Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

vasee

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by vasee

  1. இந்தியா நிதிஸ் குமாரை அடுத்ததாக களமிறக்க வேண்டும், வழமை போல ரிசாப் பண்டினை களமிற்க்குவது சாதகமாக இருக்காது என கருதுகிறேன், பந்து சிறப்பாக செயல்படுகிறது.
  2. 340 ஓட்ட இலக்கை துரத்தும் இந்தியணி 3/33 மதிய உனவு இடைவேளையில் பெற்றுள்ளது, இந்தியா தோல்வியினை தவிர்க்க போராடி வருகிறது, பந்து 26 ஒவர்கலை நிறைவு செய்துள்ளது இருந்தும் பந்து தனது அனுகூலத்தினை இழக்கவில்லை, ரோகித், ராகுல், கோலி அவுடாகி உள்ளார்கள் கோல்யும் ராகுலும் அவுட்டாகியமை இந்தியணியினை பெரும் நெருக்கடிக்குள் தள்ளிவிட்டுள்ளது.
  3. நேற்று கொன்ஸ்டாஸிற்கு விக்கெட் காப்பாளருக்கு பின்னால் எல்லை கோட்டில் இரு வீரர்கள் நிறுத்தப்பட்டு பந்து வீசப்பட்டது, அதன் மூலம் முதலாவது இனிங்ஸில் சாம் கொன்ஸ்டாஸ் செய்தது போல செய்ய விடாமல் தடுத்ததன் மூலம் பந்து வீச்சாளார்களின் லைன், லெந்தினை குறுக்கீடு செய்வது தடுக்கப்பட்டது. ஆனாலும் அவர் இறங்கி வந்து ஆட முயன்றார் அதன் மூலம் பந்து வீச்சாளரைகளை நெருக்கடிக்குள்ளாக்க முயற்சித்தார், அதனையும் இந்திய பந்து வீச்சாளர்கள் ஓவரின் ஆரம்பத்திலேயே அளவு குறைவான பந்துகளை வீசி கட்டுப்படுத்தினர். இறுதியாக சாம் அவுட்டாகி வெளியேறும் போது இந்தியணி அவருக்கு பதிலடி வழியனுப்பி வைப்பு செய்தார்கள், சாம், கோலி அவுட்டாகி வெளியேறும் போது பார்வையாளர்களை எழுந்து நின்று வழி அனுப்பி வைக்க சைகை செய்த்தது போல, ஆனால் சாமிற்கு பிடித்த துடுப்பாட்டகாராக விராட் கோலி இருந்துள்ளார், அதற்காக அப்படி செய்தாரா அல்லது கோலியினை கேலி செய்வதற்காக அப்படி செய்தாரா என தெரியவில்லை, இருப்பினும் இந்திய வீரர்கள் சாமிற்கு கேலியாக அந்த வழி அனுப்பலை செய்தார்கள். வழமையாக மோசமாக நடக்கும் அணியாக இருக்கும் அவுஸ்ரேலிய அணியினை விட மோசமாக இந்திய அணி நடப்பதால், அவுஸ்ரேலிய அணி பார்ப்பதற்கு கண்ணியமான அணியாக தோன்றும் அளவிற்கு மோசமான அணியாக உருவெடுத்திருக்கும் இந்தியணி, என்னதான் திறமை இருந்தாலும் அவர்களது நடத்தை அவர்கள் மேல் வெறுப்பை ஏற்படுத்துகிறது.
  4. அது ஒரு நல்ல முடிவாக இருந்திருக்கும், அவுஸ்ரேலிய அணித்தலைவர் ஒரு பந்து வீச்சாளர், 4 ஆம் நாள் காலையில் கூட பந்து வீசினார் மீண்டும் மாலையில் பந்து வீச வென்டும், பின்னர் சிட்னியில் இடம்பெறும் போட்டியில் பந்து வீச வேண்டும், பந்து வீச்சாளர்களுக்கு ஓய்வு தேவையானதுதான், கமின்ஸ் ஒரு பந்து வீச்சாளராக அந்த முடிவினை எடுக்காமல் விட்டிருக்கக்கூடும். 4 ஆம் நாள் இந்திய பந்து வீச்சாளர்களின் 50 ஓவர்களில் கூட பந்து ஆடுகளத்தின் தாக்கத்தினை ஏற்படுத்திக்கொண்டிருந்தது, இன்றும் அதே போல் செயற்பட்டால் அவுஸ்ரேலியர்கள் திறமையாக செயற்பட்டால் தேனீர் இடைவேளையின் போது இந்தியாவினை வென்றுவிடுவார்கள், இந்தியா ஆட்டத்தினை வெற்றி தோல்வியின்றி முடிக்க போராடும்.
  5. அவுஸ்ரேலியா 9/228 ஓட்டங்களை பெற்று வெற்றிக்கு மிக அருகில் உள்ளது, தற்போது 333 அவுஸ்ரேலியா முன்னிலையில் உள்ளது, இது வரை எந்த ஒரு அணியும் இந்த ஓட்டத்தினை 4 ஆவது இனிங்ஸில் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
  6. தற்போது அவுஸ்ரேலியா தனது இரண்டாவது இனிங்ஸினை விளையாடுகிறது, 47/2 . இந்தியாவின் அற்புதமான பந்து வீச்சு, அதனை எதிர்கொள்ள திணறுகின்ற அவுஸ்ரேலிய மட்டையாளர்கள், முதல் இனிங்ஸில் பரபரப்பு ஏற்படுத்திய சாம் அவுட்டாகி விட்டார், அவுஸ்ரேலிய துடுப்பாட்டக்காரர்களின் கால்களை நகர்த்தி விளையாடத குறைபாடுகளை வர்ணனையாளர்கள் குறிப்பிட்டார்கள். ஆனாலும் இந்தியாவின் பந்து வீச்சு குறிப்பாக புல் லெந்த் பந்து nip ஆகும் அற்புதமான பந்து வீச்சிற்கு இன்றைய ஆட்டம் ஒரு சிறந்த டெஸ்ட் மட்ச் உணர்வை ஏற்படுத்துகிறது. 152 ஓட்டங்கள் முன்னிலையில் அவுஸ்ரேலியா உள்ளது பந்து தனது உறுதியினை இழந்தால் இந்த சிறப்பான பந்து வீச்சு தொடராது.
  7. இலங்கைக்கான இந்திய தூதுவர்கள் அடிக்கடி இவ்வாறு இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதனை தவறாக கருணாநிதி என குறிப்பிட்டிருக்கலாம் என நினைத்தேன்.
  8. ஆம் திடமான ஆதாரமில்லை, இன்றும் பல நாடுகளிடம் தம்மிடம் அணுகுண்டு உள்ளதென அவர்களே கூறுகிறார்கள், ஆனால் அமெரிகா போல் அதனை பயன்படுத்தி அணுகுண்டு உள்ளதென இதில் எந்த நாடும் உறுதிப்படுத்தவில்லை (அதற்காக அந்த மிலேச்சதனமான அணுகுண்டு வீச்சை நியாயப்படுத்தவில்லை), நீங்கள் கூறுவது போல இது சீன பட்டாசாக இருக்கலாம். சிறு வயதில் எனது ஆராய்ச்சி ஒன்று தவறுதலாக போய் பக்கத்து வீட்டு கூரை தீ பற்றி எரிந்தது (தீ பெரிதாக சேதம் ஏற்படுத்தவில்லை மிக சிறியளவில் நெருப்பு ஏற்பட்ட போதே அதனை எனது தந்தை அணைத்து விட்டார் பக்கத்து வீட்டு ஓலை கூரை சிறிதாக சேதம் ஏற்பட்டதாக் நினைவுள்ளது) அதனால் எனது தந்தையிடம் முறையாக வாங்கியுள்ளேன். அணுகுண்டை வீசி நாட்டை அழித்துவிட்டு, ஜப்பான் நட்ட ஈடு கொடுக்க வேண்டும் என்றும் கேட்டார்களாம், ஆனால் ஆராய்ச்சி செய்த எனக்கு அடி கிடைத்தது , எனக்கு எந்த நட்ட ஈடும் எனது அயல்வீட்டிலிருந்து கிடைக்கவில்லை.😁
  9. இதில் 1989 இலிலங்கை அரசிற்கும் புலிகளுக்கும் பேச்சுவார்த்தை நடந்த காலம், இந்த காலத்தில் இலங்கையில் நிலை கொண்டிருந்தத இந்திய அழிவு படை விலகிய காலம், அவர்களை கருநாநிதி வரவேற்க செல்லவில்லை காரணம் இலங்கையில் தமிழ் மக்களை அழித்த படையினரை வரவேற்கமாட்டேன் என. இரண்டாம் கட்ட போர் காலத்திற்கும் 1991 அவர் ஆட்சி நீக்கப்பட்டதற்குமிடையே சில மாதங்கள் இருந்ததனனால் அக்கால கட்டமாகவும் இருக்க முடியாது ஆகவே 1996 இற்கு பின்னரான கால கட்டமாக இருக்க வாய்ப்பிருக்கு என கணித்து உங்கள் வயதினை கணித்துள்ளேன், அப்படி பார்த்தால் நான் உங்களை விட வயதானவன்😁.
  10. 1987 வரை எம் ஜி ஆர் தமிழக முதலமைச்சராக இருந்தவர் அதன் பின்னர் இந்திய இராணுவ பிரச்சினை அதற்கு பின் 1990 நடுப்பகுதியில் மீண்டும் இலஙகை இராணுவத்துடன் பிரச்சினை அந்த கால கட்டத்தில் கருணாநிதியின் ஆட்சி கவிழ்ப்பு பின்னர் ஜெயலலிதாவின் ஆட்சி, 90 களின் பிற்பகுதியில் கருணாநிதியின் ஆட்சி இருந்திருக்கலாம் அப்படி பார்த்தால் நீங்கள் 90 களில் பிறந்த ஒருவராக இருக்கிறீர்கள், நான் உங்களை வயதானவராக பார்த்துள்ளேன்.😁
  11. அமெரிக்கா, இரஸ்சியாவிடம் கூட இல்லாத ஆறாம் தலைமுறை சண்டை விமானத்தினை சீனா தயாரித்துள்ளதாக கூறுகிறார்கள்.
  12. இந்த மெல்பேர்ன் ஆடுகளம் கோடைகாலத்தில் கிரிகெட் விளையாடுவதற்கு பயன்படுத்தப்படுகிறது, அது தவிரிந்த கால கட்டத்தில் இங்கு வேறு போட்டிகள் நடைபெறுவதால் இங்கு Drop pitch பயன்படுத்தப்படுகிறது. அஃவுஸ்ரேலியா நாணய சுழற்சியில் வென்று பந்து வீச்சினை தெரிவு செய்தது, பொதுவாக இந்த ஆடுகளத்தில் முதல் 1 மணிநேரத்திற்கு ஆடுகளத்தில் இருக்கும் ஈரப்பதன் பந்து வீச்சாளருக்கு சாதகமாக காணப்படும், ஆனால் இந்த ஆடுகளம் போட்டிக்கு முந்தய நாள்களில் ஏற்பட்ட மழைகாரணமாக ஈரப்பதன் மற்றும் பிட்ச் மூடப்பட்டு இருப்பதனால் அதற்குள் ஏற்படும் ஈரப்பதன் என பிட்சில் மாற்றம் ஏற்பட்டிருந்தது. இந்த பிட்சின் ஈரப்பதன் போட்டியின் ஆரம்ப நாளான 40 பாகை வெப்பம் மற்றும் புற்கள் 6MM அளவில் வெட்டப்பட்டமை காரணமாக பிட்ச் வேகமாக உலரத்தொடங்கியதாக கருதுகிறேன், இரண்டாம் நாள் மூன்றாம் நாள் முதல் இரண்டு செசசன்ஸ் வரை ஆடுகளம் துடுப்பாட்டத்திற்கு மிக சாதகமாக காணப்படும். தனிப்பட்ட ரீதியில் அவுஸ்ரேலியா பந்து வீச்சினை தெரிவு செய்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும் என நான் கருதுகிறேன், ஆனால் பந்து வீச்சாளரான அவுஸ் அணித்தலைவர் துடுப்பாட்டத்தினை தெரிவு செய்தமைக்கு முதல் நாள் வெப்பம் 40 பாகையிலும் தொடர்ந்து வரும் நாளகளில் வெப்பம் 20 களின் நடுப்பகுதி கொண்டதாக இருக்கும் என்பதால் அவ்வாறன முடிவினை எடுத்தரோ என நான் கருதுகிறேன். இந்தியாவிற்கு இது ஒரு நல்ல சாதகமான சூழல் ஆனால் அவர்கள் வழமை போல அனைத்து சாதகங்களையும் முழுமையாக பயன்படுத்தாமல் மோசமான விளையாட்டினை காட்டியுள்லனர், ஆனால் இன்று அவர்களுக்கு நல்ல வாய்ப்பு உள்ளது குறைந்து 375 ஒட்டங்களையாவது பெறுவதற்கு ஏற்ப நிலையில் ஆடுகளம் உள்ளது, ஆனால் அவுஸ் பந்து வீச்சாளர்களின் நேர்த்தியான பந்துவீச்சு காணப்படுமானால் இந்தியா பரிதாபகரமான ஓட்டங்களை எடுத்து ஆட்டமிழக்கலாம். தற்போது இந்தியா 164/5 எனும் நிலையில் உள்ளது.
  13. இலங்கை அரசிற்கு சிறுபான்மை மக்களை தொடர்ச்சியாக பொருளாதார அழுத்தத்திற்குள் வைத்திருக்கும் தேவை உள்ளது (எமது சமூகத்தில் காணப்படும் ஆதிக்க சாதியினர் கைக்கொள்ளும் உத்தி), அதே நேரம் இந்திய அரசினை மகிழ்விக்க வேண்டும் இதில் எமது மீனவர்களை பலிகடாவாக்காமல் இருந்தால் நல்லது.
  14. இந்தியா ஒரு பலவீனமான பிராந்திய வல்லரசு, அதன் பூகோள நலனை பேணுவதற்காக இரந்து பிச்சை கேதும் நிலையில் நானும் ரவுடிதான் வல்லரசு, முதலில் அயல்நாடுகளுடன் வடிவேலு மாதிரி முண்டுவது பின்னர் காலில் விழுவது இந்த மாதிரியினையே தந்து அண்டை நாடுகளுடன் பேணுகிறது அதற்கு அண்மைய உதாரணங்களாக மாலைதீவு, நேபாளம், பங்களாதேஸ். வட கிழக்கு அபிவிருத்தி திட்டங்களில் சீன, இந்திய தரப்பிற்கு சரிசம பங்களிக்கப்படவேண்டும். அவ்வாறு சீனா நினைத்தால் அதிக அனுகூலம், அதிகமாக சீனா அக்கறை கொள்ளும், ஆனால் சீனா அவ்வாறு நினைக்கவில்லை. எம்மை பொறுத்தவரை எமக்கு இந்தியாவும் அயல் நாடு, சீனாவும் அயல் நாடு அதே போல் இலங்கையும் அயல்நாடுதான், எமக்கு முதலில் எமது நலன் முக்கியம், அதனை முன்னிறுத்தும் தரப்புடன் இணைந்து செயற்பட தயாராக இருக்கவேண்டும்.
  15. பெரும்பான்மை சிங்கள அரசு தமிழ் மக்கள் பொருளாதார ரீதியாக வளம் பெறுவதனையோ, சமூக உயர் நிலையினை அடைவதனையோ என்றும் அனுமதிக்க போவதில்லை (இது உயர் சாதியினர் என கூறிக்கொள்பவர்கள் மற்ற மக்களை அடிமைப்படுத்தி வைப்பதற்கு எமது சமூகத்தில் பயன்படுத்தும் உத்தி), அதற்கான நடவடிக்கைகளில் ஒன்றாகவே இந்த மதுபான நிலையங்கள் இலங்கையின் ஏனைய பகுதிகளை விட தமிழர்கள் வாழும் அபுக்தியில் அதிகரித்து காணப்படுகிறது. தமிழ் மக்களின் பிரதிநிதிகளே மதுபான உரிமைகள் வாங்கி பினாமிகளின் பெயர்களில் செயல்படுகின்ற தலைமைகளை தமிழர்கள் கொண்டிருக்கும் நிலை, அவ்வாறானவர்களையே மக்களும் தேர்ந்தெடுக்கிறார்கள். தற்போது சிறுபான்மை மக்களிற்கு வழமையான எதிரியுடன் கூடவே அவர்களாலாலேயே தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளும் எதிரிகளாக உள்ளனர். தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக உள்ளவர்களின் நோக்கம் வெறும் பணம் சேர்ப்பதாகவே உள்ளது, இவர்கள் தயவு செய்து பதவி விலகி, புதிய மக்கள் சிந்தனை மட்டும் கொண்ட இளம் சமூகத்திற்கு வழி விட வேண்டும். அங்குள்ள பத்திரிகைகள் மக்களை நல்வழிப்படுத்தும் பாரிய கடமை உண்டு, அதனை அவர்கள் சரிவர செய்ய வேண்டும். இலங்கை அரசை பொறுத்தவரை அவர்கள் சிறுபான்மை மக்களுக்கு எப்போதும் எதிரானவர்கள் எனும் உண்மைநிலையினை மக்களிடம் எடுத்து செல்வது ஒன்றும் இலகுவான காரியம் அல்ல, அதற்காகவே இலங்கை அரசுகள் பயங்கரவாத தடை சட்டம் எனும் போர்வையில் (பயங்கரவாத தடை சட்டத்தினை என்றும் நீக்க போவதில்லை) உண்மைகளின் குரல்வளைகளை நெரித்துக்கொண்டுள்ளார்கள். யூரியூபர்களும் இந்த உண்மைகளை தம்மளவில் பாதிப்பில்லா வகையில் மக்களிடம் எடுத்து செல்ல வேண்டும்.
  16. XRP இன் விலை தற்போது 2.73 இற்கும் 2.00 இடையே விலை சமாந்தரமாக செல்கிறது (Trading range). விக்கோப்பின் இரண்டாவது விதியான The law of cause and effect தற்போதய நிலையினை சுட்டிக்காட்ட பொருத்தமானதாக இருக்கிறது. விலை கிடையாக இரண்டு புள்ளிகளுக்கிடையே ஒரு பெட்டியின் மேற்பக்கத்திற்கும் (கூரை) கீழ் பக்கத்திற்கும் (தரை) இடையில் நகரும் நிலையினை (Trading range) இந்த நிகழ்வினை cause என விக்கோப்பின் இரண்டாவது விதி மூலம் கூறப்படுகிறது. தற்போது நிகழும் இந்த cause நிகழ்விற்கு ஒரு விளைவு ஏற்பட உள்ளது அதனை விக்கோப்பின் இரண்டாம் விதியில் effect என கூறுகிறார்கள். பொதுவாக விலை Trading range இல் இருந்தால் அதற்கு இரண்டு காரணங்கள் இருக்கும். 1. Accumulation - பெரிய நிதி நிறுவனங்கள் விலையினை அதிகரிக்காமல் அதிகளவில் பங்குகளை வாங்குதல். 2. Distribution - பெரிய நிதி நிறுவனங்கள் விலை வீழ்ச்சி அடையாமல் அதிகளவில் பங்குகளை விற்றல். இந்த இரு நடவடிக்கையும் Cause ஆகும். XRP இன் தற்போதயநிகழ்வு Cause ஆகும். அடுத்து நிகழ இருப்பது Effect, இந்த Effect இல் விலை வீழ்ச்சி (Mark down) அடையலாம் அல்லது விலை உயர்வடையலாம் (Mark up). XRP அடுத்து என்ன நிகழும்? 1. விலை வீழ்ச்சி? தற்போது Re - accumulation நிகழ்வதாயின் (விலை உயர்வுக்கு முன்னரான நிகழ்வு) தற்போத காலகட்டத்தினை விக்கோப்பின் கோட்பாட்டில் phase B ஆகும் இதற்கு அடுத்ததாக விலை தற்போது 2.00 விலையிற்கு கீழ் (Support) சென்று அதன் பலத்தினை உறுதிப்படுத்த வேண்டும் (Low volume), பின்னர் விலை மீண்டும் 2.00 மேலாக வர வேண்டும். தற்போதய நிலை Re - accumulation இருக்கும் பட்சத்தில் விலை 2.73 கடந்து செல்லும் போது வாங்கினால் விலை இலக்கு 3.90 -4.00 வரை காணப்படும். 2. விலை உயர்வு? தற்போது விலை Distribution நிகழ்வதாயின் விலை 2.00 கீழ் அதிக எண்ணைக்கையில் விற்பனையாகி அதனை உறுதிப்படுத்தும். தற்போதய நிலை Distribution இருக்கும் பட்சத்தில் விலை 1.55, 120 செல்லும்.
  17. சீன மருத்துவ கப்பல் வட கிழக்கு மக்களை ஏன் புறக்கணிக்கின்றது?
  18. சும்மா முகாமில இருக்கிற இராணுத்தினரை அவருக்கு பாதுகாப்பு கொடுக்க விடலாம், சும்மா தேவையில்லாத அரசியல் ஸ்டண்ட் இற்காக இந்த அரசாங்கம் செய்யும் வேலைகளால் இப்படியான nuisance ஐ மக்கள் எதிர்கொள்ளவேண்டி இருக்கிறது, அனைத்து இலங்கை அரசியல் கட்சிகளும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்.😡
  19. மெல்பேர்ன் ஆடுகளம் முன்னர் கூறியது போல நாணய சுழற்சியில் வெல்லும் அணி துடுப்பாட்டத்தினை தெரிவு செய்யும் எனும் கூற்று தவறாக வாய்ப்புள்ளது. அண்மையில் இடம் பெற்ற மழை காரணமாக ஆடுகளம் மூடப்பட்டுள்ளதாக கூறுகிறார்கள், அதனால் ஆடுகளத்தில் ஈரப்பதன் காணப்படும் அத்துடன் புற்களும் காணப்படும், மைதான நிர்வாகிகள் இந்த ஆடுகளத்தின் புற்கள் வழமையாக உள்ளதை விட அதிகமாக விட்டு வெட்ட உள்ளதாக கூறுகிறார்கள் 12MM புல் கொண்ட ஆடுகளத்தில் 7 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டினை செபீல்ட் போட்டியில் எடுத்துள்ளார் என கூறப்படுகிறது. இந்த நிலமைகளை வைத்து பார்க்கும் போது நாணய சுழற்சியில் வெல்லும் அணி பந்து வீச்சினை தெரிவு செய்வதற்கு வாய்ப்பு அதிகம் உள்ளது, ஏனெனில் இந்த மைதானத்தில் முதல் இனிங்க்ஸில் ஓட்ட்டங்களை எடுப்பது இலகு ஆனால் இரண்டாம் இனிங்ஸில் ஓட்டங்கள் எடுப்பது கடினம் என்பதால், துடுப்பாட்டத்தினை தேர்வு செய்யாமல் பந்து வீச்சினை தெரிவு செய்வதுதான் தற்போதய சூழ்நிலையில் சரியான முடிவாக இருக்கும்.
  20. எனது இளம்பிராயத்தில் வைத்தியரிடம் போக பயம், ஒரு தடவை வயிற்றில் உள்ள பூச்சிக்காக வைத்தியசாலை மருந்து கொடுத்தார்கள் அதனால் பக்க விளைவு ஏற்பட்டு மீண்டும் வைத்தியசாலைக்கு எடுத்து சென்றார்கள், வைத்டியர் ஊசி குத்த போகிறார் என்ற பயத்தில் ஏற்கனவே பல்கீனமாக இருந்த நான் மயக்கமாகிவிட்டேன், அந்த சந்தர்ப்பத்தினை பயன்படுத்து ஊசி மூலம் ஏற்றும் சேலைனை குத்திவிட்டார்கள்.😁 சில சமயம் சரியாக கதைப்பது போல இருக்கும் ஆனால் அப்படியே அதற்கு எதிர்மாறாக பின்னர் நிகழ்கிறது, இவரை யாராலும் வெல்ல முடியாது.😁
  21. மதில் மேல் பூனையாக இருப்பார்கள்தான் ஆட்சியினை தீர்மானிக்கின்றமையால் நிங்கள் ஆட்சியினை தீர்மானிப்பவராக இருக்கலாம் என நினைத்தேன்.
  22. நான் உங்களை தவறாக புரிந்து கொள்ளவில்லை, மிக நேர்மையான ஒரு கருத்தாளர் மற்றவரின் மனம் நோகாமல் அதே நேரம் நகைசுவையாக பதிலளிப்பவர். இது முக்கியமான விடயம்.
  23. மேற்கு (ஐரோப்பிய ஒன்றிய நாடுகள்) ஜோர்ஜெஸுகு ஆட்சிக்கு வருவதனை விரும்பவில்லை. நீங்கள் இரண்டு கட்சிக்கும் மாறி மாறி வாக்களிப்பீர்களா?
  24. கவலைப்படாதீர்கள் பெட்டியினை கட்டி தயாரக வைக்கவும், தற்காலிக ஊழியர்கலை பதவி நீக்கம் செய்தபின்னர் அவர்களின் வேலை கிடைக்க வாய்ப்புண்டு ஆனால் வைத்டியர் வேலை கிடைக்காது.😁
  25. ஒவ்வொரு ஆவணமும் பல கட்டங்களாக பரிசீலனை செய்யப்பட்ட பின்னரே அவை ஆவனப்பிரிவிற்கு மாற்றப்படும், அவற்றில் பல பல வகை பரிசோதனை தரவுகள் இயந்திர செயற்பாடு என பல்லாயிரக்கணக்கான நடவடிக்கைகள் மீளாய்வுக்குள்ளாக்கப்படுகிறது. ஒரு வைத்தியரின் வேலையினை வைத்தியர்தான் செய்யமுடியும் இங்கு கூறப்படுவது அவர்கள் ஏற்கனவே செய்த தற்காலிக வேலைகளை தொடர்வதற்கு நிரந்தர வேலை ஆக்குவதற்கு ஆதரவு வழ்ங்குதல் மட்டுமே.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.