Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

vasee

கருத்துக்கள உறவுகள்

Everything posted by vasee

  1. 1) கஜேந்திரகுமார் பொன்னம்பலம்( தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி) ஆம் 2)சசிகலா ரவிராஜ்( ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி) இல்லை 3)வி.மணிவண்ணன் (முன்னாள் மேயர்)( தமிழ் மக்கள் கூட்டணி) ஆம் 4)டக்ளஸ் தேவானந்தா ( ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி) ஆம் 5)ஸ்ரீதரன்( தமிழரசு கட்சி) ஆம் 6)செல்வராசா கஜேந்திரன் (தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி) இல்லை 7)சுமந்திரன்( தமிழரசு கட்சி) ஆம் 8)அங்கஜன் இராமநாதன்(ஜனநாயக தேசிய கூட்டணி) ஆம் 9)முருகேசு சந்திரகுமார்( ஐக்கிய மக்கள் கூட்டணி - சஜீத் பிரேமதாசாவின் கட்சி) இல்லை 10)ஐங்கரநேசன்( சுயேட்சை குழு 14) ஆம் 11)நடராசா காண்டீபன் ( தமிழ் தேசிய மக்கள் முன்னணி) இல்லை 12)சுரேஷ் பிரேமச்சந்திரா (ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி) ஆம் 13) சரவணபவன் ( சுயேட்சை குழு 14) இல்லை 14) அருச்சுனா இராமநாதன் (சுயேட்சை குழு - 17 ) இல்லை 15)தர்மலிங்கம் சித்தார்த்தன் (ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி) ஆம் 16) எஸ் சிறிபவானந்தராஜா ( தேசிய மக்கள் சக்தி) இல்லை 17)சிவாஜிலிங்கம் (ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி) ஆம் 18)சிவப்பிரகாசம் மயூரன் (சுயேட்சை குழு - 17) இல்லை 19) ரவிகரன் (தமிழரசுக் கட்சி, வன்னி தொகுதி)ஆம் 20)மனோ கணேசன் ( கொழும்பு மாவட்டம்) இல்லை 21)ஞானமுத்து - சிறினேசன் ( தமிழரசு கட்சி - மட்டக்களப்பு) ஆம் 22) விநாயகமூர்த்தி முரளிதரன்( கருணா- மட்டக்களப்பு, தேசிய ஜனநாயக முன்னணி) இல்லை 23)சிவனேசதுரை சந்‌திரகாந்தன் ( மட்டக்களப்பு, தமிழ்‌ மக்கள்‌ விடுதலை புலிகள்‌ கட்சி) இல்லை 24) சாணக்கியன் (தமிழரசு கட்சி , மட்டக்களப்பு) ஆம் 25) செல்வம் அடைக்கலநாதன் ( ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணி -வன்னி) ஆம் 26) குகதாசன் ( தமிழரசு கட்சி - திருமலை மாவட்டம்) ஆம் வினா 27 - 34 வரை பின்வரும் மாவட்டத்தில் முதல் இடத்தினை பெறும் அணி எது? ( தலா 2 புள்ளிகள்) எத்தனை இடங்களை பிடிக்கும்? ( தலா 2 புள்ளிகள்) 27) யாழ் மாவட்டம் ( கிளிநொச்சியும் தேர்தல் மாவட்டம் யாழ்ப்பாணத்தில் இருக்கிறது) தமிழரசு கட்சி 6 28) வன்னி தமிழரசு கட்சி 4 29) மட்டக்களப்பு) தமிழரசு கட்சி 3 30)திருமலை தமிழரசு கட்சி 2 31)அம்பாறை இலங்கை பொதுஜன முன்னணி 2 32)நுவரெலியா ஐக்கிய மக்கள் சக்தி 4 33)அம்பாந்தோட்டை இலங்கை பொதுஜன முன்னணி 6 34)கொழும்பு ஐக்கிய மக்கள் சக்தி 6 35)திருகோணமலை மாவட்டத்தில் தமிழரசு கட்சி, ஜனநாயக தமிழ்தேசிய கூட்டணி,தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி ஆகிய மூன்றும் சேர்ந்து எத்தனை இடங்களை பிடிக்கும்? ( 1 புள்ளி) 3 36)அம்பாறை மாவட்டத்தில் தமிழரசு கட்சி, ஜனநாயக தமிழ்தேசிய கூட்டணி,தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி ஆகிய மூன்றும் சேர்ந்து எத்தனை இடங்களை பிடிக்கும்? ( 1 புள்ளி) 0 37) யாழ் மாவட்டத்தில் அதிக விருப்பு வாக்குகள் பெறுபவர் யார்? ( 2 புள்ளிகள்) சுமந்திரன் வினா 38 - 48 வரை பின்வரும் தேர்தல் தொகுதிகளில் முதல் இடம் பிடிக்கும் அணி எது? (தலா 2 புள்ளிகள்) 38) மானிப்பாய் தமிழரசு கட்சி 39) உடுப்பிட்டி தமிழ் தேசிய மக்கள் முன்னணி 40) ஊர்காவற்றுறை தமிழரசு கட்சி 41) கிளிநொச்சி தமிழரசு கட்சி 42) மன்னர் தமிழரசு கட்சி 43) முல்லைத்தீவு தமிழரசு கட்சி 44) வவுனியா தமிழரசு கட்சி 45) மட்டக்களப்பு தமிழரசு கட்சி 46) பட்டிருப்பு தமிழரசு கட்சி 47) திருகோணமலை தமிழரசு கட்சி 48) அம்பாறை இலங்கை பொதுஜன முன்னணி 49) எந்த கட்சியில் இருந்து பிரதமர் தெரிவு செய்யப்படுவார்? ( 1 புள்ளி) இலங்கை பொதுஜன முன்னணி 50) எந்த கட்சியில் இருந்து எதிர்க்கட்சி தலைவர் தெரிவு செய்யப்படுவார்? ( 1 புள்ளி) ஐக்கிய மக்கள் சக்தி 51 - 52 வரை வடக்கு கிழக்கில் பின்வரும் கட்சிகள் எத்தனை இடங்களை பிடிக்கும் ( தலா 1 புள்ளி) 51) ஐக்கிய மக்கள் சக்தி ( சஜித் அணி) 0 52) தேசிய மக்கள் சக்தி ( அனுரா அணி) 2 53 - 60 வரை பின்வரும் கட்சிகள் தேசிய பட்டியலையும் சேர்த்து எத்தனை இத்தேர்தலில் இடங்களினை பிடிக்கும்? ( 53 - 56 வினாக்களுக்கு தலா 1 புள்ளிகள். 57 - 60 வினாக்களுக்கு சரியாக சொன்னால் 2 புள்ளிகள் 1 - 5 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி வழங்கப்படும். 53)தமிழ் தேசிய மக்கள் முன்னணி 2 54)தமிழரசு கட்சி 9 55)ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு 2 56)தமிழ் மக்கள் கூட்டணி (விக்னேஸ்வரன் அணி) 1 57)இலங்கை பொதுஜன முன்னணி ( நாமல் ராஜபக்சா அணி ) 105 58)ஐக்கிய மக்கள் சக்தி ( சஜித் அணி) 70 59)தேசிய மக்கள் சக்தி (அனுரா அணி) 27 60)புதிய சனநாயக முன்னணி ( ரணில் அணி) 10
  2. போருக்கு பின்னரான மீழ் கட்டமைப்பு, நிர்வாக நெருக்கடி, மீழ் குடியேற்றம், ஆக்கிரமிப்பு நிலங்கள் விடுவிப்பு, பாதிக்கப்பட்ட மக்களிற்கான புனர்வாழ்வு, பாதுகாப்பு என்பன இன்னமும் உருப்படியாக நிறைவேற்றாத நிலையிலேயே தொடர்ந்தும் இப்பாதிக்கப்பட்ட மக்களை வைத்திருக்க இலங்கையிலுள்ள தேசிய கட்சிகள் விருபுகின்ற இந்த நிலையிலே, சிறுபான்மையினரை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளினால் கூட எதனையும் செய்ய முடியாத நிலையிலேயே தற்போது வரை இந்த வட கிழக்கு மக்கள் வாழ்கை நிலவுகிறது. பொதுவாக ஏனைய நாடுகளில் இவ்வாறான பாதிப்புள்ளாகும் நாடுகளை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு உதவிகள் மூலம் மேம்படுத்த முயல்வார்கள் ஆனால் இலங்கையில் பெரும்பான்மை இனத்தினை பிரதிநித்துவம் செய்யும் கட்சிகள் திட்ட மிட்டே இந்த பாதிக்கப்பட்ட மக்களை புறக்கணித்து வருகின்ற நிலையிலே பிராந்திய கட்சிகள் செல்வாக்கினை இழக்கும் போது இப்பிராந்திய மக்கள் மேலும் நலிவுறும் நிலை உருவாகும். இது நீண்ட போரினால் பாதிக்கப்பட்ட மக்களை மேலும் பொருளாதார ரீதியில் நலிவுற செய்யும். இதனை புரிந்து கொள்ளவோ அல்லது ஒரு தொலைநோக்கு பார்வையோ மக்களிடம் இருக்காது, இதனை மக்களிடம் எடுத்து செல்ல படித்த இளைஞ்சர்கள் முன்வர வேண்டும்.
  3. நான் நினைக்கிறேன் NPP இலங்கையினை முடித்துவிட போகிறார்கள் போல இருக்கிறது, அல்லது இதன் பாதிப்புகள் பற்றிய புரிதலில்லாமையால் இப்படி மோசமாக நிதி நிர்வாகம் செய்கின்றார்களா என தெரியவில்லை. படித்தவர்களின் கட்சி என கூறுகிறார்கள் அதனால் தெரியாமல் செய்வதற்கு வாய்ப்பு இல்லை, ஆனால் இலங்கையினை இனி கடவுளாலும் காப்பாற்ற முடியாது இவ்வாறு செயற்பட்டால்.
  4. இந்த தொகை பாதீட்டிற்கு மேலதிகமாக செய்யப்படுகின்ற செலவீடாகும், இது உண்மையாயின் ஐ எம் எப் உடனான ஒப்பந்த மீறலாக இருக்கலாம், இதனால் ஐ எம் எப் இன் மேலதிக கடன் பெறுதலில் சிக்கல் ஏற்படலாம், இந்த செலவீட்டு தொகை கிட்டதட்ட 7% பாதீட்டு தொகையில் உள்ளது (2023), இது மிகவும் அதிகமாக உள்ளது, இன்னும் ஏறத்தாழ 12 வாரங்கள் அரச செலவீட்டிற்கான பாதீட்டிற்கான கால வரையறை உள்ள நிலையில் இந்த மேலதிக செலவு அரசினை இக்கட்டுக்குள் தள்ளலாம். இந்த இடைவெளியினை அரசு எவ்வாறு கையாழ உள்ளது? இது உண்மையாக இருந்தால் இந்த அரசின் நிர்வாக திறமையினை கேள்விக்குள்ளாக்குகின்ற விடயமாக உள்ளது. அனைவரும் எதிர்பார்த்த இலங்கை புதிய அரசின் புதிய பாதீட்டிற்கு முன்னரே இந்த அரசு தனது தவறான அணுகுமுறையினை வெளிக்காட்டியுள்ளது, இது இன்னுமொரு கோட்டபாய அரசாக இருக்க போகிறது போல இருக்கிறது.
  5. இலங்கை பொருளாதார பிரச்சினையும், சிறுபான்மைஇனரின் பிரச்சினையும் இரண்டும் வேறு வேறாக இருந்தாலும் ஒன்றோடொன்று தொடர்புபட்டுள்ளது. இலங்கை பொருளாதார பிரச்சினை மட்டுமல்ல எந்த நாட்டிலும் ஒரு நாட்டில் பொருளாதாரத்தில் தளம்பல் ஏற்படும் போது அது உடனடியாக நேரிடையாக அடித்தட்டு மக்க்ளையே பாதிப்பிற்குள்ளாக்குகிறது. ஆனால் சிறுபான்மையினரின் பிரச்சினைக்குக்காரணம் பொருளாதார பிரச்சினைதான் என கூறுவதும் வடக்கினை மட்டும் நிலவுவதாக கூறுவதும் ஒரு திட்டமிட்ட முயற்சியாக தெரிகிறது. இலங்கை பொருளாதார பிரச்சினைக்கு சிறுபான்மையினரின் மீதான அடக்குமுறையின் நேரடி பிரதி விளைவாகவும் ஊழல் அரசியல்வாதிகளாலும் இந்த பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. ஆனால் இடது சாரிகளின் கோட்பாடான் சமூக சமத்துவம் சிறுபான்மையினரின் பிரச்சினைக்கு தீர்வாக அமையும் ஆனால் இவர்கள் தற்போது கூறிவரும் அரசியல் சீர்திருத்தம் இல்லை எனும் கருதுகோளினூடாக வழமையான இலங்கை பேரினவாத அரசியலைமைப்பினூடாக சிறுபான்மையினரின் உயிட் உடமைக்கு உத்தரவாதமற்ற அதே இலங்கை ஆட்சிமுறைமையினையே நடாத்த விளைகின்றனர். அரசுகளால் அடிப்படைக்கட்டுமான மாற்றங்கள் கொண்டு வருவதன் மூலம் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள மக்களின் நிலையினை மாற்ற முற்படலாம், ஊழல் அரசியல்வாதிகள், அரச திணைக்களங்களில் நடவடிக்கை எடுத்தல் என்பவற்றினூடாக மாற்றங்களை ஏற்படுத்தலாம் ஆனால் அரசு அடிப்படை கட்டுமான மாற்றங்கள் தொடர்பாக எந்த மாற்றமும் ஏற்படுத்த உள்ளது என்பதனை கூட கூறாத நிலையில் வெறும் திறமையற்ற ஊழல்நிறைந்த தமிழ் அரசியல்வாதிகளை குற்றம் சாட்டுவதனூடாக எமது மக்களின் வறுமையை காரணம் காட்டி அதனை தமது அரசியல் இலாபத்திற்காக பயன்படுத்துகிற நிலையே காணப்படுகிறது. பொருளாதார ரீதியாக ஒவ்வொரு அரசும் சிறுபான்மையினரை இரண்டாம் பட்சமாகவே அணுகிறார்கள், இந்த அரசு எந்த விதத்தில் இதிலிருந்து வித்தியாசமாக உள்ளது, அவ்வாறாயின் அது என்ன என்பதாவது யாருக்காவது தெரியுமா? (அத்துடன் தமிழர்களின் பொருளாதார நிலையினை பாதிக்க செய்வதில் கடந்த காலத்தில் இருந்த ஒவ்வொரு அரசிற்கும் பங்கிருந்தது) எதற்காக சிங்களவர்களுக்கு உறுதிப்படுத்த வேண்டும்? (விடயத்தினை உணர்பூர்வமாக அணுகுகிறீர்கள் என கருதுகிறேன்) சிறுபான்மையினர் உரிமைகளை மறுப்பதாலேயே கிளர்ச்சிகள் உருவானது, ஒரு நாட்டில் உள்ள ஒவ்வொரு குடிமகனும் சமம் எனவே சட்ட ரீதியாக கூறப்படுகிறது, நீங்கள் கூறுவது இந்தியா போன்ற நாடுகளில் சிலவேளை சரியாக இருக்கலாம், அங்கே தான் திருமண உறவில் இருக்கும் துணையினை வல்லுறவில் ஈடுபடுவது சட்ட அங்கீகாரம் உள்ள விடயம், இவ்வாறான சட்டத்தினை இயற்றுபவர்கள் படித்தவர்களாக இருப்பது இன்னும் ஆச்சரியமழிக்கிறது. உங்களது பார்வை உங்களுக்கு சரியாக இருக்கும், பெரும்பாலானோருக்கு சரியாக இருக்கலாம் அதில் தவறில்லை ஆனால் மற்றவர்களுக்கு வித்தியாசமாக தோன்றலாம். உரிமைகளை மறுப்பவர்கள் தாமாக உரிமைகளை கொடுக்க மாட்டார்கள், இப்படி ஏதாவது செய்துதான் பிடுங்கி எடுக்க வேண்டும். உங்களது கருத்திற்கு எதிராக கருத்து வைக்கவேண்டும் என்பதற்காக எழுதவில்லை, ஆனால் உங்கள் அடிப்படை நிலையினை என்னால் விளங்கிக்கொள்ள முடியாமல் இருக்கிறது, சிலவேளை எமது புரிதல்கள் வித்தியாசமாக இருக்கலாம். நாலைந்து வருடங்களுக்கு முன்னர் எனது உறவினர் ஒருவரின் திருமண பந்தத்தில் சிக்கல் உருவானது, மணமகனில் பெரும்பாலும் தவறு இருந்தது, மணமகன் எனக்கு நெருங்கிய உறவு சிறிய வயதில் நல்ல தொடர்பிருந்தது பின்னர் தொடர்பில்லை, அந்த விவகாரத்தில் நான் தலையிட மாட்டேன் என கூறினாலும் வலுக்கட்டாயமாக என்னை இணைத்து விட்டார்கள் வாக்கு வாதம் நடந்து கொண்டிருந்தது அதில் தலையிடாமல் எதுவும் பேசாமல் இருந்துவிட்டேன், மணமகள் கேட்டது மணமகன் மன்னிப்பு கோரவேண்டும் என இதற்கு ஏன் பெரிதாக மணமகனின் சகோதரர்கள் கொல்லுப்படுகிறார்கள் என மணமகனின் சகோதரனிடம் தனிமையில் கேட்டேன் அதற்கு அவர் கூறினார் " யாராவது தவறே செய்திருந்தாலும் பொம்பிளையளிட்ட மன்னிப்பு கேட்பார்களா?" என கேட்டார். அது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது, ஆனால் மன்னிப்பு கோருவது சரியென நான் நினைப்பது அவருக்கு அதிர்ச்சியாக இருந்தது. அதனால் எனது கருத்து தவறாக இருக்கலாம்.
  6. எல்லா மாடுகளும் ஓடுகின்றன என சோமனின் சோத்தி மாடும் ஓடியதாம் எனும் ஒரு பேச்சு வழக்கு எம்மிடையே உள்ளது, எப்படி இஸ்ரேல் மத்திய கிழக்கில் அமெரிக்க முகவராக செயற்பட்டு பிராந்திய கட்டுப்பாட்டிற்கு முக்கியத்துவம் வாய்ந்த நாடாக இருந்த வண்ணம் தான் தோன்றித்தனமாக செயற்படுவதனை போல இந்தியாவும் அவ்வாறு செயற்பட விளைகிறது, ஆனால் அமெரிக்க முகவராகமல் இது அண்மைக்காலத்தில் ஏற்பட்ட மாற்றம், இதற்கான காரணம் சீனாவின் மேலாதிக்கம் ஆசிய பகுதியில் காலூன்றி வருகின்ற நிலையில் ஆசிய நேட்டோ எனும் கருதுகோள் ஒன்றினை ஜப்பானின் ஊடாக ஏற்படுத்த ஆரம்ப முயற்சியினை இந்திய வெளிவிவககார அமைச்சர் இந்தியா அதில் ஈடுபட விருப்பம் இல்லை என ஆரம்பத்திலேயே அதற்கு முடிவுரை போட்டு விட்டார், ஏற்கனவே உள்ள ஓக்கஸ் இலும் இந்தியா பெரிதாக ஆர்வம் காட்டவில்லை. கனடாவில் நிகழ்த்தப்பட்ட இந்த இந்திய பயங்கரவாத செயலை வைத்து இந்தியாவைனை வழிக்கு கொண்டுவர அமெரிக்க தரப்பு செய்யும் முயற்சியாக இதனை கொள்ளலாம், ஏற்கனவே அமெரிக்காவின் செத்த கிளி MQ 9 ரீப்பரை இந்தியாவிற்கு அமெரிக்கா விற்பதற்கு அனுமதியழித்துள்ளது இவ்வாறு இந்தியாவை ஆசிய பகுதியில் உருவாக்கப்படவுள்ள நேட்டோ அமைப்பில் எப்பாடுபட்டாவது கொண்டுவர முயற்சிக்கும் அமெரிக்க தரப்பின் ஒரு அங்கமாக இந்த கனடிய இந்திய பிரச்சினை உள்ளது. ஆசிய நேட்டோ விடயத்தில் இந்தியா மிக கவனமாக உள்ளது, ஆனாலும் இதுவரை சீன எல்லையில் சீனாவினால் ஏற்படுத்தப்படும் ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளை கூட கண்டும் காணாமல் இருக்கும் இந்தியா, சும்மாவே மற்ற நாடுகளில் வலிந்து ஆக்கிரமிப்பு போரினை ஏற்படுத்தும் நேட்டோவில் இணைந்தால் சீனா நடாத்தும் சீண்டல்கள் ஆக்கிரமிப்புக்கள் நேட்டோவின் ஆர்டிக்கல் 5 தூண்டி (வரலாற்றில் இதுவரை இந்த ஆர்டிகல் 5 மீறல் நடைபெறவில்லை) இந்திய சீன எல்லையில் ஒரு போர் உருவாகி பின்னர் உக்கிரேனிய இரஸ்சிய போரினால் ஐரோப்பா போல ஆசிய பிராந்தியமும் உக்கிரேனை போல இந்தியாவும் இரஸ்சியாவை போல சீனாவும் மாறும் நிலை உருவாகும் என்பதனை இந்தியா நன்றாக உணர்ந்துள்ளதால் இந்த இந்தோ பசுபிக் நேட்டோ விளையாட்டிற்கு இந்தியா வராது. அமெரிக்க உறுதித்தன்மை குலையும் கால கட்டத்தில் இவ்வாறான குழப்பங்களை உருவாக்கி பல தரப்புக்களிடையே போரினை உருவாக்கி ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்கு கொண்ட்டாட்டம் எனும் நிலையில் இருக்கும் அமெரிக்காவிற்கு சந்தர்ப்பம் வழங்காத இந்தியாவினை பாராட்டத்தான் வேண்டும் இல்லாவிட்டால் இந்த பிராந்தியத்திலும் அமைதியின்மை ஏற்பட்டுவிடும். ஆனால் ஒரு நாட்டின் இறைமையினை மீறி இந்தியா அதுவும் அமெரிக்காவின் நேச நாட்டில் இவ்வாறான தாக்குதலை செய்வது அமெரிக்காவின் பலவீனத்தினை காட்டுகிறது (இந்தியாவினை விட்டால் அமெரிக்காவிற்கு வேறு கதியில்லை என்பதனை).
  7. கோட்டபாய ஆட்சிக்கு கொண்டு வந்த சிங்கள பெரும்பான்மையின் அப்போதயகுறிக்கோள் இஸ்லாமியர்கள், கோட்டபாயவினை 52% வாக்குகளினால் வெற்றி பெற 52 விகிதமான ஆதரவு வாக்குகளை வழங்கியிருந்தார்கள், அவருக்கு போட்டியாளராக இருந்த சயித்திற்கு 42% வாக்குகள் கிடைத்தது அதே அளவிலே அனுரவிற்கு தற்போது கிடைத்துள்ளது, இதன் மூலம் பொருளாதார பிரச்சினைக்கு தீர்வாக அனுரவின் ஊழலற்ற ஆட்சி, சமூக நல அடிப்படையான பொருளாதார கொள்கை என்பது இலக்காக இருந்தால் ஊழலை ஒழிப்பதற்காக நடவடிக்கை எடுப்பதாக காட்டிக்கொண்டால் போதுமானது, ஆனால் சமுகநல பொருளாதார கொள்கை எனும் போதுதான் சிக்கல் ஆரம்பமாகும், அதனை நடைமுறையில் நடைமுறைப்படுத்த முடியாது என்பது அனுரவிற்கே தெளிவாக தெரியும். முதலில் ஆட்சியினை பிடிக்க வேண்டும், அதற்கு பின் எப்படியாவது காலத்தினை ஓட்ட வேண்டியதுதான், மக்கள் பொருளாதார பிரச்சினைக்குள்ளாகி குழம்பும் போது வேறு ஏதாவது மடைமாற்றும் முயற்சியில் ஈடுபடவேண்டியதுதான், இதுதான் இலங்கை சோசலிச ஜனநாயக நாட்டின் ஆட்சி மாதிரி.
  8. முதலில் நாடாளுமன்ற தேர்தலில் ஆட்சியினை பிடிக்கட்டும் , யாழில் இருக்கும் ஆதரவு அலையினைப்பார்க்கும் போது நான் முன்பு கூறிய 35 ஆசனங்களை விட அதிக ஆசனங்களை கைப்பற்றுவார் போல இருக்கிறது😁.
  9. எனக்கு தெரியும் நீங்கள் கூறும் நடுநிலையான ஊடகங்கள், நாசகார அழிவாயுதம் இல்லாத நாட்டில் அழிவாயுதம் உள்ளெதென கூறின ஊடகங்களும், அமெரிக்கா ஒரு நாட்டினை ஆக்கிரமித்தால் அது பயங்கரவாதத்திற்கெதிரான யுத்தம், அதே செயலை இன்னொரு நாடு செய்தால் அது ஆக்கிரமிப்பு என க்கூறும் ஊடகங்கள் இவற்றினைத்தானே உண்மையேன பார்க்கிறோம், அவற்றிலும் இடது சாரி ஆதரவு ஊடகம் வலதுசாரி ஆதரவு ஊடகம் என எமக்கு விருப்பமான ஊடகங்களையே பார்க்கிறோம். இவை திட்டமிட்ட முறையிலான பிரச்சார ஊடகங்களா அல்லது தற்செயலாக நிகழ்கிறதா, அனைத்து ஊடகங்களும் எதோ ஒரு வகையில் பிரச்சார ஊடகங்கள்தான், அவ்வாறிருக்க தமிழ்நெற் தென்னிலங்கை ஊடகங்களில் வந்த செய்திகளைத்தானே வெளியிடுகிறது. இதில் ஊடகங்களில் பிரச்சினை இல்லை, அதில் வரும் விடயங்கள் எமக்கு ஒவ்வாமையாக இருப்பதே பிரச்ச்சினையாக உள்ளது.
  10. இந்திய விமானப்படை இந்தியர்களையும் காவு வாங்க ஆரம்பித்து விட்டது
  11. இவரிடம் நான் நிறைய எதிர்பார்க்கிறேன்😁, இவரது ஆட்சிக்காலம்தான் கோட்டபாயாவின் ஆட்சிக்கால்த்தினை விட இலங்கையின் பொற்காலமாக இருக்கப்போகிறது போல இருக்கிறது😭.
  12. நீங்கள் ஒரு கட்சியின் உறுப்பினராக இருந்தால் அந்த கட்சிக்கு கட்டுப்பட்டவராக இருப்பீர்கள் ஆனால் அதே கட்சியுடன் கூட்டணி வைத்தால் உங்களுக்கு பேரம் பேசும் வலு இருக்கும் (நான் கூறுவது எமது அரசியல்வாதிகள் வாங்கும் பெட்டிகள் அல்ல), அதே போல நீங்கள் ஆழுங்கட்சிக்கு வாக்கழித்தால் அவர்கள் இல்லை என்பதனை தந்துவிடுவார்களா? உங்களுக்கு ஒரு முகவராக உங்கள் பிரதிநிதிகள் செயற்பட்டு உங்களுக்கு தேவையானவற்றை பெற முயற்சிப்பார்கள், இதில் பூகோள அரசியலும் பங்கு வகிக்கும், இலங்கை பூகோள ரீதியாக முக்கியமான இடத்தில் உள்ளது, மாறிவருகின்ற உலக ஒழுங்கு எமக்கு சாதகமாக இருந்தால் எதுவும் நடக்கலாம். என்னதான் அனுரா தலையால் குத்துக்கரணம் அடித்தாலும் அதிக பட்சமாக ஒரு கூட்டணிக்கட்சிகளின் உதவியுடன் கூட்டாட்சியினையே செய்யமுடியும், அந்த நேரத்தில் உங்கள் பிரதிநிதிகள் கூட்டணிக்கட்சியில் இருப்பதுதான் இலாபம், ஆழுங்கட்சியில் இருந்தால் எந்த பிரஜோசனமும் இல்லை. நாடுளுமன்ற தேர்தல் முடிவுடன் மீண்டும் வழமைக்கு திரும்பிவிடும், அதனால் கவலைப்படத்தேவையில்லை.
  13. லங்கா புவத் பாதுகாப்புபடையினரை மேற்கோள் காட்டியே செய்தி வெளியிடுவதாக கூறுவதுண்டு, ஊடகங்கள் தாமாக செய்திகளை உருவாக்கவோ திரிக்கவோ நடைமுறையில் முடியாது, ஒரு கட்சியினையோ அல்லது தனி நபர்கெதிராக போலியான செய்திகளை வெளியிட சிங்கள ஆங்கில ஊடகங்களால் முடியுமா ? சிங்கள ஊதுகுழல் ஊடகங்களில் வருவதை வடிகட்டி எழுதினால் அது எப்படி தமிழர் பக்க ஊது குழல் ஊடகம் ஆகிவிட முடியும்? நீங்கள் வேடிக்கையானவர் மட்டுமல்ல விசித்திரமானவராகவும் இருக்கிறீர்கள்.
  14. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஆளும் கட்சியினால் தீர்வினை வழங்கிட முடியும், அதனால் அதில் அங்கம் வகிக்கும் சிறிய கட்சிகளின் பேரம் என்பன இருக்கும், அத்துடன் இங்கு அனுரவிற்கு வாக்கு போட வேண்டாம் என்பதற்காக இந்த கட்டுரையினை ரஞ்சித் எழுதவில்லை என கருதுகிறேன், சிறுபான்மையினருக்கு பிரச்சினையே இல்லை எனும் கட்சியினால் சிறுபான்மையினர் தமக்கு இருக்கும் பிரச்சினைக்கு எவ்வாறு தீர்வு வழங்குவார்கள் என எதிர்பார்க்க முடியும், அத்துடன் அவ்வாறான ஒவ்வொரு முயற்சிகளுக்கும் தடையாக உள்ள கட்சி அதே செயலை செய்யவிரும்புமா? அனுரவும் மற்ற பெரும்பான்மை அரசியல்வாதிகளை போலவே இனவாதத்தினை கருவியாக பயன்படுத்தி ஆட்சி கட்டிலேறி உள்ளார், அவருக்கு அரசியல் இலாபமே முக்கியம் அதற்காக அவர் இனவாதம் பேசுபவர், இந்தியா அவரது ஆட்சிக்குநெருக்கடி கொடுத்தால் அந்த இனவாதத்தினையும் கைவிடும் சாதாரண சுயநல அரசியல்வாதிதான் ( இது எனது கருத்து). அனுரவுக்கும் மற்ற பெரும்பான்மை அரசியல்வாதிகளுக்கும் உள்ள வித்தியாசம் அவர்கள் சிறுபான்மையினருக்கு பிரச்சினை உள்ளது என்பதனை ஏற்றுக்கொண்டு அதற்கு தீர்வு பேச்சு என கூறி ஏமாற்றுவார்கள், அனுரா பிரச்சினை இல்லை, அப்படி இல்லாத பிரச்சினை என கூறும் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு தரமாட்டேன் (ஒரே குழப்பமாக இருக்கிறதல்லவா, அவர்களே பிரச்சினை என்பதே இல்லை என்பார்கள் பின்னர் பிரச்சினை தீர்வு தரமாட்டேன் என்பார்கள்) என ஆரம்பத்திலேயே கூறிவிட்டார்.
  15. நீங்கள் நல்ல வேடிக்கையாளராக இருக்கிறீர்கள்😁, நகரத்திலிருந்து படித்து விட்டு வந்த ஒரு தொடர்பற்ற சிறிய செவ்விந்திய இனக்குழுமத்தின் தலைவனாக பதவியேற்ற இளைஞனிடம் அந்த குழுமத்தினர் இந்த குளிர்காலம் அதிக குளிராக இருக்குமா என கேட்டனர், முன்னனுபவமில்லா அந்த இளைஞன் எதற்கும் பாதுகாப்பாக இருப்பதற்காக இந்த முறை வழமையாக சேகரிக்கும் விறகுகளை விட கொஞ்சம் அதிகமாக சேகரிக்க கூறினான். நகர்த்திற்கு சென்று வானிலை ஆராய்ச்சி நிறுவனத்திடம் இந்த முறை குளிர்காலம் எப்படி என கேட்டான் அதற்Kஉ இந்த முறை குளிர்காலம் கொஞ்சம் அதிகமாக இருக்கும் என கூறினார்கள், உடனே தனது கிராமத்திற்கு விரைந்த இளைஞன் மேலும் கொஞ்சம் விறகுகளை சேகரிக்க கூறினான். மறுவாரம் நகரத்திற்கு சென்றாந்த இளைஞன் மீண்டும் அதே கேள்வியினை வானிலை ஆராய்ச்சி மையத்திடம் கெட்டான், அதற்கு அவர்கள் இந்த முறை குளிர் மிக மோசமாக இருக்கும் எனகூறினார்கள், அதற்கு அவன் எப்படி உறுதியாக கூறுகிறீர்கள் என கேட்டான் அதற்கு அவர்கள் செவ்விந்தியர்கள் விறகுகளை கண்மூடித்தனமாக சேகரிக்கிறார்கள் என கூறினர். தமிழ் நெற், தமிழ் கார்டியன் என்பன சிங்கள, ஆங்கில ஊடகங்களிலிருந்து தென்னிலங்கை செய்திகளை பெறுகின்றன, இந்த சின்ன இலங்கை செய்திகளை சி என் என் வெளியிடாது.
  16. நீங்கள் நல்ல மனோதிடம் உள்ள நபராக இருப்பீர்கள் என கருதுகிறேன், நான் இதனை முன்னமே எதிர்பார்த்திருந்தாலும் கொஞ்சம் ஏமாற்றமாகிவிட்டது எல்லோரையும் போல இவரும் போய்க்காலில் விழுந்துவிட்டாரே என, ஆனால் நீங்கள் புலிகளே அனுசரித்து போனார்கள் என்று இலகுவாக கடந்து சென்றுவிட்டீர்கள். ஆனால் நான் இவரிடம் இன்னமும் நிறைய எதிர்பார்க்கிறேன்😁.
  17. Dead cat bounce ஆக இருக்கலாம்😁. இலங்கை நாணயம் கனடா நாணயத்திற்கெதிராக் விலை வீழ்ச்சி அடைந்து கொண்டு போவதால், விலை வீழ்வதற்கான சாத்தியக்கூறுகளே அதிகம் (Down trend). ஆனால் எதனையும் உறுதியாக கூற முடியாது.
  18. ஆனால் இவற்றுடன் சுயநலனும் உண்டு, அது சில வேளைகளில் நாட்டின் நலனை பின் தள்ளிவிட்டு விடும்.
  19. உலகின் பழமையான மொழி தமிழ் எனக்கூறுகிறார்கள் (5000 வருடங்கள்) ஆனால் கல் மண் இதற்கு முன்னரே தோன்றியதால் உங்களுடைய கருத்துடன் முரண்படுகிறேன்😁.
  20. சும்ம ஒரு நகைச்சுவைக்காக பதியப்பட்டது எந்த அரசியல் பின்புலத்துடனும் பதியப்படவில்லை.
  21. இஸ்ரேலிற்கெதிராக ஈரான் அதி மிகை ஒலி ஏவுகணைகளையும் (பட்டா 2) பயன்படுத்தியதாக கூறுகிறார்கள், இவ்வாறான ஏவுகணைகளை இடைமறிக்க முடியாதுதான். ஈரான் குத்தி, கமாஸ், கிஸ்புல்லா போல ஒரு வரையறுக்கப்பட்ட சக்தியல்ல,இஸ்ரேல புதிய நேரடி யுத்தத்தினை ஏற்படுத்துவதனை விட தலைமகளை இலக்கு வைத்து வழி வாங்கக்கூடும், தற்போதய நிலையில் இஸ்ரேலின் நேரடி இராணுவ நடவடிக்கை என்பது பெரிதாக பலமாக சொல்லிக்கொள்ளும்படியாக இல்லை, ஆனால் பேரழிவினை ஏற்படுத்துதல் (மக்களை தொகையாக கொல்லுதல்) தலைமைகளை கொல்வது, பேயர், தொலை தொடர்பு வெடிப்பு என்பனவற்றையே செய்கிறது, அதனால் ஈரானுடன் ஒரு முழு அளவிலான யுத்தத்திற்கு இஸ்ரேல் செல்லாது என கருதுகிறேன் ஆனால் பேரவுகளை ஏற்படுத்த அணுவாயுத நிலை மீது தாக்குதல் நடத்தினால் இப்போது இஸ்ரேலுக்கு ஆதரவு வழங்கும் ஈரானின் அண்டை நாடுகளுக்கும் பாதிப்பு ஏற்படும்.
  22. இதனை பற்றி கவலைப்படுவதை விடுங்கள், எங்களுக்கு 3 தலைமுறைக்கு முன்னர் நடந்த விடயங்கள் தெரியவில்லை இதற்கு பின்னாலுள்ள 2000 வருடங்களை பற்றி ஏன் கவலைப்படுவான். வரலாறு தெரியாமல் இருப்பது ஒரு பெரிய குற்றமில்லை, உங்களுக்கு தேவையேற்படின் அதனை தேடி அறிந்து கொள்வீர்கள், எனக்கும் தெரியாது.
  23. உங்கள் தகவலுக்கு நன்றி! நான் இணைத்த இணைப்புகள் கொழும்பு நாழிதல்கள், நீங்கள் இணைத்த தமிழ் கார்டியன் தமிழ்நெற் போன்ற் இணையத்தரவுகளை யாழில் பொதுவாக பல திரிகளில் கேள்விகுள்ளாக்கும் நிலைதான் தொடருகிறது, முதலில் தமிழ் கார்டியனே இணைக்க முயன்றேன் பின்னர் அதனை தவிர்த்து விட்டேன் தேவையற்ற விவாதத்தினை தவிர்ப்பதற்காக. ஆனால் எனக்கு தமிழ் கார்டியனும் ஒன்றுதான் மற்ற ஊடகங்களும் ஒன்றுதான்.
  24. இது ஒரு இதிகாச கதைதானே, கதைகளில் கூறப்படும் கதாநாயக விம்பங்களுக்காக சில மாற்றங்கள் செய்ய வேண்டிய நிலை, மகா பாரதத்தில் பல நாயகர்கள், அனைவரையும் கவர்வதற்காக அமைக்கப்பட்ட பாத்திரங்கள் (இது யாழில் இரு நிலைகள் எடுக்கும் தரப்புகள் தனது தரப்பினை நியாயப்படுத்துவது போல ஒன்று😁) . கண்ணன் பாத்திரம் கொஞ்சம் அங்க இங்கை என அடிபட்டு நெழிஞ்சு போன குடமாக மகா பாரத கதாபாத்திரமாக வந்துள்ளது.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.