-
Posts
5737 -
Joined
-
Last visited
-
Days Won
7
Content Type
Profiles
Forums
Events
Blogs
Gallery
Everything posted by nochchi
-
பயனுள்ள தகவல்களுக்கும் நேரத்துக்கும் நன்றி. எனக்கும் மருந்து தராட்டிக் கோபமாத்தானிருக்கிறது. எனது மகள் உங்கள் நன்மைக்கே என்று சொல்லுவார். முந்திச் சின்னத் தலையிடி என்றாலே எங்க குளிசையென்று தேடுவன். மகள் சுட்டியபின்னர் தேவையென்றால் மட்டுமே எடுப்பது. எனது மருத்துவரும் உடனே மருந்து தரமாட்டார். 2ஆம் திகதி எனது பேத்தியாருக்குத் திடீரென எந்தவிதச் சத்தமும் இல்லாமல் வலிப்பு வந்து அவசரஉதவியை அழைத்தால் விளக்கி வாறதுக்கே 20நிமிடங்கள். அவை வந்து சில நிமிடங்களின் பிள்ளையும் கண்விழித்து அழுதபின்னரே நிம்மதி வந்தது. ஆனால், முதலுதவி மருத்துவரோ அம்மா ஓமென்றால்தான் மருந்தென்று கூறிப் பின் மருந்துகொடுத்துக் கொண்டுபோய் பரிசோதித்துவிட்டு 8மணித்தியாலம் சும்மாதான் வைத்திருந்து, பிறகு காய்ச்சல் வரும்போதே மருந்து கொடுத்தார்கள். பின்னர் ஒரு நுஊபு எடுத்துவிட்டு வீட்டிற்கு அனுப்பிவிட்டார்கள். மருந்தெதுவும் கொடுக்கவில்லை. காய்ச்சல் இருந்தால் மட்டும் வேண்டிப்பாவிப்பதற்கான சீட்டைக் கொடுத்துவிட்டுள்ளார்கள். இன்றைய உலகில் ஒருபுறம் பொறுமையின்மை மறுபுறம் தேடலின்மை அல்லது தெரிந்ததையே செய்யப் பொறுமையில்லை. ஆனால் எமது அஞ்சறைப்பெட்டகத்தினுள்ளேயே சில நோய்களைக் கட்டுப்படுத்தக்கூடிய பல அருமருந்துகள் உள்ளன. யேர்மனியர்கள் இன்று அவற்றைநோக்கி நகர்ந்துள்ளதை அங்காடிகளில் உள்ள பல்வேறு பொருட்களினூடாக(பச்சை மஞ்சள் முதல்... ) அவதானிக்கலாம்.
-
பல கதைகளைப் படைத்தளித்த தங்களின் பாராட்டிற்கு மிக்க நன்றி. பல கதைகளைப் படைத்தளித்த தங்களின் பாராட்டிற்கு மிக்க நன்றி. பல்வேறு விடயங்களின் தாக்கமே பழமொழி கதையாகியது. மீண்டும் நன்றி.
-
அனைத்து தமிழ் கட்சிகளையும் ஒன்றிணையுமாறு கோரி மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்
nochchi replied to கிருபன்'s topic in ஊர்ப் புதினம்
தமிழினத்துக்கு ஒரு நல்ல தலைமையென்பது வெறும் கனவே. ஆனால் இருக்கும் கைத்தடிகளில் ஊன்றி எழ வேண்டியதேவை தமிழினத்துக்கான சாபக்கேடாகும். அரசியலரங்கில் எந்ததடியை வைத்திருப்பது எதை முறிப்பது என்பதைத் தாயகம் வாழ் தமிழர் பட்டறிவின் வழியே தமது வாக்குபலத்தைப் பாவித்து முடிவுசெய்ய வேண்டும். -
இறைமையைத் தமிழ்மொழிபேசும் மக்களோடு பகிர்ந்துகொண்டு நாட்டை வெற்றிப்பாதையில் பயணிக்க வைக்கத் துணியாது, 100ஆண்டுகளாகச் சிங்கள பேரினவாதத்தைக் கொம்புசீவிப் பதவிக் குளிரில் படுத்துண்டு உறங்கியதன் விளைவாக வெளியாரிடம் இறைமையை இழந்து தட்டேத்தும் நிலை. ஆனாலும், தமிழ்மொழிபேசும் மக்களுக்கான தீர்வு 'நாடகம்' போடுவதிலேயே குறி. இன்று டொலர், நாளை, யூரோ, நாளை மறுதினம் யுவான், ரூபிள்................ எனத்தொடர்கதையாகப் போகிறது. புலத்துத் தமிழ் முதலீட்டாளர்கள் எந்த பணத்திலாம் முலிடப்போகிறார்களென ஊர்கிழவி உரத்துக்கேட்கிறாள்.
-
அனைத்து தமிழ் கட்சிகளையும் ஒன்றிணையுமாறு கோரி மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்
nochchi replied to கிருபன்'s topic in ஊர்ப் புதினம்
இது தவிர்க்க முடியாத ஒரு சூழலாகும். ஆனால் இதனை எப்படிக் கையாளுதல் என்ன என்பதிலேயே தங்கியுள்ளது. -
வாசித்த மற்றும் பச்சைப்புள்ளி வழங்கி ஊக்குவித்த உறவுகளுக்கு நன்றி.
-
தேசிய பூங்காக்களுக்குச் செல்லும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் டொலர்களில் பணம் செலுத்த அனுமதி Posted on January 4, 2023 by தென்னவள் 12 0 யால தேசிய பூங்கா உள்ளிட்ட தேசிய பூங்காக்களுக்கு வருகை தரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இந்த ஆண்டு இம்மாதம் முதல் டொலர்களில் பணம் செலுத்தி நுழைவுச்சீட்டுக்களை கொள்வனவு செய்ய முடியும் என வனஜீவராசிகள் மற்றும் வன பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. யால தேசிய பூங்காவில் இருந்து இந்த நடவடிக்கையை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சின் செயலாளர் சந்திர ஹேரத் தெரிவித்தார். நாட்டுக்கு தேவையான டொலர்களை ஈட்டிக் கொள்வதற்காக இந்த நடவடிக்கையை ஆரம்பிக்குமாறு அமைச்சர் மஹிந்த அமரவீர அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்திருந்தார். மேலும், யால தேசிய பூங்காவிற்கு செல்வதற்கு அதிகளவான சுற்றுலாப் பயணிகள் யாலவிற்கு வருகை தருவதால் அதற்கான வசதிகளை மேம்படுத்துமாறும் அமைச்சர் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. தேசிய பூங்காக்களுக்குச் செல்லும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் டொலர்களில் பணம் செலுத்த அனுமதி – குறியீடு (kuriyeedu.com)
-
இணைப்புக்கு நன்றி. சீமானது உரையை சில ஆண்டுகளின் பின் பார்த்தேன். நன்றாக உள்ளது. இந்த உணர்ச்சிக் கொந்தளிப்பற்ற நிதானம் நன்றாக இருக்கிறது.
-
அவர் கூறுவதில் உண்மை உள்ளதுதானே. 1. குமுகாய அவலங்கள் கூடும் 2. குடும்ப வன்முறைகள் அதிகரிக்கும். 3. சட்டரீதியான விற்பனை, எவரும் வாங்கலாம். இதன் வழியாக ஏற்படும் பக்கவிளவுகளால் காவல்துறைக்கு, சிறைத்தறைக்கு, சட்டவாளர்களுக்கு, மருத்துவத்துறைக்கு மற்றும் வியாபாரிகளுக்கு என வேலைவாய்ப்புப் பெருகும்தானே. அம்மணி முதலில் வடமாகாணத்தை இலக்குவைத்துத் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பயிர்ச்செய்கையை மீட்டெடுக்க முடியுமா என்று சிந்திக்கலாம்.
-
கட்டாய மதமாற்றம்: கிறிஸ்தவர்கள் மீது தாக்குதல்!
nochchi replied to கிருபன்'s topic in அயலகச் செய்திகள்
தற்போது உலகு வாய்மூடி மௌனியாக. உலகில் பலம்வாந்த தலைவராக மோதி. சிறுபான்மைகளின் கதி அதோ கதிதான். -
நேட்டோ யூகோஸ்லாவியாவுக்கு எதிராக யுத்தம் செய்வது ஏன்?
nochchi replied to nunavilan's topic in அரசியல் அலசல்
நாஸிகளை மிஞ்சும் வகையில் உலகு தற்போதும் இன அழிப்புகளை எதிர்கொண்டே வருகிறது. நாஸி என்ற சொற்பிரயோகத்தை ஏதோ பாலபாடம் போல் சொல்லும் மேற்காலோ அல்லது கிழக்காலோ இன அழிவுகளையோ, ஆக்கிரமிப்பகளையோ மற்றும் நிலப்பறிப்பகளையோ தடுக்கமுடியவில்லை. நாஸிகளால் வதைபட்ட யூதர்கள் இன்று பலஸ்தீனத்தில் என்ன செய்கிறார்கள். இதை உலகு கேட்கிறதா? உலகென்பதே இன்று பொய்மைகளின் கூட்டாக உள்ளது. நீலிக் கண்ணீர் வடித்தபடி ஏழை நாடுகளின் குருதியிற் கைகளைக் கழுவுகின்றன. நாம் உலகில் மிகச் சிறுபான்மையினர் என்ற அடிப்படையில் ஒடுக்குமுறைக்குள்ளாகும் இனமென்ற வகையிலே, உலகில் ஒடுக்குமுறைக்குள்ளாகும் மக்களுக்காக் குரல்கொடுப்பதும் கரம்கோர்ப்பதுமே வலிமைமிகு பெரும் வல்லாதிக்க மற்றும் பிராந்திய சக்திகளையும் எதிர்கொள்ள வாய்ப்பாகும். நன்றி -
கட்டாய மதமாற்றம்: கிறிஸ்தவர்கள் மீது தாக்குதல்!
nochchi replied to கிருபன்'s topic in அயலகச் செய்திகள்
மோடி மஸ்தான் ஆட்சியும் ஆசீர்வாதமும் இருக்கு தொடருங்கோ... தொடருங்கோ -
மைதானத்திற்கு தமிழர் பெயரா? வெடித்த எதிர்ப்பு!
nochchi replied to nunavilan's topic in ஊர்ப் புதினம்
உண்மைதான். ஆனால் மேலும் இழுபட்டுச்செல்லும். காலங்கடத்திகளுக்குக் களமாகும். -
கோழியும் ஆமையும் - நிமிடக்கதை பங்குனி வெயில் உச்சியில் அறைந்தது. கடற்கரையை அண்டிய குடிலில் தொங்கிய கடகத்திலிருந்து பாய்ந்த கோழி கொக்கரித்தபடி நின்றது. தரையேறி முட்டைகளைப் பத்திரப்படுத்திவிட்டு அவ்வழியே நடந்து கொண்டிருந்த ஆமை நின்று கோழியைப் பார்த்தது. கோழி '' என்ன பார்க்கிறாய்,, என்று கேட்டது. ஆமையோ ''ஏனிந்தக் கலவரம்! என்றது. கோழி தான் முட்டை போட்ட சோம்பல் முறிக்க என்றது. ஆமையோ சிரித்துவிட்டு விரைந்து கடலோடு கலந்தது. நன்றி
-
சொந்தப் பணம் இல்லாமல் அல்ல. இது போன்ற ஆடம்பரங்களை ஏன் சொந்தப்பணத்தில் செய்ய வேண்டும் என்ற தொலைநோக்குச் சிந்தனையின் விளைவு. அதைவிட அவர்களிடம் இல்லாத பணமா? ராயபக்ச அன்ட் கொம்பனி மற்றும் சக கொம்பனிகளின் முதலீடுகளை சிறிலங்கா அரசு என்ன முடக்கியாவிட்டது. சும்மா நாடகம் ஆடுகிறார்கள். அவர்கள் 15 -20 ஆண்டுகளுக்குள் அரசின் உயரடுக்குப் பதவிகளிலும், 80வீதத்துக்கு மேற்பட்ட அரச நிறுவனங்களில் தமது உறவுகளையும் கொண்டவர்கள் மட்டுமன்றித் தனியார் நிறுவனங்களிற் பங்குதாரர்களாகவும் இருந்தவர்களிடம் இல்லாத செல்வமா? வன்னியிற் தமிழீழ நடைமுறை அரசினது வைப்பகத்தில் இருந்து கையகப்படுத்திய வெளிநாட்டுப் பணமுட்பட தங்க ஆபரணங்களின் கணக்கே காட்டப்படவில்லை. பலவீனமான நாடுகளைச் சுரண்டலுக்கேற்ப வளைத்தெடுத்தல் அல்லது முறித்துவிடுதல் என்பதே கோட்பாடு என்ற அமெரிக்காவினது சனநாயகத்தை உலகமே அறிந்ததுதானே. இதில் கோத்தாவையும் தேவைக்கேற்ப கையாளும்.
-
மட்டக்களப்பில் 180 தற்கொலை சம்பவங்கள் பதிவு – திடீர் மரண விசாரணை அதிகாரி நஸீர் Posted on January 1, 2023 by தென்னவள் 12 0 மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 2022ஆம் ஆண்டு சுமார் 180க்கும் மேற்பட்டோர் தற்கொலை செய்திருக்கின்றனர் என தகவல் தெரிவிக்கப்படுகிறது. தற்கொலைகளை தடுப்பதற்கான விழிப்புணர்வுகள் மாவட்டத்தின் எந்தவொரு கிராம மற்றும் நகர மட்டத்திலும் நடைபெறாமை குறித்து உண்மையில் கவலையளிக்கிறது என மட்டக்களப்பு மாவட்ட திடீர் மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.எம்.நஸீர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், வயது வித்தியாசமின்றி சிறியோர், பெரியோர், படித்தவர்கள், பாமரர்கள் என்று பல்வேறு மட்டங்களிலும் இன்று தற்கொலை கலாசாரங்கள் மேலோங்கியிருப்பது நமது மாவட்டத்துக்கு நல்லதொரு சகுணமல்ல என்றே தோன்றுகிறது. ஒரு மனிதனுக்கு மனதில் ஏற்படும் விரக்தி, பயம், மனச்சோர்வு, கவலை எல்லாம் சேர்ந்து, அவனை அழுத்துவதால்தான் தற்கொலைக்கு தூண்டப்படுகிறான். தற்போது தற்கொலை செய்துகொள்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு காரணங்களாக குடும்ப பிரச்சினை, காதல் பிரச்சினை, மன அழுத்தம், பரீட்சையில் தோல்வி, கணவன் – மனைவி முரண்பாடு, வறுமை, போதை மற்றும் பெற்றோரின் அறிவுரைகளை கவனத்தில் கொள்ளாமை என அடுக்கிக்கொண்டே போகலாம். சிறு சிறு காரணங்களுக்கு கூட மனமுடைந்து போய்விடுவதற்கான காரணங்களை கண்டறிய இயலாமல் தடுமாறுகிறோம். தற்கொலை என்ற ஒரு நிமிட எண்ணம் எல்லோருக்கும் உடனே வருவதில்லை. பிரச்சினைகளை எப்படி கையாள்வது என்று தெரியாமல் குழம்பும்போது அரவணைக்க, தோள் கொடுக்கவென யாரும் இல்லாமல், தனிமையில் வாடும் சந்தர்ப்பத்தில் இம்மாதிரியான முடிவை நோக்கி பலர் செல்கின்றனர். உங்களிடம் யாராவது ‘வாழ்க்கை போற போக்கை பார்த்தால் பேசாம செத்துடலாம் போல இருக்கு’ என்று சொன்னால், அதன் பாரதூரம் அறியாமல் அவர்களை கடந்து செல்லாதீர்கள். இதுவும் தற்கொலை எண்ணத்தின் முதல் அறிகுறிதான். மனதில் ஏற்படும் விரக்தி, கோபம், இக்கால பொருளாதார நெருக்கடி காரணமாக வாழ்க்கையை பற்றிய பயம் என்பவையே அவர்களை இப்படி பேச வைக்கிறது. சரி, உங்கள் நெருங்கிய நண்பரோ அல்லது உறவினரோ, ஏன், உங்களுக்கு நெருக்கமான நபராக இருக்கலாம். இப்படி ஒரு முடிவெடுக்கப் போகிறார்கள் என தெரிந்தால் என்ன செய்வீர்கள்? கண்டிப்பாக தடுக்கத்தான் முயற்சி செய்வோம். அவர்களிடம் மனம் விட்டுப் பேசுவோம். ஆறுதல் சொல்வோம். மனதை மாற்ற முயற்சி செய்வோம். இப்படி செய்வதன் மூலம் தற்கொலையை தடுக்க முயற்சிப்போம். நாளுக்கு நாள் தற்கொலை செய்துகொள்ளும் எண்ணம் மக்கள் மத்தியில் அதிகரித்துக்கொண்டே செல்கிற நிலையில், அதைத் தடுக்கும் முயற்சியில் நாம் இறங்கவில்லையென்றால், மாவட்டத்தின் நிலைமை என்னாவது? அரச, அரச சார்பற்ற உயர் அதிகாரிகள் மற்றும் பொலிஸ் அதிகாரிகளான நீங்கள், இது தொடர்பாக கலந்தாலோசித்து, தற்கொலை முயற்சியிலிருந்து மக்களை பாதுகாக்க வழிகோலுங்கள் என்றார். மட்டக்களப்பில் 180 தற்கொலை சம்பவங்கள் பதிவு – திடீர் மரண விசாரணை அதிகாரி நஸீர் – குறியீடு (kuriyeedu.com)
-
கூட்டமைப்பு முன்வைக்கும் தீர்வை தமிழர்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் Posted on January 1, 2023 by தென்னவள் 14 0 புதுவருட தினமான இன்றும் (ஜன 1) காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் வவுனியாவில் போராட்டமொன்றை முன்னெடுத்திருந்தனர். வவுனியா, ஏ9 வீதியில், வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு முன்பாக 2142ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தாய்மாரால் குறித்த கவனயீர்ப்பு போராட்டம், அவர்களது போராட்ட பந்தலுக்கு முன்பாக இடம்பெற்றது. இதன்போது இராணுவத்திடம் கையளிக்கப்பட்ட மற்றும் வெள்ளை வேனில் கடத்தப்பட்ட தமது பிள்ளைகளுக்கு நீதி தேவை என்பதோடு அவர்களை விடுவிக்க வேண்டும் எனவும் தெரிவித்த போராட்டத்தில் ஈடுபட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள், இறையாண்மையுடனான தீர்வே பாதிக்கப்பட்டோருக்கு தேவை என தெரிவித்து, மாதிரி வாக்களிப்பையும் மேற்கொண்டிருந்தனர். இது தொடர்பில் அவர்கள் மேலும் கூறுகையில், காணாமல் ஆக்கப்பட்ட தமிழ் பிள்ளைகளின் தாய்மார்கள் உட்பட பாதிக்கப்பட்ட தமிழ் மக்களால் முன்வைக்கப்பட்ட தீர்வை மட்டும் தான் தமிழர்கள் ஏற்றுக்கொள்வார்கள். தமிழ்த் தேசிய கூட்டமைப்பு முன்வைக்கும் தீர்வை எந்தத் தமிழரும் ஏற்றுக்கொள்ள மாட்டார். காணாமல் ஆக்கப்பட்ட தமிழ் பிள்ளைகளின் தாய்மார்கள் உட்பட பாதிக்கப்பட்ட தமிழ் மக்களால் முன்வைக்கப்பட்ட தீர்வை மட்டும் தான் தமிழர்கள் ஏற்றுக்கொள்வார்கள். அரசியல் தீர்வை எவ்வாறு காண்பது? தெற்கு சூடான், எரித்திரியா, கொசோவா, கிழக்கு திமோர் ஆகிய நாடுகளில் கடந்த காலங்களில் நடந்த ஐ.நா.வின் கண்காணிப்பு வாக்கெடுப்பு ஒன்றே சிறந்த வழி. நோர்வே தூதர் எரிக் சொல்ஹெய்ம், ஒரு மத்தியஸ்த பாத்திரத்தை வகிக்க விரும்புவதை இப்போது நாம் காண்கிறோம். தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் இடையில் மத்தியஸ்தராக மீண்டும் வருவதற்கு இரகசியமாக செயற்பட்டு வருகின்றார். நாங்கள் அதை எதிர்க்கவில்லை. ஆனால், மேற்கு தேச அரசியல் கட்டமைப்பை மேசைக்கு கொண்டு வர விரும்புகிறோம். ஐ.நா. கண்காணிக்கும் வாக்கெடுப்பை நடத்துவதற்கு எங்களிடம் 3 சாத்தியமான அரசியல் தீர்வுகள் உள்ளன. தமிழர் இறையாண்மை, மேற்கத்திய பாணி ஜனநாயகம், ரணில் – சம்பந்தன் ஒப்பந்தத்தில் இருந்து தீர்வு… இதைத்தான் எங்கள் பதாகையில் எழுதியுள்ளோம். முழு உலகமும், குறிப்பாக, இலங்கை கண்காணிப்பு குழுக்கள் மற்றும் அமெரிக்கா, இங்கிலாந்து, ஜப்பான் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகிய நாடுகள் பெரும்பங்கை ஐ.நா. கண்காணிக்கும் வாக்கெடுப்பினை நடத்துவதில் பங்கு வகிக்கும் என நம்புகிறோம். புலம்பெயர் தமிழ் மக்கள், எமது தமிழ் இறையாண்மை மிக்க தேசத்தில் முதலீடு செய்து, அபிவிருத்தி செய்ய ஆவலுடன் காத்திருக்கின்றமையால், அரசியல் தீர்வு விடயத்தில் எமது நேரத்தை வீணடிக்க நாம் விரும்பவில்லை என்றனர். கூட்டமைப்பு முன்வைக்கும் தீர்வை தமிழர்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் – குறியீடு (kuriyeedu.com)
-
2023 புதுவருட வாழ்த்துக்களும் புத்தாண்டு சபதங்களும்.
nochchi replied to nedukkalapoovan's topic in வாழிய வாழியவே
கடந்த பொழுதுகளை கற்றுக்கொண்டு வருகின்ற பொழுதுகளை வாஞ்சையுடன் வரவேற்போம்! யாழ்கள உறவுகள் அனைவருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்! -
ஈழத் தமிழர்கள் அரசியல் தீர்வு என்ற போர்வையில் 2023இலும் மீண்டும் ஏமாற்றப்படுவார்கள். ரணில அரசுத்தலைவராகச் சிறுசிறு சலசலப்புகளோடு தொடர்வார். தமிழ்த் தலைமைகள் நம்பினோம் ஏமாற்றிவிட்டார்கள் என்று கைவிரிப்பர். வட-கிழக்கிலும், தெற்கிலும் புதிய அரசியற் கூட்டுகள் உருவாகும். இலங்கையில் பொருளாதாரம் மேலும் மோசமடைவதோடு நாடு மேலும் பலவீனமாகும். உலகெங்கிலும் பொருண்மிய மந்த நிலை தொடரும். ருஸ்ய – உக்ரேன் போர் தொடரும். கிரிமியா உக்ரேனிடம் வீழுமானால் போர் முடிவுக்குவரும் தொடக்கப் புள்ளியாகும். இந்தியாவில் இந்துத்வாவும் தமிழகத்தில் திராவிடமும் கோலோச்சும். பலஸ்தீனர்கள் மீது கடும் அழுத்தங்களை இஸ்ரேல் மேற்கொள்ளும். ருஸ்யா - சீனா - இந்தியா - துருக்கி ஆகியன தமது பொருண்மிய நலன்நோக்கி ஒன்றிணைந்து பயணிப்பர். இது பலமடைந்தால், மேற்கின் பொருண்மியச் சமநிலையுட்படப் பங்குச் சந்தைகளில் தாக்கமேற்படும் உலகிற் சிறுபான்மை இனங்கள் தொடர்ந்து நசுக்கப்படும். யேர்மனியில் வலதுசாரிகளின் பலம் அதிகரிக்கும்.ஊதிய உயர்வு கிடைக்காது.