Everything posted by vasee
-
அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் 2024.
"I don't think that Trump would agree to peace only on Russia's terms, as this would look like a defeat for the US, and his advisers understand this," Mr Fesenko told Reuters news agency. உக்கிரேனிய அரசியல் ஆய்வாளரின் (பெசண்கோ) கருத்தின்படி அமெரிக்கா உக்கிரேனின் விடயத்தில் ட்ரம்ப் நினைப்பது போல செய்ய முடியாது என்பதாக, அவ்வாறு நிகழ்ந்தால் அது அமெரிக்காவின் தோல்வியாகிவிடும் என. உக்கிரேனியர்கள் கூட இந்த போர் தொடரலாம் என நினைக்கிறார்கள் என கருதுகிறேன்.
-
அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் 2024.
நன்றி! பிரித்தானியாவின் முன்னால் பிரதமர், போரிஸ் ஜோன்ஸனை சனல் 4 அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நிகழ்ச்சியில் பாதியிலேயே அவருடைய புத்தகத்தினை விளம்பரப்படுத்தியமைக்காக வெளியேற்றி உள்ளதாக செய்திகள் கூறுகின்றன. அந்த புத்தகத்தில் உலக அரசியல் பற்றிய பல எதிர்வுகூறல்கள் உள்ளதாம்? வாசித்து வீட்டீர்களா? கார்டியன் இணையச்செய்தி கூகிள் மொழிமாற்றம் மூலம். தனது புத்தகத்தை விளம்பரப்படுத்தியதற்காக போரிஸ் ஜான்சனை அமெரிக்க தேர்தல் நிகழ்ச்சியில் இருந்து சேனல் 4 'நீக்கம் செய்தது' என்று இணை தொகுப்பாளர் கூறுகிறார் முன்னாள் பிரிட்டிஷ் பிரதம மந்திரி 'அதைத் தள்ளிவிடுங்கள்' என்று எச்சரிக்கப்பட்ட போதிலும் தனது நினைவுக் குறிப்பைக் கொண்டு வந்தார், பின்னர் டிவி பேனலில் மாற்றப்பட்டார் அமெரிக்க தேர்தல் 2024 - சமீபத்திய புதுப்பிப்புகள் அமெரிக்க தேர்தல் முடிவுகள் 2024: நேரடி வரைபடம் மற்றும் டிராக்கர் பிஏ மீடியா புதன் 6 நவம்பர் 2024 12.15 AEDT பகிரவும் நிகழ்ச்சியின் இணை தொகுப்பாளரான கிருஷ்ணன் குரு-மூர்த்தியின் கூற்றுப்படி, போரிஸ் ஜான்சன் அமெரிக்கத் தேர்தல் தொடர்பான சேனல் 4 இன் கவரேஜில் விருந்தினராக தோன்றியபோது "தனது புத்தகத்தைப் பற்றி முட்டி மோதியதற்காக" நீக்கப்பட்டார். நிகழ்ச்சியிலிருந்து ஜான்சன் வெளியேறுவது திட்டமிடப்பட்டதா அல்லது அவர் முன்கூட்டியே புறப்பட்டாரா என்பது தெளிவாகத் தெரியவில்லை. கிருஷ்ணன் குரு-மூர்த்தி: "இப்போது, இங்கே ஸ்டுடியோவில் எங்களிடம் ஒரு புதிய பேனல் உள்ளது - போரிஸ் ஜான்சன் தனது புத்தகத்தைப் பற்றி அதிகம் பேசியதற்காக நீக்கப்பட்டார்" #C4AmericaDecides pic.twitter.com/k64MosGctX — டேவிட் (@Zero_4) நவம்பர் 5, 2024 "}}"> நிகழ்ச்சியின் போது, முன்னாள் இங்கிலாந்து பிரதமர், அமெரிக்கா முடிவு: அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் என்ற தலைப்பில் நேரலை நிகழ்ச்சியில் சில நிமிடங்களில் தனது நினைவுக் குறிப்பைப் பிடித்துக் கொண்டு அதைச் செருகியதற்காகக் கூறப்பட்டார் . சேனல் 4 செய்தி வாசிப்பாளரான குரு-மூர்த்தி ஜான்சனிடம் "அதைத் தள்ளிவிடுங்கள்" மற்றும் "நிறுத்துங்கள் போதும்" என்று கூறினார், அவர் தனது புதிய புத்தகத்தை இரண்டு முறை குறிப்பிட்டு அதை பார்வையாளர்களுக்கு பிடிக்க முயன்றார். முன்னாள் பிரதமரின் நடவடிக்கைகள் "மிகவும் மலிவானவை" என்று குரு-மூர்த்தி விவரித்தார். ஜான்சன் பதிலளித்தார்: "என்னைத் தடுக்க உங்களால் எதுவும் செய்ய முடியாது ... எனது புத்தகத்தை இணைக்க எனக்கு அனுமதி உண்டு." 🚨 புதியது: போரிஸ் ஜான்சன் தனது புத்தகத்தை இன்றிரவு சேனல் 4 அமெரிக்க தேர்தல் ஒளிபரப்பில் சில தருணங்களில் செருகியுள்ளார் pic.twitter.com/fZnpwRfIhi — அரசியல் UK (@PolitlcsUK) நவம்பர் 5, 2024 "}}"> பின்னர் குழு விவாதத்தின் போது, ஜான்சன் ஜூலை மாதம் படுகொலை செய்ய முயற்சித்த பின்னர் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதியும் குடியரசுக் கட்சியின் வேட்பாளருமான டொனால்ட் டிரம்ப்பை சந்தித்ததாகக் கூறினார். "இதை நான் குறிப்பிடத் தவறினால், எனது புத்தகம் அன்லீஷ்டுக்கு விளம்பரம் செய்கிறேன், உக்ரைனைப் பற்றி அவருடன் பேசினேன்," என்று அவர் கூறினார். அதிபர் தேர்தலில் வெற்றி பெற வேண்டுமானால், அரசியல் ரீதியாக மீண்டும் ட்ரம்ப் அடிச்சுவடுகளைப் பின்பற்றுவது பற்றி அவரிடம் கேட்டபோது, ஜான்சன் கூறினார்: "அன்லீஷ்டில் இந்த விஷயத்தைப் பற்றிய முழு விவாதத்தையும் நீங்கள் காண்பீர்கள், அதற்கான பதில் வெளிப்படையாக உள்ளது." இணை தொகுப்பாளர் எமிலி மைட்லிஸ் அவரிடம் கூறினார்: "நாங்கள் அனைவரும் உங்கள் புத்தகத்தைப் படிக்கப் போவதில்லை, எனவே எங்களிடம் கூறுங்கள், நீங்கள் அரசியல் ரீதியாக மீண்டும் வர விரும்புகிறீர்களா … உங்களால் ஒரு கேள்விக்கு உண்மையில் பதிலளிக்க முடியாது." ஜான்சன் பதிலளித்தார்: “எமிலி உங்கள் எல்லா கேள்விகளுக்கும் இரவு முழுவதும் பதிலளித்தேன். தற்போது நான் எனது புத்தகத்தை விளம்பரப்படுத்துவதில் மகிழ்ச்சியுடன் ஈடுபட்டுள்ளேன், இது அனைத்து நல்ல புத்தகக் கடைகளிலும் கிடைக்கிறது. பின்னர் நிகழ்ச்சியில், ஜான்சனுக்கு பதிலாக சேனல் 4 குழுவில் மைக்கேல் கோஹன் நியமிக்கப்பட்டார், அவர் முன்னாள் ஜனாதிபதி டிரம்பின் வழக்கறிஞராக பணியாற்றினார். குரு-மூர்த்தி பார்வையாளர்களிடம் கூறினார்: "போரிஸ் ஜான்சன் தனது புத்தகத்தைப் பற்றி களமிறங்கியதற்காக நீக்கப்பட்டுள்ளார்." சனல் 4 இன் பிரதிநிதி ஒருவர் கருத்துக்காக PA ஊடகத்தால் தொடர்பு கொள்ளப்பட்டார்.
-
அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் 2024.
நான் கூறியதுதான் நடந்தது நடக்கவில்லை என்பதனை பற்றி கவலைப்படுகின்ற ஆள் கிடையாது ( பாடசாலை முறைமைகளினூடாக எப்போதும் சரியாக இருத்தல்), தவறாக சொல்வதால் எந்த இழப்பும் தனிப்பட ஏற்படுவதில்லை, ஆனால் தவறை நியாயப்படுத்த முனைவதால் ஏற்படும் பாதிப்பு அதிகம் என புரிந்ததனால் தவறாக இருந்தால் அதற்காக இலகுவாக ஒரு மன்னிப்புடன் முன்னேற முடியும் அந்த தவறுகளை நியாயப்படுத்தி அதே இடத்தில் தேங்கி விட விருப்பம் இல்லை, அதனால் தவறை நியாயப்படுத்தும் ஆளும் கிடையாது. 😁
-
அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் 2024.
நிச்சயமாக இது நடக்காது, இந்த போரில் உக்கிரேன் வெறும் அம்பு மட்டுமே, அதிபர் தேர்தலில் வேட்பாளர்கள் தொழில்முனைவர்கள், சமூக ஆர்வலர்களினை குறிவைத்து சமாதானம் எனும் தொணிபட பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தாலும், இரண்டு அதிகாரங்களுக்கிடையான போரில் அமெரிக்கா தனது நிலையினை தக்க வைக்க செய்யும் பிரயத்தனமே இந்த போர், ஆனால் இனி வரும் காலங்களில் அமெரிக்காவினது போரிற்காக ஐரோப்பா அதன் செலவினை ஏற்றுக்கொள்ளவேண்டிய நிலை ஏற்படும் அவ்வளவுதான் வித்தியாசம் போர் தொடரும் நிலையே காணப்படும் (அந்த செலவினை அமெரிக்கா ஐரோப்பாவிடமிருந்து பெற்றுக்கொள்ளும்.). உக்கிரேன், இரஸ்சியா போரினால் அழிவடையும் நிலை தொடரும், உலகம் பொருளாதார நெருக்கடிக்கு முகம் கொடுக்கும் நிலையும் தொடரும்.
-
இந்தியா நியூஸிலாந்து டெஸ்ட் தொடர்
இந்தியணிக்கு தற்போது காலம் சரியில்லை, இந்திய ஏ அணி அவுஸில் பந்தை சேதப்படுத்தியுள்ளதாக கூறுகிறார்கள்.
-
மார்ச், ஏப்ரல் மாதங்களில் நாடு மீண்டும் நெருக்கடிகளை எதிர்கொள்ளும்; ராஜித சேனாரத்ன
அது நடந்தது 2018 இல், இந்தியா எப்போதும் இலங்கையின் கரிசனையினை பெற விரும்புவது வாடிக்கையான விடயம், ஆனால் இலங்கைதான் இந்தியாவினை கண்டுகொள்வதில்லை.
-
அரசியல் சதிகள் அம்பலம்
காணொளியில் உள்ள முக்கியமான விடயங்களை யாராவது சுருக்கமாக குறிப்பிட்டால் பலருக்கும் உதவியாக இருக்கும் (நானும் பார்க்கவில்லை). இது ஒரு அரசியல் தீர்வு சம்பந்தமான விடயம் என புரிகிறது, நீங்கள் கூறும் கள யதார்த்தம் சிறுபான்மையினரை பொறுத்தவரை தற்போது தற்காலிகமாக மாறிவிட்டது என்பது உண்மை. ஆனால் இனவாத பெரும்பான்மையில் எந்த மாற்றமும் நிகழவில்லை என்ற யதார்த்தினை யாரும் ஏற்றுக்கொள்வதில்லை. இலங்கை அரசியல் அமைப்பு சட்டமாக இருந்தாலும் சரி இலங்கை சட்டவமைப்பாக இருந்தாலும் சரி இலங்கையினை ஒரு மோசமான நிலைக்கு தள்ளிவிட்டுள்ளது, புதிதாக சட்டவமைப்பிலோ அல்லது அரசியல் சட்டவமைப்பிலோ மாற்றம் ஏற்படுத்தாது ஒன்றிணைந்த இலங்கைக்குள் அனைத்து மக்களும் சம உரிமையுடன் வாழ முடியாது என்பது வரலாறாக உள்ளது, அதற்கு சான்றாக இலங்கையில் நிகழ்ந்தேறிய இனக்கலவரங்கள் மனித உரிமைகள் இருக்கின்றது, தற்போது மக்கள் விரும்புவது அமைதியான பாதுகாப்பான வாழ்வு அதனை ஒற்றை ஆட்சிமுறைமைக்குள்ளே அதிகார பரவலாக்கமின்றி அரசியல் அமைப்பு சட்டமாற்றம், சட்டவாக்க மாற்றத்தினூடாக இலங்கை ஒற்றை ஆட்சிக்குள்ளாகவே நிறைவேற்றினால் மக்கள் இந்த காணி,நிதி ,நீதி, காவல்துறை அதிகாரங்கள் என தனித்து கோரமாட்டார்கள். ஆனால் புதிய அரசால் கூட அதனை ஏன் செய்ய முடியவில்லை? நான் நினைக்கிறேன் சட்டவைமைப்பு மற்றும் அரசியலைமப்பு மாற்றங்களினால் ஏற்படும் புதிய ஜனநாயக சூழ்நிலை இலங்கையில் நிலவிய மற்றும் நிலவுகின்ற இனவாத நடவடிக்கைகலை சட்ட ரீதியாக சவால்களை எதிர்கொள்ள அரசுகள் விரும்பாமை காரணமாகும். அதனால் பாதுகாப்புதுறை மட்டுமன்றி அரசியல் உயர் பீடங்கள் கூட பிரச்சினையினை எதிர்கொள்ளும் நிலை உருவாகும். இந்த புதிய அரசு இதுவரை ஆட்சி பீடமேறாத அரசு அதனால் இந்த சட்ட மாற்றம் ஏற்படுத்துவதால் கட்சி ரீதியாக பாதிப்புள்ளாக மாட்டார்கள், ஆனால் பாதுகாப்புதுறை மற்றும் பெரும்பான்மை இன ஆதரவினை இழக்கும் அரசியல் தற்கொலையினை செய்ய விரும்பவில்லை. மக்கள் இந்த அரசிற்கு அறுதிப்பெரும்பான்மை கொடுக்க வேண்டும், அதன் பின்னர் மக்கள் ஒன்றை புரிந்து கொள்வார்கள் இலங்கை இன்னும் மாற்றத்திற்கு தயாராகவில்லை என்பதுதான். அடிப்படை பிரச்சினையே இனவாதத்தினை இலங்கையிலிருந்து நீக்க முடியாமைதான், இலங்கை மட்டுமன்றி இந்தியாவில் கூட இதே நிலைதான் சிறுபான்மை மக்களுக்கு பாதுகாப்பில்லாமல் ஒரு தேசமாக வளர்ச்சி அடைய முடியாது.
-
மார்ச், ஏப்ரல் மாதங்களில் நாடு மீண்டும் நெருக்கடிகளை எதிர்கொள்ளும்; ராஜித சேனாரத்ன
வர வர உங்களுக்கு குசும்பு அதிகமாகிறது😁, இதனை கூறியது இந்திய தொழிலதிபரான அருண் குமார், இலங்கையின் கேந்திர முக்க்கியத்தினால் இலங்கை தெற்கு ஆசியாவில் ஆபிரிக்க, கிழக்காசிய பொருளாதார மையங்களுக்கிடையேயான மையப்புள்ளியாக இலங்கை இந்தோ படுபிக் பிராந்தியத்தில் இரு பொருளாதார சக்திகளுக்கு இசைவான சுவிஸ் போல ஒரு அணிசேரா அமைப்பாக இர்ந்து தனது நிலையினை உறுதிப்படுத்தவேண்டும் என கூறியிருந்தார்.
-
யாழ்கள இலங்கை பாராளுமன்ற தேர்தல் போட்டி
எனக்கும் தெரியது ஆனால் நீங்கள் கூறியபின் இணையத்தில் தேடி அறிந்து கொண்டேன்.
-
இரான் பல்கலைக் கழகத்தில் திடீரென ஆடைகளை களைந்த இளம்பெண் - என்ன நடந்தது?
மதங்கள் என்று வரும்போது பெரும்பாலும் கேள்விகிடமின்றி ஒரு விடயத்தினை பின்பற்றுவதாகவே உளது, ஆரம்பத்தில் இயற்கை வழிபாடு இருந்ததாக கூறுகிறார்கள், இயற்கை அனர்த்தங்கள் ஏற்படாமல் இருக்க இயற்கை அனர்த்தம் ஏற்படுத்தும் விடய்ங்களை வழிபட்டனர் (பயத்தின் காரணமாக). இந்த பயபக்தி அனைத்து மதங்களிலும் காணப்படுகிறது, ஆரம்பகால உடைகளாக எம்மவர்கள் மேலாடை அணிவதில்லை என நினைக்கிறேன், அதே போல் மத்திய கிழக்கில் உள்ளவர்கள் தூசி புயலை சமாளிப்பதற்காக முகத்தினை மூடிய ஆடை அணிந்திருக்கலாம், அதனையே மரபு என தற்காலத்திலும் பின்பற்றும் நிலை காணப்படுகிறது, அதனை கலாச்சாரம் என கூறுவதற்கு மதம் ஒரு கருவியாக பயன்படுத்தப்படுகிறது என நினைக்கிறேன். நாங்களும் இதே மாதிரியான முட நடவடிக்கைகளில் ஈடுபட்டுக்கொண்டு பிற மதங்களினை இலகுவாக கேள்விக்குள்ளாக்க முடிவதற்கான காரணம், நாம் நம்பும் மதம் என்றால் பயபக்தி இருக்கும் அதனை கண்ணை மூடிக்கொண்டு பின்பற்றுவோம் ஆனால் மற்ற மதங்கள் தொடர்பில் எந்த வித பயமும் இல்லாதனால் எனது மதம் சிறந்தது மற்ற மதங்கள் மோசமானவை எனும் பொதுவான நிலைப்பாடாகவே இருக்கும்.
-
இரான் பல்கலைக் கழகத்தில் திடீரென ஆடைகளை களைந்த இளம்பெண் - என்ன நடந்தது?
அதே போல எமது கோயில்களிலும் ஆண்கள் அரை நிர்வாணமாக செல்வதனை யாரும் கண்டு கொள்வது கூட இல்லை.😁
-
இந்தியா நியூஸிலாந்து டெஸ்ட் தொடர்
இந்த தோல்விக்கு ரி20 போல் விளையாடியதுதான் காரணம் என குற்றம் சாட்டும் இவர்கள்தான் வங்க தேசத்துடனான போட்டியினை இந்தியா; கிரிக்கட் உலகிற்கு ஒரு புதிய அத்தியாயத்தினை தோற்றுவித்தாக தமதணியின் வெற்றியினை மிகைப்படுத்தி கொண்டாடினார்கள், தற்போது தோல்வி ஏற்பட்டவுடன் எதனை மெச்சி புகழ்ந்தார்களோ இப்போது அதனை குற்றம் கூறுகிறார்கள். அதே போல கம்பீர் மீதான குற்றச்சாட்டும். டெஸ்ட் போட்டியில் இப்படித்தான் விளையாடவேண்டும் என கூறுவதற்கு சில காரணம் இருக்கும் ஆனால் தனிப்பட்ட ரீதியில் ஒவொரு வீரருக்கும் இயல்பான ஆட்டம் இருக்கும் சிலருக்கு டெஸ்டில் விளையாடுவது போல லெக் ஸ்டம்பிற்கு வெளியே போகும் பந்துகளைத்தான் சுவீப் விளையாட வேண்டும் என்றோ அல்லது சுழலுக்கு எதிராக விளையாட கூடாது எனும் வழமையான மாதிரியினைத்தான் பின் பற்ற வேண்டும் என்றில்லாமல் தமது இயல்பான ஆட்டத்தினை விளையாடினால் போதும்., முதல் இனிங்ஸில் 400 ஓட்டங்களை (குறைந்தது) எடுப்பதுதான் இலக்கு . நியுசிலாந்து முதலாம் தர சுழல் பந்து வீச்சாளர்களுக்கு எதிராக (இந்தியா எதிர் கொண்டதனை போல இரண்டாம் மூன்றாம் தர சுழல் பந்து வீச்சாளர்கள் அல்ல) சுவீப், ரிவர்ஸ் சுவீப்களை விளையாடித்தான் வென்றுள்ளது. அதனை எவ்வாறெடுத்தால் என்ன? இதே போல் விளையாடி வென்றிருந்தால் இதனைப்பற்றி கதைக்கமாட்டார்கள்,தோற்றபின் இவ்வாறன இவ்வாறான காரணங்கள் கூறுவதனை நொண்டிக்குதிரைக்கு சறுக்கியதுதான் சாட்டு என்பார்கள்.
- புலம்பெயர் தமிழர்களுக்கு அநுர அரசாங்கத்தின் அழைப்பு
-
இந்தியா நியூஸிலாந்து டெஸ்ட் தொடர்
அனைவரும் இந்தியா மோசமாக விளையாடிதுதான் இந்தியாவின் தோல்விக்குக்காரணம் எனும் நிலை காணப்படுகிறது, உண்மையில் நியுசிலாந்து திறமையாக விளையாடி எப்போதும் இந்தியாவினை அளுத்தத்தில் வைத்திருந்தது, அவர்களிடம் சிறந்த சுழற்பந்து வீச்சாளர்களும் இல்லை, ஒரு சகல துறை ஆட்டக்காரர் பிரதான பந்துவீச்சாளராக செயற்படும் நிலை காணப்பட்டது. போட்டியில் பந்துவீச்சில் இரண்டு பக்கமும் அளுத்தம் கொடுப்பதற்காக பட்டேலையும் பிலிப்ஸையும் நியுசிலாந்து தொடர்ந்து பயன்படுத்தவேண்டிய நிலை காணப்பட்டது. தனது பலத்திற்கேற்ப மிக தெளிவாக் திட்டமிட்டு நியுசிலாந்து இந்தியாவினை வென்றுள்ளது, நியுசிலாந்திடம் தோற்றதனால் இந்தியா மோசமான அணி அல்ல இதே இந்திய அணி அவுஸில் சிறப்பாக விளையாடும், நியுசிலாந்து ஒவ்வொரு மட்டையாளரது பலவீனத்தினையும் குறிவைத்து அவர்களை அவுட்டாக்கியது.
-
யாழ்கள இலங்கை பாராளுமன்ற தேர்தல் போட்டி
அதனை கணக்கு வைத்துத்தான் அப்படி கூறினேன்.😁
-
இரான் பல்கலைக் கழகத்தில் திடீரென ஆடைகளை களைந்த இளம்பெண் - என்ன நடந்தது?
பொதுவாக அனைத்து சமூக அடக்குமுறைகளுகும் மதத்தினை ஒரு கருவியாக அனைத்து மதங்களிலும் பயன்படுத்தப்படுகின்றது, ஏனென்றால் அதனை கேள்விக்குள்ளாக்க முடியாது, மதங்களின் அடிப்படையே அச்சத்தினடிப்படை (சாமி கண்ணை குத்தும்) ஆகும். எமது இந்து சமயத்தில் இப்போது கூட பெண்களின் உடற்கூற்றியலில் உள்ள விடயங்களை வைத்து தீட்டு என்பதன் மூலம் பெண்களை இரண்டாம் நிலையில் வைத்திருக்கும் நிலை காணப்படுகிறது. ஒவ்வொருவரும் அவர் மதம் கூறும் விடயங்களை கேள்விக்கிடமின்றி நம்பும் அதே வேளை மற்ற மதங்களை கேள்விக்குள்ளாக்குகிறோம். மதங்கள் காலத்திற்கேற்ப பரிணாமம் பெறவேண்டும், அதற்கு முதலில் ஒவ்வொருவரும் தத்தமது மதங்களில் உள்ள குறைபாட்டை களையவேண்டும், மாறாக மற்றவர்கள் அடுத்த மதங்களை விமர்சிப்பதால் எந்த மாற்றமும் ஏற்படாது என கருதுகிறேன். ஆனால் விமர்சிக்காமல் விட கூறவில்லை, இவ்வாறு விமர்சிக்காவிட்டால் அவர்களுக்கு தமது மதத்தில் உள்ள தவறுகள் தெரியவாய்ப்பில்லாமல் போகும் அதே நேரம் அந்த விமர்சனத்தில் வெறுப்பு இருக்க கூடாது.
-
யாழ்கள இலங்கை பாராளுமன்ற தேர்தல் போட்டி
அப்படியென்றால் போட்டியில் முதலில் கலந்து கொண்ட முதல் நால்வருக்கு சிறப்பு புள்ளிகள் வழங்கவேண்டும்.😁
-
புலம்பெயர் தமிழர்களுக்கு அநுர அரசாங்கத்தின் அழைப்பு
விகிப்பீடியாவின் கருத்தினடிப்படையில் 887000 புலம் பெயர் தமிழர்கள் அண்ணளவாக உள்ளார்கள் இவர்களில் பெரும்பாலானவர்கள் இலங்கையிலிருக்கும் தமது உறவுகளுக்கு உதவி செய்கிறார்கள் வெறும் நாலில் ஒரு பகுதி (200000) ஆண்டிற்கு $2000 (மாதத்திற்கு $166) உதவி செய்தால் இலங்கைக்கு $400000000 வெளிநாட்டு செலாவணி கிடைக்கும், அது தவிர தனியார் , மற்றும் தொண்டு நிறுவனங்களினூடாக செய்யும் இலங்கைக்கு புலம்பெயர் தமிழ் மக்கள் செய்யும் உதவியின் மூலம் இலங்கைக்கு பெருமளவான வெளிநாட்டு செலாவணி கிடைப்பதுடன் இலங்கையின் பொருளாதாரத்திற்கு முக்கியமாக புலம்பெயர் தமிழ் மக்கள் உள்ளனர். இவர்களது முதலீடுகள் இலங்கையில் நேரடியாக ஏற்படுத்தப்பட்டால் இலங்கைக்கு அது மேலும் சாதகமாவதற்கான சூழ்நிலை உள்ளது.
-
இந்தியா நியூஸிலாந்து டெஸ்ட் தொடர்
150 ஓட்டங்கள் என்பது கடினமாக இருக்கும் என முன்பே கூறியிருந்தேன்(முதல் நாள் ஆட்ட முடிவில்), அதற்குக்காரணம் ஆடுகளத்தின் தன்மை, இந்தியா சுழல் பந்துவீச்சிற்கு சாதகமான ஆடுகளத்தினை முதல் நாளிலேயே உருவாக்கியுள்ளது (பொதுவாக 3 ஆம் நாளின் பின்னரே ஆடுகலம் சுழல் பந்துவீச்சிற்கு சாதகமாக மாறும்), அந்த ஆப்பு அவர்களுக்கே வந்து சேர்ந்துவிட்டது.
-
இந்தியா நியூஸிலாந்து டெஸ்ட் தொடர்
நியுசிலாந்து இந்தியாவிற்கே போய் இந்தியாவிற்கு வெள்ளை அடித்துவிட்டது.😁
-
இந்தியா நியூஸிலாந்து டெஸ்ட் தொடர்
இந்த ஆடுகளத்தினை சுழல் பந்து வீச்சுக்கு சாதகமாக்கியுள்ளார்கள் இந்தியர்கள் என நினைக்கிறேன், முதல் நாள் ஆட்டத்திலேயே வேகப்பந்திற்கு பெரிதும் உதவவில்லை, நியுசிலாந்து இந்த ஆட்டத்தினை 3 ஆம் நாளுக்கு எடுத்து சென்றால் இந்தியாவின் நிலை இன்னும் மோசமாகும், ஒப்பீட்டளவில் இந்திய அணியே சிறந்த சுழல் பந்து வீச்சாளரைக்கொண்ட அணி இந்தியணிக்கு தற்போது வெற்றி வாய்ப்பு குறைவாக உள்ளது ஆனாலும் நியுசிலாந்து அணியினை 150 ஓட்ட்டங்களுக்குள் சுருட்டி விட்டால் வெற்றி வாய்ப்புண்டு. இந்த ஆடுகளம் புனே ஆடுகளம் போல பந்து தரையில் பட்டு வேகமாகவோ அல்லது சமச்சீரற்ற பந்து எழுச்சி கொண்ட ஆடுகளம் அல்ல என கூறுகிறார்கள், பந்து தரையில் பட்டு மெதுவாக எழுவதாக கூறுகிறார்கள்(தூசி உள்ள) பெரும்பாலும் அதிக வெப்பம் காரணமாக தரை விரைவாக உடைய வாய்ப்புண்டு அத்துடன் பந்து வீச்சாளர்களின் பாதத்தடத்தினால் உருவாக்கப்படும் பகுதிகளில் பந்தினை கணிப்பது சிரமாகும், இந்தியா குறைந்த ஓட்டங்களில் விரைவாக நியுசிலாந்தினை அவுட்டாக்கினால் வெற்றி பெறலாம் என கருதுகிறேன்.
-
இந்தியா நியூஸிலாந்து டெஸ்ட் தொடர்
இந்திய அணியினை நியுசிலாந்து போட்டு புரட்டி எடுப்பது என்பது அதுவும் இந்தியாவிலே என்பதால் இந்த தொடர் ஒரு ஆர்வ மிகுதியினை ஏற்படுத்தியுள்ளது அதனால் இதனை பின் தொடர்கிறேன், பெரும்பாலும் ஆட்ட முடிவில் நிலமையினை அவதானிப்பதுண்டு அல்லது யூரியூப்பில் சில வேளை கைலைற்ஸ் பார்பதுண்டு வேறு ஆட்டங்களை பின் தொடர்வதில்லை.
-
இந்தியா நியூஸிலாந்து டெஸ்ட் தொடர்
நீங்கள் கூறியது சரிதான் ஐசிசி இணையத்தளத்தில் இரண்டு தொடர் மட்டும் குறிப்பிடப்பட்டதால் முன்பு பதிந்தது தவறென நினைத்து அவ்வாறு பதிவிட்டேன் மேல் உள்ள பதிவில் நியுசிலாந்து கேரல்டினை கூகிள் மொழிபெயர்ப்பின் உதவியுடன் பதிந்துள்ளேன் , அதில் இந்த இந்திய தொடரிலும் அவர் பணியாற்றுகிறார் எனப்தனை உறுதிப்படுத்தியுள்ளது.
-
இந்தியா நியூஸிலாந்து டெஸ்ட் தொடர்
பிளாக் கேப்ஸ் சுற்றுப்பயணம்: இலங்கை பந்துவீச்சு ஜாம்பவான் ரங்கனா ஹெராத் பயிற்சியாளர் குழுவில் இணைந்தார் NZ ஹெரால்ட் 7 செப், 2024 06:49 காலைபடிக்க 2 நிமிடங்கள் சேமிக்கவும் பகிரவும் ரங்கனா ஹெராத்தின் ஈடுபாட்டால் அஜாஸ் படேல் மற்றும் கேரி ஸ்டெட் ஆகியோர் பயனடைவார்கள். புகைப்படம் / கெட்டி படங்கள் பிளாக் கேப்ஸ் ஆப்கானிஸ்தான், சிர்லங்கா மற்றும் இந்தியாவுக்கு எதிராக டெஸ்ட் விளையாட உள்ளது சக்லைன் முஷ்டாக்கின் வெற்றிடத்தை இலங்கை சுழற்பந்து ஜாம்பவான் ஒருவர் நிரப்பியுள்ளார் இந்த சுற்றுப்பயணத்திற்குப் பிறகு, நவம்பர் இறுதியில் தொடங்கும் மூன்று டெஸ்ட்களில் இங்கிலாந்தை எதிர்கொள்கிறது பிளாக் கேப்ஸ் ஆசியா வழியாக தங்கள் நீண்ட பயணத்தின் முதல் மூன்று சோதனைகளில் நிலைமைகளைக் கையாள உள்ளூர் நிபுணத்துவத்தைக் கொண்டு வந்துள்ளனர் . இலங்கையின் சுழல் ஜாம்பவான் ரங்கனா ஹெராத் - 433 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்திய அனுபவமிக்கவர் - சுழற்பந்து வீச்சு பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார், மேலும் இந்திய அணியின் முன்னாள் பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோரும் அணியுடன் பணியாற்றுவார். பாகிஸ்தானின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரும் பயிற்சியாளருமான சக்லைன் முஷ்டாக்கிற்குப் பதிலாக ஹெராத், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் பதவியை வகிக்க பதவியில் இருந்து விலகியுள்ளார். ஹெராத் - விக்கெட்டுகள் அடிப்படையில் எல்லா காலத்திலும் மிகவும் திறமையான இடது கை ஆர்த்தடாக்ஸ் டெஸ்ட் ஸ்பின்னர் - அஜாஸ் படேல், மிட்செல் சான்ட்னர் மற்றும் ரச்சின் ரவீந்திரருடன் நெருக்கமாக பணியாற்ற வாய்ப்புள்ளது. திங்கட்கிழமை இந்தியாவின் நொய்டாவில் தொடங்கும் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் அவர் அணியுடன் இருப்பார், மேலும் இந்த மாத இறுதியில் இலங்கைக்கு எதிராக இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாட அவர் அணியில் இருப்பார். பிளாக் கேப்ஸ் பின்னர் ஐசிசியின் இரண்டாவது தரவரிசை டெஸ்ட் அணிக்கு எதிரான மூன்று டெஸ்ட் போட்டிகளுக்காக இந்தியாவுக்குத் திரும்புகிறார். ஆப்கானிஸ்தான் டெஸ்டில் மட்டுமே ரத்தோர் அணியுடன் களமிறங்கினார். பயிற்சியாளர் கேரி ஸ்டெட், இந்த ஜோடி உள்ளூர் நிலைமைகள் பற்றிய நுண்ணறிவுகளுடன் குழுவிற்கு புதிய அறிவைக் கொண்டுவரும் என்றார். "ரங்கனா மற்றும் விக்ரம் ஆகியோரை எங்கள் சோதனைக் குழுவில் அறிமுகப்படுத்துவதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்," என்று அவர் கூறினார். “கிரிக்கெட் உலகில் இருவருமே உயர்வாக மதிக்கப்படுகிறார்கள், அவர்களிடமிருந்து கற்றுக்கொள்ளும் வாய்ப்பை எங்கள் வீரர்கள் உண்மையிலேயே எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறார்கள் என்பதை நான் அறிவேன். “குறிப்பாக எங்களின் மூன்று இடது கை மரபுவழி சுழற்பந்து வீச்சாளர்களான அஜாஸ், மிட்ச் மற்றும் ரச்சின் ஆகியோருக்கு, துணைக் கண்டத்தில் மூன்று டெஸ்ட்களில் ரங்கனாவுடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். "இலங்கைக்கு எதிரான எங்கள் இரண்டு டெஸ்ட் போட்டிகளின் மைதானமான காலியில் ரங்கனா 100 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார், எனவே அந்த இடத்தைப் பற்றிய அவரது அறிவு விலைமதிப்பற்றதாக இருக்கும்." 1984 ஆம் ஆண்டுக்குப் பிறகு நியூசிலாந்து ஆண்கள் துணைக் கண்டத்தில் ஆறு நேரான டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய முதல் தடவையாக இந்த காவியச் சுற்றுப்பயணம் அமைந்தது. அந்தச் சந்தர்ப்பத்தில், இலங்கைக்கு எதிரான தொடரை 2-0 என்ற கணக்கில் வென்றதற்கும் 2-0 என்ற கணக்கில் தோல்வியடைந்ததற்கும் இடையே எட்டு மாத இடைவெளி இருந்தது. பாகிஸ்தான். இந்திய தொடருக்கும் கேரத்தும், ரத்தோரும் பயிற்சியாளராக உள்ளார்கள் என்பதனை நியுசீலன்ற் கேரல்ட் உறுதி செய்துள்ளது. இந்த போட்டியில் இந்தியா வென்றாக வேண்டிய நிர்ப்பந்தம் உள்ளது, இந்த போட்டியிலும் நியிசிலாந்து அணிக்காக கேரத் தனது பங்களிப்பினை செய்துவருகிறார் என நினைக்கிறேன், ஜெஸ்வால் அவுட்டாகிய அந்த ரிவர்ஸ் சுவீப் பந்து வீச்சு (முழுமையான காட்சி பார்க்கவில்லை காணொளி துணுக்கு மட்டும் பார்த்தேன்) இலங்கை அணிக்கெதிரான போட்டியில் நியுசிலாந்து அணியின் பந்து வீச்சாளரான அஜாஸ் பட்டேலிடம் கேரத் ஆட்ட நடுவில் பேசிய பின் இடது கை ஆட்டக்காரரான டிமுத் கருணாரட்னவிற்கு ஸ்கொயார் லெக்கில் ஒரு களத்தடுப்பாளரை வைத்து பந்தை கிடாயாக வீசி மட்டையாளரை இரட்டை மன நிலையில் வைத்து அவுட்டாக்கியது போலவே இதே போட்டியில் அதே லனில் அதே போல ஒரு சுவீப் ஆடும் பந்தை ஜைஸ்வாலுக்கு சோர்ட் லெக்கில் களத்தடுப்பாலரை வத்து இரையாக பந்தை கிடயாக விசி ஜைஸ்வாலை அவுட்டாக்கியுள்ளார். முன்னால் இந்திய மட்டை பயிற்சியாளரும், இலங்கை சுழற்பந்து வீச்சாளரின் உதவியுடன் நியுசிலாந்து இந்த தொடரை வெள்ளை அடித்தாலும் ஆச்சரிய பட முடியாது, ஆனால் இந்தியா தனது முதலாவது இனிங்ஸில் குரைந்த பட்சம் 300 ஓட்டங்களாவது பெறவேண்டும் ஏனென்றால் 4 ஆவதாக ஆடும் இந்தியணிக்கு 150 ஒட்டங்களே இமாலய இலக்காக இருக்கும்.
-
இந்தியா நியூஸிலாந்து டெஸ்ட் தொடர்
மன்னிக்கவும் ரங்கன கேரத் ஆப்கான் இலங்கை தொடர்களுக்கும் மட்டும் தற்காலிக சுழற்பந்துவீச்சு பயிற்சியாளாரக இருந்துள்ளார். நியுசிலாந்து 235 அனைத்து விக்கட்டுக்களையும் இழந்துள்ளது, சுழல் பந்துவீச்சாளர்கள் 9 விக்கெடுக்களை கைப்பற்றி உள்ளனர் முதல் நாள் ஆட்டத்திலேயே, இந்த போட்டியில் சான்ட்னர் விளையாடவில்லை.