Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

vasee

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by vasee

  1. இது ஒரு மலையாளத்திரைப்படம் தமிழ் மொழியிலும் தரமான பிரதி இணையத்தில் உள்ளது. இந்த திரைப்படத்திலும் படத்தின் ஆரம்பத்தில் ஒரு காட்சியுடன் திரைப்படம் ஆரம்பமாகும் அந்த காட்சி பின்னர் படத்தின் முடிவில் இனைக்கபட்டுள்ளது. இது சத்திய ஜித்திரே கூறியதான ஒரு திரைப்படத்தின் ஆரம்பத்தில் துப்பாக்கியுடன் ஒரு நபர் வீட்டின் முன் வந்து நின்றால் அந்த படத்தின் இறுதியில் துப்பாக்கி சுடுவதுடன் முடிவடையும் எனும் கோட்பாடு பரவலாக இந்திய திரைப்படங்களில் அதிகம் இது பயன்படுத்தப்படுகிறது. ஆனால் பெரும்பாலும் ஆரம்ப காட்சியினை முடியும் போது மறந்துவிடுவதுண்டு ஆனால் படத்தின் குறித்த காட்சியினை மறக்காமல் இருக்க அதனூடு காட்சியினை விபரிப்பதான ஒரு காட்சி அமைப்பு ஒரு சில நொடிகள் மட்டும் நீடிகின்ற அந்த காட்சி அமைப்பு சிறப்பாக இருந்தது. சத்தியஜித் ரே செக்கோவின் துப்பாக்கி(அன்டன் செக்கொவ்) எனும் கதையமைப்பினை உள்வாங்கி இவ்வாறான ஒரு காட்சி அமைப்பினை உருவாக்கினாரோ என எண்ணத்தோன்றுகிறது (சத்தியஜித் ரேஇன் படங்களை பார்த்ததில்லை கேள்விப்படதனடிப்ப்டையில்). இந்த படத்தில் உள்ள முக்கியத்துவத்தினை குறிப்பிட விரும்பவில்லை, அதனை குறிப்பிட்டால் இந்த படம் ஏற்படுத்தும் உண்மையான அந்த அனுபவத்தினை குறைத்துவிடும். ஆனால் பாத்திர கட்டமைப்புக்கள், அதற்க்காக தேவையற்ற காட்சிகளற்ற (செக்கோவின் துப்பாக்கி), விறு விறுப்பான காட்சி அமைப்புக்கள் என மிகவும் சுவாரசியமான படம் முழு குடும்பத்துடன் பார்க்கக்கூடிய ஒரு சிறந்த குடும்ப படம். இப்படிப்பட்ட திரைப்படங்கள் ஏன் தமிழில் வருவதில்லை?
  2. அரசுகள் தேவையில்லாமல் பணத்தினை செலவழிப்பார்கள் ஊழல் செய்வார்கள் ஆனால் மக்களை பாதுகாப்பதற்கான செலவுகளை குறைப்பார்கள்.
  3. வட கொரியாவிற்கும் இரஸ்சியாவிற்குமிடையே பாதுகாப்பு ஒப்பந்தம் நடைமுறையில் உள்ளது, ஒரு நாடு தாக்கப்பட்டால் மற்ற நாடு உதவிக்கு செல்லும், இங்கு இரஸ்சியாவின் கேர்ஸ்க் பகுதியின் மீது தாக்குதல் நடத்தப்படுகின்றமையால் அதில் வட கொரியா ஈடுபடுவதற்கு எந்த தடையுமில்லை. ஆனால் மறுவளமாக இரஸ்சியாவின் மீது மேற்கு நாட்டு படைகள் தாக்குவதற்கு எந்த முகாந்தரமும் இல்லை என நினைக்கிறேன் ஏனெனில் அவர்கள் உக்கிரேனுக்கு நேட்டோவில் இணைவதற்கு கூட அனுமதி கொடுக்கிறார்களில்லை ஆனால் அவர்கள் பின்னணியில் இருந்து இரஸ்சிய படைக்கெதிராக போராடுகிறார்கள். தற்போது உக்கிரேன், போர், பொருளாதார அழுத்தம் என பல வகையாலும் அழிவினை சந்தித்துக்கொண்டுள்ளது ஆனாலும் நேட்டோவில் அங்கத்துவமோ ஐரோப்பிய ஒன்றியத்திலோ இணைக்கவில்லை. தற்போது உக்கிரேன் உடையும் தருணத்தில் உள்ளது, தற்போதுள்ள நிலை நீடித்தால் உக்கிரேன் சடுதியாக உடைந்துவிடும். அது 6 மாதத்திலும் நிகழலாம் 3 மாதத்திலும் நிகழலாம், இதனை உடனடியாக தடுக்கவேண்டுமாயின் மேற்கின் இராணுவத்தினை உதவிக்கு அனுப்பவேண்டும் அதற்கு உக்கிரேனை நேட்டோவில் இணைக்க வேண்டும் செய்வார்களா? இங்கு தத்தமது நலனையே முன்னிலைப்படுத்துவதால் நிட்சயமாக உக்கிரேனை நேட்டோவிலும், ஐரோப்பிய ஒன்றியத்திலும் சேர்க்க மாட்டார்கள், ஆனால் தேவைப்பட்டால் இரஸ்சியாவுடன் சேர்ந்து பேச்சுவார்த்தை எனும் போர்வையில் உக்கிரேனை கொள்ளை அடிப்பார்கள். இங்கு வட கொரியா இரஸ்சியாவில் நிற்பது பிரச்சினை அல்ல, நம்பியவர்களால் ஏமாற்றப்பட்டு நடுத்தெருவில் விடப்பட்டுள்ளது உக்கிரேன். வட துருவமோ, உக்கிரேனோ வளங்களை பங்குபிரிப்பதில் நிலவும் போட்டிதான் தற்போதய புதிய உலக ஒழுங்கு, இதில் வெல்பவர்கள் அனைத்தையும் எடுத்து கொள்வர்.
  4. இதனைத்தான் சொந்த செலவில் சூனியம் செய்வதென்பது. ஆம், இவை தவிர பல மருத்துவ நலன் கொண்டது, நீரிழிவு நோயையும் கட்டுபடுத்துகிறது என இணையத்தில் உள்ளது.
  5. இங்கு பெரும்பாலானவர்களின் வீடுகளில் இந்த மரம் உள்ளது ஆனால் எமது வீட்டில் இந்த மரம் இல்லை. 19 ஆம் நூற்றாண்டு காலப்பகுதியில் அவுஸ்ரேலியா இந்த மரங்களை கலிபோரனியாவிற்கு விற்றதாக கூறுகிறார்கள்.
  6. அவுஸ்ரேலியாவின் இயற்கை மரமான யுகலிப்ஸ் (Eucalyptus) இயல்பிலேயே எரியக்கூடிய ஒன்று அது காட்டுத்தீ ஏற்படுவதற்கு ஒரு காரணியாக இருக்கின்றது, இந்த மரத்தினை கலிபோர்னியாவிற்கு அவுஸ்ரேலியா விற்றதாக கூறுகிறார்கள்.
  7. அவுஸ்ரேலியாவிலும் இந்த காட்டுத்தீ ஒரு பொதுவான நிகழ்வாக உள்ளது, முன் ஆயத்த நடவடிக்கையாக தீ அபாயம் உள்ள பகுதிகளை குளிர்காலத்தில் அவர்களாகவே தீ பரவாமல் தகுந்த பாதுகாப்புடன் எரிப்பார்கள், இந்த முன்னேற்பாடுகள் மற்றும் அவசர பாதுகாப்பு ஊழியர்கள் இவற்றுக்கென நிதி ஒதுக்கி வைத்திருப்பார்கள். 2019 இல் அப்போதிருந்த அரசு அந்த நிதியத்தினை குறைத்திருந்தது, அபோது ஏற்பட்ட தீ விபத்தில் 34 மக்கள் பலியானார்கள் பல இலட்சக்கணக்கான உயிர்னங்கள் கொல்லப்பட்டன பல மில்லியன் கெக்டெயர் நிலங்கள் தீக்கு இரையாயின. தீ பரவும் போது தொடர்ச்சியற்று காற்றின் உதவியினால் தீ தாவி பரவியது, அப்போது வெப்பம் 40 களில் இருந்தத்டு என நினக்கிறேன். அப்பகுதிகளில் வாழ்ந்த மக்களுக்கு தீ பரவல் தொடர்பான தெளிவு இருந்தும் சிலர் அந்த தீயில் சிக்கி கொண்டார்கள். தீ ஏற்பட்ட போது அப்போதிருந்த அவுஸ்ரேலிய பிரதமர் தனது விடுமுறியினை களிப்பதற்கு வெளிநாடு சென்றுவிட்டார், திரும்பி வந்து ஊடகங்களிடமும் பாதிக்கப்பட்ட மக்களிடமும் மாட்டிக்கொண்டார்.
  8. அதே இந்திய நண்பர் இலங்கையினை சீனாதான் கடன் கொடுத்து சீரழித்தது என்பார், ஆரம்பத்தில் இலங்கை கடன் வாங்கினார்கள் அவர்கள் கொடுத்தார்கள் என்று கூறினாலும் விடுவதாக இல்லை ஒரு நாள் சீனா இலங்கையினை நாசமாக்கவில்லை உங்கள் இந்தியாதான் இலங்கையின் தற்போதய நிலைக்கு காரணம் என கடந்தகால வரலாற்றினை கூறினேன் அதற்கு எதுவும் கூறாமல் கேட்டுக்கொண்டிருந்தார் (அவருக்கே உண்மை தெரியும் போல இருக்கிறது அவர் 60 களில் உள்ளவர் என நினைக்கிறேன்). அனால் அதன் பின்னர் கூட சந்தர்ப்பம் ஏற்படும்போது மீண்டும் சீனாதான் இலங்கையின் சீரழிவிற்கு காரணம் என்பார்😁.
  9. இந்தியாவிற்கும் அமெரிகாவிற்குமிடையே தற்போது நிகழும் இராஜதந்திர நெருக்கடிக்கு ஒரு இந்திய நண்பர் கூறிய காரணம், அமெரிக்காவின் அப்கானிஸ்தான் விலகலின் பின்னர் அமெரிக்க ஆக்கிரமிப்பு காலத்தில் போதைவஸ்து உற்பத்தி செய்யப்பட்ட விளைநிலங்களில் 95% மீண்டும் உணவு பொருள்கள் உற்பத்தி செய்யும் விளைநிலங்களாக மாறிவிட்டமையால் மீண்டும் அமெரிக்க போதை பொருள் நடவடிக்கைகளில் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அதனால் CIA இயின் முன்னய போதை பொருள் கடத்தல் நாடான பர்மாவிலிருந்து இந்திய எல்லை பகுதியினூடாக போதை பொருள் கடத்தலுக்கு (மிசோராம், மணிப்பூர் என நினைவுள்ளது) இந்தியரசு தனது சோதனையினை அதிகரித்து நெருக்கடி கொடுப்பதன் மூலம் அமெரிக்காவின் தென்னாசியாவில் மேற்கொள்ள விரும்ம்பும் செயற்பாட்டுகளுக்கான நிதி வழங்கலை இந்தியா கட்டுப்படுத்துவதனை விரும்பாதமையால் இந்த நெருக்கடி ஏற்பட்டுள்ளது என கூறினார். நீங்கள் கூறும் அமெரிக்க வெள்ளை மா அதுவாக இருக்குமோ😁?
  10. சுதந்திர தினவிழாவில் பாற்சோறு வழங்வார்களா? தற்போது அரிசி தட்டுப்பாடு நிலவுவதால் இப்படி ஒரு நடவடிக்கை எடுக்கிறார்களா?😁
  11. ஏதாவது சுவாரசியமான தகவல்களை அறியலாம் என்பதற்காக கேட்டேன்😁. இன்னுமொரு கேள்வி அன்னபூரணி அமெரிக்கா போனதா அல்லது கோதுமை மா முதலில் இலங்கைக்கு வந்ததா? எது முதலில் இடம்பெற்றது?
  12. இலங்கையிலிருந்து வெளிநாடு செல்வதற்கு மக்கள் முண்டியடித்துக்கொண்டிருக்கும் போது இலங்கை திரும்ப விரும்புகின்ற புலம்பெயர் தமிழர்களை பார்க்கும் போது இக்கரைக்கு அக்கரை பச்சை என்பது உண்மையாகிறது.
  13. சட்டியில் இருந்து அடுப்பிற்குள் விழுந்த நிலையில் இருப்பதாக அவர்கள் இலங்கைக்கு தவறாக வந்ததையிட்டு நினைக்க கூடும், அதனால் முதலில் அவர்களின் விருப்பத்திற்கு முன்னுரிமை கொடுத்து அவர்கள் போக விரும்பும் நாட்டுடன் பேச்சுவார்த்தை நடத்தி (பங்களாதேசம் அல்லது இந்தியா போக விரும்பகூடும்)அந்தந்த நாடுகள் சம்மதிக்கும் பட்சத்தில் அவர்களை, அவர்கள் விரும்பும் நாடுகளுக்கு அனுப்பி வைக்கவேண்டும், சிலர் தற்காலிகமாக வேன்டுமென்றால் இலங்கையில் தங்க விரும்பகூடும் ஆனால் அவர்கள் குடியுரிமையினை விரும்பமாட்டார்கள் என கருதுகிறேன், தற்காலிக வதிவிடயுரிமையினை விரும்புவர்களை அவர்களுக்குத்தேவையான உதவிகளை செய்வது அரசிற்கு ஒரு பெரிய விடயமாக இருக்க போவதில்லை. மொழி அவர்கள் போகும் பாடசாலையினை பொறுத்தது.
  14. அமெரிக்கா என்னதான் உலகை ஆட்டைய போட்டாலும் அவர்களையே ஆட்டையப்போடுபவர்கள் இந்தியர்கள், 2022 இல் கிட்டதட்ட 10 பில்லியன் அமெரிக்க டொலர்களை இந்தியர்கள் இந்தியாவில் இருந்தவாறே ஏமாற்றியுள்ளார்கள் என கூறுகிறார்கள். வல்லவனுக்கு வல்லவன்,மோடிஜி இன் டியிட்டல் இந்தியா😁 .
  15. இந்த மக்கள் இயல்பு வாழ்க்கையினை மீளப்பெறுவதென்பது மிகவும் சவாலான விடயம் (ஏற்கனவே இலங்கை ஒரு பொருளாதார பாதிப்பிற்குள்ளான நாடு), ஆனாலும் உள்ளூர் மக்கள்தான் முதலில் உதவியுள்ளார்கள் என்பது ஒரு ஆறுதலான விடயம் (முல்லை தீவு மீனவ சங்கத்தின் உதவி), அகதி வாழ்கை வாழ்ந்த எம்மால் ஒரு அகதி வாழ்க்கையின் நடைமுறை அனுபவத்தினூடாக அந்த வலிகளை புரிந்தமையால் அதிலிருந்து இந்த மக்களுக்கான உதவிகளை செய்வதனூடக அவர்களை விரைவாக இயல்பு வாழ்க்கைக்கு திருப்ப முடியும், அத்துடன் நில்லாது அரசு அவர்கள் சுய தொழிலில் ஈடுபடுவதற்கும் சொந்த இருப்பிட வசதிகளை உருவாக்கி வாழ்வதற்கு தேவையானவற்றை செய்யவேண்டும்.
  16. உக்கிரேனின் ஊழல் பற்றி குறிப்பிடும்போது (30 - 40 நிமிடங்கள் என நினைக்கிறேன்) தமது தரப்பில் அதற்கு எதிரான நடவடிக்கையினை எடுப்பதாக கூறியுள்ளார், ஆனால் அதே வேளை வழங்கல் பாதையில் உள்ள ஊழல் பற்றி கேள்வி எழுப்பியதன் மூலம் அவர் மறைமுகமாக ஒரு விடயத்தினை தெளிவுபடுத்துகிறார். இந்த போரில் அவர்கள்தான் இரத்தம் சிந்துகிறார்கள், அப்படியாயின் தமக்கெதிராக தாமே ஏன் செயற்படவேண்டும் என கேட்டு சில விடயங்களை புரிந்து கொள்ளுமாறு பார்வையாளரிடமே விட்டு விடுகிறார்.
  17. இந்த காணொளியில்னை முழுமையாக பார்க்கவும். உக்கிரேன் அவசரகாலநிலை அதிபர் செலன்ஸ்கியின் மனம் திறந்த பேட்டி.
  18. இது வருத்தமான விடயம், இலங்கை மட்டுமல்ல உலகில் பல நாடுகள் இந்த பாதையிலேயே பயணிக்கின்றன, பூனைக்கு மணி கட்டுவது யார் என்பதுதான் பிரச்சினை, ஆட்சிக்கு வருகின்ற ஆரசுகள் சரியான ஒரு அரசியல் அமைப்பினையோ சட்டவாக்கத்தினையோ செய்வதில்லை ஆனால் ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் அனைத்தும் வாக்குறுதியில் இருக்கும்.
  19. சீனா அடிக்கடி இப்படி இந்தியாவின் டெம்ரேட்ஜர் பார்ப்பது ஒன்றும் புதிததல்ல😁, சீனாவிற்குத்தெரியும் இந்தியா இனி அடக்கித்தான் வாசிக்க வேண்டும் அது சீனாவாக இருந்தாலும் சரி இலங்கை, நேபாளம், பங்களாதேசமாக இருந்தாலும் இந்தியா இனி கூழை கும்பிடு போட்டே ஆகவேண்டும், எல்லா மாடுகளும் ஓடுகிறது என சோனியாவின் சோத்தி மாடு ஓடியதனை போல நானும் ரவுடிதான் என செயல்பட்டு தற்போது அவமானப்பட்டு நிற்கிறார்கள்.
  20. இவ்வாறான செய்திகளை வாசிக்கும் போதே பொறுப்பற்ற நிர்வாகத்துறையினரின் மேல் கோபம் ஏற்படுகிறது, எவ்வாறு இலங்கை மக்கள் இதனை தொடர்ந்து எதிர்கொள்கிறார்கள்? இலங்கையினை ஆபிரிக்க நாடு மாதிரி மாற்றாமல் ஓயமாட்டார்கள் இலங்கை அரசியல்வாதிகள்.
  21. அவுஸ்ரேலியர்களிடையே இவர் கொஞ்சம் பிரபலமானவர்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.