Everything posted by தமிழ் சிறி
-
தமிழ்சிறி... சுட்ட, முறுக்கு. (தொடரும்... சிறு கதை)
இது.. முறுக்கு, சுடத் தெரியாத... கந்தையா அண்ணை, வயித்து எரிச்சலில், பதிந்த பதிவு என்பது... அப்பட்டமாக தெரிகிறது.... வாவ்... அந்த, வயித்தெரிச்சல்தான் நாம், எதிர் பார்த்தது.
-
தமிழ்சிறி... சுட்ட, முறுக்கு. (தொடரும்... சிறு கதை)
வாத்தியார்.... எனக்கு, ஒரு துரும்பு கிடைத்தால்... ஈயை... பெருமாள், ஆக்கும் சக்தியை... யாழ். களம் கற்றுத் தந்தது. முறுக்கு தொடர்... இன்னும், முடியவில்லை. சுவராசியமான பகுதிகள்.... இன்னும் உள்ளது. "அப் வாட்டன்".... 😂 டிஸ்கி: "அப் வாட்டன்".... _____ வெயிட் & சீ.... 🤣
-
தமிழ்சிறி... சுட்ட, முறுக்கு. (தொடரும்... சிறு கதை)
எங்களிடம் ஒரு... இட்டலி சட்டி ஒன்று உண்டு. ❤️ அதுக்கு.... பெரிய கதை உள்ளது. மனைவியின் தாலிக்கொடி செய்ய.... வடக்கு ஜெர்மனியில், உள்ள... "டோட்முண்ட்" நகருக்கு, செல்லும் போது.... அந்த மனிதர், அன்பளிப்பாக தந்த பொருட்களில்... சாமிப் படம், இட்டலி சட்டி என்று... பல பொருட்களை தந்தார்... 🙏 அவரை... எனக்கு, முன் பின் தெரியாது.... இங்கு... வந்து... எத்தனையோ... வீடு மாறிய பின்பும், அவை... என்னுடன் தொடர்ந்து வந்து கொண்டிருந்த... பொருட்கள். அவற்றை... இனி, நான் இழக்கத் தயாரில்லை. எப்படி இருந்தாலும், இரண்டு மூன்று மாதத்துக்கு ஒரு முறை இட்டலி அவிப்போம். இப்பவும்... அது, புதுசாக இருக்கும். 💕
-
தமிழ்சிறி... சுட்ட, முறுக்கு. (தொடரும்... சிறு கதை)
அடி... ஆத்தீய்... அந்தாள் வந்தால், தனக்கு, முறுக்கு... தரவில்லை என்று, சன்னதம் ஆடி விடும். 😂 டிஸ்கி: பரவாயில்லை சொல்லி விடுங்கோ... குமாரசாமி அண்ணை. என்ன.. செய்யிறார் எண்டு பாப்பம். ஹா... ஹா... ஹா.... Funny 😜
-
தமிழ்சிறி... சுட்ட, முறுக்கு. (தொடரும்... சிறு கதை)
நிலாமதி அக்கா... முறுக்கு மா, சரியாய் இறுகிப் போய்.... எங்களுக்குள், கொஞ்ச... மனப் பதட்டம் வந்து விட்டது. அதனால்... வட்டமாக சுடாமல், வந்த போக்கிலை.... எப்படியும், நாங்கள் தானே, சப்பி.... சாப்பிடப் போகிறோம் என்ற துணிவில்... மனம் போன மாதிரி... பிழிந்து விட்டோம். டிஸ்கி: கோழி.... குருடாக, இருந்தாலும்... குழம்பு ருசியாக இருக்க வேணும் கண்டியளோ.... 🤣
-
தமிழ்சிறி... சுட்ட, முறுக்கு. (தொடரும்... சிறு கதை)
உண்மையாகவா... நன்றி, கிருபன் ஜீ... ❤️ அந்த முறுக்கு உரலுக்கு... 30 வயது. அதில் உள்ள... பிளாஸ்ரிக் கோப்பைக்கு, 24 வயசு. எழுத வெளிக்கிட்டால்... ஒவ்வொன்றும், ஒரு கதை சொல்லும்.
-
தமிழ்சிறி... சுட்ட, முறுக்கு. (தொடரும்... சிறு கதை)
ஓம்... சுவியர், அந்த ஒரு மன ஆறுதலுக்காக.... கருத்து... எழுதுபவர்கள் குறைவு என்றாலும், குமாரசாமி அண்ணை போன்றவர்களின்.... ஊர் பாசையை கேட்க... யாழ். களத்திற்கு... தினமும் மூன்று ஆயிரம் ஆட்களாவாது வருவார்கள். அது... ஈழம் மட்டுமல்ல... தமிழகம் சார்ந்து, விரிந்த பேச்சு மொழி. நாம்... அதனை, குறுகிய குடத்துக்குள் அடக்கி வைப்பது சரியல்ல.
-
தமிழ்சிறி... சுட்ட, முறுக்கு. (தொடரும்... சிறு கதை)
சுவியர்... மிக வித்தியாசமான, ஆனந்த உணர்வுடன் உள்ளேன். முறுக்கு... சுட்ட கஸ்ரம் ஒரு பக்கம், இருக்க... படங்கள்... இணைக்கும், கஸ்ரம்... மூளைக்கு அதிக வேலை கொடுத்து விட்டது. கிருபன் ஜீ... இயலுமானவரை அவசர உதவி செய்தார். அதனை... என்றும் மறக்க முடியாது. யாழ். களம் படங்களை இணைப்பதில், பயங்கர கட்டுப்பாடுகளை வைத்துள்ளது போல் தோன்றுகின்றது. அது... அவர்களின் நிர்வாகம் சம்பந்தப் பட்ட விடயம் என்றாலும், என்னை... உலுக்கி எடுத்துப் போட்டுது.
-
தமிழ்சிறி... சுட்ட, முறுக்கு. (தொடரும்... சிறு கதை)
ஹாய்யா... என்ரை, முறுக்கு படமும், முறுக்கு உரலும்... யாழ். களத்திலை வந்துட்டுது. 🥰
- தமிழ் சுட்ட முறுக்கு
-
6F727D93-ED4E-49A2-86CD-00B9339A23DE.jpeg
From the album: தமிழ் சுட்ட முறுக்கு
-
FF694F7A-FAA5-4783-BB35-C7562CB125F2.jpeg
From the album: தமிழ் சுட்ட முறுக்கு
-
C556F574-B96C-4DA8-A6F6-627EACC6CECE.jpeg
From the album: தமிழ் சுட்ட முறுக்கு
-
321009DC-C857-484A-ADA3-B91966C653C3.jpeg
From the album: தமிழ் சுட்ட முறுக்கு
-
தமிழ்சிறி... சுட்ட, முறுக்கு. (தொடரும்... சிறு கதை)
ஈழப் பிரியன், முறுக்கை மட்டுமல்ல... முறுக்கு உரலையும் காட்ட முயற்சி செய்து கொண்டிருக்கின்றேன். படம் பெரிதாக உள்ளதென்று, யாழ். களம் ஏற்க மறுக்குது, எப்படியும்... வேறு முறைகளிலாவது.... படத்தை இன்று, இணைப்பேன்.
-
தமிழ்சிறி... சுட்ட, முறுக்கு. (தொடரும்... சிறு கதை)
இப்போ...எங்கள், முறுக்கு சுடும் கோஸ்டி... சாப்பாட்டு மேசையில் இருந்து, போட்ட "பிளான்" படி... முறுக்கு சுட்ட இறுமாப்பில், குசினிக்குள்.... நெஞ்சை நிமிர்த்தி நகர்ந்து... ஒரு கிலோ, கடலை மாவையும்... பெரிய பிளாஸ்ரிக் பாத்திரத்தில் கவிட்டு கொட்டியது. எடுத்த கணக்கின் படி.... கோதுமை மா, வறுத்த எள்ளு, மிளகாய்த் தூள், உப்பு எல்லாவற்றையும் போட்டு விட்டு... மனிசியை நிமிர்ந்து பார்த்தேன். அவளின் முகத்தில்... எல்லாம், திருப்தி என்ற மாதிரி... தலை ஆட்டினாள். இஞ்சையப்பா... இதுக்குள்ளை, கொஞ்ச... சின்னச் சீரகம் போடுவமோ... என்று கேட்ட போது, (எனது மனைவி, சில வேளை... அப்பா... என்று கூப்பிடுவார். ஆசையாக இருக்கும்.) "நோ" என்று சொல்லி, அவளின் ஆசையை, நிராகரித்து விட்டேன். ஏனென்றால்... முறுக்கு, பிழியும் போது... அது, வேறை அடைத்து விடும் என்ற பயம். எல்லாம்.... போட்டாச்சு, நீங்கள் மெல்லமாக தண்ணியை ஊத்துங்கோ... நான், குழைக்கின்றேன் என்று சொல்ல, சுடு தண்ணியை... கொண்டு வந்து ஊத்திய போது, திரும்பவும்... நிகேயின்... "பத்து நிமிட காணொளியை" பார்த்து, அது... "இளம் சூடான சுடு தண்ணீர் என்று, உணர..." காலம், கடந்து விட்டது. மாவை.... குழைத்தால், கழி மாதிரி இருக்கு. அடுப்பில் எண்ணை.... சூடாக, கொதித்துக் கொண்டிருக்கின்றது. என்னுடைய... கை, "பசை" ஒட்டின மாதிரி இருக்கு.
-
தமிழ்சிறி... சுட்ட, முறுக்கு. (தொடரும்... சிறு கதை)
நாங்கள் முறுக்கு சுடும், விசயத்தை.... திண்ணையில் போட்டு, சனத்துக்கு... பீலா, விட்டுக் கொண்டிருந்ததை பார்த்த நிழலிக்கும்..... "கடுப்பு" வந்திருக்க வேணும் போலை... உடனே.. அவர், இதனை.... சுய ஆக்கங்கள் பகுதியில் படத்துடன் பதியச் சொல்லி.. திண்ணையில் எழுத, எனக்கும் ஆசை... என்று சொல்லி, கிருபன்ஜீ டம் அந்த முறைகளை பெற்று வைத்துள்ளேன். தொடர்... முடிய முதல், அந்தப் படங்களை, மனைவியின் அனுமதியுடன் இணைப்பேன்.
-
தமிழ்சிறி... சுட்ட, முறுக்கு. (தொடரும்... சிறு கதை)
ஓகே.... பிரண்ட்ஸ், நாங்கள் தொடர்ந்து முறுக்கு, சுடுவோம். ஆறு மாதத்திற்கு முன்பு, ஆசைப் பட்டு வாங்கின "கடலை மா..." அதன், ஆயுட்கலாம்... முடிய, இன்னும் இரண்டு கிழமைகள் உள்ளது. நான்... எப்போதும் உணவுப் பொருட்களை, வீண் செய்யாத மனப்பான்மை உள்ளவன். இப்போ... 11 நாள் விடுமுறை. நல்ல, சந்தர்ப்பம் கிடைத்துள்ளது என்று.... நிகேயின்... "பத்தே நிமிடத்தில்... செய்யும், கடலை மா முறுக்கு" செய்வோம் என்று... மனைவியிடம்.... "அம்மாச்சி" இண்டைக்கு, கடலை மா முறுக்கு செய்வோம் என்று, பன்மையில் கேட்டேன். (பன்மையில்... கேட்பது, எப்பவும் நல்லது. ஏனென்றால்... முறுக்கு சரி வராவிட்டால், நான் தப்பித்துக் கொள்ளலாம்) அதனை... திடீரென்று, கேட்ட போது... அவளுக்கு, பயங்கர "கொதி" வந்து, உங்களுக்கு என்ன விசரோ... என்று பேசினாள். நான்... வீட்டில் இல்லாத நேரம், அவள் பார்க்கும் "தொலைக்காட்சி" நாடகங்கள், தவறிப் போய் விடுமே... என்ற கவலை, அவளுக்கு. ஒரு... மாதிரி, சமாளித்து அவளை என் வழிக்கு கொண்டு வந்து... முறுக்குக்கு "மா" குழைக்க ஆரம்பித்தோம். அந்த இடைவெளியில்... மனைவி, கனடாவில் உள்ள சகோதரிக்கும், சுவிஸில் உள்ள மகளுக்கும்.... நாங்கள்.... "முறுக்கு, சுடப் போகின்றோம்" என்று.. குறுஞ் செய்தியை அனுப்பி விட்டார். அவர்கள்..... அத்தான், அப்பா... "குட் லக்" என்ற செய்தி வந்து சேர்ந்து விட்டது. இடையில்... நிகேயின், சமையல் குறிப்பின் படி, என்ன செய்ய வேண்டும் என்பதனை..... திரும்ப, திரும்ப, திரும்ப... மனப் பாடமாக்கி.... எனக்குத் தெரிந்த, கணித முறைப்படி... ஒரு அட்டவணை தயாரித்து... எம்மிடம் இருப்பது.... ஒரு கிலோ கடலை மா. அதுக்கு... எவ்வளவு, அவித்த கோதுமை மா.... மஞ்சள், எள்ளு, உப்பு, மிளாகாய்த் தூள், எண்ணை.... சுடு தண்ணி... என்ன பதம்...... என்றெல்லாம் கணக்குப் பார்த்து, முடிக்க.... ஒரு மணித்தியாலம் போய்... விட்டது.
-
தமிழ்சிறி... சுட்ட, முறுக்கு. (தொடரும்... சிறு கதை)
ஏராளன்... வேண்டாம். அப்பிடி எல்லாம், கேட்கக் கூடாது. 🤣
-
சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
- கொஞ்சம் சிரிக்க ....
- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
ஒரு பக்க... "கிட்னியை" விற்று, மோட்டார் சைக்கிள் வாங்கிய... நேபாளி. 😎- தமிழ்சிறி... சுட்ட, முறுக்கு. (தொடரும்... சிறு கதை)
சிரிக்க வைத்தும், கழுவி ஊத்தியும் ... கருத்துக்களைப் பகிர்ந்தும் ஊக்கம் தந்த, அன்பு உறவுகளான.... கந்தையா அண்ணை, யாயினி, சுவி, ஈழப் பிரியன், வாத்தியார், புத்தன், நிகே, ஜெகதா துரை, சபேஷ், நிலாமதி அக்கா, பாஞ்ச் அண்ணை, குமாரசாமி அண்ணை, பசுவூர் கோபி, கிருபன் ஜீ, நுணாவிலான், சுவைப் பிரியன், நந்தன், உடையார், புங்கையூரன், ஏராளன்... ஆகியோருக்கு, இதய பூர்வமான நன்றிகள். 🙏 இப்ப... இரண்டாவது பகுதி எழுத ஆரம்பித்துள்ளேன். ✍️ ப்ளீஸ்... தொடர்ந்து, கழுவி ஊத்தவும். 🤣- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
வாதவூரானுக்கு.... எமது, இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். 🎂 🎈 🎉- நாங்களும் அரசியல் அலசுவோமல்ல
புங்கையூரான்... அறியாத பல விடயங்களை, தொகுத்து தந்தமைக்கு நன்றி. 🙏 - கொஞ்சம் சிரிக்க ....
Important Information
By using this site, you agree to our Terms of Use.