Jump to content

vasee

கருத்துக்கள உறவுகள்
 • Posts

  888
 • Joined

 • Last visited

 • Days Won

  1

Everything posted by vasee

 1. இது தங்கத்தின் வரைபடம் ( கால அளவு தினம் அல்ல வாரம்), முன்பு ஏற்கனவே குறிப்பிட்டிருந்த (XRP வரைபடம்) Symmetric Triangular Chart Pattern. இதன் பொதுவான அமசம் Trend continuation Pattern, தற்போது இது தங்கத்தில் Up trend இல் காணப்படுகிறது. பொதுவாக விலை மேலாக உடைக்கும் (Break out) ஆனால் விதி விலக்குகளும் உண்டு. குறுங்கால வர்த்தகர்கள் இதன் உடைப்பின் பின்னரே வர்த்தகத்தில் ஈடுபடுவர் (Break out Traders). இந்த வரைபடம் விலை மேலாக உடைக்கும் என கோடிகாட்டி விட்டது, ஆனாலும் உடைப்பின் பின்னர் வர்த்தகத்தில் ஈடுபடுவது சரியானது. மேற்குறிப்பிட்ட விடயம் சரியாக இருப்பின் அமெரிக்க டொலர் சரிவு ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புகள் உண்டு, அப்படி அமெரிக்க டொலர் சரிவு ஏற்படுவதற்கு ஏற்ப ஏதாவது நிலவரம் உள்ளதா?
 2. உண்மையாக எனக்கு இந்த கிரிப்டோ தொடர்பான அடிப்படை அறிவு கூட கிடையாது, கிரிப்டோ trade செய்வதுண்டு, அது கூட 2 அல்லது 3 தடவை தான், யாழின் மூலமே அது நிகழ்ந்தது, தெளிவான விளக்கம். ஓரளவுக்கு புரிதல் ஏற்பட்டுள்ளது, நன்றி.
 3. கிரிப்டோ நாணயங்கள் தொடர்பாக எனக்கு எதுவும் தெரியாது , quantitative easing என்பது ஒரு நாட்டின் மத்திய வங்கி தனது நாணய வழங்கல்களை உள்நாட்டில் அதிகரிக்கும் நடவடிக்கையாகும், கிரிப்டோவுக்கும் quantitative easing என்ன சம்பந்தம் என்பது புரியவில்லை? கடஜ்சா. கிரிப்டோ நாணயத்தின் விலை கேள்வி வழங்கல் அடிப்படையில்தானே தீர்மானிக்கப்படுகிறது? stable கிரிப்டோ எவ்வாறு தீர்மானிக்கப்படுகிறது?
 4. பங்கு சந்தையில் ட்ரெண்ட் இனை உனது நண்பனாக்கு என்பார்கள், பேபால் இறங்கு முகமாக செல்கிறது (Down Trend) இறங்கு முகமாக செல்லும் போது அது Lower low மற்றும் Lower high என்ற அமைப்பின உருவாக்கும், தற்பொதய இறுதி Lower low 178 ஆகும், அதற்கு முன்னரான Lower low 200 ஆகும், Lower high 215 ஆகும். 200 மற்றும் 215 வலயங்களை வரைபடத்தில் நீல நிறத்தில் குறிப்பிட்டுள்ளேன். முதலில் குறிப்பிடும்போது பொதுவாக இறங்குமுகமாக உள்ள இந்த பங்கினை விற்பதற்கு 200,215 வலயம் முக்கிய வலயமாகும், வாங்குவதானால் 215 முக்கிய வலயமாகும். (மன்னிக்கவும் 200 அல்ல 215) அதனால்தான் கடந்த வாரம் குறிப்பிட்டது போல விலை குறித்த பகுதியில் (196) மட்டுபடுத்தப்பட்ட போது அந்த பங்கினை விற்றிருந்தேன், ஆனால் விலை 178 விட்டு கீழிறங்கினால்தான் பொதுவாக விற்பார்கள் ஏனெனில் தற்போது 178 பகுதிதான் Support.(Short @ 192 cover @ 188) Up trend என்பது Higher high and higher low தற்போதய Lower high 196 ஆகும், விலை 196 இனை கடந்தால் தொழில்னுட்ப ரீதியாக trend மாறிவிடும் (Down trend to Up trend).இது ஆரம்பகால மாற்றம் ஆகும்.உடனடியாக விலை ஏறுமுகமாக மாறிவிட்டது என எடுத்து கொள்ள முடியாது ஏனெனில் சில சமயம் விலை பக்க வாட்டாக நகர ஆரம்பிக்கும், ஆனால் இத்தகைய மாற்றமே ட்ரெண்ட் மாற்றத்தின் அடிப்படை. https://www.forex.academy/135-all-about-the-trending-market/ தற்போதய Lower high 196 ஆகும்,Lower low 178 ஆகும். விலை 196 கடந்தால் வாங்குவேன், விலை 178 விட கீழிறங்கினால் விற்பேன். நீங்கள் நீண்ட கால முதலீட்டு அடிப்படையில் வாங்குவதனால் அதனது பெறுமதியினை அடிப்படையாகக்கொண்டு வாங்குகிறீர்கள் (Warren Buffett போல), அதனால் குறுங்கால அடிப்படையில் ஏற்படும் விலை மாற்றங்கள் உங்களை பாதிக்காது, உங்களது பங்கு தொடர்பான ஆராய்சியினை Fundamental analysis என்பார்கள். மேலே நான் குறிப்பிட்டது குறுங்கால முறையில் முதலிடுவது (Technical analysis). ஆனால் Technical analysis தொடர்பான புரிதல் இருந்தால் உஙகள் நீண்டகால முதலீடு மிகவும் இலகுவாக இருக்கும் என்பது எனது கருத்து.
 5. ஈழப்பிரியன், பேபால் விலை Gap up விலை அதிஅகரிப்புடன் 192 கடந்து விட்டது,முதலில் விலை 192 மேலாக உயர்ந்து சென்றால் வாங்க எண்ணியிருந்தேன் பின்னர் அந்த உடைப்பின் போது பரிமாற்றப்பட்ட பங்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தமையால் வாங்கவில்லை விலை 200 முக்கியமாக உள்ளது இப்பகுதியில் விலை உயர்ந்தால் வாங்கலாம் என எண்ணி உள்ளேன் இல்லையெனில் விற்கலாம் என எண்ணியுள்ளேன். ஆனால் எந்த முடிவும் உறுதியாக இல்லை ஏனெனில் விற்பனை நேரத்தில் நித்திரை கொள்வேன், ஆனால் சந்தை முடியும் முன்பாக எழுந்துவிடுவேன்.
 6. பிட் கொயின் தற்காலிகமாக 62000 அடைந்தால் அதன் இறங்கு முகம் முடிவுக்கு வந்துவிடும், 52000 - 54000 விலை பகுதி விற்பதற்கான முக்கிய வலயமாகவுள்ளது விலை 54000 கடந்து மேலேறி 59000 அடைந்தால் பிட் கொயின் மீண்டும் பலமான நிலைக்கு வந்து விடும். உங்களது கணிப்பான 0.50 மிகவும் துல்லியமாக உள்ளது, Technical analysis பரிட்சயமில்லாமலே உங்களால் கணிக்க முடிந்த்துள்ளது. Technical analysis அடிப்படை அறிவு போதுமானது சந்தையில் சிறப்பாக செயல்பட முடியும், உங்களது Fundamental analysis உடன் Technical analysis பயன்படுத்தினால் சரியான Entry, Exit தீர்மானிக்கலாம் ஒப்பீட்டளவில் Fundamental analysis விட Technical analysis மிக இலகுவானது.
 7. இதனை Symmetrical Triangle Pattern என கூறுவார்கள். விலை அதிகரித்து செல்லும்போது விலையானது உயரும் போது மலை குன்று போலவும் அதே விலை இறங்கும் பள்ளத்தாக்கு போலவும் உருவாகும் இதனை Swing high, Swing low என சொல்வார்கள். இந்த குன்றுகளின் உச்சிகளை இணைத்து கோடு வரைந்தால விலை மேலிருந்து கீழ் நோக்கி சரிந்து செல்லும், அதேபோல் கீழே உள்ள பள்ளத்தாக்குகளை இணைத்து கோடு வரைந்தால் அந்த கோடு உயர்ந்து செல்லும். இந்த நிகழ்வானது விலை உயர்ந்து செல்லும் போது தற்காலிகமாக விலை ஒரு கூம்பு வடிவ நிலைக்கு செல்லும், ஒரு கட்டத்தில் விலை இந்த வடிவிலிருந்து உடைத்து மேலெழும், அதனால் இதனை Continuation pattern என அழைப்பார்கள். சில சமயம் விலை கீழிறங்கும், இந்த உடைப்பு கூம்பகத்தின் முதல் 33% விகிதத்தில் நிகழ்ந்தால் அதிக தாக்கம் ஏற்படுத்தும் என்பது ஒரு கணிப்பு அதனை விட குறைந்தால் அது போலியானதான உடைப்பு என்பார்கள். மேலோட்டமாக பார்க்கும் போது இந்த விலை கீழிறங்கல் போலியானதாக தோன்றுகிறதா? (30%-28%) தெரியவில்லை ஆனால் அதே சமயம் இந்த உடைப்பு உண்மையாகவிருந்தால் குறைந்த பட்சம் விலை 0.42 C அண்மிக்கலாம், 0.28C விலை மிகவும் பலமாக உள்ளதால் Stop loss 0.28C கீழ் போடலாம் என கருதுகிறேன். ஆனால் RSI over sold காட்டுகிறது விலை தற்காலிகமாகவாது மேலேறலாம், அது தற்காலிகமானது என எண்ணுகிறேன், எனது பார்வையில் அனைத்து கிரிப்டோவும் இறங்கு முக காலமாக இதனை நோக்குகிறேன் (Market cycle), பிட் கொயினை 54000 இல் விற்பதற்காக காத்திருக்கிறேன் (Trading with the Trend). பொதுவாக எனது கணிப்பு தவறானது, எது சரியென உங்களுக்கு தோன்றுகிறதோ அதனை செய்யுங்கள்.
 8. 29.11.21 பிட் கொயின் வர்த்தகத்தில் ஈடுபட்டேன், அதே தினம் யூரோ ஜப்பான் விற்றல் வர்த்தகமும் எடுத்திருந்தேன் , பிட் கொயினை 57000 விலையில் விற்றிருந்தேன், முன்பு பதிவிட்ட பதிவில் கூறியது போல 40000 வரை காத்திருக்கவில்லை மிக சிறிய இலாபத்துடன் அந்த வர்த்தகத்தை மூடிவிட்டேன்.
 9. பயமும் , பேராசையும் கொண்டதுதான் சந்தை உங்களைப்போல் சிலரால் மட்டுமே அதனை சந்தை ஆபாயத்தினடிப்படையில் அணுக முடிகிறது அதனால்தான் சந்தையில் வெற்றியாளராக முடிகிறது, இந்த நிலையில் நான் மட்டுமல்ல எனது வட இந்திய நண்பர்களும் இருந்திருக்கிறார்கள் அதில் குறிப்பாக ஒரு நண்பர் அவர் WHN எனும் சக்தி துறையிலுள்ள ஒரு நிறுவனத்தில் முதலிட்டிருந்தார் (6 அல்லது 7 வருடங்களுக்கு முன்னர்). அந்த காலகட்டத்தில் நான் தினவர்த்தகம் அவுஸ்ரேலிய பங்கு சந்தையில் ஈடுபட்டிருந்தேன், என்னிடம் அவர் கேட்டு கொண்டதன்படி ஒவ்வொரு தினம் சந்தை ஆரம்பிப்பதற்கு முன்னராக வட்ஸபில் எந்த நிறுவனங்களில் என்ன விலையில் வாங்குவது, அதன் Stop, take profit என்பதை தெரிவித்து விடுவதுண்டு. அவ்வாறு ஏற்கனவே வாங்கி விற்ற நிறுவனம்தான் அது, என் மூலமே அவருக்கு அந்த நிறுவனம் அறிமுகமானது, ஆனால் நான் குறித்த தினம் முடியும்போது என்னிடம் எந்த பங்குகளும் இருப்பதில்லை, இந்த பங்கினை வாங்கின எனது நண்பர் எவ்வாறு இந்த பங்கில் சிக்கினார் என்பது சரியாக நினைவில் இல்லை, பொதுவாக எனது நண்பர் எனது தகவலை திரட்டி என்னை விட அதிக விலைக்கு பங்குகளை பொதுவாக விற்றுவிடும் திறமைசாலி. அந்த பங்கினை ஆரம்பத்தில் என்ன விலைக்கு வாங்கினார் என்பது நினைவில்லை ஆனால் விலை குறைந்த பின் மீண்டும் ஒரு தொகுதி வாங்கினார்(Averaging down , Beginners mistake). இதன் மூலம் சராசரி விலை 1.2 C ஆக உள்ளதாகக்கூறுவார், அத்துடன் உன்னால்தான் இந்த பங்கில் சிக்கிக்கொண்டேன் என கூறுவார். அந்த பங்கின் விலை சில காலத்தினபின் அதிகரிக்க தொடங்கி ஒரு நாள் 1.9 C வியாபாரம் முடிவடைந்தது அந்த கால கட்டத்தில் அந்த பங்கின் அதிக பட்ச விலை 2.0 C ஆகவே எனது நண்பரிடம் சொன்னேன் அதை இலாபத்துடன் மறு நாள் விற்று விடுங்கள் என்று.அதற்கு அவர் சொன்னார் இல்லை இந்த பங்கு 14 C வரை செல்லும் அதனால் விற்கமாட்டேன் என்றார். மறு நாள் சந்தை ஆரம்பித்தி விலை 2.2 C வரை சென்றது அதன் வரைபடதை அவதானித்த போது Buying climax கவனிக்க முடிந்தது. எனது நண்பர் பணியிடத்திலிருந்தார் அவருக்கு தொலைபேசியில் நிலமையை கூறி என்ன செய்யப்போகிறீர்கள் என கேட்டேன் அவர் பதட்டப்படாமல் மீண்டும் கூறினார் இது 14 C போகும் என கூறினார், அதுதான் அவரது சிறப்பம்சம் என்னால் ஒரு அளவுக்குமேல் இலாபமோ நட்டமோ ஏற்பட்டால் பதற்றமடைந்துவிடுவேன் ஆனால் அவர் ஒரு திறமைசாலி. அன்றுதான் அதன் அதுயுச்ச விலை அதன்பின் நிகழ்ந்த சம்பவம் நினைவில் இல்லை, விலை நாளாக நாளாக தேய் பிறை போல் தேய்ந்து கடைசியில் அதன் விற்பனையை நிறுத்திவிட்டார்கள்.அதில் அவர் பெருந்தொகை பணம் இழந்ததாகக்கூறினார். மூன்றாம் நபராகப்பார்க்கும்போது எங்களால் உணர முடிந்த விடயங்கள் சம்பந்த பட்டவர்களாக இருக்கும் போது எமது மூளை அதனை அறிவுபூர்வமாக சிந்திக்க விடாது, கீழே உள்ள காணொளியில் உள்ள வயதானவர் நட்டத்தை குறைக்க அறிவுறுத்தும் போது கோபமடைகிறார்.
 10. உங்களது பதிவின் பின்னர் பேபாலை அவதானித்தேன், மிக குறுகிய காலத்தில் சில சாதக பண்புகள் தெரிகிறது 186 இறுதி விலையில் சந்தை மூடியுள்ளது, அத்துடன் விலை வீழ்ச்சி காலத்தில் அதிகமான பங்குகள் விற்பனையாகியுள்ளது, வாங்கும் தரப்பு வெவ்வேறு விலை மட்டங்களில் வாங்கியிருக்கலாம் ( பொதுவாக விலை பக்கவாட்டாக நகரும் ). இப்போது வழங்கல் விலை 192 உள்ளது விலை பொதுவாக இந்த புள்ளியில் திரும்ப சந்தர்ப்பம் உண்டு ( எனது கணிப்பு பெரும்பாலும் தவறாகவே உள்ளது) அது மீண்டும் 180 விலையின தொட முயற்சித்து அந்த விலையை உடைக்க முடியாவிட்டால் மீண்டும் மேலேறி 192 கடந்து 200 நோக்கி செல்லும் இது தவிர 215, 225, 250 முக்கிய வலயங்களாகக்குறுகிய காலத்தில் உள்ளது, எனது கருத்தினை கொண்டு முடிவு எடுக்கமாட்டீர்கள் என தெரியும், இருந்தாலும் எனது கருத்தினை பதிகிறேன். விலை 192 திரும்பாமல் மேலேறினால் இன்னுமொரு பகுதி வாங்குவார்கள் இவ்வாறு முக்கிய வ்லயங்களை கடக்கும் போது சிறிது சிறிதாக இருப்பினை அதிகரித்து (scale in) அத்துடன் உயர்த்தி சந்தை ஆபாயத்தை நீக்குவதுடன் (Trailing stop) தேவையான நேரத்தில் இலாபங்களையும் சிறிது சிறிதாக பதிவும் செய்வார்கள் (Scale out). 180 கீழ் விலை சென்றால் அதனை விற்கலாம் அப்பிள் விலை குறுங்காலத்திற்கு கீழிறங்குவதற்கு சாத்திய கூறுகள் காணப்படுகிறது 147 மட்டத்தில் எவ்வாறு செயற்படுகிறது என அவதானிக்கிறேன், RSI Divergence gap not filled in intraday.
 11. நன்றி, Fundamental Analysis என்பது நீண்ட கால முதலீட்டிற்கு அவசியமான விடயம், பல தடவை நீண்ட கால முதலீட்டில் முயற்சித்து நட்ட ஏற்பட்டதுண்டு குறிப்பாக penny stocks, Fundamental Analysis அடிப்படைகள் தெரியாது அத்துடன் அது தொடர்பான தகவல் திரட்டுவது கால விரயம் கொண்டது. ஆரம்பத்தில் penny stocks முதலிடுவதுண்டு, அப்போது கிரிப்டோ இல்லை, அதற்கு பதிலாக penny stocks முதலிடுவது கிரிப்டோ போன்றதே, மிகவும் ஆபத்தான அதே வேளை முதலீடு பல மடங்காக அதிக வாய்ப்புள்ள துறை.. தேவையான Fundamental Analysis தகவல்களை ஒரு இணையத்தளத்தில் பெறுவதுண்டு, அதில் உறுப்பினர்களாக உள்ள் சாதாரண வாசகர்கள் தாம் வாங்கிய பங்குகளிற்கு உள்ள ஒளியமயமான எதிர்காலத்தினை பற்றி பத்தி பத்தியாக எழுதுவார்கள். அந்த குறித்த பங்கின் விலை 0.004 C என்றவாறான நிலையில் இருக்கும் விலை மெதுவாக உயரும், ஒரு குறிப்பிட்ட காலத்தின் பின் விலை அதிகரிப்பு அதிகரிக்க அதிகரிக்க அவர்களது கூச்சல் அதிகரிக்கும் ஆனால் சடுதியாக அவர்களது தொனி மாறி அது எவ்வளவு மோசமான பங்கு என பத்தி பத்தியாக எழுத தொடங்குவார்கள், அந்த காலகட்டத்திற்கு சற்று முன்பாக அவர்கள் அந்த பங்கிற்கு சாதகமாக அதியுச்ச கூச்சல் போட்ட காலத்தில்தான் அந்த பங்கினை வாங்கியிருந்திருப்பேன், அவர்களது சுருதி மாறி விட்டிருக்கும் அதே போல் பங்கின் விலையும் மாறத்தொடங்கும் அந்த பங்கிற்கு அதியுச்ச விலையினை கொடுத்து வாங்கிய நான் காத்திருப்பேன் விலைகுறைந்த பட்சமாக இலாபமும் இல்லாமல் நட்டமுமில்லாமல் வெளியேற, ஒரு காலகட்டத்திற்கு மேல் அந்த பங்கு காணாமல் போய்விடும் அத்துடன் எனது பணமும் காணாமல் போய்விடும், அல்லது ஒரு அளவிற்கு மேல் நட்டத்தினால் ஏற்படும் வலி தாங்கமுடியாமல் வெளியேறிவிடுவதுண்டு. காலப்போக்கில் புரிந்து கொண்டது அவர்கள் செய்தது Fundamental analysis அல்ல Pump and Dump. ஆரம்ப்த்தில் நினைப்பதுண்டு இவர்களால் எவ்வாறு நிம்மதியாக நித்திரை கொள்ள முடிகிறது என்று, ஆனால் தவறு அவர்களதல்ல, எனதுதான், அடிப்படைகளை புரிந்து கொள்ள தேவையான நடவடிக்கையை செய்யாமல் எனது சோம்பல் குணத்தினால் மற்றவர்களை பின் தொடர்ந்து விட்டு பின்னர் நட்டம் ஏற்பட்டவுடன் அவர்களை குறை சொல்வது தவறு.
 12. மேலோட்டமாக பார்க்கும்போது அப்பிள் வாங்குவதற்கு உகப்பாக உள்ளதாக கருதுகிறேன் 155 மற்றும் 147 வாங்குவத்ற்கு ஏற்ற வலயங்களாக உள்ளது, இது எனது சொந்த அபிப்பிராயம் மட்டுமே. 138 stop
 13. அந்த கால கட்டத்தில் பல முயற்சிகளில் ஈடுபட்டார்கள், எவராவது ஒருவரின் நிலம் தரிசாக இருந்தால் விவசாயத்தில் ஆர்வம் இருந்தும் நிலம் இல்லாவிட்டால் சம்பந்தப்பட்டவர்க்ளிடம் தொடர்பு கொண்ட்டால் அதனை விவசாயத்திற்காகப்பெற்றுத்தருவது அத்துடன் இந்தியாவிலிருந்து வறட்சியை தாங்க கூடிய குறைந்த கால நெல் இனங்களை தருவித்தல் போன்ற சர்ச்சைக்குரிய நடவடிக்கைகள் உள்ளடங்கலாக.
 14. துறைசார் சந்தை நிலவரம் சாதகமாக உள்ள போதும் பேபால் மற்றும் சூமின் விலை ஏன் தொடர்ச்சியாக வீழ்ச்சியடைகிறது என புரியவில்லை, அவுஸ்திரேலியாவில் ஆப்டர் பே இதே போல் சமீத்தில் சரிவு கண்டுள்ளது ஆனால் பேபால் போல் அல்லாமல் ஒரு சிறிய சரிவு மட்டுமே.
 15. பேபாலின் மொத்த பங்குகள் 1.17 பில்லியன், அதனுள் ஏறத்தாழ 16.5 மில்லியன் பங்குகள் சந்தையில் மிதக்கவிடப்பட்டுள்ளது, தற்போதய நாளாந்த பங்குகள் விற்பனை மிதக்கவிடப்பட்டுள்ள பங்குகளின் அளவினை விட குறைவாக உள்ளதனால் தற்போதய சந்தை விலை குறைவாக உள்ளது (கடைசியாக 12.4 மில்லியன் விற்பனையாகியுள்ளது அதுவும் இறங்குமுகம்) மிதக்கவிடப்பட்டுள்ள பங்குகளின் அளவினிலே Short interest உள்ளது நிலமை மாறினால் விலை சடுதியாக உயரலாம்(Short squeeze) . குறிப்பாக Tech index நல்லநிலையில் உயர்வதால் எதிர்காலத்தில் ஏற்படும் நல்ல மாற்றங்கள் இந்த பங்கின் முக்கிய வலயமான 300 எடுத்து செல்லலாம் எனெனில் இதன் பீட்ட 1.24 அதாவது சந்தை மாற்றத்திற்கு அதிகமான மாற்றத்தை ஏற்படுத்தும், இதன் விலை ஒரு கட்டத்தின் சரிவது தடுக்கப்பட்டு பின்னர் மெதுவாக வாங்கப்படுகின்றநிலை ஏற்பட்டால் விலை எதிர்காலத்தில் அதிகரிக்க வாய்ப்பு உண்டாகலாம். சூமின் சந்தையில் மிதக்க விடப்பட்ட பங்குகள் 8 மில்லியன், Short interest 9 millions, Beta 0.08 இந்த பங்கில் Short squeeze வாய்ப்பு அதிகம்.சூமின் நாளாந்த பங்கு விறபனை ஏறத்தாழ அரைவாசியாக மிதக்க விடப்பட்டுள்ள பங்குகளின் அளவில் உள்ளது நிலமை சாதகமாறும் போது விலை ஏறலாம் ஆனால் இதன் பீட்டா குறைவாக இருபதனால் அந்த துறசார் பங்குகளைப்போல் அதிகரிக்குமா? என்பது தெரியவில்லை.
 16. BITCOIN - CHICAGO MERCANTILE EXCHANGE Code-133741 FUTURES ONLY POSITIONS AS OF 11/23/21 | --------------------------------------------------------------| NONREPORTABLE NON-COMMERCIAL | COMMERCIAL | TOTAL | POSITIONS --------------------------|-----------------|-----------------|----------------- LONG | SHORT |SPREADS | LONG | SHORT | LONG | SHORT | LONG | SHORT -------------------------------------------------------------------------------- (5 Bitcoins) OPEN INTEREST: 14,357 COMMITMENTS 9,054 9,214 2,243 966 237 12,263 11,694 2,094 2,663 CHANGES FROM 11/16/21 (CHANGE IN OPEN INTEREST: 709) 405 -913 -70 288 -84 623 -1,067 86 1,776 PERCENT OF OPEN INTEREST FOR EACH CATEGORY OF TRADERS 63.1 64.2 15.6 6.7 1.7 85.4 81.5 14.6 18.5 NUMBER OF TRADERS IN EACH CATEGORY (TOTAL TRADERS: 94) 44 36 30 3 5 63 62 பிட் கோயின் விற்பவர்களைவிட வாங்குபவர்கள் அதிகரித்துள்ளார்கள்
 17. வாங்குவதற்காகவா(Long) அல்லது விற்பதற்காகவா(Short)? எனது அபிப்பிராயத்தின்படி இரண்டும் Runaway Gap இடம்பெற்றுள்ளது, இது இந்த இரண்டு பங்குகளின் வலிமையற்றதன்மையை காட்டுகிறது, குறைந்த பட்சம் குறுகிய காலமாவது இந்த நிலை தொடரலாம், ஆனால் பேபால் முக்கிய வலயத்தில் உள்ளது (Support) விலை இந்த வலயத்திலிருந்து கீழிறங்கினால் விற்கலாம்.
 18. நீங்கள் கூறுவது போல கிரிப்டோ நாணயங்களின் விலைகளுக்கும் பிட் கொயினின் விலைக்கும் நெருங்கிய தொடர்பிருக்கலாம் என உணருகிறேன், ஆனால் இந்த கிரிப்டோ தொடர்பான எனது அறிவு இங்கு யாழில் உள்ளவர்களின் அறிவுடன் ஒப்பிடும் போது எனது அறிவு பூச்சியமாகும். பிட் கொயினின் தற்போதய நிலவரம் மேலே குறிக்கப்பட்ட இரு வரைபடத்தில் ஒன்று முதலாவது நாள் (Daily)கால அளவையும் இரண்டாவது வார (Weekly) கால் அள்வையும் கொண்டது. இதில் நிலநிற இரு சமாந்தர கோடுகள் கொண்டு இந்த பிட் கொயினின் ஏறுமுகத்தை குறிப்பிடப்பட்டுள்ளது. பொதுவாக இதனை (Up trend channel) என அழைப்பார்கள். இயல்பாக இப்படியான நிலையில் விலை கீழிருக்கும் நீல சமாந்தர கோட்டை அண்மிக்கும் போது சில்லறை வர்த்தகர்கள் வாங்குவார்கள் (Support). ஆனால் வார வரைபடத்தில் பார்த்தால் விலை Resistance and double top என்ற நிலையைக்காட்டுகிறது. இது உணமையானால், விலை முக்கிய வலயமான 50000 விட்டு கீழிறங்கினால், அடுத்து 40000 முக்கிய வலயமாகவும் பின்னர் 30000 முக்கிய வலயமாகும். ஆனால் தற்போதுள்ள நிலையில் இரண்டு வகையான சில்லறை வர்த்தகர்கள் உள்ளார்கள் 1. பயந்த சுபாவம் கொண்ட வர்த்தகர்கள் 2.பேராசை கொண்ட வர்த்தகர்கள் முதலாமவர் சந்தையை விட்டு வெளியேறுவார் இரண்டாவது வகை நபர்கள் இந்த தற்போதய விலையில் அதிகமாக (மலிவான விலையில்) வாங்குவர். விலை ஒரு கட்டத்திற்கு கீழ் இறங்கும் போது பதற்றத்தை உருவாக்கி விரைவான வெளியேற்றத்தை தூண்டலாம் அதனால் விலை சடுதியாக குறையும் அப்போது வெளியேறும்போது அது எரிகின்ற நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போலாகும். கீழே பிட் கொயினின் Market sentiment ஆனது விலை வீழ்ச்சியடையலாம் (அவ்வாறு நிகழாமலும் போகலாம்) என கூறுகிறது.(Short Interest) BITCOIN - CHICAGO MERCANTILE EXCHANGE Code-133741 FUTURES ONLY POSITIONS AS OF 11/16/21 | --------------------------------------------------------------| NONREPORTABLE NON-COMMERCIAL | COMMERCIAL | TOTAL | POSITIONS --------------------------|-----------------|-----------------|----------------- LONG | SHORT |SPREADS | LONG | SHORT | LONG | SHORT | LONG | SHORT -------------------------------------------------------------------------------- (5 Bitcoins) OPEN INTEREST: 13,648 COMMITMENTS 8,649 10,127 2,313 678 321 11,640 12,761 2,008 887 CHANGES FROM 11/09/21 (CHANGE IN OPEN INTEREST: -173) -609 -598 387 112 -22 -110 -233 -63 60 PERCENT OF OPEN INTEREST FOR EACH CATEGORY OF TRADERS 63.4 74.2 16.9 5.0 2.4 85.3 93.5 14.7 6.5 NUMBER OF TRADERS IN EACH CATEGORY (TOTAL TRADERS: 97) 48 38 28 3 5 63 63 இவ்வாறு பிட் கொயின் விலை அனைத்து கிரிப்டோ நாணயங்களில் செல்வாக்கு செலுத்துமா? பிட் கொயின் அனைத்து கிரிப்டோ நாணயங்களின் விலைகளிலும் ஆதிக்கம் செலுத்தும் என நம்புகிறேன் உதாரணமாக எவ்வாறு Yield Curve ஒரு நாட்டின் எதிர்காலத்தில் வரக்கூடிய பொருளாதார சரிவை முன்னரே அறிவிப்பது போல் (90 களில் ஜப்பான்) ஆனால் இதற்கும் விதி விலக்காக சில நாடுகள் இருக்கலாம் (இலங்கையின் Yield Curve பார்த்தால் எதிர் வரும் 3 அல்லது 4 வருடங்களின் பின்னர் மிகப்பெரிய வளர்ச்சியை அடைவது போலிருக்கிறது) Yield Curve மட்டுமல்ல பங்கு சந்தையும் ஒரு நாட்டின் பொருளாதாரத்தை நாடி பிடித்துக்காட்டும். (அமெரிக்காவின் DJIA) அதே போல் பிட் கொயின் கிரிப்டோவின் எதிர்காலத்தையும் உணர்த்துவதாக கருதுகிறேன் (தவறான கருத்தாகவும் இருக்கலாம்).
 19. LTC trade 2 நட்டத்துடன் தன்ன்னிச்சையான அவசர வெளியெற்றம் ஏற்ப்பட்டுள்ளது(Stopped out).
 20. எனது இந்த குறுங்கால வர்த்தக நடவடிக்கைகள் 43% ஆனவையே இலாபம் ஈட்டுவதாக வர்த்தககுறிப்புகள் கூறுகின்றன, அதாவது 10 இல் ஏறதாழ 6 தடவை எனது முடிவுகள் தவறானவை, சாதாரணமாக ஒரு நாணய சுழற்சியில் ஏறத்தாழ 10 இற்கு 5 தடவை சரியான முடிவுகளை எதிர்வுகூறலாம் (10 தடவையில் இந்த விகிதம் வராது 100 அல்லது 1000 முறை சுழற்றும் போது ஏறத்தாழ 50% வரும்). ஆகவே எனது வர்த்தக நடவடிக்கையானது எழுந்தமானமாக நிகழும் நிகழ்தகவை விட மிகவும் குறைவானதாகும்.
 21. இந்த விற்றல் நடவடிக்கையை திட்டமிட்டவாறு நேற்று இரவு வேலையினை முடித்துவிட்டு வந்து எடுத்துள்ளேன்.
 22. கிடையான மன்சல் கோட்டினை (Short)விலை கடக்க தவறினால் அந்த பகுதியில் விற்கத்திட்டமிட்டுள்ளேன்.
 23. தன்னிச்சையான அவசரகால வெளியேற்றத்தின்(Stopped out) மூலம் நட்டத்துடன் மூடப்பட்டது.
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.