Everything posted by vasee
-
காஸா: அமெரிக்கா கைப்பற்றும் என டிரம்ப் கூறியது ஏன்? பாலத்தீனர்களை வெளியேறச் சொல்கிறாரா?
2008 வேலையிடத்தில் ஒரு கண்டி சிங்கள பெண்மணி கூறினார், அனைத்து பிரச்சினைக்கும் காரணம் யு என் பி தான் என, அவர் ஒரு கடும் இனவாதியாக இருந்தார், அப்பாவி தமிழ் மக்கள் கொல்லப்படுவதனை நியாயப்படுத்துவராக இருந்தார் எதனை ஆதரிக்கிறாய் என்பதில் கவனமாக இல்லாவிட்டால் இவ்வாறான அழிவுகளை தவிர்க்க முடியாது என தவறுகளை நியாயப்படுத்தும் ஒருவர். தற்போது புதிதாக வந்துள்ள அரசினை குற்றம் சாட்டுவதன் மூலம் கடந்த காலத்தில் நடத்தப்பட்ட அநீதிகளை கடந்து செல்லும் முயற்சி, ஆனால் இதே மாதிரி ஒரு சூழ்நிலைக்கு உட்பட்ட எம்மவர்களால் கூட இவ்வாறான மனப்பான்மைக்குள் எவ்வாறு செல்ல முடிகிறது?
-
அமெரிக்காவில் பயணிகள் விமானம் ஹெலிகொப்டருடன் மோதி ஆற்றில் வீழ்ந்தது ; மீட்பு நடவடிக்கைகள் ஆரம்பம்
அமெரிக்காவிற்கு கடன் வாங்கும் செலவு குறைவாக உள்ளது என்பது உண்மைதான், இலங்கையின் கடன் மதிப்பீட்டு சரிவு அதற்கு காரணம். ஆனால் இலங்கையின் பாதீட்டின் அளவு நாட்டின் வருமானத்தில் 10% உள்ளது, அமெரிக்காவின் பாதீட்டின் அளவு நாட்டின் வருமானத்தில் 36% உள்ளது. இலங்கையின் பொதுச்செலவில் கடன் வட்டி சுமை அமெரிக்காவினை விட அதிகம் ஆனால் பாதீட்டின் அளவினை கணித்தால் இரண்டு நாடும் கிட்டதட்ட மிக சிறைய வித்தியாசமே இரண்டு நாடுக்களுக்கிடையே யுள்ளது. இலங்கை social security 11% , அமெரிக்காவின் social security 21% உள்ளது கடனுக்கான வட்டி செலுத்துவதனைவிட இது அமெரிக்காவிற்கு அதிகம் இலங்கை பாதீட்டுடன் ஒப்பிடும் 63% ஆகும். பொதுவாக பாதீடு GDP இல் 10% மேல் இருந்தால் அந்த நாட்டின் பொருளாதாரம் உறுதியற்ற பொருளாதாரம் என கூறுகிறார்கள் இலங்கையின் 10.2% இலும் அமெரிக்கா 36.2% உள்ளது. இலங்கைக்கும் அமெரிக்காவிற்குமுள்ள வித்தியாசம் டொலர் இருப்பு நாணயம். https://www.pgpf.org/article/what-is-the-national-debt-costing-us/ குறித்த இணைப்பில் மருத்துவம், சமூக செலவு மற்றும் வட்டி முதல் 3 இடத்தில் உள்ளது. சமூக செலவே முதல்நிலையில் உள்ளது 2.6 ரில்லியன், வட்டி 1.7 ரில்லியன், மருத்துவம் 1.7 ரில்லியன். ஆனால் இயலாதவர்களின் கொடுப்பனவில் கைவைப்பது பாவமான செயல்தான்.
-
கனடா மீதான வரி விதிப்பு நிறுத்தி வைப்பு: டிரம்பின் இந்த திடீர் மன மாற்றத்துக்கு என்ன காரணம்?
the great depression காலகட்டத்தில்தான் ரோஸ்வெல்ட் அமெரிக்க அதிபரானார், அவரை போல ட்ரம்ப் தனது பெயரையும் வரலாற்றில் விட்டு செல்ல விரும்புகிறாரோ தெரியவில்லை, 1930 வந்த பொருளாதார பேரழிவு அதற்கு பின்னர் இதுவரை நிகழவில்லை ஆனால் தற்போது நிகழ் வாய்ப்புக்கள் உள்ளது.
-
அமெரிக்காவில் பயணிகள் விமானம் ஹெலிகொப்டருடன் மோதி ஆற்றில் வீழ்ந்தது ; மீட்பு நடவடிக்கைகள் ஆரம்பம்
பொதுவாக அதற்கான தேவையும் இருப்பதில்லைதானே.
-
அமெரிக்காவில் பயணிகள் விமானம் ஹெலிகொப்டருடன் மோதி ஆற்றில் வீழ்ந்தது ; மீட்பு நடவடிக்கைகள் ஆரம்பம்
நாட்டின் வருவாயை விட நாட்டின் கடன் அதிகம் இது இலங்கையினை விட அதிகம், பொதுச்செலவு நாட்டின் வருவாயில் 23% உள்ளது, அரசிற்கு வேறு தெரிவில்லை என கருதுகிறேன், கடனை கட்டுப்படுத்த முயற்சிக்காவிட்டால் நிலமை கை மீறி போய்விட்ம் என கருதுகிறேன்.
-
அமெரிக்காவில் பயணிகள் விமானம் ஹெலிகொப்டருடன் மோதி ஆற்றில் வீழ்ந்தது ; மீட்பு நடவடிக்கைகள் ஆரம்பம்
நான் இணைத்த காணொளியில் தரையிறங்கும் போது விமானிகள் (இரண்டு விமானிகளும்) தமது தொடர்பாடலை கட்டுப்பாட்டு கோபுரத்துடன் மாற்றிகொண்டார்கள் என கூறப்படுகிறது. விமானிகள் இரண்டு அலைவரிசைகளை விமானிகள் பயன்படுத்துகிறார்கள். 1. கட்டு கோபுர அலைவரிசை ( Tower frequency - தரையிறங்கும் போது பயன்படுத்தப்படுவது) 2. கட்டுப்பாட்டறை அலைவரிசை (Approach frequency - மற்றைய விமானிகளின் உரையாடல் ) கட்டுப்பாட்டறை அலைவரிசை விமான தளத்தில் உள்ள விமானங்கள் பற்றியதான விபரம் அடங்கியது என கூறப்படுகிறது, பொதுவாக இந்த அலைவரிசையில் துணை விமானி இணைந்திருப்பார் என கூறப்படுகிறது, ஆனால் குறித்த காணொளியில் உள்ள சம்பவத்தின் போது இரு விமானிகளும் கட்டுப்பாட்டு கோபுர அலைவரிசையில் இணைந்திருந்தார்கள் எனக்கூறப்படுகிறது. https://moneysmart.gov.au/retirement-income/downsizing-in-retirement ஓய்வின் பின்னர் பெரும்பாலானவர்கள் இவ்வாறான முடிவுகளை எடுக்கிறார்கள்.
-
கனடா மீதான வரி விதிப்பு நிறுத்தி வைப்பு: டிரம்பின் இந்த திடீர் மன மாற்றத்துக்கு என்ன காரணம்?
ட்ரம்ப் செய்வது மறைமுகமாக அமேரிக்க டொலரையும் அமெரிக்க பணமுறியினையும் பலப்படுத்தும் நடவடிக்கை. ஏற்கனவே டொலருக்கு மாற்றீடாக ஒரு நாணயத்தினை உருவாக்க முற்பட்டால் அவர்கள் மேல் 100% வரி விதிப்பேன் என வெளிப்படையாக கூறியுள்ளார் (மறைமுக இராணுவ அழுத்தமும் கொடுப்பார்கள் அதற்கு வரலாறே சான்றாக உள்ளது) இந்த நிலையில் சர்வதேச வர்த்தகத்தில் ஈடுபட டொலர் தேவையாக இருக்கும், ஏற்றுமதியில் ஏற்படும் வீழ்ச்சி அவர்களது டொலர் இருப்பில் பாதிப்பு ஏற்படுத்தும். ஏற்கனவே பல நாடுகள் பயன்படுத்தும் கட்டுப்படுத்தப்பட்ட மிதக்கவிடப்பட்ட நாணயக்கொள்கை மூலம் தமது பணத்தினை திட்டமிட்டே பலமிழக்க செய்து அமெரிக்க வாடிக்கையாளருக்கு மலிவாக பொருளை சென்றடைய செய்வார்கள் அதற்காக அதிகளவில் அமெரிக்க டொலரினை சந்தையில் வாங்குதல், அமெரிக்க பணமுறிகளை வாங்குதல் என்பதன் மூலம், தற்போது ஏற்பட்டிருகும் 25% அதிகரிப்பினை ஈடுகட்ட அதிகளவில் அமெரிக்க பணச்சந்தையில் அவர்களை வலிந்து முதலிட செய்வதுதான் ட்ரம்பின் திட்டமாக இருக்கும். ஏன் ட்ரம்ப் இந்த வரிவிதிப்பு யுத்தத்தினை செய்யவேண்டும்? 1930 இல் 20000 வரி விதிப்புக்க்களை அமெரிக்க மேற்கொண்டு உலகில் முத்லும் கடைசியாக ஒரு பொருளாதார பேரிடரினை உருவாக்கி தனக்கும் சேர்த்து சூனியம் வைத்திருந்தது ஆனாலும் இப்போது எதற்காக அமெரிக்கா இப்படியான ஒரு சூதாட்டத்தில் இறங்குகிறது? அமெரிக்க பொதுக்கடன் எல்லை மீறி போகிறது அதனால் ஏற்பட போதும் அமெரிக்க ஏகாதிபத்திய சரிவினை தடுத்து நிறுத்தும் இறுதி முயற்சியாகும், அதாவது மீண்டும் அமெரிக்காவினை சிறப்பாக மாற்றுவது. இது சரி வருமா? வேறு தெரிவுகள் இல்லை என அமெரிக்க தரபு கருதுகிறதோ தெரியவில்லை.
-
இன்னும் 2 வருடங்களில் மீண்டுமொரு கடன் மறுசீரமைப்பை செய்ய வேண்டிவரும்; சஜித் எதிர்வுகூறல்
இன்று இலங்கையின் சுதந்திர தினம்?
-
அமெரிக்காவில் பயணிகள் விமானம் ஹெலிகொப்டருடன் மோதி ஆற்றில் வீழ்ந்தது ; மீட்பு நடவடிக்கைகள் ஆரம்பம்
அண்மையில் திறந்த வெளியில் நிகழ்ந்த அவுஸ்ரேலிய தின நிகழ்வில் குடும்பத்தினருடன் கலந்து கொண்ட்டேன் (நிகழ்ச்சி இறுதியில் நிகழ்த்தும் வாணவேடிக்கைக்காக). கடுமையான வெப்பம் பின்னர் சடுதியாக வெப்பம் குறைந்தது, ஆரம்ப பாடசாலையில் படிக்கும் எனது மகன் ஒரு விடயத்தினை சுட்டிக்காட்டினார், மைதானத்தில் இருந்த கொடிகள் கிழக்கு மேற்காக பறந்தன ஆனால் மேகம் வடக்கு தெற்காக நகர்ந்தது அது ஏன் காற்றுக்கள் இரு வேறு திசைகளில் நகர்கிறது என (Windshear). விமான தரையிறக்கம் என்பது இலகுவான விடயமல்ல என கூறுகிறார்கள், விமானத்தில் சில பாதுகாப்பு பொறிமுறைகள் தரையிறங்கும் போது செயற்பாட்டிற்கு வந்து விடும் அதுவே சில சந்தர்ப்பங்களில் பாதகமாக அமைகிறது. காணொளி பயணிகள் விமான நிலையத்தில் எதற்கு விமான படையினர் பயிற்சியில் ஈடுபடுகிறார்கள்?
-
பாட்டுக் கதைகள்
வர்த்தக மயப்பட்ட சூழல், வாசகர்களின் எதிர்பார்ப்பு இப்படியான யதார்த்தமான இலக்கியங்கள் மக்கள் கண்டு கொள்ளாமைக்கு காரணமாக இருக்கலாம், மக்கள் யதார்த்தத்திற்கு அப்பால் ஒரு கற்பனா உலகில் சஞ்சரிக்க விரும்புகின்ற வாசகர்களுக்கு அவர்கள் விரும்பும் யதார்த்தமற்ற கற்பனைகளை இலகுவாக விற்க முடியுமாக இருக்கலாம். இது ஒரு துணிச்சலான ஆனால் நியாயமான கேள்வி, திரைப்படங்கள் கூட இவ்வாறான பாதையிலேயே இன்னமும் பயணிக்கின்றது. முழுவதுமாக வாசகர்களை குறை சொல்ல முடியாது எழுத்தாளர்களும் இதில் பங்குதாரர்கள்தான், சிறந்த மக்கள் பிரச்சினையினை கூறும் ஆக்கங்களுக்கு சரியான வரவேற்பு அதன் ஆரம்ப கட்டத்திலேயே இருப்பதில்லைதான், ஆனால் தற்போதய இணைய வளர்ச்சி அதற்கான அடித்தளத்தினை வழங்கியிருந்தும் கதாசிரியர்கள் இன்னமும் கற்பனா இலக்கியங்களை கொடுப்பதில்தான் முன்நிற்கிறார்கள், அதற்கு காரணம் தேடல் குறைந்துவிட்டது. ஒரு விடயத்தினை பற்றிய புரிதலுக்கு அது தொடர்பான முழு அறிவு தேவையாக இருக்கிறது. கதைகளை வாசிப்பதனை நிறுத்தி வருடங்களாகின்றன, சிறு வயதில் வாசிப்பதுண்டு பின்னர் அதற்கான நேரமும் சந்தர்ப்பமும் அமையவில்லை, அதனால் பெரியவர்களுக்கான இலக்கியங்கள் வாசிக்கவில்லை, தற்போது விரும்பினாலும் கதைகளை வாசிப்பதற்கு முடியாமல் இருக்கின்றது.
-
ட்ரம்பின் வரி விதிப்பு போர்; ஆசியப் பங்குச் சந்தைகள் சரிவு
தற்போதய தாராள மய பொருளாதார கொள்கைக்கு வழி வகுத்த பிரட்டன் வூட் தீர்மானத்திற்கு முன்னர் இவ்வாறு ஏட்டிக்கு போட்டியாக நிகழ்த்திய வர்த்தக போர் 1930 இதுவரை காலமும் சந்திராத பொருளாதார பேரிடரினை உருவாக்கியது. அப்பொது உலக வர்த்தகத்தில் முதன்மை பங்காளியான அமெரிக்கா இருந்தது (20% களில் இருந்ததாக நினைவுள்ளது 27%?) தற்போதய நிலை முற்றிலும் மாற்பட்டுள்ளது. அமெரிக்கா அப்போது ஏற்றுமதி இறக்குமதி இரண்டிலும் அதிகளவில் ஈடுபட்ட நாடு தற்போது ஏற்றுமதியில் சீனா முன்னிலை வகிக்க அமெரிக்க தனது உற்பத்தியில் பெரும் பகுதியினை தானே பயன்படுத்துவதனால் அமெரிகாவிற்கு ஏற்றுமதி செய்பவர்களுக்குத்தான் நட்டம் அதிகம் இந்த ட்ரம்பின் வரி விதிப்பினால், ஆனால் அந்த நாடுகளும் பதிலுக்கு இறக்குமதி வரி விதித்தால்? தற்போதய பொருளாதாரம் வலய மயப்படுத்தப்பட்ட பொருளாதாரமாக மாற்றம் பெற்றுவிட்டது அதனால் ஐரோப்பிய ஒன்றியம் மத்திய கிழக்கு எரிபொருள் வழங்கள் மையங்கள் என, ஆனால் இந்த மையங்களினுடனும் அமெரிக்க அதிபர் போர் தொடுப்பதாக கூறுகின்றார். உக்கிரேன் இரஸ்சிய போரில் பொருளாதாரத்தினை ஆயுதமாக பயன்படுத்தி ஐரோப்பிய ஒன்றியமும் அமெரிக்காவும் இழுத்து விட்ட சனி தீர முன்னர் இன்னொரு உலக பொருளாதார பேரிடரை வரலாற்றில் இரண்டாவது தடவையாக உருவாக்க அமெரிக்கா முனைகிறது. இது மூழ்கிறவன் தன்னுடன் மற்றவனை இழுத்துக்கொண்டு மூழ்கும் திட்டம், இதனை உணர்ந்து நாடுகள் அமெரிக்க தவிர்த்த பொருளாதார நடைமுறை ஒன்றினை உருவாக்க மேலும் வலயமயப்படுத்தப்பட்ட பொருளாதார உலக கட்டமைப்பை உருவாக்க வேண்டும், வலய கட்டமைப்பு பொருளாதாரம், பொருளாதார வளர்ச்சிக்கு நெருக்கடியான ஒன்றாக இருந்தாலும் இவ்வாறான சட்டாம்பிள்ளைகளின் கையில் உலக பொருளாதாரம் சிக்கி சீரழிவதனை தடுக்கலாம்.
-
பாட்டுக் கதைகள்
பல மொழிகள் வரும் படைப்புக்கள் ஆங்கிலத்திற்கு மாறி ஆங்கிலத்திலிருந்து தமிழிற்கு மாறி வரும் இலக்கியங்கள் அதன் வடிவத்தினை இழந்திருக்கலாம். பொதுவாக இலக்கிய வளர்ச்சி அதன் மொழிவளர்ச்சிக்கு உதவும், ஆனால் தமிழ் மொழி வளர்ச்சிக்கு தற்போதய நவீன இலக்கியங்கள் எந்த உதவியும் செய்யவில்லை மாறாக மொழி சிதைவிற்கே வழிவகுக்கிறது என கருதுகிறேன். இதற்கு காரணம் மக்களின் வாழ்க்கையினை பிரதிபலிக்கும் இலக்கியங்களை உருவாக்குவதற்காக மொழி நடை இலக்கியங்கள் உருவாக்கப்படுகின்றன, ஆனால் குறித்த இலக்கியங்கள் மக்களை சரியாக உணராமல் உருவாக்கப்படும் போது அது சமுக வளர்ச்சி, மொழி வளர்ச்சி என்பவற்றிற்கு இடையூறாக இருக்கின்றன. உண்மையில் இந்த நவீன இல்க்கியங்களை விமர்சனத்திற்கு உட்படுத்த எனக்கு எந்த தகுதியும் இல்லை, எனக்கு புதிய தமிழ் இலக்கிய ஆசிரியர்களின் படைப்புக்களை சிலவேளைகளில் வாசித்திருக்கலாம் ஆனால் அவர்களின் பெயர்களை நீங்கள் அனைவரும் குறிப்பிடும் போது வெறுமனே கேள்விப்பட்டுள்ளேன் அது தவிர மேற்கொண்டு அவர்களது இலக்கியங்களை இலவசமாக இணையத்தில் வாசிப்பதற்கு கூட முயற்சி எடுத்ததில்லை, அப்படி வாசித்திருந்தாலும் அதன் தாக்கத்தினை நான் உணரவில்லை என கருதுகிறேன். ஏன் தமிழ் மொழியில் பெங்காலிய இலக்கியங்கங்கள் போல நவீன இலக்கியத்தில் தாக்கம் செலுத்த முடியவில்லை? தமிழ் மொழியில் வெளியான பழைய இலக்கியங்களை தவிர்த்து பார்த்தால் நவீன இலக்கியங்களால் ஏன் சிறந்த இலக்கியத்தினை வழங்கமுடியவில்லை?
-
பாட்டுக் கதைகள்
நீங்கள் அனைவரும் கூறுவது சரி என்றே கருதுகிறேன், நான் தவறான புரிதலுடன் இலக்கியத்தினை பார்க்கிறேனோ என தோன்றுகிறது. சிறுவயதில் வெவ்வேறு மொழியில் வந்த பெரிய ஆளுமைகளின் தமிழ் மொழிபெயர்க்கப்பட்ட கவிதைகள், கதைகள் வாசித்ததுண்டு பெரும்பாலும் அவை பெரிதாக ஈர்ப்பதில்லை (connect ஆவதில்லை) சில விதி விலக்காக மறக்கமுடியாதவையாக சில வாழ்வில் தொடரும். அதற்கு நானே கண்டுபிடித்த காரணம் அவர்களது மொழியிலிருந்து மொழி மாற்றும் போது மொழி மாற்றுபவர் அந்த உணர்வை நீர்த்து போக செய்வது என, எப்படி ஒரு டப்பிங் படம் பார்ப்பது போல. இலக்கியங்கள் என்றால் அதற்கான cliche களில் இருந்தால்தான் இலக்கியம் எனும் நிலை இருப்பதாக கருதுகிறேன், கதாநாயகி அறிமுகம் என்றால் தாவரங்கள் உயிரினங்களை எல்லாம் உவமானமாக காட்டவேண்டும் எனும் நிலையில் வாசகனுகு கதாநாயகியின் அறிமுகத்தில் கதாநாயகியே தெரிவதில்லை, கதாநாயகியினை விட மற்ற விடயங்கள்தான் மனதில் இருக்கும், இவ்வாறான உவமானங்கள்தான் இலக்கியங்கள் எனும் பொதுவான விதியாக கருதப்படுகிறது. ஒரு போராளி எழுதிய கவிதை " என்னை மண்ணில் புதைத்தாய் என் மண்ணை எங்கே புதைப்பாய்". இந்த கவிதை மேலோட்டமாக பார்க்கும் போது என்னை அழிக்கலாம் ஆனால் என் இலட்சியத்தினை அழிக்க முடியாது என்பது போல இருக்கும் ஆனால் புதைத்த மண்ணில் நான் இருப்பேன் எனக்கு அழிவில்லை, என்னையும் மண்ணையும் பிரிக்கமுடியாது (மண் - மக்கள்), அடக்குமுறைகளை உடைத்து வெளியேற துடிக்கும் உணர்வு என பல பொருள்படும் ஒரு புதிய வடிவ ஓவியம் போல ஒவ்வொரு கோணத்திலும் தெரியும் ஒரு போராளியின் உள அந்தரிப்பு அதில் தெரியும், நாலைந்து வார்த்தைகளில் அவரது உணர்வை வாசகர்களுக்கு அப்படியே கடத்தி வாசகரிகளிடம் ஒரு ஆகா மொமன்டை உருவாக்குகிறது இதற்கு காரணம், அவரது உணர்வை அவராலேதான் இலகுவாக கடத்தமுடியும். இன்னொருவர் சார்பாக சிறந்த இலக்கியவாதிகளாலேயே அவர்கள் உணர்வுகளை அப்படியே உள்வாங்க முடியும் என நம்புகிறேன். ஒரு சமூகத்தில் இருந்து வரும் இலக்கியங்களை அந்த மக்களை உணராவிட்டால் ஒரு டப்பிங் படம் போல ஒரு இலக்கியத்தினையே உருவாக்க முடியும் என நம்புகிறேன். அத்துடன் இலக்கியவாதிகளும், இலட்சியவாதிகளும் ஒரு சமூகத்தினை செதுக்கும் சிற்பிகள் என நான் நம்புகிறேன், அது தவறாக இருக்கலாம்.
-
பாட்டுக் கதைகள்
அவர் கொஞ்சம் விவகாராமான ஆள், அந்த கவிதை வாசிப்பவருக்கான கவிதை போல இருப்பதாக நினைவுள்ளது (ஒரு காதல் கடிதம் மாதிரி) எமது பாடசாலை ஆண்கள் பாடசாலை, எப்போதும் ஏதாவது கோமாளித்தனம் செய்து கொண்டிருப்பார் (வகுப்ப்பில் முன்னிருக்கை மாணவர்களும் பின்னிருக்கை மாணவர்களும் செய்யும் கோமாளித்தனங்களுக்கு சம்பந்தேமே இல்லாத மிதவாத மாணவர்களாகிய நாங்கள் பாதிக்கப்படுவதால் - Neutral gear வரும் எரிச்சல் ஒரு காரணம்) இந்த முறை என்ன கோமாளித்தனம் செய்யப்போகிறார்? பாடசாலையில் யாருக்கும் கொடுக்கமாட்டார் என நினைத்திருத்தேன், ஆனால் அந்த தொண்டர் ஆசிரியரிடம் அதனை கொடுத்த போது அதிர்ச்சியாகிவிட்டேன் (அவருக்கும் எமக்கும் அதிக வயது வித்தியாசமில்லை) ஆனால் அந்த தொண்டர் ஆசிரியர் அவரது மூக்குடைத்த போது ஏனோ என்னால் சந்தோசப்படுவதனை கட்டுப்படுத்த முடியவில்லை (மோசமான நண்பர் அல்லவா?)😁 நண்பர் என்றெல்லாம் இல்லை முன்னிருக்கை மாணவர்களையும் பின்னிருக்கை மாணவர்களையும் துஸ்டரை கண்டால் தூர விலகு எனும் மனப்பாண்மையில் இருந்த காலகட்டம் அது.
-
பாட்டுக் கதைகள்
பாடசாலை காலத்தில் எனது வகுப்பில் சிறப்பாக படிக்கும் ஒரு மாணவர் இருந்தார், அவர் ஆசிரியர்களிடம் நல்ல பெயர் வாங்குவதற்காக செய்கின்ற செயல்கள் கோமாளித்தனமாக எரிச்சல் ஊட்டுவதாகவும் இருக்கும், அவர் கவிதைகள் எழுதிகிறேன் என படம் காட்டுவார், ஒரு முறை என்னிடம் அவர் எழுதிய கவிதை என ஒரு கவிதையினை காட்டினார், அது ஏதோ காதல் கதை போல் இருந்தது பதில் சொல்லாமல் அவரை பார்த்துவிட்டு நகர்ந்துவிட்டேன். எமது வகுப்பிற்கு தொண்டராசியராக பாடசாலை படிப்பினை முடித்துவிட்டு ஒரு பெண்மணி பணியேற்றிருந்தார், வகுப்பு தொடங்கியது அவரிடம் அதே கவிதையினை அந்த மாணவர் கொடுத்தார், அதனை வாசித்துவிட்டு அவர் கேட்டார் விழியில் விழுந்து இதயம் நுழைந்து எனும் அலைகள் ஓய்வதில்லை பாடலை கொப்பியடித்திருக்கிறாயா என😁, அவர் சொன்ன பிறகே உணர்ந்தேன் உண்மையில் அந்த பாடலை சில சொற்களை மாற்றி அந்த கவிதையினை எழுதியிருக்கிறார் என.
-
வர்த்தக போருக்கு தயாராகும் கனடிய மத்திய வங்கி
கூகிள் மொழி பெயர்ப்பில் இந்த கட்டுரை மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ளமையால் சில பதங்கள் புரியாதநிலை காணப்படுகிறது, சுருக்கமாக, தற்போதய சூழல் உலக பொருளாதார சரிவினை நோக்கி செல்கிறது என்பதற்கு இது ஒரு உதாரணமாக உள்ளது, நாடுகள் அதனால் விரைவான செயற்பாடுகளில் இறங்குகின்றன சாமானிய மக்களும் இது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும், மூல கட்டுரை கீழே உள்ள தொடரியில் வழங்கப்பட்டுள்ளது. புதிய அமெரிக்க அதிபர் ஏற்கனவே உள்ள வேறுபட்ட அமைப்புக்களினூடாக பொருளாதார மற்றும் பாதுகாப்பு விடயங்களை அமெரிக்க அணுக விரும்பவில்லை மாறாக நாடுகள் அமெரிக்காவுடன் நேரடியாக அணுகுவதனை விரும்புவது போல உள்ளது, ஏற்கனவே உள்ள ஐரோப்பிய ஒன்றியம் போன்றவற்றை பலப்படுத்துவதற்கு பதிலாக அமெரிக்காவினை பலப்படுத்துவதனை விரும்புவதாக உள்ளதாக கருதுகிறேன், இது மேலும் உலக பொருளாதாரத்திற்கு நெருக்கடி ஏற்படுத்தும். உலக பொருளாதார சரிவு ஏற்பட்டால் ஆச்சரியப்பட தேவை இருக்காது. இது ஒரு உலக பொருளாதார சரிவிற்கு ஆரம்பமாக இருக்குமா? குறித்த கட்டுரையில் அமெரிக்க ஏற்றுமதியில் அவுஸ்ரேலியா கடைசியாக உள்ளது (படத்தினை பார்க்கவும்).😁
-
வர்த்தக போருக்கு தயாராகும் கனடிய மத்திய வங்கி
பாங்க் ஆஃப் கனடா வர்த்தகப் போருக்குத் தயாராகிறது இன்று எதிர்பார்த்தபடி BoC விகிதங்களை 25bp குறைத்தது. பொருளாதாரக் கண்ணோட்டத்தில் சில முன்னேற்றங்கள் கொடுக்கப்பட்டால் விகிதங்கள் அடிமட்டத்தில் அல்லது அதற்கு அருகில் இருக்கும், ஆனால் அமெரிக்க-கனடா வர்த்தகப் போரின் மிகப்பெரிய கேள்விக்குறி இன்னும் வெட்டுக்களுக்கான கதவைத் திறந்து வைக்கிறது. இறுதியில், கட்டணங்களின் ஒப்பீட்டு வளர்ச்சி-பணவீக்கம் தாக்கம் BoC இன் எதிர்வினையைத் தீர்மானிக்கும். அதிக USD/CAD உயர்வை எதிர்பார்க்கிறோம் படம் இந்த கட்டுரையில் BoC வெட்டி QTயை முடிக்கிறதுவர்த்தகத்தில் அதிகரித்த நிச்சயமற்ற தன்மைUSD/CAD டிப்ஸில் கவர்ச்சிகரமானதாக உள்ளது BoC வெட்டி QTயை முடிக்கிறது பாங்க் ஆஃப் கனடா ஓவர்நைட் ரேட்டை 25bp குறைத்து 3.0% ஆகக் குறைத்துள்ளது. ஜூன் மாதத்திலிருந்து இப்போது ஒட்டுமொத்த தளர்வு 200bp ஆக உள்ளது. BoC அதன் இருப்புநிலைக் குறிப்பைச் சுருக்கப் பயன்படுத்தப்பட்ட அதன் அளவு இறுக்கும் திட்டத்திற்கு முடிவுகட்டுவதாக அறிவித்துள்ளது. மாறாக, அது படிப்படியாக சொத்து வாங்குதல்களை மறுதொடக்கம் செய்யும், அதனால் அதன் இருப்புநிலை ஜிடிபியின் விகிதமாக நிலைப்படுத்தப்படும். சூழலைப் பொறுத்தவரை, கனடாவின் பொருளாதார செயல்பாடு தாமதமாக ஏமாற்றமளிக்கிறது, மூன்றாம் காலாண்டில் 1% வளர்ச்சிக்குப் பிறகு நான்காவது காலாண்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியானது வருடாந்திர 1.5% விகிதத்தில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில், வேலையின்மை விகிதம் 6.7% ஆக உயர்ந்து 2022 இல் 4.8% ஆக உள்ளது. பணவீக்கம் தற்போது 2% இலக்கை நெருங்குகிறது - எனவே BoC "கணிசமான" கொள்கை தளர்த்தலை ஏன் செயல்படுத்த முடிந்தது. இருளில் இருந்த போதிலும், மத்திய வங்கி சில நேர்மறைகளில் ஒட்டிக்கொள்ள முயற்சித்தது, "கடந்தகால வட்டி விகிதங்கள் பொருளாதாரத்தை உயர்த்தத் தொடங்கியுள்ளன" என்று குறிப்பிட்டது. வர்த்தகத்தில் அதிகரித்த நிச்சயமற்ற தன்மை ஆயினும்கூட, அமெரிக்காவுடனான கட்டணங்களுக்கான நிச்சயமற்ற கண்ணோட்டம் கொடுக்கப்பட்டால், BoC மேலும் கூறியது, "ஒரு சாத்தியமான வர்த்தக மோதலின் நோக்கம் மற்றும் காலம் கணிக்க இயலாது" மற்றும் அதன் முன்னறிவிப்புகளுக்கான அதன் அடிப்படை அனுமானம் புதிய கட்டணங்கள் எதுவும் இல்லை. கட்டணங்களின் அச்சுறுத்தல் இல்லை என்றால், "கண்ணோட்டத்தைச் சுற்றியுள்ள தலைகீழ் மற்றும் எதிர்மறையான அபாயங்கள் நியாயமான முறையில் சமநிலையில் உள்ளன" என்று அது நம்புகிறது. இந்த சூழலில், "பொருளாதாரம் படிப்படியாக வலுவடையும் மற்றும் பணவீக்கம் இலக்கை நெருங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது" என்று மதிப்பிட்டுள்ளது. வட்டி விகிதங்களுக்கு நாம் ஒருவேளை கீழே அல்லது அதற்கு அருகில் இருக்கிறோம் என்பதை இது குறிக்கிறது. எவ்வாறாயினும், கனேடியப் பொருளாதாரத்திற்கான அபாயங்கள் எதிர்மறையாகவே இருக்கின்றன என்று நாங்கள் வாதிடுகிறோம். சர்வதேச தரத்தின்படி வீட்டுக் கடன் மிக அதிகமாக உள்ளது மற்றும் கனடாவின் அடமானச் சந்தையின் கட்டமைப்பானது பல குடும்பங்கள் இன்னும் குறைந்த விகிதங்களிலிருந்து நிவாரணம் பெறவில்லை என்பதாகும். ஆனால் மிகப் பெரிய கவலை என்னவென்றால், பிப்ரவரி 1-ம் தேதி முதல் கனடாவில் இருந்து அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25% வரி விதிக்கப்படும் என்று ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அச்சுறுத்தியுள்ளார் - இந்த வார இறுதியில்! இது தொழில் அதிபர்கள் மற்றும் அரசியல்வாதிகள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்கா கனடாவின் மிக முக்கியமான வர்த்தக பங்காளியாக உள்ளது, கனடாவின் ஏற்றுமதியில் 76% கனேடிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 20% மதிப்பிற்கு சமமானதாகும். முன்மொழியப்பட்ட கட்டணங்கள் சந்தேகத்திற்கு இடமின்றி கனேடிய தயாரிப்புகளின் போட்டித்தன்மையை பாதிக்கும், கனேடிய மூலப்பொருட்களை மாற்றுவது பொருளாதார வீழ்ச்சி மற்றும் சாத்தியமான மந்தநிலைக்கு வழிவகுக்கும் ஒரு தெளிவான ஆபத்து. BoC அதிகப்படியான உதிரித் திறனைப் பற்றிப் பேசிய சூழலில், BoC ஒரே இரவில் விகிதத்தை 2.75%-க்கும் கீழே குறைக்கும் அபாயங்கள் - கீழே உள்ள எங்களின் தற்போதைய கணிப்பு - அதிகமாக உள்ளது. இன்றைய செய்தியாளர் கூட்டத்தில் ஆளுநர் டிஃப் மக்லெம் விவாதித்தபடி, பணவீக்கத்தின் மேல்நோக்கிய விளைவைக் காட்டிலும் வர்த்தகப் போரின் எதிர்மறையான வளர்ச்சித் தாக்கம் வேகமாக வருமானால், BoC மேலும் எளிதாக்கலாம். அமெரிக்காவின் கட்டணங்களுக்கு கனடா மிகவும் வெளிப்படுகிறது ஆதாரம்: மேக்ரோபாண்ட் USD/CAD டிப்ஸில் கவர்ச்சிகரமானதாக உள்ளது சந்தைகள் ஆரம்பத்தில் இந்த அறிக்கையை மிதமான பருந்து என்று படித்தது, ஒருவேளை BoC பணவீக்க தாக்கத்தை அபாயங்களிலிருந்து வலியுறுத்துவதாகத் தோன்றியது (0.8 சதவீத புள்ளிகள் வரை மதிப்பிடப்பட்டுள்ளது), ஆனால் பின்னர் Macklem இன் செய்தியாளர் சந்திப்பை சற்று அதிக மோசமானதாக மதிப்பிட்டது. இருப்பினும், சந்தைகள் விகித எதிர்பார்ப்புகளை மறுபரிசீலனை செய்யவில்லை, CAD 2-ஆண்டு OIS விகிதம் 2.65% குறைவாக உள்ளது. பத்திரிக்கையாளர் சந்திப்பில் பலவீனமான கனடிய டாலர் குறித்தும் மக்லெமிடம் கேட்கப்பட்டது. முன்னறிவிப்புகளில் பரிமாற்ற வீத ஊட்டங்களை ஒப்புக்கொள்ளும் போது, பணவியல் கொள்கையானது லூனியின் நிலைகளால் பொருள் ரீதியாக பாதிக்கப்படலாம் என்பதற்கான சில அறிகுறிகளைக் கொடுத்தார். USD/CAD அறிக்கை வெளியீடு மற்றும் செய்தியாளர் சந்திப்பைச் சுற்றி ஊசலாடியது, இறுதியில் சந்திப்புக்கு முந்தைய நிலைகளுக்குத் திரும்பியது மற்றும் நாளில் மூன்றில் ஒரு சதவீதம் அதிகமாகும். வார இறுதிக்குள் 25% கட்டணத்தின் அச்சுறுத்தலை ட்ரம்ப் குறைக்காவிட்டால், 1.45 நிலைக்கு அப்பால் தலைகீழான அபாயங்களை நாங்கள் தொடர்ந்து காண்கிறோம். https://think.ing.com/articles/bank-of-canada-prepares-for-a-trade-war/
-
சீமானின் பித்தலாட்டம் அம்பலம். படம் பொய், சந்தித்தது மெய்
காணொளி நேரடியாக காணொளியினை இணைக்காமல் அதன் முகவரியினை எவ்வாறு தொடரியில் இணைக்கிறீர்கள்? நன்றி, அதனை நானாகவே புரிந்து கொண்டுவிட்டேன்.
-
பாட்டுக் கதைகள்
இந்த கதை என்னையும் மிகவும் பாதித்த கதை குறிப்பாக் அந்த மாட்டின் மீது அன்பு செலுத்துபவராக மாட்டுக்காரர் குறிப்பிடப்படுவார், அந்த மாடும் அவரது உயிரினை காப்பாற்றியிருக்கும், ஆனாலும் மாட்டுக்காரர் ஊரவர்க்கு ஒரு அடிமை போல, அதே போல அந்த மாடு அவருக்கு அடிமை எனும் கருத்தினை அந்த சின்ன வயதில் என்னால் ஏற்றுக்கொள்ளமுடியாமல் இருந்துள்ளது. வாசிப்பவர்கள் ஒவ்வொருவரும் ஆபிரகாம் லிங்கன் போல உணரும் ஒரு தருணத்தினை கதாசிரியர் கடத்தியிருப்பார், அதற்கு நானும் விதிவிலக்கில்ல நீங்களும் விதிவிலக்கில்லை என்பதனை பதின்ம வயதிற்கு முன்னர் படித்த ஒரு கதை இத்தனை ஆண்டுகாலமும் மனதில் மறக்காமல் அதன் தாக்கம் உள்ளதனை குறிப்பிடலாம். அவர்களது ஆக்கங்களையும் வாசித்திருக்கின்றேன். ரசோதரன், குறிப்பிட மறந்து விட்டேன் நீங்கள் கூறியது போல ஒவ்வொருவரும் இன்னொருவரின் அடிமை என்பதே அந்த கதையின் கரு அதனை மேலோட்டமாக கதையினை வாசித்தால் புரியாது.
-
பாட்டுக் கதைகள்
சிறிய வயது பாட புத்தகத்தில் என்பதாக கருதுகிறேன் (தவறாக இருக்கலாம்), மேலே கருத்து எழுதும் போது அவசரமாக எழுதவேண்டியதாக போய் விட்டது, காரணம் குழந்தைகளுக்கு பாடசாலை விடுமுறை வெளியே போகவேண்டும் 5 நிமிடம் அவகாசம் கேட்டு எழுதும் போது பக்கத்திலிருந்து கேள்வி கேட்டு கொண்டிருந்தமையால் சரியாக எழுத முடியவில்லை, இப்போது வீட்டிற்கு வந்துவிட்டாலும் வேலையாக உள்ளதால் முன்னர் எழுதியதனை மீண்டும் சரிபார்த்து பின்பு பதில் எழுதுகிறேன்.
-
பாட்டுக் கதைகள்
செக்கோவின் கதை ஒன்றில் (குதிரைக்காரன் என நினைக்கிறேன்), ஒரு குதிரைக்காரர் தனது மகனின் இழப்பு பற்றி தனது வாடிக்கையாளர்களிடம் கூற முற்படும்போது அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பிரச்சினை இருக்கும் அதுதான் உலக நியதி என்பதனை கதையினூடே கடத்தியிருப்பார் ஆனால் கதையின் முடிவினை அவர் தனது மகனின் இழப்பிற்கான இயலாமையினை வெளிப்படுத்துவதாக முடித்திருப்பார். ஒவ்வொரு காலகட்டத்திலும் உள்ள இலக்கியங்கள் அக்காலத்தினை பிரதிபலிக்கும் அக்காலத்தில் வாழ்ந்த மக்களின் வாழ்க்கையினை பிரதிபலிக்கும், சங்க காலத்தில் இருந்த காதல் அக்காலத்து இலக்கியத்தில் பிரதிபலிக்கும், இக்காலத்து இலக்கியத்தில் இக்கால காதல் இருக்கும், இலக்கியங்கள் ஒவ்வொரு காலத்தின் வரலாற்று சாட்சியாகும், இலக்கிய படைப்பாளிகள் மக்களின் வாழ்க்கையினையே பிரதிபலிக்கின்றார்கள். மார்டின் விக்கிரமசிங்க எனும் பெரும்பான்மை இன எழுத்தாளரின் அடிமைகள் எனும் கதை ஒரு அடுமட்ட சாதாரண மாட்டுக்காரரின் வாழ்க்கை அதில் ஏற்பட்ட விபத்து அது அவரது வாழ்க்கையில் ஏற்படுத்துகிற தாக்கம் அவரை சூழ உள்ள நிகழ்வு மனிதர்கள், மாடு என தொடர்கிறது அது கண்ணுக்கு தெரியாத இழையாக சமூகத்தில் அவரது நிலை, அவருக்கு கீழே இருக்கும் மாட்டின் நிலை மந்தர்கள் ஒருவருக்கொருவர் ஒரு சமூக கட்டமைக்குள் கட்டவைக்கப்பட்டுள்ளனர் என்பதனை அதன் தலையங்கத்தினை பார்க்காவிட்டால் புரியாது, அந்த கதையின் கருப்பொருள் அடிமைகள் ஆனால் அது கதையினை வாசிக்கும் போது புரியாது ஏன் கதைக்கு அடிமைகள் என பெயரிட்டார் என சிந்திக்க தூண்ட வைப்பதே கதாசீயர் நோக்கம்.
-
இமானுவேல் சேகரன் கொலை- முத்துராமலிங்க தேவர் கைது..பெரியார்- புதிய சர்ச்சையில் சீமான்- விசிக கண்டனம்!
நீங்கள் கூறவருவது எனக்கு புரிகிறது, இதில் தலையிடாமல் இருப்பதே நல்லது எனும் மனநிலையில் நான் உள்ளேன் ஆனால் இங்கு நடக்கும் விவாதங்களை பார்க்கும் போது பிள்ளையார் பிடிக்க குரங்காக மாறும் நிலை வராமல் இருக்க வேண்டும் என விரும்புகின்ற நிலையே எனது நிலையும்.
-
பாட்டுக் கதைகள்
புலிகளினுடன போர் காலகட்டத்தில் சிங்களவர்கள் இங்குள்ள பத்திரிகைகளில் புலிகளுக்கெதிரான பிரச்சார கருத்துக்களை எழுதி வந்தனர், அது வெறும் பிரச்சார கட்டுரைகள் ஆனால் அவை மிக தாக்கம் செலுத்தும் வகையில் எழுதியிருப்பார்கள்.
-
பாட்டுக் கதைகள்
சங்க காலத்தில் தமிழ் மக்கள் உயர்நிலியில் இருந்த்மையால் அந்த கால பிரதிபலிப்பாக வந்த இலக்கியங்கள் அக புற இலக்கியங்களாக வந்தன ஆனால் சங்கமருவிய காலத்தில் அன்னிய படை எடுப்பினால் மக்கள் வாழ்க்கை சிதைந்து மக்கள் வாழ்க்கை தடம் உரண்டு போன நிலையில் மக்களை நல்வழிப்படுத்துவதற்காக வந்த இலக்கியங்கள் அற இலக்கியங்களாக இருந்த்தன. மக்களின் தேவை கருதிய இலக்கியங்கள் இயல்பாக அந்த மக்களின் தேவைகளை பிரதிபலிக்கின்றன, இயல்பாகவே இலக்கியவாதிகளுக்கு என கடமைகள் உள்ளது அதனை அவர்களது இலக்கியங்கள் பிரகிபலிக்கின்றன் அந்த இலக்கியங்கள் உள்ளதை அப்படியே கூறுகிறது அதாவது தான் சார்ந்த சமூகத்தினை பிரதிபலிக்கின்றன். யாழ் களம் அதற்கான ஒரு தளமாக இருந்து வருகிறது ஆனால் யாழ்கள எழுத்தாளர்கள் எவரும் ஒரு இலக்கியவாதிகளாக இதுவரை பரிணமிக்கவில்லை. எமது சமூகம் இலங்கையிலும் உலகெங்கிலும் பல்வேறுபட்ட சமூக நெருக்கடிகளை சந்திக்கின்றன இது இக்காலத்திற்குரிய இலக்கியத்திற்கான தளமாக உள்ளது. ஒரு எழுத்தாளருக்கு பிற சமூகத்தில் உள்ளவர்களை உருவக்கேலி செய்வதில் என்ன பிழை இருக்கிறது எனும் சந்தேகம் ஏற்படுகிறது,இன்னொரு எழுத்தாளருக்கு போரினாலும் பொருளாதாரத்தினாலும் நசிந்து போன இலஙகியில் உள்ள குழந்தகளின் கலை முயற்சிகளை வெளிநாட்டில் உள்ள தனது குழந்தைகளின் அரங்கேற்றத்திற்கான செலவு குறைந்த தெரிவாக தட்டிப்பறிப்பது தவறாக தெரியாத நிலையில் உள்ளார். எழுத்தாளர்கள் சமூக சிந்தனை உடையவர்களாக இருக்க வேண்டும் என்பதற்காக இடது சாரி சிந்தனையாளரளாக இருக்க வேஎண்டும் எனும் அவசியம் இல்லை, மக்களின் துயரம் புரியாதவர்களால் அவர்களுக்காக இலக்கியங்கள் உருவாக்க முடியாது, என்பதற்கான உதாரணமாக நான் முதலில் கூற மறுத்த உதாரணத்தினை குறிப்பிட்டுள்ளேன், அது அவர்களின் தவறல்ல அவர்களை பொறுத்தவரை அதனை அவர்கள் தவறாக உணராத நிலை காணப்படுகிற்து, அப்படியான நிலையில் எவ்வாறு ஒரு மக்கள் இலக்கியத்தினை படைக்க முடியும்?
-
பாட்டுக் கதைகள்
நான் கூறவந்த இலக்கிய பரிணாம வளர்ச்சி என்பது ஒரு சிறுபான்மை கொண்ட உயர் இலக்கிய அறிவு கொண்ட சமூகத்திற்காக இலக்கணத்திற்கான இலக்கியமாக பார்க்கின்ற ஒரு நிலை, கலையும் இலக்கியமும் மக்களுக்கானது, அது சாமானிய மக்களின் வாழ்வை மேம்படுத்த உதவ வேண்டும், அதனை சாமானிய மக்களாலும் விளங்கி கொள்ளமுடியுமாக இருத்தல். யாழ்களம் பல இலக்கிய முயற்சிகளை உருவாக்கி உள்ளது ஆனால் அதிலிருந்து ஒரு சிறந்த இலக்கிய படப்பாளிகளாக பலர் மாற முடியாமல் போய்விட்டது. இலக்கியவாதிகள் சுயமாக சிந்திக்ககூடிய, சமூக சிந்தனை கொண்டவர்களாக இருக்கவேண்டும், வார்த்தைகளை இரசிக்கும் வண்ணம் கோர்த்து எழுதுவது ஒரு ஜனரஞ்சகமான எழுத்தாளர்களை உருவாக்கலாம் ஆனால் சிறந்த இலக்கியவாதிகளை உருவாக்க முடியாது. யாழ்களத்தில் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு எழுத்தாளர்களின் ஆரம்ப முயற்சி உற்சாகம் தருவதாக இருக்கும் ஆனால் அவர்கள் அடிப்படை சமூக சார்பான புரிதல் இல்லாமல் இருப்பார்கள், அதனை அறியாத நிலையிலேயே இருப்பார்கள் அதனை சுட்டிக்காட்டும் போது அதனை புரிந்து கொள்ள முடியாதவர்களாக இருப்பார்கள், முரண்படுவார்கள். உதாரணங்களை குறிப்பிட விரும்பவில்லை அது தனிப்பட அவர்கள் மனதினை பாதிக்கலாம். பொதுவாக சிறந்த இலக்கியவாதிகள் மார்க்சிய சிந்தனாவாதிகளாக இருப்பது அவர்கள் சமூக நலனில் அக்கறை கொண்டவர்களாக இருப்பதால் அது ஒரு தற்செயல் நிகழ்வாக நிகழ்ந்துவிடுகிறது. பானையில் இருப்பதுதானே அகப்பையில் வரும், சிறந்த சமூக சிந்தனை இல்லாதவர்களால் சிறந்த இலக்கியங்களை படைக்கமுடியாது.