Everything posted by Elugnajiru
-
ஈழத்தமிழர்களுக்கு இந்தியா மீண்டும் ஆயுதங்களை வழங்கவேண்டும் : சாணக்கியன் கோரிக்கை!
சிறீலங்காவின் நாடாளுமன்றில் ஒரு சிங்கள உறுப்பினர் ஒரு மாதத்திற்குள் சாணாக்கியனின் காதலி ஒரு சிங்களப்பெண் அவரைத்தன் சாணாக்கியன் திருமணம் செய்யவுள்ளார் எனக்கூறும் போது சாணாக்கியன் எந்தப்பதிலும் கூறவில்லை. அப்படி அவர் சுத்தமானவராக இருந்தால், தனது நாடாளுமன்றப் பதவியின் அடிப்படை உரிமையை சம்பந்தப்பட்ட ஊறுப்பினர் மீறுகிறார் எனக்கூறியிருக்கவேண்டும். இந்த ஆதாரம் போதுமா நான் வாழுவது பின்லாந்து நாட்டில் இப்போது பின்லாந்தின் அடிப்படைவாதிகளும் பணக்காரர்களுக்குமான கட்சியும் சேர்ந்தேதான் அரசை அமைத்திருக்கிறது குறிப்பிட்ட அளவு பல்லின மக்கள் இங்கும் வாழுகிறார்கள். அதில் அனேகமானவர்கள் வேலைசெய்தே தமது வாழ்க்கையைக் கொண்டுசெல்கிறார்கள். பின்லாந்தின் அடிப்படைவாதக்கட்சி என்ன சொல்லுது என்றால் பின்லாந்து பின்லாந்தியர்களுக்கே என, இலங்கைத் தீவிலிருந்து நான் புலம்பெயரக்காரணமானது சிங்கள அடிப்படைவாதமே ஆனால் சிங்கள் அடிப்படைவாதம் எனப்படுவது சிங்களவர்களுக்கு இருந்தே ஆக வேண்டும் அதேவேளை மாற்று இனத்தவர்களுக்கான உரிமைக்கும் மதிப்பளிக்க வேண்டும் என. பின்லாந்தின் அரசமைப்பு மற்றும் சட்டதிட்டங்கள் அனைத்தும் பின்லாந்தியர்களுக்காகவே வடிவமைக்கப்பட்டது அது கனடாபோன்ற பல்லினமக்கள் வாழும் நாட்டில் உள்ள சட்டதிட்டங்களுடன் ஒத்துப்போகாது. ஏன் பிரித்தானியாவின் சட்டதிட்டங்களுடனேயே ஒத்துப்போகாது. பின்லாந்து மக்களது எண்ணங்களுடன் நான் ஒத்துப்போகிறேன் அந்தவகையில் சுத்த தமிழ்தேசிய அடிப்படைவாதம் எனக்கு இருந்தால் எவருக்கும் எந்தப்பிரச்சனையும் இல்லை. நான் அப்படியே இருந்துவிட்டுப்போகிறேன். நான் எந்தவிதமான ஆயுதத்தை எடுக்கவேண்டும் என்பதை எனது எதிரிதான் தீர்மானிக்கிறான் என்பதுபோல் நான் எந்தவிதமான சிந்தனை உடையவனாக இருக்கவேண்டும் என்பதையும் எனது எதிரிதான் தீர்மானிக்கிறான். சும்மா சகோதரத்துவம் தேசிய ஒருமைப்பாடு எனக்கூறிக்கொண்டிருந்தால் சுரணை கெட்டவனாக இருப்பதுபோன்றதாகும்.
-
ஈழத்தமிழர்களுக்கு இந்தியா மீண்டும் ஆயுதங்களை வழங்கவேண்டும் : சாணக்கியன் கோரிக்கை!
முள்ளிவாய்க்கால் கொலைக்களம் முடிவடைந்ததும் அதைத் "தமிழர்விரோத தேசமாம்" இந்தியாவுக்காக முன்னின்று நடாத்திய கொலையாளிகளான இராஜபக்ஸ்ச பரிவாரங்களுடன் கைகுலுக்கி, அதனால் தனது கைகளில் ஒட்டிக்கொண்ட உள்ள தமிழர்களது குருதியின் மணம் இதுவரை மாறாது எந்தச் சவர்க்காரம் போட்டால் இந்த மணம் போகும் என அங்கலாய்த்து அது, தான் ஒரு சிங்களத்தாயாருக்குப் பிறந்ததுக்கு நன்றிகடனாக இருக்கட்டும் என உள்மனதில் பெருமைகொண்டு, அடுத்துவரும் தனது சிங்களக்காதலிக்குத் தனது திருமணப்பரிசாக அந்தத் "தமிழரின் இரத்த வாடைய" ப் பரிசளிப்பதற்காகக் காத்திருக்கும் சாணாக்கியன் எனும் முன்னாள் பிள்ளையான் குழுவின் முக்கிய தொண்டரை நம்பித் தமிழினம் ஏமாந்து போவதை நினைத்தால் நெஞ்சு பொறுக்கிதில்லை.
-
ஈழத்தமிழா, என்னதான் தீர்வு?
முதலில் இப்படிக்கூக்குரல் போடுபவர்கள் செய்யவேண்டியது தாயகத்தில் உள்ள தமிழர் அரசியலைப் பேசுபவர்களைச் சந்தித்து நீங்கள் ஒரு கோரிக்கையின் பின்னால் ஒன்றுதிரளுங்கள் என்பதே. மற்றப்படி புலம்பெயர் தேசங்களில் உள்ள புலிகளின் முன்னாள்கள் மற்றும் புலிவால்களைக் குறைகூறுபவர்கள் இந்த இமாலயா அறிக்கையைத் தெளாஅரித்து சிங்களத்திடம் முன்மொழிய முன்னர் தாங்கள் யார் என்பதை மக்களுக்கு முன்னால் சொன்னார்களா? எந்த மக்களுக்காக ஒரு அறிக்கை கையளிப்பு அரசியலைச் செய்கிறார்களோ அந்த மக்களது கருத்துக்களை உள்வாங்கியுள்ளார்களா? இவர்களும், இவர்களால் விமர்சிக்கப்படும் ஏனையோரைப்போலவேதானே முடிவுகளை எடுத்திருக்கிறார்கள். இப்பதானெ இவர்கள் களத்தில் இறங்கியிருக்கிறார்கள் சிங்களவன் சரியானபடி நல்ல ஆப்பாக இரக்குவான் அதோட துண்டைக்காணோம் துணியக்காணோம் எண்டு போய்விடுவினம். ஆனால் அவர்கள் போட்டிருக்கும் கோட்டுச்சூட்டுகளைப் பத்திரமா வைத்திருப்பினம் சனம் பழையதை மறந்ததும் "பூஜி மலைப் பிரகடனம் " எனச்சொல்லிக்கொண்டு மறுக்காலும் வருவினம். நல்லூருக்கு முன்னால வந்து நிண்டு சுரேன் ச்ரேந்திரன் முப்பது வருடத்துக்கு முன்னம் நான் நல்லூர் திருவிழாவில் கடைலையுடன் பெண்களுக்குக் கடலைபோட்டதை நினைச்சுச் சந்தோசப்பட்டதை மாதிரி இன்னுமொருவரும் ஒரு சீ ஆர் கொப்பியில பிரகடனம் என எழுதிக்கொண்டு நல்லூர் வாசலில் வந்து "நினைவிடை தோய்வார்" அ ப்பவும் யாராவது அவர்களுக்கு வக்காலத்து வாங்குவினம்.
-
துவாரகா உரையாற்றியதாக...
இக்காணொளியில் விடுதலைப்புலிகள் பாவிக்காத ஒரு சொல்லை பலதடவை பாவிச்சிருக்கிறார் அதாவது ஒரே சொல்லை அதுவும் விடுதலைப்புலிகள் தங்கள் உரையில் பாவிக்காத சொல்லைப் பலதடவைகள் பாவித்ததால் துவாரகா என்று சொல்லி உரை நிகழ்த்தும் இவரைப் போட்டியிலிருந்து விலக்குகிறோம். அந்தசொல் என்னவெனில் நாம் என்று தேசியத்தலைவர் பாவிக்கும் சொல்லை நான் எனப் பல இடங்களில் இவர் பாவிக்கிறார் அதாவது தேசியத்தலைவர் தமிழீழ விடுதலைப்புலிகள் சார்பில் வெளியிடும் கொள்கை விளக்க உரையை எப்போதும் நான் தெரிவித்துகொள்கிறேன் எனச்சொல்வதில்லை அதாவது "நாம் தெரிவித்துக்கொள்கிறோம்" என்றே உரைப்பது வழக்கம். ஆனால் மிகவும் அருவருக்கத்தக்கதும் புலிகளது ஈகத்தை மலினப்படுத்துவதும் தலைவரது குடும்பத்தை இழிவுபடுத்துவதும் தவறு எனச்சொல்லிக்கொண்டு போரில் மரணித்துவிட்ட ஒரு உயிரை கண்டவர்கள் எல்லாம் நக்கல் நையாண்டி செய்ய திட்டமிட்டே நாடகமாடிவிட்டது "தமிழர் விரோததேசமாகிய இந்தியா" இந்தியா நாசமாகிப்போகும் காலம் மிகவிரைவில் வரும். கொசுறாக இந்தியாவின் வேண்டுதலின் பிரகாரம் விடுதலைப்புலிகளது படங்கள் மற்றும் காணொளிகள் அனைத்தையும் தடை செய்து அதனை வெளியிட்டவர்களது கணக்குகளைத் தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ தடைசெய்யும் முறைமையை இப்போது முகப்புத்தகம் தவிர்த்திருக்கிறது. இதன்மூலம் எங்கப்பன் குதிருக்குள்ள இல்லை என்னுமாப்போல் இந்தியா தனது கபடமுகத்தைத் தோலுரித்துக்காட்டி மிகவும் அசிங்கமாகச் சிரிக்கிறது.
-
கத்தாரில் முன்னாள் இந்திய கடற்படையினர் 8 பேருக்கு மரண தண்டனை: மத்திய அரசு என்ன சொல்கிறது?
கனடாவில விட்ட விளையாட்ட அங்கையும் விட்டிருக்கினம் இனி என்ன ஒரு வெள்ளிக்கிழமை பாங்கு சொன்னவுடன் கோழிச்செவலை கவுணாவத்தையில வெட்டுறமாதிரி வெட்டிப்போடுவாங்கள் இந்தியனுக்கு எங்க போனாலும் கை நமநமக்கும். இங்கையும் இப்படித்தான் ஒரு டெலிபோண் ஒப்பிறேற்றர் கொம்பனிக்கு வந்து உங்கட பில்லுகளது விபரம் தாங்கோ உள்ளுக்குள்ள போறதுக்கு எங்களிடன் அட்மின் இருக்கு உங்கட பில்லை ஒண்டுமில்லாமல் செய்துவிடுகிறம் எண்டு சொல்லி எங்கடையளும் கொடுத்து பிறவிப்பயன் அடைந்ததுKஅல். பிறகு என்ன நடந்ததோ தெரியாது.
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
இப்படியான தாக்குதலுக்கு எங்கட ஊரில உள்ளூரிலேயே தயாரிக்கக்கூடிய சிறிய ரக ட்ரோன் போதுமா அதை வடிவமைக்கவும் முதல் பிரதியை உருவாக்கி சோதனை செய்ய வெற்றியடைந்தபின்பு பல்லாயிரக்கணக்கில் உருவாக்க ஒரு சில சி என் சி மிசினும் கண்ணாடி இழை மூலப்பொருளும் சின்னச்சின்ன இலத்திரனியல் சிப்ஸ்சும் அதனுடன் கொழுத்திப்போட ஒரு ட்ரோனுக்கு ஒரு கிலோ வெடிமருந்தும் அதன் தொழில் நுட்பமும் இருந்தால் ஒரு ஆட்டு ஆட்டலாம் தவிர இதை சரியான திசையில் அனுப்ப எங்களுக்கே உரிய ஒரு ஜி பி எஸ் தொழில் நுட்பமும் தேவை அடுத்த கட்ட யுத்தம் இப்படித்தான் இருக்கும் இலங்கைத்தீவில். காலப்போக்கில் இது சர்வ சாதாரணமாகும்.
-
மரியோபுல் - இரண்டாம் முள்ளிவாய்க்கால்
மரியோபோல் இன்னுமொரு முள்ளிவாய்க்கால் இல்லை காரணம் முள்ளிவாய்க்கால் உலகநாடுகளாலும் அனைத்துலக நிறுவனங்களாலும் இலங்கைத்தீவின் தமிழ் இனத்தைக் கைவிடப்பட்டு அனைத்துத் தப்பும் வழிகளும் மறிக்கப்பட்டு நாம் இப்போது தீர்வுபெற்றுத்தா என எந்த நாடுகளின் காலகளைக் கழுவுறோமோ அதே நாடுகளது ஆதரவுக்கரம் மற்றும் இனாமாகவோ கடனாகவோ நவீன ஆயுதங்கள் கொடுப்பனவுடன் நடாத்தப்படும் உக்ரைன் ரஸ்யா யுத்தத்துடனும் அதனால் ஏற்படும் மனித அவலங்களுடனும் ஒப்பிடமுடியாது. எனினும் மனித அவலம் எங்கு நடப்பினும் அதற்காக எதிர்ப்புக் குரல் கொடுப்பதும் பாதிக்கப்பட்டவர்களுக்குச் சார்பாகக் கருத்துக்கூறுவதும் ஆதரிப்பதும் நியாயமானது. ஆனால் ரஸ்யா எந்தவித நிபந்தனையுமின்றி தமிழர் அழிப்பிற்கு உதவியது உக்ரைனும் அதே போலவே தவிர உக்ரைனை ஆதரிக்கும் நாடுகள் அனைத்துமே தமிழர் அழிப்புக்குத் துணைபோனது இவைகளை நான் மனதில் நிற்கும்போது நான் யார்பக்கம் நிற்கவேண்டும் ? யாராவது யாழ்கள நியாயவாஙள் கூறுங்களேன் எனுனும் யுத்தம் கொடியது அதிகாரவர்க்கத்தின் அகோரப்பசிக்கு சாதாரண குஞ்சுகுருமான் உட்பட சிறுகச் சிறுகத்தேடிய தேட்டங்கள் வாழ்விடங்கள் அனைத்தையும் விட்டு அகன்று அகதியாக வேறிடம் செல்வது கொடூரத்திலும் கொடூரம். நான் வாழும் நாட்டில் பேரூர்ந்துச் சாரதியாக வேலைசெய்யும் இலங்கையிலிருந்து அகதியாகவந்து இப்போது தன்னை இந்த நாட்டில் நிலைநிறுத்திய ஒருவர் உக்ரேன் கடவுச்சீட்டுக்கு இலவசமாகப் பயணம் செய்யலாம் என இந்த அரசாங்கம் அறிவித்தவுடன் எல்லாரும் பஸ்ஸில வந்த் ஏறத்தொடங்கிட்டுதுகள் எனச்சொல்லும்போது தான் யார் எனும் அறுவுகூட இல்லாது வாழும் ஜந்துகள்போல வாழும் இவர்கள்போல் வாழ என்னால் முடியாது. எனது மனம் உக்ரேனில் வாடும் அனைவருக்குமாகப் பிரார்த்திக்கிறது.
-
பங்கு/கிரிப்டோ வர்த்தகம் - வா பங்கு ஒரு கை பார்க்கலாம்
சரி இன்னுமொரு விடையம் கிரிப்டோவில் காசு போட்டால் போட்டது போட்டதுதான் அது யூ எஸ் டி டியில் வரவு வைக்கப்பட்டிருக்கும் அதைக் காசாக்கவேண்டுமானால் யாருக்காவது யூ எஸ் டி ரியை விற்கவேண்டும் அதைவிட ஒரு நல்ல விடையம் இருக்கு Revolut bank கில் ஒரு கணக்கைத் திறந்து அதற்கு நீங்கள் வேண்டிய கரன்சியில் உங்களது USDTயை மாற்றலாம்.பிரச்சனப்பிடவேண்டியதில்லை. அபரா, SHIBA/USDT வை நான் ஆரம்பத்தில் வாங்கி அது 0.00005400 வரை ஏறியது நல்ல காசு பாத்திட்டேன் இப்போ அது இறங்குமுகம். ஆனால் பைனான்ஸ் இணையத்தளத்தி காசு சம்பாதிச்சுக்கொடுக்கும் காயிஙளில் முதல் பத்து இடத்தில் இப்போதும் இருக்கு. முட்டாள்தனமாக நான் பணம் சம்பாதிக்க முற்பட்டு பத்து மில்லியன் காயிஙளாக இருந்த எனது சீபா இனு ஆறு இல்லியனுக்குக் குறைந்துவிட்டது. இனிமே தொட்டுப்பார்க்கும் எண்ணம் இல்லை. ஆனால் "bainance" இணையத்தளத்தி காசு சம்பாதிச்சுக்கொடுக்கும் காயிஙளில் முதல் பத்து இடத்தில் இப்போதும் இருக்கு. முட்டாள்தனமாக நான் பணம் சம்பாதிக்க முற்பட்டு பத்து மில்லியன் காயிஙளாக இருந்த எனது SHIBA/USDT ஆறு மில்லியனுக்குக் குறைந்துவிட்டது. இனிமே தொட்டுப்பார்க்கும் எண்ணம் இல்லை. சரி விடையத்துக்கு வருகிறேன் பைனான்ஸ்சில் இப்போது இலாபமீட்டும் காயின் எனப் பட்டியலிடுவார்கள் அதில் இருபத்து நாலு மணிநேர உயர்வு / தாழ்வு என வரும் அதைக்கவனித்தால் மெழுகுதிரி இடையில் நின்றால் கவனமாக முதலீடு செய்து ஓரிரு மணி நேரத்திலோ நிமிடக்கணக்கிலோ வித்துக் காசு பாக்கலாம் ஆனால் ஆக அடிமட்டத்திலிருந்து திடீரென உயரும் காயினில் முதலீடு செய்யவேண்டாம். அடிச்சுக்கொண்டு போயிடும். இப்போ NU/USDT எனும் காயின் சிலநேரம் ஏறும்போல இருக்கு ஆனால் அவதானம். TRX/USDT இப்போது ஏறுது விருப்பமானால் வித்துக்காசு பாக்கலாம்
-
பங்கு/கிரிப்டோ வர்த்தகம் - வா பங்கு ஒரு கை பார்க்கலாம்
கிரிப்டோ கரன்சி எனக்கு நீண்ட நாளாக அறிமுகம் ஆனாலும் சென்ற மாதம்தான் ஒரு 150 யூரோ முதலீடு செய்தேன் ஆரம்பத்தில் 0.0000034 என ஒரு நாணயத்தை வாங்கி காத்திருப்புக்குப் பின்பு 0.00005490 என்னும் அளவுக்குக் கூடியது வித்த வகையில் ஒரு 150 யூரோ இலாபம் அதுக்குப் பின்புதான் பிரச்சனை கண்டதையெல்லாம் வாங்கிப்போட்டால் லாபம் சம்பாதிக்கலாம் என நினைச்சு வாங்கியவிடத்தில் கால்வாசி அடிபட்டுட்டு. பின்பு கொஞ்சம் இலாபம் வந்தது பிற்காயின் விலை அதிகரிக்குது என இருந்த 300 யூரோவை அதில் போட இலாபம் என்பது கண்ணுக்குத் தெரிந்தது ஆனால் கணக்குக்கு வரவில்லை காரணம் 56000 த்தை பிற்காயின் தாண்டியதால எனது பணம் அதுக்குப் புழுதியாகத் தெரிந்தது. பின்பு அதை வித்திட்டு யூ எஸ் டி ரீ ஆக வைத்திருக்கிறேன் எங்காயாவது சந்தர்ப்பம் கிடைத்தால் இறக்கிப்பார்க்கலாம் என. சரி அதைவிடுங்கோ வீ ஆர் ஏ எனும் காயின் வாங்கும்போது அரைமனத்தில வாங்கினேன் இப்போ அது கொங்சம் ஏறி நிற்குது ஒருத்தன் சொல்லுறான் அண்ணை அவசரப்பட்டு விற்காதையுங்கோ இன்னும் ஏறும் என பாப்பம் இன்னுமொரு விடையம் இதில் கூடய அளவு ஈடுபாடு காட்டவேண்டாம் பிறகு கசிணோ விளையாட்டாக மாறிவிடும். முக்கிய தகவல் இன்னுமொருதர் ரோபோ ஒன்றைச் செற் பண்ணிவைத்திருக்கிறார் 5000 யூரோகளை முதலிட்டு, ஒருநாளைக்கு 25 டாலர் தருகுது நீங்கள் ஒப்போ இதலை போடவேண்டாம் இப்பதான் ரோபோவைச் செற்பண்ணிணான் ஒருமாதத்துக்குப் பின்பு சொல்லுறன் இலாபமா நட்டமா என அதுக்கு பிறகு நீங்கள் செற் பண்ணுங்கோ என எதோ சின்ன வீடு செற் பண்ணுமாப்போல் சொல்லுறான் நல்லா வந்தால் ஒரு குறிப்பிட்ட தொகையை முதலீடு செய்யலாம் என நினைக்கிறன். மீண்டும் சொல்லுறன் ஆயிரம் தடவை யோசிச்சுச் செய்யுங்கோ இது கசிணோ விளையாட்டு மாதிரி இரவு பகலாக நித்திரை கொள்ளவும் விடாது.
-
பங்கு/கிரிப்டோ வர்த்தகம் - வா பங்கு ஒரு கை பார்க்கலாம்
இப்போ யாரும் பெரிய முதலீட்டில் ஈடுபடவேண்டாம் எவர்கிராண்ட் வீழ்ச்சி கிரிப்டோ மந்தகதியில் போகும். வாரண்ட் பப்பட் கூறியதுபோல் மாதம் குறிப்பிட்ட ஒரு சிறு தொகைய இன்டெக்ஸ் பங்குகளில் முதலீடு செய்யலாம் ஒருவருடத்கிற்கு குறிப்பிட்ட ஒரு சில விகிதம் இலாபம் சம்பாதிக்கலாம். ஆனால் எல்லாமே ரிஸ்க்தான்
-
முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் சுற்றுச் சுவர் இடிப்பு கம்பி வேலி போட்டது போலீஸ்!
எங்கள் தேசத்தில் எம் ஆளுகைக்குள் இருந்தபோது நாம் புதைகுழிகளில் விதைத்த வீரப்பரம்பரைகளது வித்துடலை வெட்டியெறிந்து வீசியதே சிங்களம் அத்துடன் நாம் இன்னுமொரு விதிசெய்ய முனைந்துள்ளோம், முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தினை தமிழின எதிரிகள் இப்படி இடித்தழிக்காதுவிடினே நாம் வியப்புறல்வேண்டும். மீண்டும் காலம் எமக்கு எதிரி யார் நண்பர்கள் யார் என்பதை அடையாளம் காட்டியிக்கின்றது. இதில் வியப்பேதுமில்லை. தமிழகத்தின் அரசியற்களத்திலிருந்து அழித்தொழிக்கப்படவேண்டியது கருனாநிதியும் காங்கிரசும் இல்லை அத்தோடு தன்னையும்தான் என ஜெயலலிதா தானாகவே அடையளம் காட்டியிருக்கிறார். தவிர முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் இப்போது தமிழகத்தின் கடைக்கோடிவரை தன்னை அடையாளப்படுத்தியிருக்கின்றது, தஞ்சையில் பெரியகோவில் பார்ப்பதற்கு அடுத்ததாக இதுவே எதிர்காலத்தில் அனைவரது தேர்வாகவும் இருக்கும். முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தை முற்றிலுமாக அழிப்பதற்கு தமிழின விரோதிகள் முயல்வதற்குமுன்பு எந்தவித சேதாரமும் இல்லாது அதைப் பெயர்த்தெடுத்து நாம் வாழும் புலம்பெயர்தேசத்தில் எங்காவது நிறுவுவதே நல்ல முயற்சி ஆகும். அவைகள் எமது சொத்துக்கள் அவற்றைக் காப்பது எமது கடன். மேலும் எஜமானர்கள் வீசிய எலும்புத்துண்டுக்காய் இங்கு பல விசுவாச வாலை ஆட்டுகின்றன, விழுங்கிய எலும்புகள் ஜீரணிக்காது பேதியாக்கி வெளியேறும்போது வால்களிலும் ஒட்டிக்கொண்டு, அவை விசுவாச வலாட்டும்போது எமது முகங்களிலும் தெறிக்கின்றன ஆகவே தூர விலகி இருங்கள் இல்லையேல் அசிங்கம் எமக்குத்தான். தேர்தல் காலத்திலும் சில வந்தது பின்பு போனது அதுபோல இவைகளும் வரும் போகும் அதுகளை அதுபாட்டுக்கு விடுங்கோ.
-
தமிழகம் கருத்துக் கணிப்புகளில் முடிவு: அதிமுக கூட்டணி அமோக வெற்றி
அப்போ திருக்குவளை முத்துவேலர் கருனாநிதி அவர்கட்குக் கடைசிகாலத்திலை சென்னை மரீனா கடற்கரையில் இடம்கிடையாது கண்ணம்மாப்பேட்டைதான் என்கிறீர்கள்.