Jump to content

nochchi

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    5737
  • Joined

  • Last visited

  • Days Won

    7

Everything posted by nochchi

  1. தமிழீழ விடுதலைப்புலிகளெனும் அமைப்பைத் தமது தேவைக்கேற்றவாறு எவர் சுட்டினாலும் இவர்போன்ற நாட்டுப்பற்றாளர்களே ஒரு மாபெரும் மக்கள்சக்தியென்ற குறியீட்டடைவின் கரணியர்களாவர். எல்லாக்காலங்களிலும் புலிகளைப் பாதுகாத்து பராமரித்து நின்ற பரவாயிரம் நாட்டுப்பற்றாளர்களைக் கொண்டது எம்தேசமென்பதை இன்றையகாலமும் பதிவுசெய்கிறது. அகங்காரத்தோடு ஆதிக்க சக்திகள் அழித்தவிட்டோமென்று கூச்சலிட அமைதியாக ஆயிரமாயிரம் நாட்டுப்பற்றாளர்களால் புலத்திலும் தாய்நிலத்திலும் போராட்டம் தொடர்கிறதெனில் அதன் முன்னோடிகளாக எம்முன் தெரிவோர் இவர்போன்ற நாட்டுப்பற்றார்களே. அன்னைபூபதியம்மா முதல் புலத்திலே எரிதனலாய்ப்போன செந்தில்குமரன்வரை உலகுக்கு ஒரேசெய்தியையே இவர்கள் சொல்லிநிற்கின்றார்கள். தமிழினம் வீழ்ந்தோமென அடிமைப்பட்டிருக்காதென்பதே அது. இவரகள் எத்தக் கட்டளைகட்டுகும் செயற்படாத செம்மையாளர்கள். நான் கண்ட காட்சியொன்று அப்போது ஊடகப்பரப்பு குறுகியகாலம். அவரொரு ஆசான். திருநெல்வேலிச் சந்தியிலே தமிழீழ விடுதலைப்புலிகளின் தகவற்பலகையொன்றிருந்தது அதிலே தினமும் நிகழும் முதன்மைச்செய்திகளை பதிவுசெய்வதே அவரது பணி. காலையிலே அதனை செய்துவிட்டே அவர்தனது வேலைக்குச் செல்வார். இப்படிக் களப்பணிமுதல் மனிதநலப்பணிவரை பல்வேறு தளங்களிலே செயலாற்றிய நாட்டுபற்றாளர்கள் என்றும் போற்றப்படவேண்டியோரே. அன்னைபூபதிதினமே அனைத்துநாட்டுபற்றாளருக்குமான தினமாகும். இந்த ஆண்டும் எமைக்கடந்து போகிறது. இந்தநாளிலே எமக்கு அண்மையாக நடைபெறும் நினைவு வணக்க நிகழ்விலே இணைந்து இவர்போற்றோருக்காக ஒருகணம் தலைசாயப்பதும் எமது கடமையாகும். தந்தையாரின் வழியிலே இவரது தனயனும் பேரனும்தமிழ்த்தொண்டாற்றுவதானது தலைமுறைகளைக் கடந்தும் தமிழ்நிலைக்கும் என்ற நம்பிப்க்கையை வலுப்படுத்தகிறதெனலாம்.
  2. இதனைத்தான் கிந்திய ஆளும்வர்கமும் ஒற்றைவாத பொருண்மியச் சக்திகளும் விரும்புகின்றன.
  3. தன் வாழ்நாளை தாய்நாட்டின் விடியலுக்காக அர்ப்பணித்த பிரிகேடியர் சசிக்குமார். தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் சிங்களப் படைமுகாம் மீது மீது தாக்குதல் நடத்துவதற்கு முன்னரும், எதிரிகளின் படைப் பலம் , படைக் கட்டமைப்புக்கள் போன்றவற்றினைத் தெரிந்து தகவல் கொடுக்கவும் , எதிரியின் அனைத்து நடவடிக்கைகளையும் கண்காணித்துப் பின் போராளிகளின் நடவடிக்கை சமர்களுக்கான தகவல்களை வழங்குவதற்கும் வேவுப்பிரிவு தேசியத்தலைவரால் உருவாக்கபட்டது. அதற்காக அல்லும் பகலும் தன் உழைப்பாலும் போராளிகளின் ஈகத்திற்க்கு உயிர்கொடுத்து வரைபடைமுலம் உயிரோட்டம் கொடுத்தவர்களில் பிரிகேடியர் சசிக்குமார் மாஸ்ரரின் பங்கும் அளப்பெரியது என்றால் மிகையாகாது.படைப் பலம் , படைக் கட்டமைப்புக்கள் போன்றவற்றினைத் தெரிந்து தகவல் கொடுக்கவும் , எதிரியின் அனைத்து நடவடிக்கைகளையும் கண்காணித்துப் பின் போராளிகளின் நடவடிக்கை சமர்களுக்கான தகவல்களை வழங்குவதற்கும் வேவுப்பிரிவு தேசியத்தலைவரால் உருவாக்கபட்டது. அதற்காக அல்லும் பகலும் தன் உழைப்பாலும் போராளிகளின் ஈகத்திற்க்கு உயிர்கொடுத்து வரைபடைமுலம் உயிரோட்டம் கொடுத்தவர்களில் பிரிகேடியர் சசிக்குமார் மாஸ்ரரின் பங்கும் அளப்பெரியது என்றால் மிகையாகாது. தேசியத்தலைவரின் வழிகாட்டலில் இத் தளபதியில் வளர்ப்பில் வார்த்தெடுத்த பல போராளிகள் , தங்கள் ஈகத்தால் எம் தாய்மண்ணில் பல சரித்திரம் எழுதி சென்றார்கள். பின் தளத்தில் சென்று குறைந்த இழப்பில் , பல வழிகளை தன் வரைபடம் நேர்த்தியான ஆற்றல் மூலம் வடிவமைத்து திட்டமிட்டு தலைமையிடம் சமர்பிக்கும் நேர்த்தியான தேசத்தின் மீது கொண்ட உயிரோட்டத்தால் தேசியத்தலைவரிடம் மதிப்பும் – நம்பிக்கையும் கொண்டு விளங்கினார் பிரிகேடியர் சசிக்குமார் அவர்கள். போராளிகள் மத்தியில் பிரிகேடியர் ” சசிக்குமார் மாஸ்ரர் ” என அன்புடன் மரியாதையுடன் அழைக்கப்பட்டு வேவுத்திட்டமிடல்கள் மூலம் பல தாக்குதல் நடத்தியமையாலும் மேலும் வேவுத் திட்டமிடளாலும் பெரும் மதிப்புடன் நாளும் போராளிகள் மனதில் இடம் பிடித்தார். ஆயினும் மக்கள் மத்தியில் அறியாதிருந்தும் இப்படியான் ஒரு தளபதி உள்ளார் என்றும் வெளியில் தெரியா வெளிச்சமாக நாளும் தேசப்பணிகளைத் தொடர்ந்தார் . பூநகரி – பலாலி – ஆனையிறவு – எல்லாளன் ( அனுராதபுரம் ) நடவடிக்கையில் இவரின் தேசக்கடமை முழு வீச்சுடன் விரிந்தன என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆயினும் தன் வாழ்நாளை தாய்நாட்டின் விடியலுக்காக அர்ப்பணித்த பிரிகேடியர் சசிக்குமார் அவர்களின் வாழ்வியல் எப்படி இருக்கும் என்பதற்கு ஓர் உதாரணமாகவும் – அவர் சிறப்புத் தளபதியாக இருந்த வரைபடைத்துறையில் – அவர் வழிகாட்டலில் வேவுப்புலிகள் பிரிவின் ஈகத்தை தியாக உணர்வை அவர்கள் தாய்நாட்டிற்காக அர்ப்பணித்த பெரும் தியாகங்கள் சொல்லில் அடங்காதவை. ஆயினும் விடுதலை சுவடுகள் என்றுமே உங்கள் மனதை தாய்மண்ணின் நினைவுடன் ஆளட்டும் , பிரிகேடியர் சசிக்குமார் மாஸ்ரர் விடுதலைப் பயணத்தில் அவரின் கடமை எவ்வளவு முக்கியம் வாய்ந்தது என்பதையும் வேவுப்புலிகளின் ஈகத்தையும் ஓர் கணம் உணர்ந்து பாருங்கள் பின்வருமாறு விபரிக்கும் வேவுப்புலிகளின் வாழ்வியலிலிருந்து தமிழீழ மண்ணில் பல சிங்களப் படைமுகாம் தாக்குதலின் திட்டமிடலையும் வெற்றியையும் விளங்கிக் கொள்ள வேண்டுமானால் , எங்களது வேவு வீரர்களைப் புரிந்து கொள்ள வேண்டும். அனைத்து தாக்குதல்களையும் பின்னூட்டத்தில் வேவுப்புலிவீரர்கள் பெற்றுத்தந்த வெற்றி யாவும் என்பதை யாவரும் மறந்ததில்லை. ஆயினும் வெளிச்சத்திற்கு இந்த விடுதலை உரங்கள் தெரிவதில்லை என்பதே உண்மை எங்களது வேவு வீரர்கள் அபூர்வமான மனிதர்கள். சாவுக்கும் அஞ்சாத அவர்களது வீரத்தை எண்ணிப்பாருங்கள். அது போற்றுதற்குரியது. பகைவனின் நெஞ்சுக்கூட்டுக்கு மேலேறி வேவு பார்த்துவிட்டு மீளும் அந்த மனத்துணிவு அபாரமானது அது ஒரு இணைதேட முடியாத நெஞ்சுறுதி! தாங்கள் கொண்ட இலட்சியத்தில் அவர்கள் எத்துணை பற்றுக் கொண்டவர்களாக இருக்கிறார்கள் என்பதைச் சிந்தித்துப் பாருங்கள். அந்த இலட்சியத்திற்காகத் தங்களது இன்னுயிரையே துச்சமெனத் தூக்கி எறிய மனமுவந்து நிற்கும் அவர்களது தியாக உணர்வு , மேன்மை மிக்கது உன்னதமானது ! தாயகத்தின் மீதும் தாயகத்து மக்கள் மீதும் அவர்கள் கொண்டிருந்த நேசம் இருக்கிறதே …. அது சாதாரணமானதல்ல. அது ஒரு அளவு கடந்த காதல் தளர்ச்சியற்ற பிணைப்பு அந்த வீரர்களின் ஒவ்வொரு அசைவுக்குப் பின்னால் இருந்தும் , எதிரியின் அரண்களுக்கு மத்தியில் நின்று அவர்கள் எடுத்த ஒவ்வொரு முடிவிற்குப் பின்னால் இருந்தும் , அவர்களை இயக்கிக்கொண்டிருந்த உந்துவிசை – அவர்களுடைய அந்த ” மனநிலை ” தான். எங்கள் அன்னைபூமியை ஆக்கிரமித்து நிற்கும் சிங்களப் படைகளின் மிகப் பெரியதும் , மிகவும் பாதுகாப்பானதுமான பல தலைமையகப் படையரணுக்குள் வேவுப்புலி வீரர்களின் தடம் பதிந்துள்ளது. பன்னாட்டு சக்திகளும் – சிறீலங்கா அரசும் இணைந்து எம் மக்களைக் கொன்று குவித்து இனவழிப்பை அரங்கேற்றிய இனவெறியர்களுக்கு எதிராக விடுதலை தாகத்துடன் பல போராரிகளுடன் இணைந்து களமாடி முள்ளிவாய்க்கால் மண்ணில் 2009ம் வருடம் வைகாசி 15ம் நாள் ஆயிரம் ஆயிரம் மாவீரர்களுடன் இணைந்தார். இன்றும் தமிழீழ தேசம் மாபெரும் தளபதியை இழந்து தவிக்கும் தவிப்பை உணர்ந்து நாளை ஆயிரம் ஆயிரம் சசிக்குமார்கள் உருவாகி அவர் விட்டுசென்ற பணியை ஏற்று தமிழீழம் மலர வைப்போம்.http://www.kuriyeedu.com/?p=68556
  4. இணைப்புக்கு நன்றி தமிழ்சிறியவர்களே! இந்ததிரியை இறுதிக்கட்ட இனஅழிப்புத் தொடர்பான பதிவுகளை மட்டும் இணைக்கும் திரியாகப்பயன்படுத்தி இதனுடன் தொடர்புடைய படங்களை இணைத்துப் பேணுவது நல்லது. யாராவது இதனை ஒரு நிரற்படுத்தப்பட்ட சான்றாவணமாக வைத்துள்ளார்களோ யாரறிவார். எனவே எங்கெல்லாம் கிடைக்கிறதோ இதுபோன்ற பதிவுகள் அனைத்தையும் இணைத்து ஒரு ஆவணத்திரியாக இதைப்பேணுவதூடாக இளையோருக்கு இதனைக்கொண்டு செல்லமுடியுமென எண்ணுகின்றேன். நன்றி
  5. அண்மையில் பிறந்தநாளைக்கொண்டாடிய அனைத்து யாழுறவுகளுக்கும் இனியபிறந்தநாள் வாழ்துகளைப் பகிர்வதோடு 65வது மைல்கல்லை எட்டி நிற்கும் நகைச்சுவைத் தென்றலான "சுவி" ஐயா அவர்களுக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!
  6. இதைப்பார்த்போது அதிர்ச்சியடைந்தேன். இன்னும் ஆயிரம் வருடமம் சென்றாலும் தமிழகம் மாறாது.
  7. தமிழ்சிறியவர்களே, அவசியமானதிரியொன்று பதிவுகளும் அப்படியே. தொடர்க. நன்றிகளும் வாழ்த்துகளும் ...... இந்தப்படத்தையும் எமது வீரர்களையும் பார்க்கும்போது கண்கள் தன்வழியே கரைகிறது.
  8. புரட்சிகரத்தமிழ்தேசியனுக்கும் கடந்த வாரங்களில் பிறந்தநாளைக் கொண்டாடிய கள உறவுகளுக்கும் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!
  9. கிந்தயச் சதிக்குப்பலியாகி தமிழீழவர் மனங்களில் நிலையாகி வீரத்தின் மணிமுடிதனையேந்தி தமிழ் வாழும்வரை வாழ்வாகிய வரலாற்று நாயகரே வீரவணக்கங்கள்!
  10. இனிமேலும் ஓயோம் என்று வித்தாகி வீழ்ந்துவிட்ட மாவீரச் செல்வங்களே சிரம் தாழ்த்தி வணங்குகின்றேன்!
  11. Joella Meera Kugan nige பிரியசகி (108 years old) Mohanraj (30 years old) தீபா என்றென்றும் நலமாக வளமாக வாழ்கவென வாழ்துகின்றேன்
  12. நல்லதொரு திரியைத் தொடங்கிய நந்தனுக்கும் நகைச்சுவைகளை இணைக்கும் உறவுகளுக்கும் நன்றிகள்.சிரிப்பதற்கான பொழுதுகளை தேடும் சூழலில் சிரிக்க மட்டும் வாங்க அழகான தலைப்பு. தொடர்க.
  13. விசுகு அவர்களுக்கும் மற்றும் பிறந்தநாளைக் கொண்டடிய குமாசாமி ஐயா அவர்களுக்கும் இன்னும் பல்லாண்டு இனிதா வாழ்கவென யாழ்கள உறவுகளோடிணைந்து வாழ்த்துகின்றேன். வளமாய் அழகாய் நலமாய் இனிதாய் எழிலாய் வாழிய வாழிய வாழியவே!
  14. வணக்கம்,

    வைப்பகக்கணக்கிற்குப் பணம்(50,00யூரோகள்) அனுப்பினேன். கிடைத்ததா என்று அறியவிரும்புகின்றேன்.

     

    1. shanthy

      shanthy

      ஓம் 29ம் திகதி 50€ வந்திருக்கு. இவ்வுதவியை எந்த திட்டத்திற்கு பயன்படுத்துவது ?

      மன்னிக்கவும் இப்பதான் குறிப்பை அவதானித்தேன். வளர்மதிக்காக அனுப்பியுள்ளீர்கள்.

  15. யேர்மனியில் விடுதலை உணர்வுடன் நடைபெற்ற கேணல் கிட்டு மற்றும் அவர்களுடன் வீரச்சாவை தழுவிக்கொண்ட மாவீரர்களின் நினைவு வணக்கநிகழ்வு வங்கக் கடலின் நடுவே அந்த தீயாக வேள்வித் தீ எரிந்து அணைந்து இவ் வருடம் 23 ஆண்டுகள் ஓடி மறைந்துவிட்டன .ஆனால் தமிழ் மக்களின் மனங்கள் அதை நினைத்து நினைத்து எரிந்துகொண்டே இருக்கின்றன.கேணல் கிட்டுவும் அவர்களுடன் வந்த ஒன்பது தோழர்களும் தீயோடு தீயாகி வங்கக் கடலில் சங்கமித்த அந்த சம்பவம் சரித்திரம் மறக்காத சாவு மட்டும் அல்ல அது எங்களின் நெஞ்சங்களில் இருந்து நீங்க மறுக்கும் நெடும் அலையாகி நினைவெங்கும் நிலைபெற்று விட்டதொன்று . கேணல் கிட்டு மற்றும் அவர்களுடன் வீரச்சாவை தழுவிக்கொண்ட மாவீரர்களின் நினைவாக யேர்மனியில் Essen நகரில் மண்டபம் நிறைந்த மக்களுடன் வணக்க நிகழ்வு மிகச் சிறப்பாக நடைபெற்றது. பொதுச்சுடர் ஏற்றலுடன் ஆரம்பிக்கப்பட்ட வணக்க நிகழ்வில் , தேசியக்கொடி ஏற்றப்பட்டு ,தொடர்ந்து கேணல் கிட்டு மற்றும் அவருடன் வீரச்சாவை தழுவிக் கொண்ட மாவீரர்களின் திருவுருவப் படங்களுக்கு மலர்தூவி அகவணக்கம் செலுத்தப்பட்டது. தொடர்ந்து விடுதலை உணர்வுடன் அரங்க நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டன , மாவீர்களின் தியாகங்களையும் , அவர்களின் அதி உன்னத அர்ப்பணிப்புகளையும் எடுத்துரைக்கும் விடுதலை நடனங்கள் , கவிதைகள் , நாடகம், , சிறப்புரை என பல்வேறு நிகழ்வுகள் சிறப்பாக அமைந்திருந்தது. இறுதியாக தமிழீழ விடுதலையை வென்றெடுக்கும் ஓர்மத்துடன் அனைவரும் உறுதி எடுத்துக்கொண்டு, வணக்க நிகழ்வு நிறைவுபெற்றது . http://www.kuriyeedu.com/archives/33715http://www.kuriyeedu.com/archives/33715
  16. ஒரு வரலாற்றின் தொடக்கமொன்றை நல்லையிலே படைத்த நாயகனே திலீபா உன் எண்ணமதை ஏற்றிடுவோம்! எம் தேசமதை மீட்டெழுவோம்!
  17. கவிஞர் பாதுகாப்பாக விடுதலையாக வேண்டும். இணைப்புக்கு நன்றி. தமிழினம் உணர்வுநிலைப்பட்டு ஆய்வதிலேயே தனது காலத்தைக் கழிக்கிறது. ஆனால் சிங்களமோ அறிவு சார்ந்தும் நீண்டகால நோக்கிலும் செயற்படுவதோடு வெற்றியும் கண்டுவருகிறது. எனவே ஆயுதப்போரை முடிவுக்குக் கொண்டுவந்த கையோடு பெரும் உளவியல்போரை நீடித்துச்செல்வதினூடாகத் தனது இலக்கை அடைய முனைகிறது. பலமாக ஒன்றிணைந்து செயற்படவேண்டிய தளங்களில் உள்ள தமிழர்கள் ஒருதிசையில் கூடுவதாக இல்லை. அதன் கரணியமாக பொருண்மிய நெருக்கடியில் நின்றவாறும் சிங்களம் தனது திமிரைக்காட்டுகிறது. பலவீனமான எவருடனும் யாரும் நெருங்குவதில்லை. உலகமும் அப்படியே.....
  18. வல்லமைகளின் வாழ்வாக வாழ்ந்து மண்ணிலே மாவீரமாகிவிட்ட வீரனே வீரவணக்கம்! https://www.youtube.com/watch?feature=player_embedded&v=pjnITto6twA#t=18
  19. இனவழிப்பின் கொடும் போரை தடுப்பதற்காய்த் துணிவோடு போரென்ற பொழுதுகளில் நேர் நின்ற வீரர்களே மண்ணுக்காய் வித்தாகி நெஞ்சத்துள் ஒளியாகி நிலைத்துவிட்ட வீரர்களே தலைசாய்த்து வணங்குகின்றோம்!
  20. வணக்கம் புங்கையூரான்.

    என்னை உங்களின் நண்பனாக இணைத்தமைக்கு நன்றி!

  21. சில நாட்களில் இலங்கை அரசியலில் ஈடுபடவுள்ளார் -கே.பி இலங்கை அரசால் கைதுசெய்யப்பட்டு, இலங்கை அழைத்துவரப்பட்டார் கே.பி என்றும், அவர் சிறையில் வாடுவதாகவும், அவரை இலங்கை அரசு சித்திரவதை செய்வதாகவும் கூறப்பட்டு வந்த நிலையில், கே.பி அவருடன் தொலைபேசியில் பேசியிருந்தார், கே.பி இவருடன் பேசினார் என அரசல் புரசலாக பல செய்திகள் அவ்வப்போது வெளியாகி இருந்தது. ஆனால் தற்போது 9 பேர் அடங்கிய தமிழர்கள் குழு ஒன்று அவரைச் சென்று சர்வசாதாரணமாக பார்த்துவிட்டு திரும்பியுள்ளது. அதைத் தொடர்ந்து கே.பி நடத்திய பத்திரிகையாளர் மாநாடும் அதன் விபரங்களையும் லக்பிம வார ஏடு பின்வருமாறு குறிப்பிட்டுள்ளது: சிறீலங்காவுக்கு அழைத்துவரப்பட்ட குமரன் பத்மநாதன் தடுத்து வைக்கப்பட்டு விசாரணை செய்யப்படுவதாக சிறீலங்கா அரசு தெரிவித்திருந்தது. ஆனால் அதன் பின்னர் அவர் எங்கு உள்ளார் என்பதை தென்னிலங்கை மக்கள் கூட அறியவில்லை. ஆனால் திடீரென கே.பி புலம்பெயர் தமிழ் சமூகத்தை சேர்ந்த சிலருடன் வடக்கு – கிழக்குக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கிருந்து திரும்பிய கே.பி குழுவினர் கொழும்பில் உள்ள ஒரு ஆடம்பர விடுதியில் ஊடகவியலாளர்களைச் சந்தித்துள்ளனர். பாதுகாப்பு வாகனங்கள் புடைசூழ வெள்ளை நிற காரில் வந்து இறங்கினார் பத்மநாதன். அவரின் பையை பாதுகாப்பு படையினரே சுமந்து வந்தனர். அவருக்கு தேவையான சிகரட்டையும் அவர்களே ஓடிச் சென்று வாங்கி வந்தனர் எனவும், கே.பியின் குழுவில் அங்கம் வகித்த 9 உறுப்பினர்களில் அவரது உறவினர்கள் சிலரும் இருந்ததாகவும் லக்பிம தெரிவித்துள்ளது. அது மேலும் குறிப்பிடுகையில்.. புலம் பெயர் தமிழர்கள் தற்போது இரண்டாகப் பிளவுற்றிருப்பதாக குறிப்பிடுகிறது. அதாவது கே.பியின் அபிமானிகள் என்று ஒரு பிரிவும், ஈழ விடுதலை ஆதரவாளர்கள் என ஒரு பிரிவாக, புலம்பெயர் தமிழர்கள் இரண்டாகப் பிரிவுற்றுள்ளனராம். இதில் பிரித்தானியாவில் உள்ள பலர் கே.பியோடு தொடர்ந்தும் தொலைபேசியில் உரையாடிவருகின்றனர். குறிப்பாக நாடு கடந்த தமிழீழ அரசில் அங்கத்துவம் வகிக்கும் சிலரும் இதில் அடங்குவர். கே.பியை துருப்புச் சீட்டாக வைத்து இலங்கை அரசு தற்போது ஒரு புதிய அரசியல் யுத்தக் களத்தை திறந்துள்ளதே இப்போது தோன்றியுள்ள நிலையாகும். இதனை புலம்பெயர் தமிழ் சமூகம் எவ்வாறு சமாளிக்கப்போகிறது என்பதே பெரும் பாடாக உள்ளது. எங்கு குத்தினால் தமிழர்களுக்கு வலிக்கும் என்று தெரிந்து வைத்துள்ள இலங்கை அரசு, அதனை தற்போது பாவிக்கிறது. புரியவில்லையா? அதுதான் ""போராளிகளின் புனர்வாழ்வு"" ! இதனைப் பயன்படுத்தி துருப்புச் சீட்டாக கே.பியைக் களமிறக்கி இருக்கிறது இலங்கை அரசு. போராளிகளை வெளியே விட அவர்களுக்கு ஏதாவது கற்கை(கல்வி) கொடுக்கப்படவேண்டும் என இலங்கை அரசு வலியுறுத்துகிறதாம். அதனால் பெரும் நிதியை புலம்பெயர் நாடுகளில் திரட்டி அதனை இலங்கையில் பாவிக்க சில தமிழ் பிரமுகர்கள் நேரடியாகவே பிரயத்தனம் மேற்கொள்ள இருக்கின்றனர். இது இவ்வாறு இருக்க, நாம் ஏற்கனவே எதிர் பார்த்தது போல கே.பிக்கு அரசாங்கம் ஒரு பொது மன்னிப்பை வழங்குவதாக அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்தோடு அவர் அரசுக்கு விடுதலைப் புலிகளின் பெரும் பணத்தை வழங்கினார், மற்றும் கப்பல்களை இலங்கை அரசுக்கு வழங்கினார் என்று செய்திகளை சிங்கள மக்களிடம் திட்டமிட்டு இலங்கை அரசு பரப்பி வருகிறது. எனவே பிற்காலத்தில் அவருக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டாலும் சிங்கள மக்களிடம் இருந்து பெரும் எதிர்ப்பு கிளம்பாது. அத்தோடு விடுதலைப் புலிகளின் தலைவர் கே.பி என்ற வாசகங்களையே இலங்கை அரசு தொடர்ந்தும் வெளிப்படுத்தி வருகிறது, இந்நிலையில் சர்வதேச சமூகத்திற்கு விடுதலைப் புலிகள் தம்மோடு இணைந்தே செயல்பட்டு வருவதாக இலங்கை அரசு தன்னை இனம் காட்டும் அபாயமும் உள்ளது. அத்தோடு கே.பியின் வரவால், கருணா, ஆனந்த சங்கரி, சித்தார்த்தன், டக்ளஸ், மற்றும் அரசுடன் சேர்ந்து இயங்கும் ஒட்டுக் குழுக்களின் எதிர்காலமும் கேள்விக்குறியாக உள்ளது. இதனால் இவர்கள் ஒரு பொது உடன்பாட்டிற்குள் வர சமீபத்தில் ஒன்றுகூடியிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. கே.பி குழுவோடு சென்றிருந்த 9 பேரும், அரசாங்கத்தின் முக்கியமான அமைச்சர் ஒருவரை சந்திக்க ஏற்பாடாகி இருந்ததாம், அந்தவேளை அங்கு வந்த அந்த குறிப்பிட்ட அமைச்சரை, தமிழ் பிரதிநிதிகளில் ஒருவர் கட்டித் தழுவி வாழ்த்துக் கூற முற்பட்டவேளை, அவர் அதனைத் தவிர்த்து கையால் வணக்கம் மட்டும் சொன்னாராம், அத்தோடு இங்கு அரசியல் பேச வேண்டாம், நீங்கள் எதுவும் கேட்கும் நிலையில் இல்லை, அதனால் புனர்வாழ்வு பற்றி மட்டும் பேசினால் போதும் என்று கண்டிப்பாகச் சொல்லிவிட்டாராம். சரணடைந்த பல விடுதலைப் புலிகளின் தலைவர்களை சுட்டுக்கொன்றுள்ள இலங்கை அரசின் இராணுவம் போர்குற்றங்களையும், இனப்படுகொலைகளையும் புரிந்துள்ளது என்பதை எவராலும் மறுக்கவோ மறைக்கவோ முடியாது. எனவே புனர்வாழ்வு மற்றும் மீள் குடியேற்றம் என்ற போர்வையில் இலங்கை அரசு புலம்பெயர் தமிழர்களுக்கு இடையே ஊடுருவி போர்குற்ற முன்னெடுப்புக்களைத் தடைசெய்யக்கூடும் அல்லது முன்னெடுக்கப்படும் விடயங்களை அறிந்து அவற்றை செயலிழக்கச் செய்ய முடியும். எனவே அரசாங்கத்துடன் சேர்ந்து இயங்குவோர் இது குறித்து மிகுந்த கவனம் கொள்வது நல்லது. இலங்கை அரசின் நோக்கம் அதன் செயல்பாடுகள் குறித்து அறிந்து, தெளிவுபெறுதல், நல்லது. ஒரு சிலரின் சுயலாபம், மற்றும் அரசியல் நலனுக்காக எமது இனத்தின் மானத்தை அடகு வைக்கவேண்டாம். சூழ் நிலைக் கைதியாக இருக்கும் கே.பி குறித்தும் மிக அவதானமாகச் செயல்படுவதே நல்லது. இன்னும் சில நாட்களில் இலங்கை அரசியலில் ஈடுபடவுள்ள கே.பி விரைவில் இந்த மாதிரியான தோற்றத்தையே தமிழ் மக்களிடம் பெறப்போகிறார். நன்றி - பதிவு இணையம்
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.