Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழ் சிறி

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by தமிழ் சிறி

  1. பியர் தரம் குறையவில்லை. வயதுக் கோளாறால்... உங்களுக்கு பியர் கைக்கிறது. 😂 இனி பாலுக்குள், கற்கண்டு போட்டு குடியுங்கள். 🤣
  2. நீங்கள் யாழ்.களத்தின் ராஜதந்திரி தானே… 😁😂
  3. 70 ஆண்டுகளுக்கு பிறகு சவூதியில் மதுபானக்கடை. சவுதி அரேபியாவில் 70 ஆண்டுகளுக்கு பிறகு மதுபானக்கடை திறக்கப்பட்டுள்ளது. 1950 ஆம் ஆண்டு, சவுதி அரேபியாவில் அப்போது ஆட்சி செய்த மன்னர் அப்துல் அஜீஸ் மதுவுக்கு தடை விதித்தார். ஜெட்டாவில் தனது மகன்களில் ஒருவரான இளவரசர் மிஷாரி, பிரித்தானிய துணைத் தூதர் சிரில் ஒஸ்மானை சுட்டுக் கொன்ற சம்பவத்துக்குப் பிறகு அவர் அந்த முடிவை எடுத்திருந்தார். எனினும் நேற்று (24) சவூதி அரேபியாவின் ரியாத்தில் முஸ்லிம் அல்லாத இராஜதந்திரிகளுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்ட இந்த மதுபானக்கடை திறக்கப்பட்டுள்ளது. சவூதி அரேபியாவை சுற்றுலா மற்றும் வர்த்தக ஸ்தலமாக மாற்றும் பட்டத்து இளவரசர் மொஹமட் பின் சல்மானின் வேலைத்திட்டத்துடன் இணைந்து இந்த மதுபானக் கடை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் சுட்டிக்காட்டுகின்றன. https://athavannews.com/2024/1367230
  4. இவர் பயணித்த இதே வாகனத்தால்... சில காலங்களுக்கு முன் வீதியால் சைக்கிளில் சென்றவரை விபத்துக்குள்ளாக்கியதில் அவர் வைத்தியசாலையில் இருந்து இறந்து விட்டாராம். அந்த வாகனத்தை அந்த நேரம் செலுத்தியவரும் இவர்தானாம். ஆனால் தனது அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி வேறு ஒருவர் ஓடியதாக காவல்துறையிடம் தெரிவித்து இவர் தப்பி விட்டதாக சொல்கிறார்கள். இதனைத்தான்... கர்மா என்பது. ஆண்டவன் தீர்ப்பில் இருந்து எவரும் தப்ப முடியாது.
  5. இளையராஜா முதலில் மனைவியை இழந்தார், இப்போ மகளை இழந்துள்ளார். இந்தத் துயரை தாங்கும் சக்தியை, இறைவன் அவருக்கு கொடுக்க வேண்டும். ஆழ்ந்த இரங்கல்கள். 🙏
  6. இலங்கைக்கு வருகை தந்த இசைஞானி இளையராஜா. இசை நிகழ்வு இந்நிலையில், இளையராஜா உள்ளிட்ட குழுவினருக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதன்போது விமான நிலையத்தில் இசைஞானி இளையராஜா, ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கையில்,''நான் இசையோடு தான் இலங்கை வந்திருக்கின்றேன்.எங்கு சென்றாலும் என்னிசை இல்லாமல் உங்களால் இருக்கவே முடியாது. இலங்கை தமிழர்களில் எனக்கு இரசிகரில்லாமல் யாராவது இருக்கிறார்களா? எல்லோரும் எனக்கு இரசிகர்கள் தானே.அதுவே எனக்கு போதும்.இது கடவுள் கொடுத்த வரம்.'' என கூறியுள்ளார். https://tamilwin.com/article/music-director-ilaiyaraja-sri-lanka-visit-1706143883
  7. இசைஞானி இளையராஜா இலங்கைக்கு வருகை. கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் எதிர்வரும் சனிக்கிழமை (27) மற்றும் ஞாயிற்றுக்கிழமை (28) இடம்பெறவுள்ள இசை நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக நேற்று (24) இலங்கைக்கு வருகை தந்த இசைஞானி இளையராஜாவை இந்நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் பிரபா வரவேற்றார். https://www.virakesari.lk/article/174759
  8. சீன ஆய்வுக் கப்பலுக்கு மாலைதீவு பச்சைக் கொடி! இந்தியா மற்றும் மாலத்தீவு ஆகிய நாடுகளுக்கு இடையிலான உறவில் விரிசல் உருவாகியுள்ள நிலையில், சீன ஆய்வுக் கப்பலை தமது துறைமுகத்தில் நிறுத்துவதற்கு மாலைத்தீவு அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளமை உலகரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வரும் மார்ச் மாதம் 15ஆம் திகதிக்கு முன்னர் மாலைதீவில் உள்ள இந்திய இராணுவத்தை திரும்பப் பெறுமாறு இந்தியாவிற்கு மாலைதீவு அரசாங்கம் வலியுறுத்தி இருந்தது. இந்நிலையில் சீனாவிற்கு சொந்தமான சியாங் யாங் ஹோங் 3 என்ற சீன கப்பலை மாலத்தீவில் நிறுத்த சீன அரசாங்கம் அனுமதி கோரியிருந்த நிலையில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனினும் சீன ஆய்வுக் கப்பல் மாலத்தீவு கடற்பகுதியில் எந்த ஆய்விலும் ஈடுபடாது என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மாலத்தீவில் உள்ள மாலி துறைமுகத்தில் அடுத்த மாதம் 8ஆம் திகதிக்கு பின்னர் குறித்த சீன கப்பல் நங்கூரமிடும் என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1367088
  9. உக்ரேன் எல்லையில் போர் கைதிகள் பயணித்த ரஷ்ய விமானம் விபத்து! ரஷ்யாவைச் சேர்ந்த இலியுஷின் Il-76 என்ற இராணுவ விமானமொன்று உக்ரேன் எல்லையில் இன்று சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 6 பணியாளர்கள் மற்றும் மூன்று காவலர்கள் உட்பட74 பேர் பயணித்த விமானமே தெற்கு பெல்கொரோட் பகுதியில் வைத்து இவ்வாறு சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் குறித்த விமானத்தில் 65 உக்ரேனிய போர் கைதிகள் இருந்துள்ளனர் என ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1367080
  10. ஜேர்மனியில் ஐந்து நட்சத்திர விடுதி ஒன்றின், ஒரு நாள் அறை வாடகை 80 ஐரோ. கண்டியில் ஐந்து நட்சத்திர விடுதி ஒன்றின் ஒரு நாள் வாடகை 200 ஐரோ.... என அண்மையில் ஸ்ரீலங்கா சென்ற ஜேர்மன்காரர் கூறினார்.
  11. 7 மீனவர்களுக்கு மரண தண்டனை : மேல் நீமன்றம் உத்தரவு. மீன்பிடி கப்பலை கடத்தி மூன்று மீனவர்களை கொலை செய்த வழக்கில் 7 மீனவர்களுக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது. கடந்த 2012ஆம் ஆண்டு ஒக்டோபர் 15ஆம் திகதி இலங்கைக் கடற்பகுதியில் சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்டவர்களை ஏற்றிச் சென்ற ‘தேஜான்’ என்ற மீன்பிடிக் கப்பல் கடத்தப்பட்டு மூன்று மீனவர்கள் கொல்லப்பட்டதுடன் மேலும் பல மீனவர்கள் படுகாயமடைந்தனர். குறித்த வழக்கு இன்று (24) கொழும்பு உயர் நீதிமன்றில் விசாரணைக்காக எடுத்து கொள்ளப்பட்ட போது நீதிபதி ஆதித்ய பட்டபாண்டிகே 7 மீனவர்களுக்கு உரிய உத்தரவை பிறப்பித்துள்ளார். வழக்கின் 10வது பிரதிவாதியாக குறிப்பிடப்பட்டிருந்த பிரதிவாதியை அனைத்து குற்றச்சாட்டுக்களிலிருந்தும் விடுவிக்குமாறும் உயர் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார். மரணதண்டனை விதிக்கப்பட்ட மூன்று குற்றச்சாட்டுகளுக்கு மேலதிகமாக, ஏனைய ஆறு குற்றச்சாட்டுகளுக்கும் பிரதிவாதிகளுக்கு 29 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்த நீதிபதி, தலா 2,008,500 ரூபா அபராதம் செலுத்துமாறு உத்தரவிட்டார். மரண தண்டனைக்கு மேலதிகமாக விதிக்கப்பட்ட சிறைத்தண்டனைகளையும் ஒரே நேரத்தில் அனுபவிக்க வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார். 11 பிரதிவாதிகளுக்கு எதிராக சட்டமா அதிபர் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்திருந்தார். மூன்று பிரதிவாதிகள் வழக்கு விசாரணை இடம்பெற்றிருந்த காலப்பகுதியில் இறந்துவிட்டதால், 8 பிரதிவாதிகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குகள் நடத்தப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1367026
  12. செங்கடலிற்கு கப்பலை அனுப்புவது தொடர்பில் பேச்சுவார்த்தை! அரசாங்கம் அனுமதி வழங்கியதும் செங்கடலிற்கு கப்பலை அனுப்ப இலங்கை கடற்படை தயார் என தெரிவிக்கப்பட்டுள்ளது இதேவேளை செங்கடலிற்கு கப்பலை அனுப்புவது குறித்து இன்னமும் உயர்மட்டத்தில் பேச்சுவார்த்தைகள் இடம்பெறுகின்றனதுடன் எந்தநேரத்திலும் கப்பலை அனுப்ப தயாராகவுள்ளோம் எனவும் இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது மேலும் அரசாங்கத்தின் உயர்மட்டத்தினருக்கும் கடற்படை தளபதி உட்பட்டவர்களிற்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளின் பின்னர் திகதி தீர்மானிக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. https://athavannews.com/2024/1367012
  13. மதுரையில் பிரம்மாண்ட ஏறு தழுவுதல் அரங்கம் திறப்பு! மதுரை, அலங்காநல்லூர் அருகே அமைக்கப்பட்டுள்ள ”கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கம்” இன்று முதலமைச்சர் மு.க ஸ்டாலினால் திறந்து வைக்கப்படவுள்ளது. சுமார் 66.80 ஏக்கர் பரப்பளவில் உருவாக்கப்பட்டுள்ள குறித்த பிரம்மாண்ட அரங்கத்தில், பார்வையாளர்கள் கண்டுகளிப்பதற்கு 4,500 இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று இடம்பெறவுள்ள அரங்க திறப்பு விழாவைத் தொடர்ந்து, குறித்த அரங்கத்தில் ஏறு தழுவிதல் போட்டிகள் நடைபெறவுள்ளதோடு அதில் 500 காளைகள் மற்றும், 300 வீரர்கள் பங்கேற்கவுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2024/1366972
  14. நால்வரால் பிக்கு சுட்டுக்கொலை. கம்பஹா – மல்வத்துஹிரிபிட்டிய – கஹதான ஸ்ரீ ஞானராம விகாரையில் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி பிக்கு ஒருவர் உயிரிழந்துள்ளார். இவ்வாறு சுட்டு கொல்லப்பட்டவர் வெலிவேரிய கெஹல்கந்த பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றில் வசிக்கும் 45 வயதுடைய கலபாலுவாவே தம்மரதன தேரர் என பொலிஸார் தெரிவித்தனர். மேலும், இந்த துப்பாக்கிச் சூட்டுக்கு டி-56 துப்பாக்கி பயன்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மேலும், இந்த துப்பாக்கிச் சூட்டுக்காக ஹோண்டா ஃபிட் காரில் வந்த நான்கு சந்தேக நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான தெரணம கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததுடன், துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் கம்பஹா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1366938
  15. தமிழக திராவிட அரசியல் தலைவர்களின் சொத்து விபரத்தை வெளியிட்டால்.. புட்டின் பின்னுக்கு தள்ளப் படுவார். 😂
  16. இணையவழி பாதுகாப்பு சட்டமூலத்தின் மீதான வாக்கெடுப்பில் 83 ஆதரவு வாக்குகள். இணையவழி பாதுகாப்பு சட்டமூலம் இன்றும் (23) நாளையும் (24) நாடாளுமன்றத்தில் விவாதத்திற்கு உட்படுத்தப்படவுள்ளது. சில நிமிடங்களுக்கு முன், இந்த சட்டமூலம் மீது விவாதம் நடத்தப்பட வேண்டுமா, வேண்டாமா என்ற வாக்கெடுப்பு நாடாளுமன்றத்தில் நடைபெற்றது. சட்டமூலம் மீதான விவாதத்திற்கு ஆதரவாக 83 வாக்குகளும் எதிராக 50 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன. இதற்கமைய இணையவழி அமைப்புகளின் பாதுகாப்பு தொடர்பான சட்டமூலம் இன்றும் நாளையும் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படவுள்ளது. https://athavannews.com/2024/1366898

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.