Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலவர்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by புலவர்

  1. எப்படி? தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் இடையே நடந்த போரை நிறுத்தினமாதிரியா? நல்ல விசயம் 1 இலட்சம் துருப்புக்களை அனுப்பி வையுங்கள்.
  2. மாவை இப்போது தமிழரசுக்கட்சித் தலைவராக இருக்கிறார். அதனால்தான் அவர் எம்பியாக இல்லாத பொதும் ரணில் அவர் வீட்டுக்கு வந்து பார்த்தார். மாவைக்கு இதுதான் கடைசி பதவி மட:டுமல்ல பெட்டி வாங்குவதற்கு இந்த ஜனாதிபதித் தேர்தலை விட்டால் வேறு சந்தர்பஙகள் வெகு அரிது. அடுத்த தேர்தல்வரை அவர் உடல்நிலை ஒத்துழைக்காது. அடுத்த தேர்தலில் மகனையும் சம்பந்தியைுயும் பாராளுமன்றத் தேர்தலில் களமிறக்குவார். அதற்கிடையில் மாகாண சபை தெர்தல் வந்தால் முதலமச்சர் வேட்பாளராக களம் இறங்குவார்.
  3. மாமனும் மருமகளும் ரணிலுக்கும் மாமியும் மருமகனும் சஜித்துக்கு எந்தக்கட்சி சொல்லுங்க பாப்பம்?
  4. சசிகலா ரணிலுக்கு ஆதரவு கொடுக்க .இளைஞரணி மாவையின் மகன் சஜித்துக்கு ஆதரவு குடுக்க சரவணபவன் அனுராவுக்கு ஆதரவு குடுக்க இப்படிப்பட்டியல் நீள்கிறது.
  5. 13 ஆவது திருத்தம் இனப்பிரச்சினைக்கான தீர்வல்ல என்று சுறுவதற்கு என்ன தயக்கம்?பொதுக்கட்டமைப்பின் தேர்தல் அறிக்கை தொடர்பாக பத்திரிகையாளர் நிக்சன் எழுப்பிய கேள்விகளுக்கு ஒரு தெளிவற்ற பதிலாக இந்தக்கட்டுரை எழுதப்பட்டிருக்கிறது.
  6. https://www.facebook.com/tamilland.kalvi.5 திடீரென மாவை சேனாதிராஜாவை சந்தித்த ரணில் https://jvpnews.com/
  7. நாமல் சொல்வது உண்மைதான் எந்த சிங்கள ஜனாதிபதியும் தமிழர்களின் பிரச்சினைகளைத் தீரக்க மாட்டார்கள். நாமல் சிங்கள மக்களை ம்டும் நம்பி தேர்தலில் நிற்கிறார். இந்த முறை படு தோல்வி அடைவார். ஆகால் நாமலுக்கு சிறப்பான எதிர்காலம் உண்டு.
  8. ரணில்தான் மீட்பர் என்று சுமத்திரன் பலகாலமாக ஏமாற்றி வந்தார். இப்பொழுது ரணிலிடம் பெட்டி வாங்கிக் கொண்டு ரணிலுக்கு எதிராகப் பேசுகிறார். உண்மையில் சுமத்திரன் தான் ஒரு பொய்யர் என்பதை நிரூபித்திருக்கிறார்.தமிழ்மக்களைத் தொடர்ந்து ஏமாற்றி வருகிறார்.
  9. புள்ளடி போடுவதாயின் ஒரு புள்ளடி மட்டும்தான் போட முடியும் உன்றுக்கு மேற்பட்ட புள்ளடிகள் இருந்தால் அது செல்லுபடியற்றதாகி விடும்.புள்ளடி போடாமல் 1.2.3 என்று எண்கள் இடப்பட்டால்1 என்பது முதல் சுற்றில் எண்ணப்படும். முதல் சுற்றில் 50 வீதத்திற்குமேல் பெற்ற வேட்பாளர் வெற்றி பெறுவார். முதல்சுற்றில் எவருக்குமே 50 வுpதத்திற்கு மேல் கிடைக்காவிட்டால் மலாம் இரண்டாம் இடத்தைப் பெற்ற வேட்பாளர்கள் மட்டும் தெரிவு செய்யப்பட மற்றையவர்கள் நீக்கப்படுவார்கள். பின்னர் 2வது 3வது தெரிவுகள் எண்ணப்படும்.இதுவரையில் நடந்த ஜனாதிபதித் தேர்தலகளில் 2வது சுற்று எண்ணப்படவில்லை. இந்த முறை அப்படிப்ப நிலை வரலாம் என்று நம்பப்படுகிறது.
  10. சஜித்தின் கட்சிக்காரர் உமாசந்திரபிரகாசும் இப்படித்தான் கூறினார். அவர் கூறினால் அது சஜித் கூறியமாதிரித்தான்.சஜித் சொன்னாலும் சுமத்தின் சொல்லமாட்டார். ஏன் என்றால் அவருடைய அரசியல் இருப்பு சரிந்து கொண்டே வருகிறது.பொது வேட்பாளரை ஆதரிப்பதன் மூலம் தனக்குத்தானே ஆப்பு வைக்க மாட்டார்.
  11. சுமத்திரனும் சாணக்கியனும் சஜஸத்தை ஆதரித்து சஜித்தின் வெற்றிவாய்ப்பைதட்டிப் பறித்து ரணிலிடம் கொடுக்கப் டபோகிறார்கள் போல் தெரிகிறது. அது சரி கஜித் சுயாட்சித் துpர்வுக்கு எழுத்து மூல உத்திரவாதம் அளித்து விட்டாரா?. சிறிதரன் தெரிஞ்சு கொண்டுதான் வெளிநாட்டுக்குப் போய் விட்டார். நான் இல்லாத சநரமாய் பார்த்து இந்த விசயம் நடந்திட்டுது. நான் இருந்திருந்தால் நிலைமைமே தலகீழாக மாறியிருக்கும். என்று தேர்தல் முடிந்த பின்னர் விளக்கம் கொடுப்பார். கழுவுற மீனில நழுவுற மீன் அவர்.
  12. அரச கட்டடங்களில் மாத்திரம் தமிழிலும் பெயர்ப்பலகை வைப்பதை;தானே சொல்கிறார். அது இப்போதும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது . சிங்களப்கபகுதிகளுக்கூடாப ப் பயணம் செய்யும் பொழுத அரச கட்டங்களின் பெயர்ப்பலகையைப் பார்த்த்துத்தான் அந்த இடங்களை அறிய முடிகிறது. சுமத்திரனின் பங்களிப்புடன் உருவாக்கப்பட்ட ஒற்றை ஆட்சியின் கீழான அதிகாரப்பகிர்வு அரசியலமைப்புக்கு ஆதரவு என்பதன் மூலம் சுமத்திரனதும் அவரது சொம்புகளினதும் வாக்குமட்டும்தான் கிடைக்கும். சுமத்திரனுக்கு நல்ல பெட்டி ஒன்நறு கிடைக்கும்.
  13. இதுவரையிலும் இந்தியப் பாதுகாப்பு ஆலோசகர்கள் தமிழர்களின் நலன்களுக்கு எதிராகவே செயற்பட்டிருக்கிறார்கள். ஆகவே அவர்களின் எந்த ஒரு ஆலோசனையையும் தமிழர்கள் கருத்திற்கெடுக்க வேண்டியதில்லை. இந்தியா வேண்டுமானால் 1987 இல் செய்து கொண்ட்ட ஒப்பந்தத்தை நிறைவேற்றுமாறு இலங்கை அரசை வற்புறுத்தி தனது கையெழுத்தின் பெறுமதியை உறுதிப்படுத்த வேண்டும்.மற்றும்படி எங்களுக்கு ஆலோசனை சொல்ல எந்த நாட்டுக்கும் உரிமையில்லை. நாங்கள் கேட்கும் நியாயமான உரிமைகளை ஏற்றுக் கொண்டாலே போதும்.ஏன்ன்றால் இதன்நன்மை தீமைகளை அனுபவிக்கப் போவது தமிழர்கள்தான்.
  14. யாருடன் பேரம் பேசுவது? பேரம் பேுசி பெறக் கூடிய ஆகக் கூடிய தீர்வுதான் என்ன? குறைந்த பட்சம் 13 ஐ முழுமையாக அமுல்படுத்துவதாக எந்த வேட்பாளர் சர்வதேச நாடுகளின் துதுவர்கள் சாட்சியாக கஎழுத்து மூல வாக்குறுதி வழங்கத்தயராக உள்ளார். குறைந்த பட்சம் அந்த ஒப்பந்தத்துடன தொடர்புடைய இந்தியத்துதுவராவது நாட்சியாக முன்வருவாரா?
  15. இதுவரை நடந்த ஜனாதிபதித் தேர்தல்களில் வடக்கு கிழக்கு மக்கள் பெரும்பாலும் ஒரு அலையாகவே வாக்களித்திருக்கிறார்கள்.அவர்கள் வாக்களித்த வேட்பாளர் வென்றும் இருக்கிறார் தோற்றும் இருக்கிறார்.தமிழ்மக்களின் வாக்குகள் இல்லாமலேயே சிங்கள வேட்பாளர்களினால் வெற்றியைப் பெற முடியும்.அதற்குப்பல தேர்தல்கள் முன்னுதாரணமாக இருக்கின்றன.இம்முறை தென்பகுதியில் ரணீலுக்கும்>சஜித்துக்கும் கடுமையான போட்டி இருக்கிறது. அனுராவும் குறிப்பிடத்தக்க வாக்குகள் எடுக்கும் நிலையில் தமஜழ் வாக்குகள் ஒரு அலையாக ஒரு சிங்கள வேட்பாளருக்கு கிடைக்காமல் விட்டால் முதல்சுற்றில் எவருக்கும் 50 வீதம் கிடைக்காமல் போகலாம்.
  16. நான் மேலே காட்டியிருந்த கருத்துக்கணிப்பகளில் இருந்துதான் இருவரும் 50 வீதத்துக்கு மேல் எடுக்கவில்லை என்று எழுதினேன்.இந்தக்கருத்துக்கணிப்பும் முழமையானது அல்ல என்ற புரிதல் எனக்க இருக்கிறது.
  17. எப்படிப் பார்த்தாலும் 50 வுpதத்திற்கு மேல் யாருக்கும் கிடைக்கவில்லை. 2வது சுற்று விருப்பு வாக்கெடுப்பு எண்ணப்பட வேண்டும் என்று இந்தக்கருத்துக்கணிப்பு சொல்கின்றது.. தமிழ்ப் பொது வேட்பாளருக்கு கணிசமான வாக்குகள் கிடைத்தால் ஜனாதிபதித் தேர்தல் கடும் போட்டியாக இருக்கும் 2வது விருப்பு வாக்ககை எண்ணும் நிலை வந்தால் ரணில் சுத்துமாத்திப் பண்ணி ஜனாதிபதியாக வருவார.(( சுமத்திரன் போன தடவை வென்றது போல(
  18. ஒரு கொடிக்கு இவ்வளவு எதிர்ப்புகள் வருவதை நல்ல விடயமாகப் பார்க்கிறேன். விஜையின் அரசியல் வருகையை எல்லோரும் வரவேற்றிருக்கும் நிலையில் திமுக பதற்படுகிறது. அவர்கனேள கொடி பற்றிய சர்சைகளைப் பரப்பி வருகின்றனர். அதிமுக அமைதியாக பார்த்துக் கொண்டு இருக்கிறது.கள்ளத்தனம் கொண்ட கருணாநிதி பாடலை எதிர்த்து அதை உலக அளவில்பிரபலமாக்கிய திமுக 200 டமரூபா ஊபிக்களின் ஐடீ விங்க் விஜையின் கொடியையும் நன்றாக அறிமுகப்படுத்தியிருக்கின்றனர். கொடியில் இருக்கும் சிவப்பு மஞ்சள் இனி கட்சி தொடங்கும் யாரும் தமிழத் தேசியத்தை விலகிச் செல்ல முடியாது என்பதையும் திராவிட சிந்ததாந்தம் அழிந்து கொண்டு போகின்றது என்பதையும் எடுத்தக் காட்டகின்றது. விஜைய்க்கு ஊழலற்ற கட்சியாக ஒரே தெரிவு நாம்தமிழர்கட்சி மட்டும் தான் இரண்டும் இணைந்தால் 2026 தமிழகத்தின் ஆட்சியில் பல மாற்றங்களை உருவாக்கலாம். யார் தலைமையேற்பது ன்பதில்தான் சிக்கல் இருக்கிறது. மேலும் அவர்தமிழ்த்தேசியத்தை உறுதியாக முன்னெடுத்துச் செல்வாரா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
  19. சந்திரிகாவுக்கு வாக்குப் போட்டோம்>ரணிலுக்கு வாக்குப் போட்டோம்.பொன்சேகாவுக்கு வாக்குப் போட்டோம்>மைத்திரிக்கு வாக்குப் போட்டோம்.சஜித்துக்கு வாக்குப் போட்டோம். இவர்களில் வென்றவர்கள் சந்திரிகாவும் மைத்திரியும் . இருவருமே தமிழர்களின் இனப்பிரச்சினை தொடர்பாக ஒரு துரும்பளவுதானும் செயற்படவில்லை. 2009 பின் மகிந்த கட்சியினர் ஜனாதிபதியாக வரக்கூடாது என்நற தமிழர்கள் வாக்களித்தார்கள். ஆனால் மைத்திரி மகிந்தவையே பிரதமராக்கினார். எந்த ராஜபக்சே குடும்பத்தை சிங்களவர்களே அடித்து விரட்னார்களோ அதே ராஜபக்ச குடும்பத்தை குறுக்கு வழியில் பதவிக்கு வந்த ரணில் அரவணைத்தார். இப்பொழுது சொந்தக்கட்சியின் பலத்தை விட ராஜபக்சேக்களிடமிருந்து பிரிந்து வந்தவர்களை நம்பியே தேர்தலில் நிற்கிறார்.நாங்கள் சிங்கள வேட்பாளர்களுக்கு வாக்களிப்பதால் தமிழர்களுக்கு கிடைக்கக் கூடிய நன்மைகள் என்ன?பொது வேட்பாளருக்கு அந்த வாக்கைப் போடுவதால் வரும் நட்டம் என்ன?. எந்த விடயத்தையும் பரிசோதனை செய்து பார்ப்பதில் என்ன தவறு இருக்கப் போகிறது.நான் ஒரு விடயத்தில் தெளிவாக இருக்கிறேன். பொது வேட்பாளரை நிறுத்தியவர்கள் தங்கள் கட்சியின் இருப்பையும்>தாறஙகளும் அரசியலில் இருக்கிறோம் என்பதைக் காட்டவும் இதைப்பயன்படுத்துகிறார்கள். அவர்கள் இந்தியாவின் செல்லப் பிள்ளைகள் 13 இற்குப் அப்பால் அவர்கள் கனவு கூட காணமாட்டார்கள். அனூல் அவர்கள் தங்கள் சுயநலத்திற்காக நடத்தும் அரசியலை தமிழ்மக்கள் சாதகமாகப் பயன்படுத்துவதில் என்ன நட்டம் வந்து விடப் போகிறது.தமிழ்மக்கள் ஒரே ஒரு வாக்கினைப் பொது வேட்பாளருக்கு மட்டும் செலுத்த வேண்டும். இன்னுமொரு விடயமும் இருக்கிறது. ஜனாதிபதித் தேர்தலைப் புறக்கணித்தல். ஆனால் நவீன ஜனநாயகத்தில் புறனக்கணிப்பவர்களைப் புறக்கணித்து விட்டு வெல்பவர்களைக் கொண்டாடுவது உலக வழமையாகி விட்டது. நாங்கள் ஒற்றுமையாக பொது வேட்பாளருக்கு வாக்களித்து இந்தப் பரிசோதனை முயற்சியைச் செய்வோம்.இந்த முறை ஜனாதிபதி முதல்சுற்றில் தெரிவாகாமல் இருந்து பொது வேட்பாளர் ஒர கணிசமான வாக்குகளைப் பெற்றால் அது பேசுபொருளாகும்.பரிசோதனை முயற்சியைச் செய்து பார்பதில் எந்த இழப்பையும் தமிழர்கள் புதிதாகப் பெற்ற விடப் போவதில்லை.
  20. பொது வேட்பாளரை நிறுத்திப் போட்டு கொஞ்சம் கூட கூச்சமில்லாமல் ரணிலிடம் பெட்டி வாங்கப் போன செல்வமும் சித்தார்த்தனும் எப்பவோ சங்கு ஊதிப் போட்டார்கள். இப்ப பெட்டி வாங்கிறதில சுமத்திரனுக்கு போட்டியாக நிற்கிறதால சுமத்திரனுக்கு கொஞ்சம் கவலைதான்.பொதுவேட்பாளருக்கு ஆதரவு தெரிவிக்கிறதா சொல்லிக் கொண்டிருந்த மாவையும் சிறதரனும் ஆமை தலையை உள்ளுக்கு இழுத்த மாதிரி சத்தமில்லாமல் அமைதியாய் இருக்கிறதும் கடைசி கட்ட பெட்டி பேரத்துக்காகத்தான்.
  21. சமஷ்டிக்கு ஆதரவளிக்கும் வேட்பாளர் என்ற நிலையிலிருந்து 13 ஆம் திருத்தத்துக்கு கீழிறங்கியுள்ளார். மேலும் தமிழர்பிரச்சினைளகள தொடர்பாக சுமத்திரனுடன் மட்டும் பேசுவதன் அர்த்தம். என்ன தனியாக பெட்டி வாங்குகிறாரா? தமிழசுக்கட்சியின் கட்சிக்கட்டுப்பாட்டை மீறியதாக கட்சி ஏன் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கக்கூடாது?13 ஆம் திலுத்தம் என்பது சிறிலங்காவின் அரசியலமைப்பில் உள்ளது. அதை நிறை வேற்றுவதற்கு யாருடைய ஆலோசனையும் தேவையில்லை. ஜனாதிபதித் தேர்தல் முடிவடையும்வரை காத்திருக்கவும் தேவை இல்லை. யாரை ஏமாற்ற இந்த நாடகம். சுமத்திரன் பெட்டி வாங்குலதைப் பார்த்து பொது வேட்பாளரை நிறுததியவர்களும் ரணிலுடன் பேச்சு வார்ததை நடத்தி பெட்டி வாங்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.சிறிதரன் வழமை போல் மதில் மேல் பூனையாக மௌனமாக இருக்கிறார். அவர் எந்தப்பக்கம் தாவுவார் என்பது அண்மைக்கால மௌனமே சாட்சியாக இருக்கிறது.
  22. ரணிலே கட்சியில்லாமல் சுயேச்சையாக தேர்தலில் நிற்கிறாரர் .இந்தத் தேர்தலில் அவர் எடுக்கின்ற முடிவுகளுக்கு கட்சி எப்படிப் பொறுப்பேற்கும்? உண்மையில் விகிதாசார பிரிதிநித்துவ தேர்தலிக் படி ஒரு வலுவான அரசாங்கம் அமைவது மிகமிக அரிது.கூட்டணிக்கட்சிகளின் ஆதரவுடன்தான் அரசாங்கம் அமைக்கலாம். வரலாற்றில் 2 பெரிய கட்சிகள் இணைந்து தேசிய அரசாங்கம் அமைத்த வேளையில்ஈதமிழ்த்தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்திற்குச்சார்பான எபிரதான எதிர்க்கட்சியாக இருந்த வேளையில் தமிழர்களின் குறைந்த பட்ச எதிர்பார்ப்புகளான காணி விடுவிப்பு>அரசியல்கைதிகள் விடுதலை> போர்க்குற்ற விசாரணை>சிங்களக் குடியேற்றங்களைத் துடுத்தல்>தொல்டபொருட் திணக்களம் என்ற வகையில் தமிழர் தேசங்களில் புத்தர் சிலைகளை நிறுவி விகாரைகளைக்கட்டுதல்> போரினால் பாதிப்படைந்தவர்களுக்கு புனர்வாழ்வு அளித்தல்> காணாமல் போனவர்களின் நிலைமை தொடர்பான பாரபட்சம்ற்ற நீதி விசாரணை என்று எதுவுமே கேட்டுப்பெறாமல். பெட்டி வாங்குவதிலும் எதிர்க்கட்சிதலைவரான சம்பந்தருக்கு கொழும்பில் சொகுசு மாளிகையும். மற்றும் எம்பிகளிங்கு அரசால் வழங்கப்படும் சலுகைகளையும் அனுபவித்துவிட்டு இப்பொழுது கூட்டமைப்பு உடைந்து தமிழர் பலமிழந்து நிற்கும் வேளையில் சிங்கள வேட்பாளர்கள் கொடுக்கும் எந்த ஊறுதிமொழிகளும் ஒப்பந்தங்களும் ஒரு போதும் நிறைவேறப் போவதில்லை. பண்டா செல்வா ஓப்பந்தம்> டட்லி செல்வா ஒப்பந்தம். அதிகம் ஏன் இன்னொரு நாடான இந்தியாவுடன் ஏற்படுத்திய ஒப்பந்தம் எல்லாவற்றையும் தூக்கி குப்பைக் கூடையில் போட்டவர்களை நம்பி எப்படி ஒப்பந்தங்களைப் போடலாம். அவர் விரும்பினால் நடைமுநைச்சாத்தியமற்ற பலமான அரசாங்கம் அமையும்வரை காத்திராமல் தமழர்களுக்கு சமஷட்டி தேவையா இல்யைh என்று வடக்கு கிழக்கு மக்களிடம் ஒரு சர்வசன வாக்கெடுப்பை நடத்துமாறு ஏன் னகனட்கக் கூடாது.
  23. சம்பந்தரின் ஆவியாய் இருக்குமோ?
  24. எல்லாப்பக்கத்தாலும் பெட்டி வாங்குகிறார். அவருக்கே விளங்கியிட்டுது. இது கதனது கடைசி எம்பி பதவி என்று. அதுதான் சுற்றிச்சுழன்று பெட்டி வாங்குகிறார்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.