Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழ் சிறி

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by தமிழ் சிறி

  1. தமிழகத்திற்கு தொடர்ந்து 5 நாட்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை : அதிக வெப்பநிலையால் 9 பேர் பலி. இந்தியாவில் சில பகுதிகளில் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்தமையால் 9 பேர் உயிரிழந்துள்ளனர். ஏப்ரல் மாதத்தில் கிழக்கு இந்தியாவில் அதிகளவான வெப்பம் பதிவாகியுள்ளது. ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் இந்தியாவின் தென்பகுதி, மத்திய இந்தியா, கிழக்கு இந்தியா, வடமேற்கு இந்தியாவின் சமவெளிப் பகுதிகளில் வழக்கத்தை விட அதிகமான வெப்ப அலை வீசும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. ஏப்ரல் மாதம் 19ஆம் திகதி ஆரம்பமான ஏழு கட்ட நாடாளுமன்றத் தேர்தலில், ஜூன் மாதம் 4 ஆம் திகதி முடிவுகள் வெளியாகும் நிலையில் வாக்குப்பதிவு குறைந்தமைக்கு கடும் வெப்பமும் ஒரு காரணம் என அரசியல் ஆய்வாளர்களால் கூறுகின்றனர். குறிப்பாக சேலம், ஈரோடு, கரூர், தர்மபுரி, திருத்தணி, திருப்பத்தூர், வேலூர் ஆகிய மாவட்டங்களில் 100 டிகிரியையும், சில நேரங்களில் 105 டிகிரி கடந்தும் வெயில் பதிவாகியுள்ளது. இதில் ஈரோடு, சேலத்தில் 108 டிகிரியையும் கடந்து இந்த ஆண்டில் இதுவரை இல்லாத வெப்ப அளவாக பதிவாகியுள்ளது. ஈரோட்டில் 11-வது நாளாக நேற்று 110 டிகிரி அளவில் வெப்பநிலை பதிவாகியுள்ளது. இந்நிலையில் இந்திய வானிலை ஆய்வு மையம் தமிழகத்திற்கு அடுத்த 5 நாட்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது. https://athavannews.com/2024/1380732
  2. சூடானில் நீடிக்கும் பஞ்சம் : மண்ணை உண்ணும் மக்கள்! சூடானில் பசி, பட்டினியால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் சூடான் இராணுவத்திற்கும் துணை இராணுவத்திற்கும் இடையே உள்நாட்டு போர் வெடித்தது. இந்த போர் தற்போது வரை நீடிப்பதுடன் இதனால், விவசாய பயிர்கள் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதுடன், மக்கள் உணவைத் தேடி வீட்டை விட்டு வெளியேறி வருகின்றனர். இதற்கிடையில், உணவுப் பொருட்கள் அனைத்தும் தீர்ந்து விட்டதால், விவசாயிகள் பயிர்ச் செய்கைக்காக கொள்வனவு செய்த விதைகளை உண்ணுவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அத்துடன், மக்கள் உயிர் வாழ்வதற்காக மண் மற்றும் இலைகளை உண்ணும் அவல நிலை தற்போது ஏற்பட்டுள்ளதாக அந்த செய்திகள் மேலும் குறிப்பிட்டுள்ளன. https://athavannews.com/2024/1380776
  3. விக்கியர்.... "பக்கத்து இலைக்கு பாயாசம்" கேட்கிற கதையாய் இருக்கு. 😂 ம்ம்ம்... நடக்கட்டும். 🤣
  4. 1958 ஆம் ஆண்டு இங்கிலாந்து மற்றும் சிலோன் (இலங்கை) இடையே தொடங்கப்பட்ட இந்த பேருந்து சேவை உலகின் இரண்டாவது மிக நீண்ட பேருந்து பயணமாக கருதப்படுகிறது. பயணத்தின் போது இந்த பேருந்து இந்தியாவின் ராமேஸ்வரத்தில் இருந்து கப்பலில் பேருந்தை ஏற்றிக்கொண்டு இலங்கைக்கு பயணித்தது. 42 நாட்கள் 20000 கிலோமீட்டர் பயணம் செய்த இந்தப் பயணம் எவ்வளவு அற்புதமாக இருந்திருக்கும்? Vino Rajacholan VII
  5. மொக்கு மாதிரி இருக்கிற ஆட்கள்தான்.... வெட்டு ஒன்று துண்டு இரண்டாக, போட்டுத் தள்ளிக் கொண்டே போவார்கள்.
  6. @ போட்டு ஆங்கிலத்தில் g போட... நம்ம ஜீ வருவார். 😂
  7. தமிழ்த் தரப்பில் பொது வேட்பாளரை நிறுத்த சிவில் சமூகம் தீர்மானம்! ஜனாதிபதித் தேர்தலில் ஒரு பொதுத் தமிழ் வேட்பாளரை நிறுத்துவதற்கான சிவில் சமூகத்தின் கூட்டுத்தீர்மானம் இன்று மேற்கொள்ளப்பட்டது. தமிழ் மக்கள் ஒரு தேசமாகத் திரள்வதும் சிந்திப்பதும் செயற்படுவதும் காலத்தின் தேவை என்ற அடிப்படையில் இன்று வவுனியா வாடிவீடு விடுதியில் ஒன்றுகூடிய தமிழர் தாயகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் சிவில் சமூகத்தினர் பின்வரும் தீர்மானங்களை மேற்கொண்டனர். 1. தமிழ் மக்கள் ஒரு தேசிய இனம் என்ற அடிப்படையில் தமது இறைமையையும் சுயநிர்ணய உரிமையையும் பிரயோகிப்பதற்கான ஒரு களமாக ஜனாதிபதி தேர்தலை கையாள்வது. 2. ஸ்ரீலங்காவின் ஜனாதிபதி தேர்தலை, ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான தேர்தல் என்ற அடிப்படையில் நிராகரித்து அத்தேர்தலை நடைமுறையில் ஈழத்தமிழ் மக்களுக்கான பொது வாக்கெடுப்பாக கையாள்வது. 3.அதற்கு அமைய ஒரு தமிழ் பொது வேட்பாளரை எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் நிறுத்துவது. 4.அதற்காக சிவில் சமூகமும் தமிழ் தேசிய கட்சிகளும் இணைந்து ஒரு பொதுக் கட்டமைப்பை உருவாக்குவது. 5.தமிழ் மக்களின் நீண்ட கால அபிலாசைகளில் ஒன்றான இறைமையுடனான சுயநிர்ணய உரிமையை வெற்றி கொள்வதற்கான பொருத்தமான எதிர்கால கட்டமைப்புக்களை நோக்காகக் கொண்டு செயல்படுவது. ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இதன்போது ,வணக்கத்துக்குரிய ஆயர், திருகோணமலை மறைமாவட்டம் தவத்திரு அகத்தியர் அடிகளார் தென்கைலை ஆதீனம் தவத்திரு வேலன் சுவாமிகள் சிவகுரு ஆதீனம் பேராசிரியர் கே ரி கணேசலிங்கம் தலைவர் அரசறிவியல்துறை யாழ் பல்கலைக்கழகம் கலாநிதி. க. சிதம்பரநாதன், அரங்க செயற்பாட்டு குழு அருட்பணி த ஜீவராஜ் ஏசு சபை சமூக செயற்பாட்டாளர் மட்டக்களப்பு திரு நிலாந்தன் அரசியல் ஆய்வாளர் அருட்பணி பி ஞானராஜ் (நேரு) மனித உரிமை செயற்பாட்டாளர் மன்னார் நீதி சமாதான ஆணைக்குழு யாழ் மறை மாவட்டம் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரழுச்சி இயக்கம் தமிழ் சிவில் சமூக அமையம் வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களின் சங்கம் அறிவார் சமூகம் திருகோணமலை அகில இலங்கை மீனவர் மற்றும் விவசாய தொழிலாளர்களின் கூட்டமைப்பு கரைச்சி வடக்கு சமாசம் சமூக விஞ்ஞான ஆய்வு மையம் சிவில் அமைப்பு மட்டக்களப்பு தமிழ் ஊடகத் திரட்டு கிழக்கு பல்கலைக்கழக தமிழ் மாணவர் ஒன்றியம் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் மாவட்ட கமக்காரர் அமைப்பு வவுனியா தமிழ் இளையோர் மக்கள் இயக்கம் தமிழர் கலை பண்பாட்டு மையம் எம்பவர் நிறுவனம் மக்கள் மனு வடக்கு கிழக்கு சிவில் சமூக குழு குரலற்றவர்களின் குரல் மயிலத்தமடு மாதவனை கால்நடை பண்ணையாளர் அமைப்பு சமூக மாற்றத்துக்கான அமைப்பு வவுனியா தமிழ் சமூக செயற்பாட்டாளர்கள் இணையம் திருகோணமலை புழுதி சமூக உரிமைகளுக்கான அமைப்பு திருகோணமலை நலிவுற்ற சமூகங்களின் அபிவிருத்திக்கான தன்னார்வ அமைப்பு திருகோணமலை ஆகிய அமைப்புக்களும் பிரதிநிதிகளும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1380460
  8. இலங்கைக்கு ஆதரவளிக்கத் தயார்! -கனேடிய உயர்ஸ்தானிகராலயம். இலங்கையில் நீதி, பொறுப்புக்கூறல், சமாதானம் மற்றும் நல்லிணக்கம் ஆகியவற்றுக்கு வழிவகுக்கக்கூடிய அர்த்தமுள்ள நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்கத் தயாராக இருப்பதாக கொழும்பிலுள்ள கனேடிய உயர்ஸ்தானிகராலயம் குறிப்பிட்டுள்ளது. கனடாவிலுள்ள ப்ரம்டன் நகரில் இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் தமிழினப்படுகொலையில் கொல்லப்பட்டவர்களை நினைவுகூரும் வகையிலான சின்னமொன்றை நிர்மாணிப்பதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள நிலையில், இது குறித்து இலங்கை அரசாங்கம் கொழும்பிலுள்ள கனேடிய உயர்ஸ்தானிகரை வரவழைத்து கலந்துரையாடியதாகத் தகவல்கள் வெளியாகியிருந்தன. அதன்படி இந்நினைவுச்சின்னம் தொடர்பில் கலந்துரையாடும் நோக்கிலான சந்திப்பொன்று கனேடிய உயர்ஸ்தானிகர் எரிக் வோல்{க்கும், வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அருணி விஜேவர்தனவுக்கும் இடையில் இடம்பெற்றதாக கொழும்பிலுள்ள கனேடிய உயர்ஸ்தானிகராலயம் மின்னஞ்சல் ஊடாக தமக்கு உறுதிப்படுத்தியதாக ‘தமிழ் கார்டியன்’ செய்தி வெளியிட்டுள்ளது. அத்துடன், கனடாவின் சமஷ்டிக் கட்டமைப்பின்கீழ் மாகாண மற்றும் உள்ளுராட்சி அரசாங்கங்கள் மத்திய அரசாங்கத்திலிருந்து வேறுபட்டு சுதந்திரமாக இயங்கமுடியும் எனவும், அவற்றுக்கென தனித்த நிர்வாக அதிகாரங்கள் உண்டு எனவும் கனேடிய உயர்ஸ்தானிகராலயம் அதன் மின்னஞ்சல் பதிலில் தெரிவித்திருப்பதாக ‘தமிழ் கார்டியன்’ செய்தி வெளியிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1380498
  9. தோட்ட தொழிலாளர்களின் ஊதியத்தை அதிகரிப்பது தொடர்பான வர்த்தமானி வெளியீடு! தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த ஊதியத்தை அதிகரிப்பது தொடர்பான அரசவர்த்தமானி வெளியாகியுள்ளது. மேற்படி வர்த்தமானியில், தேயிலை, இறப்பர் தோட்டத் தொழிலாளர்களின் குறைந்தபட்ச நாளாந்த ஊதியம் 1,700 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில், நாளாந்த ஊதியம் 1350 ரூபாவாகவும், நாளாந்த மேலதிக கொடுப்பனவு 350 ரூபாவாகவும் வழங்கப்படும் என்பதுடன், நாளாந்த ஊதியமாக 1700 ரூபாய் வழங்கப்படும் என குறித்த வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினை உள்ளிட்ட அனைத்துப் பிரச்சினைகளுக்கும் விரைவில் தீர்வினை வழங்கவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். கொட்டகலையில் இடம்பெற்ற இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் மே தினக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். https://athavannews.com/2024/1380521
  10. எனக்குப் பிடித்த நாடு தூனிசியா. முஸ்லீம் நாடு என்றாலும்... கூடுதலான ஐரோப்பிய கலாச்சாரம் கலந்த பழகுவதற்கு இனிமையான மரியாதையான மக்கள். அழகிய மணல் பாங்கான கடற்கரைகள். எத்தனை முறை போனாலும் மீண்டும் போகத் தூண்டும் நாடு என்றால் அதுதான். இலங்கையும் பிடித்த இடம்தான் என்றாலும்... வடையை 800 ரூபாய்க்கு விற்பதை நினைக்க போக விருப்பம் இல்லாமல் இருக்குது. @goshan_che 😂
  11. அரசாங்கம் மட்டும் பிச்சை எடுக்கலாம். 😂 பிச்சைக்காரன் பிச்சை எடுத்தால்... அரசாங்கத்துக்கு ரோசம் வந்திட்டுது. 🤣
  12. யாசகம் எடுப்பவர்களுக்கு பணம் கொடுப்பவர்களுக்கு அபராதம்! கொழும்பு உள்ளிட்ட நாட்டின் பிரதான சந்திகளின் வீதி விளக்குகளுக்கு அருகில் காத்திருந்து யாசகம் எடுப்பவர்களுக்கு பணம் கொடுப்பவர்களுக்கு எதிராக சட்டத்தை கடுமையாக அமுல்படுத்த பொலிஸார் தீர்மானித்துள்ளனர். அதன்படி, யாசகர்களுக்கு பணம் கொடுத்தால் அபராதம் விதிக்கப்படும் என பொலிஸார் தெரிவித்தனர். இந்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக கடமையில், இருக்கும் பொலிஸ் உத்தியோகத்தர்களும் சிவில் உடையில் பொலிஸ் குழுக்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. https://athavannews.com/2024/1380319
  13. கொவிஷீல்ட் தடுப்பூசி பக்கவிளைவை ஏற்படுத்தும் : ஒப்புக்கொண்ட நிறுவனம் ! கடந்த 2019 ஆம் ஆண்டு இறுதியில் சீனாவில் உருவான கொரொனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து, கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்காக பல்வேறு நாடுகளும் தடுப்பூசியை கண்டுபிடிக்க முயற்சித்த நிலையில், ஒரு சில நாடுகள் அதற்கான தடுப்பூசிகளை கண்டுபிடித்தன. இதில் பிரித்தானியாவைச் சேர்ந்த அஸ்ட்ரா ஜெனெகா நிறுவனம் மற்றும் ஆக்ஸ்போர்ட்டு பல்கலைக்கழகம் இணைந்து தடுப்பூசியை உருவாக்கின. இந்த தடுப்பூசி இந்தியாவில் கொவிஷீல்ட் என்ற பெயரில் விநியோகிக்கப்பட்டது. இதற்கிடையே அஸ்ட்ராஜெனெகா நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசியை செலுத்திய பிறகு மூளையில் பாதிப்பு ஏற்பட்டதாக கூறி ஜேமி ஸ்காட் என்பவர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் தொடர்ந்திருந்தார். மேலும், அஸ்ட்ராஜெனெகா நிறுவனத்தின் எதிராக நஷ்டஈடு கோரி சுமார் 51 வழக்குகள் தொடரப்பட்ட நிலையில், இவ்வழக்குகள் மீதான விசாரணைகள் நடந்து வருகிறது. இந்நிலையில், அஸ்ட்ராஜெனெகா நிறுவனம் நீதிமன்றத்தில் அளித்த ஆவணத்தில், “தன் நிறுவனம் உருவாக்கிய கொவிஷீல்ட் கொவிட் தடுப்பூசி ஒரு அரிய பக்க விளைவை ஏற்படுத்தும்“ என ஒப்புக்கொண்டதாக த டெலிகிராப் (the telegraph) ஊடகம் தெரிவித்துள்ளது. இரத்த உறைவு மற்றும் இரத்தில் காணப்படும் குருதிச் சிறு தட்டுக்களில் தாக்கத்தை ஏற்படுத்தும். ஆனால் இது மிகவும் அரிதான சந்தர்ப்பங்களில் மட்டுமே நடக்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. https://athavannews.com/2024/1380347
  14. ஓமோம்.... ஜெராட் சிசில் வாமதேவ(ன்) என்று நினைக்கின்றேன். 😂 அவனி(ரி)ன் மூஞ்சையையும், சிங்கள மூஞ்சியாகத்தான் இருக்கின்றது. 🤣
  15. ஆளுநர் பன்வாரிலால் புரோகித். அரசியல் செல்வாக்கு இருந்தால்... கொலை, கொள்ளை, பாலியல் தவறுகள் என்று எந்தக் குற்றத்தில் இருந்தும் காப்பாற்றப் படுவார்கள். இதற்கு... 5 வருட விசாரணை என்று மக்களின் வரிப்பணத்தை வேறு விரயமாக்குகின்றார்கள்.
  16. கல்லுரி பேராசிரியையாக இருந்து கொண்டு, தோல் வியாபாரம் செய்திருக்கு. வெட்கம் கெட்டது. 😡

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.