Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அன்புத்தம்பி

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by அன்புத்தம்பி

  1. ஒரு ஊரில் அரசன் ஒருவன் இருந்தார். அதிகாலையில் எழுந்தவுடன் சூரிய உதயத்தைப் பார்ப்பது அவரது வழக்கம். வழக்கம் போல் அன்றும் சாளரத்தை த் திறந்த அரசருக்கு ஏமாற்றம்! சூரிய உதயத்துக்குப் பதில் அவர் கண்களி ல் ஒரு பிச்சைக்காரன் தான் தோன் றினான். போயும் போயும் இவன் முக த்தில் தான் விழிப்பதா என்று கடும் வெறுப்புடன் திரும்பினார் அரசர். திரும்பிய வேகத்தில் சுவற்றில் அவ ரது தலை அடிபட்டு இரத்தம் கொட்டி யது. வலியோ பொறுக்க முடியவில் லை. அத்துடன் கோபம் வேறு பொங் கியது… பிச்சைக்காரனை இழுத்து வருமாறு கட்டளையிட்டார். காவலர்கள் அவனை இழுத்துக் கொண்டு வந்து மன்னர் முன்னே நிறுத்தினர். அரச சபை கூடியது. தனது காயத்துக்கு காரணமாக இருந்த அந்த பிச் சைக்காரனை தூக்கிலிடுமாறு தண்டனையும் கொடுத்தார். பிச்சைக்காரன் கலங்கவில்லை; கலகலவெனச் சிரிக்கத் தொடங்கி னான். சபையில் இருந்தவர்கள் திகைப்புடன் விழித்தனர். அரசனுக்கோ, கோபம் கட்டுக்கடங்காமல் போய் விட்டது… பைத்திய க்காரனே! எதற்குச் சிரிக்கிறாய் என் று ஆத்திரத்துடன் கேட்டார். அரசே! என் முகத்தில் விழித்ததால் உங்கள் தலையில் சிறு காயம் மட்டு ம் தான் ஏற்பட்டது. ஆனால், உங்கள் முகத்தில் நான் விழித்ததால், என் தலையே போகப் போகிறதே…அதை நினைத்தேன் சிரித்தேன் என்றான். மன்னன் தலை தானாகவே கவிழ்ந் து விட்டது. தவறை உணர்ந்தவன் தண்டனையை ரத்துசெய்து பிச்சைக் காரனை விடுவித்தான். தைரியம் என்பது தன்னம்பிக்கையின் மறுபெயர். அது இல்லையென் றால், சமயத்தில் உயிரைக் கூட காப்பாற்றிக் கொள்ள முடியாமல் போய் விடும்.
  2. அருள்செய்யும் அருளானந்த பிள்ளையார் அருள்செய்யும் அகிலமே போற்றும் அருளானந்த பிள்ளையார்
  3. பட்டினத்தார் சொன்னது* உணவை தான் உண்டேன் எப்படி மலம் ஆனது? உயிரோடுதானே இருந்தேன் எப்படி மாண்டு போனேன்? மலம்தான் உணவாக இருந்ததா? மரணம்தான் வாழ்வாய் இருந்ததா? . இந்த சுருங்கி போன உடம்புதான் இதுவரை இளமையை சுகித்ததா? இந்த சூம்பும் மார்புகளுக்கா இத்தனை கண்கள் வட்டமிட்டது? பெருத்தன சிறுக்கும் சிறுத்தன பெருக்கும் என்று பட்டினத்தார் பாடியது இந்த நிலையற்ற பொய் வாழ்வை தானா? "இன்னும் இழுத்து கொண்டு இருக்கிறான். செத்து தொலையவில்லையே" என்று மனைவியும் சுற்றமும் பேசியது எனக்கு அவர்கள் என்னை நூறாண்டு வாழ்க என வாழ்த்தியது நினைவுக்கு வந்தது. இதுவரை எனது கோடாரியால் நான் எனது வேரையல்லவா வெட்டியிருக்கிறேன் ! நான் விரும்பியவை எல்லாம் என்னைவெறுத்துகொண்டிருந்தது இளமையாய் இருக்கும் போதே முதுமையை பழகி இருக்கவேண்டும் அறுசுவை உணவை தேடி தேடி உண்ணும் போதே அது மலமாகும் என்று உணர்ந்திருந்தால், அடுத்தவர் உணவை நான் பறித்திருக்கமாட்டேன். அனைவருக்கும் பயன்படவேண்டிய பொன் பொருளை ஒரு திருடனை போல் பதுக்கி இருக்கமாட்டேன். காலம் கடந்த ஞானம். பாயும் நோயும் தவிர யார் துணை வரப்போகிறார்கள். இறந்தாலும் எனக்காக யார் அழப்போகிறார்கள்? பிணமானப்பின் இந்த மாளிகையும் பணமும் எனதென்று நான் சொந்தம் கொள்ளவா முடியும்? சந்தனத்தால் மணந்த உடல் என்றாலும் இறந்தால் மணக்கவா போகிறது? கண்ணே மணியே என்று கொஞ்சிய தாயும், காதலா, என் உயிரே என்று சொன்ன மனைவியும், பிணமானபின் சுடுகாட்டில் அல்லவா விட்டு செல்வார்கள் ! பிரியமாட்டேன் என்று சொன்னவர்கள் பிணம் என்று வீசிசென்ற பிறகு , மண் என்னைப்பார்த்து , "மகனே ! நானிருக்கிறேன்.என் மடியில் வந்து உறங்கு" என்று என்னை மார்போடு தழுவிக்கொண்டது. அருந்தின மலமாம் பொருந்தின அழுக்காம் வெறுப்பன உவப்பாம் உவப்பன வெறுப்பாம் உலக பொய் வாழ்க்கை நீ_நீயாக_இரு... உங்கள் உடலில் இருக்கும் ஒவ்வொரு உறுப்பும் நீங்கள் உயிருடன் இருக்கும் அத்தனை நாளும் பயன்படுத்தவே படைக்கப்பட்டிருக்கிறது. அதனால் வயதானால் அந்த நோய் வரும் வயதானால் இந்த நோய் வரும் என்று சொன்னால், தயவு செய்து நம்பாதீர்கள் உங்கள் கூடவே வாழும் மிருகங்களைப் பாருங்கள். மரணம் வரும் வரை தன் வேலைகளைத் தானே செய்து கொள்கிறது. எந்தப்பறவைகளும் தனக்கு வயதாகிவிட்டது என்று தன் குஞ்சிடம் சாப்பாடு கேட்பதில்லை. எந்த மாடும் படுத்து கொண்டு தன் கன்றிடம் தண்ணீரோ உணவோ கேட்பதில்லை. எந்தப் பூனையோ, நாயோ படுத்த படுக்கையாக இருந்து கொண்டும் மலம் கழிப்பதில்லை. மரணம் அடையும் நாள் வரை ஆரோக்கியமாக சுயமாக தன் வேலைகள் அனைத்தையும் செய்கின்றன. மனிதர்கள் மட்டும் தான் வயதானால் நோய்வரும், இயலாமை வரும் என்று நம்பி, அடுத்தவர்களை எதிர்பார்த்து வாழ ஆரம்பிக்கிறார்கள். நன்கு ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள்* முதுமை என்று எதுவும் இல்லை. நோய் என்று எதுவும் இல்லை. இயலாமை என்று எதுவுமில்லை. எல்லாம் உங்கள் மனதிலும், அதன் நம்பிக்கையிலும் தான் இருக்கிறது. சிந்தனையை மாற்றுங்கள். ஆரோக்கியமாக வாழுங்கள். நீங்கள் எதை நம்புகிறீர்களோ அதுவாகவே ஆகிறீர்கள். நான்... நான்... நான்... நான் சம்பாதித்தேன், நான் காப்பாற்றினேன், நான் தான் வீடு கட்டினேன், நான்தான்உதவிசெய்தேன், நான் பெரியவன், நான் தான் வேலைவாங்கி கொடுத்தேன், நான் நான் நான் நான் என்று மார்தட்டி கொள்ளும் மனிதர்களே!!! நான் தான் என் இதயத்தை இயக்குகிறேன் என்று உங்களால் சொல்ல முடியுமா? நான் தான் என் மூளையை இயக்குகிறேன் என்று உங்களால் சொல்ல முடியுமா? நான் தான் என் இரண்டு கிட்னியையும் இயக்குகிறேன் என்று உங்களால் சொல்ல முடியுமா? *நான்* தான் என் வயிற்றில் சாப்பிட்ட உணவில் இருந்து சத்துக்களை தனியாக பிரித்து இரத்தத்தில் கலக்குகிறேன் என்று உங்களால் சொல்ல முடியுமா?? நான் தான் பூக்களை மலர வைக்கிறேன் என்று உங்களால் சொல்ல முடியுமா ? இவைகள் அனைத்தையும் எவன் செய்கிறானோ இயக்குகிறானோ அவன் ஒருவனுக்கே "நான்" என்று சொல்வதற்கு அதிகாரமும் உரிமையும் உண்டு.. ஆகையால் நான் என்ற அகந்தையை விட்டு அனைவரிடமும் அன்பாக இருங்கள். உனக்கு மேலே உள்ளவனைப் பார்த்து ஏங்காதே தாழ்வு மனப்பான்மை வரும்..! உனக்கு கீழே உள்ளவனை ஏளனமாய் பார்க்காதே தலைக்கனம் வரும்...! உன்னை யாரோடும் ஒப்பிடாமல் நீ நீயாக இரு ............
  4. வானொலிப் பேட்டியொன்றில் நாகேஷ்..சொன்ன தன்னம்பிக்கை கதை நிருபர்: நியாயமாக உங்களுக்கு வரவேண்டிய நல்ல பெயர் மற்றவர்களுக்குச் செல்லும் போது உங்களுக்கு எப்படி இருக்கும்? நாகேஷ்: நான் கவலையே படமாட்டேன் சார். ஒரு கட்டடம் கட்டும் போது, சவுக்கு மரத்தை முக்கியமா வச்சு சாரம் கட்டி, குறுக்குப் பலகைகள் போட்டு, அதன் மேல பல சித்தாள்கள் நின்னு, கைக்குக் கை கல் மாறி கட்டடம் உயர்ந்து கொண்டே போய் அது முடிந்த பிறகு, அந்தக் கட்டிடத்துக்கு வர்ண ஜால வித்தைகள் எல்லாம் அடிச்சு, கீழ இறங்கும் போது ஒவ்வொரு சவுக்கு மரமாக அவிழ்த்துக் கொண்டே வருவார்கள். கட்டடம் முடிந்து, கிரஹப் பிரவேசத்தன்று கட்டடம் கட்டுவதற்கு எது முக்கிய காரணமாக இருந்ததோ, அந்தச் சவுக்கு மரத்தை யார் கண்ணிலும் படாமல் பின்னால், எங்கயோ மறைத்து வைத்துவிட்டு, வேறெங்கேயோ வளர்ந்த வாழை மரத்தை முன்னால் நட்டு கிரஹகப் பிரவேசம் நடத்தி அனைவரையும் வரவேற்பார்கள். அத்தனை பெருமையும் வாழை மரத்துக்குப் போய் விடும். இதில் உள்ள உண்மை என்ன தெரியுமா? அந்த வாழை மரம் மூன்று நாள் வாழ்க்கை தான் வாழும். ஆடுமாடுகள் மேயும். குழந்தைகள் பிய்த்தெடுப்பார்கள். பிறகு குப்பை வண்டியிலே போய்ச் சேரும். எங்கோ மூலையில் மறைந்து கிடக்கிறதே அந்தச் சவுக்கு மரம் கண்ணீர் விடுவதில்லை. அடுத்த கட்டடம் கட்டுவதற்கு ஏணியாக தயார் நிலையில் என்றைக்கும் சிரித்துக் கொண்டேயிருக்கும்.!!! *நான் வாழை அல்ல...! சவுக்குமரம்.!
  5. தேரோடுது தேரோடுது தேரோடுது பாரிர் நெல்வளையான் திரு வீதியிலே
  6. கற்பகத்தருவே கந்தரோடை விநாயகனே காந்த கடலே கருணை புரிவாய்
  7. காசேதான் கடவுளப்பா அந்த கடவுளுக்கும் இது தெரியுமப்பா அந்த கடவுளுக்கும் இது தெரியுமப்பா காசேதான் கடவுளப்பா
  8. வேதங்களின் பொருளாகி வேண் டுவோர்க்கு அருளாகி வாசல் வந்த ஈஸ்வரனே தேசமெங்கும் ஆள்பவனே
  9. 1. ஓடுற எலி வாலை புடிச்சா "கிங்கு". தூங்குற புலி வாலை புடிச்சா "சங்கு". 2.மேல இருந்து கீழ விழுந்தா அது "அருவி". கீழே இருந்து மேலே போனா அது "குருவி". 3. மின்னலை பார்த்தா...கண்ணு போய்டும். பார்க்கலேன்னா...மின்னல் போய்டும். 4. ‘சிற்பி’ உளிய அடிச்சா அது "கலை". சிற்பியை உளியால அடிச்சா அது "கொலை". 5. இருமல் வந்தா இரும முடியும். ஆனால் காய்ச்சல் வந்தா காய்ச்ச முடியுமா? 6. டிக்கெட் வாங்கிட்டு உள்ள போனால் அது சினிமா தியேட்டர். உள்ள போயிட்டு டிக்கெட் வாங்கினா அது ஆபரேஷன் தியேட்டர். 7. விஸ்கி குடிச்சா நாம நாலு பேருக்கு முன்னாடி ஆடலாம். அதுவே அதிகமா குடிச்சா நம்ம முன்னாடி நாலு பேரு ஆடுவாங்க. 8. நீங்க எவ்வளவுதான் பெரிய பருப்பா இருந்தாலும்... உங்களை வெச்சு சாம்பார் செய்ய முடியாது 9. டீ மாஸ்டர் எவ்வளவு தான் 'லைட்' டீ போட்டாலும் அதுல இருந்து கொஞ்சம் கூட வெளிச்சம் வராது. 10. எட்டு செகண்டுல 1140 பெயர் சொல்ல முடியுமா? நான் சொல்லுவேன்.. கண் 1000 100 ஜஹான் 10 டுல்கர் 9 தாரா 7 மலை 6 முகம் 5 சலி 3 ஷா கூட்டி கழிச்சு பாருங்க, கணக்கு சரியா வரும். 11. முட்டையிடாத பறவை? ஆண் பறவை! 12. கோழி ஏன் முட்டை போடுது? ஏன்னா அதுக்கு 1, 2, 3 போடத் தெரியாது. 13. ஊசி குத்தினா ஏன் ரத்தம் வருது? தன்னை குத்தினது யாருன்னு பார்க்க வருது . 14. என்னதான் ஊருக்கே கேக்குற மாதிரி நீங்க குறட்டை விட்டாலும் அதை உங்க காதால கேட்க முடியாது!

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.