Everything posted by vasee
-
நாட்டிற்கு வந்த சுமார் 30 கப்பல்கள் திரும்பிச் சென்ற அவலம்
2023 ஆண்டிற்கான அரச செலவு 5357 பில்லியன் ரூபா என கூறுகிறார்கள், கடந்த ஆண்டிற்கான் மொத பொதுச்செலவு அதனைவிட அதிகமாக வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 2023 பொதுச்செலவில் 43% (2456 Billion) கடனுக்கான வட்டி செலுத்துதலுக்காக செலவழிக்கப்படுவதாக தரவுகள் கூறுகின்றன, இலங்கை அரசு 2028 வரை கடன் மீளழிப்பு மற்றும் வட்டி செலுத்துவதனை இடைநிறுத்தியுள்ளமையால் இவை உள்நாட்டு கடனுக்கான வட்டியாக இருக்கலாம். அரச ஊழ்யர்களுக்கான சம்பள கொடுப்பனவு இரண்டாவது பெரிய செலவாக உள்ளது (1005 Billion) , இது கிட்டதட்ட கடனுக்கான வட்டிக்கொடுப்பனவின் அரைவாசி செலவாக உள்ளது. 2028 இல் அரசு கடன் மீளழிக்க தொடங்கும் போது இன்னும் இந்த சுமை அதிகரிக்கும், இந்த இடைப்பட்ட காலகட்டத்தில் (2025 -2028)நிலமையின் தீவிரத்தினை உணர்ந்து அரச ஊழியர்கள் வேலைகளில் கவனம் செலுத்த வேண்டும்.
-
நாடளாவிய ரீதியில் ஆலயங்களிலும் வீடுகளிலும் சிறப்பாக இடம்பெற்ற தைப்பொங்கல் பண்டிகை
தமிழர்கள் மட்டுமல்ல உலகில் தற்போதய மதங்கள் உருவாவதற்கு முன்னரே இயற்கை தெய்வ வழிபாடு இருந்துள்ளது, பயத்தினடிப்படையிலேயே இந்த வழிபாடு நிகழ்ந்துள்ளதாக கூறப்படுகின்றது. ஆனால் பொங்கல் நிகழ்வு ஒன்றும் சாமி கண்ணை குத்தும் என்று பாமரர்களை ஏமாற்றும் ஒரு மத நிகழ்வல்ல மாறாக கோசான் கூறுவது போல உலக மக்கள் கொண்டாடும் அறுவடை தின கொண்டாட்டம். அறுவடைக்கு உதவிய இயற்கைக்கு நன்றி சொல்லும் நிகழ்வாக அது பின்னாளில் மாறியிருக்கலாம், அதனை மத உரிமை கொண்டாடும் பரிதாப நிலையில் தற்போது பொங்கல் உள்ளது. பொங்கலுக்கு மத சாயம் பூச விளைவது இல்லாத ஒன்றை உருவகிக்கும் ஒரு முயற்சி.
-
பதியம்
மிளகாய், மற்றும் தக்காளி என இரு வெவ்வேறாக ஒட்டுக்கள் சுண்டைங்காய் செடியில் இன்று வைத்துள்ளேன்.
-
புட்டினுடனான சந்திப்புக்கு ஏற்பாடு – ட்ரம்ப் அறிவிப்பு!
இந்த பெரிய எனும் நினைப்புத்தான் பேரழிவுகளுக்கு காரணம், கேர்க்ஸில் உள்ள உக்கிரேனிய இராணுவத்தளபதி ஒலே கூறிய விடயம், இரஸ்சிய இராணுவம் தனது சிறிய இழப்பு ஏற்பட்டவுடன் அப்பகுதியில் இருந்து உடனடியாக பின் வாங்கிவிடுகிறார்கள், ஆனால் உக்கிரேன் தொடர்ந்து இழப்புக்க்களுக்கும் மத்தியில் இடங்களை தக்கவைக்க வேண்டிய நிலை உள்ளது என கூறுகிறார். இரஸ்சியா பெரிது சிறிது என நினைப்பதாக நினைக்கவில்லை அவர்கள் இந்த போரை அதன் நுட்பத்துடன் அணுகின்றார்கள், இங்குதான் மேற்கு தவறிழைக்கிறது நாம் விரும்புவதனை அவர்கள் செய்வார்கள் என எதிர்பார்ப்பது. எந்த விடய்ங்களையும் பின்புலமில்லாமல் சிந்திப்பது கடினம் (Bias), ஆனால் அவ்வாறு சிந்திக்க தொடங்கினால் பிரச்சினை வெளியில் இருந்து வருவதில்லை நாமாகவே உருவாக்குறோம் என்பது புரியும். 😁
-
பொங்கல் ரிலீஸ்… ஜெயிக்கப் போவது யாரு?
இது ஒரு மலையாளத்திரைப்படம் தமிழ் மொழியிலும் தரமான பிரதி இணையத்தில் உள்ளது. இந்த திரைப்படத்திலும் படத்தின் ஆரம்பத்தில் ஒரு காட்சியுடன் திரைப்படம் ஆரம்பமாகும் அந்த காட்சி பின்னர் படத்தின் முடிவில் இனைக்கபட்டுள்ளது. இது சத்திய ஜித்திரே கூறியதான ஒரு திரைப்படத்தின் ஆரம்பத்தில் துப்பாக்கியுடன் ஒரு நபர் வீட்டின் முன் வந்து நின்றால் அந்த படத்தின் இறுதியில் துப்பாக்கி சுடுவதுடன் முடிவடையும் எனும் கோட்பாடு பரவலாக இந்திய திரைப்படங்களில் அதிகம் இது பயன்படுத்தப்படுகிறது. ஆனால் பெரும்பாலும் ஆரம்ப காட்சியினை முடியும் போது மறந்துவிடுவதுண்டு ஆனால் படத்தின் குறித்த காட்சியினை மறக்காமல் இருக்க அதனூடு காட்சியினை விபரிப்பதான ஒரு காட்சி அமைப்பு ஒரு சில நொடிகள் மட்டும் நீடிகின்ற அந்த காட்சி அமைப்பு சிறப்பாக இருந்தது. சத்தியஜித் ரே செக்கோவின் துப்பாக்கி(அன்டன் செக்கொவ்) எனும் கதையமைப்பினை உள்வாங்கி இவ்வாறான ஒரு காட்சி அமைப்பினை உருவாக்கினாரோ என எண்ணத்தோன்றுகிறது (சத்தியஜித் ரேஇன் படங்களை பார்த்ததில்லை கேள்விப்படதனடிப்ப்டையில்). இந்த படத்தில் உள்ள முக்கியத்துவத்தினை குறிப்பிட விரும்பவில்லை, அதனை குறிப்பிட்டால் இந்த படம் ஏற்படுத்தும் உண்மையான அந்த அனுபவத்தினை குறைத்துவிடும். ஆனால் பாத்திர கட்டமைப்புக்கள், அதற்க்காக தேவையற்ற காட்சிகளற்ற (செக்கோவின் துப்பாக்கி), விறு விறுப்பான காட்சி அமைப்புக்கள் என மிகவும் சுவாரசியமான படம் முழு குடும்பத்துடன் பார்க்கக்கூடிய ஒரு சிறந்த குடும்ப படம். இப்படிப்பட்ட திரைப்படங்கள் ஏன் தமிழில் வருவதில்லை?
-
கலிபோர்னியாவில் காட்டுத்தீ: 30 ஆயிரம் பேர் பாதிப்பு
அரசுகள் தேவையில்லாமல் பணத்தினை செலவழிப்பார்கள் ஊழல் செய்வார்கள் ஆனால் மக்களை பாதுகாப்பதற்கான செலவுகளை குறைப்பார்கள்.
-
புட்டினுடனான சந்திப்புக்கு ஏற்பாடு – ட்ரம்ப் அறிவிப்பு!
வட கொரியாவிற்கும் இரஸ்சியாவிற்குமிடையே பாதுகாப்பு ஒப்பந்தம் நடைமுறையில் உள்ளது, ஒரு நாடு தாக்கப்பட்டால் மற்ற நாடு உதவிக்கு செல்லும், இங்கு இரஸ்சியாவின் கேர்ஸ்க் பகுதியின் மீது தாக்குதல் நடத்தப்படுகின்றமையால் அதில் வட கொரியா ஈடுபடுவதற்கு எந்த தடையுமில்லை. ஆனால் மறுவளமாக இரஸ்சியாவின் மீது மேற்கு நாட்டு படைகள் தாக்குவதற்கு எந்த முகாந்தரமும் இல்லை என நினைக்கிறேன் ஏனெனில் அவர்கள் உக்கிரேனுக்கு நேட்டோவில் இணைவதற்கு கூட அனுமதி கொடுக்கிறார்களில்லை ஆனால் அவர்கள் பின்னணியில் இருந்து இரஸ்சிய படைக்கெதிராக போராடுகிறார்கள். தற்போது உக்கிரேன், போர், பொருளாதார அழுத்தம் என பல வகையாலும் அழிவினை சந்தித்துக்கொண்டுள்ளது ஆனாலும் நேட்டோவில் அங்கத்துவமோ ஐரோப்பிய ஒன்றியத்திலோ இணைக்கவில்லை. தற்போது உக்கிரேன் உடையும் தருணத்தில் உள்ளது, தற்போதுள்ள நிலை நீடித்தால் உக்கிரேன் சடுதியாக உடைந்துவிடும். அது 6 மாதத்திலும் நிகழலாம் 3 மாதத்திலும் நிகழலாம், இதனை உடனடியாக தடுக்கவேண்டுமாயின் மேற்கின் இராணுவத்தினை உதவிக்கு அனுப்பவேண்டும் அதற்கு உக்கிரேனை நேட்டோவில் இணைக்க வேண்டும் செய்வார்களா? இங்கு தத்தமது நலனையே முன்னிலைப்படுத்துவதால் நிட்சயமாக உக்கிரேனை நேட்டோவிலும், ஐரோப்பிய ஒன்றியத்திலும் சேர்க்க மாட்டார்கள், ஆனால் தேவைப்பட்டால் இரஸ்சியாவுடன் சேர்ந்து பேச்சுவார்த்தை எனும் போர்வையில் உக்கிரேனை கொள்ளை அடிப்பார்கள். இங்கு வட கொரியா இரஸ்சியாவில் நிற்பது பிரச்சினை அல்ல, நம்பியவர்களால் ஏமாற்றப்பட்டு நடுத்தெருவில் விடப்பட்டுள்ளது உக்கிரேன். வட துருவமோ, உக்கிரேனோ வளங்களை பங்குபிரிப்பதில் நிலவும் போட்டிதான் தற்போதய புதிய உலக ஒழுங்கு, இதில் வெல்பவர்கள் அனைத்தையும் எடுத்து கொள்வர்.
-
கலிபோர்னியாவில் காட்டுத்தீ: 30 ஆயிரம் பேர் பாதிப்பு
இதனைத்தான் சொந்த செலவில் சூனியம் செய்வதென்பது. ஆம், இவை தவிர பல மருத்துவ நலன் கொண்டது, நீரிழிவு நோயையும் கட்டுபடுத்துகிறது என இணையத்தில் உள்ளது.
-
கலிபோர்னியாவில் காட்டுத்தீ: 30 ஆயிரம் பேர் பாதிப்பு
இங்கு பெரும்பாலானவர்களின் வீடுகளில் இந்த மரம் உள்ளது ஆனால் எமது வீட்டில் இந்த மரம் இல்லை. 19 ஆம் நூற்றாண்டு காலப்பகுதியில் அவுஸ்ரேலியா இந்த மரங்களை கலிபோரனியாவிற்கு விற்றதாக கூறுகிறார்கள்.
-
கலிபோர்னியாவில் காட்டுத்தீ: 30 ஆயிரம் பேர் பாதிப்பு
அவுஸ்ரேலியாவின் இயற்கை மரமான யுகலிப்ஸ் (Eucalyptus) இயல்பிலேயே எரியக்கூடிய ஒன்று அது காட்டுத்தீ ஏற்படுவதற்கு ஒரு காரணியாக இருக்கின்றது, இந்த மரத்தினை கலிபோர்னியாவிற்கு அவுஸ்ரேலியா விற்றதாக கூறுகிறார்கள்.
-
கலிபோர்னியாவில் காட்டுத்தீ: 30 ஆயிரம் பேர் பாதிப்பு
- கலிபோர்னியாவில் காட்டுத்தீ: 30 ஆயிரம் பேர் பாதிப்பு
https://www.youtube.com/watch?v=az4lkKjAsdI- கலிபோர்னியாவில் காட்டுத்தீ: 30 ஆயிரம் பேர் பாதிப்பு
அவுஸ்ரேலியாவிலும் இந்த காட்டுத்தீ ஒரு பொதுவான நிகழ்வாக உள்ளது, முன் ஆயத்த நடவடிக்கையாக தீ அபாயம் உள்ள பகுதிகளை குளிர்காலத்தில் அவர்களாகவே தீ பரவாமல் தகுந்த பாதுகாப்புடன் எரிப்பார்கள், இந்த முன்னேற்பாடுகள் மற்றும் அவசர பாதுகாப்பு ஊழியர்கள் இவற்றுக்கென நிதி ஒதுக்கி வைத்திருப்பார்கள். 2019 இல் அப்போதிருந்த அரசு அந்த நிதியத்தினை குறைத்திருந்தது, அபோது ஏற்பட்ட தீ விபத்தில் 34 மக்கள் பலியானார்கள் பல இலட்சக்கணக்கான உயிர்னங்கள் கொல்லப்பட்டன பல மில்லியன் கெக்டெயர் நிலங்கள் தீக்கு இரையாயின. தீ பரவும் போது தொடர்ச்சியற்று காற்றின் உதவியினால் தீ தாவி பரவியது, அப்போது வெப்பம் 40 களில் இருந்தத்டு என நினக்கிறேன். அப்பகுதிகளில் வாழ்ந்த மக்களுக்கு தீ பரவல் தொடர்பான தெளிவு இருந்தும் சிலர் அந்த தீயில் சிக்கி கொண்டார்கள். தீ ஏற்பட்ட போது அப்போதிருந்த அவுஸ்ரேலிய பிரதமர் தனது விடுமுறியினை களிப்பதற்கு வெளிநாடு சென்றுவிட்டார், திரும்பி வந்து ஊடகங்களிடமும் பாதிக்கப்பட்ட மக்களிடமும் மாட்டிக்கொண்டார்.- கலிபோர்னியாவில் காட்டுத்தீ: 30 ஆயிரம் பேர் பாதிப்பு
அதே இந்திய நண்பர் இலங்கையினை சீனாதான் கடன் கொடுத்து சீரழித்தது என்பார், ஆரம்பத்தில் இலங்கை கடன் வாங்கினார்கள் அவர்கள் கொடுத்தார்கள் என்று கூறினாலும் விடுவதாக இல்லை ஒரு நாள் சீனா இலங்கையினை நாசமாக்கவில்லை உங்கள் இந்தியாதான் இலங்கையின் தற்போதய நிலைக்கு காரணம் என கடந்தகால வரலாற்றினை கூறினேன் அதற்கு எதுவும் கூறாமல் கேட்டுக்கொண்டிருந்தார் (அவருக்கே உண்மை தெரியும் போல இருக்கிறது அவர் 60 களில் உள்ளவர் என நினைக்கிறேன்). அனால் அதன் பின்னர் கூட சந்தர்ப்பம் ஏற்படும்போது மீண்டும் சீனாதான் இலங்கையின் சீரழிவிற்கு காரணம் என்பார்😁.- கலிபோர்னியாவில் காட்டுத்தீ: 30 ஆயிரம் பேர் பாதிப்பு
இந்தியாவிற்கும் அமெரிகாவிற்குமிடையே தற்போது நிகழும் இராஜதந்திர நெருக்கடிக்கு ஒரு இந்திய நண்பர் கூறிய காரணம், அமெரிக்காவின் அப்கானிஸ்தான் விலகலின் பின்னர் அமெரிக்க ஆக்கிரமிப்பு காலத்தில் போதைவஸ்து உற்பத்தி செய்யப்பட்ட விளைநிலங்களில் 95% மீண்டும் உணவு பொருள்கள் உற்பத்தி செய்யும் விளைநிலங்களாக மாறிவிட்டமையால் மீண்டும் அமெரிக்க போதை பொருள் நடவடிக்கைகளில் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அதனால் CIA இயின் முன்னய போதை பொருள் கடத்தல் நாடான பர்மாவிலிருந்து இந்திய எல்லை பகுதியினூடாக போதை பொருள் கடத்தலுக்கு (மிசோராம், மணிப்பூர் என நினைவுள்ளது) இந்தியரசு தனது சோதனையினை அதிகரித்து நெருக்கடி கொடுப்பதன் மூலம் அமெரிக்காவின் தென்னாசியாவில் மேற்கொள்ள விரும்ம்பும் செயற்பாட்டுகளுக்கான நிதி வழங்கலை இந்தியா கட்டுப்படுத்துவதனை விரும்பாதமையால் இந்த நெருக்கடி ஏற்பட்டுள்ளது என கூறினார். நீங்கள் கூறும் அமெரிக்க வெள்ளை மா அதுவாக இருக்குமோ😁?- 77 ஆவது சுதந்திர தின விழாவில் பாரம்பரியமாக வழங்கப்படும் செயற்பாடுகளுக்கு கட்டுப்பாடு!
சுதந்திர தினவிழாவில் பாற்சோறு வழங்வார்களா? தற்போது அரிசி தட்டுப்பாடு நிலவுவதால் இப்படி ஒரு நடவடிக்கை எடுக்கிறார்களா?😁- கலிபோர்னியாவில் காட்டுத்தீ: 30 ஆயிரம் பேர் பாதிப்பு
ஏதாவது சுவாரசியமான தகவல்களை அறியலாம் என்பதற்காக கேட்டேன்😁. இன்னுமொரு கேள்வி அன்னபூரணி அமெரிக்கா போனதா அல்லது கோதுமை மா முதலில் இலங்கைக்கு வந்ததா? எது முதலில் இடம்பெற்றது?- கலிபோர்னியாவில் காட்டுத்தீ: 30 ஆயிரம் பேர் பாதிப்பு
யார் இந்த அன்னபூரணி?- வடக்கில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டும் வெளிநாட்டு வாழ் தமிழர்கள்!
இலங்கையிலிருந்து வெளிநாடு செல்வதற்கு மக்கள் முண்டியடித்துக்கொண்டிருக்கும் போது இலங்கை திரும்ப விரும்புகின்ற புலம்பெயர் தமிழர்களை பார்க்கும் போது இக்கரைக்கு அக்கரை பச்சை என்பது உண்மையாகிறது.- மியன்மார் அகதிகள் இன்று கேப்பாபுலவு இடைத்தங்கல் முகாமிற்கு மாற்றம்!
சட்டியில் இருந்து அடுப்பிற்குள் விழுந்த நிலையில் இருப்பதாக அவர்கள் இலங்கைக்கு தவறாக வந்ததையிட்டு நினைக்க கூடும், அதனால் முதலில் அவர்களின் விருப்பத்திற்கு முன்னுரிமை கொடுத்து அவர்கள் போக விரும்பும் நாட்டுடன் பேச்சுவார்த்தை நடத்தி (பங்களாதேசம் அல்லது இந்தியா போக விரும்பகூடும்)அந்தந்த நாடுகள் சம்மதிக்கும் பட்சத்தில் அவர்களை, அவர்கள் விரும்பும் நாடுகளுக்கு அனுப்பி வைக்கவேண்டும், சிலர் தற்காலிகமாக வேன்டுமென்றால் இலங்கையில் தங்க விரும்பகூடும் ஆனால் அவர்கள் குடியுரிமையினை விரும்பமாட்டார்கள் என கருதுகிறேன், தற்காலிக வதிவிடயுரிமையினை விரும்புவர்களை அவர்களுக்குத்தேவையான உதவிகளை செய்வது அரசிற்கு ஒரு பெரிய விடயமாக இருக்க போவதில்லை. மொழி அவர்கள் போகும் பாடசாலையினை பொறுத்தது.- ராணுவ உதவியுடன் கிறீன்லாந்தும் பனாமா கால்வாயும் கைப்பற்றப்படும்.
அமெரிக்கா என்னதான் உலகை ஆட்டைய போட்டாலும் அவர்களையே ஆட்டையப்போடுபவர்கள் இந்தியர்கள், 2022 இல் கிட்டதட்ட 10 பில்லியன் அமெரிக்க டொலர்களை இந்தியர்கள் இந்தியாவில் இருந்தவாறே ஏமாற்றியுள்ளார்கள் என கூறுகிறார்கள். வல்லவனுக்கு வல்லவன்,மோடிஜி இன் டியிட்டல் இந்தியா😁 .- இலங்கை: வாகனங்களில் கடவுள் சிலையை அகற்ற உத்தரவா? புதிய நடவடிக்கையால் சர்ச்சை
இது ஒரு நல்ல திட்டம்தான்.- மியன்மார் அகதிகள் இன்று கேப்பாபுலவு இடைத்தங்கல் முகாமிற்கு மாற்றம்!
இந்த மக்கள் இயல்பு வாழ்க்கையினை மீளப்பெறுவதென்பது மிகவும் சவாலான விடயம் (ஏற்கனவே இலங்கை ஒரு பொருளாதார பாதிப்பிற்குள்ளான நாடு), ஆனாலும் உள்ளூர் மக்கள்தான் முதலில் உதவியுள்ளார்கள் என்பது ஒரு ஆறுதலான விடயம் (முல்லை தீவு மீனவ சங்கத்தின் உதவி), அகதி வாழ்கை வாழ்ந்த எம்மால் ஒரு அகதி வாழ்க்கையின் நடைமுறை அனுபவத்தினூடாக அந்த வலிகளை புரிந்தமையால் அதிலிருந்து இந்த மக்களுக்கான உதவிகளை செய்வதனூடக அவர்களை விரைவாக இயல்பு வாழ்க்கைக்கு திருப்ப முடியும், அத்துடன் நில்லாது அரசு அவர்கள் சுய தொழிலில் ஈடுபடுவதற்கும் சொந்த இருப்பிட வசதிகளை உருவாக்கி வாழ்வதற்கு தேவையானவற்றை செய்யவேண்டும்.- ரஷ்ய இராணுவத்தில் 500 சிங்கள மற்றும் தமிழ் இளைஞர்கள்! வெளியாகும் பகீர் தகவல்கள்
உக்கிரேனின் ஊழல் பற்றி குறிப்பிடும்போது (30 - 40 நிமிடங்கள் என நினைக்கிறேன்) தமது தரப்பில் அதற்கு எதிரான நடவடிக்கையினை எடுப்பதாக கூறியுள்ளார், ஆனால் அதே வேளை வழங்கல் பாதையில் உள்ள ஊழல் பற்றி கேள்வி எழுப்பியதன் மூலம் அவர் மறைமுகமாக ஒரு விடயத்தினை தெளிவுபடுத்துகிறார். இந்த போரில் அவர்கள்தான் இரத்தம் சிந்துகிறார்கள், அப்படியாயின் தமக்கெதிராக தாமே ஏன் செயற்படவேண்டும் என கேட்டு சில விடயங்களை புரிந்து கொள்ளுமாறு பார்வையாளரிடமே விட்டு விடுகிறார்.- ரஷ்ய இராணுவத்தில் 500 சிங்கள மற்றும் தமிழ் இளைஞர்கள்! வெளியாகும் பகீர் தகவல்கள்
இந்த காணொளியில்னை முழுமையாக பார்க்கவும். உக்கிரேன் அவசரகாலநிலை அதிபர் செலன்ஸ்கியின் மனம் திறந்த பேட்டி. - கலிபோர்னியாவில் காட்டுத்தீ: 30 ஆயிரம் பேர் பாதிப்பு
Important Information
By using this site, you agree to our Terms of Use.