ஒரே நாளில் அதிகளவானர்கள் கைது
தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் 1,561 பேர், கடந்த 24 மணித்தியாலத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
நேற்றைய தினமே இவ்வாறு அதிகளவானோர் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
அதிகமானோர் குளியாப்பிட்டி, கண்டி மற்றும் மாத்தளை ஆகிய பகுதிகளில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை, கடந்த ஒக்டோபர் மாதம் 30ஆம் திகதி முதல் இதுவரையில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 36,921 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.https://www.tamilmirror.lk/செய்திகள்/ஒர-நளல-அதகளவனரகள-கத/175-274328