Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

vasee

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by vasee

  1. மிக சொற்ப நாள்கள் கிழக்காசிய நாடொன்றில் சிங்களவர்களுடன் வசிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது, அவர்கள் அனைவரும் தமிழ் நன்றாக தெரியும், அதே போல வெவ்வேறு நாடுகளில் வசிக்கும் போது அந்தந்த நாடுகளின் மொழி வேகமாக கற்று கொள்ள முடிந்தது (3 மாதத்திற்குள்ளாகவே) ஆனால் தற்போது ஒரிரு வார்த்தைகள் தவிர்த்து அந்த மொழிகள் நினைவில் இல்லை. 10 வருடங்களுக்கு முன்னர் சில சிங்கள பெண்களுடன் வேலை செய்யும் நிலையில் அவர்களது எதிர்பார்ப்பு அனைத்து தமிழர்களுக்கும் சிங்களம் தெரிந்திருக்கும் என்பதாக இருந்த்து. ஒரு மொழியினை கற்பதால் அடிப்படை பிரச்சினை தீர்ந்துவிடாது, இரண்டும் வேறு வேறு விடயங்கள்.
  2. இந்த திரியின் நிலமை மோசமாகின்றது போல இருக்கிறது.
  3. இப்படி கருத்துக்களை தனிப்பட எடுத்துக்கொள்ளாமல் ஒரு விளையாட்டாக கருத்துக்களை எதிர்கொண்டால் பிரச்சினை உருவாகாது, உங்கள் இருவருக்கும் நல்ல நகைசுவை உணர்வுண்டு.
  4. இந்தியாவில் சிறிது காலம் இருந்துள்ளேன், அங்கு இலங்கை போல பல நெருக்கடி உள்ளன, அங்குள்ள இந்தியர்கள் அகதிகளை மனிதர்களாகவே மதிப்பதில்லை, வெளியில் இருப்பவர்களின் நிலை வேறு, ஒரு நாள் வேலை முடித்துவிட்டு கொஞ்சம் தாமதமாக இரவு 7 அல்லது 8 மணியளவில் முகாம் திரும்பியிருந்தேன், போகும் வழியில் ஒரு உணவகத்தில் உனவருந்த சென்ற போது அங்கு நின்ற ஒரு இந்திய தமிழர் அகதிக்கு இந்த நேரம் இங்கு என்ன வேலை என என்னை மறைமுகமாக வம்பிழுத்தார், அவர் குடித்திருந்தார். மறுவளமாக எனது உறவினர்கள் அங்கு செல்வ செழிப்புடன் வெளியில் வாழ்கிறார்கள், பல தொழில் நிறுவனங்கள், உணவங்கள் என வாழ்கிறார்கள், நான் சந்தித்த அந்த இரண்டு தரப்பு மக்களும் இந்திய குடியுரிமையினை விரும்புகின்றனர், ஆனால் நான் இந்திய குடியுரிமையினை வழங்கியிருந்தால் ஏற்றிருபேனோ தெரியவில்லை ஆனால் இலங்கையிலிருந்து வெளியேறிய பின்(முதலில் இலங்கையிலிருந்து வெளியேறுவதில்லை எனும் நிலைப்பாட்டில் இருந்திருந்தேன்) யோசித்தேன் எனது வாழ்க்கையில் பெரும்பகுதியினை இலங்கையில் வாழ்ந்து வீணாக்கி விட்டேன் என, தற்போது கூட அந்த எண்ணத்தில் மாற்றம் ஏற்படவில்லை, ஒவ்வொருவரின் வாழ்க்கையும் ஒரே மாதிரி இருப்பதில்லை, இலங்கையில் எனது வாழ்க்கை முறை எனக்கு பிடித்திருக்கவில்லை. இங்கு தி மு க இனை வெறுக்கும் நிலையில் இலங்கை தமிழர்கள் இருக்கிறார்கள், ஆனால் இந்தியாவில் இருக்கும் எமது மக்களுக்கு ம் ஜி ஆர் ஆட்சிக்கு பின்னர் பிடித்த தமிழ் நாட்டு கட்சி தி மு கவும் முன்னால் முதல்வர் கருணாநிதியும் என்பதனை உங்களால் நம்ப முடியாமல் இருக்கும். இது தான் நடைமுறை இடைவெளி.
  5. புலிகள் குடும்பங்களை பிடித்து வைத்திருந்தார்கள் என்பதனை நானும் கேள்விப்பட்டதில்லை, ஆனால் 1995 இறுதிக்காலப்பகுதியில் புலிகளின் 3 போராளிகள் இயக்கத்திலிருந்து விலகியிருந்தார்கள், அவர்களுக்கு 3 மாத தண்டனைக்காலத்தில் தண்டனையாக சமையலறை வேலை இருந்தது, அந்த காலப்பகுதி முடிவடைவதற்கு வெகு சில நாள்கள் மட்டும் இருந்த நிலையில் அவர்கள் இருந்த சமையலறை மேல் புக்கார வீசிய குண்டில் 3 போராளிகளும் உடல் சிதறி பலியாகியிருந்தனர். அதில் ஒரு போராளி சாகவச்சேரியினை சேர்ந்தவர், அந்த குண்டு வீச்சு யாழ் மாவட்டத்திற்குள் நிகழ்ந்தது, இருந்தும் அந்த போராளிகளின் உடல்களை புலிகள் தாமே தகனம் செய்துவிட்டனர், குடும்பத்தினரிடம் ஒப்படைக்கவில்லை, இறந்தவர்களுக்கு போராளிகள் எனும் அந்தஸ்தும் வழங்கப்படவில்லை, 5 பேருக்கும் குறைவானவர்களே அவர்களது இறுதி நிகழ்வில் கலந்து கொண்டார்கள்.
  6. இந்தியாவில் உள்ள பலர் இலங்கைக்கு போக விரும்புவதில்லை, மாறாக இந்திய குடியுரிமை பெற விரும்புகிறார்கள், இந்திய குடியுரிமை இல்லாமல் அகதிகளாக இருப்பது சிரமம், அதனால் இந்தியாவில் அகதிகளாக இருப்பதனை விட இலங்கைக்கு போகலாம் என நினைக்கிறார்கள், ஆனால் அவர்களுக்கு இந்திய குடியுரிமையுடன் இந்தியாவில் தங்கி இருப்பதுதான் முதலாவது தெரிவாக உள்ளது. மிக நியாயமான கருத்து.
  7. சூமா, உங்கள் பதிவு மிகவும் சிறப்பான பதிவு, உண்மையாக 5.4 பில்லியன் வெளிநாட்டு காசு இலங்கைக்குள் போகிறது எனும் செய்தியினை மேலோட்டமாகவே பார்த்த நினைவிருந்தமையால் மேலே எனது பதிவில் அதனை சுட்டிக்காட்டியிருந்தேன், குறிப்பாக நீங்கள் இணைத்த தரவில் சவுதி அரேபியாவில் இருந்து அதிக பணம் இலங்கைக்கு போகிறது, அப்படி பார்க்கும் போது நீங்கள் குறிப்பிடும் உண்டியல் மூலம் அனுப்படும் பணத்தின் அளவு எவ்வளவு இருக்கும்? உண்மையாக இது ஒரு முக்கியமான தகவல், தொடர்ந்து எழுதுங்கள்.
  8. உங்களுக்கு இந்த தரவினை பெறக்கூடியதாக இருக்கிறதா? உங்களுக்கு இந்த தரவினை பெறுவதற்கு இந்த இணைய கணக்கு தேவை என கூறுகிறது.
  9. நன்றி உங்கள் கருத்திற்கு, அன்னிய செலாவணிக்கட்டுப்பாடுள்ள நாடுகள், வரி ஏய்ப்பு போன்ற காரணங்களினால் இந்த கவாலா மற்ற நாடுகளில் பிரபலம், இலங்கையில் அன்னிய செலாவணி பிரச்சினை ஏற்பட்டதன் பின்னரே சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது (கட்டுப்பாடுகள் இருக்கிறதா என தெரியாது) என கருதுகிறேன். பெரும்பாலும் இந்த கவாலா arbitrage ஆக பயன்படுத்துவார்கள். நாட்டின் பொருளாதார கொள்கையினால் நாணய பரிமாற்றம் சரியான விகிதத்தில் இருப்பதில்லை, இதனையே கவாலா முகவர்கள் உப்யோகித்து பணம் பார்க்கிறார்கள், அதனால் பெரும்பாலும் காவாலா காசு அன்னிய செலாவணியாகவே நாட்டிற்குள் வலம் வரும் . https://www.investopedia.com/ask/answers/forex/forex-arbritrage.asp அன்னிய செலாவணி கட்டுப்பாடு உள்ள நாடுகளில் கூட நாட்டிற்குள் அன்னிய செலாவணியாக வராவிட்டாலும் வெளிநாட்டிலிருந்து அனுப்படும் காசினால் உள்நாட்டு பொருளாதாரத்தினை வளப்படுத்தும் மற்ற நாடுகளை பற்றித்தெரியவில்லை, இங்கு அவுஸில் தமிழ் கடையில் காசு அனுப்பும் போது பற்றுச்சீட்டு கொடுப்பார்கள் அதில் எந்த நிறுவனத்தின் மூலம் அனுப்புகிறார்கள் என்பது இருக்கும் (நான் முன்பு அனுப்பிய கடை மணிகிராம் மூலம், தற்போது ஒரு 6 -7 வருடமாக நேரடியாகவே மணிகிராம் அல்லது வெஸ்ரன் யூனியன் மூலம் இணையத்தினூடாக அனுப்புவதுண்டு). ஆண்டொன்றிற்கு 5.4 பில்லியன் வெறும் பெரும்பான்மை இனத்தவர்கள், இஸ்லாமியர்களாலும் அனுப்பப்பட முடியுமா? நான் அறிந்த பெரும்பான்மை இனத்தவர்கள் இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பணம் அனுப்புவதில்லை, ஆனால் விசேட தினங்களிற்கு வாழ்த்து அட்டை அனுப்புகிறார்கள் (இது நகைசுவைக்காக கூறவில்லை, அது அவர்களின் இயல்பு). உங்கள் கருத்தும் சரியானதே (எனது கருத்து தவறாக இருக்கலாம்), தொடர்ந்து எழுதுங்கள்.
  10. https://www.investopedia.com/terms/s/seigniorage.asp#:~:text=Seigniorage allows governments to earn,loss instead of a gain. சில எண்ணெய் வள நாடுகள் பெற்றோ டொலரினை கைவிட முடிவெடுத்த பின்னணியில் அமெரிக்காவின் பொருளாதாரம் பெரும் பாதிப்பிற்குள்ளாகும் நிலை உருவாகும் நிலை ஏற்பட்டுள்ளது. இன்றைய அமெரிக்க ஏகாதிபத்திய நிலையில் இருந்து பல்துருவ உலக ஒழுங்கு மாற்றத்திற்கு மிக சிறந்த உதாரணமாக துருக்கி தனது உலக எண்ணெய் வழங்கலின் கேந்திரமாக மாறுவதற்கு (HUB) சிரியாவில் துருக்கியின் ஆதிக்கம் முக்கியமாக உள்ளது. இந்த நிலை அமெரிக்காவின் அதிக கடன் பொருளாதார சுமையில் அமெரிக்கா துருக்கியின் ஆதரவுடன் மீண்டும் பெட்ரோ டொலருக்கு சாதகமான சூழ்நிலையினை உருவாக்குவதற்கு விரும்பக்கூடும், அதே வேளை இரஸ்சியாவிற்கு மத்திய கிழக்கில் சிரியாவில் உள்ள தளங்கள் இராணுவ, பொருளாதார நலனை கொடுப்பதால் துருக்கியுடன் ஒரு உடன்பாட்டிற்கு வந்தாக வேண்டும், சிரியாவில் உள்ள அமெரிக்க ஆதரவு கிளர்ச்சியாளர்களுக்கான ஆதரவினை அமெரிக்கா விலக்குவதற்கு துருக்கி கோரினால் அதனை அமெரிக்காவினால் தட்ட முடியாது எனும் நிலையிலேயே அமெரிக்காவின் தற்போதய சூழ்நிலை உள்ளது. உக்கிரேன் இரஸ்சிய போர் வருவதற்Kஉ முன்னர் இப்படி ஒரு நிலை வரும் என யாராவது நினைத்தாவது பார்த்திருபார்களா? தற்போதுள்ள நிலை பனிப்போர் காலத்திலும் நிலவாத சிக்கலான நிலையாக மாறிவருகின்றது. இந்த உலக மாற்றத்தில் எவ்வாறு எமது நலனை நிலை நிறுத்த முடியும் என ஆராய வேண்டும். ஆனால் இந்த துருக்கிய ஆதரவு கிளர்ச்சியாளர்களினால் சிரியாவில் உள்ள சிறுபான்மை கிறிஸ்தவர்கள் பாதிப்புக்குள்ளாகும் நிலையினை இந்த அமெரிக்க மற்றும் இரஸ்சிய வல்லரசுகள் வேடிக்கை பார்க்கும் நிலை உருவாகியுள்ளது.
  11. அவர் வேண்டுவது இந்திய குடியுரிமையினை, இலங்கைக்கு போவதனை அல்ல, ஒரு காலத்தில் இலங்கையர்கள் தனிமனித அடிப்படை சுகாதார கட்டுமானம் அற்ற இந்தியர்களை கிண்டலடித்த காலத்தில் இருந்து, தற்போது இந்திய குடியுரிமையினை கோரும் நிலைக்கு வந்துள்ளார்கள், அத்துடன் இலங்கையில் உள்ள மலையக தமிழர்களை இன்றளவும் வேற்றுமை காட்டும் இலங்கை தமிழர்கள் இந்தியகுடியுரிமையினை கோரும் முரண்நகை, இதனைத்தான் கர்மா என்பார்கள்.
  12. தமிழர்களுக்கு தமது பலம் தெரிவதில்லை, இன்றைய இலங்கை பொருளாதாரம் மூச்சு விடுவதற்கு காரணம் புலம் பெயர் தமிழர்கள்தான், கடந்த ஆண்டு இலங்கை அரசுக்கு கிடைத்த 5.4 பில்லியன் அன்னிய செலாவணியில் அதிமுக்கிய பங்கினை புலம் பெயர் தமிழர்களின் நேரடி பங்களிப்பாகவும், இலங்கையிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொறுள்களின் மூலமாக மறைமுகமாகவும் இலங்கைக்கு பெருமளவு அன்னிய செலாவணி இலங்கையினை சென்றடைகிறது. இது இலங்கையின் உல்லாச பிரயாணத்துறையினை விட முக்கியமான வருமானமாக திகழ்கிறது. இலங்கையில் நிலவும் அவசரகால சட்டம், முதலீட்டுற்கு வாய்ப்பற்ற சூழல்(Red tape), நிர்வாக சீர்கேடு, ஊழல் என்பவை புலம்பெயர் தமிழர்கள் இலங்கையில் முதலீட்டிற்கு தயங்குவதற்கு காரணமாக இருக்கிறது, அத்துடன் இலங்கையில் தமிழர்கள் இரண்டாம் தர பிரஜைகளாகவே தொடர்ந்தும் இருக்கின்ற நிலையில், முதலீடுகள் தொடர்பான அச்சம் நிலவுவதற்கு கடந்தகால அனுபவங்களும் காரணமாகின்றது. தற்போதுள்ள நிலையில் இலங்கையில் இந்திய உதவிகள் மூலமாக தலையீடு செய்யும் இந்திய அரசின் உதவிகளையும், முதலீடுகளையும் புலம்பெயர் தமிழ் சமூகத்தின் பங்களிப்புடன் ஒப்பிடும் போது இது ஒரு வலுவற்றதாக தெரிந்தாலும் இலங்கையின் தற்போதய பொருளாதார சூழ்நிலையில் ஒரு சிறிய அழுத்தம் இலங்கையினை பொருளாதார ரீதியாக உடைத்துவிடும். இதனை இலங்கை அறிந்துள்ளது, தற்போது இந்தியா பங்களாதேச பொருளாதாரத்திற்கு கொடுக்கும்நெருக்கடி போல ஒரு நெருக்கடி நிலையினை எதிர்காலத்தில் இலங்கையிலும் ஏற்படலாம், அதற்கான முதலீட்டுத்திட்டங்களில் இந்தியா சிறிது சிறிதாக கடந்தகாலங்களைலிருந்து ஈடுபட்டு வருகிறது. தனது அயல் நாடுகள் முழுவதிலும் இதே போல ஒரு சூழ்நிலையினையே ஏற்படுத்தி பின்னர் அதனை பாவித்து அவர்களை அடிபணிய வைக்கின்றது இந்திய அரசு, இந்தியா மட்டுமல்ல அனைத்து உலக வல்லரசுகளும் பொருளாதாரத்தினை ஆயுதமாக பயன்படுத்துகின்றநிலையே காணப்படுகின்றது. இந்த பூகோள அரசியலில் தற்போது புதிதாக ஏற்பட்டுள்ள மாற்றங்களை பார்த்தாலே தெரிகிறது அடுத்த பத்தாண்டுகளில் உலக அரசியலின் போக்கு. பெட்ரோ டொலரில் இருந்து எண்ணெய் வள நாடுகளின் விலகல், அதன் பின்னணியில் உலக பொருளாதார மாற்றம், பல துருவ பொருளாதார மையமாக மாறிவரும் உலக பொருளாதாரம் இந்தியாவினையும் வட பூகோள நாடுகளையும் எதிரெதிர் நலன் சார் நிலையில் நிறுத்திவிட்டுள்ளது, இந்தியா அதனால் ஏற்பட போகும் நெருக்கடிகளை கையாள இலங்கையில் இந்திய இருப்பு அவசியமாக உள்ளது, இலங்கைக்கும் அது புரிந்துள்ளது என கருதுகிறேன் ஆனால் இலங்கையின் பொருளாதார நிலை இந்தியாவின் அனுகூலத்தில் தங்கியுள்ளது. தற்போது ஏற்பட்டுள்ள இந்தியாவிற்கும் அதன் அயல் நாடுகளுக்குமிடையேயான உரசல்களுக்கு பின்னால் உள்ள சக்தி யார் என்பது தெரியும், அந்த சக்தி கூட தனது அதிகாரத்தினை தக்கவைக்கும் பகீரத பிரயத்தனங்களின் மூலம் இலங்கையினை நெருக்குகின்றது, ஆனால் இலங்கை எப்போதும் ஓடும் குதிரையிலேயே தனது பணத்தினை வைக்கிறது, மறுவளமாக தமிழர்கள் தமது சொந்த பலத்தினை உணரவில்லை உலகில் ஏற்படும் மாற்றங்களையும் உணரவில்லை. இந்த பயணத்தில் பிரிக்ஸில் இலங்கை இணைவதற்கு இலங்கை அழுத்தம் கொடுகும் என நம்புகிறேன். இந்த கருத்தோஒவியம் இலங்கையின் நிலையினை சிறப்பாக காட்டுகிற மிக சிறந்த கருத்தோவியம்.
  13. சாமி வரம் கொடுத்தாலும் பூசாரி வழிவிடார் (பூசாரி எப்பவும் வழிவிடார்) என்பதனை கூறினேன், எல்லைக்குள்ள இருக்கிற சாமிதான் பவர்புல், இப்பவும் அங்கேயும் அதுதான் நடந்திருக்கு, இனிமே இப்ப்டித்தான் இருக்கும், நாங்களும் அப்படி இருந்தாலே நன்மை. கோயிலுக்கு போனா நேரா அன்னதான கியூவில போய் நிக்க வேணும் தேவையில்லாம பூசாரி, சாமி என அலையக்கூடாது. 😁
  14. இந்த அதானிதான் இப்ப பங்களாதேசில மின்சாரம் குடுக்க மாட்டன் என வம்பு செய்கிறாராமே? அப்படி இருக்க அவரை நாட்டுக்குள்ள விட்டால் இலங்கைக்கும் அதே கதிதான். சாமிக்கு இலஞ்சம் கொடுத்தால் (இலங்கையினை கோர்த்துவிட வேண்டியதுதான்) அலுவல் வேகமாக நடக்கும். சாமிக்கு இலங்கையினை நேர்த்தி கடனா வைக்கவேண்டியதுதான்.
  15. பலச்சமனிலை என்பது ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்கு கொண்ட்டாட்டம் என்பதாகும், மத்திய கிழக்கில் இரண்டு பிரிவு இஸ்லாமியர்களுக்கிடையே நிகழ்ந்து வந்த முரண்பாடு கடந்த வருடத்தில் சீன சமரத்தின் மூலம் முடிவடைந்த நிலையில் ஏமன் தொடர்பில் இருந்து வந்த பிணக்கு இரு தரப்பிற்கும் முடிவிற்கு வந்து விட்டது. இவ்வாறு ஒரே சக்தியாக அமைதியுடனிருந்தால் அப்பிராந்தியத்தில் அமெரிக்காவின் இருப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படும், எப்போதும் அமைதியின்மை நில்வி குழப்பத்துடன் இருந்தால்தான் மூன்றாம் சக்தி நன்மையடைய முடியும், உதாரணமாக இலங்கையில் உள்ள பிரச்சினை போல, அதற்Kஉ மத்திய கிழக்கில் அமைதியின்மை நிலவ வேண்டுமாயின் இஸ்ரேலின் தலையீடு இருந்து கொண்டே இருக்கவேண்டும். மன்னிக்கவும் என்னிடம் முகனூல் கணக்கு இல்லை.
  16. மத்திய கிழக்கில் இஸ்ரேல் ஒரு பலச்சமனிலையாக உள்ளது, அது செய்யும் மோசமான மனித உரிமைகள் மீறல்கள்தான் பிரச்சினையாக உள்ளது, அதனாலேயே அமெரிக்காவிற்கும் அது ஒரு தலையிடியாக இருந்தாலும் இஸ்ரேலை புறந்தள்ள முடியவில்லை.
  17. இது ஒரு தலைமை அதிகாரியிடம் ரிப்போர்ட் செய்யும் வழமையான நிகழ்வு போன்றது மட்டுமே, இதற்கு முக்கியத்துவம் கொடுக்க தேவையில்லை, தமிழர்கள் கவனிக்க வேண்டியது இதனைத்தான், சும்மா அனுர என பூசாரியுடன் மல்லுக்கட்டாமல் நேரடியாக சாமியிடம் செல்ல வேண்டும்😁.
  18. சிரிப்பினை வர வைத்தாலும் இது ஒரு துரதிர்ஸ்டமான உணமை.
  19. பகல் போட்டிகளுக்கு சிகப்பு புலனாகும் தன்மை அதிகமாக காணப்படும், இரவு போட்டிகளின் போது பந்து தெளிவாக தெரிவதற்காக பந்தின் நிறத்தினை வெள்ளையாக பயன்படுத்துவதாக கூறுகிறார்கள், இந்த பிங் பந்து இரண்டுக்கும் இடைப்பட்ட வெள்ளையும் சிகப்பும் இணைந்த நிறத்தில் பயன்படுத்துவதன் மூலம் பந்தின் புலனாகும் தன்மையினை இரவு பகல் போட்டிகளுக்கு சாதகமாகும் விதத்தில் உருவாக்கியுள்ளார்கள், ஆனால் மாலை கருக்கல் எனக்கூறும் அந்தி சாயும் வேளையில் வானத்தின் நிறமும் பிங் பந்தின் நிறமும் ஓரளவிற்கு ஒரே மாதிரியிருக்கும் போது பந்தினை கணிப்பது சிரமம் என கூறுகிறார்கள், அத்துடன் மின்னொளியில் பந்து அதிகமாக சுவிங் ஆகும் எனவும் கூறுகிறார்கள். முந்தய டெஸ் போட்டிகளில் பயன்படுத்திய அரக்கின் அளவினை விட தற்போது இரண்டு மடங்கு அதிகமாகவும் கட்டுகள் மிக உறுதியாக இருப்பதால் பந்து காற்றில் திரும்புவதும் தரையில் பட்டு திரும்புவதும் அதிகமாக காணப்படுகிறது (இதனால் டெஸ்ட் போட்டிகள் குறுகிய காலத்தில் முடிவடைவதற்Kஉ அதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்) பிங் பந்து சிகப்பு பந்தினை விட அதிக அரக்கு காணப்படுவதால் ரிவர்ஸ் சுவிங் ஆகாது என கூறுகிறார்கள் பந்து பெரும்பாலான பகுதி முழுவதும் சுவிங் ஆகும் அத்துடன் கட்டும் சிகப்பு பந்தினை விட உறுதியானது.
  20. இலங்கை வரலாற்றில் மிதவாத அரசியல் ரீதியான நடவடிக்கையினால் எந்த வித நடைமுறையிலான தீர்வும் எட்டப்படவில்லை, இனியும் எட்டப்படபோவதில்லை, இது ஒரு நிதர்சனமான விடயம், ஆனால் தமிழரசியல்வாதிகள் அரசியல் தீர்வு தொடர்பாக பேசுவது வாக்குகளுக்காக, தற்போதுள்ள நிலையில் இந்திய அனுசரணை இன்றி தமிழர்களுக்கு எந்த தீர்வும் கிடைக்கப்போவதில்லை எனும் யதார்த்தத்தினை புரிந்து இலங்கை தமிழ் மக்கள் இந்தியாவுடனான தமது உறவை வலுப்படுத்த வேண்டும். இலங்கையில் சிறுபான்மையினமாக எக்காலத்திலும் நிரந்தர அமைதியுடன் வாழ முடியாது என்பது நிதர்சனமான விடயம், தொடர்ந்து இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்துவதனை விடுத்து இந்தியாவுடனும், மேற்கு, இந்திய நலனை கருத்தில் கொண்டு தமிழர்கள் தமது கொளகையினை உருவாக்குவதன் மூலம் சிறுபான்மை இனம் இலங்கையில் அமைதியாக வாழும் சூழ்நிலையினை அதிஅக் அதிகாரங்கள் கொண்ட அலகுகளை பெற முடியும். இதற்கு உதாரணமாக உக்கிரேனை கூறலாம் போரில் ஈடுபடும் இரஸ்சியாவினை தவிர்த்து அமைதி முயற்சியில் உக்கிரேன் அரசு ஈடுபடுவதனை போல இலங்கை அரசினுடன் பேச்சுவார்த்தை என காலம் கடத்துவதனை விட இந்தியா, மேற்கு நாடுகளுடன் பேச்சு நடத்த வேண்டும். இது முகாமையாளருடன் பேசுவதனை விடுத்து நேரடியாக முதலாளியுடன் பேசுவது போன்றதாகும்.😁 எந்த நாடும் தனது நலனின்றி தேவையில்லாமல் மற்ற நாடுகளின் உள்விவகாரங்களில் தலையிடாது அதனால் இந்தியா மேற்கு நாடுகள் தவற விடக்கூடாது எனும் வகையான அவர்களது நலனை தூண்டில் இரையாக இலங்கையினை பயன்படுத்தி எமது உரிமைகளை பெற முயற்சிக்கவேண்டும்.😁
  21. தற்போது ரணில், ரணில் 2.0 தயாராகக்கூடும், சிறு பிள்ளை வேளாண்மை வீடு வந்து சேராது என்பது அனுர விடயத்தில் உண்மையாகி விடக்கூடாது.
  22. உண்மையில் பற்றாக்குறை உள்ளமையாலேயே இந்த பதுக்கல் ஏற்படுகிறது அது பற்றாக்குறையினை இரட்டிப்பாக்குகிறது, இந்த அத்தியாவசிய பொருள்களை வாங்கும் அளவு விலை மாற்றத்தினால் பெருமளவில் மாற்றம் ஏற்படுவதில்லை, இதனை ஒன்றிற்கு குறைவான விலை நெகிழ்ச்சி தன்மையுடைய பொருள்களிற்குள் அடக்குவார்கள். அதாவது எனது இரவு நேர உனவிற்கு அரை இறாத்தல் பாணை உண்கிறேன், பாணின் விலை திடீரென 2 ரூபாக அதிகரித்துவிட்டது என்பதற்காக அதனை உண்ணாமல் விட முடியாது ( பாண் விலை குறைந்த அடிப்படை உணவுப்பொருள்). நுகர்வோராக விலை அதிகரிப்பினால் பாதிப்பு ஏற்படுவது போல பாண் உற்பத்தியாளருக்கு அதன் விலை வீழ்ச்சி நட்டத்தினை ஏற்படுத்தும். இந்த விலை மாற்றம் கேள்வி மற்றும் வழங்கலுக்கிடையேயான ஒரு சமரச நிலை மூலம் உருவாகும், வழங்கல் குறைவாக இருக்கும் போது (அரை இறாத்தல் பாணிற்கு 10 பேர் போட்டியிட்டால்) விலை அதிகரிக்கும். இந்த தட்டுப்பாடுகளே ஏக போக சந்தைகளை உருவாக்குகிறது (Monopoly). இதற்கு குற்றம் சாட்டப்பட வேண்டியவர்கள் அரசே, வேறு யாருமல்ல, காரணம் அவர்கள் அடிப்படை பிரச்சினைகளை கவனித்து சரியான திட்டமிடலை செய்யாமையே காரணம். நிதி முகாமைத்துவம், நாட்டின் நாளாந்த நிர்வாக நடைமுறைகளில் இந்த புதிய அரசு மெத்தனமாக இருக்கிறதா அல்லது அனுபவமின்மையால் இப்படி எல்லாம் நிகழ்கிறதா என தெரியவில்லை.
  23. போட்டியின் ஆரம்பிப்பதற்கு முன்னரே அவுஸ் வெல்லும் என கூறினாலும் போட்டி ஆரம்பித்து முதலாவது இனிங்க்ஸ் பின்னர் நீங்கள் அவுஸ் வெல்லும் என கூறிவிட்டீர்கள், அந்த நேரம் எனக்கு உங்களவிற்கு நம்பிக்கை இருக்கவில்லை, முதல் நாள் மேக மூட்டமாகவும் இரண்டாம் நாள் அதிக வெய்யில் 3 ஆம் நாள் மழை என எதிர்வு கூறியிருந்தமையால் ஆடுகளத்தின் தன்மை மாற்றத்தில் ஒரு சந்தேகம் நிலவியிருந்தது, அவுஸின் இலகு வெற்றிக்கு இந்திய அணியின் பங்கும் இருந்தது. இந்த போட்டியில் இரு அணிகளுக்கிடையேயும் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது, சிராஜின் சின்ன பிள்ளைத்தனமான கொண்டாட்டத்தில் ஆரம்பித்துள்ளது, மிக சிக்கலான ஆடுகளத்தில் 140 ஓட்டங்களை எடுத்த ட்ராவிஸ் கெட்டிற்கு குடுக்க வேண்டிய குறைந்த பட்ச அங்கீகாரத்தினை கொடுக்காமல் மிக கேவலமாக நடந்து கொண்டுள்ளது இந்திய அணி, அதனை இந்திய இரசிகர்களே இரசித்திருக்கமாட்டார்கள். ஆனால் அவுஸ் பார்வையாளர்கள் கூட மோசமாக நடந்து கொண்டார்கள்.
  24. அரிசி மட்ட்டுமல்ல தேங்காய், வெங்காயம் என்பவற்றிற்கும் தட்டுப்பாடு நிலவுகிறதாக கூறுகிறார்கள் இதனை நிவர்த்தி செய்ய இறக்குமதி, மானியங்கள், சீரான வினியோகத்தின் மூலம் விலை உயர்வை மட்டும் கட்டுப்படுத்துவதற்கு அரசிற்கு பெருந்தொகை பணம் செலவாகும், தற்போதுள்ள இலங்கை பொருளாதார நிலையில் இது சாத்தியமா? ஜப்பான், இந்தியா போன்ற நாடுகள் இலங்கை அரசிற்கு நன் கொடை வழங்குவதாக கூறப்படுகிறது, அதன் அளவு மிக சிறிதாக இருக்கிறது. இதில் இந்த நீண்டகால திட்டத்திற்கு அரசிற்கு பணம் திரட்டலில் சிக்கல் நிலவும், நான் நினைக்கிறேன் அரசு உடனடியாக அவசரகால பாதீட்டினை கொண்டு வரவேண்டும். இல்லாவிட்டால் நிலமை மோசமாகி விடலாம், தாமதித்தால் தவிக்க நேரிடலாம். புலம் பெயர் தமிழர்கள் இலங்கைக்கு தேவையான நிதியுதவியினை செய்வதன் மூலம் இந்த அரசிற்கும் இலங்கையிலுள்ள அனைத்து மக்களும் ஏற்பட போகும் பேரிடரினை தவிர்க்கலாம். அதே நேரம் விவசாயிகளின் நலன், நாட்டின் நலன் என்பவற்றினை கருத்திற்கொண்டு செய்யப்படும் நீண்டகால திட்டங்களுக்கும் புலம் பெயர் தமிழர்களும் வெளிநாட்டின் நன் கொடையின் மூலம் அதற்கான நிதியினை பெறலாம். ஆனால் தற்போது ஏற்பட்டுள்ள அத்தியாவசிய பொருள்களின் தட்டுப்பாடு தமிழ் மக்களின் ஏகோபித்த ஆதரவு பெற்ற இந்த அரசினை பெரும் நெருக்கடிக்குள் தள்ளி விடும்.
  25. தட்டுப்பாடு நிகழலாம் என கருத்து உருவானால் இலங்கை தற்போதுள்ள பொருளாதார சூழ் நிலையில் அது பெரிய அழுத்தத்தினை உருவாக்கலாம், இதனை யாரோ திட்ட மிட்ட முறையில் செய்கிறார்கள் எனக்கருதுகிறேன், இதனால் பாதிக்கப்படுவது மக்கள் எனும் அடிப்படை புரிதல் இல்லாமல் வெறும் அரசிய்ல் நோக்கில் செயல்படுகிறார்களோ என தோன்றுகிறது.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.