Everything posted by vasee
-
தோற்ற வழு
இந்த கதை நன்றாக உள்ளது, முன்னர் நான் வேலை செய்த நிறுவனத்தில் இந்தியாவினை சேர்ந்த வைத்தியர் ஒருவர் வேலை செய்திருந்தார், அவர் புற்றுநோய் தொடர்பான ஆராய்ச்சியில் ஆலோசகராக எமது நிறுவனத்தில் பணிபுரிந்ததாக நினைவுள்ளது. அதற்கு முன்னர் அவர் சிட்னியில் உள்ள மான்லி (அவ்வாறாக நினைவுள்ளது) வைத்தியசாலையில் இரவுநேரக்கடமைக்கு பொறுபாக இருந்த அவரின் கீழ் பல வைத்தியர்களும் தாதியர்களும் பணிபுரிந்திருந்தனர், எமது நிறுவனத்தில் இருந்து விலகி இன்னொரு நிறுவனத்திற்கு வேலைக்கு சென்றபோது அவர்கள் கண்டுபிடித்தார்கள், அவர் ஒரு போலி வைத்தியர் என.
-
சோலார் மின்சாரம் வீட்டிற்கு பாவிக்கலாமா? | Solar Power for House
எனது உறவினர் இந்தியாவில் உள்ளார், இலங்கையிலும் இவ்வாறு குப்பைகளை மக்களின் தலையில் கட்டிவிடலாம் என்பதாலால் குறிப்பிட்டேன்.
-
சோலார் மின்சாரம் வீட்டிற்கு பாவிக்கலாமா? | Solar Power for House
அவுஸ்ரேலியாவில் பெரும்பாலானோர் இந்த சூரிய மின்சக்க்தியினை பாவிக்கிறார்கள், இந்த மின் தகடுகளின் ஆயுள்காலம் சராசரியாக 15 ஆண்டுகள்,நேரோட்டமின் சக்தியினை ஆடலோட்டம் மின்சக்தியாக மாற்றும் மின் மாற்றியின் ஆயுள் காலம் கிட்டதட்ட 10 வருடங்கள். தனிப்பட்ட முறையில் நானும் பயன்படுத்துகிறேன், மிகவும் உபயோகமானது. 2007 இல் ஆட்சிக்கு வந்த இடது சாரி அரசு ஆட்சிக்கு வந்த போது பல சலுகைகளை வழ்ங்கி ஆதரித்தமையால் பலர் இந்த மின் சக்தியினை நாடியிருந்தார்கள், அந்த மின் தகடுகள் காலாவதியாகும் நிலையில் அவற்றினை மீழ்சுத்திகரிப்பு செய்வது கடினமான பணியாக இருப்பதால் அவற்றினை இலத்திரனியல் குப்பையாக (அதில் அலுமினிய உலோகமும் உள்ளது) வேறு நாடுகளூக்கு அனுப்புகிறார்கள்), எனது இந்தியாவில் இருக்கும் உறவினர் ஒருவர் அதனை இறக்குமதி செய்து அங்குள்ள மக்களின் தலையில் கட்டி விடுகிறார் இரண்டாம் உபயோக மலிவான மின் தகடாக. இந்த மாதிர்யானவர்கள் தொடர்பாக விழிப்பாக இருங்கள், உங்கள்காணொளியினை பின்னர் பார்க்கிறேன்.
-
வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
நன்றி கோசான்! நேரமின்மை போன்ற பல சிரமங்களின் மத்தியிலும் அனைவரின் கருத்துகளுக்கும் பண்பான முறையில் உங்களது கருத்துகளுக்கு. பெரும்பாலானோர் இந்த பயணக்கட்டுரைகளை நேரமின்மையால் வாசிப்பதில்லை அவை மிக சிறப்பாக இருந்தாலும், உங்களது கட்டுரை மிக சாதாரணமானது (சுவாரசியத்திற்காக திருப்பங்கள், மர்மங்கள், திகில்கள் என சுவாரசியத்திற்கான எந்த அம்சமும் இல்லாமல்) ஆனால் பலரையும் கவர்வதற்கான காரணம் (அல்லது எனக்கு பிடித்ததிற்கான காரணம்) மக்களின் மேல் கொண்ட அக்கறையால் அந்த சமூகத்தின் பகுதியாக உள்ள அனைவரும் ஒவ்வொருவரும் உங்கள் பயணத்துடன் கூட பயணிக்கிறார்கள். எனது கேள்விக்கான காரணம் ஒன்றிரண்டு மாதங்கள் இருக்கலாம், இலஙகையில் உள்ள ஒருவருடன் கதைக்கும் போது இங்கு யாழ்கள உறவு ஒருவரது கருத்தினடிப்படையில் இலங்கையில் அனைத்து வசதிகளும் பிரச்சினை இல்லாமல் கிடைக்கிறதாம் எனக்கேட்டேன், அதற்கு அவர் கோபமாக பதிலளித்தார். அவர் சுற்றுலாவுக்காக வருபவர்கள் என நினைத்து பதிலளித்திருந்தார் அவரிடம் நிரந்தரமாக அங்கு தங்குபவர்கள் எனும் கருத்தினை கூட கூற முடியாதளவில் கோபமாக இருந்தார், இத்த்னைக்கும் அவர் என்னிடமிருந்து எந்த உதவியினையும் எதிர்பார்க்கவில்லை. ஆனால் ஒவ்வொரு ஆண்டும் சுற்றுலாவிற்கு சென்றுவரும் ஒருவரை மனதில் வைத்து (அவரது சகோதரர்) கூறினாரா என தெரியவில்லை.
-
வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
நாங்கள் மேலைத்தேச நாடுகளில் மத்தியதர வர்க்கம் ஆனால் இலங்கை போன்ற 3ஆம் உலக நாடுகளுக்கு சென்றால் உயர்தட்டு வர்க்கம், அங்கே விடுமுறைகாலத்தில் அங்கேயுள்ள மக்களால் பெறமுடியாத பொருள், சேவைகளை பெற்றுகொள்ளலாம், மேலும் வெளிநாட்டில் இருந்துவிட்டு இந்த மாதிரி 3ஆம் உலக நாடுகளில் குடியேறும்போது எமது பணத்தின் மூலம் பொருள்கள், சேவைகளை அதிகமாக பெற்று வசதியாக வாழலாம், இந்த சொந்த அனுபவம் ஒட்டு மொத்த இலங்கை மக்களின் நாளாந்த வாழ்வு பிரதிபலிக்குமா என்பது தெரியவில்லை.
-
The Kerala Story ஐ இப்பொழுது இணையத்தில் தமிழில் பார்க்க முடிகிறது
உண்மைதான் இது ஒரு மதத்திற்கெதிரான பிரச்சார படமாக காட்டப்பட்டிருந்தாலும் இந்த படத்தினை அனைவரும் பார்க்கவேண்டிய படமக உணர்கிறேன். ஆனால் இதனை ஒத்த இன்னொரு மதமும் கேரளாவிலும் அதனை அண்டிய தமிழ்நாட்டுப்பகுதியிலும் இதனை விட அதிகளவில் மதமாற்றம் செய்துவருகிறார்கள். விளங்கநினைப்பவன், புத்தன் இந்த திரைப்படம் தொடர்பான உங்கள் கருத்துகளையும் பதிவிடுங்கள்.
- குடியரசுக் கட்சி சார்பில் ஜனாதிபதி வேட்பாளர் தேர்தல்: தெற்கு கரோலினாவில் டிரம்ப் வெற்றி
-
சுந்தர் பிச்சை பதவி விலக நெருக்கடியா? கூகுள் நிறுவனத்தில் என்ன நடக்கிறது?
தற்போது வரை எந்த ஒரு செயற்கை நுண்ணறிவும் கூகிள் போன்ற இணைய தேடல் மூலம் தரவுகளை தாமாக சேகரிப்பதில்லை. இந்த செயற்கை நுண்ணறிவிற்கான தரவுகள் ஊட்டப்படுகிறது. பெரும்பாலும் இந்த தரவூட்டலில் பிழைகள் இல்லாவிட்டாலும் அது தெரிவு செய்யும் மாதிரிகள் மற்றும் அல்கோரிதங்கள் தவறாக இருப்பதாலும் இந்த பிரச்சினைகள் உருவாகிறது. தரவுகளுக்கான மாதிரிகளை curve fitting அடிப்படையில் தீர்மானிக்கின்றன இதில் பெரும்பாலும் over & under fitting, தவறுகள் ஏற்பட காரணமாகின்றன. மற்றது தரவுகளை பிரிப்பதிலும்(splitting data) தவறு ஏற்படலாம், ஆனாலும் இறுதியாக Training data, validate and test இல் இதன் குறைபாடுகலை கண்டுபிடிக்கமுடியும், இது நாளாந்த நடைமுறையில் பாவிக்கும் back test, optimization and forward test போன்ற நடைமுறையே, இந்த செயற்பாடு முழுமையாக பின்பற்ற படவில்லை என்பது தெளிவாகிறது, கூகிள் போன்ற மிக பெரிய கட்டுமானத்தினை கொண்ட ஒரு நிறுவனத்தின் செயற்கைநுண்ணறிவு இவ்வாறான குறைபாடுகளுடன் இருப்பது இந்த திட்டம் அவ்வளவு இலகு அல்ல என்பதை உணரகூடியதாக உள்ளது.
-
3ஆம் உலகப்போர் வெகு தொலைவில் இல்லை – ஜனாதிபதியானதும் புட்டின் எச்சரிக்கை!
நான் பணிபுரியும் நிறுவனத்தில் முன்பு ஒருவர் பணிபுரிந்திருந்தார், 2 ஆண்டுகளுக்கு முன் பெரும்பாலோனோருக்கு பணிநிறுத்தத்தின் போது அவர் தனது வேலையினை இழந்துவிட்டார், அவரது பெரை சுருக்கி எம் டி என அழைப்பார்கள். அவர் தொடபில் ஒரு நகைசுவை பணியிடத்தில் நிலவியது, நிறுவனத்தின் எம் டி அவர் பணிபுரிந்த பகுதிக்கு தொலைபேசி இணைப்பெடுத்து யார் கதைப்பது என வினவ, இவர் எம் டி என கூறினாராம், அதற்கு நிறுவனத்தின் எம் டி நான் தான் எம் டி என கூற இவர் எதிர் தரப்பில் உள்ளவர் தன்னை கலாய்ப்பதாக நினைத்து இல்லை நான் தான் எம் டி என கூறினாராம் என யாரோ விசமத்தனமாக கதையினை கிளப்பிவிட்டுள்ளார்கள் என கருதுகிறேன். உங்கள் பாணியிலான கருத்திற்கு நான் உட்பட பல இரசிகர்கள் உள்ளார்கள், உங்கள் பாணியினை மாற்றாதீர்கள்.
-
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
இந்த பகுதி தமிழர் உரிமை போராட்டத்தில் மிக முக்கிய திசை திருப்ப புள்ளியாக அமைந்துவிட்டது, ஒரு மோசமான நிகழ்வினை ஜே ஆர் தனக்கு சாதகமாக்கி கொண்டார் என்பதனை தெளிவாக காட்டுகிறது. ஜே ஆர் தொடர்பாக இந்த தமிழர் போராட்டத்திற்கு காரணமானவர்(UNP) என சிங்கள தரப்பால் குற்றம் சாட்டப்படுகின்றவேளை அவர் தனது சாதுரியத்தினால் தமிழர் போராட்டத்தினை நசுக்குவதற்கான புறக்காரணிகளை உருவாக்கிவிட்டிருந்தார். இவ்வாறான ஒரு தமிழரசியல்வாதி தமிழர் தரப்பில் இதுவரை இல்லை.
-
ரணிலுடன் இணைந்து கிரிக்கெட் போட்டியை கண்டுகளித்த சுமந்திரன்
முதலில் இந்த தமிழ் இணைய செய்தியே உண்மையா என்பதை சர்வதேச ஊடகம் மூலம் உறுதிப்படுத்தமுடியுமா? இலங்கை ஜனாதிபதியின் இருபுறமும் இருப்பவர்களின் மேல் சட்டை ஓரளவிற்கு ஒத்து போவது போல உள்ளது, இலங்கை ஜனாதிபதியின் பிரத்தியேக பாதுகாப்பு ஊழியர்களின் படத்தினை மாற்றி அமைத்திருக்கிறார்களா என சந்தேகம் வருகிறது.😁
-
சென்னையில் ஜாபர் சாதிக் வீட்டிற்கு சீல் - ரூ.2,000 கோடி போதைப்பொருள் கடத்தல் பற்றி அதிகாரிகள் கூறுவது என்ன?
இந்த சமகாலத்தில் ( பனிப்போர் காலம்) இந்த பிராந்தியம் தவிர தென் கிழக்காசியா, தென்னமெரிக்கா போன்ற நாடுகளிலும் இதே போன்ற சம்பவம் நிகழ்ந்தேறியது, ஆனால் அங்கு வேறு வேறு மதங்கள் இருந்தன அதற்காக குறித்த மதங்களை யாரும் குற்றம் சாட்டவில்லை, அதே போல் எந்த மதத்திலும் போதை பொருள் நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவிக்கவும் இல்லை. ஆனால் அனைத்து மதங்களிலும் பிற்போக்கான நடைமுறை இருந்துள்ளது, தற்போதும் இருக்கிறது, இந்த வட்டத்திற்குள் நின்று எந்த மதத்தினையும் குறை கூறுவது கண்ணாடி வீட்டிற்குள் இருந்து கல்லெறிவது போலாகும். ஒரு பெரும்பான்மையினத்தவர் சிவலிங்கத்தினை பற்றி கேவலமாக கூறினார் (அதனை சைவர்கள் உலகின் படைப்பாக கூறுவர் என நினைக்கிறேன்), அவரிடம் அதற்கான அறியும் ஆர்வம் இருக்கவில்லை, அவரது நோக்கம் கேவலப்படுத்துவதுதான், அவரவர் தாமாக ஒரு நிலைப்பாடாட்டினை எடுத்து அதற்கு கூறும் காரணங்களை அவர்கள் தம்முடனேயே பொருத்தி பார்க்க தவறுவதாலேயே இவ்வாறான கருத்துகள் ஏற்படுகின்றன, அவர்களுக்கும் அவர்கள் குற்றம் சாட்டபடுவர்களுக்கும் எந்தவித வேறுபாடும் இருக்காது என்பதை அறியாதவர்களாகவே இருக்கிறார்கள்.
-
சென்னையில் ஜாபர் சாதிக் வீட்டிற்கு சீல் - ரூ.2,000 கோடி போதைப்பொருள் கடத்தல் பற்றி அதிகாரிகள் கூறுவது என்ன?
அமெரிக்க உளவு நிறுவனம் தனது நடவடிக்கைகளுக்காக (ஆட்சி கவிழ்ப்பு, அரச எதிர்ப்பு போராட்டங்கள்) ஆசிய நாடுகளில் போதைபொருள் கடத்தலில் ஈடுபட்டது, அதன் தொடர்ச்சியாக ஆப்கானிஸ்தான் பாகிஸ்தானினூடாக தற்போதும் பெரியளவில் போதைபொருள் இந்தியா இலங்கை போன்ற நாடுக்ளுக்கு கடத்தப்பட்டு வருகிறது, இதற்கு ஏற்ற தொடர்பாடலில் ஒரு குறிப்பிட்ட சமூக மக்கள் காணப்படுவதால் இந்த நிலை காணப்படுகிறது. ஒரு குறிப்பிட்ட சிலரின் செயலுக்கு ஒட்டுமொத்த சமூகத்தினை எவ்வாறு குறை கூறமுடியும்?
-
சாந்தனின் உடலை இலங்கைக்குக் கொண்டு வர நடவடிக்கை!
- ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலையான சாந்தனின் மரணம் உறுதிப்படுத்தப்பட்டது!
அமரர் ராஜீவ் கொலையில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் தங்கியிருந்த வீட்டினை சுற்றி வளைந்த இந்திய தரப்பு அமரர் ராஜீவ் பிறந்த தினம் வரை பொறுத்திருந்து தாக்குதல் நடத்தியதாக கூறப்பட்டதாக நினவுள்ளது. இந்தியா எமக்கு உரிமைகள் பெற்றுத்தராது, அதற்கான புறச்சூழ்நிலையினை உருவாக்கக்கூடிய அரசியல் தலைமளும் எம்மிடம் இல்லை.- இந்தியா - ரஷ்யா கூட்டு முயற்சியுடன் மத்தள விமான நிலையத்தை நிர்வகிக்க இணக்கம்
- நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?
நான் கூறிய விடயம் சாதாரணமானது அது உங்களுக்கு சிரிப்பாக இருக்கிறது என கூறியது நீங்கள், தற்போது நீங்களே வந்து மரணவீட்டில் பண்பாடில்லாமல் நகைசுவை செய்கிறேன் என என் மேல் பழி போடுகிறீர்கள். கடவுள் இரண்டு மனிதர்களிடம் கேட்டாராம் உலகை சுற்றி பார்த்துவரும்படி முதலாமர் வந்து சொன்னாராம் உலகம் முழுவதும் அயோக்கியனாக உள்ளார்கள் என்று, இரண்டாமர் வந்து கூறினாராம் உலகம் முழுக்க நல்லவர்களாக உள்ளார்கள் என்று. இந்த கதையினை கூறுவதன் பொதுவான நோக்கம் நல்லவர்களுக்கு மற்றவர்களும் நல்லவர்கள் அது போல தீயவர்களுகும், ஆனால் அடிப்படையில் இதுவும் தவறு உள்ளதை உள்ளவாறு பாருங்கள். இரண்டு விஞ்சானிகள் ஒருவர் தனது தச்சனுடன் வாதிட்டார் எப்படி குட்டிப்பூனையும் தாய் பூனையும் கதவிலுள்ள பெரிய துவாரத்துனூடாக செல்லும் சிறிய பூனை சிறிய துவாரத்தினூடாகத்தான் செல்லும் என, மற்றவர் பணிப்பெண் கொடுத்த கடிகாரத்தினை கொதி தண்ணீரில் போட்டு விட்டு முட்டையினை பார்த்து கொண்டிருந்தார். இதனை சாதாரணமானவர் செய்தால் அதற்கு வேறு ஒரு வடிவம் கொடுக்கப்படும் ஆனால் அவ்வாறான செயல்கள் சில நேரங்களில் மற்றவர்களுக்கு முகம்சுளிப்பினை ஏற்படுத்தும், ஆடையில்லாமல் சென்ற அரசன் போல, அதிர்ஸ்டவசமாக அதனை மன்னனுக்கு உணர்த்த சிறு குழந்தையாவது இருந்திருக்கின்றது. நன்றி வணக்கம்- நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?
இந்த தீர்வுதிட்டத்தினை யார் வேணுமென்றாலும் தயாரிக்கலாம் ஒருவர் இல்லாவிட்டால் இன்னொருவர், நீலன் தயாரிக்காவிட்டால் வேறு ஒருவர் தயாரித்திருப்பார். ஏற்கனவே தீர்வுதிட்டம் தயாரித்துவிட்டாகிவிட்டது அதன் பின் கொல்வதால் என்ன இலாபம், அத்துடன் அப்படி ஒருவருக்காக பல போராளிகளின் உயிரினை பணயம் வைக்குமளவிற்கு என்ன இலாபம் (நீலன் திறமையான துறைசார் நிபுணர் அவரை எந்த விதத்திலும் தரக்குறைவாக கூறவில்லை). இதற்கு வேறு ஏதாவது காரணம் இருக்குமா? என்பதுதான் எனது சந்தேகம், ஜஸ்ரின் உங்களுக்கு சிரிப்பூட்டியதில் எனக்கு சந்தோசம், வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டு போகும்.- நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?
நன்றி கபிதான். தீர்வு பொதிக்கு மரண தண்டனை புலிகள் வழங்கினார்களா என்பதில் எனக்கும் சந்தேகம் உண்டு, அந்த காலகட்டத்தில் சில அரசியல் படுகொலைகளை புலிகளின் மேல் சுமத்தினதாக கூறப்படுகிறது உதாரணமாக முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் அத்துலத் முதலியின் படுகொலையில் குற்றம் சாட்டப்பட்ட நபர் படுகாயமடைந்த நிலையில் சிலநூறு மீற்றர் தொலைவில் அவர் சடலம் கைப்பற்றப்பட்டதாக இலங்கை தரப்பு தெரிவித்திருந்தது அதன் விசாரனையில் உதவிய ஸ்கொட்லன்ட் யார்ட் பொலிஸ் அதனை படுகாயமடைந்த நபர் அவ்வளவு தூரம் ஓட முடியாது என கூறியதாக நினைவுள்ளது (லலித் அத்துலத்முதலியின் கொலையா என சரியாக நினைவில்லை). இங்கு சிட்னியில் நாகு என்பவர் உள்ளார் இவர் வல்வெட்டித்துறையினை சேர்ந்தவர் இவர் சிட்னி முருகன் கோயிலில் வேட்டியினை மடித்துக்கட்டி கொண்டு இரட்டை அர்த்த பேசும் காவாலி சிட்னி முருகன் பக்தர்களில் ஒருவர், துவாரகா திரியில் முன்னாள் கடற்புலி போராளி ஒருவர் குறிப்பிடும் தலைவரின் மெய்ப்பாதுகாவலர் தலைவரை கொல்ல முயன்ற சம்பவம் பற்றி குறிப்பிட்டுள்ளார், அந்த சம்பவத்தின் ஒரு கருவியாக இந்த நபர் இருந்ததாக புலிகளின் புலனாய்வு தலைவர் பொட்டம்மான் கூறியதாக கேள்விப்பட்டேன். இந்த நபர் கடத்தல் தொழில் ஈடுபட்டவர், இந்தியாவில் பெரும்பாலும் தங்கியிருந்த காலத்தில் புலிகளின் உயர்மட்டத்தில் தொடர்பில் இருந்துள்ளார் நாடு திரும்பிய குறித்த நபர் அந்த போராளி (முன்னாள் யாழ் மாவட்டதளபது குமரப்பாவின் உறவினர்) திட்டமிட்டு தகாத உறவில் ஈடுபடுத்தி அதனை புகைப்படம் எடுத்து அதனை வைத்து மிரட்டி தலைவரை கொல்ல முயற்சித்தாக கூறப்படுகிறது, அந்த காலத்தில் புலிகளின் உறுப்பினர்கள் நிதி மோசடி, தகாத உறவு என்பவற்றிற்காக மரண தண்டனை வழங்கப்பட்டிருந்தாக கேள்விப்பட்டிருந்தேன். இந்த விசாரைணை நடைபெறும் போது பொது மக்களும் விசாரித்த போராளிகளும் பொதுமகனா இருந்தாலும் இவர் செய்த குற்றம் தீவிரம் என்பதால் அவருக்கு மரண தண்டனை கிடைக்கும் என கருதினார்கள், அதே நேரம் அவ்வாறு அவருக்கு மரண தண்டனை கிடைக்க கூடாது என மனதார அனைவரும் விரும்பினார்கள் அதற்கு காரணம் அந்த நேரம் அவரக்கு ஒரு கைக்குழந்தை இருந்தது. அதிசயமாக அவருக்கு தண்டனை கிடைக்கவில்லை, இந்த சம்பவத்தினை எழுதுவதற்கு விருப்பம் இல்லை, ஆனால் உண்மைகளை உணர இது போன்ற தகவல் உதவியாக இருக்கலாம்.- நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?
https://www.quaker.org.uk/ இணையத்தில் குவேக்கர் என தேடிய போது இந்த வலைப்பகுதி வந்தது, இவர்களா எனத்தெரியவில்லை.- நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?
முன்பு ஒரு தடவை சிஙகள விவசாய அமைச்சர் ஒருவர் கிளிநொச்சிக்கு வந்த போது ஒருவர் மைச்சரை கவர்வதற்காக ஒரு ஆர்வக்கோளாறில் அமைச்சருக்கு வெங்காயத்தில் மாலை செய்து போட்டாராம் அமைச்சர் அதனை மறக்காமல் தான் பேசும் போது ஆர்வக்கோளாறில் தமிழில் வெங்காயம் போட்ட நபரை குறிப்பிடுவதாக எண்ணி "வெங்காயங் போட்ட மாலை" என தனக்கு தெரியாத மொழியினை கேட்டு பிழையாக கூற மக்கள் சிரித்தார்களாம், வெங்காயம் மாலை போட்டவருக்கு அவமானமாகிவிட்டது. இப்ப எனது நிலை வெங்காய மாலை போட்டவரின் நிலை. இங்கிலாந்தில் உள்ள குவேக்கர்ஸ் எனும் அமைப்பின் உதவியினுடனான திட்டம் அது, அது உண்மை என அப்போது அவர்களும் உறுதி அழித்ததாக நினைவில் உள்ளது.- நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?
நன்றி ஐலன்ட், இப்படித்தான் கடந்தகால அழிவுகளை தொடர்ந்தும் எமது மக்களுக்கு நினைவூட்டி அவர்களை விழிப்பில் வைத்திருக்கவேண்டும்.- நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?
ஒரு ஊரில் முதல் தடவையாக மக்கள் மனம் கவர்ந்த ஒரு அரசியல் வாதி தேர்தலில் போட்டியிடடார், மக்களுக்கு அவர் ஒளியமயமான எதிர்காலத்தினை தனது வாக்குறுதியாக வழங்கினார், மக்கள் தேர்தலில் அவருக்கு போட்டி போட்டுக்கொண்டு வாக்களித்தனர், அந்த அரசியல்வாதி அதிக பெரும்பான்மையுடன் தேர்தலில் வெற்றி பெற்றார். மக்கள் தமது ஒளி மயமான எதிர்கால கனவுடன் காத்திருந்தனர், நாட்கள் மாதங்களானது எந்த ஏற்படவில்லை பொறுமையிழந்த மக்கள் அரசியல்வாதியிடம் முறையிட சென்றனர், மக்களை பார்த்து சிரித்துக்கொண்டு அனைத்து சவுகரியங்களுடன் கொண்டிருந்த அரசியல்வாதி சொன்னார் உங்கள் ஒளிமயமான வாழ்க்கைக்கு நீங்கள் கடுமையாக உழைக்க வேண்டும். மக்களுக்கு உண்மை புரிந்தது, தாம் ஏமாற்றப்பட்டு விடடோம் என ஆனால் யதார்த்தத்தினை புரிந்து கொண்டார்கள். வாய்ப்புகளும் வசதிகளும் உங்கள் காலடியில் வந்து விழும், கடந்த காலத்தில் கூட பல தீர்வு திட்ட்ங்கள் தானாக வந்தது, எதிர்காலத்திலும் அவ்வாறு நிகழும் நம்புங்கள் மக்களே. அதற்கு நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் எதுவும் இல்லை. சிங்கள அரசினை முழுமையாக நம்புங்கள் அவர்கள் சரியான தீர்வினை தருவார்கள். அது எவ்வாறென்றால் திரோபதை சபையில் தனக்கு நிகழ இருந்த அவமானத்தினை தடுக்க அந்த அவையில் இருந்த தனக்கு வேண்டப்படடவர்கள், வேண்டப்படாதவர்கள் என எல்லோரையும் கேட்டு முடியாமல் கடைசியாக கண்ணனிடமும் வேண்டியும் எதுவும் நிகழவில்லை. இறுதியாக தனது கைகளை ஆடையில் இருந்து விட்டு இரு கரங்களையும் வானை நோக்கி உயர்த்தி (முழு சரணாகதி) கேட்டு நிகழ இருந்த அசம்பாவிதத்தில் இருந்து தப்பிக்க கொண்டார். இந்த சரணாகதி அரசியல் மூலம் இதுவரை எந்த மக்களும் உரிமைகள் பெற்றதாக நான் அறியவிலலை, ஆனால் முதல் தடவையாக இலங்கை மண்ணில் நிகழ உள்ளது, இதில் கண்ணனாகவும் துச்சாதனகவும் இருப்பது சிங்கள இனவாத அரசு, இந்த புதிய வகை போராடடத்தினை உலகிற்கு அறிமுகப்படுத்திய தமிழ் அரசியல்வாதிகளுக்கும் தமிழ் கல்விமான்களுக்கும் எமது மக்கள் நன்றி கடன்பட்டவர்கள். இது கத்தியின்றி இரத்தம் சிந்தா புதிய புரட்சி, இதற்கு உரிய கால அவகாசத்தினை மக்கள் பொறுமையுடன் வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். புதிய சரித்திரம் படைப்போம்.- நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?
இணையத்திலிருந்து ஆதாரம் எதுவும் இணைக்கவில்லை, ஆனால் வேறு உறவுகள் இணைத்துள்ளார்கள், நீங்கள் குழம்பிவிட்டீர்கள் என கருதுகிறேன். எனது கல்வித்தரத்தினை குறிப்பிட விரும்பாத கல்வி தரத்தினை கொண்ட என்னை ஒரு கட்சியின் மதிப்பிற்குரிய தலைவருடன் ஒப்பிட்டு யாழ் களத்தினை சிக்கலில் மாட்டி விடாதீர்கள். சாதாரண சம்பாசனைகளை கடந்து சாதாரணமாக கடந்து விட்டால் எந்த பிரச்சினையும் இருக்காது.- நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?
ஏற்கனவே குறிப்பிட்டுள்ளேன் எனது உறவினர்களின் அனுபவத்தினையே இங்கு கருத்தாக பதிவிட்டுள்ளேன் என. இல்லை ஒரே குடும்ப உறுபினர்களுக்குள் மாற்றமுடியாது. எனவே கேள்விப்பட்டேன் அதனாலேயே பல சம்பவங்கள் நிகழ்ந்தேறியிருந்தது. - ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலையான சாந்தனின் மரணம் உறுதிப்படுத்தப்பட்டது!
Important Information
By using this site, you agree to our Terms of Use.