Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலவர்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by புலவர்

  1. சம்பந்தரின் ஆவியாய் இருக்குமோ?
  2. எல்லாப்பக்கத்தாலும் பெட்டி வாங்குகிறார். அவருக்கே விளங்கியிட்டுது. இது கதனது கடைசி எம்பி பதவி என்று. அதுதான் சுற்றிச்சுழன்று பெட்டி வாங்குகிறார்.
  3. இவருக்கு வாக்குப்போடச்சொன்ன கூட்டமைப்பையும் வாக்குப் போட்ட தமிழ்மக்களையும் நினைத்தால் சிரிப்பாக இருக்கிறது. இந்தமுறையும் ஒரு சிங்கள வேட்பாளருக்கே வாக்களிக்க வேண்டும் என்று அடம்பிடிக்கும் சில யாழ்கள உறவுகளை நினைத்தால் பாவமாக இருக்கிறது.
  4. ரணீலுக்கு வாக்களிக்க வேண்டும் என்று சொல்லாமல் சொல்கிறீர்கள்.ஆனால் அவருக்கு ஆதவளிப்பவர்களில் பெரும்பாலானோர் கடும் இனவாதம் கொண்ட பெரமுனகட்சியின் அமைப்பாளர்கள்.அவர்களுக்கு நாமலை முன்னிறுத்துவது ஒவ்வாமை மட்டுமல்ல. ரணிலே தங்களை சிங்கள அரகலய போராட்டத்தில் இருந்து காப்பற்றக் கூடியவர் என்று நினைக்கிறார்கள. ரணிலோ 5 தடைவைகளுக்கு மேல் பிதமராக இருந்தவரும் தற்போதைய ஜனாதிபதி அதிகாரத்தை கையில் வைத்திருந்தும் தமிழர்களிற்கு ஒரு துரும்பையும் கிள்ளிப் போடவில்லை. அவருக்குத் தெரியும் மற்றைய வேட்பாளர்களை விட தான் ஒரு அமைதியான முகத்தைக்காட்டி நடிப்பதை தமிழர்கள் உண்மை என்று ஏற்றுக் கொண்டு தனக்கு வாக்களிப்பார்கள் என்று கணக்குப் போடுகிறார். பூனையின் அமைதியான சுபாவத்தைக்கண்டு விபரம் அறியாத எலிக்குஞ்சொன்று அதனோடு நட்புப் கொள்ள நினைத்த சோமசுந்தரப்புலவரின் கவிதை நாடகம்தான் நினவுக்கு வருகின்றது.
  5. சரி பொது வேட்பாளரை நிறுத்துவதில் பயன் இல்லை. எந்த சிங்கள வேட்பாளருக்கு தமிழ்மக்கள் வாக்களித்தால் தமிழர்களுக்கு பயன் உள்ளதாக இருக்கும்.தமிழ்ப் பொது வேட்பாளரால் எந்தப்பயனும் இல்லை என்று தெரிந்து கொண்ட உங்களுக்கு எந்தச சிங்கள வேட்பாளரைத் தமிழர்கள் தெரிவு செய்ய வேண்டும் என்பதிலும் தெளிவான நிலைப்பாடு இருக்க வேண்டும்.
  6. 2வுது 3வது தெpரிவைச் செய்யக்கூடாது என்று ஏன் இவர்களால் சொல்ல முடியவில்லை. மறைமுகமாக யாரோ ஒரு சிங்கள வேட்பாளரை வெற்றியடையச் செய்யும் முயற்சியா இது என்ற கேள்வி எழுகின்றது. ஆனால் தமிழ்மக்கள் புத்திசாலித்தனமாக வாக்களித்து இவர்களின் கபடத்தனத்திற்கு நெற்றியடி கொடுக்க வேண்டும்.
  7. இதுவரையில் சிங்கள வேட்பாளர்களுக்கு தமிழ்மக்கள் தங்கள் வாக்குகளைச் செலுத்யதற்காக சர்வதேசம் எந்தவகையில் உதவிசெய்திருக்கிறது? அவ்வாறு நடந்தாலும் தமிழர் கள் மேலதிகமாமாக என்ன நட்டம் வரப் போகிறது/ பரீட்சித்துப்பார்பதில் என்ன தவறு இருக்கப் போகிறது?சிறிலங்காவில் தமிழர்களின் வாக்குகள் இல்லாமல் தனிச்சிங்களமக்களினாலேயே ஜனாதிபதித் தேர்தலில் வெல்ல முடியும் என்பதற்கு பல முன்னுதாரணங்கள் இருக்கின்றன. தமிழர்கள் ஒன்று திரண்டு ஒரு சிங்கள வேட்பாளருக்கு வாக்களித்தும் ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியடைந்த வரலாறுகள் பல இருக்கின்றன.தமிழ்மக்கள் அதிக அளவு வாகக்களித்து தெரிவு செய்த சந்திரிகாவும் மைத்திரியும தமிழர்களுக்கு செய்த நன்மைகள் என்னவென்று பட்டியலிட முடியுமா?யார் வரக்கூடாது என்று மைத்திரிக்கு வாக்களித்தார்களோ அவரைப் பிரதமராக்கியவர் மைத்திரி.யார் வேண்டாமென்று சிங்களமக்களால் விரட்டியடிக்கப்பட்ட ராஜபக்சேக்களுடன் சேர்ந்து குறுக்கு வழியில் ஜனாதிபதியானவர் ரணில். தமிழர்களின் குறைந்த பட்ச கோரிக்கைகளை ஏறெடுத்தும் பார்க்காத சிங்க ளவேட்பாளர்கள்தான் களத்தில் நிற்கிறார்கள்.இவர்களில் யாரோ ஒருவர் ஜனாதிபதியாக வரப்போகிறார். இவர்களை நம்புவதை விட ஒரு பரிசோதனை செய்வதில் என்ன கேடுவரப் போகிறது.ஆனால் இந்தப் பொது வேட்பாளர் விடயத்தில் கரிசனையாகவுள்ள அரசியல்கட்சிகளும் பத்தி எழுத்தாளர்களும் இந்தியாவின் நலனை முன்னிறுத்துபவர்கள். அவர்களால் 13 மேலே போக முடியாது தவறானவர்களால் ஒரு சரியான விடயம் முன்வைக்கப்படும் பொழுது அதனைச் சாதகமாகப் பயன்படுத்தாமல் விடுவது தமிழர்களுக்குத்தான் இழப்பாகும்.
  8. பல கட்சிகள் ஒன்று சேர்ந்து பொது வேட்பாளரை நிறுத்தியிருக்கிறார்கள். இவ்வளவு காலமும் சிங்கள வேட்பாளர்களுக்கு வாக்களித்து என்ன பயனை தமிழர்கள் பெற்றுக் கொண்டார்கள். அவர்களுக்கு போடும் வாக்கு வீணான வாக்குகள்தானே . இந்த முறை தமிழ்ப் பொது வேட்பாளருக்குப் போடுவதால் புதியதாக நாம் எதனையும் இழந்து விடப்போவதில்லை. ஆனால் தமிழ்மக்கள் ஒரு வாக்கை மட்டும்.பொது வேட்பாளர்களுக்கு அளிக்க வேண்டும். 2வது 3வது தெரிவைச் செய்வது பொது வேட்பாளர் நிறுத்தியதற்கு அர்த்தமில்லாமல் செய்து விடும். இதுபற்றி இன்னும் இந்த பொதுவேட்பாளரை நிறுத்திய குழுவினர் இது தொடர்பாக கள்ள மெளனம் சாதிப்பது நல்லதல்ல.
  9. இனிக் கொஞ்சம் தமிழ் அரசியல்வாதிகளும் அவர்களின் சொம்புகளும் ரணிலுக்கு வாக்கு பெடாவிட்டால் நாமல் வந்து விடுவார். ஆகவே ரணிலுக்கு வாக்குப் போடுங்கள் என்று கிளம்புவார்கள்.
  10. https://seithy.com/breifNews.php?newsID=321063&category=TamilNews&language=tamil2வது விருப்பு வாக்கை ரணிலுக்கு போடலாம் என்று சொன்னதாக கேள்வி. அதை விட ரணிலின் விருப்பமான தேர்தலைப்ப் பின் போடுவதற்கு ஆதரவளித்ததுதும் உண்மை.ரணில் செய்வது எல்லாம் சரி என்றால் பிறகு எதற்கு பொது வேட்பாளர். பொதுவேட்பாளரை நிறுத்தினால் 2வது 3 வது வாக்கினை பயன்படுத்ததாதீர்கள். அது பொது வேட்பாளரை நிறுத்தும் நோக்கத்திற்கு முரணானது என் இவர்களால் சொல்ல முடியவில்லை.?
  11. சுமத்திரனும் சாணக்கியனும் ரணிலை ஆதரிக்கும் நிலையில் தமிழ்ப் பொதுவேட்பாளரை தமிழ்ர்கள் பரீட்சித்துப்பார்பதில்தவறில்லை. ஆனால் இந்தப் பொதுவேட்பாளர் தெரிவில் ஈடுபட்டிருக்கும் கட்சியினரும் பத்தி எழுத்தாளர்களும் இந்திய நலனை முன்னிறுத்துபவர்கள்.அவர்களின் ஆகக் கூடிய கோரிக்கை 13 ஆம்திருத்தச்சட்டமாகத்தான் இருக்க முடியும்.தேர்தல் விஞ்ஞாபனத்தில் சமஸ்டியை முன்வைத்து ஒரு வாக்கை மட்டும் தமிழ்மக்கள் பொதுவேட்பாளருக்கு அளிக்க வேண்டும் என்று இந்தக் கட்டமைப்பு தமிழ்மக்களைக் கோருமா?விக்கியர் இப்போழுதே 2வது வாக்கை ரணிலுக்கு போடுமாறு சொல்லியுள்ளது குறிப்பிடத்தக்கது. 2வது 3வதுவாக்கைப் பொது வேட்பாளரை நிறுத்துவதில் அர்த்தமில்லை.அதை விட ஜனாதிபதித் தேர்தலைப்பகிஸகரிக்கலாம்.தமிழ்மக்கள் பொதுவேட்பாளருக்கு வாக்களித்தமையால் முதல்சுற்றில் ஜனாதிபதி தெரிவு செய்யப்படாவிட்டால் அது பேசு பொருளாகும்.இந்தக்கட்டமைப்புக்குள் சுமத்திரன் அணியைப்புறந்தள்ளி தமிழருசுக்கட்சியைைும் தமிழ்தேசிய முன்னனியையும கொண்டுவரவேண்டும். தமீத்தேசிய முன்னனியின் தலைவர் சுகவீனமற்று தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கி இருக்கும் நிலையில் அவர்கள் தேர்தலைப் புறக்கணிக்கும் நிலையில் இருந்து மாறுவார்களா என்பது சந்தேகமானது.
  12. முதலில் சுமத்திரன் மட்டும் ரணிலுடன் பேச்சுவார்தை நடத்தியது சரியா?தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் உறுப்பினர்களிடம் கலந்துரையாடவிட்டாலும் பரவாயில்லை தமிழரசுக்கட்சியுடனாவது இதுபற்றிக் கலந்துரையாடினாரா?தனியே அவர் மட்டும் போய்பேச்சு வார்த்தை நடத்த யார் அதிகாரம் கொடுத்தது. அல்லது மற்றவர்களைக் கழட்டிவிட்டு தான் தனியே போய் சந்தித்த மர்மம் என்ன?தனியாகப் பெட்டி வாங்கி விட்டாரா?ரணில்எழுத்து மூலம் உறுதி அளித்தாரா?ரணில் 1983 இல் இருந்து அரசியலில் இருக்கிறார் ஆறுமுறை பிரதமர் பதவியில் இருந்தார் ஒரு முறை ஜனாதிபதியாக இருந்திருக்கிறார் அப்பொழுதெல்லாம் கொடுக்காத 13{ இன்னுமா கொடுக்கப் போகிறார்.முந்தி என்றால் ரணிலுக்கு வாக்களிக்காவிட்டால் ராஜபக்சேக்கள் வந்து விடுவார்கள் என்று பிரச்சாரம் செய்யலாம். இப்பொழுது ராஜபக்சேக்களின் தயவில் ஜனாதிபதியாகி சிங்கள மக்களாலேயே விரட்டப்பட்ட ராஜபக்சேக்களைக் காப்பாற்றிய ரணில் தமிழரகளுக்குத் தீர்வு தருவார் என்று தமிழர்கள் ஒருபோதும் நம்ப மாட்டார்கள்.அறிவிக்கப்பட்ட உள்ளுராட்சித் தேர்தலையே நடத்தாத குள்ள நரி ரணில். சிங்களமக்களால் தேர்தலில் தோற்கடிக்கப்பட்டு சிங்கள மக்களை ஏமாற்றி பின்கதவு வழியால் ஜனாதிபதி ஆகிய ரணில் தமிழ்மக்களுக்கு நல்லது செய்வார் என்பது முழுமுட்டான்த்தனம்.
  13. முஸலிம்கள் எங்கள் போராட்டத்திற்கு எதிராக நின்றார்கள் என்ற காரனத்திற்காக இஸ்ரேல் பாலஸ்தீனியர்கள் மீது செய்யும் கொடுரமான தாக்குதல்களை நியாயப்படுத்த முடியாது.அப்படிப்பார்த்தால் எமது போராட்டத்திற்கெதிராக முஸ்லிம்நாடுகளை விட இஸ்ரேல் >அமெரிக்கா>இந்தியா உக்ரைன்உட்பட போன்ற நாடுகள் நேரடியாகவே பங்களித்தார்கள். எமது விடுதலை இயக்கத்திற்கு எதிரான தடைகளைப் போட்டு மேற்குலகமும் ஆதரவைக் கொடுத்தது.பாலஸ்தீனியர்களுக்கு அவர்களது மண்ணில் உரிமையுடன் வாழ மறுப்பது அநீதி.
  14. https://www.bbc.co.uk/sport/olympics/paris-2024/medalsரஸ்யா இல்லாததுதான் மற்றவர்களுக்கு கொண்டாட்டம்
  15. எவ்வளவு கஸ்ரப்பட்டு கடன்பட்டு குடும்பத்தை கரைசேர்க்க வேண்டும் என்ற கனவுடன் இருந்திருப்பார்.இவர் பணத்தோடு போகிறார் என்று தெரிந்தவ்கள்தான் இந்தக் கொடுமையைச் செய்திருக்கிறார்கள்..இவர்களைக் கடவுள்தான் தண்டிக்க வேண்டும்
  16. ரணில் ஒரு குள்ள நரி என்பதை மீண்டும் காட்டி விட்டார். கட்சி சின்னத்தில் இல்லாதுசுயேச்சையாக புதிய சின்னத்தில் நிற்பது சஜித்தின் கட்சியில் இருப்பவர்களையும் மகிந்தவின் கட்சியில் உள்ளவர்களையும் தான் ஐதேகட்சியின் வேட்பாளர் இலலை பொது வேட்பாளர் என்று மாயையக் காட்டி அவர்களை இழுக்கப் பார்க்கிறார்.என்னைப் பொறுத்தவரையில் ரணில் ஸனாதிபதியாவதை விரும்பவில்i. உடனே ராஜபக்சேக்களுக்கு கருத்து எழுதுவதாக நினைக்கக் கூடாது.மகிந்த தரப்பு ஜனாதிபதியானால் கோத்தாவின் காம் போல மீண்டும் ஒரு அரகல வரும்.மேற்குலகம் அதனை சில தந்திரங்களைக் கையாண்டு ஊக்கவிக்கும்.ஏனெ;னறால் மகிந்த தரப்பு நேரடியாக சீனாவை ஆதரிக்கும். ஆனால் ரணில் சீனாவை எதிர்க்கமாட்டார் ஆனார் எதிர்பது போல பாவனை காட்டி மேற்குலகை ஏமாற்றுவார். சிங்களவர்களுக்கு பரும்பும்>பாணும்>மின்சாரமும்>எண்ணெையும் கொடுத்தால் அவர்கள் பேசாமல் இருப்பார்கள்.தமிழர்களுக்கு ஒரு மண்ணும் கிடைக்காது. தமிழர்கள் அனைத்து கட்சிகளும் ஒருமித்து பொது வேட்பாளருக்கு ஒரு வாக்கை மட்டும் போடவேண்டும். அன்றேல் ஒட்டுமொத்தமாகப் புறக்கணிக்க வேண்டும்.ரணிலை இந்தத் தேர்தலோடு வீட்டுக்கு அனுப்ப வேண்டும். ஆனால் அந்தக் குள்ள நரிதேர்தலில் தோற்றும் ஜனாதிபதியான குள்ளநரி.
  17. உண்மையில் பிரான்சில் நடக்கும் அதிபர் தெரிவுதான் மிகச்சரியான ஜனநாயகத்தை வெளிப்படுத்துகிறது.சிறிலங்கா ஜனாதிபதித் தெரிவில் செலவைக்குறைக்கும் முகமாக இப்படி விதிகளை அமைத்தார்கள் என்று நினைக்கிறேன்.
  18. எப்படித் திரண்டாலும் தமிழர் ஒருவர் சிறிலங்காவின் ஜனாதிபதியாக வர முடியாது. ஆனால் தமிழர்கள் இதனை தங்களின் சுயநிர்ணய உரிமைக்கான வாக்கெடுப்பாகப் பயன்படுத்தலாம். அதற்கு தமிழரசுக்கட்சியும் தமித்தேசிய முண்ணனியும் பொது வேட்பாளரரை ஆதரிக்க வேண்டும். இங்கே சிக்கல் என்ன டவென்றால் பொது வேட்பாளரை நிநறுத்துவதற்கு ஒப்பந்தம் போட்டிருக்கும் கட்சிகளும் அரசியல் விமர்சகர்களும் இந்திய நலனை முன்னிறுத்துபவர்கள். அவர்கள்13 மேல் எதனையும் கேட்க மாட்டார்கள். அவர்கள் உண்மையிலேயே வெளித்தூண்டல்கள் இன்றி பொது வேட்பாளரை நிறுத்தினால் வரவேற்கலாம். சுமத்திரன் பொது வேட்பாளரைப் புறக்கணிப்பதாக ஏற்கனவே அறிவித்து விட்டார். மாவையும் சிறிதரனும் வழமை போல் மதில மேல் பூனையாக இருக்கிறார்கள். கஜேந்திரகுமார் சுகவீனம் காரணமாக நடப்பு அரசியலில் நேரடியாக இல்லை. அதனால் முன்னனி எப்போதும் போல புறக்கணிப்பு நிலைப்பாட்டில் உள்ளது.
  19. அதன் இணைப்பை முடிந்தால் இணைக்கவும். தமிழ்பொதுவேட்பாளரை நிறுத்திற ஆட்கள் ஒரு வாக்கை மட்டும் செலுத்த வலியுறுத்த வேண்டும் இல்யைேல் பேசாமல் இருக்கலாம்.
  20. ரணில் மகிந்தவின் மொட்டுக்கட்சியில் இருந்து எத்தனை எம்பிக்களை இழுத்தெடுத்தாலும் ராஜபக்டீசக்களின் ஆதரவு இல்லாமல் ஒண்ணும் புடுங்க முடியாது. சிங்களவர்களைப் பொறுத்தவரையில் மகிந்த நவீன துட்டகைமுணு. பார்க்கிறவரகளின் புலன் வேறு எங்கும் போகமால் திசை திருப்புவதற்காகக்தான் பெண்கள் நகைகளை அணிகிறார்கள் என்பது சரிதான் .
  21. வடிவாய்ப் பாருங்கள் சிறி காப்பு மட்டுமா தெரியுது?முக்கியமான தடயம் இருக்கு வடிவாயப்பாருங்கோ.
  22. அது மகிந்தவின்ர மனிசிதான். கிளியராய் தெரியுதே. அது மகிந்தவின்ர மனிசிதான். கிளியராய் தெரியுதே. அட நான் பாதிப்படம் பார்த்து ஊகித்து எழுதிவிட்டு பார்த்தால் குமாரசாமியர் முழுப்பட்ததையும் போட்டுவிட்டார்.
  23. கமலம் என்றால் தாமரை என்பது. தமிழ்தானே வேர்ச்சொல் சமஸ்கிருதம் வேர்ச்சொல் என்று போட்டிருக்கிறார்கள்.
  24. பொது வேட்பாளர் விடயத்தில் 2 முக்கிய தமிழ்க்கட்சிகள் கைச்சாத்திடவில்லை..ருகட்சிகளையும் இணைத்து இதனைச் செயல்படுத்தாவிட்டால் இந்தப் பொதுவேட்பாளர் விடயம் பிசுபிசுத்துப் போய்விடும்.மாவையும் சிறிதரனும் பொது வேட்பாளரை நிறுத்துவதற்கு ஆதரவான நிலைப்பாட்டில் இருந்தவர்கள். ஆனால் சுமத்திரன் அதற்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்தார்.தமிழரசுக்கட்சிக்குள் தீரமானங்களை எடுப்பதில் இன்னமும் சுமத்திரனின்கையே ஓங்கி நிற்கிறது.பொது வேட்பாளரை நிறுத்துவதற்கான ஒப்பந்தத்தில் கைஎழுத்திட்ட அரசியல்வாதிகளும் பத்தி எழுத்தாளர்களும் முழுக்க முழுக்க இந்தியாவின் நலனைப் பேணுபவர்கள். அவர்களால் 13 இற்கு மேல்போக முடியாது.அடுத்து பொது வேட்பாளரை நிறுத்தினால் ஒரு வாக்கை மட்டும் பொது வேட்பாளருக்கு அளிக்க வேண்டும். 2வது 3வது வாக்குகளை அளிப்பது பொதுவேட்பாளரை நிறுத்துவதை அர்த்தமற்றதாக்கிவிடும். இதுபற்றி தெளிவுபடுத்தப்படவில்லை.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.