Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழ் சிறி

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by தமிழ் சிறி

  1. கஞ்சா பயிர் செய்கை குறித்து டயானா கூறியதில் உண்மையில்லை : பந்துல! இலங்கையில் கஞ்சா பயிர் செய்வதற்கும் அதனை ஏற்றுமதி செய்வதற்கும் அமைச்சரவை எந்த அனுமதியினையும் வழங்கவில்லை என அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அத்துடன் இது தொடர்பாக எந்த அமைச்சரவையில் முன்மொழிவுகளும் சமர்ப்பிக்கப்படவில்லை என்றும் அமைச்சர் பந்துல குணவர்தன மேலும் தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், இலங்கையில் கஞ்சா பயிர்செய்கை மற்றும் ஏற்றுமதி தொடர்பாக அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயானா கமகே நேற்று தெரிவித்தார். இது தொடர்பாக இன்றைய அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்தபோதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார். இது தொடர்பாக கருத்து தெரிவித்த அமைச்சர் பந்துல குணவர்தன டயனா கமகே அமைச்சரவை அமைச்சர் அல்ல எனவும் அவர் கூறிய கருத்திற்கு தாம் பொறுப்பல்ல என்றும் குறிப்பிட்டுள்ளார். https://athavannews.com/2024/1368644
  2. புனித அந்தோனியார் ஆலய வருடாந்தத் திருவிழாவுக்கு தயாராகும் கச்சத்தீவு! கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்தத் திருவிழாவானது, இம்மாதம் 23 ஆம் திகதி மற்றும் 24 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள நிலையில், அதற்காக ஏற்பாடுகள் தற்போது மும்முரமாக இடம்பெற்றுவருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் இலங்கை மற்றும் இந்திய பக்தர்களின் நலன் கருதி, சுகாதாரம், குடிநீர், தற்காலிக தங்குமிடங்கள், சாலைகள்,இறங்குதுறைகள் , மின்சார விநியோகம், பாதுகாப்பு, மருத்துவம் உள்ளிட்ட பல சேவைகளை வழங்குவதற்குறிய நடவடிக்கைகளைக் கடற்படையினர் முன்னெடுத்து வருகின்றனர். இதேவேளை இலங்கை கடற்படையினரால் நிர்மாணிக்கப்பட்ட விகாரையின் பழுதுபார்ப்பு பணிகள் மற்றும் சுற்றுப்புற பகுதிகளை தூய்மைப்படுத்தும் நடவடிக்கைகளும் கடற்படையினரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1368726
  3. தமிழ்நாட்டில் இலங்கைத் தமிழர்களுக்காக நிர்மாணிக்கப்பட்டுள்ள வீடுகள் கையளிப்பு! தமிழ்நாட்டில் வெவ்வேறு பகுதிகளில் அகதிகளாகத் தஞ்சமடைந்துள்ள இலங்கைத் தமிழர்களுக்காக நிர்மாணிக்கப்பட்டுள்ள வீடுகள் நேற்று திறந்து வைக்கப்பட்டுள்ளன. தமிழ் நாட்டில் அகதி முகாமில் உள்ள இலங்கை தமிழர்களுக்காக புதுக்கோட்டை – தேக்காட்டூர் பகுதியில் புதிதாக 58 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. தமிழக சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி உள்ளிட்டோர் நேற்று அதனை திறந்து வைத்துள்ளனர். சுமார் 3.56 கோடி இந்திய ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் இந்த வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. அதேநேரம் எட்டயபுரம் – குளத்துள்வாய்பட்டி பகுதியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள 40 வீடுகளும் நேற்று திறந்து வைக்கப்பட்டுள்ளன. 2.03 கோடி இந்திய ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் இநட வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. மேலும் சிவகாசி – ஆனைக்குட்டம் பகுதியிலும் இலங்கை தமிழர்களுக்காக நிர்மாணிக்கப்பட்ட வீடுகள் நேற்று திறந்து வைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1368732
  4. நீதிபதியை, தலை சுற்ற வைத்த... விவாகரத்து வழக்கு.
  5. கஞ்சா பயிர்செய்கைக்கு அமைச்சரவை அங்கீகாரம்! இலங்கையில் கஞ்சா பயிர்செய்கை மற்றும் ஏற்றுமதி தொடர்பாக அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதேவேளை வெளிநாட்டு முதலீட்டாளர்களை அழைக்கும் செயற்பாடுகள் எதிர்காலத்தில் இலங்கை முதலீட்டு சபை ஊடாக மேற்கொள்ளப்படும் எனவும் சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயானா கமகே தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1368588
  6. யாழ். உடுவில் மகளிர் கல்லூரியின் இருநூறாவது ஆண்டு நிறைவு விழா! யாழ்ப்பாணம் உடுவில் மகளிர் கல்லூரியின் இருநூறாவது ஆண்டு நிறைவை முன்னிட்டு கொண்டாட்ட நிகழ்வுகள் பாடசாலையில் இடம்பெற்றன. கல்லூரி மண்டபத்தில் இன்று காலை 8 மணியளவில் கல்லூரியின் அதிபர் ரொசானா மதுரமதி குலேந்திரன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கல்லூரியின் முன்னாள் அதிபர் சிரானி மில்ஸ் கலந்து கொண்டார். இதன்போது இருநூறாவது ஆண்டு நிறைவை முன்னிட்டு கேக் வெட்டப்பட்டதுடன், இரண்டு இலட்சினைகள், பாடல் மற்றும் கல்லூரி மாணவிகளின் கலை கலாசார நிகழ்வுகளும் இடம்பெற்றன. குறித்த நிகழ்வில் தென்னிந்திய திருச்சபை பேராயர் கலாநிதி வே.பத்மதாயாளன், தென்னிந்திய திருச்சபை முன்னாள் பேராயர் ஜெபநேசன், கல்லூரி ஆசிரியர்கள், மாணவிகள், பழைய மாணவிகள், பெற்றோர் ,நலன்விரும்பிகள் என பலரும் கலந்துகொண்டனர். கல்லூரியின் இலட்சிணை கல்லூரி மாணவிகளான ஜோய்ஸ் பேலின் மயூரன், சாம்பவி சதீஷ் ஆகியோரால் உருவாக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1368603
  7. யாழ் தமிழர்களுக்கு சுதந்திரம் கிடைத்துவிட்டது : சரத் வீரசேகர! யாழ்ப்பாணத்தில் தேசியக் கொடிய ஏந்தியவாறு பொதுமக்கள் சுதந்திர தினத்தை கொண்டாடியதை வரவேற்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில இடம்பெற்ற சுதந்திர தின கொண்டாட்டத்தில் கலந்துகொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், இந்த வருடம் யாழ்ப்பாண நகரில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் தேசிய கொடியினை ஏந்தியவாறு இலங்கை 76 ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடியமை வரவேற்கத்தக்க விடயம். யுத்தம் முடிவடைந்த பின்னர் தமிழ் மக்கள் இலங்கையின் சுதந்திர தினத்தை சந்தோஷமாக கொண்டாடி வருகின்றமை அனைவரும் அறிந்த விடயம். இதுவே யாழ்ப்பாண தமிழ் மக்களுக்கு சுதந்திரம் கிடைத்த நாளாக இருக்கும் என நான் நினைக்கின்றேன். அதாவது பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டு மக்கள் சுதந்திரமாக சுதந்திர தினத்தை கொண்டாடியதை நான் நேரில் பார்வையிட்டேன். அதுதான் உண்மையான நல்லிணக்கம். ஆனால் தமிழ் மக்களின் இந்த சுதந்திரமான நிலைமையினை குழப்புவதற்கு ஒரு பிரிவினர் குழப்பத்தினை ஏற்படுத்தி வருகின்றார்கள். வடக்கில் தற்பொழுது பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டு மக்கள் நிம்மதியாக சுதந்திர தினத்தை கொண்டாடியதை வரவேற்கின்றேன்” என சரத் வீரசேகர மேலும் தெரிவித்தார். https://athavannews.com/2024/1368400
  8. இமியுனோகுளோபியுலின் தடுப்பூசியால் எயிட்ஸ் ஏற்படக்கூடிய அபாயம்! தரம் குறைந்த இமியுனோகுளோபியுலின் தடுப்பூசியை பயன்படுத்தி சிகிச்சை பெற்றுக்கொண்டவர்களுக்கு எயிட்ஸ் போன்ற நோய்கள் ஏற்படக்கூடிய அபாயம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில், இந்த தடுப்பூசியைப் பயன்படுத்தி சிகிச்சையைப் பெற்றுக்கொண்டவர்கள் தொடர்பாக விசாரணைகளை ஆரம்பிப்பதற்கு சுகாதார அமைச்சு கவனம் செலுத்தியுள்ளதாக குறிப்பிடப்படுகிறது. தரம் குறைந்த இமியுனோகுளோபியுலின் தடுப்பூசியை இறக்குமதி செய்த விவகாரம் தொடர்பாக கடந்த 2 ஆம் திகதி முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வல்ல கைது செய்யப்பட்டார். குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு வாக்குமூலம் வழங்க வந்திருந்த நிலையில், கைது செய்யப்பட்ட இவருக்கு எதிர்வரும் 15 ஆம் திகதிவரை விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இந்த தடுப்பூசிகளுக்குள் ஒருவகை பக்டீரியா காணப்படுவதாக அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களம் மேற்கொண்ட பரிசோதனை மூலம் கண்டறியப்பட்டுள்ளது. மேலும் இந்த தடுப்பூசி மருந்து விநியோகம் செய்யப்பட்ட தகவல்கள் மருத்துவ விநியோக பிரிவிடம் காணப்படுவதாகவும் விநியோகிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் விசாரணை முன்னெடுக்கப்பட உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. https://athavannews.com/2024/1368433
  9. இஸ்ரேலுக்கும் உக்ரைனுக்கும் உதவி என 118 பில்லியன் டொலர் ஒப்பந்தத்தை வெளியிட்டது அமெரிக்க செனட் ! எல்லைப் பாதுகாப்பை அதிகரிக்கும் மற்றும் இஸ்ரேலுக்கும் உக்ரைனுக்கும் போர்க்கால உதவியை வழங்கும் வகையிலும் அமெரிக்கா 118 பில்லியன் டொலர் ஒப்பந்தம் ஒன்றினை எட்ட தீர்மானித்துள்ளது. பல மாதங்களாக குடியேற்ற பிரச்சினை மற்றும் கியிவ் ஆதரவு தொடர்பான சர்ச்சைகளுக்குப் பின்னர் குறித்த சட்டமூலத்தை விரைவாக நிறைவேற்றுமாறு ஜனாதிபதி ஜோ பய்டன் காங்கிரஸை வலியுறுத்தியுள்ளார். உக்ரைனை போர்க்கால உதவியுடன் மீண்டும் வழங்க அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் செனட்டில் உள்ள ஜனநாயக மற்றும் குடியரசுக் கட்சித் தலைவர்கள் அழுத்தம் கொடுத்து வருகின்றனர். இதேநேரம் மெக்சிகோ எல்லையில் சட்டவிரோத குடியேற்றங்களைச் சமாளிக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள பழமைவாத குடியரசுக் கட்சி தொடந்து வலியுறுத்தி வருகின்றது. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கப்பட்ட சட்டமூலத்தில் உக்ரைனுக்கு 60 பில்லியன் டொலர் உதவியும் இஸ்ரேலுக்கு 14.1 பில்லியன் டொலர் இராணுவ உதவியும் உள்ளடக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2024/1368425
  10. ஏதாவது பல்கலைக்கழகங்கள் டக்ளசுக்கு டாக்டர் பட்டம் கொடுத்திருக்கலாம். 😂 பத்தோடை பதினொன்றாய்.... அவரும் டாக்டராக இருந்திட்டு போகட்டுமன். உங்களை அவரிட்ட வைத்தியம் பார்க்க போகச் சொன்ன மாதிரி ஏன் ரென்சன் ஆகுறீங்க. 🤣
  11. இலங்கையின் சுதந்திர தினத்தன்று பிச்சை எடுக்கும் சிங்கம்.
  12. சாந்தனை நாட்டுக்குக் கொண்டு வரப்போவது யார்? நிலாந்தன். சாந்தன் இலங்கை வருவதற்குரிய நடவடிக்கைகளை எடுப்பதாக ஜனாதிபதி சிறீதரனுக்கும் மனோ கணேசனுக்கும் கூறியுள்ளார்.நேற்று, சனிக்கிழமை நடந்த சந்திப்பில் மேற்கண்டவாறு ரணில் தெரிவித்துள்ளார். தேசிய நல்லிணக்க அரசியலின் மூலமே இது சாத்தியமாகியது என்று ஈ. பி.டி.பி யின் பேச்சாளர் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.கடந்த செவ்வாய்க்கிழமை சாந்தனின் தாயார் அமைச்சர் டாக்டர் தேவானந்தாவை சந்தித்தார். சாந்தனை இலங்கைக்கு கொண்டுவர தான் நடவடிக்கை எடுப்பதாக தேவானந்தா சாந்தனின் தாயாருக்கு உறுதி கூறியுள்ளார். சாந்தனை இலங்கைக்கு கொண்டு வருவதற்கு உதவுமாறு அவருடைய குடும்பத்தவர்கள் முதலில் அணுகியது தமிழ்த் தேசிய நிலைப்பாட்டைக் கொண்ட கட்சிகளைத்தான்.இந்திய உச்ச நீதிமன்றத்தால் சாந்தன் விடுதலை செய்யப்பட்ட பின் கிட்டத்தட்ட 15 மாதங்களுக்கு முன்பு இக்கோரிக்கையை முன்வைத்து சாந்தனின் குடும்பத்தவர்கள் தமிழ்த் தேசிய நிலைப்பாட்டைக் கொண்ட அரசியல்வாதிகளோடு பேசினார்கள். ஆனால் யாரும் பயன் பொருத்தமான நடவடிக்கைகளை எடுத்திருக்கவில்லை. கடந்த சில வாரங்களாக சாந்தன் நோய்வாய்ப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அதனால் அவரை நாட்டுக்குக் கொண்டுவர வேண்டும் என்று அவருடைய குடும்பத்தவர்கள் மீண்டும் அரசியல்வாதிகளை அணுகத் தொடங்கினார்கள். சாந்தனை நாட்டுக்கு கொண்டு வருவதில் உள்ள பிரச்சனைகள் எவை? ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்ட அனைவரும் முப்பது ஆண்டுகளின் பின் உச்ச நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டார்கள். அவ்வாறு விடுவிக்கப்பட்ட இந்தியத் தமிழர்கள் தமது வீடுகளுக்கு சென்று விட்டார்கள். ஆனால்,விடுவிக்கப்பட்ட ஈழத் தமிழர்கள் தொடர்ந்தும் திருச்சி சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள்.அதற்குக் கூறப்பட்ட காரணம் என்னவென்றால் அது போன்ற பாரதூரமான வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்கள் வெளிநாட்டவர்களாக இருக்கும் பட்சத்தில் அவர்களுக்கு விடுதலை அல்லது மன்னிப்பு வழங்கப்பட்ட பின் அவர்கள் இந்திய மண்ணில் தொடர்ந்தும் தரித்திருப்பதற்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்பதாகும். விடுவிக்கப்பட்ட ஈழத் தமிழர்கள் தமது நாட்டுக்குத் திரும்பி அனுப்பப்பட வேண்டும். எனினும் அதில் சாதனைத் தவிர ஏனைய மூவரும் நாட்டுக்கு திரும்பிவர விரும்பவில்லை. அவர்களுடைய உறவினர்கள் புலம்பெயர்ந்து வாழ்வதால் அந்தந்த புலம்பெயர்ந்த நாடுகளுக்குத் தாமும் செல்ல விரும்புவதாகத் தெரிவித்தார்கள். ஆனால் இந்தியச் சட்டங்களின்படி அவர்களை அவ்வாறு அவர்களுடைய சொந்த நாடு அல்லாத ஏனைய நாடுகளுக்கு செல்ல அனுமதிப்பதில் சட்டச் சிக்கல்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது. எனவே சாந்தனும் உட்பட அனைவரும் மீண்டும் திருச்சி சிறப்பு முகாமில் கடந்த 15 மாதங்களாகத் தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள். இப் புதிய சிறப்பு முகாமானது இதற்கு முன்பு அவர்கள் வைக்கப்பட்டிருந்த சிறப்பு முகாமுடன் ஒப்பிடுகையில் வசதிகள் குறைவானது. அங்கே ஒரு சிறிய அறைக்குள் இருவர் தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள். 15-க்கும் குறையாத காவலர்கள் அவர்களைத் தொடர்ந்து கண்காணித்துக் கொண்டிருப்பார்கள். அந்த அறையோடு கழிப்பறையும் குளியலறையும் இணைக்கப்பட்டுள்ளன. எனவே அவர்கள் அறையை விட்டு வெளியே வருவதற்கான தேவைகள் குறைவு. அதற்கு முன் இருந்த சிறப்பு முகாமில் அவர்கள் காலை 6 மணிக்கு வெளியே வந்தால் மாலை 6:00 மணி வரையிலும் நடந்து திரியலாம்:உடற்பயிற்சி செய்யலாம்;நூலகத்திற்கு செல்லலாம்; பிரார்த்தனைகளில் ஈடுபடலாம். ஆனால் புதிய முகாமில் அந்தளவு வசதிகள் இருக்கவில்லை அது ஒரு புதிய வகைத் தண்டனையாக அவர்களுக்கு அமைந்தது. ஏற்கனவே நோய் வாய்ப்பட்டிருந்த சாந்தன் இப்பொழுது ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்படும் அளவுக்கு நோயாளி ஆகிவிட்டார்.சிறைவைக்கப்பட்டதிலிருந்து இன்று வரையிலும் அவருடைய தாயார் அவரைப் பார்க்கவில்லை. முதிய தாயார் விமானத்தில் பயணிக்க முடியாத அளவுக்கு ஆஸ்துமா நோயாளியாக இருக்கிறார். சாந்தன் நாடு திரும்ப விரும்புகிறார். தனது குடும்பத்தவர்களோடு தனது மிஞ்சிய காலத்தை கழிப்பதற்கு விரும்புகிறார். சிறையில் அவர் ஏறக்குறைய ஓர் ஆன்மீகவாதி போலாகி விட்டார் என்று அவருடைய வழக்கறிஞர்கள் கூறுகிறார்கள். ஆன்மீக விடயங்களையே அவர் அதிகம் கதைப்பதாகவும் பற்றற்றவர் போல அவர் நடந்து கொள்வதாகவும் அவர்கள் கூறுகிறார்கள். நாட்டுக்குத் திரும்பி தன் தாய் சகோதரர்களோடு அவர் வாழ விரும்புவதாகவும் அவர்கள் கூறுகிறார்கள். ஆனால் அவர் நாடு திரும்பினால் இலங்கையில் அவர் பாதுகாப்பாக இருக்கலாமா என்ற சந்தேகம் தமிழகத்தில் உள்ள செயற்பாட்டாளர்களுக்கு உண்டு. இந்திய உச்ச நீதிமன்றம் சாந்தனும் உட்பட வழக்கில் சம்பந்தப்பட்டவர்களை விடுதலை செய்தபின்,அவர்கள் நாட்டுக்குத் திரும்பினால் என்ன நடக்கும் என்ற கேள்வி அவருக்காக வாதாடிய தமிழக வழக்கறிஞர்களிடம் இருந்தது. இக்கேள்வியை தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் எழுப்பி சம்பந்தப்பட்ட அமைச்சரிடம் இருந்து உத்தியோகபூர்வ பதில் ஒன்றை பெற்றுக் கொள்வது நல்லது என்றும் யோசிக்கப்பட்டது.தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அக் கேள்வியை சம்பந்தப்பட்ட அமைச்சரிடம் கேட்க வேண்டும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. ஏனெனில்,இது விடயத்தில் முடிவெடுக்க வேண்டியது இலங்கை அரசாங்கம்தான். இலங்கைத் தீவின் வெளி விவகார அமைச்சும் பாதுகாப்பு அமைச்சுந்தான்.எனவே,அது தொடர்பாக நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியிருக்க வேண்டியதும் இலங்கை அரசாங்கத்தின் மீது நிர்பந்தங்களை பிரயோகித்திருக்க வேண்டியதும் நாட்டில் உள்ள தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள்தான். இந்த அடிப்படையில் சாந்தனின் குடும்பத்தவர்கள் நாட்டில் உள்ள மக்கள் பிரதிநிதிகளுடன் உரையாடியிருக்கிறார்கள். சில அரசியல் செயற்பாட்டாளர்கள் விக்னேஸ்வரனும் உட்பட தமிழ் மக்கள் பிரதிநிதிகளோடு இதுதொடர்பாக உரையாடியிருக்கிறார்கள்.யாருமே அதுதொடர்பாக பொருத்தமான நடவடிக்கைகளை எடுத்திருக்கவில்லை. நாடாளுமன்றத்தில் உரையாற்றியது; அறிக்கை விட்டது; சாந்தனின் வீட்டுக்குச் சென்று அவருடைய தாயாரைச் சந்தித்து ஆறுதல் கூறியது,என்பவற்றிற்கும் அப்பால் எந்த ஒரு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினரிடம் அது தொடர்பாக நடைமுறைச் சாத்தியமான செயற்பாடுகள் இருக்கவில்லை. சாந்தனின் வீட்டுக்குச் சென்று அவருடைய தாயாரோடு உரையாடிய நாடாளுமன்ற உறுப்பினர்களில் சுமந்திரன் ஒருவர். அதன்பின் அவர் அது தொடர்பாக ஜனாதிபதியோடு பேசியதாகவும்,ஆனால் ஜனாதிபதி தென்னிலங்கையில் ஏற்படக்கூடிய விளைவுகளையிட்டுப் பயப்பட்டதாகவும் ஊடகவியலாளர் வித்தியாதரன் அவருடைய பத்திரிகையில் எழுதியுள்ளார். இப்பொழுது சாந்தன் நோயாளியாகி விட்டார்.ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அவருடைய குடும்பத்தவர்கள் விவகாரத்தை மீண்டும் -15 மாதங்களின் பின்- தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கவனத்திற்குக் கொண்டு வந்திருக்கிறார்கள்.பெரும்பாலான தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களைச் சந்தித்திருக்கிறார்கள். தமிழரசுக் கட்சியின் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டிருக்கும் சிறீதரன் தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு ஒரு கடிதம் எழுதியதாகத் தகவல். தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி யாழ் இந்திய துணை தூதரகத்திற்கு ஒரு கடிதம் எழுதியதாகவும்,கடிதத்துக்கு இந்திய துணைத் தூதரகம் பதிலளித்திருப்பதாகவும் ஒரு தகவல். சாந்தனை நாட்டுக்குள் அனுமதிக்கும் முடிவை எடுக்க வேண்டியது யார்? இந்திய மத்திய அரசா? அல்லது தமிழக முதல்வரா? அல்லது இலங்கை அரசாங்கமா? இலங்கைத் தீவின் வெளிவிவகார அமைச்சும் பாதுகாப்பு அமைச்சும்தான் அது தொடர்பான முடிவுகளை எடுக்க வேண்டும். சாந்தனை நாட்டுக்குள் வர விடுவது என்ற முடிவை வெளிவிவகார அமைச்சு எடுக்குமாக இருந்தால் அதற்கு வேண்டிய தற்காலிக பயண ஆவணங்களைக் கொடுக்குமாறு சென்னையில் உள்ள இலங்கை உப தூதரகத்திற்கு உத்தரவுகளை வழங்கலாம். சாந்தன் அல்லாத ஏனைய மூவரின் விடயத்தில் இந்திய மத்திய அரசு முடிவெடுக்க வேண்டியுள்ளது. அவர்களை புலம்பெயர்ந்த நாடுகளுக்கு செல்ல அனுமதிப்பதா இல்லையா என்று. ஆனால் சாந்தனின் விடயத்தில் முடிவு இலங்கை அரசாங்கத்தின் கையில்தான் உண்டு.எனவே அதற்கு வேண்டிய முயற்சிகளை முன்னெடுக்க வேண்டியது நாட்டில் உள்ள தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களும் மனித உரிமை அமைப்புகளும் குடிமக்கள் சமூகங்களும்தான்.யாருக்கு கடிதம் எழுத வேண்டுமோ, யாருடன் நேரடியாகப் பேச வேண்டுமோ அவர்களோடு உரையாடியிருந்திருக்க வேண்டும். முடிவில், சலித்துப் போன சாந்தனின் தாயார், கடந்த செவ்வாய்க்கிழமை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை அணுகியதாகத் தெரிகிறது. தேவானந்தா நீதி அமைச்சரோடு அதுபற்றி உரையாடியதாகக் கூறப்படுகிறது. மற்றொரு நாடாளுமன்ற உறுப்பினராகிய அங்கஜன் ராமநாதனும் இந்த விடயத்தில் அக்கறை காட்டியிருக்கிறார். சில நாட்களுக்கு முன் சிறீதரன் வெளிவிவகார அமைச்சரோடு தொலை பேசியில் உரையாடியதாக ஒரு தகவல். அதாவது தமிழ்த் தேசிய நிலைப்பாட்டைக் கொண்டவர்கள் மட்டுமன்றி அதற்கு வெளியே நிற்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் சாந்தனின் விடயத்தில் அக்கறை காட்டியிருப்பதாகத் தெரிகிறது.கடந்த 15 மாதங்களாக சாந்தனின் குடும்பத்தவர்களுக்குத் திருப்தியான ஒரு பதிலைக் கொடுக்க தமிழ்த் தேசிய நிலைப்பாட்டை கொண்ட அரசியல்வாதிகளால் முடியவில்லை. அதாவது சாந்தனின் விடயத்தில் அவர்கள் மந்தமாகவே இயங்கியிருக்கிறார்கள். அது தமிழ்த் தேசிய அரசியலின் மந்தத் தனத்தையும் கையாலாகாத் தனத்தையும் காட்டுகின்றதா? https://athavannews.com/2024/1368368
  13. கிளிநொச்சியில் பொதுமக்களின் பேரணி மீது நீர்த்தாரை பிரயோகம்! இலங்கையின் 76ஆவது சுதந்திரதினத்தை தமிழர்களின் கரிநாளாக பிரகடனப்படுத்தி கிளிநொச்சியில் ஏற்பாடுசெய்யப்பட்டிருந்த, கரிநாள் பேரணியில் பொதுமக்கள் மீது பொலிஸார் நீர்த்தாரை பிரயோகம் மோற்கொண்டதால் பதற்றமான சூழ்நிலை நிலவியதாக தெரிவிக்கப்படுகிறது. இலங்கையின் சுதந்திர தினத்தை கரிநாளாக பிரகடனப்படுத்தி பொது முடக்கத்துக்கும் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் அழைப்பு விடுத்திருந்தனர். இந்த நிலையில், இன்று கொழும்பில் இடம்பெற்ற சுதந்திரதின நிகழ்வுகளுக்கு எதிராக கிளிநொச்சி மாவட்டத்தில் இடம்பெற்ற எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகத்தை மேற்கொண்டு அடக்க முற்பட்டனர். தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் தமித்தேசிய அரசியல் ஆதரவாளர்களும் போராட்டத்தில் பங்குபற்றினர். அத்துடன் பொது மக்கள் வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். சுதந்திர தினத்திற்கு எதிராக வடக்கு கிழக்கில் தமிழர்கள் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுப்பட்டுள்ளனர். பேரணிகளை தடுப்பதற்காக கலகம் அடக்கும் பொலிஸார் பாதுகாப்பு பணியில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளனர். நீர்த்தாரை, கண்ணீர் புகை குண்டுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருப்பதாக எமது பிராந்திய செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர். தசாப்த்தங்களாக தொடரும் இன பிரச்சினை தீர்க்கப்படாத நிலையில் இலங்கையில் 76ஆவது சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் இலங்கை தீவில் வாழும் தமிழர்கள் தங்களுக்கு மறுக்கப்பட்ட உரிமைகளை மீட்டெடுக்கும் வகையில் இலங்கையின் சுதந்திர தினத்தை கரிநாளாக பிரகடனப்படுத்தியுள்ளனர். தமிழர் பிரதேசங்களில் பல இடங்களில் சுதந்திர தின நிகழ்வுக்கு எதிராக பேரணிகள் இடம்பெறுகின்றன. கொழும்பில் காலி முகத்திடலில் நடைபெற்ற எதிர்கட்சி உறுப்பினர்கள் இந்நிகழ்வில் கலந்துக்கொள்ளவில்லை. பொருளாதார நெருக்கடியின்போது இவ்வாறான நிகழ்வுகள் அவசியமற்றவை என எதிர்கட்சிகள் குற்றம் சுமத்தியுள்ளன. தமிழ் தேசிய அரசியல் கட்சிகள் இந்நிகழ்வை முற்றாக புறக்கணித்துள்ளன. மலையக தமிழ் கட்சிகள், முஸ்லிம் கட்சிகள் ஆகியவற்றின் சில பிரதிநிதிகள் இந்நிகழ்வில் பற்குபற்றியுள்ளனர். இதேவேளை யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் கிளிநொச்சியில் இடம்பெறவிருந்த சுதந்திர தின எதிர்ப்பு போராட்டத்தில் கலந்துக்கொள்ளும் 5 பேருக்கு எதிராக பொலிஸாரினால் தடை உத்தரவு பெறப்பட்டது. இதற்கமைய, யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் மற்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கத்தின் செயற்பாட்டாளர்களான லீலாதேவி, கலாரஞ்சினி, கோகிலவாணி மற்றும் சிவில் செயற்பாட்டாளர் ஒருவர் அடங்கலாக ஐவருக்கு எதிராகவே தடை உத்தரவு பெறப்பட்டுள்ளது. https://athavannews.com/2024/1368362
  14. நல்ல கவர்ச்ச்ச்ச்சீ நடிகை போலுள்ளது. 😋 🤪 😍 இவர் உயிருடன் இருந்தால்.... இவரின் திறமையை!!! தமிழ் திரையுலகம் பயன் படுத்த வேண்டும். 😂
  15. மூஞ்சையை... காட்டினால்தானே முத்தமிடலாமா, இல்லையா என முடிவு எடுக்க முடியும்.
  16. ஆமை புகுந்த வீடு. பிற் குறிப்பு: ஆபிரகாம் தான்... ஆமை என்று நீங்கள் நினைத்தால், நான் பொறுப்பல்ல. 🙂
  17. ஆமை புகுந்த வீடு. பிற் குறிப்பு: ஆபிரகாம் தான்... ஆமை என்று நீங்கள் நினைத்தால், நான் பொறுப்பல்ல. 🙂
  18. நுவரெலியாவில் வீதி ஓரத்தில் (கண்டி வீதி) உள்ள ஒரு மரக்கறி கடை.
  19. பாணின் நிர்ணயிக்கப்பட்ட எடை குறித்து வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி. பாணின் நிர்ணயிக்கப்பட்ட எடையைக் குறிப்பிடும் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை நுகர்வோர் விவகார அதிகார சபை வெளியிட்டுள்ளது. அதன்படி, ஒரு இறாத்தல் பாணின் பரிந்துரைக்கப்பட்ட எடை 450 கிராமாக இருக்க வேண்டும் என்றும் அதன் மாறுபாடு 13.5 கிராமிற்கு குறையாமல் இருக்க வேண்டும் என குறித்த வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது அத்தோடு அரை இறாத்தல் பாணின் பரிந்துரைக்கப்பட்ட எடை 225 கிராமாக இருக்க வேண்டும் எனவும் அதன் மாறுபாடு 09 கிராமிற்க்கு குறையாமல் இருக்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை, விற்பனைக்கு காட்சிப்படுத்தப்படும் பாணின் எடை தெளிவாக காணக்கூடிய வகையில் இருக்க வேண்டும் எனவும் வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது. https://athavannews.com/2024/1368149
  20. பஸ்சில் பலரை ஏற்றிச் செல்லும் பொறுப்பு வாய்ந்த இடத்தில் இருக்கும் சாரதி மது அருந்தலாமா? மது தான்... முக்கியம் என்றால், ஏன் இந்த பொறுப்பு மிக்க பதவிகளுக்கு வருகின்றார்கள். இவர்களால்... பஸ்சில் பயணம் செய்ப்வர்களுக்கும் ஆபத்து, வீதியால் செல்லும் பொதுமக்களுக்கும், மற்ற வாகனங்களுக்கும் ஆபத்து. 😡

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.