Jump to content
 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

vasee

கருத்துக்கள உறவுகள்
 • Posts

  1297
 • Joined

 • Last visited

 • Days Won

  2

Everything posted by vasee

 1. நன்றி இணையவன், யூரோ அமெரிக்கா ஒரு Down trend பயணிப்பதால் அதனை வாங்குவதனை விட விற்பது அதிக சாதகமாக இருக்கும் அல்லவா (Trend is your Friend)? EURUSD short trading plan அடிப்படையில் 4 மணித்தியால வரைபடத்தில் விற்பதற்கான எனது திட்டத்தினை மேலே உள்ள காணொளியில் குறிப்பிட்டுள்ளேன், இதனை naked trading என்பார்கள். இதன் விபரம் இந்த புத்தகத்தில் உள்ளது, மன்னிக்கவும் இணைப்பினை இணைத்தது தவறாயின் நீக்கிவிடவும். ஆனால் எனது விற்பனை திட்டம் இந்த புத்தகத்தில் உள்ளது போல இல்லை, ஆனால் அடிப்படை இதுதான்.
 2. லிதியம் மட்டுமல்ல பல மூலப்பொருள்கள் உள்ள நாடு rare earth எனப்படும் உலகில் காணபடும் அரிதான மூலப்பொருள்களை கொண்ட நாடு, அரசுகள் தொலைநோக்கற்றவையாகவும் மக்கள் முழு சோம்பேற்களாகாவும் உள்ள நாடு என மற்றவர்கள் கூறுகிறார்கள் (நானும் சோம்பேறிதான்).
 3. AUDJPY, GOLD தங்க வர்த்தகங்களில் விற்க தீர்மானித்துள்ளேன், அவுஸ்ரேலிய ஜப்பான் வர்த்தகம் எலியட் அலை 5வது அலையில் ending diagonal எனும் அடிப்படையில் விற்க உள்ளேன். தங்க வர்த்தகத்தில் Extended 5th wave (Elliott wave) எனும் அடிப்படியில் விற்க தீர்மானித்துள்ளேன்.
 4. நீங்கள் கூறுவது போலானைத்து முதலீடுகளிலும் சாதக பாதகங்கள் உள்ளது, ஆமை புகுந்த வீடும் அதானி புகுந்த நாடும் உருப்படாது என்பது போல இந்த நிறுவனத்திற்கெதிராக அவுஸ்ரேலியாவில் ஏதோ எதிர்ப்புகள் உள்ளது. https://www.theguardian.com/environment/2021/dec/18/adani-is-poised-to-ship-its-first-coal-is-this-failure-for-australias-defining-climate-campaign#:~:text=In 2010%2C an Indian mining,Carmichael coalmine and rail project.
 5. இப்ப நிலமை அனைத்து நாடுகளிலும் மோசமாக உள்ளது, மத்திய வங்கி வங்கிகளிற்கான வட்டி விகித நிர்ணயத்தில் வட்டி விகித குறைப்பை நிகழ்த்தும் போது 1 க்கு 1000 தடவை யோசித்து மெதுவாக வட்டியினை குறக்கும் வங்கிகள், வட்டி விகிதம் அதிகரிக்கும் போது மட்டும் போட்டி போட்டு வட்டி விகிதத்தினை உயர்த்துவார்கள். பாவம் மக்கள் ஏற்கனவே அளவிற்கதிகமான வீட்டுக்கடனினால் தவிக்கிறார்கள், சில நகரங்களில் ஏற்கனவே மொத்த வருமானத்தில் (Gross) 28% ஆபத்து கட்டத்துக்கு மேல் அதிகரித்து செல்கிறது. அதற்கேற்ப வருமான அதிகரிப்பின்மை, வருமான இடைவெளி அதிகரிப்பு என பொருளாதாரம் ஒரு நெருக்கடியான நிலையில் உள்ளது.
 6. உலகம் ஒரு பொருளாதார சரிவை எதிர்கொள்ள போகிறதோ என கருதுகிறேன். பெரும்பான்மையான மூலப்பொருள்கள் அமெரிக்க நாணயத்திலேயே விற்பனை செய்யப்படுவதால், அமெரிக்காவில் உள்ள பணவீக்கம் அனைத்து நாடுகளிலும் ஒரு புற்று நோய்போல பரவும். அமெரிக்கா தனது reserve currency எனும் நிலையிலிருந்து இறங்க விரும்பாது, ஏனென்றால் அமெரிக்காவின் மொத்த உற்பத்தியின் அளவை விட அதன் கடன் அளவு அதிகம். உதாரணமாக 1000 ரூபா வருமானம் வருபவர் 1100 செலவு செய்தால் (தொடர்ந்து) என்ன ஆகும்? அமெரிக்க செலவு அதிகமாக இருக்க காரணம் தொடர்ந்தும் தானே உலக சண்டியனாக இருக்க வேண்டும் என்பதற்கான செலவு, அதன் மூலம் ஏற்படும் பொருளாதார ஆதாயம் வருமானம் ஆகும் இவை ஒரு வட்ட பாதையில் பயணிக்கிறது. அமெரிக்காவில் உள்ள வருமான ஏற்றத்தாழ்வு பெரும்பான்மையான மக்களை வறுமைக்கோட்டினை நோக்கி தள்ளும் அதே நேரம் ஏற்படுகின்ற பணவீக்கம் பொது மக்களின் செலவினை மட்டுப்படுத்த பொருளாதார மந்தம் ஏற்படும் நிலையில் ஒரு கட்டத்திற்கு மேல் நிலமை கட்டுக்கடங்காமல் செல்லும் போது பொருளாதார சரிவு ஏற்படும்.
 7. பொதுவாக ஆசிய பிராந்தியத்தில் சீனாவிற்கான பலச்சமநிலையினை இந்தியா பேணுவதாக உளறும் இந்தியர்களுக்கான ஒரு உண்மையின் தரிசனம் இது. இந்தியாவிற்கு அமெரிக்கா உதவுவதால் இந்தியா சீனாவின் பலத்திற்கு நிகராக முடியாது, ஆனால் கொசுத்தொல்லை போல இருக்கும் அவ்வளவுதான், அது இந்தியாவிற்கும் தெரியும் ஆனால் சாமானிய இந்தியர்களுக்கு அது புரிவதில்லை. சீனாவின் பலம் = மலை இந்தியாவின் பலம் = மடு இந்தியாவின் பலம் பாகிஸ்தான் பலத்தினை விட பல மடங்கு அதிகம், அணுகுண்டு இருந்தாலும் பாகிஸ்தானினால் இந்தியாவுடன் பலச்சமநிலை எய்த முடியாது. இந்தியாவின் பலத்திற்கு ஒரு சமநிலை தேவை என அமெரிக்க நினைத்து இந்த உதவியினை பாகிஸ்தானுக்கு அமெரிக்கா செய்திருந்தால் இது ஒரு நல்ல சூழ்நிலை ஒன்று எமக்கு உருவாகி வருவதற்கான அறிகுறி. பல துன்பங்களுக்கு மத்தியிலும் எமது உரிமைக்காக போராடும் மக்களுக்கு இந்த அமெரிக்க முடிவு ஒரு நம்பிக்கையினை தருகிறது. இந்த கருத்து எனது உளறலாகவும் இருக்கலாம்.
 8. பனிப்போர் நிலவிய காலம் போல 2009 இல் இருந்திருந்தால் எமது நியாயமான போராட்டம் நசுக்கப்பட்டிருக்காது, அந்த கால கட்டத்தில் ஒரு பலச்சமநிலை நிலவியது. நீங்கள் கூறுவது போல புலிகள் அற்ற சூழ்நிலையில் எமக்கு இந்தியாவினை தவிர்த்து தீர்வு கிடைக்குமா? என்பது சிந்திக்க்க வைக்கும் கேள்விதான்? திரும்பவும் எமது மக்கள் போராட முடியாத நிலையில், உலக ஒழுங்கில் ஏற்படும் மாற்றம் இந்தியாவின் இந்த புதிய உலக ஒழுங்கில், நடுவுநிலை எனும் பம்மாத்து கொள்கையிலிருந்து ஏற்படும் மாற்றமே எமக்கான தீர்வினை கொண்டுவரும். இந்தியாவினை பொறுத்தவரை எமது உரிமை பிரச்சினை அவர்களது துருப்பு சீட்டு, இலங்கையில் தொடர்ச்சியாக பிரச்சினை ஏதோ ஒரு வகையில் இருந்து கொண்டிருக்க வேண்டும் என்பதுதான் இந்தியாவின் கொள்கை. எரிகின்ற இலங்கையில்தான் இந்தியாவினது பாதுகாப்பு தங்கியுள்ளதாக இந்தியா கருதுகிறது. இலங்கை பொருளாதார தன்னிறைவு அடைந்துவிட்டால் இந்தியாவின் பாதுகாப்பிற்கு எப்போதும் அச்சுறுத்தலாக இருக்கும் என்பதற்கு இலங்கை போதுமான உதாரண மாதிரிகளை இந்தியாவிற்கு வரலாற்றில் காட்டியுள்ளது, இனியும் தாராளமாக காட்டும் அது இந்தியாவிற்கும் தெரியும். ஆனால் இலங்கையின் நிலை மோசமாக உள்ளதால் அடக்கி வாசிக்கின்றது. இலங்கையில் ஏதாவது ஒரு பிரச்சினை இல்லாவிட்டால் இலங்கை பொருளாதார மற்றும் ஒரு அரசியல் உறுதித்தன்மை உருவாகி விடும் அதனை தடுப்பதற்கு இலங்கையிலுள்ள அனைத்து சிறுபான்மையினரின் பிரச்சினையை உபயோகித்து கொள்கிறது. இந்தியாவின் கொள்கை வகுப்பில் மாற்றம் ஏற்படுமா? இல்லை இந்தியாவின் துருப்பிடித்த கொள்கை வகுப்பில் மாற்றம் ஏற்படாது. அப்படியானால் எப்படி எமக்கு தீர்வு கிடைக்கும்? நடுவுநிலைமை வகிப்பதாக கூறிக்கொண்டுள்ள இந்தியா; இரஸ்சிய, சீன சார்புநிலை எடுத்தாலோ அல்லது முழுக்க அமெரிக்க சார்பு நிலை எடுத்தால்தான் ஏதாவது மாற்றம் நிகழும் என கருதுகிறேன். கவலைப்பட வேண்டாம் இந்தியா தானாகப்போய் விரைவில் மாட்டிக்கொள்ளும், நீண்ட காலத்திற்கு இரட்டை தோணியில் பயணம் செய்யமுடியாது என கருதுகிறேன்.
 9. இது ஒரு ஆரோக்கியமான சுயாதீனமான உலக ஒழுங்கு ஒன்றிற்கான தருணம் உருவாகி வருகின்றது என்பதற்கு எடுத்துகாட்டு. இதுவரை காலமும் சாதாரண தனிமனித உரிமைகளூக்காக போராடும் சாமானியர்களை ஆதிக்க கரங்கள் கொண்டு அடக்கப்படும் நிலையில், இந்த புதிய உலக ஒழுங்கு அனைத்து விடயங்களையும் சமநிலைபடுத்தும். ஜூலியன் அசாஞ்ச் விடுதலைக்காகவும் குரல் கொடுக்க வேண்டும். பல நியாயமான போராட்டங்களை அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் துணைகொண்டு காலில் போட்டு நசிக்கிய நிலமை இனி மாறும், பல தேசிய இனங்களின் உரிமைகள் பெறப்படுவதற்கு ஏற்ற கீரைக்கடைக்கு எதிர்கடை வேணும் என்ற நிலை உருவாவது மிகவும் சந்தோசமான விடயம். இனி எமது பிரச்சினைக்கும் பன்முகம் கொண்ட தீர்வு அணுகுமுறை உருவாக உள்ளது.
 10. மன்னிக்கவும் இதனை மறுக்கும் நபர்களுள் நானும் ஒருவர். உலகமெல்லாம் தனது கூட்டாளிகளுடன் போய்கூட, கட்டத்துரை (அமெரிக்கா) செமையாக வாங்கி திரும்பி ஒடி வந்த வரலாறுகள் உள்ளது, அப்படி கள நிலவரம் இருக்கும் போது ஒரு தனிநாடாக இருந்து கொண்டு எவ்வாறு இரஸ்சியாவினால் உலகை வெல்ல முடியும்?
 11. 30 ஆண்டுகால போர் ஒரு சமூகத்தினை தரம் தாழ்த்தியுள்ளது போல இருக்கின்றது, ஒரு தாய் தனது 11 வயது குழந்தையினை போதைவஸ்து விற்பதற்கு பயன்படுத்துகின்ற நிலை மனதை உடைக்கின்ற செயல். இந்த நிலையிலிருந்து மீழ முடியாதவகையில் தொடர்வதற்கு உதவியாக இருக்கும் சட்ட ஒழுங்கையோ அல்லது மக்கள் அடிப்படை தேவைகளை உறுதிப்படுத்தாமல் ஊழல் செய்யும் தமிழ் அரசியல்வாதிகளை கண்டுகொள்ளாமல் செல்லும் நாம் அனைவரும் குற்றவாளிகளே.
 12. எனக்கென்னமோ உக்கிரேனால்தான் மேற்குலகு பாடுபடப்ப்போகிறது போல இருக்கு. அனைத்து நாடுகளும் போட்டி போட்டு கொடுக்கும் ஆயுதங்களையெல்லாவற்றையும் உக்கிரேன் திருப்பி போட்டு (Reverse engineering) தனது தொழில்னுட்பத்தில் உற்பத்தி செய்து ஆயுத சந்தையில் விற்கலாம். ஏற்கனவே கைமார்ஸ் தொழில்னுட்பத்தினை குழப்புகின்ற வித்தை வெளியாகிவிட்டதாக கூறுகிறார்கள், இது உக்கிரேனின் விளையாட்டாக இருக்க வாய்ப்புண்டு. என்னை பொறுத்தவரை இரஸ்சியாவினை விட உக்கிரேன் ஆபத்தானது.
 13. தொடர்ந்து எழுதுங்கள், எந்த கருத்தும் தவறான கருத்தல்ல, அதனை பார்க்கும் எமது பார்வையில்தான் சரி, தவறு என்றுள்ளது என்பதனை புரிந்துகொண்டாலே எந்த பிரச்சனையும் இல்லை. ஒவ்வொருவரும் ஒவ்வொரு விடயத்தினை ஒவ்வொரு கோணத்தில் அணுகுகிறார்கள் அவ்வளவுதான்.
 14. அவுஸ்ரேலிய தினம் என கொண்டாடப்படும் தினம் பூர்வீக குடிமக்களை கொன்று ஆக்கிரமிப்பின் அடையாளமாக கொண்ட்டாடப்படும் தினம். மேற்குலகில் இவ்வாறான ஒரு தினம் கொண்ட்டாடபடுவது ஏன் என்பது புரியவில்லை, இலங்கையில் முள்ளிவாய்கால் படுகொலையினை மேற்கொண்ட தினத்தினை சிங்களம் தமது வெற்றி தினமாக கொண்டாடுவது ஒரு பெரிய விடயமில்லை. ஆனால் அவுஸ்ரேலியாவில் இந்த அவுஸ்ரேலிய தினம் கொண்ட்டாடப்படுவது என்பது அவுஸ்ரேலியா இலங்கைக்கு அதிக தொலைவில் இல்லை என்பதையே காட்டுகிறது.
 15. "இது விசயம் தெரியாதவைக்கு" இந்த கருத்துக்கு 100 வீதம் பொருத்தமான நபராக என்னை கருதுகிறேன். இதற்காக நான் ஊடகங்களை குறை சொல்லப்ப்போவதில்லை, ஏனென்றால் இது தான் அவர்களது தொழில் (பொய்களை உண்மை போல் கூறுவது). எனது அறியாமை, கவன்யீனம் (ஆர்வமின்மை) என்பவற்றின் அடிப்படையில் இந்த ஊடக வாந்திகளை உண்டு அதனை மீண்டும் வாந்தியெடுக்கும் மேற்குலக கலாச்சாரத்தில் வாழும் சாதாரண மனிதனான என்னைதான் குறைகூறவேண்டும். கொடுமை என்னவென்றால் இந்த கருத்துக்கு இதுவரை ஒரு ஆதரவு புள்ளியும் இடப்படவில்லை (முதலாவது ஆதரவு புள்ளி எனது என்பதை பெருமையுடன் கூறிக்கொள்கிறேன்).
 16. தங்க வர்த்தகம் stop loss எட்டி நட்டத்துடன் மூடப்பட்டுவிட்டது
 17. இதில் கொடுமை என்னவென்றால் தமது இராணுவம் செய்யும் கொடுமைகளை அந்த மக்களால் நம்ப முடிவதில்லை, அதனை ஓரளவு புரிந்து கொள்ளலாம், தேசப்பற்று. நாங்கள் ஏன் அவர்களின் தவறுகளை நியாப்படுத்தவேண்டும், உண்மையில் இரஸ்சியா உக்கிரேன் குற்றம் சாட்டுவதுபோல எந்த குற்றங்களில் ஈடுபடாவிட்டாலும் ஆக்கிரமிப்பின் விளைவாக வரும் இந்த குற்றசாட்டுக்களை அவர்கள் விரும்பாவிட்டாலும் முகம் கொடுத்தே ஆகவேண்டும். அதனால் உக்கிரேனின் அனைத்து குற்றசாட்டுக்களுக்கும் அந்த நாட்டை ஆக்கிரமித்த இரஸ்சியா தகுதியானதுதான். இதனை சொல்வதால் நான் இரஸ்சியாவிற்கெதிரான அல்லது உக்கிரேனிற்கு ஆதரவு என்றெல்லாம் கிடையாது, இதுதான் நடைமுறை.
 18. இந்த சமகாலப்பகுதியில் இந்திய உளவுத்துறையிலிருந்த உன்னிகிருஸ்ணன் என்பவர் இந்தியாவின் இலங்கை தொடர்பான செயற்பாடுகளை அமெரிக்க உளவுதுறையிடம் தெரிவித்திருந்ததாகவும் கேள்விப்பட்டேன். பெண் ஒருவர் இந்த விடயங்களை அவரிடமிருந்து பெற்றதாகவும் அதனை தேன் பொறி நடவடிக்கை என கூறப்படுகிறது. இதன் பிரதிபலனாக இந்திய இலங்கை ஒப்பந்தம் நிகழ்ந்த உடனேயே அமெரிக்கா இந்தியாவினை பாராட்டியிருந்தது, இந்த விடயம் இந்திய மட்டத்தில் அதிர்ச்சியினை ஏற்படுத்தியதாகவும் அதன் பின்ன்னரே அவர்கள் மேற்கொண்ட விசாரணையின் வாயிலாக இந்த உன்னிகிருஸ்ணன் விவகாரம் வெளியானதாக கூறப்படுகிறது, இந்த தகவல்கள் எந்தளவிற்கு உண்மையானது என்பது தெரியாது.
 19. நான் கேள்விப்பட்ட வகையில் 1987 ஆம் ஆண்டு அப்போது வடமாராட்சி தங்கியிருந்த தலைவரை இலக்காகக்கொண்டு இலங்கை இராணுவத்தினர் விடுதலை நடவடிக்கை (Operation liberation) என்னும் இராணுவ நடவடிக்கை ஒன்றினை மேற்கொள்ள தயாராக இருந்தனர், இந்த திட்டத்தினை அறிந்து கொண்ட அல்லது தெரியாமலேயோ ( சிங்களம் வேண்டும் என்றே தவறான தகவலை கசிய விட்டிருக்கலாம்) இந்திய றோ உளவு அமைப்பு இலங்கை இராணுவம் யாழ்நகரை கைப்பற்ற வலிகாமம் மீது தாக்குதல் மேற்கொள்ள உள்ளதாக புலிகளிடம் தகவல் தெரிவித்திருந்தது. புலிகள் தமது படைகளை வலிகாமம் நோக்கி திருப்பியிருந்த வேளையில் வடமராட்சியில் இராணுவத்தால் தாக்குதல் நிகழ்த்தப்பட்டதாக கேள்விப்பட்டேன், இந்த தாக்குதலை டென்சில் கொப்பே கடுவ எனும் சிங்கள இராணுவத்தளபதி மேற்கொண்டாராம். இராணுவம் முழுமையாக வடமாராட்சியினை கைப்பற்றிய பின்னர் இந்திய விமானம் மூலம் வடமாராட்சியில் உணவு பொதி போடப்பட்டது (தரமற்ற உணவுப்பொருள்கள் என கேள்விப்பட்டேன்). அதன் பின்னர் நெல்லியடி முகாம் கருபுலிதாக்க்குதலில் அழிப்பு, அதனை தொடர்ந்து இந்திய இலங்கை ஒப்பந்தம் நிகழ்ந்தேறியதாக கேள்விப்பட்டேன். தரவுகள் தவறாக இருக்கலாம்.
 20. சீனா, இந்தியா நினைப்பது போல இந்தியா தொடர்பாக பெரிதாக அலட்டிக்கொள்வதில்லை என்பது தான் உண்மை அவ்வாறு சீனா இலங்கை தொடர்பாக சிந்திப்பதாயின் நீங்கள் கூறுவது போல செய்தால், இலங்கையினூடாக இந்திய பொருளாதாரத்தினையே சீனாவினால் ஆட்டங்காணச்செய்யலாம், ஏனெனில் இந்தியாவின் ஆழ்கடல் கப்பல் போக்குவரத்து இலங்கை கொழும்பு துறைமுகம் ஊடாகவே நிகழ்கிறது, ஏற்கனவே கொழும்புதுறைமுகப்பங்குகளில் 85% பங்குகளை சீனா மறைமுகமாக தனதாக்கியுள்ளது என கூறப்படுகிறது. சிங்கப்பூர் தற்போது முழுமையான வழ்ங்கலை செய்யமுடியாமல் உள்ள நிலையில் இலங்கை அதன் அமைவிடம் மூலமாக மிக முக்கிய கேந்திர நிலையில் உள்ளது (சிங்கப்பூரை விட), சீனா தனது வியாபார அடிப்படயிலேயே கொழும்பு துறை முகத்தில் ஆர்வம் காட்டுகிறது என கருதுகிறேன் இந்தியா நினைப்பது போல இந்தியாவையெல்லாம் ஒரு தனது எதிரியாக சீனா நினைக்கவில்லை என கருதுகிறேன்.
 21. உங்களுக்கு இந்த திரைப்படம் பிடிக்கும் என நம்புகிறேன்.
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.