Everything posted by vasee
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
பாகிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரரான பார்க சமனுக்கு பதிலாக (காயம்) இமாம் உல் கக் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்குவார் என கூறப்படுகிறது. உண்மைதான், அடிக்கடி ஆட்டக்காரர்களை மாற்றுவது அணியின் பலவீனமாக கருதப்படும், தற்போதுள்ள அணிகளில் ஒரு செட்டில் ஆகாத அணியாக இந்தியாவே காணப்படுகிறது, எத்தனை சுழல் பந்து வீச்சாளர் தேவை, யார் யார் தேவை என குழப்பமான அணியாக.
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
இந்தியா இறுதி நேரத்தில்தான் விளையாடும் அணியினை அறிவிப்பார்கள், ஜடேஜாவினை கம்பீர் கட்டியணைத்தார் என்பதனடிப்படையில் இந்த வதந்தி உலாவுகிறது (அதாவது ஜடேயா விளையாட முடியாதென).😁 பாகிஸ்தானிய பயிற்சியாளரை இந்தியணி 4 சுழல்பந்துவீச்சாளர்களுடன் களமிறங்குகிறது என பத்திரிகையாளர் கேட்டதற்கு, அணிகள் ஒரு முழுநேர சுழல்பந்து வீச்சாளர்கலுடன் களமிற்ங்குகின்றன என சுட்டிக்காட்டினார். உண்மையில் இந்தியா எதற்கு இப்படி சுழல் பந்துவீச்சாளர்கள் வேண்டும் என விரும்புகிறார்கள் என தெரியவில்லைதான்.
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
இந்திய கிரிக்கெட் நிபுணர்களா அல்லது இந்த ஐவர் கூட்டணியா சரி என இன்று தெரிந்துவிடும். ஆனால் பாகிஸ்தானுக்கெதிராக இஅயற்கையும் சதி செய்கிறது போல இருக்கிறது.
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
ராவல் பின்டியில் நடைபெற இருக்கும் பாகிஸ்தான், பங்களாதேச போட்டி மழையினால் தடை ஏற்படும் என எதிர்பார்க்கிறார்கள்.
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
கோலி மற்ற வீரர்களை விட 1 மணித்தியாலம் முன்னதாகவே துடுப்பாட்ட பயிற்சியில் ஈடுபட்டாராம், இந்திய கிரிக்கட் நிபுனர்கள் இந்த போட்டியில் இந்தியா பாகிஸ்தானை இலகுவாக ஊதி தள்ளிவிடும் என கணித்துள்ளார்கள்.
-
சமத்துவ சமூகமின்மையே ஊழல், மோசடி நிறைந்த கலாசாரம் உருவாகக் காரணம் - பிரதமர் ஹரிணி
அதற்கு ஒரு தடியில் கரட்டினை கட்டி தொங்கவிட்டு அதனை நாட்டிற்கு முன்னே நீட்டினால் நாடு முன்னோக்கி நகரும்😁. மக்களுக்கு இப்படி பேச்சுக்களை பேசி பேசியே அடுத்த 4 வருடங்கள் கொல்ல போகிறார்கள்.
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
https://www.youtube.com/shorts/Hne1-9P3uPw?feature=share இலங்கை இடது கை வேகப்பந்துவீச்சாளர் மதுசங்க துடுப்பாட்ட வீரரின் மனநிலையினை புரிந்து பந்தின் மேலாக விரலை நழுவ விடும் off cutter (இந்த வகை கட்டரை இறுதி நேரத்திலே உணரமுடியும்) மூலம் ரோகித் சர்மாவினை அவுட்டாக்கும் காணொளியில் விளக்கப்படுகிறது.
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
பையன் நீங்கள் அடிச்ச மணி ஆண்டவனுக்கு கேட்டுதோ இல்லையோ ஆனால் டெல்லிக்கு கேட்டு விட்டது, ஜடேயாவிற்கு பதில் வருணை இன்றைய போட்ட்டியில் களமிறக்க உள்ளதாக தகவல் உலாவுகிறது.😁 பாகிஸ்தான் பற்றிய பேதி இந்தியணியில் தீயாய் பற்றி எரிகிறது போல இருக்கிறது.😁
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
நாங்களும் உங்களை மாதிரி இந்தியாவைத்தான் நம்புகிறோம், பாகிஸ்தானை இல்லை, பார்ப்போம் யாரை இந்தியா கைவிடுகிறதென.😁 விளையாட்டில் யாராவது வென்றால் மற்றவர் தோற்றாக வேண்டும் அது முடிந்து போன போட்டி, முக்கியமான போட்டி இன்றுள்ளது. பங்களாதேஸ் காத்து கொண்டிருப்பார்கள் யாரை கூட்டி கொண்டு போவது என முடிவு எடுப்பதற்கு.😁
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
https://postimg.cc/SJ940SPM இது நேற்றைய தென்னாபிரிக்க ஆப்கானிஸ்தான் போட்டியில் ஆப்கானிஸ்தான் பந்துவீச்சு விபரம். ஆப்கானிஸ்தான் அணியின் எக்ஸ் பக்டர் பிளேயராக இருப்பவர் ரஸீட் கான், தென்னாபிரிக்காவின் திட்டம் அவரது பந்துவீச்சில் விக்கெட் இழக்காமல் சராசரியாக ஓட்டங்களை எடுப்பது அதாவது தவிர்த்தாடுவது.
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
சுருக்கமாக கூறி முடிக்கிறேன், கிரிக்கெட்டில் ஒரு அணியின் மிக சிறந்த பந்துவீச்சாளர் (அல்லது துடுப்பாட்ட வீரர்) காணப்பட்டால் இரன்டு வகையான உத்திகளை கையாள்வார்கள். 1. ஆரம்பத்திலேயே அவர்களை தாக்கி ஆடுவது. 2. தவிர்த்து ஆடுவது இதில் எதனை தெரிவு செய்வதென்பது எந்த வகையான கிரிக்கெட் (டெஸ்ட், ODI, T20), ஆடுகளத்தின் தன்மை, அணியின் துடுப்பாட்ட வரிசை (batting strength) என்பதனை பொறுத்தது. அதனாலேயே பெரும்பாலும் பெறுபேறுகளை மட்டும் கவனத்தில் எடுப்பதில்லை.
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
சுந்தருக்கு வாய்ப்பு கொடுக்காமைக்கு காரணமான வலது ஆட்டக்காரர்களுக்கு இலகுவாக இருக்கும் ஆனால் பட்டேல் மற்றும் ஜடேயா பந்து வலது கை ஆட்டக்காரர்களுக்கு மட்டைக்கு வெளியே பந்து செல்லும் அத்துடன் பந்தை 12 மணியளவு கோனத்தில் வளமையாக போடுவது போலல்லாமல் 10 மணியளவு கோணத்தில் போடுவார்கள் அது தரையில் பந்து படும் பகுதியினை பொறுத்து கிடையாக வேகமாகவோ அல்லது பந்து தங்கி மெதுவாகவோ வரும் அதற்கு ஏற்ப துபாய் ஆடுகளமும் உள்ளது. பொதுவாக பட்டேல்,ஜடேஜா, சுந்தர் இந்த மூவரும் இந்த துபாய் ஆடுகளத்தில் அதிகமான உதவிகளை மணிக்கட்டினை பயன்படுத்தி பந்துவீசுபவர்கள் போல பெற முடியாது, ஆனால் அந்த இரண்டு குஜராத்தியர்களின் பந்து வீச்சுஆடுகளம் மற்றும் வலது கை ஆட்டக்காரர்களுக்கெதிராக பலனுள்ளதாக இருக்கும். வருணிற்கு சகலதுறை திறமை இருந்தால் அவர்தான் அணித்தேர்வில் முதல் தெரிவாக இருப்பார்(வருணும் யாதவும்தான் மணிக்கட்டு பந்து விச்சாளர்கள்) ஆனால் வருணின் மிஸ்ரி ஸ்பின்னர் எனும் விடயத்தினை கொடுப்பதற்கு பயன்படுத்தப்படும் விரல்கள் மூலம்(வருண் மணிக்கட்டினையும் விரல்கலையும் ஒருங்கே பாவித்து மாற்றங்களை ஏற்படுத்துபவர்) சிறந்த மட்டையாளர்கள் பந்தினை (அவரை முன்னர் எதிர் கொண்ட வீரர்கள்) இலகுவாக கணித்துவிடுவர், ஆனால் குல்டீபின் கையிலிருந்து பந்தை கணிப்பது மிக கடினம். இந்த ஒரு காரணத்தினாலேயே அவரை தெரிவு செய்கிறார்கள் என கருதுகிறேன்.
-
ஒரு ஆட்டுக்காரனின் பிரலாபம்
ஓணாண்டியின் கவிதையினை இப்போதுதான் வாசித்தேன், இப்போது புரிகிறது உங்கள் கவிதை அந்த கவிதைக்கு பதிலென ஆனால் புலம்பெயர்வு குறியீடு கவிதையின் கருப்பொருளாக அடிமைத்தனம், சமூககட்டுப்பாடு என்பவற்றை குறிப்பால் உணர்தியமையால் இது எமது சமூகத்திற்கான கவிதையாக நான் தவறாக பொருள்விளங்கிவிட்டேன். ஓணாண்டியின் கவிதை ஒரு படி மேல்,
-
ஒரு ஆட்டுக்காரனின் பிரலாபம்
நான் வாசித்தவரையில் எம்மவர்களின் கவிதைகளில் இதுவே மிக சிறந்த கவிதை(நான் கவிதை வாசிப்பது குறைவு)😁, எனக்கு ஒரு சந்தேகம்! கோசான் இது உங்களின் சொந்த கவிதையா?😁 இந்த கொள்கை விளக்க பகுதி உண்மையில் தேவையற்ற ஒன்று என கருதுகிறேன் (வாசகர்கள் புரிந்து கொள்வார்கள்). எனக்கு மிகவும் பிடித்த கவிதையாக உங்களின் இந்த கவிதை உள்ளது, இவ்வாறு எழுதுவதனை தொடருங்கள்.
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
குல்டீப் மணிக்கட்டினை மட்டும் பயன்படுத்தி பந்து வீசுபவர், வருண் விரல் மற்றும் மணிக்கட்டினை பயன்படுத்தி பந்து வீசுபவர், அதனால் அவரது பந்தினை கணிப்பது கடினம் என்பதால் வருணை மிஸ்ரி ஸ்பின்னர் என அழைக்கிறார்கள். குல்டீப் பந்து திரும்பாத (no grip) ஆடுகளத்திலும் பந்தினை திருப்ப கூடியவர், அத்துடன் Drip & bounce அவரது பந்துவீச்சில் காணப்படும், இந்த துபாய் ஆடுகலளத்திற்கு ஏற்ப அவரது பந்து வீச்சு காணப்படுகிறது ஆனாலும் நீங்கள் கூறுவது போல வருணை அனியில் சேர்ப்பது ஓட்டங்களை மட்டுப்படுத்தும். குல்டீபா அல்லது வருணா என வரும்போது மேலோட்டமாக பார்ர்கும் போது குல்டீப் ஒரு தெரிவாக இருந்தாலும் ஆடுகளத்தினை மட்டும் கணக்கில் கொள்ளாமல் எதிரணியினை கணக்கில் எடுப்பார்கள் என்பதால் இந்த தொடரில் சிலவேளை வருணிற்கு வாய்ப்பு கிடைக்கலாம்.
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
சுந்தரை தெரிவு செய்ய வாய்ப்பில்லை, ஆனால் எதிரணியில் அதிக இடட்கு கை ஆட்டக்காரர்கள் இருந்தால் ஓரளவு வாய்ப்புள்ளது. பட்டேல் , ஜடேயா, சுந்தர் இந்த மூவரும் விரலால் பந்தை சுழற்றுபவர்கள், ஜடேயாவும், பட்டேலும் பந்தை கிடையாகவும் வேகமாகவும் போடுபவர்கள் அதனால் துபாய் ஆடுகளத்திற்கு இந்த இருவரும் பொருத்தமானவர்கள், சுந்தருக்கு வாய்ப்பு மிக குறைவு.
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
வாய்ப்பில்லை ராஜா.😁 பங்களாதேசம் போற வழியில இந்தியாவையும் இறக்கிவிட்டிட்டு போகலாம் தானே?😁
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
ஆப்கானிஸ்தானுக்கான வெற்றி வாய்பு உள்ளது, புதிய பந்தில் (முதல் 10 ஓவர்) அடித்தாடினால் அப்கானிஸ்தான் வெற்றி வாய்ப்பு உள்ளது என கருதுகிறேன், பாகிஸ்தான் போட்டி போலவே மைதான ஈரலிப்பு இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
நன்றி பயனுள்ள தகவல். South Africa 315/6
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
கந்தப்பு அமேசன் பிரைமில் ஒளிபரப்புகிறார்கள் என கூறியபோதே எனது பனத்தினை திரும்ப (Withdraw) பெற்றுவிட்டேன். ரிகில்டன் 103 ஓட்டங்களுக்கு துரதிஸ்டமான முறையில் ஆட்டமிழந்துள்ளார்.
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
தென்னாபிரிக்கா 350 ஓட்டங்களை பெறும், தற்போது 177/2
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
நன்றி,
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
கிரிக்கட் மட்டுமன்றி அனைத்து வகை போட்டிகளையும் பார்க்கலாம் என நண்பர் கூறினார், தற்போது ஆப்கன் தென்னாபிரிக்க போட்டிகளை பார்த்துக்கொண்டுள்ளேன். நேர்முக வர்ணனை இல்லை (commentators) தென்னாபிரிக்க அணியின் தொடக்க ஆட்டக்காரராக உள்ள ரிக்கில்டன் சிறப்பாக ஆடுவார் என கூறப்படுகிறது 9 பந்துக்கு 4 ஓட்டங்களை மட்டும் பெற்றுள்ளார்.
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
கிரிக்கெட் பார்ப்தோடு சரி, சாம்பியன் ரொபி முடிந்தவுடன் வைப்பு செய்த $50 மீள பெற்றுக்கொண்டு கணக்கை மூடி விடவேண்டியதுதான். இங்கு கயோ ஸ்போர்ட்ஸ் எனும் இணையவழி விளையாட்டு சனல் உள்ளது மாதம் தோறும் $25 செலுத்த வேண்டும். இது இலவசம்.
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
எனது இந்திய நண்பர்கள் கூறினார்கள் bet 365 $5 வைப்பீட்டு செய்துவிட்டு நேர்முக வர்ணனை இன்றி அனைத்து போட்டிகளையும் (கிரிக்கட் மட்டுமன்றி) பார்க்கலாம் என்றார்கள், பதிவு செய்துவிட்டுப்பார்த்தால் குறைந்த பட்ச கட்டணமாக $50 வைப்பீடு செய்யவேண்டும் என வந்தது, $50 வைப்பீடு செய்தாயிற்று போட்டிகள் முடிந்தவுடன் $50 திருப்பி எடுக்கவேண்டும்.