Jump to content
 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

vasee

கருத்துக்கள உறவுகள்
 • Posts

  1297
 • Joined

 • Last visited

 • Days Won

  2

Everything posted by vasee

 1. இதற்கு என்ன அர்த்தம் என்பது தெரியுமா? இதனை கேட்பதற்கான காரணம் மேலோட்டமாக பார்க்கும் போது இந்த சொல்லாடலில் எந்த அர்த்தமும் இல்லாமல் இருப்பது போல இருக்கிறது, ஆனால் அர்த்தம் இருக்கலாம் என தோன்றுகிறது. இலங்கையில் பொய்களை HUMBUG எனக்கூறுவார்கள், அதன் அர்த்தம் முதலில் புரியவில்லை பின்னர் அறிந்த தகவல், அமெரிக்க காவார்ட் பல்கலைக்கழக உயிரியல் பீட மாண்வர்கள் சிலந்தி, ஈ என சில உயிரிகளின் உடலமை வெட்டி அதனை ஒன்றாக்கி ஒரு உயிரியாக்கி தமது விலங்கியல் பேராசிரியரிடம் காட்டினார்களாம், இதற்கு என்ன உயிரியல் பெயர் என அந்த பேராசிரியரிடம் வினவியுள்ளனர் மாணவர்கள். அதற்கு அந்த ஆசிரியர் மாணவர்களிடம் நீங்கள் இந்த உயிரியினை பிடிக்கும் போது இது சத்தம் (Humming) செய்ததா? எனக்கேட்டார், அதற்கு மாண்வர்கள் ஆம் என பதிலழித்தனர், ஆசிரியர் சொன்னார் இந்த உயிரியின் பெயர் HUMBUG. சில சமயம் இந்த கதை கூட HUMBUG ஆக இருக்கலாம்.
 2. Entry 1663.09, Stop 1659.59, Profit take 1708.00 Pending order, இந்த வர்த்தகம் இன்னும் நிகழவில்லை, விலை கீழிறங்கி 1663.09 எட்டினாலேயே இந்த வர்த்தகம் நிகழும்.
 3. QNAP NAS இனை 2012 இலிருந்து பயன்படுத்தி வந்தேன், எனது கோப்புகள் மற்றும் காணொளிகள், புகைப்படம் என்பவற்றினை அதில் சேகரித்து வைத்திருந்தேன். வேலயிலிருந்தே எனது கோப்புகளை பார்பதற்கு இணைய மூலமான ஏற்பாடு செய்திருந்தேன் முதலில் VPN மூலம் இணைத்திருந்த இணைப்பு பின்னர் சாதாரணமான இணைய இணைப்பின் மூலம் இணைக்கக்கூடியதாக இருந்தது. அண்மையில் எனது தரவுகள் அனைத்தும் Deadbolt file ஆக மாற்றிவிட்டார்கள் இந்த இணைய ஊடுருவிகள். தரவுகளை மீளப்பெறவேண்டுமாயின் அவுஸ்ரேலிய காசில் கிட்டதட்ட $1000 (BTC)செலுத்துமாறு கோருகிறார்கள். அத்துடன் நிற்காமல் அதில் சேமித்து வைத்த Cloud storage recovery key இனை எடுத்து, எனது கணக்கினை தமது கணக்காக மாற்றி விட்டார்கள், ஒரு வழியாக Cloud storage நிறுவனத்திடம் தொடர்புகொண்டு எனது கணக்கினை மீட்டுள்ளேன். இந்த ஊடுருவலாளர் ஒரு பங்களாதேசத்தினை சேர்ந்தவர் என்பதனை அவர் தற்செயலாக விட்டு சென்ற தடயத்தின் மூலம் அறிய முடிந்தது. ஆனால் QNAP NAS நிறுவனத்திடம் தொடர்பு கொண்டபோது அவர்களிடம் இருந்து எந்த ஒரு உதவியும் கிடைக்கவில்லை. அடிப்படையில் QNAP NAS நிறுவனத்தின் பாதுகாப்பு பொறிமுறையில் உள்ள குறைபாட்டினாலேயே இந்த இணைய ஊடுருவல் நிகழ்ந்துள்ளது. யாரும் QNAP NAS வாங்க வேண்டாம்.
 4. இலங்கையின் உண்மையான நண்பன் இந்தியாதான் என கூறுகிறார் இந்த காணொளியில், இந்தக்காணொளியினை 3 மணித்தியாலங்களின் முன்னர் பதிவேற்றி உள்ளார் என காட்டுகிறது.
 5. முந்தய வர்த்தகத்தினை விட இது ஓரளவிற்கு உறுதிப்படுத்தப்பட்ட வர்த்தகம், C அலை 5 அலை வடிவங்களை கொண்டது தற்போது முதலாவது அலை வடிவத்தில் உள்ளது, 2 வது அலையில் முதலாவது அலையின் 78.6 வரை செல்வதற்கான வாய்ப்புகள் உள்ளது ஆனால் 1 வது அலையின் 100% இறங்கலாகாது. இந்த வர்த்தகத்தில் 1:12 எதிர்பார்ப்பு இலாபம் உள்ளது.
 6. இது தவறான தகவல், இந்தியாவின் கடன் 2%, சீனாவின் கடன் 10%, ஜப்பான் கடன் 10%, முதலீட்டாளரிடம் வாங்கின் கடன் 47% இந்தியாவினை விட அதிகமாக கடன் வழங்கின சீனாதான் இன்றைய நிலமைக்கு காரணம் என குற்றம் சாட்டுவது ஒரு அரசியல் பின்புலம் கொண்ட திட்டமிட்ட பொய் பிரச்சாரம் அதே வேளை சீனாவை விட 5 மடங்கு குறைவான கடன் (இனாம் அல்ல) கொடுத்து விட்டு இலங்கையினை தாங்கள்தான் காப்பாற்ற வந்த தேவதூதுவர் போல பிரச்சாரம் செய்யும் இந்தியாவின் செயல் சாத்தான் வேதம் ஓதுவதத்திற்கு ஒப்பானது. ஆமை ஆயிரம் முட்டை போட்டாலும் அமைதியாக போய்விடும், ஆனால் ஒரு முட்டை போட்ட கோழியின் கத்தல்கள்தான் தாங்கமுடியாது. http://www.erd.gov.lk/index.php?option=com_content&view=article&id=102&Itemid=308&lang=en அடிப்படையில் இலங்கையில் தமது குறுகிய அரசியல் இலாப நோக்கில் ஆயுதப்போராட்டத்திற்கு தூபமிட்டு, இலங்கையினை ஆக்கிரமிக்க எடுத்த முடிவு தோல்வியினை சந்தித்த பின் இலங்கை பொருளாதார மீட்சி அடையக்கூடாது என்பதில் இந்தியாவிற்குதான் அக்கறை அதிகம், அப்போதுதான் தம்மால் இலங்கை மீது அதிகாரம் செலுத்தலாம். சீனாவை பொறுத்தவரையில் வியாபாரம்தான் இலங்க பொருளாதார மேன்மை அடைவதில் சீனாவிற்குதான் அக்கறை உண்டு, ஆனால் இந்தியாவின் நோக்கமே இலங்கை பொருளாதார மீட்சி அடையக்கூடாது என்பதுதான். இலங்கை மக்கள் தமது உண்மையான நண்பனை கண்டறிவதில்தான் அவர்கள் எதிர்காலம் தங்கியுள்ளது.
 7. தங்கத்தினை வாங்கிய பின் தங்க விலை சடுதியாகக்குறைந்து stop இனை எட்ட இருந்த நிலையில் தங்க வர்த்தகத்தினை மூடிவிட்டேன்,
 8. தங்கம் மிக குறுங்கால வர்த்தகம் இன்று 1665 இல் வாங்கியுள்ளேன், எலியட் அலை ஆய்வினடிப்படையில் வாங்கியுள்ளேன், இந்த வர்த்தகம் சரியாக வரும் என உணரவில்லை சரியாக வந்தால் 1:8 இலாபம் வரும். AUDJPY 95.657 இல் வாங்கியுள்ளேன் 95.500 இனை விலை எட்டவில்லை.
 9. Forex (Foreign exchange) இல் ஒரு நாட்டு நாணயத்தினை 3 எழுத்துக்க்களை கொண்டு குறிப்பார்கள், உதாரணமாக அவுஸ்ரேலிய டொலரினை AUD, ஜப்பான் நாட்டு நாணயத்தினை JPY. ஒரு நாணயத்தின் பெறுமதியினை இன்னொரு நாட்டு நாணயத்துடன் ஒப்பிட்டு கணிக்கப்படும் (Currency pair). முன்னால் காணப்படும் 3 எழுத்து கொண்ட நாணயத்தினை அடிப்படை நாணயம் என அழைப்பார்கள் (Base currency). உதாரணமாக நான் இப்போது AUDJPY இனை வாங்கினால், அவுஸ்ரேலிய நாணயத்தினை வாங்கி ஜப்பானிய நாணயத்தினை விற்பதாக அர்த்தம். ஏற்கனவே வாங்கியதாகக்குறிப்பிட்ட AUDJPY stop இனை அண்மித்த நிலையில் அந்த வர்த்தகத்தினை மூடி விட்டேன் 95.500 வாங்குவதற்கான வர்த்தகம் இடப்பட்டுள்ளது. Stop 94.900, Take profit 104.000. மத்திய வங்கியின் வட்டி விகிதம் (cash rate) என்பது வங்கிகளுக்கிடையேயான வட்டி விகிதமாகும். வங்கிகள் இந்த வட்டியில் காசினை கடனாகப்பெற்று பொதுமக்களுக்கு அதனை விட அதிகமான் வட்டிக்கு கடன் கொடுப்பார்கள். உதாரணமாக அவுஸ்ரேலிய cash rate 2.35%, ஆனால் வங்கியில் மக்களுக்கு 4% மேல் வட்டியுடன் வீட்டுக்கடன் கொடுக்கிறார்கள். பணவீக்கத்தினை கட்டுப்படுத்துவதற்காக வட்டி விகிதத்தினை அதிகரிக்கிறார்கள். பணவீக்கத்தில் 1.5 - 2.5 விகித பணவீக்கத்தினை ஆரோக்கியமான பணவீக்கம் எனக்கூறுகிறார்கள் தற்போது பல நாடுகளில் இரட்டை இலக்கத்தில் பணவீக்கம் உள்ளது. பணசுருக்கமும் பொருளாதாரத்திற்கு பாதகமானது.
 10. வேலையின்மை விகிதம் குறைவாக இருப்பதற்கான காரணம் கீழே உள்ள செய்தி இணைப்பில் கூறப்பட்டுள்ளது போல வட்டி விகித அதிகரிப்பு, மக்களை வேலைகலை அதிகமாக நாட வேண்டிய தேவையினை உருவாக்கிவிட்டது. https://www.smh.com.au/politics/federal/unemployment-rate-rises-for-first-time-in-10-months-20220915-p5bi6z.html
 11. AUDJPY 95.500 இல் வாங்குவதுதான் உத்தேசமாக இருந்தது, தற்போது 96.260 சந்தை விலையில் ஒரு சிறிய அளவில் வாங்கியுள்ளேன்FOMO (Fear Of Missing Out), stop 95.840 இட்டுள்ளேன் 96.000 இல் ஒரு சிறிய support உள்ளது. இந்த வர்த்தகம் சாதகமாக செல்லும் என கருதவில்லை, 95.500 பகுதியில் வாங்குவதை எதிர்பார்த்துள்ளேன்.
 12. சில நேரங்களில் கோட்பாடுகள் நடைமுறையில் நடப்பதில்லை என்பதற்கு இது ஒரு உதாரணம். தங்கத்தில் முன்பு கணித்தது போல B அலை எனில் இது ஒரு expanded flat. ஆனால் B அலை 3 அலை வடிவம் கொண்டது, இது 5 அலை கொண்ட வடிவம் அதனால் இது Corrective wave இல்லை. இது ஒரு 5th wave expansion (Impulsive wave expansion) ஆக இருக்க வாய்ப்புள்ளது, அவ்வாறாயின், தங்கத்தின் basic down trend தொடர வாய்ப்புள்ளது. தங்கத்தின் போக்கினை சரியாக அடையாளப்படுத்த முடியவில்லை என்பதாலேயே தற்காலிகமாக தங்க முதலீட்டில் ஈடுபடுவதில்லை. முன்பு திட்டமிட்ட AUDJPY வர்த்தகத்திலீடுபடுவதற்கான சந்தர்ப்பத்திற்காக காத்துள்ளேன்.
 13. உலகின் பொருளாதார மையமாக உள்ள அமெரிக்கா அதற்கு அடுத்த நிலையில் இருக்கும் ஐரோப்பா இவற்றிற்கு மூலப்பொருள்களை வழங்கும் ஆசியா, உலகத்தின் ஒரு மூலையில் இருந்து இன்னொரு மூலைக்கு பொருள்களை கொண்டு செல்லும் போது ஆசியாவில் முக்கிய வழங்கல் பாதையாக உள்ள சிங்கபூரினால் தற்போது முழுமையான தங்கு தடையின்றிய வழங்கலை செய்ய முடியவில்லை. இலங்கை சிங்கப்பூரினை விட கேந்திர முக்கியத்துவமான நிலையில் உள்ளது, இலங்கையினூடாகவே ஆழ்கடல் கப்பல் போக்குவரத்தினை இந்தியா மேற்கொள்ள வேண்டிய சூழ்நிலை நிலவுகிறது. இலங்கை தனது உள்நாட்டு கட்டமைப்பினை மேம்படுத்தினால் இலங்கை ஆசிய பகுதியில் மிக முக்கிய பொருளாதார வழங்கல் கேந்திர மையமாக வளர வாய்ப்புள்ளது.
 14. இந்த மாதம் வேலையின்மை விகிதம் 3.5% ஆக வந்துள்ளது, கடந்த மாதம் 3.4%, அதற்கு முந்தய மாதம் 3.5% இருந்த நிலையில் இந்த மாதம் எதிர்பார்க்கப்பட்ட வேலையின்மை விகிதம் 3.4% விட 0.1% அதிகரித்துள்ளது. நான் முன்பு கூறியது போல 4.0% ஆக அதிகரிக்கவில்லை, பொதுவாக பணவீக்க அதிகரிப்பிற்கேற்ப வேலையின்மை விகிதம் அதிகரிப்பது வழமை, காரனங்கள் தெரியவில்லை. கடந்த 9 வருடங்கள் ஊதிய உயர்வு தடைப்பட்டிருந்த்தது, இந்த வருட நடுப்பகுதியில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தின் பின்னர் ஊதிய உயர்வு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால்தான் வேலையின்மை விகிதம் அதிகரிக்கவில்லை என கூற முடியாது, ஏனெனில் வருமான அதிகரிப்பு விகிதத்தினை விட பணவீக்க அதிகரிப்பு அதிகமாகவுள்ளது. குடிவரவு, குடியகல்வு ஒரு காரணமாக இருக்கலாம் அல்லது வருமான அதிகரிப்புடன் தேறிய குடிவரவு எதிர்மறை இலக்கத்தில் இருக்கலாம். மாதாந்த வேலை மாற்றங்கள் (000) மார்ச் 77.4 ஏப்ரல் 17.9 மே 4.0 ஜுன் 60.6 ஜுலை 88.4 ஒகஸ்ட் -40.9 செப்டெம்பர் 33.5 கடந்த மாதம் எதிர்பார்க்கப்பட்ட 25 பதிலாக எதிர்மறை -40.9 வேலையிழப்பு ஏற்பட்டது, இந்த மாதம் 33.5 ஆக கடந்த மாதத்தினை விட அதிகரித்துள்ளது அதாவது ஜுலை மாத வேலை அதிகரிப்பினை விட தற்போது வேலை அதிகரிப்பு ஏற்படவில்லை. எதிர்வரும் மாதங்களில் இந்த வேலையின்மை விகிதம் அதிகரிப்பு ஏற்படலாம் என கருதுகிறேன்.
 15. அவுஸ்ரேலிய டொலரின் விலையில் தாக்கம் செலுத்தக்கூடிய இந்த மாதத்திற்கான அவுஸ்ரேலிய வேலையின்மை விகித அறிவிப்பு இன்று சிட்னி நேரம் காலை 11:30 இல் வெளியாகவுள்ளது. ஏற்கனவே அதிகரித்த பணவீக்கம் அதிகரித்திருந்த போதும் அசாதாரணமாக வேலையின்மை விகிதம் தொடர்ந்தும் வரலாற்று அளவில் குறைவாகவே காணப்பட்டது (3.4%, 3.5%). பொதுவாக பணவீக்கம் அதிகரிக்கும் போது வேலையின்மையும் அதிகரிக்க வேண்டும் ஆனால் கடந்த இரண்டு மாதகாலமாக வேலையின்மை விகிதம் தொடர்ந்தும் குறைவாகவே உள்ளது, ஆனால் இந்த மாதம் வேலையின்மை விகிதம் 4% ஆக அதிகரிக்கலாம் எனும் கருத்து பரவலாக உள்ளது. எதிர்பார்த்த வேலியின்மை விகித அதிகரிப்பு ஏற்படாவிட்டால் அவுஸ்ரேலிய நாணயத்தின் பெறுமதி அதிகரிக்கலாம். வேலையின்மை விகிதம் 4% விட அதிகமாக ஏற்பட்டால் அவுஸ்ரேலிய நாணயத்தின் பெறுமதி குறையலாம், இதனால் இந்த அறிவிப்பு ஒரு தாக்கதினை ஏற்படுத்தக்கூடிய அறிவிப்பாக இருக்கலாம்.
 16. மேலே உள்ள வரைபடம் AUDJPY Ascending Triangle break out இந்த வடிவத்தினை சந்தை ஏற்படுத்துவதற்கான காரணம் விலையானது ஒரு விலை அளவில் தொடர்ந்து மேலே செல்ல முடியாமல் விலை வீழ்ச்சி அடையும் இடம் Resistance என அழைக்கப்படுகிறது. விலை முதல் தடவை மேலாக செல்ல முயற்சித்து, அந்த முயற்சி தோல்வி அடைந்து விலை கீழிறங்கும் பின்னர் மறுமுறை முயற்சிக்கும், இவ்வாறு விலை முயற்சிக்கும் புள்ளிகளை இணைத்தால் ஒரு கிடையான கோட்டினை வரையலாம். கீழிறங்கும் விலை மேலும் கீழிறங்காமல் மேலேறும் விலை அளவினை Support என அழைக்கப்படுகிறது. இந்த விலை வீழ்ச்சி அளவானது ஒவ்வொரு தடவையும் குறைந்து செல்லும், அந்த புள்ளிகளை இணைத்து கோடு வரைந்தால் சாய்வாக உயர்ந்து செல்லும். இந்த இரண்டு மஞ்சள் கோடுகளும் ஒரு அரை கூம்பகவடிவத்தினை உருவாக்கும் விலையானது இந்த கூம்பகத்திற்குள் அகலாமான பகுதியிலிருந்து ஒடுக்கமான பகுதிக்குள் நுழையும்போது விலையில் அதிகமான அளுத்தம் ஏற்படும் இந்த அளுத்தம் பொதுவாக மேல்புறமாக வெடிப்பினை உருவாக்கும். விலை எதிர்பார்ப்பு விலை, கூம்பகத்தின் அகலமான அடிப்பகுதியின் உயரம் (பச்சை கிடைக்கோட்டினால் குறிப்பிடப்பட்டுள்ளது). பொதுவாக இந்த வெடிப்பு நிகழும் போது அதிகளவான பங்குகள் வாங்கப்பட்டிருப்பது ஒரு சாதகமான அறிகுறி, ஆனால் நாணய வர்த்தகத்தில் அளவுகள் கைமாற்றம் தெரியாது என்பது ஒரு பாதகமான விடயம். இந்த வர்த்தகத்தினை விலையானது உடைப்புப்புள்ளியில் எவ்வாறு தொழில்படுகிறது என்பதற்கிணங்க வாங்க உள்ளேன். மேலே உள்ள ஒளிப்பதிவில் உள்ள வரைபடம் நாளாந்த வரைபடம், மணித்தியால முதலாவது வரைபடத்தில் குறிப்பிடப்பட்ட வடிவம் ஏற்பட்டால் வாங்க தீர்மானித்துள்ளேன். எதிர்பாரா வெளியேற்றம் கடல்நீலநிற புள்ளி கோட்டினால் காட்டப்பட்டுள்ளது
 17. கைலாகு கொடுப்பதில் கூட உடல் மொழிகூற்றை பின்பற்றும் நரி, இந்தியா வல்லரசு என்று இந்தியாதான் தானாக சொல்லிக்கொள்கிறது. 1988 அல்லது 1989 யூலை 29 முன்னர் இந்திய இராணுவம் வெளியேறாவிட்டால் இலங்கை அடித்து துரத்தும் என பிரேமதாசா கூறியதாக நினைவுள்ளது.
 18. இலங்கை ஐ எம் எப் கடன் மறுசீரமைப்பிற்கான சூழ்நிலையினை உருவாக்கித்தரும் என நம்பிக்கொண்டிருக்கு, ஐ எம் எப் இப்பிடி சொல்கிறது, சகுனம் சரியில்லை.
 19. பொருளாதார தடையினை சீனாவினால் எதிர்கொள்ள முடியாது என கருதுகிறேன், பொருளாதார தடை சீனாவினது பொருளுக்குதான். இரஸ்சிய உக்கிரேன் போர் ஆரம்பித்தபோது எமது நிறுவனம் உக்கிரேனுக்கு நிதியுதவி அழிக்க முன்வந்ததுடன் நிறுத்தாமல் வேலையாதளிடமும் நிதி சேகரித்தது, வேலைத்தளத்தின் ஓய்வு பகுதி, சிற்றுண்டிச்சாலை,ஒன்றுகூடல் மண்டபம் என அனைத்து பகுதிகளிலும் உக்கிரேனுக்கு ஆதரவான பதாதைகள். கடந்த ஒரு மாதகாலமாக அனைத்து பதாதைகள் நீக்கப்பட்டுள்ளது, விடயம் என்னவென்றால் எமது நிறுவனத்திற்கு இரஸ்சியாவிடமிருந்து ஒரு பெரிய வேலை ஒப்பந்தம் வர உள்ளது. எதிர்வரும் மாதமளவில் இரஸ்சிய அரச துறையினர் எமது வேலைத்தளத்தினை ஆய்வு செய்ய வர இருந்தனர் ஆனால் எதிர்வரும் ஆண்டின் முதல் காலாண்டிற்குதான் அவர்களால் வரமுடியும் என கூறப்பட்டுள்ளது, காரணம் இரஸ்சியாவின் மீதான தடைகள்தான். காசென்று வந்தா கொள்கைகள் எல்லாம் கிடையாது எந்த ஒரு நிறுவனத்திற்கும்.
 20. இலங்கையில் தற்போதுள்ள பொருளாதார பிரச்சினை ஆரம்பிப்பதற்கு முன்னர் இலங்கையின் அரசியலில், இந்தியா ( தமக்காதரவான அல்லது எந்த இலங்கை அரசும் இந்தியாவிற்கெதிராக செயற்படாமல் இருக்க) தமது பிடியினை பேண பயன்படுத்தப்படும் ஒரே ஆயுதம் தமிழர்களும், அவர்களது பிரச்சினையும்தான். இந்த பொருளாதார பிரச்சினையின் உடனடிக்காரணம் ஊழலாக இருந்தாலும் தீர்க்கப்படாத இனப்பிரச்சினைதான் மூலகாரணம். இந்தியா எமது பிரச்சினையினை தீர்க்க முன்வரும் என தமிழர்கள் நினைப்பது அப்பாவித்தனம், எமது பிரச்சினை தீர்ந்து விட்டால் இலங்கையின் மீதிருக்கும் தமது பிடி நழுவி விடும் என இந்தியா நம்புகிறது. இலங்கை மிக தெளிவாக தனது நிலைப்பாட்டினை ஒவ்வொரு காலகட்டத்திலும் வெளிப்படுத்தி வருகிறது வங்கதேசப்போரின் போது பாகிஸ்தானுடன் இந்தியா போரிட்ட போது, இலங்கை பாகிஸ்தான் போர் விமானங்களை இலங்கையில் தளமாகப்பயன்படுத்த அனுமதித்தது. இந்தியா இதுவரைகாலமும் நினைத்தது, இலங்கை தற்போதுள்ள சூழ்நிலையில் ( இந்தியாதான் இலங்கையின் நெருங்கிய நண்பன்) இந்திய எதிர்ப்பு நிலை எடுக்காது என ஆனால் சீன யுத்த கப்பலை இலங்கையில் தரிக்க அனுமதித்ததன் மூலம் இந்திய நலஙளை பற்றி இலங்கை எப்போதும் அலட்டி கொள்ள போவதில்லை என்பதுதான். இந்தியாவா மற்ற நாடுகளா? என வரும்போது இலங்கை மிகத்தெளிவாக இந்திய எதிர்ப்பு நிலைப்பாட்டையே இலங்கை எடுத்துவருகிறது. ஒவ்வொரு காலகட்டத்திலும் இலங்கையின் இந்திய எதிர்ப்பு நடவடிக்கைக்கு இலங்கைக்கு உள்ளிருந்து தமிழர்கள் எதிர்ப்பதை முதலில் நிறுத்த வேண்டும். இலங்கைக்கும், இந்தியாவுக்கும் உள்ள பிரச்சினையினை அவர்களாக தீர்த்து கொள்ளட்டும். நாங்கள் பொறுமையாக இருந்தால் இந்தியா தாமாக எம்மை தேடி வருவார்கள் "கரும்பு கட்டாக இருந்தால் எறும்பு தானாக வரும்". இந்தியா எமது மக்களை ஒரு கருவியாக பயன்படுத்துகிறது, எமது மக்களின் இழப்புகளிலும் அவர்களது வேதனைகளிலும் குளிர் காய்கிறது, இதனை எவ்வளவு காலத்திற்கு நாம் இன்னமும் அனுமதிக்க போகின்றோம்?
 21. எண்ணெய் வர்த்தகம் நூலிழையில் தவறிவிட்டது, எதிர்பார்ப்பு விலையினை ஏற்கனவே அடைந்ததனால் வாங்குவதற்கான திட்டம் இடைநிறுத்தப்பட்டுள்ளது விலை 84.528 குறுங்காலத்திற்கு இறங்க வாய்ப்புள்ளது அட்கு தொடர்பான மேலதிக விபரத்தினை பின்னர் பதிவு செய்கிறேன்.
 22. கச்சாய் எண்ணெய் விலை ஏன் அதிகரிக்கவுள்ளது எனதற்கான எலியட் அலை ஆய்வு, இதில் வரும் வாரத்திற்கான எனது குறுங்கால வர்த்தகம் குறிப்பிடப்பட்டுள்ளது ஆனால் எண்ணெய் விலை நீண்ட கால அடிப்படையில் அதிகரிக்கவுள்ளது ஏன் என்பதைக்குறிக்கும் காணொளி.
 23. தவறை சுட்டிக்காட்டிய்மைக்கு நன்றி,
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.