Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

vasee

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by vasee

  1. மேற்கூறியது போல ரோசா மரத்தில் பதியம் வைக்கப்பட்டது 14 நாள்களுக்கு மேல் இருக்கும் இந்த பதியம் வைத்து, பொதுவாக 4 வாரங்களின் பின்னர் அகற்றுவதுதான் பொருத்தமாக இருக்கும், ஆனால் முன்னதாக வெட்டி பூந்தொட்டியில் வைத்துள்ளேன், அதே போல் மாமரத்திலும் ஒரு பதியம் வைத்துள்ளேன் 3 மாதத்தின் பின் தாய் மரத்திலிருந்து பிரித்து எடுக்கவுள்ளேன். அத்துடன் குளிர்காலமும் ஆரம்பிக்கும் சிட்னியில்.
  2. ஒரு தேவையற்ற போரினால் உயிரிழக்கும் இளையோர். இப்படியான போரினை ஆதரிப்பவர்களுக்கு கிடைக்கும் ஆதாயத்திற்காக மற்றவர்களின் உயிரோடு விளையாடுகிறார்கள், புதிய அமெரிக்க தலைமையால் போர் முடிவிற்கு வந்தால் நன்று.
  3. வளர்ச்சியினை தூண்டும் பொடி தேவையில்லை, மரத்தில் இருக்கும் ஒரு கொப்பில் ஒரு அங்குலத்திற்கு மோதிரம் போல பட்டையினை நீக்கும் போது மரத்திலிருந்து குறித்த கொப்பிற்கு தேவையான நீர் மற்றும் சத்துக்கள் செல்லாது ( கீழ் மரத்திற்கும் கொப்பிற்குமிடையே பட்டை மூலமான தொடர்பற்ற நிலையில் கொப்பிற்குத்தேவையான நீர் மற்றும் சத்துக்களை பெறுவதற்காக வேர்கள் உருவாகும்). 3 மாத காலத்தில் மரத்திற்கு தேவையான அளவில் வேர்கள் அந்த மண் பையினுள் உருவாகிவிடும், வளவனின் காணொளியில் உள்ளது.
  4. அவுஸ்ரேலிய அணி இலகுவாக நிர்ணயிக்கப்பட்ட 162 ஓடங்களை வெறும் 4 விக்கெட் இழப்புடன் பெற்று வெற்றியீட்டியுள்ளது, அவுஸ்ரேலிய அணியின் அற்புதமான பந்துவிச்சு போலில்லாமல் இந்தியணியின் சாதாரண பந்து வீச்சு இந்த இனிங்ஸில் காணப்பட்டது, பும்ரா இந்த இனிங்ஸில் பந்து வீசவில்லை, பும்ரா பந்து வீசியிருந்தால் சிறிது சுவாரசியமாக போட்டி இருந்திருக்கலாம் ஆனால் முடிவில் மாற்றம் இருந்திருக்காது.
  5. இன்று வெப்பம் அதிகமாக உள்ளது, வெப்ப அதிகரிப்பினால் பிட்சில் எவ்வாறான மாற்றம் ஏற்படும் என யாராலும் எதிர்வு கூற முடியவில்லை, சாதாரணமாக பிட்ச் காயும் போது 2, 3 ஆம் நாள் துடுப்பாட்டத்திற்கு சாதகமாக காணப்படும் ஆனால் இந்த பிட்சில் ஆரம்ப நாளிலேயே ஈரப்பதன் அதிகமாக காணப்பட்டதாக முன்னர் பதிவிட்டேன் அதனை உறுதி செய்வது போல இரண்டாம் பிட்ச் ஆடுவதற்கு கடினமாக மாறியது, அதேநிலை நீடித்தால் இன்றைய நாள் நேற்றை விட மோசமாகலாம், அவ்வாறில்லாமல் அதிக வெப்பம் ஆடுகளம் துடுப்பாடத்திற்கு சாதகமானால் அவுஸ்ரேலியாவிற்கு வெற்றி கிடைக்கும், ஆனால் அப்படி நிகழ்வதற்கான சாத்திய கூறு மிக மிக சொற்பமாகும், இந்தியாவிற்கே ஆடுகளம் தற்போது அதிகளவில் சாதகமாக உள்ளது.
  6. வளவன் இணைத்துள்ள இந்த காணொளியில் உள்ளதனை போல செய்து பாருங்கள் வெற்றி வாய்ப்பு கிட்டதட்ட 90 % மேல் உள்ளது, இவ்வாறு முன்பு பல தாவரங்களை பதியம் செய்துள்ளேன், ஊரில் நான் வெறும் லக்ஸ்பிறே பையினை பயன்படுத்தியதாக நினிவுள்ளது எந்த பையாக இருந்தாலும் பயன்படுத்தலாம், அத்துடன் மண்ணும் அந்த மண்ணை தொடர்ச்சியாக ஈரப்பதனில் வைத்திருப்பதற்காக பிளாஸ்ரிக் போத்தலில் ஊசி துளையிட்டு தண்ணீர் மிக மெதுவாக சொட்டும் வண்ணம் பதியத்தின் மேல் இணைத்திருந்தேன். ஒரு மாதங்களின் பின்னர் உங்களால் ஆதன் வேர்களை பார்க்கலாம் (3 மாதத்தின் பின்னர் பதியத்தினை மரத்திலிருந்து வெட்டி வேறாக்கலாம்) 1 மீட்டர் உயரமான தாவரங்களைக்கூட இதனால் உருவாக்கலாம், சில வேளை வேர்கள் பூரணமாகாவிடில் அல்லது தாவரம் (பதியம்) பெரிதாக இருந்து அதன் இலைகளுக்கு தேவையான ஊட்டச்சத்தினை அந்த வேர்களினால் வளங்க முடியாமல் தாவரம் சோர்ந்து போகுமாயின் தாவரத்தினை நேரடி சூரிய ஒளி பரவுவதை தடுத்தல், இலைகளை குறைத்தல் செய்யலாம் (சிறிய தாவரமானால் பெரிய பொலிதீன் பையினால் அதனை மூடிநீர் இழப்பினை தவிர்க்கலாம்). ரசோதரன் இணைத்த இணைப்பில் 3 நாள்களுக்கு ஒரு முறை தண்ணீர் மாற்றுவதன் நோக்கம் பங்கஸ் ஏற்படுவதனை தவிர்ப்பதற்கு, ஒட்டுத்தாவரத்தினை பொலித்தீனால் மூடும் போது ஒட்டு பகுதியில் அந்த பங்கஸ் தாக்கம் ஏற்படலாம் (காயம் உள்ள பகுதி). தாவரங்களை ஒட்டும் போது ஒட்டப்படும் தாவரத்திற்கும் ஒட்டும் தாவரத்தின் வளர்ச்சி திசுக்களின் தொடுகை இருந்தாலே அந்த ஒட்டு வெற்றி அடையும், தாவரத்தின் பட்டையினை அடுத்து உள்ள பகுதியில் இந்த வளர்ச்சி திசுக்கள் உண்டு, பொதுவாக இரண்டு தண்டுகளும் ஒரே அளவில் இருப்பது இரண்டு வளர்ச்சி திசுக்களின் தொடுகையினை அதிகரிக்கும், எனது இந்த கத்தரி ஒட்டில் கத்தரியின் தண்டு சுண்டைங்க்காய் மரத்தின் தண்டினை விட பெரியதாக இருந்தது அதனால் 'V' வடிவ வெட்டினை செய்து அதிக வளர்ச்சி திசுக்களின் தொடுகையினை ஏற்படுத்த முயன்றேன். இந்த விடயங்கள் அனைத்தும் இலங்கை இடைநிலை பாடசாலை விஞ்ஞான புத்தகத்தில் உள்லதாக நினைவுள்ளது, இணையத்திலும் இது தொடர்பான விபரங்கள் இருக்கும் என கருதுகிறேன்.
  7. "If we have somebody that comes up and says I can fight you, as a team we want to tell them we are here and you can't take us for granted. We are all here, 11 of us versus you. If you can be as aggressive, that's fine." இந்திய வேகப்பந்து வீச்சாளாரான பிரசித் கிருஸ்னாவின், சாம் கொன்ஸ்டாஸ் பற்றி இரண்டாம் நாள் சிட்னி டெஸ்ட் போட்டியின் பின்னர் கூறிய வாசகம் இது. இந்தியணி வீரர்கள் ஓய்வறையில் உள்வீட்டு பிரச்சினைகள் உள்ளதாக கருத்து நிலவி வருகின்ற நிலையில் இந்தியணி வீரரின் கூற்று இவ்வாறு அமைந்துள்ள்து, அதில் இந்தியணி வீரர்கள் குழுவாக செயற்படுவதனை இக்கருத்தின் மூலம் உணரலாம், நேற்றைய போட்டி முடிவு நேரத்தில் ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தின் பிரதிபலிப்பாக இன்றுகாலை சாம் கொன்ஸ்டாஸின் மீது இந்தியணி வீரர்கள் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்ட வண்ணம் இருந்தனர், முன்னெப்போதும் இல்லாத அளவில் அவர்கள் ஒரு இளைஞனுடன் தீவிர வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டு கொண்டிருந்தார்கள். மைதானத்தில் ஒரு ஒற்றுமையான குழுவாக தோன்றும் விதமாக தமது பொது எதிரியாக ஒருவரை சித்தரித்து அதற்கெதிராக தாம் ஒரு குழுவாக ஒற்றுமையாக செயற்படுவதாக எண்ணுகிறார்கள். இந்தியணியின் பிரச்சினையாக அணியின் அதன் பரிணாம வளர்ச்சியில் ஏற்படும் கால இடைவெளி பிரச்சினை (tranfermaion period) என கூறும் நிலையில் இந்தியணி ஒரு உள்வீட்டு பிரச்சினைக்குள் சிக்கித்தவிப்பது போல காணப்படுகிறது. அணியில் உள்ள மூத்த வீரர்கள் அணிக்கு பாரமாக உள்ள வேளையில் ரோகித் சர்மா தான் தொடர்ந்து விளையாட உள்ளதாக கோடி காட்டியுள்ளார், செயற்பாடற்ற வீரர்களை கொண்ட இந்தியணியினால் போட்டிகளை வெல்ல முடியாத நிலையில் இந்தியணியின் முகாமைத்துவம் மீது இரசிகர்களின் வெறுப்பு திரும்புகின்றது. பல் மில்லியன் ஆதரவாளர்களை கொண்ட செயற்பாடற்ற மூத்த வீரர்களின் மீது நடவடிக்கை எடுக்க முடியாத கோழைகளாக இந்தியணி முகாமைத்துவம் உள்ளது. இதனால் இந்தியணி தனது நாட்டிலேயே தொடரினை இழந்து தற்போது போடர் கவாஸ்கர் தொடரை காப்பாற்ற போராடுகிறது. இதுவரை காலமும் ICC போட்டிகளில் மட்டும் நத்தை போல ஓட்டுக்குள் சுருளும் இந்தியணி தற்போது புதிதாக சிறிய வருமானம் குறைந்த கிரிக்கட் நிர்வாகத்தினை கொண்ட நாடுகளிடமும் மண்டியிட தொடங்கியுள்ளது, இதற்கு தீர்வுதான் என்ன? இந்தியணி இன்னுமொரு பாகிஸ்தான் அணி போல மாறுமா?
  8. சுணடைக்காய் மரத்தில் கத்தரி ஒட்டி உள்ளேன், இது 10 நாள்களுக்கு முன்னர் செய்யப்பட்டது, இந்த இலை அரும்பு நிலையில் 1 CM அளவில் இருந்தது, தற்போது 4-5 CM வரை வளர்ந்துள்ளது, இரவு நேரத்தில் இலேசாக வாடுகிறது (ஒளிச்சேர்க்கை இல்லாமல் ஆரம்ப நிலையில் இன்னமும் பூரணமாக குணமாகத நிலையில் உள்ளது) 2 அல்லது 3 வாரத்தில் சரியாகிவிடும் என கருதுகிறேன், தற்போது சிட்னியில் கோடைகாலம். கத்தரியினை சுண்டங்காய் மரத்தில் ஒட்டினால் நோய் எதிர்ப்பு சக்தியுடன் 3 - 5 வருடங்கள் வரை கத்தரி பலன் தரும். முன்னர் 45 பாகையில் ஒரு வெட்டு கத்தரியிலும் அதே போல் சுண்டைங்காய் மரத்திலும் அதற்கேற்ப வெட்டி இணைத்திருந்ததாக நினைவுள்ளது, தற்போது 'V' வெட்டு மூலம் பொருத்தியுள்ளேன், ஒட்டும் பகுதியினை துணியினால் முன்னர் சுற்றிய நினைவுள்ளது தற்போது காற்று புகாத cling wrap (cling wrap தான்) போன்ற ஒட்டுக்குரிய நாடா பாவித்துள்ளேன். நேரடியான சூரிய வெளிச்சத்தினை இம்முறை தவிர்த்துள்ளேன், மற்றும் முன்னர் பிளாஸ்ரிக் இனால் மூடி கட்டியிருந்தேன் தற்போது வலவன் இணைத்த காணொளிகளில் குறிப்பிடும் கொக்க கோலா போத்தில் பாவித்துள்ளேன்.
  9. தமிழ் சிறி இனைக்கும் கருத்தோவியங்கள் சிரிப்பை மட்டுமல்ல சிந்திக்கவும் வைக்கிறது, ஆப்பிழுத்த குரங்கு என்பார்கள் அது அனுரவுக்கு பொருந்துகிறதோ இல்லையோ ஆனால் இலங்கையர்களுக்கு நன்றாக பொருந்துகிறது.
  10. மற்ற மதங்கள் தமது நாட்டிற்குள் தமது அட்டகாசத்தினை நிறுத்திக்கொள்கிறார்கள், இவர்கள் முட்டாள்த்தனமாக மற்ற நாடுகளுக்குள் மாத்திரம் தமது அட்டகாசத்தினை செய்கிறார்கள் அதனால் மற்ற நாடுகளால் தடை செய்யப்படும் நிலை ஏற்படலாம். எந்த மதமும் அழியாது, மதங்களில் எந்த குறைபாடும் இல்லை பகுத்தறிவில்லா முட்டாள்களில்தான் குறைபாடு உள்ளது.
  11. மெல்பேர்ன் டெஸ்ட் போட்டி போல இந்த ஆட்டமும் இரு புறமும் வெற்றிவாய்ப்புக்கள் கை மாறி வருகிறது, தற்போது இந்தியா 145 அ ஒட்டங்கள் முன்னிலையில் உள்ள, 4 விக்கெட் டுக்களை அவுஸ்ரேலியா கைப்பற்ற வேண்டும் இந்தியணியினை 15 ஓட்டங்களுக்குள் அவுஸ்ரேலியா நாளை சுருட்டி விட்டால் வெற்றி வாய்ப்பு அவுஸ்ரேலியாவிற்கு உள்ளது ( 160 ஓட்டங்களுக்குள்), 200 ஒட்டங்களுக்குள் இந்தியாவினை ஆட்டமிழக்க செய்தால் அவுஸ்ரேலியாவிற்கு வெற்றி உண்டு என ஜஸ்ரின் லாங்கர் (முன்னால் அவுஸ்ரேலிய பயிற்றுவிப்பாலர்) தெரிவித்துள்ளார்.
  12. ஐரோப்பியர்களை முன்னர் பார்பேரியன் என அழைபார்கள் என நினைவுள்ளது, மொசப்பதேமியாவிலிருந்து ஏற்பட்ட (தற்போதய ஈராக் என நினைக்கிறேன்) மக்கள் இடப்பெயர்வு ஐரோப்பாவில் காட்டுமிராண்டி சமூகமாக இருந்த ஐரோப்பியர்களை மாற்றி தற்போதய மேன்னிலை ஏற்படுவதற்கு காரணமாக இருந்ததாக கருத்குகிறேன் (சிறு வயதில் படித்த விடயங்கள் சரியாக நினைவில்லை). மத்திய கிழக்கு மக்களிடன் மிக சிறந்த கலாச்சாரம் நிலவியிருந்தது என்பதற்கு தற்போதும் காணப்படும் கட்டட கலைகள் என்பவை ஆதாரமாக இருக்கின்றது, தற்போதய சமூகவியல் மாற்றத்திற்கு காரணமாக இருந்தவர்கள் இவ்வாறு நாசமாக போனதிற்கு தமது வல்லாதிக்கத்திற்காக மக்களாட்சினை கலைத்து தமக்கு சாதகமான மன்னராட்சியினை நிறுவுதல் மற்றும் தீவிர மத அமைப்புக்களை உருவாக்கி ஆட்சியினை கைப்பற்றி மக்களை காட்டாட்சிக்குள் தள்ளிய மேற்கும் ஒரு பங்காளிகள்தான், தற்போது அவர்களுக்கு ஏற்படுவது அவர்கள் செய்த பாவத்திற்கான கர்ம பலன் போன்றது.
  13. தேனீர் இடைவேளையின் போது ஆவுஸ்ரேலிய அணி 181 ஓட்டங்களுக்கு ஆட்டமிழடந்துள்ளது, இன்று கலையில் வேகப்பந்து வீச்சுக்கிற்கு சாதகமான நிலை தொடர்ந்து காணப்பட்டது, பந்து நேற்றைய தினத்தினை விட அதிகளவில் சுவிங் ஆனது, நேற்று மேக மூட்டம் இருந்தபோது இருந்த சுவிங்க் இனை விட அதிக மாக இருப்பதாக கூறுகிறார்கள் (நேற்று 0.7 இன்று 2.0) அதே வேளை பிட்சும் அதன் தன்மையினை இழக்கவில்லை. ஆனால் மதிய உணவிற்கு பின்னர் நிலமை ஓரளவிற்கு முன்னேற்றம் காணப்படுகிறது, அதற்கு காரணமாக வெப்பம் அதிகரிப்பு இருக்கலாம், இந்தியணி இந்த போட்டியில் வென்றாக வேண்டும் எனும் நிலையில், நாளை ஆடுகளம் துடுப்பாட்டத்திற்கு சாதகமாக இருக்கும் நிலையில் முதல் இனிங்க்ஸ் போல ஒரு ஆட்டத்தினை இந்திய அணி கொடுத்த்கு நாளை முழுவதும் துடுப்பாடி தேனீர் இடை வேளையில் அவுஸ்ரேலிய அணியினை ஆட வைத்தால் இந்தியணி வெல்லலாம். இந்த போட்டியில் அவுஸ்ரேலிய அணி இந்தியணியினை விட பலமான அணி, ஆனாலும் அவுஸ்ரேலிய அணிக்கு வெற்றி வாய்ப்பு மிக குறைவாக உள்ளதாக கருதுகிறேன். முதல் இனிங்ஸில் இரண்டு அணிகளும் இந்தியா 185, அவுஸ்ரேலியா 181 ஓடங்களை பெற்று சமநிலையில் உள்ளது.
  14. எந்த மதத்திலும் உயிர்களை கொல்லுமாறு கூறுவதில்லை, இந்த முட்டாள்கள் செய்யும் செயலுக்கு மதத்தினை காரணம் காட்டி மதத்தினை ஒரு பயங்கரவாத மதமாகவே மாற்ற முயற்சிக்கிறார்கள் இந்த முட்டாள்கள். எதிர்காலத்தில் நாடுகள் இந்த மதத்தினை தடை செய்யும் நிலை கூட வரலாம் இந்த முட்டாள்களால், அமெரிக்க அரசின் படுகொலைகளுக்கு எவ்வாறு அப்பாவி மக்கள் உடந்தையாவார்கள், அமெரிக்க அரசின் அப்பாவி மக்கள் படுகொலைகளை நியாயப்படுத்துபவர்கள் போலவே அப்பாவி மக்கள் இறப்பதனை விரும்பும் இவர்களும் மனநோயாளிகள்தான். பல ஆயிரம் மைல்களுக்கப்பால் இருக்கும் இலங்கையில் நடக்க இருந்த தீவிர தாக்குதலை அறிந்தவர்களால் தம் நாட்டிற்குள்ளே நிகழும் தீவிர வாத தாக்குதல் பற்றி தெரிந்திருக்கவில்லை என்பது நம்புவதாக இல்லை! இதில் அனைத்து தரப்பினது குறியும் அப்பாவி பொதுமக்கள்தான்.
  15. India 185, Australia 1/9 சிட்னி ஆடுகளம் பச்சை பசேலன காணப்படுகிறது, இந்தியர்கள் அவுஸ்ரேலியா தட்டையான சீமெந்து தரையினை அவுஸ்ரேலியா வழங்கும் என குறை கூறிய நிலையில் இவ்வாறான ஒரு ஆடுகளத்தினை யாரும் எதிர்பார்க்கவில்லை. நாணய சுழற்சியில் வென்ற இந்தியணி முதலில் துடுப்பெடுத்தாடும் முடிவினை எடுத்தது, இன்று மேக மூட்டத்துடன் மிதமான வெப்பத்துடன் புற்கள் நிறைந்த ஆடுகளம் வேக பந்து வீச்சிற்கு சாதகமாக இருந்தது, எதிர் வரும் 3 நாதள் வெப்பம் அதிகரிக்கும் ஆடுகளத்தில் ஈரப்பதன் காணப்படுவது போல இருப்பதாக எனக்கு தோன்றுகிறது (தவறாக இருக்கலாம்) எதிர் வரும் நாள்களில் பந்து எதிர் பாராத வண்ணம் ஏற்ற இறக்கத்துடன் பந்து மேலெழும் நிலை உருவாகலாம். இது வழமையான சிட்னி ஆடுகளம் போல தட்டையாக இல்லை, வழமையாக 2, 3 ஆம் நாள்களில் துடுப்பாட்டத்திற்கு வசததியாக இருக்கும் ஆனால் இந்த ஆடுகளம் நாள்கள் செல்ல செல்ல மோசமாகலம் என கருதுகிறேன் (எனது தனிப்பட்ட கருத்து) ஆனாலும் பிட்ச் காயும் போது துடுப்பாட்டத்திற்கு வாய்ப்பாக இருக்கும் என கூறப்படுகிறது. சிட்னி ஆடுகலம் மெல்பேர்ன் ஆடுகளம் போல Drop pitch இல்லை, அதனால் பிட்ச் உடையும் போது சுழல் பந்து வீச்சுக்கு சாதகமாக காணப்படும், இவற்றினை பார்க்கும் போது அதிகளவில் இந்தியணிக்கு சாதகமாக நிலை உள்ளது, அதனால் அவுஸ்ரேலியா தனது முதல் இனிங்க்ஸில் அதிக ஒட்டங்களை பெற்றாக வேண்டும் 300 ஒட்டங்களையாவது அவுஸ்ரேலியா எடுக்க வேண்டும்.
  16. ஆரம்ப பள்ளியில் தமிழ் பாடப்புத்தகத்தில் ஒரு கதை உள்ளது அது உங்களுக்கு நினைவிருக்கலாம் மார்ட்டின் விக்கிரமசிங்க என்பவரின் கதை, அதில் ஒரு மாட்டுகாரரின் வாழ்க்கை கதையாக கூற்ப்பட்டிருக்கும், அந்த கதையின் தலையங்கம் அடிமைகள். கதியில் அவருக்கு ஏற்பட்ட விபத்தினால் அவர் படுத்த படுக்கையாகிவிடுவார், அந்த விபத்து நிகழ்வை கால ஓட்டத்தில் பின் சென்று பார்ப்பது போல் கதை அமைக்கப்பட்டிருக்கும், ஆனால் அந்த கதையின் ஒரு நூல் இழை போல சமூக ஒடுக்குமுறை அந்த சம்பவங்களை பிடித்து இனைக்கும் வாசகர்களின் கண்ணுக்கு புலப்படா இழையாக காணப்படும், தலைப்பை உள்வாங்காவிட்டால் அந்த கதை சொல்ல வருகின்ற உண்மையான கருத்தினை உள்வாங்காது அது ஒரு ஏழை மாட்டுக்காரரின் கதையாக மட்டும் பார்க்கும் நிலை ஏற்படும் (அதில் பல அடிமைகள் உள்ளார்கள்) இலங்கையர்கள் என கூறுபவர்கள் இன்று செய்யும் செயல்கள் இலங்கை எனும் நாட்டினை மேலும் மேலும் மோசமாக்கும் செயல்கள்தான், அவர்கள் நினைப்பது பாதிக்கப்படுவது மற்றவர்கள் என ஆனால் உண்மையில் அனைவரும் பாதிக்கப்படுகிறார்கள் எனும் உண்மை நிலை புரியாமல்.
  17. போடர் கவாஸ்கர் தொடரின் இறுதி டெஸ்ட் போட்டி நாளை சிட்னியில் தொடங்க உள்ளது, ஆடுகள தயாரிப்பு பற்றி அதற்கு பொறுப்பாக உள்ள அடம் கூறிய கருத்திற்கு இந்திய இரசிகர்கள் எதிர்வினையாற்றியுள்ளார்கள். இந்த ஆடுகளத்தினை அவுஸ்ரேலியா வேண்டுமென்றே வெற்றி தோல்வியின்றி முடிக்க விரும்புவதாக இந்திய இரசிகர்கள் கூறுகிறார்கள். பொதுவாக சிட்னி ஆடுகளம் இந்திய உபகண்ட ஆடுகளம் போன்றிருக்கும் என கூறப்படுகிறது, இங்கு முதலில் துடுப்பெடுதாட விரும்புவார்கள் போட்டியின் இறுதி நாளகளில் ஆடுகளம் உடைய தொடங்கும் போது சுழல் பந்து வீச்சிற்கு சாதகமாக காணப்படும், அதிக ஓட்டங்களை குவிக்க கூடிய ஆடுகளமாக இந்த ஆடுகளம் உள்ளது, இந்த போட்டி பெரும்பாலும் வெற்றி தோல்வியின்றி முடிவடையும் என முன்னால் அவுஸ்ரேலிய ஆட்டக்காரான மைகல் கிளார்க் எதிர்பார்க்கிறார். உலக டெஸ்ட் சாம்பியன் போட்டியில் வெற்றி பெறுவதற்கு இந்தியா இந்த போட்டியில் வென்றாக வேண்டும், அத்துடன் அவுஸ்ரேலியா இலங்கையுடன் விளையாடும் டெஸ்ட் தொடரில் இலங்கையுடன் தோற்க வேண்டும் இந்த இரண்டும் நிகழ்வதற்கான சாத்திய கூறுகள் அதிகமாக காணப்படுவதாக இந்திய முன்னால் வீரர்களும் இந்திய இரசிகர்களும் எதிர்பார்க்கிறார்கள். மெல்பேரினில் நடந்த போட்டி மிகவும் விறு விறுப்பாக இரு அணிகளுக்கான வெற்றி வாய்ப்புகள் கை மாறி ஒரு சமச்சீரான போட்டியாக நடந்து அதில் இரு அணிகளிலிலும் சிறந்த அணியான அவுஸ்ரேலியா வென்றது (370000 மேற்பட்ட இரசிகர்களால் இரசிக்கப்பட்ட இந்த போட்டி ஒரு வரலாற்று சாதனை கொண்ட போட்டியாக உள்ளது). தற்போது சிட்னி வெப்பம் கடந்த சில தினங்களாக மத்திய 30 களில் இருந்தது தற்போது இன்றும் நாளையும் (போட்டியின் முக்டல் நாளான) மத்திய 20 களுக்கு வருகிறது, பின்னர் 2, 3, 4 நாள்களில் 30 களின் ஆரம்பத்திற்கு வெப்பம் செல்லுகிறது இறுதி நாளில் மழை குறுக்கிடலாம். இவற்றினை வைத்து பார்க்கும் போது பிட்சில் 7 MM புல்லும், அதிக வெப்பமற்ற மிதமான வெப்பம், மற்றும் பாரமான ரோலர்களை அதிகமாக பயன்படுத்த உள்ளார்கள் போல இருப்பதலால் வழமைக்கு மாறாக வேக பந்து வீச்சிற்கு ஓரளவு உதவி செய்யும் நிலையில் பிட்ச் காணப்படலாம் ஆனால் அதே வேளை துடுப்பாட்டக்காரர்களின் சொர்க்கமாகவும் காணப்படும். மெல்பேர்ன் ஆடுகளம் போல ஒரு சூழலலை எதிர்பார்க்கலாம் ஆனால் இறுதி நாளில் மழை குறுக்கீடு ஏற்படலாம் அதனால் போட்டியின் முடிவு அற்றதாக வாய்ப்புண்டு. இந்த போட்டியிலும் அவுஸ்ரேலிய அணி இந்திய அணியினை விட சிறந்த அணியாக இருப்பதால் அவுஸ்ரேலிய அணிக்கே வெற்றி வாய்ப்பு அதிகம். அவுஸ்ரேலிய அணியில் கவாயாவின் இறுதிப்போட்டி என கூறுகிறார்கள், அதே போல் சில இந்திய வீரர்களின் இறுதிப்போட்டியாகவும் இருக்க வாய்ப்புள்ளதாக கூறுகிறார்கள், இந்த போட்டியினை வென்றாக வேண்டிய நிலையில் இந்தியணியில் மாற்றங்கள் ஏற்படலாம், ஆனால் இந்திய முன்னால் ஆட்டக்காரர்களின் கருத்தின்படி இந்தியா தனது அணியில் எந்த மாற்றங்களையும் செய்யாது என கூறப்படுகிறது.
  18. இங்கு பிரச்சினை தலிபான் அல்ல, சித்தாந்தம் (மதம்) அனைத்து பிரச்சினைக்கும் காரணமாக அமைகிறது, அது தன்னை தக்கவைக்க பெண்கல்வி, சுதந்திரம் என்பவற்றை அழிக்க நினைக்கிறது அதன் மூலம் காலதால் உக்கி போன கோட்பாடுகளுக்கு ஏற்படும் சவால்களை தவிர்க்க விரும்புகின்றது, மக்கள் சிந்திக்க கூடாது என்பதே அதன் நோக்கம்.
  19. இல்லாத ஒன்றிற்காக ஒரு சம்பிரதாய நிகழ்வு தேவைதானா? உயிருடன் இருக்கும் போது கவனிப்பாரற்று விட்டு விடு பின்னர் அவர் இறந்த பின் ஒவ்வொரு ஆண்டும் நினைவு கூறுவது போல. இலங்கை காலம் செல்ல செல்ல நிலமை மோசமாகும் ஒரு தீராத நோயாகிறது.
  20. இலங்கையின் சுதந்திர தின கொண்டாட்டம் என்பதே கேலிக்கூத்தான விடயம், இலங்கையின் சுதந்திரத்திற்கு பின்னர் இலங்கையின் தற்போதய நிலை, பல இன வன்முறைகள், இன அழிப்பு போர்கள் மற்றும் பட்டினி, பொருளாதார பிரச்சினை என இலங்கை நாடு உள்ள நிலையில் இலங்கை மக்களின் மனங்களில் இலங்கைக்கு சுதந்திரம் கிடைக்காமல் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் எனும் மனநிலையே காணப்படுகிறது. மக்கள் பட்டினியிலும் அடக்குமுறைகளுக்குள்ளும் அவலப்படும் போது சுதந்திர தின கொண்டாட்டம் எதற்கு? சுதந்திரம் கிடைத்து எதனை சாதித்துவிட்டார்கள்? தமிழ்த்தலைவர்கள் சுதந்திர தின கொண்டாட்டத்தில் கலந்து கொள்வதே தவறு.
  21. நாங்கள் வாழும் சமூகத்தில் எது சரி தவறு என்பதனை ஊட்டப்பட்டு வளர்க்கப்படுகிறோம், இவை கேள்விக்கிடமின்றிய கோட்பாடாக பின்பற்றுகிறோம், எமது Perception இல் இவை ஆதிக்கம் செலுத்துகிறது, இதே மாதிரியான சமூக சூழலில் வாழ்ந்தமையால் சில விடயங்களை எங்கு வெளிநாடு சென்றாலும் எம்மால் மாற முடிவதில்லை. நெருப்பு சுடும் என கூறினால் அதனை அனுபவத்தின் பின்னரே உணர்வோம் அல்லது அனுபவஸ்தர்களை பின்பற்றி அதனை தவிர்ப்போம் என இரண்டு தெரிவுகள் உண்டு, முடிவு எமது கையில். மற்ற சமூகங்களில் இருக்கும் குறைபாடுகளை சுட்டி காட்டும் எம்மால் எம்மிடையே உள்ள குறைபாடுகளை கூட இனங்காண முடியாமல் இருக்கின்றது, இது அனைத்து சமூகங்களுக்கும் பொதுவான ஒற்றுமை. மதங்கள் மக்களை நல்வழிப்படுத்துபவை, ஆனால் அவை மிகவும் பழமையானவை, அதில் குறைபாடுகள் உள்ளன அதனை நிவர்த்தி செய்ய உள்ள ஒரு வழி! அனைவருக்கும் கல்வி. எனது அம்மாவின் அம்மா தீவிர சாதி வெறியராக இருந்தார், அதற்கு நேரெதிராக எனது தாயார் இருந்தார், இருவருக்குமிடையே ஒரே ஒரு வித்தியாசம் இருந்தது! கல்வி (ஆனால் படித்த பலரே எமது சமூகத்தில் சாதியத்தினை தூக்கி பிடிப்பவர்களாகவும், அவ்வாறானவர்களை ஆதரிப்பவர்களாக இருக்கின்றனர், ). பெண்களின் கல்வி மிக முக்கியமானது, ஒரு பெண்ணிற்கு கல்வியூட்டினால் அதனால் ஒரு முழுகுடும்பமும் பயனடையும், ஒரு சமூகத்தில் உள்ள பெண்கள் அனைவரும் கல்வி அறிவுடன் இருந்தால் அந்த சமூகம் மிக சிறந்த சமூகமாகும். முன்னர் எமது சமூகத்தில் கூட பெண்கள் கல்வியினை மறுக்கின்ற நிலை காணப்பட்டது (மக்களின் அறியாமையினை பயன்படுத்தி அனுக்கூலம் பெறும் தரப்பு பெண்கள் கல்வியினை விரும்புவதில்லை) ஆனால் பெண்களின் கல்வியினை மறுக்கின்ற சமூகமாக இருக்கும் நிலை மோசமானது, இதனை அவர்கள் சமூக எதிர்காலம் கருதியாவது மாற்ற முன்வரவேண்டும். அனைத்திலும் நல்லது கெட்டது உண்டு, அதனை உய்த்தறிந்து தெரிவு செய்ய சிந்திக்க கூடிய கல்வி வேண்டும். இந்த வேகமான உலகில் அதன் வேகத்திற்கு ஈடு கொடுத்து சமூக பொருளாத முன்னேற்றத்தினை பெற்ற சமூகமாக மாற முக்கியமாக கல்வியில் முதலீடு செய்யவேண்டும் என கருதுகிறேன், அந்த கல்வி அனைவருக்கும் கிடைப்பதனை சட்டம் மூலம் உறுதி செய்யப்பட வேண்டும்.
  22. I put the bait he had taken என்பதனையே ட்ரவிஸ் கெட் கூறியதாக கூறுகிறார்கள், https://www.theroar.com.au/cricket/video/watch-travis-heads-interesting-celebration-after-pant-brain-explosion-off-half-tracker-1401484/ இந்தியா இந்த போட்டியினை வெல்வதற்கான சாத்திய கூறுகள் இருக்கவில்லை, ஆனால் தோல்வியினை தவிர்ப்பதற்கு சாத்திய கூறு இருந்தது, அது ஒரு கடுமையான பணி அதனை இந்தியாவின் தற்போதய அணியினால் செய்ய முடியாது, இந்தியணி முதலாவது இனிங்ஸில் சிறப்பாக விளையாடியது போல தோன்றுவதற்கு காரணம் ஆடுகளம் இரண்டாம் மூன்றாம் நாள்களில் காய்ந்து துடுப்பாட்டக்காரர்களுக்கு சாதகமானது. பின்னர் 4,5 நாள்களில் பிட்ச் காய்வதால் ஏற்படும் வெடிப்பு பந்து தரையில் பட்டு எதிர்பாரா மாற்றங்களை ஏற்படுத்தும், அந்த பிட்சில் விளையாடும் போது இந்த ஓட்டம் ஒரு எடுக்க முடியாத இலக்கு, இந்தியணி தற்போது கூறுவது போல வெற்றிக்காக ஆடினோம் என்பது இரசிகர்களை சமாதானபடுத்துவதற்காக அவர்களின் நோக்கமும் போட்டியினை தோல்வியின்றி தவிர்ப்பதாகவே இருந்த்து. முதல் 26 ஓவர்களில் வெறும் 33 ஓட்டங்களை இந்தியணி பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. https://www.news.com.au/sport/cricket/i-can-explain-truth-behind-travis-heads-bizarre-celebration/news-story/b47dae4c340ed73dd6173ac265182bfb ட்ரவிஸ் கெட் செயலுக்கு இன்னொரு விளக்கம், ஆனால் பார்ப்பதற்கு முகம் சுழிப்பதாகவே இருந்தது.
  23. பெரிய தென்னை தோட்டங்களில் மரத்தில் ஏறி தேங்காய் புடுங்குவதில்லை அதற்கென வேலையாள்களும் இருப்பதில்லை, விழுகின்ற தேங்காய்களையே விற்பதாக கேள்விப்பட்டுள்ளேன். யாழ்பாணிய சாதியம் என்பது (தற்போதுள்ள சாதிய கட்டமைப்பு) கிட்டதட்ட 200 வருட பழமை கொண்டதாக இருக்கலாம், அதனை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்த வாலறுந்த நரியினை மத, மொழி தொண்டராக பேணுவதன் உள்நோக்கமே இந்த சாதியத்தினை பேணுவதற்குதான். சாதியம் அழிந்தால் இனம் முன்னேறும், நாடு முன்னேறும் ஆனால் அந்த சாதியம் இல்லாவிட்டால் அவர்கள் காணாமல் போய்விடுவார்கள், அதனால் சாதியம் அழியாமல் காப்பார்கள்.
  24. அவுஸ்ரேலியா வெற்றி, 2:1 என தொடரில் முன்னணியில் உள்ளது.
  25. இந்தியா தேனீர் இடைவேலையின் போது 3/112 (54 ஓவர்களில்), ஜெஸ்வால் 63, பந்த் 28, அவுஸின் வெற்றி வாய்ப்பு நழுவுகின்றது. 38 ஓவர்கல் மீதமுள்ளது.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.