ஒருவர் தினம் ஹோட்டலில் தோசைக்கு சர்க்கரை கேட்டு தொந்தரவு செய்ய !
முதலாளி கடைக்கு வெளியே பலகையில் இப்படி எழுதி வைத்தார் !!
" இன்று முதல் தோசைக்கு சர்க்கரை !!! கிடையாது என்று ! "
நம்ம ஆளு புத்திசாலி ஆச்சே !
முதல்ல ஒரு தோசை சட்னி சாம்பாரில் சாப்பிட்டார் !
பிறகு சர்வரிடம் இன்னொரு தோசை கொண்டு வர சொன்னார் !
கூடவே சர்க்கரையும் எடுத்து வர சொல்ல !
கோபம் அடைந்த சர்வர் !
என்னப்பா வெளியில் பலகையை பார்க்க வில்லையா ! என்று கேட்க !
அதற்க்கு நம்ம ஆள் சிரித்து கொண்டே சொன்னாராம் !
தம்பி நல்லா படித்து பார் !
இன்று முதல் தோசைக்கு சர்க்கரை இல்லை என்று தான் போட்டு இருக்கு !
நான் இரண்டாவது தோசைக்கு தான் கேட்கிறேன் போய் எடுத்து வா என்றாராம்!!!!!!!!!!!!