Everything posted by தமிழ் சிறி
-
பிரித்தானிய நகரம் ஒன்றின் முதல்வராக இலங்கை தமிழர் பதவியேற்பு
அகதியாக வந்து நகர முதல்வர் ஆகிய இளங்கோ இளவழகனுக்கு வாழ்த்துக்கள். அவரின் பெயரும் அழகான தமிழ்ப் பெயராக உள்ளது.
- 180 கடவுச்சீட்டுகளை வடிகானில் வீசிவிட்டு, பொதுமக்களின் 26 M கோடி ரூபாவையும் மோசடி செய்துவிட்டு வெளிநாட்டுக்கு தப்பியோடிய எஜென்சிகாரன்
-
இந்தியாவுடன் இணைந்து யாழ் சர்வதேச விமான நிலையம் அபிவிருத்தி
உண்மை. அத்துடன் காங்கேசந்துறைக்கு கப்பல் சேவை, இராமர் பாலம் கட்டுவது, கச்சதீவை மீட்பது என்று…. வருடா வருடம் புது புருடா விட்டுக் கொண்டு இருப்பார்கள். நமக்குத்தான் கேட்டுக் கேட்டு காது புளிச்சுப் போச்சு.
-
ஜப்பானில் அக்குள் வியர்வையில் சோற்று உருண்டை தயாரிப்பு
ஆண்களின் அக்குளுக்குள் வைத்து, இந்த உணவை தயாரிக்க மாட்டார்களா.? இது ... ஆண்களை ஒதுக்கும் செயலாக உள்ளதால் மிக வன்மையாக கண்டிக்கின்றோம். நாங்களும் "ஷேவ்" எடுத்திட்டு, வருவம் எல்லோ.... 😂
-
இரசித்த.... புகைப்படங்கள்.
- சிரிக்க மட்டும் வாங்க
அங்கிளுக்கு.... கப்பல் விடுகிற ஆசை வந்திட்டுது. 😂 🤣- சிரிக்கலாம் வாங்க
- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
- இஸ்ரேலில் அல்ஜசீராவுக்கு தடை !
இஸ்ரேலில் அல்ஜசீராவுக்கு தடை ! இஸ்ரேலில், அல்ஜசீராவின் ஊடக பணிகளுக்கு, பெஞ்சமின் நெதன்யாகு அரசாங்கம் தடைவிதித்துள்ளது. இஸ்ரேலின் உள்நாட்டு பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் விதத்தில் பதிவிட்டதால் ’அல் ஜஸீரா’ செய்தி நிறுவனத்துக்கு இஸ்ரேல் தடை விதித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கத்தார் நாட்டு செய்தி நிறுவனமான அல்ஜசீராவின், ஊடக செயற்பாடுகளை, இஸ்ரேலில் முடிவுக்கு கொண்டுவருவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். அமைச்சரவை தீர்மானத்தின் படி அல்ஜசீராவின் ஒளிபரப்புகள் நிறுத்தப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த அறிவிப்புகள் வெளியான சில மணிநேரங்களில் ஜெரூசலேத்தின் அம்பாசடர் ஹோட்டலிலுள்ள அல்ஜசீரா அலுவலகத்திற்கு சென்ற இஸ்ரேலிய பொலிஸார் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதுடன், ஒளிபரப்பு உபகரணங்களையும் கைப்பற்றியுள்ளனர். இது குறித்து, அந்நாட்டின் செய்தி விவகாரங்கள் துறை அமைச்சர் ஷ்லோமோ கார்ஹி தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ”இஸ்ரேல் அரசுக்கு எதிராகத் தூண்டும் பதிவுகளைப் பரப்பும் எவரும் இஸ்ரேலில் இருந்து ஒளிபரப்பு செய்ய முடியாது” என தெரிவித்துள்ளார். இந்நிலையில், இஸ்ரேலின் உள்நாட்டு பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் விதத்தில் பதிவிட்டால், அமைச்சரவை மூலம் சம்பந்தப்பட்ட வெளிநாட்டு ஊடகங்களை தடை செய்ய அதிகாரமளிக்கும் சட்டம் அந்நாட்டு நாடாளுமன்றத்தால் கடந்த ஏப்ரலில் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், தற்போது இந்த முடிவை அந்நாட்டு அரசு எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1381204- ஆசியாவில் கடும் வெப்பம்; வியட்நாமில் இலட்சக்கணக்கான மீன்கள் இறப்பு
- யாழ்ப்பாணத்தில் நேற்றைய இன்றைய கடும் வெப்பநிலை!
- கருத்து படங்கள்
- கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஏற்பட்ட பதற்றநிலைமை: இந்தியா வெளியிட்ட அவசர அறிக்கை
சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை சுமார் 50 வீதத்தால் குறையும் அபாயம்! சுற்றுலா விசாவிற்கு இலங்கை அறவிடப்படும் கட்டணத்தை அதிகரிப்பதன் காரணமாக இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை சுமார் 50 வீதத்தால் குறையும் அபாயம் உள்ளதாக இலங்கை பயண முகவர்கள் சம்மேளனம் தெரிவித்துள்ளது. தற்போது சுற்றுலா விசாவிற்கு 100.77 டொலர்களை இலங்கை வசூலிப்பதாகவும், விசா கட்டணம் 50 டொலர்களாக இருந்த போது வெளிநாட்டவர்கள் அதிகளவில் வந்ததாகவும் அந்த சம்மேளனம் தெரிவித்துள்ளது. மேலும் ஒரு நபருக்கு 30 நாள் வீசாவிற்கு அதிகபட்சமாக 50 டொலர்களை அறவிடுமாறு ஏற்கனவே அரசாங்கத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக இந்த நாட்டில் சுற்றுலாவின் மூலம் வெளிநாட்டு நாணயத்தை ஈட்ட வேண்டுமாயின் அவ்வாறான கட்டணங்கள் இருக்க வேண்டும் எனவும் குறித்த சம்மேளனம் குறிப்பிட்டுள்ளது. https://athavannews.com/2024/1381183- சிரிக்கவும் சிந்திக்கவும் .
கொழுப்பு, இனிப்பு, உப்பு, உறைப்பு.... இல்லாமல் என்ன இருக்கு. 😂- யாழ்ப்பாணத்தில் நேற்றைய இன்றைய கடும் வெப்பநிலை!
✍️இனிமேல்... மரத்தையும், மலையையும் வெட்ட மாட்டேன். ✍️இனிமேல்... மரத்தையும், மலையையும் வெட்ட மாட்டேன். ✍️இனிமேல்... மரத்தையும், மலையையும் வெட்ட மாட்டேன். ✍️இனிமேல்... மரத்தையும், மலையையும் வெட்ட மாட்டேன். ✍️இனிமேல்... மரத்தையும், மலையையும் வெட்ட மாட்டேன். ✍️இனிமேல்... மரத்தையும், மலையையும் வெட்ட மாட்டேன். ✍️இனிமேல்... மரத்தையும், மலையையும் வெட்ட மாட்டேன். ✍️இனிமேல்... மரத்தையும், மலையையும் வெட்ட மாட்டேன். ✍️இனிமேல்... மரத்தையும், மலையையும் வெட்ட மாட்டேன். ✍️இனிமேல்... மரத்தையும், மலையையும் வெட்ட மாட்டேன். ✍️ 😁- ஆசியாவில் கடும் வெப்பம்; வியட்நாமில் இலட்சக்கணக்கான மீன்கள் இறப்பு
✍️இனிமேல்... மரத்தையும், மலையையும் வெட்ட மாட்டேன். ✍️இனிமேல்... மரத்தையும், மலையையும் வெட்ட மாட்டேன். ✍️இனிமேல்... மரத்தையும், மலையையும் வெட்ட மாட்டேன். ✍️இனிமேல்... மரத்தையும், மலையையும் வெட்ட மாட்டேன். ✍️இனிமேல்... மரத்தையும், மலையையும் வெட்ட மாட்டேன். ✍️இனிமேல்... மரத்தையும், மலையையும் வெட்ட மாட்டேன். ✍️இனிமேல்... மரத்தையும், மலையையும் வெட்ட மாட்டேன். ✍️இனிமேல்... மரத்தையும், மலையையும் வெட்ட மாட்டேன். ✍️இனிமேல்... மரத்தையும், மலையையும் வெட்ட மாட்டேன். ✍️இனிமேல்... மரத்தையும், மலையையும் வெட்ட மாட்டேன். ✍️- தலை துண்டிக்கப்பட்ட 4 மாடுகள், உயிருடன் 21 மாடுகள் மீட்பு
நீங்கள், நூல் விட்டுப் பார்க்கிறீர்கள் என்று எனக்கும் தெரியும். இந்த ஊடகங்கள்தான்... கள்ள மாடும், கள்ளக் காணியையும் பிடிப்பவர்களை காட்டிக் கொடுக்கின்றார்களில்லை.- சவுக்கு சங்கர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!
0:59 / 27:16 சிறையில் சவுக்கு சங்கருக்கு அதிர்ச்சி | கஞ்சா வழக்கு போட்டது எதற்காக? | ஓராண்டுக்கு பெயில் கிடையாது- சவுக்கு சங்கர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!
சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ராம்குமார் சிறையில் கொல்லப்பட்டார். அவர் மின்சார வயரை கடித்து தற்கொலை செய்து கொண்டதாக பொலிஸ் பொய் கூறியது. அப்போது பொலிசாரையும் நீதிமன்றத்தையும் நியாயப்படுத்தி பேட்டி கொடுத்த ஒரே நபர் சவுக்கு சங்கர். இப்போது சவுக்கு சங்கர் பொலிசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். புலிகள் போதைப் பொருள் கடத்துவதாக கூறினார். இப்போது அவரே கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். சிறை அவருக்கு ஒரு நல்ல பாடத்தை கொடுக்கட்டும். தோழர் பாலன்- சிரிக்கலாம் வாங்க
- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
நடிகை சமந்தாவுக்கு கோவில் கட்டி ஊருக்கே விருந்து வைத்த ரசிகர் ஆந்திர மாநிலம் பாபட்லா அருகே ஆலபாடு என்ற இடத்தில் நடிகை சமந்தாவுக்கு தெனாலி சந்தீப் என்ற ரசிகர் கோவில் கட்டியுள்ளார். சமந்தாவின் தொண்டு உள்ளத்திற்காகவே கோவில் கட்டியதாக அவர் கூறுகிறார். சமந்தாவின் பிறந்த நாளன்று கோவிலைத் திறந்த தெனாலி சந்தீப், அவரை முன்மாதிரியாகக் கொண்டு மேலும் பலரும் தொண்டு செய்ய முன்வர வேண்டும் என்பதற்காகவே 4 ஆண்டு முயற்சியில் கோவில் கட்டி முடித்திருப்பதாக கூறினார். https://www.bbc.com/tamil/articles/ce5zg7l3kd1o- கருத்து படங்கள்
- பதினைந்தாவது மே 18 – நிலாந்தன்.
பதினைந்தாவது மே 18 – நிலாந்தன். மே 18 வருகிறது. 2009இலிருந்து இன்றுவரையிலுமாக 15 ஆண்டுகள் கழிந்து விட்டன. இது கிட்டத்தட்ட ஆயுதப் போராட்டம் நடந்த காலகட்டத்தில் அரைவாசிக் காலத்துக்கு கிட்ட வரும். ஆயுதப் போராட்டம் மொத்தம் 38 ஆண்டுகள். இதன் அரைவாசிக்காலம் 19 ஆண்டுகள்.எனவே கடந்த 15 ஆண்டுகளிலும் ஈழத் தமிழர்கள் எதை பெற்றார்கள்? எதைப் பெறவில்லை? என்ற தொகுக்கப்பட்ட அறிவு அவசியம். கடந்த 15 ஆண்டுகளிலும் தாயகத்தில் கட்சி அரசியல்தான் பெருமளவுக்கு மேலோங்கிக் காணப்படுகின்றது.மக்கள் இயக்கமோ அல்லது போராட்ட இயக்கமோ அங்கு கிடையாது. கட்சிகள்தான் போராடுகின்றன. கட்சிகள்தான் பேச்சுவார்த்தைக்குப் போகின்றன.கட்சிகள்தான் தென்னிலங்கைக் கட்சிகளோடு டீல் செய்கின்றன. இக்கட்சி அரசியலைத் தொகுத்து பார்த்தால் கடந்த 15 ஆண்டுகளிலும் பெற்றவை பெறாதவை எவை ? தொடக்கத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இருந்தது. அதிலிருந்து பங்காளிக் கட்சிகள் ஒவ்வொன்றாக வெளியேறி, முடிவில் தமிழரசுக் கட்சி மிஞ்சியது. அதற்குள்ளும் இப்பொழுது உடைவு.கூட்டமைப்பில் இருந்து வெளியேறிய தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்குள் ஓர் உடைவு. கூட்டமைப்பிலிருந்து வெளியேறிய ஏனைய கட்சிகள் இணைந்து தங்களுக்கு இடையே கூட்டணி ஒன்றை உருவாக்கி வைத்திருக்கின்றன. ஆனால் அது ஒரு சிறிய கூட்டு. அதன் வாக்குப் பலத்தை இனிமேல்தான் அளவிட வேண்டும். இப்படிப் பார்த்தால் கடந்த 15 ஆண்டுகளிலும் பெரிய கூட்டுக்கள் உருவாகவில்லை. பெரிய கூட்டுக்கள் உடைந்துவிட்டன என்பதே சரியானது. அதேசமயம் கட்சி அரசியல் போதாது, அல்லது கட்சி அரசியல் தோல்விகரமானது, கட்சிகளை வைத்து ஒரு தேசிய விடுதலைப் போராட்டத்தை நடாத்த முடியாது என்று கூறும் சிவில் அமைப்புகளும் புத்திஜீவிகளும் இணைந்து உருவாக்கிய கட்டமைப்புகளும் தொடர்ந்து முன்னேறவில்லை. கடந்த 15 ஆண்டுகளிலும் அவ்வாறு மூன்று முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டன. முதலாவது முயற்சி தமிழ் மக்கள் பேரவை.அது ஒரு அருமையான சேர்க்கை. கட்சிகளும் புத்திஜீவிகளும் சிவில் சமூகங்களும் இணைந்தன. ஆனால் அந்தக் கூட்டு ஒரு பிரமுகர் மையக் கூட்டு. சமூகத்தில் ஏற்கனவே பிரபல்யங்களாக இருந்த நபர்கள் இணைந்து விக்னேஸ்வரன் என்ற ஒரு முதலமைச்சரை மையமாக வைத்து அதைக் கட்டி எழுப்பினார்கள்.அது மேலிருந்து கீழ் நோக்கி கட்டி எழுப்பப்பட்ட ஒரு பிரமுகர்மைய அமைப்பு. அதனால் ஒரு கட்டத்துக்கு மேல் நின்று பிடிக்கவில்லை. அதன் தோல்விக்கு முக்கியமாக அது ஒரு காரணம். அது தவிர விக்னேஸ்வரன் முதலமைச்சர் பதவியை துறந்த பின் தமிழ் மக்கள் பேரவையை ஒரு முழுமையான மக்கள் இயக்கமாக மாற்றி அதை வழிநடத்த விரும்பவில்லை.இது இரண்டாவது காரணம். மேலும் தமிழ் மக்கள் பேரவைக்குள் காணப்பட்ட பங்காளிக் கட்சிகளுக்கு இடையில் பயன் பொருத்தமான ஒரு ஐக்கியம் நிலவவில்லை. மேற்சொன்ன காரணங்களின் விளைவாக தமிழ் மக்கள் பேரவை ஒரு கட்டத்துக்கு மேல் நின்றுபிடிக்க முடியவில்லை. அதன்பின் முல்லைத்தீவை மையமாகக் கொண்டு தமிழ் மரபுரிமை பேரவை என்ற ஓர் அமைப்பு உருவாக்கப்பட்டது.அது குறிப்பிட்டுச் செல்லக்கூடிய ஒர் ஆர்ப்பாட்டத்தை செய்தது.சிவில் சமூகங்களின் சந்திப்புகளில் அதன் முக்கியஸ்தர்கள் அவேசமாகவும் தர்கபூர்வமாகவும் தீவிரமாகவும் உரையாடுவார்கள். ஆனால் அந்த அமைப்பின் மையமாக காணப்பட்ட ஒருவர் உலகப் பெரு நிறுவனம் ஒன்றில் உயர் பதவி பெற்றதோடு அந்த அமைப்பு அரசியல் பரப்பில் இருந்து காணாமல் போய்விட்டது. மூன்றாவது பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலுமான கட்டமைப்பு. அது கடந்த 15 ஆண்டுகளிலும் மிகப்பெரிய மக்கள் எழுச்சியை ஒழுங்குபடுத்தியது. அந்த மக்கள் எழுச்சியின் பெயரால் அது தன்னை அடையாளப்படுத்திக் கொண்டது. ஆனால் அந்த மக்கள் எழுச்சியின் அடுத்த கட்டமாக அந்த அமைப்பை மக்கள் மயப்படுத்தி ஒரு நிறுவனமாக வளர்த்தெடுக்க முடியவில்லை. தமிழ் மக்கள் பேரவையை போல அது அரங்கில் இருந்து முற்றாக அகன்று விடவில்லை. அதன் இணைத் தலைவரான வேலன் சாமியார் தொடர்ந்தும் போராட்டக் களங்களில் காணப்படுகின்றார். ஆனால் அவர் பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்பு வெற்றிகரமான ஒரு மக்கள் இயக்கமாக வளரவில்லை. இதுதான் தாயகத்து அரசியல் நிலவரம்.அதாவது கட்சிகளும் உடைந்து உடைந்து சிறுத்துக் கொண்டு போகின்றன. மக்கள் அமைப்புகளும் தோன்றி மறைகின்றன. எல்லாவற்றையும் தொகுத்துப் பார்த்தால் திருப்திப்படும் ஒரு நிலைமை தாயகத்தில் இல்லை. அதே சமயம் புலம்பெயர்ந்த தமிழர்களை எடுத்துக் கொண்டால் அங்கு நீதிக்கான போராட்டத்தில் தமிழ் மக்கள் எதுவரை முன்னேறி யிருக்கிறார்கள்? ஐநாவை நோக்கிய செயற்பாடுகளில் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய திருப்பகரமான முன்னேற்றங்கள் எவையும் இல்லை. சான்றுகளையும் சாட்சிகளையும் சேகரிப்பதற்கான ஒரு கட்டமைப்பு இயங்குகின்றது. ஆனால் அது மனித உரிமைகள் பேரவையின் அலுவலகத்துக்குள் இயங்கும் ஓர் அமைப்பு. தமிழ் மக்கள் கேட்டது போல பலமான ஒரு கட்டமைப்பு அல்ல. மேலும் ஐநா மைய அரசியல் எனப்படுவது தமிழ் அரசியலை மனித உரிமைகள் பேரவை என்ற பெட்டிக்குள் கட்டி வைத்திருக்கின்றது.இந்த வரையறை காரணமாக ஐநா மைய அரசியலில் தமிழ் மக்கள் ஒரு கட்டத்துக்கு மேல் முன்னேற முடியவில்லை. அதேசமயம் புலம்பெயர்ந்த தமிழ்ப் பரப்பில் தாயகத்துக்கு அடுத்தபடியாக அதிகம் தமிழர்கள் வாழும் ஒரு நாடு கனடா. அங்கே தனிப்பட்ட நபர்களும் சில அமைப்புகளும் முன்னெடுத்த தொடர்ச்சியான முயற்சிகளின் விளைவாக, கனேடிய அரசாங்கம் இலங்கை அரசாங்கத்துக்கு அச்சுறுத்தக்கூடிய தீர்மானங்களை நிறைவேற்றியிருக்கிறது. மூத்த இரண்டு ராஜபக்சங்களுக்கும் எதிராகத் தடை வந்திருக்கிறது. சில படைத்தளவாதிகளுக்கு எதிராகவும் தடை வந்திருக்கிறது. கனேடியப் பிரதமர் தனது உத்தியோக பூர்வ ருவிட்டர் தளத்தில் இனப்படுகொலை என்ற வார்த்தையை பயன்படுத்தியிருக்கிறார்.தமிழ் புலம்பெயர்ந்த சமூகங்கள் மத்தியில் நீதிக்கான போராட்டத்தைப் பொறுத்தவரை,கனேடியத் தமிழ்ச்சமூகம் குறிப்பிட்டுச் செல்லக்கூடிய வெற்றிகளைப் பெற்றிருக்கிறது. எனினும், அதே கனேடியத் தமிழர்கள் மத்தியில் இருந்துதான் இமாலயப் பிரகடனமும் உருவாக்கப்பட்டிருக்கிறது. தாயகத்தோடு முழுமையாக கலந்து ஆலோசிக்காமல் உருவாக்கப்பட்ட ஒரு பிரகடனம் அது. பௌத்த மகா சங்கத்தோடு அவ்வாறான ஒரு பிரகடனத்தை உருவாக்குவதற்காக தமிழ் மக்களின் அடிப்படைக் கோரிக்கைகள் பெருமளவுக்கு நீர்த்துப் போகச்செய்யப்பட்டுள்ளன.புலம்பெயர்ந்த தமிழ் அமைப்பொன்று தாயக அரசியலின் மீது எவ்வாறு எதிர்மறையான செல்வாக்கைச் செலுத்தலாம் என்பதற்கு அது ஒரு ஆகப் பிந்திய உதாரணம். எனினும் அந்தப் பிரகடனத்திற்கு எதிராக பெரும்பாலான புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புகள் கிளர்ந்து எழுந்தன. விளைவாக, புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புகள் பல ஒன்றிணைந்து எதிர்ப்பை காட்டின.கடந்த 15 ஆண்டுகளிலும் புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புகளை அந்த அடிப்படையிலாவது ஒன்றாக நின்றன. எனவே, இப்பொழுது தொகுத்துப் பார்க்கலாம். தாயகத்திலும் புலம்பெயர்ந்த தமிழர்கள் மத்தியிலும் கடந்த 15 ஆண்டுகளில் ஏற்பட்ட வளர்ச்சிகள்; பெற்ற அடைவுகள் எவை எவை என்பதனை கூட்டிக்கழித்துப் பார்த்தால் ஆயுதப் போராட்ட காலகட்டத்தோடு ஒப்பிடுகையில் ஏறக்குறைய அரைவாசி காலகட்டத்தை தமிழ் மக்கள் கடந்துவிட்ட பின்னரும் நீதிக்கான போராட்டத்தில் தமிழ்மக்கள் தொடர்ந்து ஒரு கட்டத்துக்கு மேல் நகர முடியவில்லை. அதுபோலவே தாயகத்திலும் கட்சி அரசியலைக் கடந்து ஒரு மக்கள் இயக்கத்தை வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்ல முடியவில்லை. இப்படிப்பட்டதோர் பின்னணியில், மற்றொரு மே 18 வருகின்றது. அதையொட்டி தாயகத்தில் “தமிழ் சிவில் சமூக அமையும்” ஒரு அறிக்கையை முன்கூட்டியே வெளியிட்டது.அதுதொடர்பாக ஒரு பத்திரிகையாளர் சந்திப்பையும் ஒழுங்குபடுத்தியது. அதுபோலவே இனிவரும் கிழமைகளில் புலம்பெயர்ந்த தமிழர்கள் மத்தியிலும் நினைவு கூர்தலுக்கான ஏற்பாடுகள் முடுக்கி விடப்படும்.மே 18 வரையிலும் நிலைமைகள் உணர்ச்சிகரமாக இருக்கும். நாட்டில் ஒரு ஜனாதிபதி தேர்தல் நடக்கவிருக்கின்றது. ரணில் விக்கிரமசிங்க தாமரை மொட்டு கட்சியின் பொது வேட்பாளராக களமிறங்குவாராக இருந்தால், தனக்கு தமிழ் மக்களின் வாக்குகள் பெரிய அளவில் கிடைக்காது என்பது அவருக்கு தெரியும். அதேசமயம் தனிச்சிங்கள வாக்குகளைக் கவர வேண்டும் என்ற ராஜபக்சக்களின் கட்சியில் தங்கியிருக்கும் காரணத்தால், அவரும் தனிச்சிங்கள வாக்காளர்களை உற்சாகப்படுத்தும் விதத்தில் நினைவுகூர்தலுக்கு எதிரான நடவடிக்கைகளை முடுக்கி விடுவாரா? என்பதனைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும். ஆனால் அதுகூட ஒரு விதத்தில் நன்மையாகத்தான் முடியும். ஏனென்றால், இக்கட்டுரையில் ஏற்கனவே கூறப்பட்டதுபோல, கடந்த 15 ஆண்டுகளாக தேங்கிப் போயிருக்கும் தாயகத்து அரசியலில் ஒடுக்குமுறைதான் குறைந்தபட்சம் ஒரு விழிப்பை ஏற்படுத்தும். கடந்த 15 ஆண்டுகளாகவும் அதுதான் நடந்து வருகிறது. தமிழ் மக்கள் தாங்களாக ஒன்றிணைந்து ஒரு மக்கள் இயக்கத்தைக் கட்டி எழுப்பவோ அல்லது தமிழ் கட்சிகள் தாங்களாக ஒன்றிணைந்து ஒரு பெரிய கூட்டை உருவாக்கவோ முயற்சிக்கவில்லை. மாறாக எதிரியின் ஒடுக்குமுறைகள்தான் அவர்களை விழித்தெழு வைத்திருக்கின்றன. ஒடுக்குமுறைதான் அவர்களைப் புதிய பெரிய அணிச் சேர்க்கையை நோக்கி உந்தித் தள்ளுகின்றன.அல்லது எதிர்த்தரப்பின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப நடாத்தப்படும் தேர்தல்கள் அல்லது அரசியல் நடவடிக்கைகள் என்பவற்றின் விளைவாகத்தான் தமிழ்மக்கள் அவ்வப்போது சீண்டப்பட்டு ஆர்ப்பாட்டங்களை நடாத்தியிருக்கிறார்கள். கடந்த 15 ஆண்டுகளிலும் தமிழ் மக்கள் மத்தியில் குறிப்பிட்டுச் செல்லக்கூடிய மக்கள் அமைப்புக்கள் தோன்றிய காலகட்டம் அல்லது குறிப்பிட்டுச் செல்லக்கூடிய பேரெழுச்சிகள் ஒழுங்கு செய்யப்பட்ட காலகட்டம் எவை என்று பார்த்தால், இரண்டு சந்தர்ப்பங்களில் அவ்வாறு எழுச்சிகளும் அமைப்புகளும் உருவாகியுள்ளன. முதலாவது சந்தர்ப்பம்,ரணில் விக்கிரமசிங்கவின் ஆட்சிக் காலங்களில் அதிகரிக்கும் ஜனநாயக வெளி. அப்படிப்பட்ட ஒரு காலகட்டத்தில்தான் தமிழ் மக்கள் பேரவை, தமிழ் மரபுரிமை பேரவை போன்றன தோன்றின. இரண்டாவது ஒடுக்குமுறைகளுக்கு எதிராக ஏற்படும் எழுச்சிகள் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலுமான எழுச்சி அத்தகையதுதான். இரண்டாவது சந்தர்ப்பம், தேர்தல்கள் அல்லது அரசாங்கத்தின் புதிய நகர்வுகள் அல்லது ஐநா மனித உரிமை கூட்டத்தொடர். இந்த வெளித் த்தரப்புகளின் நடவடிக்கைகளை எதிர்கொள்வதற்காக தமிழ் மக்கள் ஏதோ ஒரு ஐக்கியத்துக்கு போவார்கள். அல்லது ஏதோ ஒரு கூட்டு முயற்சியில் ஈடுபடுவார்கள். அதாவது தாயகத்தில் மட்டுமல்ல புலம்பெயர்ந்த தமிழர்கள் மத்தியிலும் தமிழ் மக்களை ஒன்றிணைக்கும் சக்தியாக ஒடுக்குமுறைதான் காணப்படுகின்றது. அரசறிவியலில் இதனை எதிர்வினை ஆற்றும் அரசியல் என்று கூறுவார்கள். எதிரியின் ஒடுக்குமுறைக்கு எதிராக ஒடுக்கப்படும் தரப்பு காட்டும் எதிர்ப்பு. அதேசமயம் தானாக ஒரு தேசத்தை கட்டி எழுப்புவது என்ற அடிப்படையில் மக்கள் அமைப்புகளை உருவாக்கி அல்லது கட்சிக் கூட்டுகளை உருவாக்கி தமிழரசியலை அடுத்தடுத்த கட்டங்களுக்கு வளர்த்துச் செல்லமுடியாத ஒரு அரசியல் போக்கு. இந்தப் போக்கை உடைத்துக்கொண்டு தமிழ்மக்கள் ஒரு தேசத்தை கட்டியெழுப்புவது என்ற அடிப்படையில் போராட்ட அமைப்புகளையும் கட்சிக் கூட்டுக்களையும் உருவாக்கி தொடர்ச்சியாகப் போராடுவதுதான் நினைவுகூர்தலை அதன் முழுமையான பொருளில் செய்வதாக அமையும். https://athavannews.com/2024/1381169- இந்திய மக்களவைத் தேர்தல் பணிகளை மேற்பார்வை செய்ய இலங்கைக்கு அழைப்பு !
இந்திய மக்களவைத் தேர்தல் பணிகளை மேற்பார்வை செய்ய இலங்கைக்கு அழைப்பு ! இந்திய மக்களவைத் தேர்தல் பணிகளை மேற்பார்வை செய்வதற்காக இலங்கைக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்திய தேர்தல் ஆணையகத்தின் ஏற்பாட்டில் நடைபெறும் சர்வதேச தேர்தல் பார்வையாளர் நிகழ்ச்சியின் ஓர் அங்கமாக இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகின் மிகப்பெரிய தேர்தலொன்று நடைபெறுவதைக் காண்பதற்காக 23 நாடுகளிலுள்ள தேர்தல் முகாமைத்துவ அமைப்புகளுடன் தொடர்புடைய 75 சர்வதேச பார்வையாளர்களுக்கு இந்திய தேர்தல் ஆணையகம் இவ்வாறு அழைப்பு விடுத்துள்ளது. அதன்படி, மே மாதம் 4ஆம் திகதி முதல் 9ஆம் திகதி வரை நடைபெறுகின்ற சர்வதேச தேர்தல் பார்வையாளர் நிகழ்ச்சியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி 10 உறுப்பினர்களைக் கொண்ட தூதுக்குழு பங்கேற்கின்றது. இந்த தூதுக்குழுவில் இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழுவின் 2 பிரதிநிதிகள் மற்றும் தேர்தல் சட்ட சீர்திருத்தங்களுக்கான பரிந்துரைகளை உருவாக்குவதற்கான குழுவின் 8 பிரதிநிதிகள் உள்ளடங்குகின்றனர். இந்நிலையில், இலங்கை தூதுக்குழுவின் பங்கேற்பு, இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதற்கும், இந்தியாவிற்கும், இலங்கைக்கும் இடையிலான தேர்தல் நடைமுறைகள் தொடர்பான அறிவு மற்றும் அனுபவங்களை பகிர்ந்துகொள்வதற்குமான முக்கிய தளமாக இது அமையும் என இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1381165- கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஏற்பட்ட பதற்றநிலைமை: இந்தியா வெளியிட்ட அவசர அறிக்கை
சுற்றுலாப் பயணிகளுக்கு விசா வசதிகளை வழங்க தனியார் நிறுவனத்திற்கு அனுமதி வழங்கும் விவகாரம் – முகவர் நிறுவனங்களின் சம்மேளனம் ஜனாதிபதிக்கு கடிதம் ! சுற்றுலாப் பயணிகளுக்கு விசா வசதிகளை வழங்க தனியார் நிறுவனத்திற்கு அனுமதி வழங்குவது, இலங்கையின் சுற்றுலாத்துறையை பாதிக்கும் என சுற்றுலா முகவர் நிறுவனங்களின் சம்மேளனம் ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளது. சுற்றுலா முகவர் நிறுவனங்களின் சம்மேளனம், ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதத்திலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய முறைமையின் கீழ் விசா கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டதன் காரணமாக, ஆசியாவிலேயே அதிக விசா கட்டணம் அறவிடும் நாடாக இலங்கை தற்போது மாறியுள்ளதாகவும், அக் கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 2012ஆம் ஆண்டு ETA என்ற Electronic Travel Authorization முறை அறிமுகப்படுத்தப்பட்டு விசா கட்டணம் அறவிடப்பட்டது. அதன்படி, அவ்வப்போது விசா கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டு, இவ்வாண்டு ஆரம்பத்தில், இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணி ஒருவரிடமிருந்து அதிகபட்சமாக 60 அமெரிக்க டொலர் அறவிடப்பட்டது. எவ்வாறாயினும், இந்தச் செயற்பாட்டை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திலிருந்து நீக்கி தனியார் நிறுவனம் ஒன்றுக்கு அமைச்சரவையின் அனுமதியுடன் மாற்றுவதற்கு அரசாங்கம் அண்மையில் நடவடிக்கை எடுத்திருந்தது. அதன்படி, முதலில் ஒன்லைன் வசதி மூலம் விசா வசதியும், பின்னர் ON ARRIVAL விசா வசதியும் அந்த தனியார் நிறுவனத்துக்கு மாற்றப்பட்டது. அதனுடன் இதுவரையில் ON ARRIVAL விசா வசதியை வழங்கிய அரசாங்க இணையத்தளமான www.eta.gov.lk முடக்கப்பட்டு அதற்கு பதிலாக www.srilanka e-visa.lk என்ற தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான புதிய இணையத்தளம் அறிமுகப்படுத்தப்பட்டது. https://athavannews.com/2024/1381145Important Information
By using this site, you agree to our Terms of Use.
- சிரிக்க மட்டும் வாங்க
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.