Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழ் சிறி

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by தமிழ் சிறி

  1. நேற்றைய ஒரு செய்தியில்…. மீன் விலை பாதியாக குறைந்து விட்டது என்றிருந்தது. காரணம் மக்களிடம் அதிக விலை கொடுத்து வாங்கும் சக்தி இல்லாமல் போய் விட்டதாம். இவை எல்லாம் வளரும் பிள்ளைகளின் ஊட்டச் சத்து சம்பந்தப் பட்ட விடயம். ஆனால் சம்பந்தப் பட்டவர்கள் இதனைப் பற்றி பெரிதாக சிந்திப்பதாக தெரியவில்லை.
  2. “யுக்திய” செயற்பாட்டை யாராலும் நிறுத்த முடியாது : அமைச்சர் டிரான் அலஸ்! யுக்திய சுற்றிவளைப்புச் செயற்பாடுகளை யார் சொன்னாலும் நிறுத்தப் போவதில்லை என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் குறிப்பிட்டுள்ளார். கொழும்பில் ஊடகங்களுக்கு யுக்திய சுற்றிவளைப்புத் தொடர்பாக கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “சிறைச்சாலைகளில் கூட்ட நெரிசல் தொடர்பாக உரிய அதிகாரிகள்தான் கவனம் செலுத்த வேண்டும். அதைவிடுத்து, சிறைச்சாலைகளில் கூட்டம் அதிகரிக்கிறது என்பதற்காக யுக்திய சுற்றிவளைப்பு நடவடிக்கையை நிறுத்துமாறு யாரேனும் கோரினால், அது உண்மையில் நகைப்புக்குரிய விடயமாகவே பார்க்கப்படும். சிறைச்சாலைகளில் காணப்படும் நெரிசலைக் குறைக்கும் வகையில், புதிய சிறைச்சாலைகள் இரண்டை நிர்மாணிக்க உரிய இடத்தை அடையாளம் காணுமாறு ஜனாதிபதி தெரிவித்திருந்தார். உரிய ஆலோசனைகளைகளும் இதற்காக வழங்கப்பட்டுள்ளன. யுக்திய நடவடிக்கையானது, குடும்பங்களை பாதுகாக்கும் செயற்பாடாகும். பெற்றோரை, சமூகத்தை பாதுகாக்கும் ஒரு செயற்பாடாகும். யுக்திய செயற்பாட்டை யார் சொன்னாலும் நிறுத்தமாட்டோம். இதனை நிறுத்துமாறு ஜனாதிபதி பணிக்க மாட்டார் என நாம் உறுதியாக நம்புகிறோம்” என அமைச்சர் டிரான் அலஸ் மேலும் குறிப்பிட்டுள்ளார். https://athavannews.com/2024/1366431
  3. குதிரை ஓடிய பின் லாயத்தை பூட்டுவது மாதிரி... இப்படியான நிலைமை வரும் முன்பே... சம்பந்தப் பட்ட அமைச்சர்களும், அதிகாரிகளும் சிந்திக்கத் தவறியது ஏன்? இப்போ.... ஊட்டச் சத்து இல்லாத உணவை உண்ணும் மக்கள், எதிர்காலத்தில் தமது உடல் ஆரோக்கியத்தையும் இழக்கும் போது அதற்குரிய பாதிப்பையும் அரசே முகம் கொடுக்க வேண்டி வரும்.
  4. முப்பத்தைந்து வருடத்துக்கு முன்பு, ஒரு உதவி அரசாங்க அதிபரே.... ஜேர்மனி வந்து விட்டு, ஆறு மாதத்தில் திரும்ப ஊருக்கு போய் விட்டார்.
  5. யாழ் பெண்ணிடம் ஆசை வார்த்தை பேசிய பெண் அழகுகலை நிபுணர் கைது. யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஆசிரியரை வெளிநாட்டுக்கு அனுப்பி வைப்பதாக கூறி 42 இலட்ச ரூபாய் பணத்தினை மோசடி செய்த கொழும்பை சேர்ந்த அழகுக்கலை நிபுணரை நேற்றைய தினம் பொலிஸார் கைது செய்துள்ளனர். தன்னை வெளிநாடு ஒன்றுக்கு அனுப்பி வைப்பதாக ஆசை வார்த்தைகளை கூறி தன்னிடம் இருந்து 42 இலட்ச ரூபாய் பணத்தினை பெற்று , கொழும்பை சேர்ந்த அழகுக்கலை நிபுணர் ஏமாற்றி விட்டார் என யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் ஆசிரியர் முறைப்பாடு செய்ததையடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார். முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் அழகுக்கலை நிபுணரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட பெண்ணை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்த போது , அவர் பல்வேறு நபர்களிடமும் மோசடி செய்துள்ளமை தெரியவந்துள்ளது. அத்துடன் அவரது தனிப்பட்ட வங்கி கணக்கில் பல கோடி ரூபாய் பண பரிமாற்றங்களும் இடம்பெற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். https://athavannews.com/2024/1366404
  6. வரலாறு காணாத விலை உயர்வு : மரக்கறிகளின் விலையை தீர்மானித்தது யார்? வியாபாரிகள் தீர்மானித்த மரக்கறிகளின் விலையை விவசாயிகளின் தீர்மானத்திற்கேற்ப கொள்வனவு செய்ய வேண்டியுள்ளதாக நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தின் தலைவர் அருண சாந்த ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். மரக்கறி விலைகள் மேலும் அதிகரிப்பதற்கு இதுவும் ஒரு காரணம் என அவர் குறிப்பிட்டுள்ளார். கடந்த சில நாட்களாக சந்தையில் காய்கறிகள் விலை உயர்ந்து வருகிறது. இன்று ஒரு கிலோ கரட்டின் சில்லறை விலை ரூ.2,500 ஆக உயர்ந்து வரலாற்றில் பதிவான அதிகூடிய விலையை பதிவு செய்துள்ளது. மேலும் போஞ்சி, கறி மிளகாய், வெண்டைக்காய், லீக்ஸ் மற்றும் கோவா போன்ற காய்கறிகளின் விலையும் வெகுவாக உயர்ந்துள்ளது. எவ்வாறாயினும், காய்கறி விலையை நிர்ணயிப்பவர் விவசாயி என நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தின் தலைவர் அருண சாந்த ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். https://athavannews.com/2024/1366335
  7. மீன்களின் விலையில் பாரிய வீழ்ச்சி. மீன்களின் மொத்த விற்பனை விலை 50 வீதத்தால் குறைந்துள்ளதாக பேலியகொட மத்திய மீன் விற்பனை நிலைய வர்த்தகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. மீன் கொள்வனவுக்கான தேவை குறைந்துள்ளமையே இதற்குக் காரணம் என அதன் தலைவர் ஜயசிறி விக்கிரமாரச்சி தெரிவித்தார். இதனிடையே கடந்த 15ம் திகதி மீன் விலை உயர்ந்து காணப்பட்டது. 1 கிலோ தலபத்தின் விலை 1500 ரூபாவாகவும், 1 கிலோ கிருல்ல மீன் 600 ரூபாவாகவும், 1 கிலோ அலகொடுவா 900 ரூபாவாகவும் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. https://athavannews.com/2024/1366367
  8. 80,000 க்கும் மேற்பட்டோரின் நீர் விநியோகம் துண்டிப்பு! கடந்த வருடத்தில் மாத்திரம் கட்டணம் செலுத்தாத 80,000 க்கும் மேற்பட்டோரின் நீர் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. இதன்படி, 30 இலட்சம் நீர் பாவனையாளர்களில் 80,970 பேருக்கு நீர் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும், அவ்வாறு துண்டிக்கப்பட்ட நுகர்வோரிடமிருந்து 1,909 மில்லியன் ரூபாய் மீளப்பெற வேண்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, நீர் இணைப்புகளை துண்டித்துள்ள வாடிக்கையாளர்கள் தாம் செலுத்த வேண்டிய தொகையில் 25 வீதத்தை செலுத்தி மீண்டும் இணைப்பை பெற்று மீதி கொடுப்பனவுகளை பின்னர் வழங்க முடியும் எனவும் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது. https://athavannews.com/2024/1366371
  9. இலங்கை குறித்து தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம்! இலங்கைக் கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுகின்றமை குறித்து தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழக முதலமைச்சர் எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது” இலங்கை கடற்படையினரால் தமிழ்நாடு மீனவர்களும் அவர்களது மீன்பிடிப் படகுகளும் தொடர்ந்து சிறைபிடிக்கப்படுவது கவலையளிக்கின்றது. இத்தகைய கைது நடவடிக்கைகளால் மீன்பிடித் தொழிலை மட்டுமே தங்கள் வாழ்வாதாரமாக நம்பியுள்ள மீனவர்களிடையே பாதுகாப்பற்ற சூழலை உருவாக்கியுள்ளது. இலங்கை கடற்படையினரின் சிறைபிடிப்பு நடவடிக்கைகளில் எந்தத் தளர்வும் இருப்பதாகத் தெரியவில்லை. இத்தகைய தன்னிச்சையான கைது நடவடிக்கைகளை தடுத்திட இலங்கை அரசுக்கு வலியுறுத்திட வேண்டும். அத்துடன் இலங்கை கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து படகுகளையும் விடுவிக்க தெளிவான காலக்கெடுவை நிர்ணயிக்க வேண்டும்” இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். https://athavannews.com/2024/1366361
  10. அமெரிக்க கப்பல் மீது ஆளில்லா விமானம் தாக்குதல்! செங்கடலில் ஏடன் வளைகுடாவில் அமெரிக்க கப்பல் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளனர். ஹவுதி கிளர்ச்சியாளர்களின் ஆளில்லா விமானம் தமது கப்பலை தாக்கியதாகவும் ஆனால் கப்பல் பெரிய அளவில் சேதமடையவில்லை என்றும் அமெரிக்க இராணுவம் கூறியுள்ளது. ஹூதிகளை குறிவைத்து அமெரிக்கா தலைமையில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதளுக்கு பின்னர் அமெரிக்க கப்பல் மீதான இரண்டாவது தாக்குதல் இதுவாகும். கப்பலில் ஏற்பட்ட தீ அணைக்கப்பட்டதாகவும் கப்பலும் பணியாளர்களும் பாதுகாப்பாக உள்ளனர் என்றும் அக் கப்பலின் கேப்டன் தெரிவித்தார். காசாவில் இருந்து இஸ்ரேல் உடனடியாக வெளியேற வேண்டும் என்றும், ஹமாஸ் மற்றும் பாலஸ்தீன இலக்குகள் மீதான தாக்குதல்களை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் ஹூதி கிளர்ச்சியாளர்கள் தொடர்ந்தும் கோரிக்கை விடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1366391
  11. மர்மக் கதை வாசிப்பது போல், சுவராசியமாக எழுதுகின்றீர்கள் கவி அருணாசலம். 👍 உண்மையில் கதிரையின் நுனியில் இருந்து இவற்றை வாசித்தேன். 🙂
  12. துமிந்த சில்வாவுக்கு பொதுமன்னிப்பு வழங்கியது தவறு – உயர் நீதிமன்றம்! முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பரத லக்ஷ்மன் பிரேமசந்திரனின் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு பொதுமன்னிப்பு வழங்குவதற்கு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எடுத்த தீர்மானத்தை வலுவற்றதாக்கி, உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. உயிரிழந்த பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திரவின் மனைவி சுமனா பிரேமச்சந்திர, அவரது மகள் ஹிருணிகா பிரேமச்சந்திர மற்றும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளரான சட்டத்தரணி கஸாலி ஹுசைன் ஆகியோர் தாக்கல் செய்த மனுக்களை விசாரித்த பிரீத்தி பத்மன் சூரசேன தலைமையிலான மூவரடங்கிய உயர் நீதிமன்ற நீதியரசர்கள் குழு இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது. இதன்படி, பிரதிவாதிக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்திற்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. https://athavannews.com/2024/1366265
  13. ஏவுகணைத் தாக்குதல்; ஈரானை எச்சரிக்கும் பாகிஸ்தான்! ”ஈரான் அரசு கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும்” என பாகிஸ்தான் அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. பாகிஸ்தானைக் குறிவைத்து பாலோசிஸ்தான் பகுதியில் ஈரான் அரசு நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் இருவர் உயிரிழந்துள்ள நிலையிலேயே பாகிஸ்தான் அரசு இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து பாகிஸ்தானின் வெளியுறவு அமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, “ஈரான் எமது மீது மேற்கொண்ட தாக்குதலை வன்மையாகக் கண்டிக்கிறோம். இது எங்கள் வான்வெளியில் நடத்தப்பட்ட அத்துமீறல். இத் தாக்குதலினால் அப்பாவிக் குழந்தைகள் இருவர் உயிரிழந்துள்ளனர். அத்துடன் சிறுமிகள் சிலரும் காயமடைந்துள்ளனர். இத்தாக்குதல் தொடர்பில் ஈரான் அரசு கடுமையான விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும்” இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. https://athavannews.com/2024/1366260
  14. சீனாவில் அதிகரித்து வரும் இறப்பு விகிதம்! சீனாவில் இறப்பு விகிதமானது நாளுக்கு நாள் உயர்வடைந்து கொண்டே செல்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 60 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சீனாவில் கடந்த 2023 ஆம் ஆண்டு 2 மில்லியன் அளவுக்கு மக்கள் தொகை கணிசமான அளவு குறைவடைந்தது. இந்நிலையில் சீனாவில் தற்போது 1.4 பில்லியன் மக்களே உள்ளனர் என தேசிய புள்ளியியல் துறை தெரிவித்துள்ளது. சீனாவில் ஆரம்ப காலங்களில் மக்கள் தொகையைக் குறைக்க ‘ஒரு குழந்தை திட்டம்‘ நடைமுறைப்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் தொகை கணிசமான அளவு குறைவடைந்த நிலையில் கடந்த 2016-ம் ஆண்டில் குறித்த திட்டத்தை சீன அரசு தளர்த்தியது. இதில் ஓரளவுக்கு பலன் கிடைத்தபோதும், பிறப்பு விகிதம் எதிர்பார்த்த அளவிற்கு உயரவில்லை. மாறாக இறப்பு விகிதமானது நாளுக்கு நாள் உயர்வடைந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1366268
  15. ஓம். அந்த "ரெக்னிக்கை" நான் தான் கண்டு பிடித்தனான். 😂 🤣

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.