-
Posts
5737 -
Joined
-
Last visited
-
Days Won
7
Content Type
Profiles
Forums
Events
Blogs
Gallery
Everything posted by nochchi
-
மாகாண சபைத் தேர்தலை கால தாமதமின்றி நடத்தக் கோரும் சுமந்திரன்!
nochchi replied to கிருபன்'s topic in ஊர்ப் புதினம்
அநுரவும் தேர்தல் ஆணையாளரும் எடுக்கவேண்டிய முடிவென்றல்லவா நான் நினைத்தேன். நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி -
தமிழ்சிறியவர்களது கருத்தே இதற்கான பதிலாகப் பொருந்திப்போகிறது. உலகவல்லாதிக்க சக்திகள் தமது இருப்பிற்காக மக்களைக்கொன்றொழித்து, வளங்களை சுரண்டிப்பெருத்துவருகின்றன. அணுஆயுதம் வைத்திருப்பதாகக் கூறி ஈராக்கினுள் புகுந்து எதைச்செய்தார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும். குர்துகளைக் கொன்றதாக சதாமைத் தூக்கில்போட்ட இவர்களால், மகிந்தவையோ மற்றும் நெத்ன்யாகுவையோ அப்படிச் செய்ய முடியுமா? சீனாவில் சிறுபான்மைகள் நசுக்கப்படுவதாகக் கூப்பாடு. ஏன் காஸா அழிவைத் தடுக்காது பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். இப்படிப் பல தொடர்கள் உள்ளன. இதுவரை ஆதிக்கசக்திகளுக்குப் பயங்கரவாதிகளாகத் தெரிந்தோரை வைத்து மற்றொரு ஆதிக்கசக்தியை வீழ்த்தியுள்ளனர். இதிலே நாடு எப்படியாக வேண்டும் என்பது மக்களின் முடிவு. நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
-
மாகாண சபைத் தேர்தலை கால தாமதமின்றி நடத்தக் கோரும் சுமந்திரன்!
nochchi replied to கிருபன்'s topic in ஊர்ப் புதினம்
தமிழர்களது பலத்தை அணுஅணுவாகச் சிதைக்காது ஓயாரென்று சொல்கிறீர்கள் என்று எடுக்கலாமா? -
தமிழ்த்திறன் மாநிலப் போட்டி- 2024 Posted on December 7, 2024 by சமர்வீரன் 32 0 https://www.kuriyeedu.com/?p=640869
-
இதனை எதிர்கொள்ளக்கூடியவாறு தமிழ்த்தலைமைகள் இல்லாதது பெருந்துயரம். நாடாளுமன்றக் கொள்கைவிளக்க உரையில் அநுர தமிழரது பிரச்சினைகுறித்துத் தொட்டுக்கூடப்பார்க்கவில்லை. க.பொ.வைத்தவிர அனைவரும் சபையில் பாராட்டுத்தெரிவித்துவிட்டு வந்துள்ளார்கள். அங்கே வைத்து எமது பிரச்சினைகளை விவாதித்தால் சிங்கள மக்களையும் சென்றடையும் என்றுகூட யோசிக்கவில்லை. நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
-
உண்மையான நிலை இதுதான். ஆனால், சிங்களமக்கள் எதிர்காவிடினும் ரில்வின் மற்றும் பிக்குகளை வைத்துச் சிங்களக் கடும்போக்குவாதிகளையும், சிங்களவரையும் இணைத்துப் போராட வைத்து ஏதோ பெரிதாக அதிகாரப்பகிர்வு தமிழருக்குக் கொடுப்பதாக உலகுக்குக்காட்டித் தமிழருக்கு நாமம் போடும் இலக்கை அடையக்கூடும். நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
-
குமாரசாமி ஐயா நல்லது, நாம் கடந்த 100 ஆண்டுகளாகச் சிங்கள ஆதிக்கத்தின் கீழ் இருந்துவருகின்றோம். ஈழத்தீவிலே சீனர்களது வருகை நீண்டது. ஆனால், 1960இன் பின் சிறிமாவோ அவர்களது ஆட்சிக்காலத்திலேதான் அரசியல் மட்டத்தில் நெருங்கினார்கள் என்று நினைக்கின்றேன். ஆனால், இந்தியா வல்லரசு என்று கூவ வெளிக்கிடவும், பொருண்மியத்தில் வளர்நிலையில் இருந்த சீனா முதலில் சந்தைப்பொருண்மியத்தில் தொடங்கி இன்று பொருண்மிய ஆதிக்கமாக வளர்ந்துள்ளதைக் காண்கின்றோம். இங்கே இந்தியா மிகமிக அருகில்; தமிழனத்தின் சுயநிர்ணயஉரிமைக்கு மிகப்பெரும் தடைக்கல்லாகவும் இருக்கிறது. திபெத்தை ஆதரிக்கும் இந்தியா எம் அரசியல் உரித்தை எதிர்க்கிறது. அதற்காகத் தமிழீழத்தைச் சீனா ஏற்றதாகக்கூறவில்லை. எப்படிக் கருணாநிதியைச் சோனியா சத்தம்போடாமற் தமிழகத்தை வெச்சிருக்க வைத்து இனஅழிப்புக்கு துணைபோனாவோளூ அதேபோல் 13ஐத் தூக்கேக்க நீங்களும் சத்தம்போடக்கூடாது என்று அரசியல்மொழியிலை சொல்லப்போறார். சீனா ஓர் நேர்மையான எதிர்நிலையென்றால், இந்தியா சூழ்ச்சித்தனமான ஆதரவுநிலை. சிங்களத்தின் கொண்டையைப் பிடிக்க தமிழரைக் கொக்கியாகப் பார்க்கிறது. ஆனால், அதனைக் கடப்பதே ஜனதா விமுக்தி பெரமுனவினது (JVP)மறுவடிவான ஜாதிய ஜன பலவேகயவினது(NPP) இன்றைய நிலைப்பாடு என்றே எண்ணுகின்றேன். அதன்பின்; யாழுறவுகள் சுட்டுவதுபோல் எல்லோரும் இலங்கையர் என்று தமிழரைச் சிங்களத்துள் கரைத்துவிடுதல். தமிழினம் தமது நட்புச்சக்திகளை இனங்காண்பது அல்லது நட்புச்சக்திகளை கண்டடைவது என்ற அரசியல் தொலைநோக்குச் செயற்பாடுகள் மிகமிக அவசியமானது. ஆனால், புலம்பெயர் தேசத்திலும்(கனடா தவிர்த்து)ஈழத்திலும் அதற்கான அறிகுறிகளையே காணவில்லை என்பது பெரும் பலவீனமாகும். சிலவேளை கடன்கொடுத்த சக்திகளான இந்தியா, சீனா மற்றும் மேற்குலகக் கூட்டு ஈழத்தீவை மூன்றாகப் பிரித்தெடுத்தாலும், எடுக்கலாம். ஆனால் அவர்கள் இப்படிப் பிரித்தால் நல்லது. யாழ்ப்பாண அரசு, கண்டியரசு மற்றும் கோட்டையரசு என்றால் சிறப்பு. நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
-
செல்வம் மற்றும் சுரேஸ் இவர்கள் இருவரையும் இயக்குவது இந்தியாவின் RAW என்று அழைக்கப்படும் வெளியகப் புலனாய்வு அமைப்பாகும். எனவே இங்கு நடைபெறும் அனைத்து உரையாடல்களும் அப்படியே கொண்டுபோய்ச் சேர்ப்பார்கள். எனவே கூடியவரை வெளிப்படைத்தன்மையோடு நடந்து ஊடகங்கள்வரை சென்றடைவது ஒன்றுபட முனையும் தமிழ்த் தரபு;புகளுக்குச் சாதகாமாக அமையும். இவர்கள் நாளை இந்தியாவின் சொல்கேட்டு குழப்பிவிடக்குகூடிய சூழலையும் கருத்திலே எடுக்க வேண்டும். நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
-
ஜனதா விமுக்தி பெரமுனவினது (JVP)மறுவடிவான ஜாதிய ஜன பலவேகயவினது(NPP) அரசியல் நிகழ் நிரலில் அவர்கள் முதலில் கையிலெடுப்பது 13ஆவது நீக்கமாகவே இருக்கும்.(இது ஏலவே கள உறவுகளால் யாழில் குறிப்பிடப்பட்டது) அவர்கள் அதனை ரில்வின் சில்வாவூடாக நூல்விட்டுப்பார்க்க, எங்கள் இந்திய முகவர்களான தமிழ்த்தலைமைகள் உட்படத் தமிழ்த் தேசியத் தலைமைகளும் வாய்விட்டு கொக்கரித்து நிற்கின்றார்கள். 13கிடையாது என்பதை இந்தியப் பயணத்தின் பின்னர் அனுர அரசு உறுதியாகக் கூறும். அதற்குப்பதிலாக நேரடியாக இந்தியாவோடு பொருண்மிய மற்றும் பாதுகாப்பு ஒப்பந்தமொன்றைச் செய்து தமிழரது அரசியலை ஒடுக்கிவிடும். நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
-
நாம் தமிழரும் தற்போதைய விலகல் சலசலப்புகளும்
nochchi replied to rajen ammaan002's topic in யாழ் அரிச்சுவடி
குருதியாற்றில் மிதந்தமிழ்ந்துபோய் அவலத்துள் வாடும் தமிழீழத்தவரே இன்னும் தமது அரசியலைச் சரியாகப் புரிந்துகொண்டு கடந்த 15 ஆண்டுகளில் கையிலெடுத்தாளவில்லை. இந்தநிலையில், சுயமாகச் சிந்திக்காது திரைக்கவர்ச்சியில் அள்ளுண்டு வாழும் மக்களைப் பெரும்பான்மையாகக் கொண்டுள்ள தமிழக அரசியலைத் தமிழீழத்தவர் நம்பிப் போராடப் புறப்படவில்லையென்றே நினைக்கின்றேன். தமிழகம் மொழி,கலை மற்றும் பண்பாட்டால் எமது தார்மீகப் பின்தளமாகவும், ஒருகூட்டுணர்வின் அடிப்படையில் தமிழ்த் தேசியத்தின் தூணாகவும் நின்று காக்கவேண்டிய கடமையை நேர்மையோடு எந்தவொரு தமிழக அரசியல் தலைமைகளும் அணுகவில்லை. ஜோ.பெர்னாண்டஸ் போன்றோ, தமிழக முதல்வராயிருந்த ம.கோ.இராமச்சந்திரன் போன்றோ தற்துணிவோடு எவரும் அணுகவில்லை. இன்று இருப்பதைத் தக்கவைக்கவே தமிழினம் போராடவேண்டிய புறநிலையைத் தமிழகத்திலுள்ள, தமிழீழத்தவர்மீது உண்மையான அக்கறையுள்ள தலைவர்கள் தமது கட்சியரசியலைக்கடந்து சிந்திப்பதாகவும் இல்லை. இந்தநிலை தமிழகத்தில் மாறப்போவதில்லை. தமிழீழ ஆதரவு அமைப்பென்று மு.கருணாநிதி தலைமையில் தமது சுயநல அரசியலுக்காக 1985இல் தொடங்கப்பட்ட அமைப்பினது செயற்பாடுகளைத் திரும்பிப்பார்த்தாலே புரிந்தககொள்ளமுடியும். தமிழீழ மக்கள் முதலில் தம்மைத் தாம் நம்பவேண்டும். தற்போதுள்ள சூழலை எப்படி எதிர்கொள்வதென்பதை சிந்திக்க வேண்டும். தாயகக்கட்சிகள் ஒரு பொதுவேலைத்திட்டத்தில் ஒருங்கிணைய (அண்மைய சிறீதரன் மற்றும் கயேந்திரகுமார் சந்திப்பு) தமிழ் உறவுகள் அழுத்தம் கொடுத்து ஒன்றிணைக்க வேண்டும். அதற்கான புறநிலையாக அண்மைய தேர்தலைத் தமிழ்த் தலைமைகள் நோக்குவதோடு, சுயபுராணப் பந்தாக்களைக்களைந்து ஆரோக்கியமான அரசியலை நோக்கிச்செல்ல முனையாவிடின் தமிழர் தாயகத்தில் மாற்றுச் சக்திகள் பலம்பெறுவது தவிர்க்கமுடியாததாகும். தமிழினத்தின் அழிவையும் தடுக்க முடியாது போகும். தமிழின விடுதலைக்கான குறிப்பிடத்தக்க ஆற்றலைக் கொண்டுள்ள தமிழக அரசியலுள் எம்மால் ஏதாவது செய்ய முடியுமா? இல்லைத்தானே. ஆதரவு தருவோரை அரவணைத்தவாறு நாம் அதனைக் கடந்துசெல்வதே சரியானது. தமிழர் தயாகத்தில் இனி இரத்த ஆறு ஓடாது. ஒரே பிரித்தோதும் சத்தமே கேட்கும் நிலையாகும். நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி -
வடமாணத்தில் 3ஆசனங்களைப் பெற்றதன் வாயிலாகச் சிங்களம் பெரும் திருப்தியோடு நகர்கின்ற அதேவேளை, சிங்களத்தின் கடைசி இலக்காக உள்ள புலம்பெயர்ஸ்(சிலர் இங்கு குறிப்பிடுவதுபோல்)ஸை நோக்கிச் சுட்டுவிரலைப் பிக்கு தெளிவாகக் காட்டுகிறார். தமிழர் பகுதிகளில் புலம்பெயர் தமிழரது தொண்டுகளைத் திரிபுபடுத்தி, அதற்கு இப்படியொரு முத்திரையைக் குத்துவதன் ஊடாகத் தமிழரை தொடர்ந்து சிங்களத்திடம் கையேந்துவோராக வைத்திருக்க முனைகிறார்கள். கையேந்துவோராக இருந்தால்தான் பிக்குகள் என்ற பெயரில் மாறுவேடத்தில் உலவும் நவீன நிலப்பறிப்பாளர்களான சிங்களவர்கள் எல்லைகளில் உள்ள கிராமங்களில் நுளைந்து மதமாற்றம் மற்றும் நிலப்பறிப்பு என்பவற்றைச் செய்யமுடியும். நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
-
இலங்கையில் மாகாண சபை முறைமையை முடிவுக்கு கொண்டுவர அரசாங்கம் தீர்மானம்
nochchi replied to ஏராளன்'s topic in ஊர்ப் புதினம்
இது சிலவேளை சிலபேருக்கு ஆச்சரியமாக இருக்கும். நான் எதிர்பார்த்தேன். அதேவேளை 18.11.2024 அன்று'வடக்கு பறிபோனது கிழக்கு பலமடைந்தது' எழுதிய கருத்தில் 13க்கு என்ன நடக்கும் என்பதைச் சுட்டியிருந்தேன். அநுரவின் இனவாதமுகம் இவளவு விரைவாக வெளித்தெரியவரும் என்று எண்ணவில்லை. நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி -
தேசியத் தலைவரின் 70வது அகவை! பலெர்மோ கேக் வெட்டி கொண்டாட்டம்!
nochchi replied to nochchi's topic in வாழும் புலம்
நன்று,நன்றி... இதுதான் மேற்குநாடுகள், புலம்பெயர் அமைப்புகளைப்பார்த்து யோசிக்க வைக்கிறது.பிரபாகரக் கோட்டுபாடு இளையோரிடையே ஆழப்பதிந்து ஆக்ரோசமாக எழுந்துவிடுமோ என்ற ஆய்வுகளைச் செய்கிறார்கள். எடுத்துக்காட்டிற்காக ஒரு விடயத்தைக் குறிப்பிடலாம். யேர்மனியத் தமிழ்க் கல்விக் கழகத்தின் பாடநூல்கள் உரியவர்களால் ஆய்வுக்குட்படுத்தப்பட்டுள்ளதாக அண்மையில் அறிந்துகொண்டேன். யேர்மனியிலும் சில இளையோரது பற்றை அவதானிக்கும்போது, அதிசயமாக இருக்கிறது. காணவில்லை.பேசவில்லை.பழகவில்லை.ஆனால் தலைவர்மீது அளவிடமுடியாத பற்று. பிரபாகரம் அழிவற்றது. நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி -
தேசியத் தலைவரின் 70வது அகவை! பலெர்மோ கேக் வெட்டி கொண்டாட்டம்!
nochchi replied to nochchi's topic in வாழும் புலம்
உண்மையிலே சிறப்பு. -
தேசியத் தலைவரின் 70வது அகவை! பலெர்மோ கேக் வெட்டி கொண்டாட்டம்!
nochchi posted a topic in வாழும் புலம்
தமிழீழத் தாய் பெற்றெடுத்த சூரியதேவன், தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் 70வது அகவைதினக் கொண்டாட்டம் பலெர்மோவில் மிகவும் விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. மக்கள் எல்லோரும் இனிப்புப் பண்டங்கள் வழங்கி, மகிழ்ச்சியாக தலைவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தனர் https://firetamil.com/?p=5799 -
உண்மையான இடதுசாரிகளென்று, இன்று உலகில் எங்குமே இல்லை. இதில் சிங்கள பௌத்த பேரினவாதத்துள் ஊறியவர்களைக் கூறவும் வேண்டுமா? உண்மையான இடதுசாரிகளாயின் சுனாமிக்காலத்தில் உருவான கட்டமைப்மைப்புக்கான ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டிருக்கும். அதன் தொடர்ச்சியாக நல்ல மாற்றங்கள் நிகழ்ந்திருக்கும். அதற்கான வாய்ப்புகளைக் குழப்பியயடித்தவர்கள். இவர்களிடம் எமது மக்கள் அதிகம் எதிர்பார்கிறார்கள். ஆனால், இறுதியில் ஏமாற்றமே பரிசாகும். நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
-
இந்திய மேற்குலக்கூட்டுகுச் சாதகமான அரசியலே கடந்த 15ஆண்களாக நடைபெற்றது. அடுத்துவரும் அநுர அரசும் அப்படியே. முதல் பயணமே இந்தியா. சீனாவுக்கோ அல்லது ரஸ்யாவுக்கோ போகவில்லை. எமது பிரச்சினை தீரும்வரை பேசவேண்டியதேவையும் இருக்கும். அது ஒருவேளை சிங்களத்துக்காக இனவாதத்தோடு நாய் குலைத்தாற்கூட பதிலளிக்க வேண்டிய சூழலே தமிழினத்தினதாக உள்ளது. நாம் எமது தலைமுறையில் காணமுடியாமல் போனாலும் அடுத்தலைமுறைக்காவது இவற்றைப் பதியமிடப் பேசவேண்டும். எதிர்ப்பைப் பதிவுசெய்ய வேண்டும். நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
-
இதனை யார் செய்திருந்தாலும், எமக்காகத் தமிழ்த் தேசியம் என்ற தமிழினத்தின் இருப்புக்காகத் தம்மை ஈந்தளித்தோரை வணங்க்கும் மாதத்தில் தேவையற்ற குழம்பங்களுக்கு வழிசமைக்கலாம். அதேவேளை விமல், ரில்வின் போன்ற சானாதிபதியின் நிழற்குடைப் பரப்புரைகள் சும்மாவே ஆடுவார்கள்...... அப்படியிருக்கும்போது தமிழினம் ஏனிப்படி மறைகழண்டவர்கள்போல் யோசிக்கிறார்களோ தெரியவில்லை.
-
அதுதான் சிங்களம். சிங்களம் தான் விரும்போது, தனது தேவைகருதி, தனது இனநலன் சார்ந்து மட்டுமே முடிவெடுக்கும். தமிழர்களைப்போலல்லத்தானே. நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
-
“தேசம்” ”சுயநிர்ணய உரிமை”: இனவாதமல்ல Sri Lanka.4 hours ago தேசிய மக்கள் சக்திக்கு பெருமளவில் வாக்களித்ததன் மூலம் வடபகுதி மக்கள் இனவாத்தை கைவிட்டுள்ளதாக ஜேவிபியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா கூறியிருக்கிறார். ஆனால் ஒரு இனத்தின் “சுயமரியாதை - நாகரிகம்” ”மரபு வழித் தாயகம்” என்பதை உள்ளடக்கிய அரசியல் விடுதலைப் போராட்டம் 'இனவாதம்' அல்ல. “இனவாதம்” என்பது ஒரு இனம் ஏனை இனங்களைவிட மேலானது என்ற உள்ளார்ந்த எண்ணத்தை அடிப்படையாகக் கொண்டது. ஒரு இனத்தின் “சுயமரியாதை - நாகரிகம்” என்பது 'சுயநிர்ணய உரிமை' 'தேசம்' பற்றிய கோட்பாட்டுக்குள் அடங்கும். ஆகவே இவற்றை இனவாதம் என்றால் 'இலங்கை அரசு' என்ற கட்டமைப்பின் ஒற்றையாட்சி அரசியல் யாப்பில் பௌத்த சமய முன்னுரிமையும் தமிழ் - முஸ்லிம் பிரதிநிதிகள் ஜனாதிபதியாக - பிரதமராக பதவி வகிக்க முடியாத பின்னணிகளும் இனவாத நோக்கம் கொண்டவை என்று பொருள் கொள்ள முடியும் அல்லவா? 1945ஆம் ஆண்டில், ஐக்கிய நாடுகள் சபையின் உருவாக்கத்தின் போது, ஐக்கிய நாடுகளின் சாசனத்தின் 1(2), 55(c) சரத்துகளில், 'சம உரிமை, மக்களின் சுயநிர்ணய உரிமை (Equal Rights and Self-Determination of Peoples) ஆகியவற்றின் அடிப்படையிலான தேசங்கள் பற்றிய சட்டவிளக்கம் உண்டு. இலங்கைத்தீவில் 'சோசலிச சமத்துவம்' என்பதை அடிப்படையாகக் கொண்டு ஜேவிபி இரண்டு முறை அயுதப் போராட்டம் நடத்தித் தோல்வி கண்ட நிலையில், 1994ஆம் ஆண்டு முதல் முதல் ஜனநாயக வழியில் அரசியலுக்குள் நுழைந்தது. ஆனால் ஆரம்பகாலம் முதல் ஈழத் தமிழர்களின் சுயநிர்ணய உரிமை என்பதை ஏற்க மறுத்திருந்தது. இப் பின்னணியில் 2024ஆம் ஆண்டு நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாகவும் அறுதிப் பெரும்பான்மை கொண்ட நாடாளுமன்றத்துடனும் ஆட்சிக்கு வந்துள்ள ஜேவிபி எனப்படும் மக்கள் சக்தி தற்போது 'தேசம்' 'சுயநிர்ணய உரிமை' என்ற ஒரு இனத்தின் சுயமரியாதைக்குரிய கோட்பாடுகளை இனவாதமாகச் சித்தரிக்க முனைவது அரசியல் வேடிக்கை. வெளிச் சக்திகளின் வற்புறுத்தல்கள் இன்றி, ஒரு இனக் குழுமம் தனது செயற்பாடுகளைத் தானே தெரிவு செய்துகொள்ளும் தத்துவமே சுயநிர்ண உரிமை என்பதன் மற்றுமொரு விளக்கம். தேசம் (Nation) என்பது பெரும்பாலும் ஒரே மொழியை தாய்மொழியாய் கொண்ட இனக் குழுக்கள் வாழும் தாய்நிலப் பகுதிகளாகும். நாடு (Country) என்பது நிர்வாகத்துக்காக தோற்றுவிக்கப்பட்ட பகுதியாகும். உலகில் பல தேசங்களை கொண்ட நாடுகளும் உண்டு. சங்க இலக்கியங்களில் தமிழ்த்தேசம் என்பதற்கு வரையறையாக ”மொழி” என்பதை மையமாக் கொண்டு சொல்லப்படுகிறது. பெரும்பாலும் தேசம் என்பதற்கு மொழி, மரபு, இனக்குழு, குடிவழக்கு போன்றவை ஒருங்கே அமையப்பெற்றதாக வரையறை வகுக்கப்படுகிறது. வடக்குக் கிழக்குத் தமிழ் மக்களின் அரசியல் விடுதலையை எடுத்துரைத்த திம்புக் கோட்பாட்டின் முதலாவது பகுதியானது 'இலங்கைத் தமிழர் ஒரு தேசமாக அங்கிகரிக்கப்படுதல்' என்று சட்ட வியாக்கியாணம் செய்கிறது. தேசம் என்ற சொல்லை வரைவிலக்கணம் செய்த சோவியத் யூனியனின் காம்யூனிஸ போராளியான ஜோசப் ஸ்டாலின், 'வரலாற்று ரீதியாகக் கட்டமைந்த, பொதுவான மொழி, பொதுவான பிரதேசம், பொதுவான பொருளாதார வாழ்க்கை, பொதுக் கலாசாரத்தினூடாக வெளிப்படும் பொதுவான உளவியலமைப்பு ஆகிய அடிப்படைகளைக் கொண்டமைந்த, நிலையான மக்கள் சமூகமொன்று, ஒரு தேசமாகும்' என்று வரையறுக்கிறார். குறிப்பாக பொதுவான மொழி, பொதுவான பிரதேசம், பொதுவான பொருளாதார வாழ்க்கை, பொதுக் கலாசாரத்தினூடாக வெளிப்படும் பொதுவான உளவியலமைப்பு ஆகிய அம்சங்களை, ஒரு மக்கள் சமூகமானது, ஒரு தனித்த தேசமாக வரையறுக்க முடியும். ஒரு தேசத்தின் இருப்பு என்பது, 'நித்திய பொதுவாக்கெடுப்பு' என்று ஏனஸ்ட் றெனன் என்ற அறிஞன் வரையறுக்கிறார். இதனை மையமாக் கொண்டே வடக்குக் கிழக்கு இணைந்த தயாகம் என்பதற்கும் ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமை என்பதை அங்கீகரிக்கவும் பொதுவாக்கெடுப்பு ஒன்றை சிவில் சமூக அமைப்புகள் கோரி வருகின்றன. 'சர்வதேச சட்டத்தில், அங்கிகரிக்கப்பட்ட மூலாதாரங்கள், சுயநிர்ணய உரிமையானது பொதுவாக உள்ளகச் சுயநிர்ணய உரிமை மூலம் நிறைவேற்றப்படுவதாக நிறுவுகிறது” என்று கியூபெக் மாநிலத்தின் பிரிவினை தொடர்பான வழக்கில், கனடிய உச்சநீதிமன்றம் பொருள் கோடல் செய்துள்ளது. ஆகவே இச் சர்வதேச சட்ட விளக்கங்களை எவருமே மறுக்க முடியாது. 1920 ஆம் ஆண்டு இலங்கைத் தேசிய இயக்கப்பிளவும் 1921 இல் உருவான தமிழர் மகா சபையுயும் சிங்கள - தமிழ் இன முரண்பாட்டின் ஆரம்பம். அன்றில் இருந்து இன்றுவரை உருவாக்கப்பட்ட எந்தவொரு அரசியல் யாப்புக்களிலும் ஈழத்த் தமிழர்களின் சுயநிரிணய உரிமை மறுதலிக்கப்பட்டு வந்த பின்னணியில் அகிம்சைப் போராட்டங்களும் அதன் பின்னர் ஆயுதப் போராட்டங்களும் உருவெடுத்திருந்தன. 2009 மே மாதத்திற்குப் பின்னரான 15 ஆண்டுகளிலும் தொடர்ச்சியாக மறுதலிப்புகளே விஞ்சிக் காணப்பட்டன. இன நல்லிணக்கத்தை ஏற்கும் பொறுப்புக் கூறலில் இருந்து இலங்கை விலகிச் செல்கிறது என ஜெனீவா மனித உாிமைச் சபையும் குற்றம் சுமத்தியிருந்தது. இப் பின்னணியில் புதிய அரசியல் யாப்பு ஒன்றை உருவாக்கும் போது தமிழர்களின் ”தேசம்” ”சுயநிர்ணய உரிமை” மற்றும் வடக்கு கிழக்கு இணைப்பு பற்றிய உரையாடல்கள் அனைத்தையும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இனவாதமாகவே கருதும் என்றால், பொருளாதார நெருக்கடி பிரச்சினைக்கும் தீர்வு கிடைக்காது. 1948இல் இருந்து அரசியல் - பொருளாதார பொறிமுறைகள் வகுக்கப்பட்ட போது தமிழ் - முஸ்லிம் மக்கள் உள்வாங்கப்பட்டவில்லை. இதனால் எழுந்த 30 வருட போர் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு பிரதான காரணம் என்கிறார் அசோக லியனகே என்ற பொருளியல் ஆய்வாளர். இன்று வெளியான 'ஒருவன்' நாளிதழின் ஆசிரியர் தலையங்கம் https://oruvan.com/sri-lanka/2024/11/18/nation-right-to-self-determination