Everything posted by தமிழ் சிறி
-
யாழ். மத்திய கல்லூரிக்கும் - யாழ். பரியோவான் கல்லூரிக்கும் இடையிலான துடுப்பாட்டப் போட்டி ஆரம்பம்.
யாழ் மத்திய கல்லூரி vs புனித ஜோன்ஸ் கல்லூரி | 117வது வடக்கின் போர் - நாள் - 1.
-
யாழ். மத்திய கல்லூரிக்கும் - யாழ். பரியோவான் கல்லூரிக்கும் இடையிலான துடுப்பாட்டப் போட்டி ஆரம்பம்.
வடக்கின் பெரும் போர்-யாழ் நகர் எங்கும் பெரு விழா..! வடக்கின் பெரும் சமர் என வர்ணிக்கப்படும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கும் யாழ்ப்பாணம் பரியோவான் கல்லூரிக்கும் இடையிலான துடுப்பாட்டப் போட்டி இன்று காலை ஆரம்பமானது. 117வது முறையாக இடம்பெறும் இப்போட்டி, யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தில் இன்று, நாளை, நாளை மறுதினம் என மூன்று தினங்கள் நடைபெறுகின்றன. இன்று காலை 9.30 மணியளவில் இரண்டு கல்லூரிகளினதும் கீதங்களுடன் போட்டி ஆரம்பமானது. https://thinakaran.com/வடக்கின்-பெரும்-போர்-யாழ/
-
யாழ். மத்திய கல்லூரிக்கும் - யாழ். பரியோவான் கல்லூரிக்கும் இடையிலான துடுப்பாட்டப் போட்டி ஆரம்பம்.
ஆரம்பமானது வடக்கின் பெரும் சமர்! வடக்கின் பெரும் சமர் என வர்ணிக்கப்படும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கும் யாழ்ப்பாணம் பரியோவான் கல்லூரிக்கும் இடையிலான துடுப்பாட்டப் போட்டி இன்று காலை 09.30 மணியளவில் ஆரம்பமானது. 117வது முறையாக இடம்பெறும் இப்போட்டி, யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தில் இன்று, நாளை, நாளை மறுதினம் என மூன்று தினங்கள் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1372617
-
அமெரிக்க ஜனாதிபதியை நேரலை விவாதத்திற்கு வருமாறு ட்ரம்ப் அழைப்பு!
அமெரிக்க ஜனாதிபதியை நேரலை விவாதத்திற்கு வருமாறு ட்ரம்ப் அழைப்பு! அமெரிக்காவில் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள தேர்தலுக்கு முன்னதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனை நேரலை விவாதம் ஒன்றிற்கு வருமாறு முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அழைப்பு விடுத்துள்ளார். அமெரிக்க ஜனநாயகக் கட்சியின் தலைவருடன் எந்தவொரு நேரத்திலும் நேரடி விவாதத்தில் பங்கேற்க தாம் தயாராக உள்ளதாகவும் டொனால்ட் ட்ரம்ப் மேலும் தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள தேர்தலுக்கு முன்னதாக நேரடி விவாதங்களில் பங்கேற்பது தொடர்பில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் எதுவித கருத்தினையும் வெளியிடவில்லை என சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்த நிலையில் அமெரிக்க குடியரசுக்கட்சியின் வேட்பாளர் போட்டியில் இருந்து இந்திய வம்சாவளியை சேர்ந்த நிக்கி ஹேலி வெளியேறியதை தொடர்ந்து டொனால்ட் ட்ரம்ப குறித்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளார். டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்க ஜனாதிபதியாக பதவி வகித்த போது ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்க தூதராக நிக்கி ஹேலி பதவிவகித்தமை குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் அமெரிக்காவில் நவம்பர் மாதம் இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயகக்டசி வேட்பாளர் ஜோபைடனுக்கு எதிராக குடியரசுகட்சியின் சார்பில் களமிறங்கவுள்ளதாக டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1372557
-
கருத்து படங்கள்
- நான் புலம்பெயர் அமைப்பினருக்கும் எதிரானவன் அல்ல! - வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி
நான் புலம்பெயர் அமைப்பினருக்கும் எதிரானவன் அல்ல! - வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி ”தமிழ் மக்களின் பிரச்சினைக்கான தீர்வினை வழங்கும் அரசாங்கத்தின் செயற்பாட்டுக்கு ஆலோசனைகள் மற்றும் ஒத்துழைப்புக்களை வழங்க தமிழ் மக்கள் பிரதிநிதிகளும் முன்வரவேண்டும்” என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ”நான் ஒட்டுமொத்த புலம்பெயர் அமைப்பினருக்கும் எதிரானவன் கிடையாது. நீங்கள் இங்கு தினமும் தனி இராஜ்ஜியம் பற்றிதானே பேசுகின்றீர்கள். சமஷ்டி தொடர்பாக பேசுவதில் பிரச்சினையில்லை. அதிகாரப் பரவலாக்கல் தொடர்பாகத்தான் நாமும் பேசிக் கொண்டிருக்கிறோம். வடக்கு- கிழக்கு மக்கள், இந்த நாட்டின் ஆளுகைக்கு உட்பட்டவர்கள் இல்லை என்று கூறுகின்றார்கள். 1983 ஆம் ஆண்டில் எனது தந்தையின் தமிழ் நண்பர்களும்தான் கொல்லப்பட்டார்கள். காணாமல் ஆக்கப்பட்டோரின் அலுவலகம் செய்த விசாரணையில், 6 இலட்சத்து 50 பேர் தங்கள் நேசித்தவர்களை இழந்துள்ளார்கள் என தெரியவந்துள்ளது. வடக்கில் மட்டும் 5 இலட்சத்துக்கும் அதிகமானோர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இவர்களுக்கு ஒரு நிவாரணம் வேண்டும் என்பதுதான் எமதும் கோரிக்கையாகும். இது உண்மையான தீர்வாக அமையாவிட்டாலும், நாம் இதனை ஆரம்பிக்க வேண்டும். இந்த எண்ணக்கருவை எம்மால் கைவிட முடியாது. இதுதான் என்னுடைய நிலைப்பாடு. இதற்கான ஆலோசனைகளை வழங்க தமிழ் பிரதிநிதிகள் முன்வர வேண்டும்” இவ்வாறு அலி சப்ரி தெரிவித்துள்ளார். https://athavannews.com/2024/1372551- நீருக்கு அடியில் இந்தியாவின் முதல் ரயில் சேவை!
நீருக்கு அடியில் இந்தியாவின் முதல் ரயில் சேவை! இந்தியாவில் முதல் முறையாக நீருக்கடியில் செல்லும் மெட்ரோ ரெயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி இன்று ஆரம்பித்து வைத்துள்ளார். கொல்கத்தா மெட்ரோ ரெயில் நிர்வாகம் சார்பில் ஹவுரா மைதான் – எஸ்பிளானேட் மெட்ரோ வழித்தடத்தில் 32 மீற்றர் ஆழத்தில் குறித்த மெட்ரோ ரெயில் சேவை ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. குறித்த திட்டத்திற்கு 5,000 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1372463- செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 24வது முறையாக நீட்டிப்பு…!
செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 24வது முறையாக நீட்டிப்பு…! சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கைதான முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை 24வது முறையாக நீட்டித்து சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த ஆண்டு ஜூன் 14ஆம் திகதி கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜிக்கு எதிராக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அமலாக்கத் துறையினர் 3000 பக்கங்களுடன் கூடிய குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1372460- முருகன், ரொபட் பயஸ் உள்ளிட்டவர்களையாவது உயிருடன் விடுதலை செய்யுங்கள் - இந்திய மற்றும் இலங்கை அரசிடம் சிறிதரன் எம்.பி. வேண்டுகோள்
//வேண்டுகோல்.// 100 ஆண்டு பாரம்பரியம் மிக்க வீரகேசரியின் நிலைமை இப்படியாகி விட்டது.- பிரான்ஸ் அரசியலமைப்பில் கருக்கலைப்பு உரிமை!
உண்மையை சொன்னால், அடிக்க வருவார்கள். வேண்டாம்... விட்டுடுங்க.- பசில் இலங்கையில் சம்பாதித்து அமெரிக்காவில் செலவு செய்யும் சுற்றுலாப் பயணி
- கருத்து படங்கள்
- பசில் இலங்கையில் சம்பாதித்து அமெரிக்காவில் செலவு செய்யும் சுற்றுலாப் பயணி
பசில் இலங்கையில் சம்பாதித்து அமெரிக்காவில் செலவு செய்யும் சுற்றுலாப் பயணி. “பசில் ராஜபக்ச இலங்கையில் சம்பாதித்து அமெரிக்காவில் செலவு செய்யும் சுற்றுலாப் பயணி” என நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில கடுமையாக விமர்சித்துள்ளார். பசில் ராஜபக்சவின் வருகை இதுகுறித்து ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த போதே உதய கம்மன்பில இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ”சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வர வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். எனினும் பசில் ராஜபக்ச இலங்கையில் சம்பாதித்துஅமெரிக்காவில் செலவு செய்யும் சுற்றுலாப் பயணியாக உள்ளார். இலங்கையில் பணம் செலவழிக்கும் சுற்றுலாப் பயணிகளையே நாங்கள் விரும்புகிறோம். இலங்கையின் ஹம்பகராவைச் சேர்ந்த சுற்றுலாப் பயணி ஒருவர் அமெரிக்காவில் பணம் செலவழிக்க விரும்புவது எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கவில்லை” இவ்வாறு உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். https://athavannews.com/2024/1372389- பிரான்ஸ் அரசியலமைப்பில் கருக்கலைப்பு உரிமை!
பிரான்ஸ்காரன் கருக்கலைப்பு செய்ய, அடையார்... பெருகிக் கொண்டு போகப் போறாங்கள்.- கருத்து படங்கள்
- சாந்தனைத்தான் இழந்துவிட்டோம்; எஞ்சியோரையாவது காப்பாற்றுங்கள்; - சட்டத்தரணி புகழேந்தி
சாந்தனின் முடிவே எங்களுக்கும்! – முருகன் சாந்தனின் உயிர் திட்டமிட்டுப் பறிக்கப்பட்டுள்ளதாக தமிழகத்தில் உள்ள சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முருகன் தெரிவித்துள்ளார். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சாந்தனுடன் விடுவிக்கப்பட்டு இலங்கை திரும்ப முடியாமல், சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முருகன், சாந்தனின் இறுதி அஞ்சலி நிகழ்வு தொடர்பாக வழங்கிய ஒலிப்பதிவிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ”சாந்தனுடன் 33 வருடங்கள் நான் சிறையில் கழித்துள்ளேன். சாந்தன் தனது தாய் மண்ணில் கால் வைப்பதற்கு முன்னரே அவரது உயிர் திட்டமிட்டுப் பறிக்கப்பட்டுள்ளது. இதுவே எனக்கும் ராபர்ட் பயஸ்ஸுக்கும்,ஜெயகுமாருக்கும் நடக்கப் போகின்றது. 33 வருடங்களாக சிறையில் மனதையும் , உடலையும் திடமாக வைத்திருந்த ஒருத்தர், சிறப்பு முகாமில் ஒரு வருடத்திற்கு எவ்வாறு இப்படி மாறி போனார். இதில் எங்களுக்கு சந்தேகம் உள்ளது. மக்களின் அஞ்சலி ஊடாக வெளி உலகுக்கு எமக்கு இழைக்கப்பட்ட அநீதி தெரிய வர வேண்டும்” இவ்வாறு முருகன் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2024/1372189- பிரான்ஸ் அரசியலமைப்பில் கருக்கலைப்பு உரிமை!
பிரான்ஸ் அரசியலமைப்பில் கருக்கலைப்பு உரிமை! பிரான்ஸில் கருக்கலைப்பை பெண்களின் அடிப்படை உரிமையாக அங்கீகரிக்கும் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன் மூலம் அரசியலமைப்பில் கருக்கலைப்பு உரிமைகளை வெளிப்படையாகப் பதிவு செய்த முதல் நாடாக பிரானஸ் மாறியுள்ளது. நேற்று நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டு அமர்வில் 780 உறுப்பினர்கள் ஆதரவாகவும் 72 உறுப்பினர்கள் எதிராகவும் வாக்களித்திருந்தமையைத் தொடர்ந்து குறித்த மசோதா வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்நிலையில் மசோதா நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து, பிரான்ஸ் முழுவதும் பெண் உரிமை செயல்பாட்டாளர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1372228- கருத்து படங்கள்
- சாந்தனின் இறுதி நிகழ்வு இன்று
சாந்தனின் இறுதிக் கிரியைகள் ஆரம்பம்! சாந்தனின் உடல் யாழ்ப்பாணத்தில் உள்ள அன்னாரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது இறுதி கிரியைகள் நடைபெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று காலை 10 மணியளவில் இறுதி கிரிகைகள் ஆரம்பமாகியுள்ள நிலையில் அன்னாரின் பூதவுடலுக்கு நூற்றுக்கணக்கான மக்கள் மலரஞ்சலி செலுத்தி வருகின்றனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேவை இறுதிக் கிரியைகள் நிறைவு பெற்ற பின்னர் வல்வெட்டித்துறை, பொலிகண்டி ஊடாக எள்ளங்குளம் இந்து மயானத்திற்கு அன்னாரது பூதவுடல் எடுத்துச் செல்லப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்ட சாந்தன் நாட்டுக்கு திரும்புவார் என அவரது குடும்பத்தினர் நீண்டகாலமாக எதிர்ப்பார்த்திருந்த நிலையில் கடந்த 28 ஆம் திகதி உடல் நலக்குறைவினால் சென்னையில் காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1372086- சாந்தனின் உடலை இலங்கைக்குக் கொண்டு வர நடவடிக்கை!
33 ஆண்டுகளாய் தன் மகனின் வரவுக்காக காத்திருந்தவள் கண்ட பொழுது… 😥- தமிழரசுக் கட்சிக்குள் ஏற்பட்ட பிளவும் சிவில் சமூகங்களும்! நிலாந்தன்.
தமிழரசுக் கட்சிக்குள் ஏற்பட்ட பிளவும் சிவில் சமூகங்களும்! நிலாந்தன். தமிழரசுக் கட்சி அதன் 73 ஆண்டுகால நீண்ட வரலாற்றில் உட்கட்சி மோதல் காரணமாக நீதிமன்றம் ஏற வேண்டிய ஒரு நிலை தோன்றியிருக்கின்றது. இந்த வழக்குகளில் சுமந்திரன் தான் நேரடியாக சம்பந்தப்படவில்லை என்று கூறுகிறார்.ஆனால் எல்லாவற்றின் பின்னணிகளும் அவர்தான் இருக்கிறார் என்ற சந்தேகம் பரவலாகக் காணப்படுகின்றது. தமிழரசு கட்சிக்குள் நடந்த தலைவர் தெரிவில் மட்டும் சுமந்திரன் தோற்கவில்லை. அதன் பின் கட்சிக்குள் நடக்கும் எல்லா விடயங்களிலும் அவர் தொடர்ந்தும் தோற்றுக் கொண்டேயிருக்கிறார். சில மாதங்களுக்கு முன்பு வரை அவரைப் போற்றிப் புகழ்ந்தவர் கம்பவாருதி. வெளிநாடுகளோடு உறவாடவும் வெளிவகாரங்களைக் கையாள்வதற்கும் சுமந்திரனைப் போன்ற சட்டப் புலமையும் ஆங்கிலப் புலமையும் மிக்கவர் தலைமைப் பதவிக்கு வர வேண்டும் என்று தேர்தலுக்கு முன்னரே அவர் எழுதியிருக்கிறார்.ஆனால் அதே கம்பவாருதி இப்பொழுது தமிழ் மக்கள் சுமந்திரனைப் போன்ற தந்திரசாலிகளை தலைவர்களாக ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்ற பொருள்பட எழுதத் தொடங்கிவிட்டார்.அதாவது சுமந்திரனின் ஆதரவு அணிக்குள் இருந்து ஒரு முக்கியமான மதப் பிரமுகர் எதிரணியை நோக்கிப் போகிறார் என்று பொருள். கடந்த செவ்வாய்க்கிழமை சிவபூமி அறக்கட்டளையின் தலைவர் ஆறு.திருமுருகன், நல்லை ஆதீன முதல்வர் போன்ற சைவ சமயப் பெரியார்களும் யாழ். மறைமாவட்ட ஆயரும் இணைந்து ஒரு சமாதான முயற்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. கடந்த செவ்வாய் இரவு 8 மணிக்கு நடக்கவிருந்த அந்த பேச்சுவார்த்தைகளில் கலந்து கொள்வதற்கு இரு அணிகளைச் சேர்ந்தவர்களும் ஒப்புக் கொண்டிருந்தார்கள்.எனினும் துரதிஷ்டவசமாக சுமந்திரனின் தாயார் இறந்து போனதால்,அந்தச் சந்திப்பு ஒத்திவைக்கப்பட்டது. அந்தச் சந்திப்பை ஒழுங்குபடுத்தியது யாழ்ப்பாணத்தை மையமாகக் கொண்டு இயங்கும் ஒரு காட்சி ஊடகத்தின் அதிபர் என்ற கருத்து வெளியில் உண்டு. அவருடைய காட்சி ஊடகம் சிறீதரனுக்கு ஆதரவான பிரச்சாரங்களை முன்னெடுத்தது என்று சுமந்திரன் அணியினால் குற்றம் சாட்டப்படுகிறது. இவர்கள் அனைவரையும் இந்தியத் தூதரகம் இயக்குகிறது என்றும் ஒரு குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகின்றது.மிகக்குறிப்பாக சிறீதரனுக்கு ஆதரவாக ஈழத்து சிவசேனைத் தலைவர் தெரிவித்த கருத்துக்களையும் அவர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். மேலும் தமிழக பாரதிய ஜனதா ஆதரவாளர்களால் அல்லது சிவசேனை ஆதரவாளர்களால் அதிகம் கொண்டாடப்படும் ஓர் இளம் கவிஞரும் சிறீதரனுக்கு ஆதரவாகக் கருத்து தெரிவித்து வருகிறார். தென்மாராட்சியில் இடம்பெற்ற ஒரு கருத்தரங்கில் அவர் பேசியிருக்கிறார். இவை எல்லாவற்றையும் கூட்டிக் கழித்து சுமந்திரன் ஆதரவு அணி மேற்கண்டவாறு குற்றச்சாட்டை முன்வைக்கின்றது. ஆயின்,தமிழரசுக் கட்சிக்குள் ஏற்பட்டிருக்கும் உட்கட்சி மோதலில் இந்தியா சிறீதரனின் பக்கம் நிற்கிறது என்று அவர்கள் கூற வருகிறார்களா ?ஒரு பிராந்தியப் பேரரசு கையாளும் அளவுக்கு தமிழரசுக் கட்சியின் உட்கட்சி மோதல் ஆழமானதாக மாறி வருகிறதா? அப்படி என்றால் கட்சிக்குள் தோன்றியிருக்கும் இரண்டு அணிகளையும் இணைப்பது சாத்தியமில்லையா? கட்சி தொடர்ந்து நீதிமன்றத்தில் நிற்க வேண்டிய ஒரு நிலைமை தொடருமாக இருந்தால், ஒரு தேர்தல் ஆண்டை-இந்த ஆண்டை -கட்சி எப்படி எதிர்கொள்ளப் போகின்றது? இந்த ஆண்டு மட்டுமல்ல, அடுத்த ஆண்டும் ஒரு தேர்தல் ஆண்டாகவே அமையலாம் என்று ஊகிக்கலாம். ஏனெனில் இந்த ஆண்டின் இறுதியில் நடக்கக்கூடிய ஜனாதிபதித் தேர்தலில் வெல்லக்கூடிய தரப்பு பெரும்பாலும் அடுத்த ஆண்டு அந்த வெற்றியை மேலும் உறுதிப்படுத்தும் நோக்கத்தோடு நாடாளுமன்ற தேர்தலையும் நடத்தும். தொடர்ந்து மாகாண சபை தேர்தலும் உள்ளூராட்சி சபை தேர்தலும் நடக்கக்கூடும். அதாவது இனிவரும் இரண்டு ஆண்டுகளும் தேர்தல் ஆண்டுகளாக அமையக்கூடிய வாய்ப்புகள் அதிகம் தெரிகின்றன. இப்படிப்பட்டதோர் அரசியல் சூழலில், தமிழ் மக்கள் மத்தியில் உள்ள பெரிய கட்சியான தமிழரசுக் கட்சி இரண்டாகி நிற்பது யாருக்கு லாபம்? ஏற்கனவே ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் வாக்குகள் கையெழுத்து வைக்கப்பட்ட பெற்றுக் காசோலையாக ஏதோ ஒரு சிங்கள வாக்காளருக்கு வழங்கப்பட்டு வந்தன. இந்த முறை அதைவிடக் கேவலமான ஒரு நிலை தோன்றலாம். தமிழ் வாக்குகள் வீதியில் இருந்து கண்டெடுக்கப்பட்ட வெற்றுக் காசோலையாக மாறக்கூடிய ஆபத்து அதிகரிக்கிறது. தமிழரசுக் கட்சிக்குள் ஏற்பட்டிருக்கும் பிளவைச் சரி செய்வதற்கு சிவில் சமூகங்கள் தலையிட வேண்டும் என்ற கருத்தை இக்கட்டுரை ஆசிரியர் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறார். ஆனால் சிவில் சமூகங்கள் இந்த விடயத்தில் தலையிட முடியாத அளவுக்கு பலவீனமாக காணப்படுகின்றன. தேர்தலுக்கு முன்பு மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு சிவில் சமூகம் இரண்டு தரப்புகளையும் மேசைக்கு கொண்டுவர முயற்சித்தது. அந்த சிவில் சமூகத்தின் தலைவர் முன்பு தமிழரசுக் கட்சியில் இருந்தவர். அவர் இப்பொழுது சுமந்திரனுக்கு சார்பாக இருப்பதாக கருதிய சிறிதரன் அணி அந்த சமரசம் முயற்சியை ஏற்றுக் கொள்ளவில்லை. அது தொடர்பாக எழுதலாமா என்று இக்கட்டுரை ஆசிரியர் மேற்படி சிவில் சமூகத் தலைவரிடம் கேட்டபோது அவர் அது பகிரங்கமாக முன்னெடுக்கப்படாத ஒரு நகர்வு என்பதனால் எழுத வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார். அதன்பின் வழக்கிற்கு சில நாட்களுக்கு முன் திருமலை ஆயரின் தலைமையில் நடந்த சந்திப்பும் வெற்றி பெறவில்லை. நல்லை யாதீனத்தில் நடக்கவிருந்த சந்திப்பு சுமந்திரன் தாயாரின் மரணத்தால் ஒத்திவைக்கப்பட்டது. அதனால் திருக்கோணமலை நீதிமன்றத்தில் வழக்கு எடுத்துக் கொள்ளப்படுவதற்கு முன்பு விவகாரத்தை கட்சிக்குள் சுமூகமாகத் தீர்க்கும் முயற்சிகள் தோல்வியடைந்தன. இத்தோல்வியில் இருந்து கற்றுக்கொண்டு சிவில் சமூகங்கள் மீண்டும் ஒரு தடவை அவ்வாறான முயற்சியை முன்னெடுக்குமா? தமிழ் மக்கள் மத்தியில் உள்ள ஒப்பிட்டுளவில் பலமான சிவில் சமூகமாகிய தமிழ் சிவில் சமூக அமையமானது இந்த விடயத்தில் தலையிடுவதற்குத் தயங்குவதாகத் தெரிகிறது. ஏனெனில் அந்த சிவில் சமூகத்தைச் சேர்ந்த இரண்டு சட்டத்தரணிகள் சம்பந்தப்பட்ட இரண்டு அணிகளுக்கும் சார்பாக நிற்கிறார்கள்.ஒருவர் சிறீதரனுக்கு எதிரான தரப்புக்காக யாழ்ப்பாணத்தில் வாதாடினார்.மற்றொருவர் திருக்கோணமலை வழக்கில் சிறீதரனுக்காக வாதிடுகிறார். ஒரே சிவில் சமூகத்தின் இரண்டு சட்டத்தரணிகள் ஒரு கட்சிக்குள் மோதலில் ஈடுபடும் இரண்டு தரப்புகளை பிரதிநிதித்துவப்படுத்துவது எதைக் காட்டுகின்றது? உள்ளதில் பலமான கட்சி இரண்டாக உடைந்து நீதிமன்றத்தில் நிற்கின்றது. உள்ளதில் பலமான சிவில் சமூகம் சமரச முயற்சிகளில் ஈடுபாட முடியாத ஒரு நிலை.கூட்டிக் கழித்துப் பார்த்தால் தமிழ் அரசியல் சமூகமும் பலமாக இல்லை; சிவில் சமூகமும் பலமாக இல்லை. பொதுவாக ஒரு நாட்டில் அல்லது ஒரு மக்கள் கூட்டத்தில், அரசியல் சமூகம் பலவீனம் அடையும் பொழுது அல்லது தனக்குள் ஏற்பட்ட ஒரு பிரச்சினையை தானே தீர்க்க முடியாத போது சிவில் சமூகங்கள் தலையிடுவதுண்டு. சிவில் சமூகங்கள் பொதுவாக அரசியலில் நேரடியாக ஈடுபட விரும்பாதவர்களால் உருவாக்கப்படுகின்றன.சிவில் சமூகப் பிரதிநிதிகளுக்கு அரசியல் அபிலாசைகள் இல்லை என்பதுதான் அவர்களுடைய மகத்துவம்.அவர்கள் சமூகத்துக்கு நீதியானது எதுவோ நன்மையானது எதுவோ அதற்காகப் பக்கச் சார்பின்றி,உள்நோக்கம் இன்றி உழைப்பார்கள் என்ற நம்பிக்கைதான் அவர்களுக்கு உள்ள மகத்துவம். அவ்வாறு நேர்மையாக, நீதியாக இயங்குகின்ற, பக்கம் சாராத சிவில் சமூகப் பிரதிநிதிகள் தலையிடும் பொழுது அதற்கு ஒரு மதிப்பு இருக்கும்.கனம் இருக்கும். அவ்வாறான சிவில் சமூகங்கள் அரசியல் சமூகத்தின் மீது தலையீடு செய்யும் பொழுது அது தாக்கமான விளைவுகளை ஏற்படுத்துவதுண்டு. அதைத்தான் பேராசிரியர் உயாங்கொட “அரசியல் கட்சிகளின் மீதான சிவில் சமூகங்களின் தார்மீகத் தலையீடு” என்று வர்ணித்தார். அவர் அவ்வாறு வர்ணித்தது 2015 ஆம் ஆண்டு நிகழ்ந்த ஆட்சி மாற்றத்தின் பின்னணியில் நின்ற சிங்களச் சிவில் சமூகங்களுக்குத் தலைமை தாங்கிய மறைந்த சோபித பேரர் அவர்களின் நினைவுப் பேருரையிலாகும். அவ்வாறு அரசியல் சமூகத்தின் மீது தார்மீகத் தலையீடு செய்யக்கூடிய பலத்தோடு தமிழில் இப்பொழுது சிவில் சமூகங்கள் இல்லை.தமிழரசுக் கட்சிக்குள் ஏற்பட்டிருக்கும் பிளவை இக்கட்டுரை எழுதப்படும் நாள் வரையிலும் நீதிமன்றத்துக்குப் போகாமல் தீர்க்க முடியாது போனமை அதைத்தான் காட்டுகின்றது. சிவில் சமூகங்கள் கட்சிகளின் உள்விவகாரங்களில் தலையிடக்கூடாது என்ற ஒரு வாதம் முன்வைக்கப்படுகின்றது.இல்லை.அது தமிழ் மக்களுக்குப் பொருந்தாது. கட்சிகளை ஒருங்கிணைக்கும் வேலைகளில் சிவில் சமூகங்கள் ஈடுபடலாம் என்றால், ஏன் கட்சிகளுக்குள் ஏற்படும் பிளவைச் சரி செய்வதற்கு சிவில் சமூகங்கள் தலையீடு செய்யக் கூடாது? தமிழரசுக் கட்சிதான் கடந்த 15 ஆண்டு கால தோல்விகளுக்கும் பொறுப்பு. அதனால் அக்கட்சி அழிந்து போகட்டும் என்று சிவில் சமூகப் பிரதிநிதிகள் கூறலாமா? தமிழரசுக் கட்சி தான் கடந்த 15 ஆண்டு கால தோல்விகளுக்கு பொறுப்பு என்பதை இக்கட்டுரை ஏற்றுக்கொள்கிறது. ஆனால் அதற்காக ஒரு தேர்தல் ஆண்டில் அக்கட்சியை முற்றாகச் சிதைய விட்டால் என்ன நடக்கும்? ஒரு தமிழ்த் தேசியப் பேரியக்கம் தேவை என்று எல்லாரும் எழுதுகிறோம். ஆனால் நடைமுறையில் அரங்கில் மக்கள் இயக்கம் எதுவும் கிடையாது. இருப்பவை எல்லாம் தேர்தல் மையக் கட்சிகள் தான். அவற்றின் பிரதான ஒழுக்கம் தேர்தல் அரசியல்தான். இந்நிலையில் பலமான ஒரு மக்கள் இயக்கம் இல்லாத வெற்றிடத்தில், இருக்கின்ற பெரிய கட்சியும் சிதைந்தால் என்ன நடக்கும்? எனவே இப்போது தமிழரசுக் கட்சிக்குள் ஏற்பட்டிருக்கும் பிரச்சனையில் சிவில் சமூகங்கள் தலையீடு செய்ய வேண்டும். தமிழ்த் தேசிய உணர்வுடைய சிவில் சமூகங்கள் அவ்வாறு தலையீடு செய்யவில்லை என்றால், அந்த வெற்றிடத்தில் புதிது புதிதாக சிவில் சமூகங்கள் முளைக்கும். அதை ராணுவப் புலனாய்வுத் துறையும் உட்பட வெளிதரப்புகள் இயக்கும். அப்பொழுது என்ன நடக்கும்? https://athavannews.com/2024/1372014- இனிய வணக்கங்கள்
வணக்கம் ரசோ. உங்களை அன்புடன் வரவேற்கின்றோம்.- சாந்தனின் பூதவுடல் நாளை மக்கள் அஞ்சலிக்கு!
சாந்தனுக்கு கிளிநொச்சியில் உணர்வுபூர்வ அஞ்சலி ! இந்தியாவில் சுகவீனமுற்ற நிலையில் உயிரிழந்த சாந்தனின் பூதவுடலுக்கு கிளிநொச்சியில் உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்தப்பட்டது. தற்போது சாந்தனின் பூதவுடல் டிப்போ சந்தியில் அமைத்துள்ள அஞ்சலி மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, மூத்த போராளியான காக்கா ஈகைச் சுடரை ஏற்றி வைத்தார். பின்னர் தேசிய உணர்வுக் கொடியை போர்த்தி மலர் மாலை அணிவித்து நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் அஞ்சலி செலுத்தினார். இதேவேளை வவுனியா பழைய பேருந்து நிலையத்தில் சாந்தனின் பூதவுடல் தாங்கிய ஊர்தியினை மறித்த போக்குவரத்து பொலிஸார் சாரதியையும் கைது செய்ய முயற்சித்தமையால் அந்த பகுதியில் பதற்றநிலை ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வவுனியா பழைய பேருந்து நிலையத்தினை சாந்தனின் பூதவுடல் தாங்கிய ஊர்தி நுழைந்தவுடன், ஊர்தி தரித்து நின்ற இடத்தில் வாகனத்தை நிறுத்த தடை செய்யப்பட்டுள்ளதாகவும் , மீறி நிறுத்தும் பட்சத்தில் ஊர்தியின் சாரதி கைதுசெய்யப்படுவார் எனவும் வவுனியா பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவு பொறுப்பதிகாரி எச்சரித்துள்ளார். இதனையடுத்து குறித்த பகுதியில் பதற்றநிலைமை உருவாகியதாகவும் பின்னர் நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. https://athavannews.com/2024/1372002- சாந்தனின் பூதவுடல் நாளை மக்கள் அஞ்சலிக்கு!
யாழை நோக்கிப் பயணிக்கும் சாந்தனின் பூதவுடல் – பெருந்திரளானோர் அஞ்சலி : துக்கதினமும் அனுஷ்டிப்பு! முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கிலிருந்து விடுதலையாகி திருச்சி சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்த சாந்தன் கடந்த 28.02.2024 அன்று சுகவீனம் காரணமாக அரச மருத்துவனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்திருந்தார். இதனையடுத்து இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட அவரது உடல் பிரேத பரிசோதனைகள் மற்றும் விமான நிலைய நடைமுறைகளையடுத்து நேற்றையதினம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டது. வவுனியா கொண்டு செல்லப்பட்ட சாந்தனின் உடலுக்கு பெருந்திரளானோர் திரண்டு கண்ணீருடன் அஞ்சலி செலுத்தியிருந்தனர். வவுனியா முன்னாள் போராளிகள் நலன்புரிச்சங்கத்தின் அலுவலகத்திற்கு முன்பாக இன்று காலை 7.30மணியளவில் அலங்கரிக்கப்பட்ட ஊர்தியில் சாந்தனின் உடல் வைக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், பின்னர் ஊர்வலமாக வவுனியா பழைய பேரூந்து நிலையத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு பெருந்திரளான பொதுமக்கள் கலந்துகொண்டு கண்ணீருக்கு மத்தியில் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தியதைத் தொடர்ந்து தொடர்ந்து அங்கிருந்து ஊர்வலமாக மாங்குளம் பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டது. இதனையடுத்து 11 மணியளவில் கிளிநொச்சி பசுமைப் பூங்காவில் மக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு யாழ்ப்பாணம் எடுத்துச் செல்லப்படுவதற்கான ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டிருந்தன. கொடிகாமம் நெல்லியடி ஊடாக அவரது பிறந்த மண்ணான உடுப்பிட்டிக்கு எடுத்துச் செல்லப்பட்டு வல்வெட்டித்துறை தீருவிலில் பிற்பகல் 2 மணி முதல் 3 மணி வரை மக்கள் அஞ்சலிக்கு வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், இன்று மாலை அவரது வீட்டிற்கு எடுத்துச்செல்லப்படும் பூதவுடல் நாளை எள்ளங்குளம் மயானத்தில் அடக்கம் செய்யப்படவுள்ளதாக உறவினர்கள் குறிப்பிட்டுள்ளனர். மேலும் வேறுபாடுகளைக் களைந்து அனைவரையும் அணி திரண்டு அஞ்சலி செலுத்துமாறு அழைப்பு விடுத்துள்ள பொது அமைப்புக்கள், அனைத்து இடங்களிலும் துக்கதினத்தை அனுஷ்டிக்கும் வகையில் கறுப்புக் கொடிகளைப் பறக்க விடுமாறு கோரிக்கை விடுத்துள்ளன. அத்துடன், சாந்தனின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் முல்லைத்தீவில் பல்வேறு இடங்களிலும் அஞ்சலிப் பதாதைகள் மற்றும் கறுப்புக்கொடிகளும் கட்டப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1371979- கருத்து படங்கள்
- நான் புலம்பெயர் அமைப்பினருக்கும் எதிரானவன் அல்ல! - வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.