Jump to content

nochchi

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    5737
  • Joined

  • Last visited

  • Days Won

    7

Everything posted by nochchi

  1. மண்ணுக்காய் உயிரீந்து மலருக்குள் முகம் காட்டி மானத்தை காத்த எம் வீரரே ஒருநாளும் மறவோமே வீரரே! வலியோடு வாழ்ந்தாலும் வழியொன்று காண்போமே வீரரே! மாவீரரே மாவீரரே மாவீரரே!
  2. போரில் மாண்ட வீரர்கள் நினைவுக் கல்லறை - கனகபுரம் . Sri Lanka: Kanagapuram warrior Cemetery 2004 - போரில் மாண்ட வீரர்கள் நினைவுக் கல்லறை - கனகபுரம் . நன்றி - யூரூப்
  3. ஈகத்தால் உயர்ந்து தேசத்தில் நிலையான தேசியப் புதல்வர்களே வீரவணக்கம்!
  4. அதுதானே! நானும் ஒரு கத்தரிநட்டு 4 காயாவது காய்த்தது. மீண்டும் காண்பதில் மகிழ்ச்சி சேர்ந்து நடப்பதும் கரம் கோர்த்து உழைப்பதும் காலத்தின் தேவை வருக!
  5. நினைவுகளே அந்த மாவீர மணிகளது நினைவுகளே எம்மை நிமிர வைக்கிறது!
  6. மானத் தமிழ் மறவர்களே கூணற்றமிழ் நிமிர்த்தி வானில் உயர்ந்தவரே வரலாறாய் போனவரே கண்ணீரால் ஒளியேற்றி செந்நீரில் உரமேற்றி செயலாற்ற உறுதிகொள்வேன்!
  7. காண்பாயா! ----------------------- பணத்தைக் கொடுத்துக் கண்ணைக் கெடுத்து வாழும் சூழலடா! இனத்தைக் கெடுக்கும் பணம் தேடும் மனமே மாற்றம் காண்பாயா!
  8. சோகங்களல்ல வாழ்வு சோகங்களைக் கடந்து வெல்வதே வாழ்வு!
  9. அடிமைநிலையுடைத்து விடியல் படைப்பதற்காய் களமாடி வீழ்ந்தோரே வீரவணக்கம்!
  10. காலச்சிறையுடைத்து ஈழத்திசை காட்ட வாழ்வை ஈந்தளித்த மாவீர மறவர்களே வீரவணக்கம்!
  11. மாயக் கண்கொண்டு நான் தந்த விருந்துமன்னன் பசி தீர்த்ததோமேலும் என்னென்ன பரிமாறு என்றுஎன்னை ருசி பார்த்ததோபாதி இச்சைகளை பார்வை தீர்க்கின்றதுமீதி உண்டல்லவா மேனி கேட்கின்றது..................
  12. ஈழம் உருப்பெறக் கருமையில் நுளைந்து கடமையை முடித்த நடுகல் நாயகரே கருவிழிமீது ஒளியென வாழ்ந்து காவியம் பாடுகின்றீர்!
  13. எல்லாளனாய்ப் பிறந்து எதிரியின் மார்பேறி திமிர்முறித்துப் பயிரான கரும்புலி மறவரே கோலம்மாறிக் கொடுமைகள்எங்கள் காலைச்சுற்றிக்கடிவாளம் போடினும்கரும்புலிமறவரேபோற்றுகின்றோம்உங்கள் வீரத்தையே - நாம்போற்றுகின்றோம்!
  14. காலவெள்ளத்துள் கரையாது வாழும் மறவர்களே வீரவணக்கம்! எல்லாளனாய்ப் பிறந்து எதிரியின் மார்பேறி திமிர்முறித்துப் பயிரான கரும்புலி மறவரே கோலம்மாறிக் கொடுமைகள் எங்கள் காலைச்சுற்றிக் கடிவாளம் போடினும் கரும்புலிமறவரே போற்றுகின்றோம் உங்கள் வீரத்தையே - நாம் போற்றுகின்றோம்!
  15. விழிமூடித்துயில்கின்ற வீரரே உங்கள் குருதியில் உயிரான தமிழீழதேசத்தை காணும்வரை எம்மை உரமேற்றி நடமாடத் துணையாக இருப்பீரே! வீரவணக்கம் வீரர்களே!
  16. மாவீரர்களுக்கு வீரவணக்கம்.
  17. தீண்டாய் மெய் தீண்டாய் தாண்டாய் படி தாண்டாய்ஒரு விரல் வந்து உன்னைத் தீண்டியதோஉன் நரம்போடு வீணை மீட்டியதோஉன் உயிர்க்குள்ளே காதல் அம்பைத் தொடுத்திட்டதோவிழியோடும் தீண்டல் உண்டு விரலோடும் தீண்டல் உண்டுஇரண்டோடும் பேதம் உள்ளதுவிழித்தீண்டல் உயிர் கிள்ளும் விரல் தீண்டல் உள்ளம் கிள்ளும்அதுதானே நீ சொல்வது......................
  18. ஆனந்தமாக அனுபவிக்கும் கிளிகளின்முன் அண்டங்களைக் கடந்து உயரப்பறந்தாலும் மனிதன் தோற்றேவிடுகிறான்!
  19. மலர்கள் கேட்காமலே மலர்ந்து இப்பூமியை அலங்கரித்துவிட்டு உதிர்ந்துவிடுகிறது எங்கள் மாவீரர்கள்போல்!
  20. கலாநிதி:குமாரசாமியண்ணா புத்தன் யூனியர் நிழலி கிருபன் மற்றும் அண்மையில் பிறந்தநாளைக் கொண்டாடிய கள உறவுகள் அனைவருக்கும் பிறந்தநாள் வாழ்த்துகள் உரித்தாகுக.
  21. தமிழீழ விடுதலைப்புலிகளெனும் அமைப்பைத் தமது தேவைக்கேற்றவாறு எவர் சுட்டினாலும் இவர்போன்ற நாட்டுப்பற்றாளர்களே ஒரு மாபெரும் மக்கள்சக்தியென்ற குறியீட்டடைவின் கரணியர்களாவர். எல்லாக்காலங்களிலும் புலிகளைப் பாதுகாத்து பராமரித்து நின்ற பரவாயிரம் நாட்டுப்பற்றாளர்களைக் கொண்டது எம்தேசமென்பதை இன்றையகாலமும் பதிவுசெய்கிறது. அகங்காரத்தோடு ஆதிக்க சக்திகள் அழித்தவிட்டோமென்று கூச்சலிட அமைதியாக ஆயிரமாயிரம் நாட்டுப்பற்றாளர்களால் புலத்திலும் தாய்நிலத்திலும் போராட்டம் தொடர்கிறதெனில் அதன் முன்னோடிகளாக எம்முன் தெரிவோர் இவர்போன்ற நாட்டுப்பற்றார்களே. அன்னைபூபதியம்மா முதல் புலத்திலே எரிதனலாய்ப்போன செந்தில்குமரன்வரை உலகுக்கு ஒரேசெய்தியையே இவர்கள் சொல்லிநிற்கின்றார்கள். தமிழினம் வீழ்ந்தோமென அடிமைப்பட்டிருக்காதென்பதே அது. இவரகள் எத்தக் கட்டளைகட்டுகும் செயற்படாத செம்மையாளர்கள். நான் கண்ட காட்சியொன்று அப்போது ஊடகப்பரப்பு குறுகியகாலம். அவரொரு ஆசான். திருநெல்வேலிச் சந்தியிலே தமிழீழ விடுதலைப்புலிகளின் தகவற்பலகையொன்றிருந்தது அதிலே தினமும் நிகழும் முதன்மைச்செய்திகளை பதிவுசெய்வதே அவரது பணி. காலையிலே அதனை செய்துவிட்டே அவர்தனது வேலைக்குச் செல்வார். இப்படிக் களப்பணிமுதல் மனிதநலப்பணிவரை பல்வேறு தளங்களிலே செயலாற்றிய நாட்டுபற்றாளர்கள் என்றும் போற்றப்படவேண்டியோரே. அன்னைபூபதிதினமே அனைத்துநாட்டுபற்றாளருக்குமான தினமாகும். இந்த ஆண்டும் எமைக்கடந்து போகிறது. இந்தநாளிலே எமக்கு அண்மையாக நடைபெறும் நினைவு வணக்க நிகழ்விலே இணைந்து இவர்போற்றோருக்காக ஒருகணம் தலைசாயப்பதும் எமது கடமையாகும். தந்தையாரின் வழியிலே இவரது தனயனும் பேரனும்தமிழ்த்தொண்டாற்றுவதானது தலைமுறைகளைக் கடந்தும் தமிழ்நிலைக்கும் என்ற நம்பிப்க்கையை வலுப்படுத்தகிறதெனலாம்.
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.