Everything posted by தமிழ் சிறி
-
யாழில். இனவாதக் கருத்துக்களை வெளியிட்ட இருபொலிஸ் உத்தியோகஸ்தர்கள் கைது!
யாழில். இனவாதக் கருத்துக்களை வெளியிட்ட இருபொலிஸ் உத்தியோகஸ்தர்கள் கைது! யாழில் சக பொலிஸ் அதிகாரிகளுடன் இனவாதக் கருத்துக்களைத் தெரிவித்து மோதலில் ஈடுபட்ட இரு பொலிஸ் உத்தியோகத்தர்களை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. யாழ்ப்பாண பொலிஸ் நிலைய பொலிஸாரின் விடுதிக்குள் நேற்று முன்தினமிரவு மதுபோதையில் உள்நுழைந்த குறித்த பொலிஸ் அதிகாரிகள் இனவாதக் கருத்துக்களைத் தெரிவித்து மோதலில் ஈடுபட்டுள்ளனர். இதனை அடுத்து இரு பொலிஸ் உத்தியோகஸ்தர்களும் கைது செய்யப்பட்டு நேற்றைய தினம் திங்கட்கிழமை யாழ்.நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டதை அடுத்து இருவரையும் விளக்கமறியலில் வைக்க நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. அதேவேளை நிர்வாக ரீதியான விசாரணைகளை முன்னெடுத்த மூத்த பொலிஸ் அத்தியட்சகர் இரு பொலிஸ் உத்தியோகஸ்தர்களையும் உடன் அமுலுக்கு வரும் வகையில் , பணி இடைநிறுத்தம் செய்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1371360
-
இலங்கைகான அமெரிக்காவின் புதிய தூதுவராக எலிசபெத் கெத்ரின் ஹோர்ஸ்ட் நியமனம்!
இலங்கைகான அமெரிக்காவின் புதிய தூதுவராக எலிசபெத் கெத்ரின் ஹோர்ஸ்ட் நியமனம்! இலங்கை;கான அமெரிக்காவின் புதிய தூதுவராக எலிசபெத் கெத்ரின் ஹோர்ஸ்ட் நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கைக்கான அமெரிக்க தூதுவராக பணியாற்றிய ஜூலி சங்கின் பதவிக்காலம் விரைவில் நிறைவடையவுள்ள நிலையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி சிரேஷ்ட அமெரிக்க ராஜதந்திரியான எலிசபெத் கெத்ரின் ஹோஸ்ட், பாகிஸ்தானுக்கு பொறுப்பான தலைமை பிரதி செயலாளராக பதவி வகித்து வருகின்ற நிலையிலேயே இந்த புதிய நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. மேலும் அமெரிக்க செனட் சபையின் அனுமதிக்கிணங்க இலங்கை அரசாங்கம் இதற்கான ஒப்புதல் வழங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2024/1371239
-
நாடளாவிய ரீதியாக சகல பிரஜைகளினதும் தகவல்களை சேகரிக்கும் புதிய வேலைத்திட்டம்!
நாடளாவிய ரீதியாக சகல பிரஜைகளினதும் தகவல்களை சேகரிக்கும் புதிய வேலைத்திட்டம்! நாடளாவிய ரீதியாக சகல பிரஜைகளினதும் தகவல்களை சேகரிக்கும் புதிய வேலைத்திட்டமொன்றை ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. நாட்டில் இடம்பெறுகின்ற குற்றச் செயல்களுடன் தொடர்புடைய சந்தேக நபர்களை இலகுவில் அடையாளம் காணும் நோக்கில் இந்த புதிய வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு நபர் மற்றும் குடும்பங்களின் தகவல்கள், வசிக்கும் இடம், தேசிய அடையாள அட்டை எண், கிராம அலுவலர் பிரிவு போன்ற தகவல்களை உள்ளடக்கிய படிவத்தை பூர்த்தி செய்து தமது வசிப்பிடத்துக்கு உரிய பொலிஸ் நிலையத்தில் கையளிக்க அறிவுறுத்தப்படவுள்ளனர். குறிப்பாக யாரேனும் ஒருவர் தற்போதைய வசிப்பிடத்துக்கு உரிய பொலிஸ் பிரிவை விட்டு வேறொரு பொலிஸ் பிரிவுக்கு உரிய பிரதேசத்துக்கு வசிப்பிடத்தை மாற்றும் சந்தர்ப்பத்தில், அது தொடர்பாக கிராம சேவை அதிகாரியின் பரிந்துரையுடன் பொலிஸ் நிலையத்துக்கு கட்டாயம் தகவல் தெரிவிக்க வேண்டும் என பொது மக்களை வலியுறுத்தவும் பொலிஸார் தீர்மானித்துள்ளனர். https://athavannews.com/2024/1371235
-
கருத்து படங்கள்
- தமிழ் மக்களும் ராஜதந்திரிகளும்! நிலாந்தன்.
தமிழ் மக்களும் ராஜதந்திரிகளும்! நிலாந்தன். சில ஆண்டுகளுக்கு முன் இந்திய வெளியுறவுச் செயலர் யாழ்ப்பாணம் வந்திருந்தார். தேர்ந்தெடுக்கப்பட்ட கைக்கடக்கமான தொகையினரை அவர் திண்ணை விருந்தினர் விடுதியில் சந்தித்தார்.சந்திப்பு முடிந்து வெளியே வரும் பொழுது சிவாஜிலிங்கம் என்னிடம் கேட்டார்…. “அடுத்த கிழமை இதுதான் கட்டுரையா?” என்று. நான் சொன்னேன் “இல்லை இது பகிரங்கச் சந்திப்பு அல்ல. மூடிய அறைக்குள் நடந்த சந்திப்பு. இங்கு நான் ஒரு ரிப்போர்ட்டராக வரவில்லை. ராஜதந்திரிகளுடனான சந்திப்பு மூடிய அறைக்குள் நடக்கின்றது என்றால் அதன் பொருள் எல்லாவற்றையும் வெளியே கதைப்பதற்கு அவர்கள் தயாரில்லை என்பதுதான்” என்று. ஏற்கனவே விக்னேஸ்வரன் முதலமைச்சராக இருந்த காலத்தில், கனேடியத் தூதுவரோடு நடந்த உரையாடலை ஊடகம் ஒன்றுக்கு வெளிப்படுத்தியதாக ஒரு விமர்சனம் வந்தது. தமிழ் அரசியல்வாதிகளில் சிலர் மூடிய அறைகளுக்குள் தாங்கள் கதைப்பவற்றை வெளியே கூறுகிறார்கள் என்ற ஒரு விமர்சனம் ஒருபகுதி ராஜதந்திரிகள் மத்தியில் உண்டு. ஒரு சிறிய அரசற்ற இனத்தின் தலைவிதியைத் தீர்மானிக்கும் விடையங்கள் தொடர்பில்,ரிப்போர்ட்டிங் செய்யும்போது அதிகம் நிதானம் வேண்டும். ஊடகத்தின் பார்வையாளர் தொகையை அதிகப்படுத்துவதற்காக;சுடச்சுடச் செய்திகளைக் கொடுக்க வேண்டும் என்பதற்காக;பரபரப்பிற்காக ச்செய்திகளை அறிக்கையிடுவது வேறு.ஒரு தேசத்தைக் கட்டி யெழுப்புவதற்கான செய்தி அறிக்கையிடல் வேறு. ஒரு கட்சியை அல்லது ஓர் அரசியல்வாதியை அல்லது ஒரு நிதி அனுசரணையாளரை மகிழ்விப்பதற்காக அல்லது பார்வையாளர்களை கவர்வதற்காக செய்தியை அறிக்கையிடுவது வேறு.தேசத்தைக் கட்டியெழுப்புவதற்காக அறிக்கையிடுவது வேறு. அதிலும் குறிப்பாக இது யுடியூப்பர்கள் காலம். வாசிப்பதற்கான பொறுமை குறைந்து வருகின்றது. கேட்பதற்கான தாகம் அதிகரித்து வரும் ஒர் ஊடகச் சூழல்.யுடியூப்பர்கள் எத்தனை பேர் தேசத்தை கட்டியெழுப்பும் பொறுப்புணர்ச்சியோடு செயல்படுகிறார்கள்? தான் பரப்புவது வதந்தியா செய்தியா என்று எத்தனை யுடியூப்பர்களுக்குத் தெரியும்?எத்தனை யுடியூப்பர்கள் தமிழுக்கு வெளியே போய் வாசிக்கின்றார்கள்?எத்தனை யுடியூப்பர்கள் தாங்கள் வெளியிடும் தகவலின் உண்மைத் தன்மையை உறுதிப்படுத்துகிறார்கள்?இதை இன்னும் கூர்மையாகக் கேட்டால் ஒரு யுடியூப்பருக்கு என்ன தகைமை இருக்க வேண்டும்?ஒரு நல்ல கமராவும் வேகமான இன்டர்நெற்றும் இருந்தால் மட்டும் போதுமா? தாங்கள் கூறும் விடயத்தின் உண்மைத்தன்மையை உறுதிப்படுத்த வேண்டும் என்ற பொறுப்புணர்வு எத்தனை யுடியூப்பர்களுக்கு உண்டு? கடந்த சுதந்திர தினத்தன்று, யாழ்ப்பாணம், பழைய பூங்கா வீதியில் காரில் வந்த ஒருவர் போலீசாரோடு முரண்படுகிறார்.அது தொடர்பாக ஒரு யுடியூப்பர் செய்தி வெளியிடுகையில் “காரில் வந்த இந்தியர்,பார்த்து மிரண்ட இலங்கை போலீஸ்” என்று தலைபிடுகிறார்.அக்காணொளி ஆறு லட்சத்து எட்டாயிரம் பேர்களால் பார்க்கப்பட்டிருக்கிறது.ஆனால் பொலிசாரைக் கேள்வி கேட்கும் நபர் ஒர் இந்தியர் அல்ல. சுயாதீன திருச்சபை ஒன்றின் பாஸ்டர்.ஆயின்,ஆறு லட்சத்துக்கும் அதிகமானவர்களிடம் அந்தப் பொய் சென்று சேர்ந்திருக்கின்றதா? அது ஒரு தகவல் பிழை.ஆனால் மற்றொரு தொகுதி யுடியூப்பர்கள் அரசியல் விமர்சனம் என்று கூறி கற்பனைகளையும் ஊகங்களையும் பரப்புகிறார்கள். தான் கூற வரும் கருத்தைக் குறித்து ஆழமான வாசிப்போ கிரகிப்போ ஆய்வு ஒழுக்கமோ இல்லாத ஒரு யுடியூப் தலைமுறை உருவாகிவிட்டது. அவர்களில் அநேகரிடம் தேசத்தைக் கட்டியெழுப்பத் தேவையான பொறுப்புணர்ச்சி கிடையாது.இவ்வாறு விளக்கம் குறைந்த அல்லது பொறுப்பு குறைந்த அல்லது விவகார ஞானம் இல்லாத யுடியூப்பர்களின் காலத்தில் ஒரு தேசமாகத் திரள்வது எப்படி? அண்மையில் கொழும்புக்கான புதிய இந்தியத் தூதர் யாழ்ப்பாணத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு சிறு தொகையினரைச் சந்தித்தார்.அதில் அரசியல்வாதிகள் பல்கலைக்கழகப் பிரமுகர்கள் கருத்துருவாக்கிகள் போன்றவர்கள் அடங்குவர்.சந்திப்பின் போது அதில் அழைக்கப்பட்டவர்கள் ஐந்துக்கும் குறையாத மேசைகளை சுற்றி அமர்ந்திருந்தார்கள். தூதுவர் ஒவ்வொரு மேசையாகச் சென்று அவர்களோடு உரையாடினார்.அதில் ஒவ்வொரு மேசையிலும் என்ன உரையாடப்பட்டது என்பது அடுத்த மேசையில் இருந்த எல்லாருக்கும் தெரியாது. சந்திப்பு முடிந்ததும் ஊடகங்களுக்கு சில அரசியல்வாதிகள் தெரிவித்த தகவல்களை வைத்து ஊடகங்களும் ஊடகங்களும் யுடியூப்பர்களும் வியாக்கியானங்களை முன் வைத்தார்கள். கடந்த 15 ஆண்டுகளிலும் தமிழ் பிரதிநிதிகளை அல்லது குடிமக்கள் சமூகங்களை சந்திக்கும் தூதரக அதிகாரிகளும் ராஜதந்திரிகளும் பெரும்பாலும் தேர்ந்தெடுக்கப்பட்ட தரப்புகளைத்தான் சந்திப்பார்கள். இவ்வாறான சந்திப்புகளில் கலந்து கொள்ளும் அரசியல் செயற்பாட்டாளர்கள் அல்லது மதத் தலைவர்கள் அல்லது சிவில் சமூகப் பிரதிநிதிகள் அல்லது அரசு சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் பொதுவாக மூன்று விதமான போக்குகளைப் பிரதிபலிப்பார்கள். முதலாவது போக்கு முறையிடுவது.அதாவது சிங்கள பௌத்த அரசுக் கட்டமைப்புக்கு எதிராக முறைப்பாடுகளை முன் வைப்பது. இரண்டாவது,உதவி கேட்பது. அதாவது தமிழ் மக்களுக்கு என்னென்ன தேவை இருக்கிறது என்று கூறி உதவி கேட்பது.மூன்றாவது வெளித் தரப்புகள் அரசாங்கத்தோடு நிற்கின்றன அல்லது தமிழ் மக்களுக்குப் பொருத்தமான விதங்களில் உதவவில்லை என்று கூறி வெளிநாடுகளின் மீது விமர்சனங்களை முன் வைப்பது. இதில் முதல் இரண்டு போக்குகளும்தான் தூக்கலாக இருக்கும். குறிப்பாக அபிவிருத்தி மைய அரசியலை ஏற்றுக் கொள்பவர்கள், அரசு சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் போன்றவர்கள் அநேகமாக உதவிகளைக் கேட்பார்கள். என்னென்ன விடயங்களில் குறிப்பிட்ட நாடு தமிழ் மக்களுக்கு உதவலாம் என்று கோரிக்கைகள் அடங்கிய பட்டியலோடும் வருவார்கள். அவர்கள் பெரும்பாலும் உரிமை மைய அரசியலை முன்வைக்கும் குடிமக்கள் சமூகங்கள் தங்களுடைய உரையாடலை திசை திருப்புகிறார்கள் என்று எரிச்சல் அடைவதுண்டு. இதில் மூன்றாவது வகை அதாவது வெளிநாடுகளை விமர்சிக்கும் தரப்பு மிகவும் குறைவு.குறிப்பிட்ட வெளிநாடு அரசாங்கத்தோடு நிற்கின்றது அல்லது தமிழ் மக்களுக்கு உதவவில்லை போன்ற கருத்துக்களை முன்வைத்து அந்த நாட்டின் மீது விமர்சனங்களை வைப்பவர்கள் அநேகமாகக் குறைவு.ராஜதந்திரம் எனப்படுவது என்கேஜ் பண்ணுவது.ராஜதந்திரிகளுடன் முரண்பட்டால் சில சமயம் அடுத்தமுறை சந்திக்கமாட்டார்கள்.அதாவது தொடர்ந்து என்கேஜ் பண்ண முடியாது.எனினும்,சில அரசியல்வாதிகளும் சில சிவில் சமூகப் பிரதிநிதிகளும் வெளிநாட்டுத் தூதுவர்களை சந்திக்கும்பொழுது நாசுக்காகவும் சில சமயங்களில் நேரடியாகவும் அப்படிப்பட்ட விமர்சனங்களை வைப்பதுண்டு. எனினும் பொதுப் போக்கு முறையிடுவதும் உதவி கேட்பதுந்தான்.அதைத் தொகுத்துச் சொன்னால் தமிழ் மக்கள் மத்தியில் வெளியாருக்காகக் காத்திருப்பவர்கள்தான் அதிகம் என்ற ஓர் உணர்வே வெளிநாட்டுத் தூதுவர்களுக்கு ஏற்படும். இவ்வாறு தீர்வுக்காக அல்லது உதவிகளுக்காக அல்லது மீட்சிக்காக வெளியாருக்காகக் காத்திருக்கும் ஓர் அரசியல் போக்கை அரசியல்வாதிகளும் சிவில் சமூகப் பிரதிநிதிகளும் பிரதிபலிக்கும் ஒரு பாரம்பரியத்தின் பின்னணியில், அண்மையில் கொழும்பில் நடந்த ஒரு சந்திப்பில்,புதிதாக நியமிக்கப்பட்டிருக்கும் இந்தியத் தூதுவர் தமிழ்க் கட்சிகளின் பிரதிநிதிகளைச் சந்தித்தபோது தெரிவித்த கருத்துக்கள் ஊடகங்களில் சர்ச்சைகளுக்குள்ளாக்கியது. இந்தியா ஈழத் தமிழர்களைக் கைவிட்டு விட்டது என்ற பொருள்பட செய்திகள் வெளிவந்தன.ஏனெனில் இந்திய தூதுவர் இலங்கை மீது அழுத்தத்தை பிரயோகிப்பதில் தங்களுக்குள்ள வரையறைகளை உணர்த்தும் விதத்தில் சந்திப்பின்போது பேசியிருக்கிறார் என்று தெரிகிறது.இந்தியா ஏதோ ஒரு நிலைப்பாட்டை எடுத்திருக்கிறது என்று மட்டும் தெரிகிறது.அதனால், ஈழத் தமிழர்கள் இந்தியாவை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கத் தேவையில்லை என்று அண்மையில் மனோ கணேசன் மின்னல் நிகழ்ச்சியின்போது தெரிவித்திருந்தார். இந்திய தூதர் அப்படிச் சொன்னாலும் சொல்லாவிட்டாலும் அதுதான் உண்மை.எந்த ஒரு வெளிநாடும் தமிழ் மக்களுக்கு தீர்வைத் தங்கத் தட்டில் வைத்துத் தராது. தமிழ் மக்கள் அதற்காகப் போராட வேண்டும். தமிழ் மக்கள் தங்கள் பேரபலத்தை அதிகப்படுத்தும் போது வெளிநாடுகள் தமிழ் மக்களை நோக்கி வரும். ஜேவிபிக்கு பேரபலம் அதிகரித்திருக்கிறது. என்பதனால் தான் இந்தியா ஜேவிபியை புதுடெல்லிக்கு அழைத்தது. ரணில் விக்கிரமசிங்க, எல்லாப் பேரரசுகளையும் சம தூரத்தில் வைக்கக் கூடியவர்.எனவே அவரைக் கையாள்வதில் உள்ள நெருக்கடிகளை இந்தியா உணர்ந்திருக்கிறது. அதனால் கையாள இலகுவான ஒரு கூட்டை உருவாக்க இந்தியா விரும்பலாம். அவ்வாறு ரணிலுக்கு எதிராக ஏற்படக்கூடிய ஒரு கூட்டுக்குள் எதிர்காலத்தில் இணையக்கூடிய ஜேவிபியை இந்தியா அங்கீகரித்துப் பேச அழைத்திருக்கலாம். இந்தியா மட்டுமல்ல அமெரிக்காவோ,சீனாவோ எந்த ஒரு பேரரசாக இருந்தாலும், ஏன் சிற்றரசாக இருந்தாலும், அரசியலரங்கில் துணிந்து புகுந்து விளையாடும் தரப்புகளைத்தான் ஆர்வத்தோடு பார்ப்பார்கள். துணிந்து புகுந்து விளையாடும் தரப்புகள்தான் வரலாற்றை உருவாக்குகின்றன.துணிந்து புகுந்து விளையாடும் போது தான் பேரமும் அதிகரிக்கும். எனவே தமிழ் மக்கள் வெளியாருக்காகக் காத்திருப்பதை விடுத்து வெளியார் தங்களை நோக்கி வரக்கூடிய விதத்தில் போராட வேண்டும். காய்களை நகர்த்த வேண்டும். பிராந்திய மற்றும் பூகோள சூழலை வெற்றிகரமாகக் கையாள வேண்டும். தமிழ் மக்களுக்காகக் கொழும்பைப் பகைக்கலாம் என்ற நம்பிக்கையை வெளிநாடுகளுக்குக் கொடுக்க வேண்டும். எந்த ஒரு வெளிநாடும் எந்த ஒரு சிறிய அரசற்ற மக்கள் கூட்டத்திற்கும் தீர்வைத் தங்கத் தட்டில் வைத்துக் கொடுப்பதில்லை. இந்த பூமியிலே போராட்டத்துக்கு உதவினாலும் சரி சமாதானத்துக்கு உதவினாலும் சரி தீர்வுகளுக்காக உழைத்தாலும் சரி எல்லாவற்றிற்கும் பின்னால் அரசியல் உள்நோக்கங்கள் இருக்கும்.ராணுவ பொருளாதார நலன்கள் இருக்கும். எனவே தமிழ் மக்கள் தங்களுடைய பேரபலத்தை பெருக்கிக் கொள்ள வேண்டும். இந்தியா எங்களை கைவிட்டு விட்டது; அமெரிக்கா கைவிட்டு விட்டது; ஐநா கைவிட்டுவிட்டது;சீனா தொடர்பான இந்தியாவின் சந்தேகங்களையும் அச்சங்களையும் அதிகப்படுத்துவதன்மூலம் இந்தியாவை நெருங்கி செல்லலாம்…..என்றெல்லாம் கணக்குப் போட்டுக் கொண்டு காத்திருப்பதற்குப் பதிலாக அரசியல் களத்தில் செயல்படும் ஒரு தரப்பாக தமிழ் மக்கள் தங்களைக் கட்டியெழுப்ப வேண்டும். அப்படிக் கட்டியெழுப்பும் போது தங்களைச் சந்திக்க வரும் ராஜ தந்திரிகளிடம் முறைப்பாடுகளையும் வேண்டுகோள்களையும் முன்வைப்பதற்குப் பதிலாக நிபந்தனைகளை முன் வைக்கலாம்; பேரம் பேசலாம். https://athavannews.com/2024/1371208- மாலத்தீவு சென்றுள்ள சீன கப்பல் ஒரு மாதம் மறைந்திருந்தது ஏன்? இந்தியா என்ன செய்கிறது?
இந்தியாவின் எதிர்ப்பை மீறி மாலைதீவில் நங்கூரமிட்டது சீனக் கப்பல்! கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் சர்ச்சைக்குரிய சீன ஆராய்ச்சிக் கப்பல் மாலைத்தீவில் நங்கூரமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து சீனா கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருவதாக இந்தியா குற்றம் சுமத்தியுள்ளதுடன், தனது கடும் கண்டனத்தினையும் வெளியிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பிராந்திய அரசியல் நெருக்கடிக்கு மத்தியில் சீனக் கப்பல் மாலைத்தீவு சென்றுள்ளதுடன், மாலைத்தீவு இந்தியாவுடன் முரண்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தலைநகர் மாலேக்கு அருகிலுள்ள திலாஃபுஷி தொழில்துறை துறைமுகத்தில் சீனாவின் Xiang Yang Hong 3 ஆராய்ச்சிக் கப்பல் நிறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பணியாளர்களுக்குத் தேவையான பொருட்களை பெற்றுக்கொள்வதற்காக குறித்த சீனக் கப்பல் வஜியம் செய்துள்ளதாக மாலைத்தீவு அரசாங்கம் தெரிவித்துள்ளது. எனினும், குறித்த சீனக்கப்பல் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவதுடன், இந்தியப் பெருங்கடலில் சீனாவின் செல்வாக்கு அதிகரித்து வருவதாகவும், இந்தியா குற்றம் சுமத்தியுள்ளது. இதேவேளை, இந்தியாவின் எதிர்ப்பினையடுத்து குறித்த ஆய்வுக் கப்பலிற்கு இலங்கை அனுமதி மறுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1371192- தமிழர் பாரம்பரிய மாதத்தை கொண்டாடிய IBMS
அதே… நானும் கேட்க நினைத்தேன், நீங்கள் கேட்டு விட்டீர்கள். 🤗 நெடுக்கருக்கு…. சுய விளம்பரம் பிடிக்காது என நினைக்கின்றேன். 😂- நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?
நாரதர் வேலை பார்க்கும்... சுமந்திரன் என்று, கருத்தோவியம் வந்துள்ளது. 😂 🤣- கருத்து படங்கள்
நாரதர் வேலை பார்க்கும்... சுமந்திரன் என்று, கருத்தோவியம் வந்துள்ளது. 😂 🤣- இரசித்த.... புகைப்படங்கள்.
- கருத்து படங்கள்
- கருத்து படங்கள்
- ஆரம்பப்பிரிவு மாணவர்களுக்கு இலவச உணவு வழங்க நடவடிக்கை!
ஆரம்பப்பிரிவு மாணவர்களுக்கு இலவச உணவு வழங்க நடவடிக்கை! ஆரம்பப்பிரிவில் கல்வி கற்கும் அனைத்து மாணவர்களுக்கும் அடுத்த மாதம் முதல் இலவச உணவு வழங்க நடவடிக்கை எடுக்கப்படுமென கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. நாட்டில் அதிகளவான சிறுவர்கள் ஊட்டச் சத்துக் குறைப்பாட்டினால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அண்மையில் வலியுறுத்தியிருந்த நிலையிலேயே அரசினால் இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய தரம் 1 முதல் 5 வரை கல்வி பயிலும் 17 இலட்சம் மாணவர்களுக்கு இலவச உணவு வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1370800- இரசித்த.... புகைப்படங்கள்.
- கருத்து படங்கள்
- இலங்கை- இந்திய கடல் போக்குவரத்தை ஊக்குவிக்க விசேட நடவடிக்கை
இலங்கை- இந்திய கடல் போக்குவரத்தை ஊக்குவிக்க விசேட நடவடிக்கை. இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் கடல்வழிப் பயணிகள் போக்குவரத்தை ஊக்குவிப்பதன் மூலம் இருநாடுகளுக்கிடையில் சுற்றுலாப் பயணிகளுக்கு அணுகக்கூடிய இயலுமையை அதிகமாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சுற்றுலாத்துறையை ஊக்குவித்தல், மேம்படுத்தப்பட்ட தொடர்புகள் மூலம் கலாச்சார பரிமாற்றங்கள், கல்வி, சமய, கலாச்சார செயற்பாடுகள், கலை, விளையாட்டு போன்ற துறைகளில் ஒத்துழைப்புக்களை ஊக்குவிப்பதற்கும் இதன் ஊடாக இயலுமை உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. அதற்காக குறைந்த செலவிலான சுற்றுலா மற்றும் போக்குவரத்துக் கட்டண முறையொன்றை அறிமுகப்படுத்த வேண்டியுள்ளது. அதற்கமைய பயணிகள் போக்குவரத்துப் படகுகள் மற்றும் கப்பல்கள் மூலம் இலங்கையிலிருந்து வெளியேறிச் செல்லும் பயணிகளிடமிருந்து தற்போது அறிவிடப்படும் வெளிச்செல்லல் வரி முறையே 5 அமெரிக்க டொலர்கள் மற்றும் 20 அமெரிக்க டொலர்களாகக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், படகுப் பயணி ஒருவருக்கு 60 கிலோகிராம் வரையான பயணப் பொதிக் கட்டணத்தை இலவசமாக வழங்குவதற்கும் துறைமுகங்கள், கப்பல்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. https://athavannews.com/2024/1370628- கொவிட் தடுப்பூசிகள் குறித்து வெளியான அதிர்ச்சித் தகவல்!
கொவிட் தடுப்பூசிகள் குறித்து வெளியான அதிர்ச்சித் தகவல்! பைசர் (Pfizer), மொடர்னா (Moderna) மற்றும் அஸ்ட்ராஜெனிகா கொவிட் -19 (AstraZeneca Covid-19) தடுப்பூசிகளை செலுத்திக்கொண்டவர்களுக்கு இதயம், மூளை மற்றும் இரத்தம் உறைதலில் அரிதான பக்க விளைவு ஏற்பட்டுள்ளமை ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக சுகாதார அமைப்பின் ஆராய்ச்சிப் பிரிவான குளோபல் வாக்சின் டேட்டா நெட்வொர்க் நடத்திய ஆய்விலேயே குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அந்தவகையில் தடுப்பூசி செலுத்திக் கொண்ட ஆர்ஜென்டினா, அவுஸ்திரேலியா, கனடா, டென்மார்க், பின்லாந்து, பிரான்ஸ், நியூசிலாந்து மற்றும் ஸ்காட்லாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த 99 மில்லியன் மக்களிடம் குறித்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது பைசர், மோர்டானா மற்றும் அஸ்ட்ராஜெனெகா கொவிட் தடுப்பூசிகளை செலுத்திக் கொண்ட மக்களிடம் 13 வகையான நோய்கள் இனம்காணப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2024/1370662- கருத்து படங்கள்
ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் நிறைவேற்று அதிகாரத்தை ஒழிக்க திட்டம்.????- இனங்களுக்கிடையில் முரண்பாடுகளை ஏற்படுத்துவது அரசியல்வாதிகளே – ஸ்ரீ சுமங்கல நஹிமியன் தேரர்!
இனங்களுக்கிடையில் முரண்பாடுகளை ஏற்படுத்துவது அரசியல்வாதிகளே – ஸ்ரீ சுமங்கல நஹிமியன் தேரர்! இனங்களுக்கிடையில் முரண்பாடுகளை ஏற்படுத்துவது அரசியல்வாதிகளே என மல்வத்து பிரிவின் பிரதம தலைவர் அதி வணக்கத்திற்குரிய திப்பட்டுவே ஸ்ரீ சுமங்கல நஹிமியன் தேரர் தெரிவித்துள்ளார். உண்மை, ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்கத்திற்கான ஆணைக்குழுவின் பிரதிநிதிகள் குழுவை சந்தித்த போதே அவர் இதனை தெரிவித்தார். தொடர்ந்து அவர் தெரிவிக்கையில் “நல்லிணக்கத்துடன் வாழ்ந்த மக்கள் மத்தியில் இன, மத முரண்பாடுகளை உருவாக்க பேராசை பிடித்த அரசியல்வாதிகள் முனைப்பு காட்டினர். மேலும் “தேசிய ஒற்றுமையை உருவாக்க பல விடயங்களைச் செய்யும் போது, இந்த அரசியல்வாதிகள் இவற்றை அழிக்கிறார்கள், ஒற்றுமையை அழிக்கிறார்கள். இன்று மரத்துடனும் கல்லுடனும் பேசுவது போல் உள்ளது. அது பரவாயில்லை. இப்போது நிறைவேற்று ஜனாதிபதி பதவியை ஒழிக்க வேண்டும் என்று பேசுகின்றனர் இவர்கள் எப்போதும் மக்களை ஏமாற்றுகிறார்கள். வாக்குகளுக்காகக் காத்திருந்து நாட்டை அபிவிருத்தி செய்வதில் நம்பிக்கை இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார். https://athavannews.com/2024/1370492- காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் தேரரும் பங்கெடுப்பு!
காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் தேரரும் பங்கெடுப்பு! வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளுக்கு நீதி கோரி கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்பாக பொதுமக்களால் இன்று போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. இப் போராட்டத்தில் தேரர் ஒருவரும் பங்கேற்று இருந்தார். காலை 10.30 மணியளவில் ஆரம்பமான குறித்த போராட்டமானது டிப்போ சந்தி நோக்கி A 9 வீதி ஊடாக பயணிக்கவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சியில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளுக்கு நீதி கோரி, அவர்களது உறவுகளால் கடந்த 7 வருடங்களாக தொடர்ச்சியாகப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1370535- கருத்து படங்கள்
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.
- தமிழ் மக்களும் ராஜதந்திரிகளும்! நிலாந்தன்.