Everything posted by theeya
-
அங்கீகரிக்கபடாத நாடுகளின் மாபெரும் உதைபந்தாட்ட இறுதிப் போட்டியில் தமிழீழ மகளிர் அணி
கொனீபாவின் (CONIFA) இரண்டாவது மகளிர் உலகக்கிண்ண உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி இம்முறை ஆர்க்டிக் வட்டத்திலுள்ள வடக்கு நோர்வேயில் நடைபெருக்கிறது. இன்றைய இறுதிப் போட்டியில் தமிழீழ மகளிர் உதைபந்தாட்ட அணி ஸாம்பி மகளிர் உதைபந்தாட்ட அணியை எதிர்கொள்கிறது.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
யார் தோற்றாலும் எனக்கு பரவாயில்லை ஆனால், இன்றும் 4 புள்ளிகள் போய்விட்டது 🤣
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
இருக்கலாம் ஆனால் இதே ஆடுகளத்தில் தான் அமெரிக்கா கனடாவை துரத்தி வெற்றி பெற்றது
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
அப்ப அவையள் playoff சுற்றில அமெரிக்காவுடன் மோதுவினமோ? உங்கட 7ஆம் அறிவு என்ன சொல்லுது?
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
நான் SL அணி விசிறி இல்லை, ஆனாலும் SL பசங்களே ஏதோ பாத்துச் செய்யுங்கடா. பாம்பு நடனம் சகிக்க முடியாது
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
“ஆடத் தெரியாதவன் மேடை கோணல் என்றானாம்” டி20 உலகக் கோப்பை: இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு முன்னதாக நியூயார்க் பிட்ச் பிரச்சனைகளை 'பரிகாரம்' செய்வதாக ஐசிசி உறுதியளித்துள்ளது. நேற்று வந்த கனடா அணியே தூக்கித் தூக்கி அடிக்கிறார்கள் ஆனால் இந்தியா பாகிஸ்தான் ஆட்டத்துக்கு முன் ஆடுகளத்தை சரிசெய்ய வேணுமாம்.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
விளையாட்டாக இருந்தாலும் அதில் சாதி இல்லை மதம் இல்லை நீ நான் என்ற பேதமில்லை ஐக்கியம் ஒன்றே குறிக்கோள் எனக்கொண்ட ஐக்கிய அமெரிக்கா ஐக்கியம் வென்றது
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
அப்பிடிச் சொல்ல முடியாது. இங்கிலாந்து தென் ஆபிரிக்கா உட்பட பெரும்பாலான நாடுகளின் போட்டிகளில் அவர்களின் உள்ளூர் நேரப்படி மாலையில் நடக்கின்றன. உதாரணமாக நாளை நடைபெற உள்ள அயர்லாந்து போட்டி, நியூசிலாந்து போட்டி, ஆவுஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து போட்டிகள் அந்தந்த நாடிகளின் காலை அல்லது மாலை வேளைகளை கணக்கில் கொண்டே நடக்கின்றன.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
உவர் @ஈழப்பிரியன் Texas க்கு கிட்ட தான் இருக்கிறார். எப்பிடி அமெரிக்கா வெல்லும் என்று கணித்தார்🤪 எனக்கென்னவோ உவர்தான் உள்ளுர் சூதாட்ட தரகரோ என்று சந்தேகமாய் இருக்குது🤣
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
ஆம் இப்ப எனக்கு 2:25 PM, பார்த்துக்கொண்டுதான் இருக்கிறேன்> One more சூப்பர் ஓவர் again this world cup. 🤣 அமெரிக்கா போன்ற கத்துக்குட்டி அணியுடன் சூப்பர் ஓவர் வந்ததே பாகிஸ்தான் போன்ற பெரிய அணிகளுக்கு தோல்வியே. எனக்கு புள்ளி வேண்டாம் பாகிஸ்தான் தோற்கட்டும்
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
எனக்கு 2 புள்ளி வாறதுக்காக என்றாலும் பாகிஸ்தான் வெல்ல வேணும் 🤣
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
$300
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
இல்லயெண்டால்...🤣🤣🤣
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
ஐயாவையும் சேர்த்துதான் சொல்லுறியள் போல😃 4 முட்டைக்கு ஓடர் பண்ணுறேன் 🤣
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
சூப்பர் ஓவர் வந்தால் செல்லாது 🤣🤣🤣 சூப்பர் ஓவர் வந்தால் செல்லாது 🤣🤣🤣
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
அமெரிக்காவால் முதல் 8 வருக்கு 48 ஓட்டங்கள்தான் அடிக்க முடிந்தது. ஒரு கட்டத்தில் TV யை நிப்பாட்டிட்டு படுப்போம் என்று பார்த்தேன். ஆனால் அதன்பின் ஆரோன் ஜான்ஸின் சரவெட்டியாட்டம் அமெரிக்காவை வெல்ல வைத்தது.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
முதல் 8 ஓவர்களில் கனடாவின் பக்கம் இருந்த ஆட்டம் அடுத்த 5 வர்களில் அமேரிக்கா பக்கம் திரும்பியது. முதல் போட்டியில் என் கணிப்பு வென்றது🤣
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
USA going to be WIN😄
-
பெற்றோர் வடிவில் கடவுள்
ஜூன் 1, 2024 இன்று உலக பெற்றோர் தினம் போரில் வாழ்ந்த குழந்தைகள் போல் போருள் வாழ்ந்த பெற்றோரும் பரிதாபத்துக்குரியவர்களே குண்டுகள் மழை போலப் பொழியத் தொடங்கின இடியோசை மரண பயத்தைத் தந்தது குழந்தைகளின் பெறுமதியான நாட்கள் பதுங்குகுழிகளில் கழிந்தன இரைதேடும் பருந்திடம் இருந்து குஞ்சுகளைக் காப்பாற்ற பறவைகள் போராடின ஒருநாள் பெற்றோர் வடிவில் கடவுள் பூமிக்கு இறங்கி வந்தார் பானையில் எஞ்சியிருந்த பழைய சோற்றை கவளமாகக் திரட்டி குழந்தைகளுக்குக் கொடுத்தார் எஞ்சிய சோற்றில் ஒருபிடி தானுண்டு சிறுபசியாறினார் அன்றைய நாளின் பின்னிரவில் பதுங்கு குழியை குழந்தைகள் நிறைத்தனர் பதுங்குகுழி வாசலில் அமர்ந்தபடி ஆசீர்வதிக்க தன் குழந்தைகளுக்காக அவர்களின் பெற்றோர்கள் கடவுளிடம் பிரார்த்தனை செய்துகொண்டிருந்தார்கள் தியா - காண்டீபன்
-
டொனால்ட் டிரம்ப் அனைத்து 34 குற்றச் சாட்டுகளிலும் குற்றவாளி.
அமெரிக்கச் சட்டத்தின்படி அவர் போட்டியிடுவதிலோ அல்லது ஜனாதிபதியாக வருவதையோ இந்தத் தீர்ப்பு பெரிதாகத் தாக்கத்தை ஏற்படுத்தும்போலத் தெரியவில்லை. ஆனால், குடியரசுக் கட்சித் தலைமை நினைத்தால் இவரை நீக்கிவிட்டு இன்னொருவரை பிரேரிக்க முடியும். ஆனால், இவை எல்லாம் அடுத்த 40 நாட்களுக்குள் சாத்தியமா என்றால் கேள்விக்குறியே
- சற்றே விலகி இருப்போம்
-
சற்றே விலகி இருப்போம்
வாழ்க்கை ஒருவழிச்சாலை பயணத்தின் இடையே நாம் பலரைக் கடந்து போகிறோம் சிலர் தொடர்ந்து வருபவர்கள் பலர் கடந்து செல்பவர்கள் மேலும் சிலர் எம்மை உளவு பார்ப்பவர்கள் மனித மனங்கள் விசித்திரமானவை நட்சத்திரங்கள் போல் வித்தியாசமானவை துரதிர்ஷ்டவசமாக யாரும் பார்க்க முடியாதவை எல்லோரும் எல்லோரையும் ஏற்றுக்கொள்ள முடியாதென்ற தத்துவம் நாமறிவோம் ஆதலால் நாம் நம் இலட்சியங்களை இழிவுபடுத்த முயற்சிக்கும் நபர்களிடமிருந்து சற்றே விலகி இருப்போம் தியா - காண்டீபன்
- புனைபெயர்
-
புனைபெயர்
எப்போதாவது உங்களை புனைப்பெயர் சொல்லி இன்னொருவர் அழைத்ததுண்டா எப்போதாவது உங்கள் பெயரை உச்சரித்த நாட்களை விட புனைபெயரை அதிகம் உச்சரித்ததுண்டா அவரவர் வாழ்வில் பட்டப் பெயராகவோ செல்லப் பெயராகவோ ஒரு புனை பெயர் இருந்திருக்கக் கூடும் பிடித்த தலைவர், பிடித்த நபர் பிடித்த நதி,பிடித்த மலை அன்றேல் பிடிக்காமல் போன எது வேண்டுமானாலும் புனை பெயராக இருக்கலாம் முன்னொரு நாளில் விரும்பி நான் சூட்டிக் கொண்ட என் புனைபெயர் அண்மைய நாட்களில் அடிக்கடி என் பெயரை மறக்கச் செய்கிறது தியா - காண்டீபன்
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
பல கத்துக்குட்டி அணிகள் இம்முறை அதிர்ச்சியளிக்க அதிக வாய்ப்புண்டு