Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

vasee

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by vasee

  1. ஆரிய கூத்தாடினாலும் காரிய கூத்தாக இருக்க வேண்டும் என கூறுவார்கள், சிறுபான்மையினர் இந்த இலங்கையர்கள் எனும் மாயையில் சிக்கி சீரழியாமல், இலங்கையிலுள்ள அவர்களது உள்வீட்டு பிரச்சினைகளில் தேவையில்லாமல் தலையிடாமல் (அவர்கள் சிறுபான்மையினரின் நாடாக இலங்கையினை கருதுவதே இல்லை என்பதே யதார்த்தம்) எமது பிரச்சினைக்கு என்ன தீர்வு என்பதனை மட்டும் கவனம் செலுத்த வேண்டும் என கருதுகிறேன்.
  2. தற்போது இலங்கையிலுள்ள சிறுபான்மையினருக்கு ஏற்பதான உலக புறச்சூழல் ஏற்பட்டு வருகிறது, இதனை தமிழ் தரப்பு சரியாக பயன்படுத்துவது போலவே தெரிகிறது (Campaign positioning), ஒரு புறம் இந்தியாவிற்கு கஜேந்திரன் கடிதம், மறுபுறம் சாணக்கியன் நோர்வே, என பலதரப்புடனும் எமது பிரச்சினையினை பேசுவதற்கான புறச்சூழல் உருவாகி உள்ளது, இதில் சீன தரப்புடனும் நாம் பேச வேண்டும் சீனத்தரப்பும் தற்காலத்தில் தமிழ் மக்களுடன் பேசுவதற்கு ஆரவம் காட்டி வருகின்றனர் ( இதனை முன்பு கோசான் குறிப்பிட்டதாக நினைவுள்ளது). இந்த Campaign position ஒரு ஒழுங்குபடுத்த பட்டதாக இருக்க வேண்டும் என கருதுகிறேன் ஒரு ஜெனரல் போரை திட்டமிட்டு அதனை நெறிப்படுத்தி அதனை நிறைவேற்றுவது போல. இந்த நிலையினை ஏற்படுத்துவதற்கு அனைத்து தமிழ்க்கட்சிகளும் ஒரு பொது திட்டத்துடன் செயற்பட வேண்டும், இது தமிழர்களின் பேரம் பேசும் நிலையினை ஏற்படுத்தும் என கருதுகிறேன்.
  3. இதனை வாசிக்கும் போதே பைத்தியம் பிடிப்பது போல இருக்கிறது, ஒரு இளம் பெண்ணொருவரது ஒரு யூரியூப் காணொளியில் அவரது அம்மா ஐரிஸ் பின்புலம் அவரது தந்தை இலங்கையர் அந்த பெண் முற்றூ முழுதாக அவரது தந்தையின் எந்த அம்சமும் கொண்டிருக்கவில்லை, அவர் சிறு வயதில் அவரது தந்தையுடன் கடைக்கு சென்றிருந்த போது கடையிலிருந்து வரும்போது அவரது தந்தை அவரை தோளில் போட்டு தூக்கி வரும் போது வாசலில் நின்ற காவலாளி அந்த குழந்தையினை இலங்கையினை சேர்ந்த தந்தையினை குழந்தையினை கடத்துபவராக கருதிவிட்டதாக கூறினார். அந்த காணொளியில் இடப்பட்ட பின்னூட்டத்தில் ஒரு சிங்களவர் என நினைக்கிறேன் குறிப்பிட்டிருந்தார் அந்த பெண்ணின் தந்தை சிங்களவராக இருக்க முடியாது ஏனெனில் சிங்களவர்கள் வலுவான உயிரணுக்கள் கொண்டவர்கள் என குறிப்பிட்டிருந்தார். சிங்களவர்கள் இந்த கதைகளை நம்புவர்களாக இருக்கிறார்கள் என கருதுகிறேன். காணொளியினை தேடிப்பிடித்து இணைத்துள்ளேன்.
  4. தமிழ் யூரியூப்பருக்கு கொடுத்த பேட்டியில் அதனை குறிப்பிட்டுள்ளார், புதுத்தும்புத்தடி நன்றாக கூட்டும் என அது அனுரவை என நினைத்தேன், இப்போது அவர் அனுரவை கூறினாரா அல்லது அனுரவின் கட்சியினை கூறினாரா என சந்தேகம் வருகிறது.
  5. ஆளைப்பார்த்தால் டேர்மினேட்டர் மாதிரி தெரியவில்லை. நோஞ்சான் மாதிரி இருக்கிறார்.
  6. அதற்கு பதில் குட்டாக ஒரு நாட்டின் ஜனாதிபதியினை தும்புத்தடி என கூறியிருக்கிறாரே?
  7. இந்தியாவில் இருந்துதான் வரும், மற்ற நாடுகளில் இருந்து வாங்கி அதனை சுத்திகரித்து வழங்கும், இந்தியா தனது அயல் நாடுகளுக்கு இவ்வாறு குழாய் மூலம் எண்ணெய் வழங்குகிறது, ஆனால் என்ன இந்தியாவுடன் முரண்பட்டால் இப்போது பங்களாதேசத்திற்கு நிகழ்வது போல நிகழும் அவ்வலவுதான். இலங்கையிலுள்ள திரிகோணமலையில் உள்ள எண்ணெய் தாங்கிகளின் பயன்பாடு இதன் மூலம் அதிகரிப்பதுடன் இந்து சமுத்திரத்தினூடாக ஒரு புதிய எரிபொருள் பாதையினை இதன் மூலம் உருவாக்கலாம், அது இலங்கை பொருளாதாரத்திற்கு பெரும் உதவியாக இருக்கும்.
  8. எனக்கு அவர்களின் வரலாறு விளங்கவில்லை, சிங்களவர்கள் விஜயனுக்கும் குவேனிக்கும் பிறந்தவர்கள் என கூறுகிறார்கள், அதே வேளை சிங்க தந்தை மூலம் வந்த வம்சாவளியே சிங்களவர்கள் எனவும் கூறுகிறார்கள், சிங்கமா? விஜயனா?
  9. இங்கு வெளிநாட்டுக்கு வந்த ஆரம்பத்தில் நட்பு அடிப்படையில் ஒருவர் கை குலுக்கினார், கை குலுக்கும் போது உள்ளங்கையினை சுரண்டினார், அப்போது எனக்கு அதன் சூட்சுமம் தெரியவில்லை, அவர் விளையாட்டாகத்தான் செய்கிறார் என நினைத்து பதிலுக்கு நானும் உள்ளங்கையினை சுரண்டி விட்டேன்😁. அதன் பின்னர் வேறு ஒருவருக்கு அதே போல் உள்ளங்கையினை சுரண்டின போது, அவர் நான் புரியாமல்தான் இதனை செய்வதனை உணர்ந்தவறாக காரணத்தினை விளக்கினார், இந்த சம்பவத்திற்கிடையே பலருடைய கையினை குலுக்கியிருந்தேன். இங்கு இலங்கை கோருவது வனவிலங்குகளால் பயிர்களுக்கு ஏற்பட்ட நட்டத்திற்கான நன் கொடை என நினைக்கிறேன், அத்துடன் எதிர்காலத்தில் வரவுள்ள நட்டத்திற்குமான நட்ட ஈடு.
  10. அனைவருடனும் கதைக்க வேண்டும், சிங்களத்துடன் உடன்பாடு எட்டப்படும் போது மூன்றாம் தரப்பு மத்தியஸ்தம் வேண்டும், சிங்களம் எப்போதும் ஒப்பந்தங்களை சின்னப்பிள்ளைகள் பேப்பரை கிழிப்பது போல கிழித்துவிடுவார்கள், அப்படி கிழிக்கும் போது யாராவது பக்கத்திலிருந்து ஒரு போடு போடுவதற்கு மூன்றாம் தரப்பு மத்தியஸ்தம் இருக்க வேண்டும். தற்போது இலங்கை அதிபர் இந்தியாவிற்கு ஓடோடி போய் இந்திய பாதுகாப்பிற்கு எதிராக செயற்படமாட்டோம் என கூறி இந்தியாவினை மகிழ்விக்க இந்திய நலத்திட்டத்தினை இலங்கையில் செயல்படுத்துவதிற்கு தயாரக உள்ளோம் என கூறியுள்ளார், பொதுவாக எமது நலனிற்காக மற்றவர்களை நாடி செல்லுகின்ற நிலையில் இந்திய நலனிற்க்காக இந்தியாவிற்கு ஓடிப்போன இலங்கை அதிபரை வழிக்கு கொண்டுவர இந்தியா போன்ற மூன்றாம் தரப்பு வேண்டும். உக்கிரேன் இரஸ்சிய போரில் சம்பந்தப்பட்ட இரண்டாம் தரப்பான இரஸ்சியாவினை விட்டு விட்டு அமைதி முயற்சியில் ஈடுபடுகின்ற உலகில் சிங்களத்துடன் மட்டுமே பேசுவோம் என இருந்தால் எமக்கு எதுவும் கிடைக்காது.
  11. இதனை பற்றி பேசுவதில் பிரயோசனம் இல்லை, அது ஒரு தவிர்க்க முடியாத இயற்கையியல் விதி, அதில் பெயர்கள் மட்டுமே வித்தியாசமாக இருக்கும்.
  12. அவர் நிறைவேற்றுவதாக கூறியவை எவை? நான் நினைகிறேன் அவர் கூறிய விடயங்கள் பொதுச்சேவையின் தரத்தினை உயர்த்தல், ஊழல் அற்ற ஆட்சி, பயங்கரவாத தடை சட்ட நீகம், பொருளாதார வளர்ச்சி, சிறுபான்மையினரின் மொழியுரிமை. இதற்கு முன்னரிருந்த ஜனாதிபதிகள் இதனைவிட ஜனரஞ்சகமான வாக்குறுதிகளை வழங்கினார்கள், பொதுச்சேவை தரமுயர்த்தல், அபிவிருத்தி, பயங்கரவாத தடைசட்டம் நீக்கம், இனப்பிரச்சினை தீர்வு, ஜனாதிபதி முறைமை நீக்கம் என்பவை இலங்கை அரசியலின் வழமையான cliche தானே? எனக்கு தெரிந்து புதிதாக புதிய ஜனாதிபதி எதுவும் கூறிய மாதிரி தெரியவில்லை, அல்லது நான் ஏதாவதை தவற விட்டுள்ளேனா?
  13. புலிகள் அமைப்பு ஒரு மோசமான அமைப்பாகவும், அதன் தலைவரை பொல் பொட்டிற்கு இணையாக கூறுகின்ற இந்த உலகு, அந்த அமைப்பினை பெரும்பாலான நாடுகள் தடை செய்துள்ளன ஆனாலும் இலங்கையிலுள்ள பெரும்பாலான தமிழர்கள் அவர்களால் ஏதோ ஒரு வகையால் பாதிக்கப்பட்டாலும், ஆனாலும் அவர்களையே ஆதரித்த, ஆதரிக்கின்ற நிலையே காணப்படுகிறது. அவர்களது தவறுகளை சுட்டிக்காட்டுபவர்கள், புலிகளின் மீதான வெறுபினால் அல்ல ஒரு ஆதங்கத்திலேயே. அடக்குமுறைகளிற்குள்ளாக்கும் இலங்கை அரசிற்கோ, அல்லது அதற்கெதிராக போராடிய எந்த ஒரு போராட்ட அமைப்புகளுக்கோ எந்தவகையிலும் தொடர்பற்றவனாக இருந்து வெறும் பத்திரிகை செய்திகளினூடாக இலங்கை அரசியலினை பார்க்கும் வெறும் பார்வையாளனாக எனது பார்வையில் புலிகள் மற்ற எந்த தரப்பினையும் விட அதிக அழுத்தத்திற்குள் செயற்பட்டவர்களாக தோன்றுகிறது. மற்ற போராளி அமைப்புகள், மற்றும் இராணுவத்தில் உள்ளது போல கேளிக்கைகள் (அவை என்னவென கூற தேவையில்லை என கருதுகிறேன்) புலிகள் அமைப்பில் தடை செய்யப்பட்ட விடயங்களாக உள்ளன, அவர்கள் போரில் வென்றாலும் அதற்கு கொடுக்கும் விலையுடன் சேர்ந்து அவர்களால் போரில் கொல்லப்பட்ட எதிரணி வீரர்களின் மரணத்திற்கு காரணமானவர்கள் எனும் உணர்வு, அது ஏற்படுத்தும் மன அளுத்தம் (சக தோழர்கள் இறப்பினால் ஏற்படும் சோகம் கண்ணீரில் கரைந்துவிடும் ஆனால் இந்த கொலைகள் ஏற்படுத்தும் வலிகளை வேறு வழிகளில் வடிகாலிட முடியாது) இவைகளை எவ்வாறு போராளிகள் எதிர்கொள்ளுகிறார்கள் என ஒரு சாதாரண பொதுமகனாக நினைத்து பார்ப்பதுண்டு. போர் மனிதர்களை மிருகமாக்குகின்றது, நாங்கள் எமக்கு நெருக்கமானவர்களின் மீதுதான் குற்றம் காணுகிறோம், அந்த குற்றத்திற்கு காரணமானவர்களாக இருந்து கொண்டு. ஒரு இராணுவ நிர்வாகத்தில் எந்தவித ஜனநாயகப்பண்புகளும் பேணப்பட முடியாதது, சாத்தியமுமில்லை. அந்த நிர்வாகத்திற்குட்பட்ட மக்களின் நிலை கடினமான ஒன்றாக இருக்கும், அதற்கு மாற்றீடாக இராணுவத்துறை சம்பந்தமற்றவர்களை பணிகமர்த்தி அவற்றினை செயற்படுத்தும்போது வருகின்றவர்களும் தவறாக இருந்தால் மக்களின் நிலை மோசமாகிவிடும். விமர்சனங்களின் மூலம் எதிர்காலத்தில் இது போல நிகழாமல் இருப்பதற்கான விமர்சனமாக இதனை பார்ப்பதாக கூறும் நாம் எம்மீதான எந்தவித சுய விமர்சனமுமில்லாமல் எமது தவறுகளுக்கு பலிக்கடா தேடுகின்றோம். அதற்காக தம்மீதான விமர்சனங்களை எதிகொள்ளும் சக்தியற்ற பலவீனமானவர்களாக இருந்த புலிகளின் அதிகார வெறியினை நியாயப்படுத்தவில்லை.
  14. இந்த படத்திற்கு கொடுக்கும் இப்படியான மறைமுக விளம்பரத்தினை பார்த்துவிட்டு படத்தினை பார்க்க முயற்சிக்கிறேன் (சிறிது சிறிதாக), இதுவரை 15 நிமிட படம் பார்த்துள்ளேன் ஆனால் பெரிதாக கூச்சல்கள் இல்லை (அமேசனில்).
  15. இதே இந்தியாதான் இவர் ஆட்சிக்கு வரக்கூடாதென்பதற்காக ரணிலையும் சஜித்தையும் கூட்டணி வைக்க முயற்சித்தது.
  16. வேறு ஒரு திரியில் இந்த சந்திப்பின் பின்னணியில் இடம்பெற்ற பேரம் தொடர்பாக கோசான் குறிப்பிட்டுள்ளார்.
  17. இலங்கை, இந்திய தரப்புகளிடையேயான இந்தசந்திப்பு, வெறுமனே இந்திய நலன் மட்டும் கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளது, இலங்கைக்கு எந்த நலனும் கிட்டவில்லை, 13 இல்லை என்பதன் மூலம் இலங்கைக்கு நன்மை ஏற்பட்டுள்ளது என இலங்கை தரப்பினை நம்பவைக்கப்பட்டுள்ளது. 13 நீக்கத்தினால் இலங்கையின் பொருளாதாரத்திற்கோ அல்லது அதன் பாதுகாப்பிற்கோ எந்த நன்மையும் ஏற்படவில்லை, தமிழர் தரப்பிற்கு இது ஒரு பின்னடைவு. அதே வேளை இலங்கை தரப்பிற்கும் இந்த உடன்பாடுகளின் மூலம் பாதுகாப்பு அச்சுறுத்தல் அதிகரித்துள்ளது.
  18. இதென்ன கேள்வி, தனியார் கல்விநிறுவனத்தில் உள்ள வகுப்பறையில்தான். சிங்கள மொழியினை கற்றால் இலங்கையில் இனப்பிரச்சினையும் தீர்ந்தமாதிரியும் இருக்குமல்லவா?
  19. தனியார் கல்வி நிறுவனத்தில் காத்திருக்கும் பெற்றோருக்கு இலவசமாக சிங்கள் மொழியினை கற்பிக்கலாம்.
  20. நன்றி தவறினை சுட்டிக்காட்டியமைக்கு தமிழர் என்பதாக நினைவில் இருந்தது ஆனாலும் எனோ தவறாக இந்தியா என குறிப்பிட்டுள்ளேன். இந்தியா கேட்ட லிஸ்டை பார்க்க நம்பமுடியாமல் இருக்கிறது, இலங்கை இதனை எவ்வாறு ஜீரணிக்கிறது என விளங்கவில்லை.
  21. இந்தியா வடக்கே இருப்பதால் துட்ட கைமுனு கால் நீட்டி படுக்க முடியாமல் அவதிப்பட்டதாக சிங்களவர்களின் புனைகதைகளில் உள்ளதாக கூறுகிறார்கள், தற்போது நீங்கள் கூறுவது போல் நிகழ்ந்தால் அதனை சிங்களவர்கள் ஏற்றுக்கொள்வார்களா? இது நிகழ்ந்தால் இலங்கை அரசியலில் ஒரு புயல் உருவாகலாம்(நீங்கள் கூறுவது போல நிகழ்ந்தால் ஏற்கனவே கால் நீட்டி படுக்க முடியாமல் அவதிப்படும் துட்ட கைமுனுவிற்கு அதனோடு சேர்ந்து மூல நோயும் வந்த நிலைதான்).
  22. இதை இலங்கை செய்யாது எனவே கருதுகிறேன், யாரும் சொந்த செலவில் சூனியம் செய்ய மாட்டார்கள், சில வேளை மற்ற அரச தலைவர்களை விட இவர் தலையில் இலகுவாக மிளகாய் அரைக்கலாம் என நினைக்கிறார்களோ🤔
  23. இலங்கை ஜனாதிபதி கூட மொழிப்பிரச்சினையாகவே சிறுபான்மையினரின் பிரச்சினையினை பார்க்கிறாரே?

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.