக ஏற்றுக்கொள்ள மறுப்பதில் இருந்துதான் இலங்கை இனப்பிரச்சினை தொடங்குகின்றது. இலங்கை இனப் பிரச்சனை என்பது இலங்கைத் தீவின் பல்லினச் சூழலை ஏற்றுக்கொள்ள மறுப்பதுதான்.இச்சிறிய தீவில் ஒன்றுக்கு மேற்பட்ட இனங்கள் உண்டு என்பதனை ஏற்றுக்கொள்ள மறுப்பதுதான். இன்னும் சுருக்கமாகச் சொன்னால், தமிழ் மக்களை ஒரு தேசமாக ஏற்றுக்கொள்ள மறப்பது. ஆனால் ஏப்ரல் மாதம் 30 ஆம் தேதி வவுனியாவில் கூடிய குடிமக்கள் அமைப்புகள் தமிழ் மக்களை ஒரு தேசம் என்று அழைக்கின்றன. ஒரு தேசிய இனம் என்ற அடிப்படையில் சுய நிர்ணய உரிமையின் அடிப்படையில் அவர்கள் உச்சபட்சமான ஒரு தீர்வைக் கேட்கிறார்கள். அவ்வாறு உச்சபட்சமான தீர்வைக் கேட்பது அல்லது தங்களை ஒரு தேசமாக மேலும் பலப்படுத்திக் கொள்வது போன்றன பேரழிவாக முடியும் என்று தென்னிலங்கை அரசியல்வாதிகள் கருதுவது புதியதல்ல. தமிழ் மக்கள் ஒரு தேசமாக இருப்பதை அழிப்பதுதான் இனப்படுகொலையே.தமிழ்மக்களை ஒரு தேசமாகக் கூட்டிக்கட்டும் அம்சங்களை அழித்து விட்டால் தமிழ் மக்கள் நீர்த்துப் போய் விடுவார்கள்;சிதறிப்போய் விடுவார்கள்.கடந்த 15 ஆண்டுகளாக அதைத்தான் அரச திணைக்களங்களும் புலனாய்வு கட்டமைப்பும் அரசாங்கத்துக்குச் சேவகம் செய்யும் தமிழ் அரசியல்வாதிகளும் செய்து வருகிறார்கள்.எனவே தமிழ் மக்கள் ஒரு தேசமாகத் திரள்வது தென்னிலங்கைக்கு பிடிக்காது. ஆனால் அது தமிழ் அரசியல்வாதிகள் சிலருக்கும் பிடிக்கவில்லை. ஏன் ? பொது வேட்பாளரைத்தவிர வேறு எந்த ஒரு தெரிவும் தமிழ் வாக்குகளை பல துண்டுகளாக உடைக்கும். எப்படி என்றால் தமிழ் வாக்காளர்களில் ஒரு பகுதி இயல்பாகவே வாக்களிப்பில் கலந்து கொள்ளாது.தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கேட்குமோ இல்லையோ ஒரு தொகுதி இயல்பாக வாக்களிப்பதில்லை. இது ஒரு தொகுதி. இரண்டாவது தொகுதியினர், அது சிறிய தொகுதியாக இருந்தாலும் அனுரவுக்கு வாக்களிப்பார்கள். மூன்றாவது தொகுதியினர்,ரணில் விக்கிரமசிங்க பொருளாதாரத்தை நிமித்தப் பாடுபடுகிறார் என்று நம்பக்கூடிய மிகச்சிறிய தொகை படித்த ஆங்கிலம் பேசும் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த தமிழர்கள்.அவர்கள் ரணிலுக்கு வாக்களிக்கக் கூடும்.நான்காவது தொகுதி தமிழ் அரசியல்வாதிகள் சுட்டிக்காட்டும் யாரோ ஒரு தென்னிலங்கை வேட்பாளருக்கு வாக்களிக்க போகிறது.ஐந்தாவது தொகுதி தமிழ் பொது வேட்பாளருக்கு வாக்களிக்கும். இந்த விடயத்தில் தமிழ் மக்கள் ஒருமித்த முடிவை எடுக்கவில்லையென்றால் தமிழ் வாக்குகள் மேற்கண்டவாறு ஐந்து தரப்புகளால் பங்கிடப்படும். இது எங்கே கொண்டு போய்விடும்? இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஒரு கட்சிக்குள் நடந்த ஒரு தேர்தல் தமிழ் மக்கள் கேவலமான விதங்களில் துண்டாடப்படுகிறார்கள் என்பதைக் காட்டியது. அதுபோல இந்த ஆண்டின் இறுதியில் நடக்கக்கூடிய ஜனாதிபதி தேர்தல் தமிழ் மக்கள் தோல்வி கரமான விதத்தில் சிதறடிக்கப்படுகிறார்கள் என்ற செய்தியை வெளியே கொண்டுவரக் கூடும். அதை தடுக்க வேண்டுமானால் ஏதோ ஒரு மையத்தில் தமிழ் வாக்குகளைத் திரட்ட வேண்டும். எந்த மையத்தில் அதை திரட்டுவது? சஜித்துக்கு வாக்களியுங்கள் என்று கேட்டு தமிழ் மக்களைத் திரட்டலாமா? அல்லது ரணிலுக்கு,அல்லது அனுரவுக்கு வாக்களியுங்கள் என்று கேட்டுத் திரட்டுவதா? அல்லது பகிஷ்கரிப்பு என்று கேட்டுத் திரட்டுவதா? அல்லது பொது வேட்பாளரை நோக்கித் திரட்டுவதா? இதில் எது அதிகம் பாதுகாப்பானது? ஒரு பொது வேட்பாளரை நோக்கித் திரட்டுவதுதான் அதிகம் பாதுகாப்பானது. ஒரு பொது வேட்பாளரை நோக்கித் தமிழ் வாக்குகளைச் சிந்தாமல் சிதறாமல் திரட்ட முடிந்தால், அது இந்த ஆண்டின் இறுதியில் தமிழ் மக்கள் பெற்ற மகத்தான வெற்றியாக அமையும். அந்த வெற்றி அடுத்தடுத்த ஆண்டுகளில் நடக்கக்கூடிய எல்லா தேர்தல்களிலும் எதிரொலிக்கும். இல்லையென்றால், ஏற்கனவே சிதறிப் போயிருக்கும் தமிழ் வாக்குகள் மேலும் சிதறடிக்கப்பட்டால், அடுத்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் இப்போது இருக்கிற தமிழ் பிரதிநிதித்துவமும் இல்லாமல் போய்விடலாம். குறிப்பாக திருக்கோணமலையில் தமிழரசுக் கட்சிக்குச் சவாலாக ஏனைய தமிழ்த் தேசியக் கட்சி ஏதாவது இறங்கினால்,இப்பொழுது சம்பந்தர் அனுபவிக்கும் அந்த ஆசனம் கிடைக்காமல் போகக்கூடும். கிழக்கு மாகாண சபையை தமிழ்த் தேசியக் கட்சிகள் கைப்பற்றுவது சவால்களுக்கு உள்ளாகும். வடக்கு மாகாண சபையிலும் முன்னம் கிடைத்த பெரும்பான்மை கிடைப்பது கடினம்.தவிர மூன்றாவது புலப்பெயர்ச்சி அலை காரணமாக வெளியேறும் வாக்காளர்களின் தொகை அதிகரித்தால்,அதுவும் தமிழ் பிரதிநிதித்துவத்தில் வீழ்ச்சியை ஏற்படுத்தலாம். எனவே ஒரு தமிழ் பொது வேட்பாளரை நிறுத்தத் தவறினால் தேர்தல் அரசியலிலும் தோல்விகரமான ஒரு சூழல் ஏற்படும்; தமிழ் மக்களின் ஒட்டுமொத்த அரசியலிலும் வீழ்ச்சிகரமான ஒரு சூழல் ஏற்படும்.அதுதான் உண்மையான பொருளில் பேரழிவாக அமையும். https://athavannews.com/2024/1388133
  4. யாழில் கரப்பந்தாட்ட மைதானத்திற்குள் வாள்வெட்டு – இளைஞன் படுகாயம்! யாழ்ப்பாணத்தில் கொடிகாமம் பிரதேசத்தில் கரப்பந்தாட்ட இறுதி போட்டி நடைபெறவிருந்த நிலையில், மைதானத்திற்குள் அத்துமீறி நுழைந்த வன்முறை கும்பல் ஒன்று வாள்வெட்டுத் தாக்குதலை மேற்கொண்டதில் இளைஞன் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். இந்த சம்பவத்தில் மீசாலைப் பகுதியை சேர்ந்த 25 வயதுடைள சிவகுமார் ராகுலன் என்ற இளைஞன் படுகாயமடைந்த நிலையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 12 பேரை கொண்ட வன்முறை கும்பலில் நான்கு பேரை மடக்கிப்பிடித்த பிரதேச மக்கள் அவா்களை மின் கம்பங்களில் கட்டி வைத்திருந்தாக தெரிவிக்கப்படுகின்றது. இதனைத் தொடர்ந்து கொடிகாம பொலிஸார் சந்தேக நபர்களை மீட்டு பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்துள்ளனர். விளையாட்டுக் கழகம் ஒன்றினால் கரப்பந்தாட்ட சுற்று போட்டி ஒன்று நடத்தப்பட்டு வந்த நிலையில் அதன் இறுதி போட்டி நேற்றைய தினம் சனிக்கிழமை நடைபெறவிருந்தது. இதன்போதே இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர். https://athavannews.com/2024/1388213
  5. சம்பந்தர்... பழைய பழக்க தோசத்திலை, பெட்டி வாங்க அந்தரப்படுகின்றார். ஆடின காலும், பாடின வாயும் சும்மா இருக்காது என்று சும்மாவா சொன்னார்கள். பிற்குறிப்பு: நீங்கள் அந்த "சும்"மை நினைத்தால்... கம்பெனி பொறுப்பல்ல.
  6. வேறொரு இளைஞனுடன் நடனமாடிய மனைவியைப் படுகொலை செய்த கணவன் கைது! களுத்துறை மாவட்டத்தின் கமகொட பிரதேசத்தில் இடம்பெற்ற இசை நிகழ்ச்சியின் போது இளைஞர் ஒருவர் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டுள்ளதாக களுத்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவத்தில் 20 வயதுடைய இளைஞன் படுகொலை செய்யப்பட்டுள்ளார். கொலையைச் செய்த சந்தேகநபர் அப்பகுதியைச் சேர்ந்த யுவதி ஒருவரை திருமணம் செய்து கொண்டதாகவும், எனினும் சில நாட்களுக்கு முன்னர் அவரை விட்டு பிரிந்து வாழ்ந்து வந்ததாகவும் கூறப்படுகிறது. களுத்துறையில் இசை நிகழ்ச்சியை பார்வையிடுவதற்கு வந்திருந்த யுவதி, தான் பணியாற்றிய ஆடைத்தொழிற்சாலையின் இளைஞர் ஒருவருடன் நடனமாடியுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். இதனால் ஆத்திரமடைந்த சந்தேகநபர் நடனமாடிக்கொண்டிருந்த இளைஞனை கூரிய ஆயுதத்தால் தாக்கிக் கொலைசெய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை களுத்துறை தெற்கு பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். https://athavannews.com/2024/1388218
  7. பிரபாகரனுக்கு நன்றி கூறவேண்டும் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா! விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு புலம்பெயர் தேசத்துள்ள தமிழ் மக்கள் நன்றி உள்ளவா்களாக இருக்கவேண்டும் என கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அமைச்சர் இதனைத் தெரிவித்திருந்தார். இவ்விடயம் தொடா்பாக அவா் மேலும் தொிவிக்கையில், தமிழ்த்தலைமைகள் சுய இலாப அரசியலை மேற்கொண்டதால் அவை எமது மக்களுக்கு சாபக்கேடான விடயங்களை ஏற்படுத்தியிருந்தன. பல தமிழ்த்தலைமைகள் எமது பிரச்சினைகளைத் தீராப்பிரச்சினைகளாக வைத்திருப்பதையே விரும்புகின்றனா். இதுவே அவா்கள் தமது அரசியல் நடவடிக்கைகளைக் கொண்டு செல்வதற்கும் துணைபுாிகின்றது. விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு புலம்பெயா் தமிழா்கள் நன்றி தொிவிக்க வேண்டும். ஏனெனில் யுத்தத்தினால் புலம்பெயா்ந்தவா்கள் இன்று பல நாடுகளில் நன்றாக இருக்கின்றாா்கள். இலங்கை இந்திய ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்தவே இலங்கைக்கு இந்திய இராணுவத்தினரை அனுப்பி வைத்ததுடன், தெற்கில் இராஜதந்திர ரீதியிலான நடவடிக்கைகளையும் முன்னெடுத்தனர். அதனை குழப்பியடித்து , தும்பு தடியால் கூட அதனை தொடமாட்டோம் என கூறி குழப்பங்களை உண்டு பண்ணினார்கள். அதன் பின் என்ன நடந்தது என உங்களுக்கு தெரியும். அண்மையில் பழைய நண்பர் சுரேஷ் பிரேமசந்திரன் உடன் கதைக்க சந்தர்ப்பம் கிடைத்தது, அதன்போது, இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் பிரகாரம் 13 இனை அமுல் படுத்தி இருந்தால் , இன்றைக்கு தமிழ் மக்கள் எங்கேயோ இருந்திருப்பார்கள் என கூறினேன். அவரும் அதனை ஏற்றுக்கொண்டதை போல் இருந்தது. எமது பிரச்சனைகளை நாங்களே தீர்க்க வேண்டும். சர்வதேச நாடுகள் தங்கள் நலன் சார்ந்தே சிந்திக்குமே தவிர எமது பிரச்சனைகளை தீர்க்க முன் வராது. இலங்கை இந்திய ஒப்பந்தம் நல்லதொரு சந்தர்ப்பம். அதனை நாங்கள் தவற விட்டு விட்டோம். மக்கள் நலன் சார்ந்து யாரும் சிந்திக்காததால் தான் அதனை தவறவிட்டோம். ஜனாதிபதித் தேர்தலுக்காக தெற்கில் இருந்து பலரும் வடக்கிற்கு வந்து தமிழ் பிரதிநிதிகள் என சிலரை சந்திக்கின்றார்கள். அவர்களிடம் இவர்களும் அரைவாசியை தா முக்கால் வாசியை தா என கேட்கிறார்கள். பின்னர் அவர்களுக்கு வாக்களிக்குமாறு தமிழ் மக்க்களிடம் கோருகிறார்கள். ஆட்சி அமைக்கப்பட்டதும் , ஆட்சியாளர்களுடன் கூடி குலாவிய பின்னர், இறுதியாக அடுத்த தேர்தல் நெருக்கும் நேரம் அவர்கள் ஏமாற்றி விட்டார்கள் என தமிழ் மக்களிடம் கூறுவார்கள்” என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேலும் தொிவித்தாா். https://athavannews.com/2024/1388164
  8. இலங்கைக் கடற்பரப்பில் நுழைவதைத் தவிர்க்க இயலாது – தமிழக மீனவா்கள்! தமிழக மீனவர்கள் தமது கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து கடல் வளங்களை சூறையாடுவதால் தமது வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்படுவதாக வட மாகாண மீனவர்கள் தொடர்ச்சியாக கூறி வருகின்றனர். இந்நிலையில் தமிழ்நாட்டு மீனவர்கள் இலங்கைக் கடற்பரப்பில் நுழைவது தவிர்க்க இயலாது என தமிழகத்தின் இராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர் தலைவர் ஒருவர் கூறியுள்ளார். இலங்கை மீனவர்களின் வாழ்வாதாரத்தை ஒரு போதும் பாதிக்கும் நோக்கம் தமிழக மீனவர்களுக்கு கிடையாது எனவும் அவர்களின் பிரச்சனைகளை உணர்ந்து சகோதர மனப்பான்மையுடனேயே தாம் செயற்படுவதாகவும் இராமேஸ்வரத்தில் உள்ள அனைத்து இயந்திர மயமாக்கப்பட்ட படகு உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் பி.ஜேசுராஜா தெரிவித்துள்ளார். எனினும் இந்திய மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடிப்பதை தடுக்க வேண்டும் என வடக்கு மாகாண மீனவர்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ள நிலையில் தமிழக மீனவர்களின் இந்த கருத்து மீனவர்களிடையே அச்சத்தை மேலும் அதிகரித்துள்ளது. உறுதியாகவும் இறுதியாகவும் இந்திய மீனவர்களின் சட்டவிரோத நுழைவு மற்றும் மீன்பிடியை தடுக்க வேண்டும் என வட மாகாண மீனவ கூட்டுறவு சம்மேளனங்களின் தலைவர்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு எழுதியுள்ள கடிதத்தில் வலியுறுத்தியுள்ளனர். இந்த நிலையில் இலங்கை கடற்பரப்பில் தமிழ்நாட்டு மீனவர்கள் நுழைவது திட்டமிட்ட ஒன்றல்ல என்றாலும் அதை தவிர்க்க முடியாமல் உள்ளதாகவும் இரு நாடுகளுக்கும் இடையேயான கடற்பரப்பு மிகவும் குறுகியது எனவும் படகு உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஜேசுராஜா தெரிவித்துள்ளமை வட மாகாண மீனவர்களை மேலும் அச்சத்திற்கு உள்ளாக்கியுள்ளது. https://athavannews.com/2024/1388173
  9. வாக்குவேட்டைக்கு வடக்கை நோக்கிப் படையெடுக்கும் போலி அரசியல்வாதிகள் – ரவி கருணாநாயக்க! 13 ஆவது திருத்தம் அரசியலமைப்பில் உள்ளடக்கப்பட்ட ஒன்றாகும் என்பதால், குறித்த திருத்தத்தில் காணப்படும் குறைநிறைகளை நிவர்த்தி செய்ய வேண்டியதே தற்போதைய தேவையாகும் என முன்னாள் அமைச்சா் ரவி கருணாநாயக்க குறிப்பிட்டுள்ளாா். கொழும்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தொிவித்தபோததே அவா் இதனைக் குறிப்பிட்டாா். இவ்விடயம் தொடா்பாக அவா் மேலும் தொிவிக்கையில், சில அரசியல்வாதிகள் வடக்கில் கூறும் கருத்தினை தெற்கில் கூற அச்சப்படுவதுடன், 13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்தப் போவதாகவதாக கூறுவதானது அரசியல் இருப்பை தக்கவைப்பதற்கான முயற்சியாகும் இது வடக்கு மக்களின் வாக்குகளை இலக்கு வைத்து அவா்களை ஏமாற்றும் செயலாகும். 13 ஆவது திருத்தம் அரசியலமைப்பில் உள்ளடக்கப்பட்ட ஒன்றாகும். ஒரு சில அரசியல்வாதிகள் வடக்கில் கூறும் கருத்தினை தெற்கில் கூற அச்சப்படுகின்றனர். அதேபோன்று தெற்கில் கூறுவதை கிழக்க்கிற்குச் சென்று கூறுவதில்லை. கிழக்கில் கூறுவதை கொழும்பில் கூறுவதில்லை. 13 ஆவது அரசியலமைப்பை நடைமுறைப்படுத்துவதாக எவரும் கூறத்தேவையில்லை. ஏனெனில் 13 ஆவது திருத்தம் அரசியலமைப்பில் உள்ளடக்கப்பட்டுள்ளது. 13 ஆவது திருத்தத்தில் காணப்படும் குறைநிறைகளை நிவர்த்தி செய்ய வேண்டியதே தற்போதைய தேவையாகும். ஆனால் அரசியல்வாதிகள் தற்போது வடக்கிற்கு சென்று 13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்தபொவதாக கூறுவதானது அரசியல் இருப்பை தக்கவைப்பதற்கான முயற்சியாகும். இது வாக்கு வேட்டையை இலக்கு வைத்து மக்களை ஏமாற்றும் செயலாகும்” என ரவி கருணாநாயக்க மேலும் தொிவித்துள்ளாா். https://athavannews.com/2024/1388189
  10. அமொிக்கா நினைத்தாலும் புட்டின் தாக்குதலை நிறுத்தமாட்டாா் – உக்ரேனிய ஜனாதிபதி! ரஷ்ய ஜனாதிபதி புட்டின் தெரிவித்துள்ள போர்நிறுத்தக் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டாலும் அவர் தனது இராணுவ தாக்குதலை நிறுத்தமாட்டார் என உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைய முயற்சித்ததால் உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்த போர் இன்று இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக நீடித்துள்ளது. இந்நிலையில் உக்ரைனுடன் போரை நிறுத்திவிட்டு பேச்சுவார்த்தை நடத்த ரஷ்ய ஜனாதிபதி புடின் 2 நிபந்தனைகளை விதித்துள்ளார். அதன்படி, ஆக்கிரமிக்கப்பட்ட 4 பிராந்தியங்களில் இருந்து உக்ரைன் தனது படைகளை திரும்ப பெற வேண்டும் எனவும் நேட்டோவில் சேருவதற்கான திட்டத்தை கைவிட வேண்டும் எனவும் கூறியுள்ளார். இந்த நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டால் உடனடியாக போரை நிறுத்துவதுடன், அமைதிப்பேச்சு வார்த்தையில் ஈடுபடுவதற்கு ரஷ்யா தயாராக இருப்பதாகவும் ஜனாதிபதி புட்டின் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் ரஷ்ய ஜனாதிபதி புடினின் போர்நிறுத்த ஒப்பந்தத்தை நம்ப முடியாது என உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். அதன்படி, ரஷ்ய ஜனாதிபதி புட்டின் கூறியுள்ள போர்நிறுத்த கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டாலும் அவர் தனது இராணுவ தாக்குதலை நிறுத்தமாட்டார் எனவும் அவரது போர்நிறுத்த ஒப்பந்தம் ஒரு இறுதி எச்சரிக்கை என்பதால் இந்த ஒப்பந்தத்தை நம்ப முடியாது எனவும் உக்ரைன் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். அத்தோடு, ஹிட்லர் செய்த அதே விடயத்தையே ரஷ்ய ஜனாதிபதி செய்வதாகவும், இதனால் அவர் கூறும் யோசனையை நாம் நம்பக்கூடாது எனவும் உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி மேலும் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2024/1388176
  11. உக்ரைன் அமைதி மாநாடு – ரஷ்யா பக்கேற்காததனால் சீனாவும் புறக்கணிப்பு! நூறு நாடுகளுக்கும் மேல் பங்கேற்கும் ‘உக்ரைன் அமைதி மாநாடு’ சுவிட்ஸர்லாந்தில்(Switzerland) நேற்று(15) ஆரம்பமானது. ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையில் 2 ஆண்டுகளுக்கும் மேல் நீடித்துவரும் போா் குறித்து விவாதிப்பதற்காக, சுவிட்ஸர்லாந்தில் நிட்வால்ட் பகுதியில் அமைந்துள்ள பா்கன்ஸ்டாக் சுற்றுலா விடுதியில் இந்த சா்வதேச மாநாடு இடம்பெற்று வருகிறது. அதன்படி, இரண்டு நாள் நடைபெறும் இந்த மாநாடு, நேற்று ஆரம்பமான நிலையில் இன்றும் நடைபெறுகிறது. குறித்த மாநாட்டில், அணுசக்தி பாதுகாப்பு, கடல் பயண சுதந்திரம், உணவு பாதுகாப்பு போன்ற மூன்று விவகாரங்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்படம் என எதிா்பாா்க்கப்படுகிறது. இந்த மாநாட்டில், ஈக்வடாா், ஐவரி கோஸ்ட், கென்யா, சோமாலியா உட்பட பல ஐரோப்பிய நாடுகளின் 50 க்கும் மேற்பட்ட தலைவா்கள் பங்கேற்றுள்ளதுடன், சுமாா் 100 நாடுகளின் பிரதிநிதிகளும் பங்கேற்றுள்ளனர். இந்நிலையில் இதில் பங்கேற்றுள்ள, உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமீா் ஸெலென்ஸ்கி ஊடகவியலாளர்களை சந்தித்த போது, உலகமே ஒன்று கூடினால் ஒரு போரை முடிவுக்குக் கொண்டுவிட முடியும் என தெரிவித்துள்ளார். அதன்படி, உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக, உலக நாடுகளை ஒன்று திரட்டுவதில் இந்த மாநாடு வெற்றியடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். எனினும், உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான இந்த மாநாட்டில், ரஷ்ய பங்கேற்கவில்லை. இதனால் குறித்த ‘உக்ரைன் அமைதி மாநாட்டை சீனாவும் புறக்கணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1388152
  12. சட்டவிரோத மாடு கடத்தல் – பொலிஸ் அதிகாாிக்கு பொன்னாடை போா்த்திய சிவசேனை! வவுனியாவில் சட்டவிரோத மாடு கடத்தல் சம்பவத்தினை முறியடித்த ஓமந்தை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சிரேஷ்ட பொலிஸ் பரிசோதகர் ஜெயதிலக்கவிற்கு சிவசேனை அமைப்பினா் பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தனர். வடக்கில் இருந்து புத்தளம் நோக்கி கடத்தப்பட்ட 70 ஆடுகள் மற்றும் 18 மாடுகள் ஓமந்தை பொலிசாரால் மீட்கப்பட்டதுடன், நான்கு பேரை கைது செய்யப்பட்டமையைப் பாராட்டும் முகமாகவே குறித்த செயற்பாடு முன்னெடுக்கப்பட்டிருந்தது. இதேவேளை அண்மைக்காலமாக இறைச்சிக்காக மாடு, ஆடுகள் என்பன சட்ட விரோதமாக கடத்தப்படும் செயற்பாடுகள் இடம்பெற்று வரும் நிலையில் ஓமந்தை பொலிஸாரால் குறித்த கடத்தல் முறியடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இதன்போது சிவசேனை அமைப்பின் வவுனியா மாவட்ட அமைப்பாளர் அ.அ.மாதவன் மற்றும் சிவசேனை அமைப்பின் முக்கியஸ்தர்கள் பலா் கலந்து கொண்டிருந்தனர். https://athavannews.com/2024/1388108
  13. முன்பெல்லாம் நம் நாடு உலகக் கிண்ணம் ஜெயிக்கவில்லையென்றால் ஏதாவது ஒரு ஆசிய நாடு ஜெயிக்க வேண்டும் என கேட்டு இருக்கேன் ஆனால் இப்போ நமக்கு கிடைக்காத எதுவும் பக்கத்து நாட்டு காரனுக்கு கிடைக்க கூடாதுனு நினைக்கிறோம்.. பக்கத்து வீட்டுக்கரன் நல்லா இருந்தா நமக்கு நிம்மதியா தூக்கம் வந்திருக்குமில்ல. - Vijay Vj -
  14. இலங்கை கிரிக்கெட் சபையின் புதிய யாப்புக்கான சட்டமூலம் ஜனாதிபதியிடம் கையளிப்பு. இலங்கை கிரிக்கெட் சபையின் புதிய யாப்புக்கான சட்டமூலம் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து இன்று காலை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டுள்ளது. ஓய்வு பெற்ற மேல் நீதிமன்ற நீதியரசர் கே.டீ.சித்ரசிறி தலைமையிலான நிபுணத்துவக் குழுவினர் இந்த சட்ட மூலத்தைத் தயாரித்து, ஜனாதிபதியிடம் கையளித்தனர். இலங்கை கிரிக்கெட் சபை எதிர்கொண்டிருக்கும் பிரச்சினைகள் தொடர்பான விடயங்களை ஆராய்வதற்காக அமைச்சரவை உபகுழு கடந்த வருடம் நியமிக்கப்பட்டிருந்த நிலையில் அதன் இறுதி அறிக்கையே இன்று கையளிக்கப்பட்டுள்ளது. இந்த அமைச்சரவை உப குழுவில், வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தலைமையில், மின்சக்தி, வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர, தொழில், வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் ஆகியோர் அங்கம் வகித்திருந்தனர். அந்த அறிக்கையில் இலங்கை கிரிக்கெட் கட்டமைப்பை முழுமையாக மறுசீரமைப்பதற்கு பரிந்துரைக்கப்பட்டது. இந்த அமைச்சரவை உப குழு அறிக்கையை மையப்படுத்தி, அமைச்சரவையினால் கடந்த பெப்ரவரி 13 ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இலங்கை கிரிக்கெட் சபைக்கு புதிய யாப்புக்கான சட்டமூலத்தை தயாரிக்க நிபுணத்துவக் குழுவொன்று நியமிக்கப்பட்டது. ஓய்வுபெற்ற மேல் நீதிமன்ற நீதியரசர் கே.டீ.சித்ரசிறியின் தலைமையில், இந்த நிபுணர் குழு நியமிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1388038
  15. ஜப்பானில் வெளிநாட்டு ஊழியர்களுக்கு நிரந்தர குடியுரிமை : ஜப்பான் அரசு வெளிநாட்டு ஊழியர்களுக்கான நிரந்தர குடியுரிமையை வழங்க ஜப்பான் அரசு தீர்மானித்துள்ளது. அதன்படிஇ வெளிநாட்டு ஊழியர்களின் திறன்களை மேம்படுத்தும் நோக்கில்இ தொழில்நுட்ப வேலைவாய்ப்பு பயிற்சி திருத்தச் சட்டம் நாடாளுமன்றத்தில் நேற்று பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. திருத்தப்பட்ட புதிய சட்டம் 2027 முதல் ஜப்பானில் நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு ஊடக அறிக்கைகளின்படிஇ குடிவரவு கட்டுப்பாடு மற்றும் அகதிகளை அடையாளம் காணும் முந்தைய அடிப்படைகளும் திருத்தப்பட்டுள்ளன. மூன்று ஆண்டுகளுக்குள் குறிப்பிட்ட திறமையான தொழிலாளர்களாக ஜப்பானில் பணிபுரிய வெளிநாட்டவர்களுக்கு பயிற்சி அளிப்பதே இதன் முக்கிய நோக்கமாகும். நர்சிங்இ கட்டுமானம் மற்றும் விவசாயம் போன்ற தொழிலாளர் பற்றாக்குறை உள்ள பல துறைகள் இதில் உள்ளடங்கியுள்ளன. அதற்கமைய இ புதிய சட்டத்தின் கீழ்இ ஜப்பானில் நிரந்தர வதிவிட அனுமதி பெற்ற வெளிநாட்டு தொழிலாளர்கள் அரசாங்கத்திற்கு வரி மற்றும் பிற கொடுப்பனவுகளை வேண்டுமென்றே செலுத்தத் தவறினால் அவர்களின் நிரந்தர வதிவிடத்தையும் ரத்து செய்யப்படும் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2024/1388031
  16. வெளிநாடு போக முதல்... என்ன விசாவிலை போறம் என்று கவனிக்க வேண்டும் மக்காள். 😂

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.