Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

vasee

கருத்துக்கள உறவுகள்
 • Posts

  854
 • Joined

 • Last visited

 • Days Won

  1

Everything posted by vasee

 1. இலங்கை திவாலாவதற்கு சாத்திய கூறுகள் உள்ளன, இலங்கையின் Credit rating CCC ஆகத்தரப்படுத்தியுள்ளார்கள், அதாவது Credit default முன்னதான நிலை.இந்த வகையான தரநிலையில் சில ஆபிரிக்க நாடுகள் உள்ளன. Credit rating B கீழ் இருப்பவை Credit default ஆகப்போகின்ற நிலை
 2. நல்ல ஒரு ஒளிப்பதிவு, பொருளாதாரத்தின் முதுகெலும்பாகவுள்ள பெற்றோலியத்தின் நிலை இலங்கையில் எவ்வாறு உள்ளது? ஏறத்தாழ 1/2 பில்லியன் டாலர் பெறுமதியான பெற்றோலிய இறக்குமதியில் ஏதாவது கட்டுப்பாட்டினை அரசு விதித்துள்ளதா? எதிர்காலத்தில் பெற்றோலின் விலை தங்கம் போல் உயருமா?
 3. அவுஸ்திரேலிய சிறப்புப்படை ஆப்கானிஸ்தானில் பணியாற்றியபோது.
 4. @ ஏராளன், பிரபா சிதம்பரனாதன், கோசான், தனிகாட்டுராஜா நன்றி. இது ஒரு செவிவழிக்கதை, முன்பொரு காலத்தில் இலங்கையில் உள்ள ஒரு வங்கி ( இலங்கை வங்கி அல்லது மக்கள் வங்கியாகவிருக்கலாம்), திவாலாகப்போவதாக மக்கள் கருதினார்கள், மக்கள் தமது வைப்பிலுள்ள பணத்தை எடுப்பதற்கு முண்டியடித்தார்கள். பொதுவாக வங்கிகள் தமது முழுப்பெறுமதியில் ஒரு குறிப்பிட்ட சதவிகிதம் பாதுகாப்பு வைப்பாகப்பேணுவார்கள் (இலங்கையில் 5% இருகலாம்) மிகுதி சொத்துகளை 80% திரவ முதலீடாகவும் (மிக சொற்ப வருமானம் அல்லது வருமானமே அற்ற) 20% திண்ம முதலீடுகளில் முதலிடுவார்கள் (அதிக வருமானம் ஆனால் அவசரத்திற்கு உடனடியாக பணத்தை பெற முடியாது). அனைத்து மக்களும் ஒரே நேரத்தில் தமது வைப்பு பணத்தினை மீட்டால், வங்கி திவாலாகி விடும், அதனால் வங்கி ஒரு திட்டத்தினை அமுல்படுத்தியது, அனைத்து பணத்தினையும் சில்லறையாக மாற்றி வைத்துக்கொண்டு வரும் வாடிக்கையாளர்களுக்கு அதனை வழங்கியது இதனால் மிகத்தாமதம் ஏற்பட்டதாம் மக்கள் நீண்ட நேரமாக கியூவில் நிற்கவேண்டி ஏற்பட்டது இது நாள்கள் நிடித்த போது ஒரு காலகட்டத்தின் பின் மக்கள் வங்கி எப்படியும் பணத்தை கொடுத்துவிடும் என்று நம்பி பணத்தினை எடுப்பதை நிறுத்திவிட்ட்டார்களாம். இன்று இலங்கை கடன் வாங்கி வட்டி கட்டுகிறது, பொருளாதார ஊடகங்கள் இலங்கை எப்போது credit default ஆகும் என அரூடம் கூறுகின்றன. இந்தநிலையில் இலங்கைக்கு வழங்கப்படும் உதவிகள் மட்டுப்படுத்தப்படும், இலங்கை பொருளாதார சரிவு தானாகவே ஏற்படலாம், அரசு துணிகரமான முடிவுகளை எடுக்காவிட்டால் இது தவிர்க்க முடியாமல் போகலாம். 1900 - 1929 (குத்து மதிப்பான காலம்) காலப்பகுதியில் அமெரிக்காவில் பெருமளவான முதலீட்டு செலவினால், பண நெருக்கடி ஏற்பட்டது 1905 - 1907 ( இடைப்பட்ட காலப்பகுதியாகவிருக்கலாம்) பங்குச்சந்தை சரிவு ஏற்படும் நிலை உருவாகியது, JP மோர்கன் வங்கிகளுக்கு ஒரு உத்தரவு பிறப்பித்தாராம் உங்கள் பாதுகாப்பு வைப்புகளை கடனாக வழங்குங்கள் என்று ஆரம்பத்தில் வங்கிகள் அது பாதுகாப்பு இருப்பு அவசரத்தேவைக்கு மட்டுமே பயன்படுத்துவோம் என முரண்டு பிடிக்க அதற்கு JP மோர்கன் சொன்னாராம் அதனால்தான் கூறுகிறேன். அதன் மூலம் பங்கு சந்தை சரிவை JP மோர்கன் தடுத்தார் என கூறப்படுகிறது, ஆனால் 1929 பங்கு சந்தை சரிவு ஏற்பட்டது, அதே போல் நாட்டின் வைப்பிலிருந்த தங்கத்தினை விற்குமாறு அரசுக்கு ஆலோசனை வழங்கி நாட்டை பொருளாதார நெருககடியில் இருந்து மீட்டார் என்று கூறப்படுகிறது.
 5. ஊழல் செய்யப்படும் பணம் வெளிநாட்டிற்கு அனுப்புவதற்காக வெளிநாட்டிற்கு அனுப்பப்படும் பணத்தின் மீது கட்டுப்பாடுகளை விதிக்கவில்லைபோல உள்ளது, ஒரு கற்பனை மட்டுமே, பதவிக்காலம் முடிந்தபின் மீண்டும் வெளிநாட்டில் போய் குடியேறி அப்பணத்தினை அனுபவிக்கலாம். ( இது ஒரு ஊகம் மட்டுமே)
 6. எதிர்காலத்தில் முகப்புத்தகம் போன்ற சமூக வலைத்தளங்கள், தவறான கருத்துகளை கருத்து சுதந்த்திரம் என்ற போர்வையில் சமூகத்தில் பரப்புவதற்கு தடுக்க நடவடிக்கை எடுக்கலாம், பரிதாபத்திற்குரிய மக்கள் சொந்த செலவில் சூனியம் வைத்துக்கொள்கிறார்கள்.
 7. 65 இலட்சம் ரூபாவை இலங்கையிலிருந்து வெளிநாட்டுக்கு அனுப்ப கூடியதாகவுள்ளது ஆச்சரியமான விடயம், பொதுவாக அரசுகள் அந்நிய செலாவணிநெருக்கடியைத்தீர்ப்பதற்கு நாட்டிற்கு வெளியே பணத்தினை எடுத்து செல்வதைக்கட்டுப்படுத்துவார்கள், வெளிநாட்டு பயணங்கள், வெளிநாட்டுக்கல்வி போன்றவற்றைக்கட்டுப்படுத்துவார்கள் அத்துடன் அத்தியாவசிய உள்நாட்டு பிரதியீட்டுப்பொருள்களின் இறக்குமதிக்குத்தடை விதிப்பார்கள் என கேள்விப்பட்டுள்ளேன் ஆனால் இலங்கையில் அத்தியாவசிய பொருள்களுக்கும் மருந்துவ பொருதளின் இறக்குமதிக்கும் தடை விதித்துள்ளது, ஆனால் தேவையற்ற வகைகளில் அந்நிய செலாவணியை இழக்கிறது.
 8. இலங்கையில் உள்ள உறவுகள் வங்கியிலோ அல்லது வீட்டிலோ பணமாக சேமித்து வைக்காமல் தங்கமாக மாற்றி வைத்துக்கொள்ளுங்கள் , அரசின் ஊதிப்பெருத்த செலவுகளுக்கும் உள்நாட்டுக்கடனுக்குமாக புதிது புதிதாக அரசு பணத்தினை அச்சிட்டு வெளியிடலாம் அதனால் பணமாக சேமிப்பில் வைத்திருப்பவர்களுக்கு நட்டம் ஏற்படும்.
 9. முஸ்லீம்கள் எமது தமிழ் சமூகம் போன்று சமூக மயப்படுத்த சமூகம், முன்னொரு காலத்தில் எமது தமிழ் சமூகத்திலும் பெண்கள் கல்வி, தனியே வெளியே செல்லக்கூடாது இது போன்று பல கட்டுப்பாடுகள் காணப்பட்டது. சமூகத்தால் இயற்றப்படும் கட்டுப்பாடுகளை அந்த சமூகத்தில் பிறப்பவர்கள் கேள்விகள் இல்லாமல் உள்வாங்குவர் அது அவர்களுக்கு சரியாகவிருக்கும், ஆனால் வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு அது ஒரு மிருகத்தனமாகத்தெரிவதற்குக்காரணம் அவர்கள் வாழும் சமூகத்தில் அவர்களுக்கு அப்படியான அனுபவம் இருப்பதில்லை உதாரணமாக இலங்கையில் சிறுபான்மை சமூகம் பேச்சு, எழுத்து, மத மனித உரிமைகள் மறுக்கப்படுகின்ற மக்களைப்பார்த்து அச்சூழ்நிலையில் முன்னர் வாழ்ந்த புலம்பெயர் தமிழர்களால் சாதாரணமாக கடந்து போக முடியாது ஏனெனில் அவர்கள் வாழும் சூழல் அவர்களுக்கு புதிய கோணத்தில் அதனைப்பார்க்க வைக்கிறது, ஆனால் இலங்கையில் வாழும் சிறுபான்மையினருக்கு அது ஒரு பொருட்டேயல்ல. ஆப்கன் மக்களும் சிறிது காலத்தின் பின் சாதாரண வாழ்க்கைக்குத்திரும்பிவிடுவார்கள், புத்தன் கூறியது போல(இணக்க அரசியல்) இயைபாகம் அடந்து விடுவர், உலகமும் அவர்களை மறந்து விடும்.
 10. நம்பிக்கை என்பது ஒரு பலமான சக்தி, சிலர் அதற்காக உயிரையும் கொடுக்கிறார்கள், படித்தவர்கள் தடுப்பூசியினை சந்தேகக்கண் கொண்டு பார்க்கிறார்கள், இலங்கையைப்பூர்வீமாகக்கொண்ட அவுஸ்திரேலியாவில் வளர்ந்து படித்து மருத்துவத்துறையில் பட்டம் பெற்றவர, முண்ணனி வைத்தியசாலையில் பணிபுரிகிறார் (செவிலித்தாய்), கோவிட் தடுப்பூசி போடவில்லை (அதற்கு பல காரணங்களை கூறினார்) ,அவர்களது வைத்தியசாலையில் முகாமையாளர் மட்டுமே தடுப்பூசி போட்டதாகக்கூறினார், அத்தியாவசிய சேவை செய்பவர்கள் தடுப்பூசி போடாமல் விடுவதால் சமூக அளவில் ஏற்படும் தீமைகளை புரிந்து கொள்ளவில்லை. கோவிட் பரவல் தீவிரமானபின் அண்மையில் தொலைபேசியில் தொடர்புகொண்டு தடுப்பூசி பெற்றுக்கொண்டீர்களா என்று கேட்டபோது ஆம் என்று சுருக்கமாக முடித்துக்கொண்டார். மானில அரசுகள் அத்தியாவசிய சேவையாளர்களுக்கு தடுப்பூசி அவசியமாக்கப்பட வேண்டும் என்று விரும்புகிறது ஆனால் தேசிய அரசு அதற்கு மறுக்கிறது. கோவிட் தடுப்பூசி போடுவதால் போடுபவர்க்கு என்ன பாதிப்பு ஏற்படும் என்று தெரியாது, அதனால்தான் நான் யாருக்கும் தடுப்பூசி போடுங்கள் என்று சிபார்சு செய்யவில்லை, ஆனால் நான் தடுப்பூசி பெற்றுக்கொண்டேன், அது எனது விருப்பம். அதே மாதிரி தடுப்பூசி போட வெண்டாம் என கூறுவதற்கும் தனிமனித அதிகாரமில்லை. குறிப்பாக பாமரமக்களை இந்த படித்தவர்கள் குழப்பிவிதிறார்கள். ஜனநாயகம் என்பது எனது கைத்தடி உனது மூக்கைத்தொடாதவரைதான்.
 11. கோவிட் மட்டுமல்ல இதர மற்ற விடயங்களிலும் இலங்கையரசின் புள்ளி விபரம் முன்னுக்குப்பின் முரணாகவுள்ளது, இலங்கையின் வேலையின்மை விகிதம் 5% குறைவாகவுள்ளது அபிவிருத்தியடைந்த நாடுகளில் கூட அவ்வாறான நல்ல புள்ளி விபரமில்லை, அங்கு பொருள்களின் விலை பலமடங்கு அதிகரித்துள்ளதாக தனியொருவன் குறிப்பிட்டிருந்தார் ஆனால் பணவீக்கம் 5% குறைவாகவுள்ளது, போர் இடம் பெறும் காலத்தில் இராணுவ இழப்புதொடர்பாக பிழையான புள்ளிவிபரங்களை வெளியிடுவதாக கூறுவார்கள், அரசு திட்டமிட்டே பிழையான புள்ளி விபரங்களை வெளியிடுகிறதா?
 12. நீங்கள் கூறுவது மிகவும் சரி, தடுப்பூசிகள் அனைத்தும் உடலில் எதிர்ப்பு சக்தியை உருவாக்குகின்றன,எனது புரிதலின்படி தடுப்பூசியில்லாமல் கோவிட்டை எதிர்கொள்வது கடினம் இது எனது சொந்த புரிதல் மட்டுமே, ஆலோசனை கூறுவதற்கு துறைசார் கல்வியறிவில்லை, ஆனால் இணைய தேடலில் நான் அறிந்தவரை கோவிட் தடுப்பூசிகளை 4 வகைகளாகப்பிரிக்கிறார்கள் ஆனால் எனது புரிதலில் அடிப்படையில் இரண்டு வகைதான் 1. வலுவிழந்த கோவிட் கிருமியை உடலில் செலுத்துவது 2.கோவிட் வைரசின் மூலக்கூறை 3 வழிகளில் செலுத்துவது (viral vector, mrna, protein subunit)
 13. இலங்கையரசு, மக்கள் விரும்பினாலும் சரி விரும்பாவிட்டாலும் கோரானா தடுப்பூசியினைப்போட்டு நாட்டை வெளினாட்டு உல்லாசப்பயணத்திற்காகத்திறந்து விடும், ஏற்கனவே நாடு வரலாறு காணாத மோசமான பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது, கோவிட் இறப்பை வெளியிட்டால் வெளினாட்டவர்கள் வரமாட்டார்கள் அதற்காக உண்மையை மூடி மறைக்கலாம். இலங்கையரசுக்கு கோவிட்டை விட நாட்டின் பொருளாதார நெருக்கடிதான் அதிக தொல்லையான விடயமாகவுள்ளது. இலங்கைக்கு கோவிட் அரசன், பொருளாதாரம் தெய்வம், நின்று கொல்லும்.
 14. கடனை திருப்பி செலுத்தாது விடுவதைதான் கடன் பதிவழித்தல் என்று குறிப்பிட்டேன். இலங்கை பொருளாதார நிலவரம் பற்றி உங்கள் கருத்து என்ன? எனது புரிதலில் இலங்கையரசு ஒரு மீள முடியாத சிக்கலில் மாட்டியுள்ளது.
 15. தகவலுக்கு நன்றி, அரசு நாட்டை கோவிட்டுக்காக முடக்காது எனெனில் கோவிட் நாட்டின் பொருளாதாரத்தை சீர்ழிக்கின்றது, அரசின் கடன் தொகை மொத்த தேசிய வருமானத்தில் 101% உள்ளது, வெளினாட்டுக்கடன் ஒரு கட்டத்தின் மேல் அதிகமாக குறைவடைந்துவிடும், கொடுத்த கடன் திரும்பி வராது என்றால் ஒருவரும் கொடுக்க மாட்டார்கள், சீனா, இந்தியா போன்ற நாடுகள் உதவக்கூடும் ஆனால் ஒரு கட்டத்திற்கு மேல் அரசு கடனை பதிவழித்தேயாகவேண்டும் அதன் பின் நாட்டுக்குத்தேவையான பொருளை வாங்குவதற்கு பணம் வேண்டும், கடன் வழங்குவது யார்? இதனால் அதிகம் பாதிக்கப்படப்போவது அடித்தட்டு மற்றும் நடுத்தர வர்க்கத்து மக்கள்தான். 90 களில் வடபகுதியில் பொருளாதார தடையினை சிங்கள அரசு வித்தித்த போது, தமிழ் மக்கள் அதனை முகம் கொடுத்தார்கள், பலர் நாளொன்றிற்கு ஒரு வேளை மட்டும் உணவு உண்ணும் நிலை ஏற்பட்டது, அப்போது வடபகுதியில் அதிகாரத்திலிருந்தவர்கள் பணப்பயிர்; பயிரிடுவதற்கு தடை விதித்து உணவு பயிர்களுக்கு முன்னுரிமை வழங்கினார்கள், அதற்கு தேவையான உதவிகளையும் வழங்கினார்கள். இது இலங்கைக்கு கடுமையான கால கட்டம், மக்களை வழி நடத்துபவர்கள் சுய நலமின்றி துணிச்சலான முடிவுகளை எடுக்க வேண்டும், இல்லாவிட்டால் ஆப்ரிக்க நாடுகளில் மக்கள் உணவின்றி தவிக்கின்ற நிலமை போன்று ஏற்பட்டுவிடும். இலங்கை வஙுகுரோத்து அடையக்கூடாது ( debt default ) என்பது அனைவரது விருப்பம், ஏனென்றால் பாதிக்கப்படுவது மக்கள்தான்
 16. உங்கள் கருத்து சரியானதுதான், ஆனால் புலம்பெயர் தமிழர்களும் அங்கிருந்தவர்கள்தான், தமிழ் மக்களின் நலனில் அக்கறை கொண்டவர்கள், ஆனால் உதவி செய்வதுடன் நிறுத்திக்கொள்ளாமல் தேவையற்ற தலையீடு செய்வது தவறானதுதான். இத்திரியுடன் தொடர்பற்ற கருத்து, இலங்கை ஒரு வருடத்திற்குள் கடனை மீளழிக்க முடியாமல் வங்குரோத்தாவதற்கு 27 சதவிகித சந்தர்ப்பம் நிலவுவதாக புளூம்பேர்க் கூறுகிறது, 3 மாத அன்னிய செலாவணி கையிருப்பை பேணுவதற்காக சில பொருள்களின் இறக்குமதியை இலங்கையரசு தடை செய்துள்ளதாம், இது தொடர்பாக இலங்கை நிலவரம் என்ன? புலம் பெயர் தமிழர்கள் இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு மட்டும் உதவவில்லை அவர்கள் அனுப்பும் பணம் இலங்கையின் அன்னிய செலாவணிக்கையிருப்பை பேண உதவுகிறது.
 17. அஸ்ட்ரா செனிக்கா கோவிட் தடுப்பூசி அமெரிக்கா மற்றும் சில ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகளில் அங்கீகரிக்கப்படாமையால் அந்த தடுப்பூசியினைப்பெற்றவர்கள் உள் நுழைவு அனுமதி மறுக்கப்படுவார்கள் என்று கூறுகிறார்கள், அவுஸ்திரேலியாவில் விலை குறைவான அஸ்ட்ரா செனிக்கா கோவிட் தடுப்பூசியே பெருமளவில் போடப்படுகிறது.
 18. எனது புரிதலின் அடிப்படையில், பொதுவாக அனைத்து நாடுகளும் மிதக்கவிடப்பட்ட நாணயமாற்று கொள்கையை கடைப்பிடிக்கின்றன, உதாரணமாக இந்திய நாண்யம் இலங்கை நாணயத்தை விட இருமடங்கு பெறுமதி அதிகம் என்றால் இலங்கை இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்யும் பொருளின் பெறுமதியை விட இரண்டு மடங்கு அதிகமான பெறுமதியில் இறக்குமதி செய்கிறது. எவ்வாறு பங்கு சந்தையில் ஒரு நிறுவனத்தின் பெறுமதி அதிகரிக்கும் என்பவர்கள் அதனை வாங்கவார்கள், பெறுமதி குறையும் என்பவர்கள் அதனை விற்பார்கள் இறுதியில் விற்பனை அதிகமாக விருந்தால் விலை குறையும் அதே போல் பணச்சந்தையிலும் ஒரு நாட்டின் பொருளாதாரம் மேம்படும்போது அதன் பெறுமதி இயல்பாக அதிகரிக்கும். ஆனால் அனைத்து சந்தர்ப்பங்களிலும் மிதக்க விடப்பட்ட நாண்யங்கள் தமது உண்மையான பெறுமதியைக்காட்டுவதில்லை உதாரணமாக ஜோர்ஜ் சோரோ என்பவர் நாணயச்சந்தையில் பிரித்தானியா பவுண்ஸை விற்று ஜேர்மன் மார்க்கை பெருமளவில் வாங்கினார் (GBP/DEM) அதற்குக்காரணம் இங்கிலாந்து மத்திய வங்கி பணச்சந்த்தையில் பலமான ஜேர்மன் மார்க்கை விற்று பிரித்தானிய பவுண்ஸை வாங்கி செயற்கையாக தனது பெறுமதியை அதிகரித்திருந்ததாம், ஆனால் ஒரு அளவிற்குமேல் பிரித்தானிய மத்திய வங்கியால் தொடர்ந்தும் பவுண்ஸை வாங்க முடியாமல் ஜோர்ஜ் சோரோவிடம் அடி பணியும் நிலை ஏற்பட்டது. பிரித்தானிய மத்திய வங்கி செயற்கையாக பணப்பெறுமதியை அதிகரிப்பதற்கு காரணம் ஐரோப்பிய யூனியனின் ERM காரணம் என்று கூறப்படுகிறது. மறுவளமாக இரட்டை நாணய மாற்று முறமை நீங்கள் கூறியது போல் அதன் பெறுமதியின் அளவை நிரந்தரமாக குறைத்து வைத்தல், ஜப்பான் நீண்டகாலமாக அவ்வாறே செயற்படுகிற்து. ஆனாலும் பணச்சந்தையில் அதன் பெறுமதி மற்ற நாணயங்களின் பெறுமதி மாற்றத்திற்க்கேற்ப மாறுபடுகிறது. எனது கருத்து தவறாக இருக்கலாம் ஏனெனில் எனக்கு இத்துறை சார் கல்வியறிவில்லை, வெறும் புத்தகங்களிலும் நடைமுறை அனுபவத்திலும் அறிந்து கொண்டவற்றையே குறிப்பிட்டுள்ளேன்.
 19. நாணய மாற்றுக்கொளைகை பொதுவாக அதிகளவில் இரண்டு வகையாக கையாளுவார்கள் 1. மிதக்க விடப்பட்ட நாணயக்கொள்கை - ஏற்றுமதி மற்றும் இறக்குமதிகளின் அடிப்படையில் 2. இரட்டை நாணயக்கொள்கை - ஏற்றுமதி இறக்குமதிக்குப்பயன்படுத்தும் நாணயத்தின் பெறுமதியை அதிகரித்து தமது நாணயத்தின் பெறுமதியைக்குறைத்து ( வெளி நாட்டு வர்த்தகத்திற்கு மட்டும்) இதனால் வெளினாட்டுப்பொருளை இறக்குமதி செய்யும் போது அதன் விலை உள்னாட்டில் அதிகமாக்வும் உள்னாட்டுப்பொருள் சர்வதேச ச்ந்தைகளில் மலிவாகவும் காணப்படும் இதனால் இறக்குமதி குறைந்து ஏற்றுமதி அதிகரித்து நாட்டின் பொருளாதாரத்திற்கு நன்மை உண்டாக்கும். நாணயமாற்று என்பது இரண்டு நாட்டு நாணயங்களினூடாக தீர்மானிக்கப்படுகிறது உ+ம் AUD/USD இதில் முன்னால் உள்ள நாணயத்தை அடிப்படை நாணயம் என்பார்கள்,அதன் பெறுமதி தனியே அவுஸ்திரேலியாவுக்கும் அமெரிக்காவுக்குமிடையான வர்த்தக நிலுவையினடிப்படையில் தீர்மானிக்கப்படும். கனடா மற்றும் அவுஸ்திரேலிய நாணயங்களை commodity நாணயம் என்பார்கள், இயற்கை வழஙல்களின் விலை மாற்றத்திற்கும் நாணய மாற்றத்திற்கும் வெகுநெருக்கம் காணப்படும் உ+ம் பெற்றொலின் விலை அதிகரித்தால் கனடாவின் நாணயப்பெறுமதி அதிகரிக்கும், அதே போல் இரும்பு,நிலக்கரி, அரிய உலகப்பொருதளின் விலை அதிகரித்தால் அவுஸ்திரேலிய நாணயத்தின் பெற்மதி அதிகரிக்கும். அமெரிக்க நாணயத்திற்கும் தங்கத்திற்கும் நேரெதிர் தொடர்புண்டு அமெரிக்க நாணயத்தின் பெறுமதி குறைந்தால் தங்கத்தின் பெறுமதி அதிகரிக்கும். அதே போல் மறுவள்மாக அமெரிக்க நாணயத்தின் பெறுமதி அதிகரித்தால் தஙகத்தின பெறுமதி குறையும் என்பார்கள். இவை தவிரவும் ஒரு நாட்டின் நாணயத்தின் வட்டி வீதமும்,பண வீக்கம், உள்னாட்டு வேலியின்மை விகிதம், தேசிய உற்பத்தி நாணயத்தின் பெறுமதியைத்தூண்டும். நாணயச்சந்தை, பஙகுச்சந்த்தை போன்று சட்ட வரையறை அற்றது (over the counter) 60% பணச்சந்தை நடவடிக்கைகளை(market makers) கையாளுகிறார்கள் முன்னாள் லிபிய அதிபர் கடாபி அவர்கள் தனது எண்ணெய் வர்த்தகத்தை தங்கத்தின்டடிப்படையிலும் ( அமெரிக்க நாணயத்திற்கு மாற்றீடாக), உலக வங்கி மற்றும் ஐ எம் எப் மாற்றீடாகப்பிராந்திய வங்கியை உருவாக்க முயன்றமையாலேயே அவர் அழிக்கப்பட்டார் என்ற கருத்து நிலவுகிறது
 20. ரதி, கோசான் கூறுவது போல மகாவம்ச மனப்பான்மை கொண்ட பேரினவாத அரசு தமிழருக்கு எந்த ஒரு அரசியல் சலுகைகளும் வழங்காது என்பது எனது புரிதல், ஆரமபத்தில் பொருளாதாரம் கல்வி போன்றவற்றில் உயர் நிலையில் இருந்த தமிழரை பெரிய அளவில் நிலங்களை சொந்தமாக வைத்திருந்ததனால் நில உச்ச வரம்புத்திட்டத்தினூடாக அவர்களது பண்ணை நிலங்களை அபகரித்து பெரும்பான்மையினருக்கு அந்தநிலங்களை பிரித்து வழங்கியது, தரப்படுத்தல் மூலம் தமிழ்ர்களின் கல்விக்கு முட்டுக்கட்டை போட்டது, இந்த நிலை இப்போது முஸ்லீம்களுக்கு ஏற்படுகிறது, அவர்கள் பொருளாதாரத்தில் முன்னேறுவது பெரும்பான்மை சமூகத்திற்கு பிடிக்கவில்லை. இலங்கையில் எந்த சிறுபான்மையினமும் பெரும்பான்மையினத்தைவிட உயர்வதை அவர்கள் அனுமதிக்க மாட்டார்கள், சுயாட்சி அல்லது அதிக அதிகாரம் கொண்ட மாகாணசபைகளோ தமிழர்கள் மீண்டும் பொருளாதார மற்றும் கல்வியால் உயர்வடைந்து விடுவார்கள் அதனை ஒரு போதும் பெரும்பான்மையினம் விரும்பாது. சிறுபான்மையினத்திற்குள் மதம்,சாதி, இடம் என்று பிளவுபடாமல் ஒற்றுமையாக இருந்தால் ஓரளவாவது சேதங்களைக்குறைக்கலாம். எனது அபிப்பிராயம் என்னவென்றால் இலங்கையில் உள்ள சிறுபான்மையினம் வாழ்க்கைத்தரத்தில் பெரும்பான்மையினத்தைவிட உயராமல், அவர்களின் கீழ் கவுரவமாக(?) சமாதானமாக வாழலாம்.
 21. இந்திய எல்லைக்குள்ளே உள்ள சீனாவை ஒன்றும் செய்ய முடியவில்லை இந்தியாவால், இலங்கையில் சீனாவின் தலையீட்டை என்ன செய்ய முடியும்? ஆனால் தாம் போகுமிடமெல்லாம் ஆக்கிரமிக்கும் சீனாவை எந்த நாடாலும் இதுவரை எதுவும் செய்யமுடியவில்லை அண்மைய உதாரணம் பிலிப்பீன்ஸ் மற்றும் இந்தியா. இலங்கை சீனாவிடம் பொல்லைக்கொடுத்து அடி வாங்கப்போகிறது வெகு விரைவில்.
 22. எனக்கு வரலாறு சரியாகத்தெரியாது ஆனால் ஆரம்பத்தில் மாவட்ட சபைக்கு அதிக அதிகாரங்கள் கேட்டும் சிங்கள அரசுகள் வழங்கவில்லை என்று கூறுகிறார்கள், மாகாணசபை, தமிழீழம் எல்லாம் பின்னாலில் வந்ததாக இருக்கலாம்.
 23. இராஜீவ் கொலைக்குப்பின், இலங்கைத்தமிழ் அகதிகளுக்காக பெரிய அளவில் உதவி ( கல்வி, முகாமகளில் உள்ள மக்களின் வாழ்க்கைத்தரம், மன உளச்சல் தரும்நெருக்கடி அற்ற) செய்தவர் கருணாநிதி தான்,
 24. இலங்கையில் உள்ளவர்கள் பாவம், உலக நாடுகள் இலங்கையர்களுக்கு தடையற்ற விசா வழங்கினால் தமிழர்கள் மட்டுமல்ல சிங்களவர்கள் கூட இலஙகையை விட்டு வெளியேறிவிடுவார்கள், இலங்கையில் உள்ள முன்னாள் ஜனாதிபதியும் வெளினாடுதான் தற்போதைய ஜனாதிபதியும் வெளிநாடுதான, ஆனால் சாதாரண மக்களமட்டும் பரிதாபத்துக்குரியவர்கள், அவர்கள் அங்குதான் வாழவேண்டும்.
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.