“நாத மதுர கீதன்”, “கானவாரிதி”, “நாதஸ்வரக் கலைமாணி” போன்ற பட்டங்களைப் பெற்ற,, நாதஸ்வர நாயகன் PS பாலமுருகன் அவர்களின் இனிமையான குரலில்
கண்ட நாள் முதலாய் காதல் பெருகுதடி
கையினில் வேல் பிடித்த கருணை சிவபாலனை
கண்ட நாள் முதலாய் காதல் பெருகுதடி
(கண்ட நாள் முதலாய்…
வண்டிசை பாடும் எழில் வசந்த பூங்காவில்
வந்து சுகம் தந்த கந்தனை என் காந்தனை
(கண்ட நாள் முதலாய்…
நீலமயில் தனை நெஞ்சமும் மறக்கவில்லை
நேசமுடன் கலந்த பாசமும் மறக்கவில்லை
கோலக்குமரன் மனக்கோயிலில் நிறைந்துவிட்டான்
குறுநகை தனைக்காட்டி நறுமலர் சூட்டிவிட்டான்