Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் சிறி

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by தமிழ் சிறி

  1. மூன்றாவது முறையாக பிரதமராக மோடி பதவியேற்பு! இந்தியாவின் மூன்றாவது முறையாக இந்திய பிரதமராக நரேந்திர மோடி இன்று (ஞாயிற்றுக்கிழமை) பதவியேற்கவுள்ளார். அதன்படி பதவியேற்பு நிகழ்வில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் பங்கேற்கவுள்ளதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் உறுதிப்படுத்தியுள்ளது. இன்னிலையில் மூன்றாவது முறையாக இந்திய பிரதமராக தனது 73 ஆவது வயதில், நரேந்திர மோடி இன்றிரவு 7.15 மணிக்கு ராஷ்டிரபதி பவனில் பதவியேற்கவுள்ளதாக இந்தியாலின் ஜனாதிபதி மாளிகை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. இதன்போது, மத்திய அமைச்சர் குழுவின் ஏனைய உறுப்பினர்களின் பதவிப்பிரமாணம் இடம்பெறவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் இந்தியாவின் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்கவுள்ள நிகழ்வுக்கு 7 நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்த நிகழ்வில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பங்களாதேஷ் பிரதமர், மாலைத்தீவு ஜனாதிபதி, மொரிஸியஸ் பிரதமர்த், சீஷெல்ஸ் துணை ஜனாதிபதி, நேபாள பிரதமர், பூட்டான் பிரதமர் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அத்தோடு, சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்டுள்ள தலைவர்களுக்கு, ராஷ்டிரபதி பவனில் ஜனாதிபதி திரௌபதி முர்முவினால் இன்று விருந்துபசாரமும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதற்கமைய, அரசியல் பிரமுகர்கள், கலைஞர்கள், பிரபலங்கள் உள்ளிட்ட 8000க்கும் அதிகளவானோர் பதவியேற்பு நிகழ்வில் கலந்துகொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, பிரதமர் மற்றும் அமைச்சரவை பதவியேற்புக்காக டெல்லியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, இன்றும், நாளையும் டெல்லி பொலிஸார் 144 தடை உத்தரவு பிறப்பித்து உத்தரவிட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து, குடியரசுத் தலைவர் மாளிகையை அண்மித்த பகுதிகளில் ட்ரோன்கள் உள்ளிட்டவற்றை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1386792
  2. மர்ம நபரால் தாக்குதலுக்குள்ளான டென்மார் பிரதமர் ! கோபென்ஹாகென் (Copenhagen) சென்றிருந்த டென்மார்க் பிரதமர் மேட் ஃப்ரெடெரிக்சன் (Mette Frederiksen) மர்ம நபரொருவரால் தாக்குதலுக்குள்ளாகியுள்ள சம்பவம் அந்நாட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தாக்குதலுக்குள்ளான டென்மார் பிரதமர் மேட் ஃப்ரெடெரிக்சன் (Mette Frederiksen) உடனடியாக வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டது. இதில், பிரதமரின் கழுத்து பகுதியில் சிறு காயம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், பிரதமரை தாக்கியதாகக் கூறப்படும் 39 வயதுடைய மர்ம நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவரை எதிர்வரும் 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது. இதன்போது, தாக்குதல் குறித்து கருத்து தெரிவித்துள்ள பிரதமர் மேட் ஃப்ரெடெரிக்சன், நடந்த சம்பவத்தால் தான் அதிர்ச்சியும், கவலையும் அடைந்ததாக தெரிவித்துள்ளார். மேலும், தான் தற்போது நலமாக இருப்பதாகவும், தனக்காக குரல் கொடுத்தவர்களுக்கும், ஊக்கமளித்தவர்களுக்கும் நன்றி என குறிப்பிட்டுள்ளார். கடந்த 2019 ஆம் ஆண்டு டென்மார்க் இன் இளம் வயது பிரதமராக மேட் ஃப்ரெடெரிக்சன் பதவியேற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1386806
  3. அந்தச் சிறுமி உணவு உண்ண கிட்ட வரும் போது, மிருகத்தனமாக தாக்கும் காணொளியை பார்த்தேன். இவனுக்கு உடனடியாக கைதிகளே தண்டனை கொடுத்தது தரமான சம்பவம்.
  4. தாயும், மகனும்... மாறி, மாறி பதவி வகித்துக் கொண்டு, பதவியில் மாற்றம் என்று சொல்கிறார்கள். உங்கடை குடும்ப கட்சி. யார் பதவி வகித்தால் நமக்கென்ன.
  5. காங்கிரஸ் பதவிகளில் மாற்றம்! காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற கட்சித் தலைவராக சோனியா காந்தி மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். காங்கிரஸ் கட்சியின் செயற்குழுக் கூட்டம் டெல்லியில் இன்று (சனிக்கிழமை) நடைபெற்றிருந்து. இன்னிலையில் காங்கிரஸ் உறுப்பினர்கள் கூட்டத்தில் சோனியா காந்தியை தேர்வு செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதன்படி நாடாளுமன்ற கட்சித் தலைவராக சோனியாவின் பெயரை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே முன்மொழிந்தார். தொடர்ந்து கௌரவ் கோகோய், தாரிக் அன்வர் மற்றும் கே சுதாகரன் ஆகியோர் ஆதரவு அளிக்க, ஏகமனதாக காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற கட்சித் தலைவராக சோனியா காந்தி மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். முன்னதாக, மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் காந்தி ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1386766
  6. எப்பிடி இருந்த ஜேர்மன் பொலிஸ், இப்பிடி ஆகீட்டுது. 😂 🤣
  7. விடுதலைப் புலிகளின் முகாம் அமைந்திருந்த பகுதியில் புதையல் தேடிய ஐவர் கைது. விடுதலைப்புலிகளின் அன்பு முகாம் இருந்த பகுதியில் புதையல் தேடிய பொலிஸ் அதிகாரி, ஆசிரியர் உட்ட ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் நேற்று இரவு இடம் பெற்றுள்ளது. நேற்றைய தினம் இரவு 10.30 மணியளவில் புதையல் தேடியவர்கள் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கிளிநொச்சி மாவட்டத்தின் இராமநாதபுரம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அழகாபுரி பகுதியில் விடுதலைப்புலிகளால் அன்பு முகாம் அமைக்கப்பட்டிருந்த பகுதியில் ஸ்கானர் மூலம் புதையல் தேட முயற்சித்த குற்றச்சாட்டிலேயே குறித்த கைது இடம்பெற்றுள்ளது. இதன்போது 2 இலத்திரனியல் ஸ்கேனர் இயந்திரங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர். இதன்போது பொலிஸ் தலைமையகத்தில் செல் IG பிரிவில் கடமையாற்றும் பொலிஸ் பரிசோதகர், மற்றும் தென்னிலங்கை பாடசாலை ஒன்றில் கற்பிக்கும் ஆசிரியர் ஒருவர் உட்பட ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் விசேட அதிரடிப் பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைவாக மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் குறித்த கைது இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் கைதானவர்கள் இராமநாதபுரம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்ட நிலையில் விசாரணைகளை பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர். குறித்த சந்தேக நபர்கள் மருத்துவ பரிசோதனைகளின் பின்னர் இன்று நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர். https://athavannews.com/2024/1386702
  8. யாழில் சாதனை படைத்த மாணவிக்கு கௌரவிப்பு. க.பொ.த உயர்தர பரீட்சையில் மாவட்ட ரீதியாக முதலாவது இடத்தையும், அகில இலங்கை ரீதியாக 32வது இடத்தையும் பெற்ற பாலகிருஷ்ணன் வஜினாவிற்கு, யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் கௌரவிப்பு நிகழ்வு இடம்பெற்றது. மாணவி கல்விகற்ற பாடசாலையான பண்டத்தரிப்பு பெண்கள் உயர்தர கல்லூரியில் இருந்து, மேற்கத்தேய இசை வாத்தியங்கள் முழங்க, ஊர் மக்கள், ஆசிரியரகள், சக மாணவர்கள், கல்விமான்கள், அயல் ஊரவர்கள் என அனைவரும் புடைசூழ அவரது ஊரான சாந்தை கிராமத்திற்கு ஊர்வலமாக காரில் அழைத்துச் செல்லப்பட்டார். பின்னர் சாந்தை சன சமூக நிலையத்தில் குறித்த மாணவிக்கு கௌரவிப்பு நிகழ்வு இடம்பெற்றது. ஊரவர்கள், அயலவர்கள், உறவினர்கள், ஆசிரியர்கள் கல்விமான்கள் என பலர் மாணவிக்கு மலர் மாலை அணிவித்ததுடன், தங்க ஆபரணங்கள் உள்ளிட்ட பரிசு பொருட்களுடன் பல்வேறு பரிசுப் பொருட்களும், நினைவுச் சின்னங்களும் வழங்கி வைக்கப்பட்டன. ஊடகங்கள் வாயிலாக மாணவியின் சாதனையை பார்வையிட்ட புலம்பெயர் தேசங்களில் வசிக்கும் உறவுகளும் குறித்த மாணவிக்கு பரிசுப் பொருட்களை வழங்கியதுடன், புலம்பெயர் தேசத்தில் வசிக்கும் ஒருவர் துவிச்சக்கர வண்டியையும் வழங்கி வைத்தார். அதனை வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் மாணவியிடம் கையளித்தார். குறித்த மாணவி மிகவும் வறுமை கோட்டுக்குட்பட்ட குடும்பத்தை சேர்ந்தவர் என்பதுடன் அவர் கல்வி கற்பதற்கு வீட்டில் ஒரு மேசை கூட இல்லாத நிலையில் வெற்று தரையில் இருந்தே கல்வியினை கற்று இந்த நிலையை அடைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்வில் மாணவியின் உறவினர்கள், ஊரவர்கள், அயலவர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், கல்விமான்கள் என பலரும் கலந்து சிறப்பித்திருந்தனர். https://athavannews.com/2024/1386708
  9. மட்டு.புன்னைச்சோலை பத்திரகாளியம்மன் ஆலய தீமிதிப்பு உற்சவம் : வெளிநாட்டவர்கள் பங்கேற்பு. இலங்கையில் அதிகளவாக பக்தர்கள் தீமிதிப்பு உற்சவத்தில் கலந்துகொள்ளும் ஆலயம் என்ற பெருமையினைக்கொண்ட கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு புன்னைச்சோலை அருள்மிகு பத்திரகாளியம்மன் ஆலயத்தின் தீமிதிப்பு உற்சவம் பல்லாயிரக்கணக்கான அடியார்கள் புடை சூழ வெகுவிமர்சையாக நடைபெற்றது. மட்டக்களப்பு மத்திய பிரதேசத்தில் பண்ணெடுங்காலமாக அருளாட்சி செய்துவரும் அன்னை பத்திரகாளியம்மன் ஆலயத்தின் வருடாந்த உற்சவம் கடந்த ஞாயிற்றுக்கிழமை திருக்கதவு திறத்தல் உற்சவத்துடன் ஆரம்பமானது. ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தில் புதன்கிழமை அன்னையின் கலியாணக்கால் வெட்டும் நிகழ்வு நடைபெற்றதுடன் ஊர்வீதியுலாவும் நடைபெற்றது. இந்த ஆலயத்தின் வருடாந்த தீமிதிப்பில் பிற்பகல் ஆலயத்தில் விசேட பூஜைகள் நடைபெற்று அம்பாள் கடல்குளிப்பு நிகழ்வு நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து அம்பாள் ஆலயம் வருகைதந்தவுடன் தீக்குளிக்கு விசேட பூஜைகள் நடைபெற்று தெய்வாதிகள் சூழ பல்லாயிரக்கணக்கான அடியார்கள் புடை சூழ பக்தர்களின் ஆரோகரா கோசங்களுடன் தீமிதிப்பு உற்சவம் சிறப்பாக நடைபெற்றது. இந்த தீமிதிப்பு உற்சவத்தில் பல்லாயிரக்கணக்கான அடியாhகள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது. இதேநேரம் இந்த தீமதிப்பு உற்சவத்தில் வெளிநாட்டவர்களும் கலந்துகொண்டு தீயில் இறங்கி நேர்கடன்களை செலுத்தியமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1386712
  10. இப்படியான காட்சிகளை காணொளியில் பார்க்கும் போதுதான்... உண்மையான "கிக்" கிடைக்கும். 😂
  11. ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரத்தினால் ஏன் தமிழர்களுக்குத் தீர்வு தர முடியாது? : சாணக்கியன்! தமிழர்களின் பிரச்சினை தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, தனது நிறைவேற்று அதிகாரத்தைப் பயன்படுத்தி ஏன் தமிழர்களுக்கான தீர்வொன்றை முன்வைக்கக்கூடாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான இரா.சாணக்கியன் கேள்வி எழுப்பியுள்ளார். நாடாளுமன்றில் இன்று இடம்பெற்ற சபை ஒத்திவைப்புவேளை விவாதத்தின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், யுத்தம் நிறைவடைந்து 15 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையிலும் தமிழர்களுக்கான அரசியல் தீர்வுகள் இன்னும் முன்வைக்கப்பட இல்லை. தொடர்ந்தும் பாதிக்கப்பட்ட தரப்பினராகவே நாம் இருந்து வருகின்றோம். இந்நிலையில் இலங்கையின் அபிவிருத்தி குறித்து ஜனாதிபதி பல விடயங்களைக் கூறிவருகின்றார். இலங்கையைப் பொறுத்தவரையில் தமிழர்களுக்கான தீர்வினை வழங்காமல் எந்த அபிவிருத்திகளை மேற்கொண்டும் பயனில்லை என்பதை தென்னிலங்கை அரசியல்வாதிகள் புரிந்து கொள்ள வேண்டும். அத்துடன் சர்வதேச நாணயநிதியம் பற்றியும் நாட்டை அபிவிருத்தி செய்ய முடியும் என்று கூறுவது வெறும் கனவு என்பதையும் பெரும்பான்மை அரசியல் தலைவர்கள் விளங்கிக் கொள்ள வேண்டும். ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இவ்வாறான கதைகளைக் கூறியும் தமிழ்த் தலைவர்களுக்கு பல சலுகைகளை வழங்கியும் தமிழ் மக்களை ஜனாதிபதிக்கு ஆதரவு வழங்க வைக்கலாம் என நினைக்கின்றனர். வடக்கு, கிழக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் சில தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மதுபான உரிமம் உள்ளிட்ட பல சலுகைகள் கிடைத்துள்ளன. எனினும், பாரிய குற்றங்களுக்கு பொது மன்னிப்பு வழங்கும் தென்னிலங்கை ஆட்சியாளர்கள் தமிழ் அரசியல் கைதிகள் விடயத்தில் தற்போதைய ஜனாதிபதிக்கு எந்த எண்ணமும் இல்லை” என நாடாளுமன்ற உறுப்பினரான இரா.சாணக்கியன் மேலும் தெரிவித்தார். https://athavannews.com/2024/1386675
  12. மொட்டை அடித்துக் கொண்டு, பஜாரை சுற்றி வந்தாலும்…. பரபரப்பு ஏற்படுகின்றது. வினோத மக்கள் வாழும் நாடு இந்தியா. 😂
  13. ஆகா… இரண்டு பேரும் தங்கடை புகுந்த நாட்டுக்கு அந்த மாதிரி முரட்டு முட்டுக் கொடுக்கிறார்கள். 😁 ம்ம்ம்ம்… நடக்கட்டும். 😂 🤣
  14. இந்திய அமைதிப்படையினரால் படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவேந்தல்! இந்திய அமைதிப்படையால் படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவேந்தல் நிகழ்வு நேற்றைய தினம் புத்தூர் வாதரவத்தையில், இடம்பெற்றது. உயிரிழந்தவர்களின் உறவுகளால் படுகொலை செய்யப்பட்ட இடத்தில் தீபங்கள் ஏற்றப்பட்டு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டு நினைவேந்தல் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டிருந்து. 1989ஆம் ஆண்டு வாதரவத்தையில் இந்திய அமைதிப்படையினரால் ஒன்பது பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டிருந்தனர். அவர்களின் நினைவாகவே குறித்த நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது. நிகழ்வில் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்திய வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் அனந்தி சசிதரன் அஞ்சலியின் பின் கருத்து தெரிவிக்கையில், இந்திய அமைதிப்படை என்ற பெயரில் இலங்கைக்கு வந்த இந்திய இராணுவம் பல்வேறு இடங்களில் பொதுமக்களை படுகொலை செய்திருந்தது. ஆனால் இவ்வாறான படுகொலைக்கு இன்றுவரையும் இந்திய அரசு எவ்வித மன்னிப்பும் கோரவில்லை. இது தொடர்பில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இதுவரை நீதியும் வழங்கப்படவில்லை. தமிழ் மக்களாகிய நாம் இன்றும் ஏதிலிகளாகவே இருந்து வருகிறோம். படுகொலை செய்யப்பட்டவர்களுக்காக அமைக்கப்பட்ட நினைவு தூபி போரின் பின் கடந்த 2012ம் ஆண்டளவில் இராணுவத்தினரால் உடைக்கப்பட்டது. அந்த நினைவு தூபியை விரைவில் அமைத்து அவர்களை நினைவுகூருவதற்கு வழி செய்ய வேண்டும்” இவ்வாறு தெரிவித்துள்ளார். https://athavannews.com/2024/1386603
  15. 4 வயதுச் சிறுமி தாக்கப்பட்ட விவகாரம்: ஜனாதிபதி கண்டனம். முல்லைத்தீவு புல்மோட்டை, அரிசிமலை பிரதேசத்தில் 4 வயது சிறுமியொருவர் கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவத்தை வன்மையாகக் கண்டிப்பதாகவும் இது தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்களுக்கு எதிராக துரித நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஜனாதிபதி தனது உத்தியோகபூர்வ எக்ஸ் தளத்தில் உறுதியளித்துள்ளார். முல்லைத்தீவு புல்மோட்டை, அரிசிமலை பகுதியில் 4 வயதுடைய சிறுமியொருவரை, நபர் ஒருவர் கொடூரமாக தாக்கும் காணொளி, சமூக ஊடகங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தையடுத்து, குறித்த 45 வயதுடைய நபர் ஒருவரும், அவருக்கு ஒத்துழைப்பு வழங்கிய இரண்டு பெண்களும் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், இந்த சம்பவத்திற்கு தனது உத்தியோகபூர்வ எக்ஸ் தளத்தில் கண்டனம் வெளியிட்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பாதிக்கப்பட்ட குழந்தையின் நல்வாழ்வுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் எனவும் இதற்கு அரச அதிகாரிகளிடமிருந்து விரைவான மற்றும் தீர்க்கமான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், நான்கு வயது சிறுமி கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவம் நாட்டையே அதிர்ச்சியடைய செய்துள்ளதுடன், நீதித்துறை செயல்முறையின் ஊடாக சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார். பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் என்ற ரீதியில் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு உடனடி ஆதரவை வழங்குவதற்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார். இதுபோன்ற துஷ்பிரயோகம் குழந்தைகளுக்கு நீடித்த பாதிப்பை எடுத்துக் காட்டுவதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். அதேபோன்று, இன்றைய சிறுவர்கள் இல்லாமல் நாளை இல்லை என்பதை நாம் எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும் எனவும் அவர்களின் நலனுக்கே உயர்ந்த முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்றும் ஜனாதிபதி தனது எக்ஸ் தள பதிவில் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார். https://athavannews.com/2024/1386636
  16. வெளிநாட்டு மோகம்: ஏமாற்றப்படும் யாழ் இளைஞர்கள்! யாழில் கிராம புற இளைஞர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பி வைப்பதாகக் கூறி பண மோசடி செய்து வரும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக யாழ் மாவட்ட மூத்த பொலிஸ் அத்தியட்சகர் ஜெகத் நிஷாந்த தெரிவித்துள்ளார். குறிப்பாக வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள், கிராமப்புற இளைஞர்களை இலக்கு வெளிநாடுகளில் வேலை வாய்ப்பைப் பெற்றுத் தருவதாகத் தெரிவித்து 30 தொடக்கம் 40 இலட்சம் ரூபாய் வரையில் பணமோசடிகளில் ஈடுபடுகின்றனர். அவர்களின் ஏமாற்று நாடகத்தை அறியாத அப்பாவி இளைஞர்கள் போலி வாக்குறுதிகளை நம்பி பணத்தை இழக்கின்றனர். இது தொடர்பான ஏராளமான முறைப்பாடுகள் யாழ்ப்பாணம் மற்றும் சாவகச்சேரி பொலிஸ் நிலையங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன. எனவே, இந்த வெளிநாட்டு நுழைவிசைவு மோசடிகள் தொடர்பில் அவதானமாகவும் , விழிப்பாகவும் இருப்பது அவசியம் என மேலும் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் அண்மைக்காலமாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடிகளும், நுழைவிசைவு மோசடிகளும் அதிகரித்து வருகின்றன. அதிலும், வெளிநாடுகளில் இருந்து வருவோரே இத்தகைய மோசடியில் அதிகம் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1386613

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.