Jump to content

Elugnajiru

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    2546
  • Joined

  • Last visited

  • Days Won

    5

Everything posted by Elugnajiru

  1. இவர் என்ன சொல்லுறார் அல்லது சொல்ல வருகிறார் இஸ்ரேலுக்குத் தனக்கு என ஒரு நாடு தேவையில்லை என காந்தி சொன்னதாகக் கூறுகிறார் அதாவது இப்போதைய நவீன காலத்தில் இந்த எண்ணக்கரு தேவையில்லை என காந்தி சொன்னவராம் அதனால் அக்கொரிக்கையைக் கைவிடவேண்டுமாம். பிறகு பாலஸ்தீனர்களுக்கு நாடு தேவையாம் சரி அங்க ஒரு நாடு ஸ்தாபிக்கப்பட்டுள்ளது ஆனால் காசா என்பது முப்பது வருடத்துக்கு முதல் அகதி முகாமாக வடிவமைக்கப்பட்டது இப்போது அங்கு பலஸ்தீனியர்கள் பல்கிப்பெரிவிட்டார்கள் ஜெயமோகனது கருத்தின்படி உள்ளதை வைத்து திருப்தியடைய வேண்டியதாகில் காசாவைவிட்டு பாலஸ்தீனியர்கள் வெளியேறினால் எல்லாம் சரிவந்துவிடும். ஆனால் பாலஸ்தீனியர்களுக்கு நாடு வேணும் இஸ்ரேல் உக்கு தேவையில்லை வரலாற்றுக்கலம் அது இது எண்டு கதைக்கக்கூடாது. ஈழத்தமிழர்களும் இதப்பற்றி மூச்சு விடக்கூடாது. இவரது கருத்தின்படி இந்தியா பலஸ்தீனத்தை ஆதரித்தால் நானும் ஆதரிப்பேன் இந்தியா ஈழத்தமிழரைக் கொன்றொழித்தால் அதை நான் ஆதரிப்பேன் அல்லது எச் ராஜா இவரை ஆண்டு இந்தியன் எனக்கூறிவிடுவார். இதே ஜெயமோகன் தன்னுடைய சிறுவயதுக் கிராமம் பற்றிய நினைவுகளை எழுதியிருததாக எனக்கு நினைவிருக்கு. அதுதானே இஸ்ரேலியர்கள் தாங்கள் வாழும் நாடுகளே தங்களது சொந்த நாடாகக் கருதி வாழவேண்டுமெனில் இவருக்கு ஏன் தனது பால்யகால நினைவுகளைபற்றிய எழுத்து. காரணம் எல்லாம் காசுதான் இப்படித்தான் கனடா இந்தியா பிரச்சனையை மதன் கெளரி தமிழ் பொக்கிசம் போன்றோர் "அங்கதான் இந்தியா ஒரு ஸ்ருவிஸ்ட் வைச்சது அது கனடாவுக்கு வச்ச ஆப்பு என புல்லரிக்கும்படி புலம்புவார்களே அதுபோல இவரது கொள்கையும் அரைவேக்காடு கற்பனைகளைக் கோர்த்து காசுபார்க்கிறதை விட்டுட்டு அரசியல் பேசக்கூடாது.
  2. இப்படியான விடையங்கள் இன்னமும் தாயகத்தில் நடைபெறவேண்டும் அப்போதான் ஜனநாயகம் தளைத்தோங்கும், வ் எளிநாடுகளில் வாழ்பவர்கள் டிஸ்கோ மற்றும் இரவுநேர சிறப்பு விருந்துகளில் கலந்துகொள்ளலாம் குடாநாட்டுத் தமிழர்கள் மட்டும் என்ன் இப்படியான சோதியில் கலந்து கொள்ளமுடியாது. தவிர போதை வஸ்துக் கலாச்சாரம் இதன்மூலம் வளர்ச்சி அடைந்து தனிமனிதன் சுயமாகச் சிந்தித்து இயங்கும் திறன் அழிந்து கழுதை கெட்டால் குட்டிசுவர் என மூலைக்குள் கிடந்தால் தூய ஜனநாயகம் மலர்ந்துவிடும் அது நல்லம்தானே நாம் பெற்ற இன்பத்தை அவர்களும் பெற்றுக்கொள்ளட்டும்.
  3. சாத்தான் வேதமோதுகிறது, முள்ளிவாய்க்காலில் கொலைக்களமாடி ராஜபக்ஸ்சேக்கள் இரத்தம் தோய்த கைகளுடன் நிற்கும்போது அவர்களுக்கு கைலாகு கொடுத்து கும்மாளமடித்தவர் இப்போது என்ன சொல்லுறார் பாருங்கோ. இதே பாலஸ்தீனர்கள் இர்ண்டாயிரத்துஒ ஒஅதினாறில் மகிந்தவுக்கு "பாலஸ்தீன நட்சத்திரம்" என்னும் உயரிய விருது கொடுத்து பாலஸ்தீனப்பகுதியில் உள்ள தெருவுக்கு மகிந்தவின் பெயர் வைத்ததை எல்லோரும் மறந்துவிட்டார்கள். அரபுலகம் உடுக்கும் உள்ளங்கிகள் தொடக்கம் அடிக்கும் வாசத்தண்ணி வரைக்கும் எதோ ஒரு வகையில் இஸ்ரேலியர்களது தொடர்பு இல்லாமலில்லை. டுபாய் சவூதி கட்டார் ஆகிய அரபு நாடுகள் தங்கள் முதலீடுகளில் அடிவிழும் என்பதால் கள்ள மெளனம் காட்டுகிறார்கள். யசீர் அரபாத் இலங்கை வந்தபோது தமிழர் நெருக்குவாரத்துக்குள் இருந்தார்கள் மிகப்பெரிய பொருளாதாரத் தடையைத் தமிழர் பகுதி எதிர்கொண்டதனால் பட்டினிசாவை எதிர்கொண்டார்கள் ஆனால் மனிசன் வாயே திறக்கவில்லை. தமிழன் இழிச்ச வாயன் அவனுக்கு எல்லோரையும் பார்த்து அனுதாபப்படும் பழக்கம், அப்படி இல்லாதுவிடில் தூய தமிழினவாதம் பேசுகிறார்கள் பாசிசத்தின் எச்சங்கள் என யாராவது பத்தி எழுதுவார்கள். புலிகளும் அவர்களது தடையங்களும் அழிந்து இதோடு பத்து வருடங்களுக்கு மேலாகிவிட்டது. எழுபத்து நாஙின் ஆயுதமேந்திய போராட்டம் ஆரம்பித்தது எனக் கொள்வோமாகவிருந்தால் புலிகளது எழுர்ச்சி என்பது எண்பத்து ஆறில் தான் தொடங்கியது மெல்ல மெல்ல வளந்து அவர்களது பேரெழுர்ச்சி என்பது தொன்னூறுகளின் ஆரம்பத்துக்குச் சற்றிப் பிந்தியகாலம். தமிழனம் கண்ட முப்பது வருட ஆயுதமேந்திய போராட்ட வரலாற்றில் புலிகளது அனைத்து பலம் மிக்க காலம் என்பது இரண்டாயிரத்துக்கு பின்னதான கருணாவின் உடைவுக்கு முன்னதான காலமாகும் ஆகபுலிகளது பேரெழுர்ச்சிக்காலம் என்பது பத்திலிருந்து பதினைந்து வருடங்களாகும் புலிகள் முடிவுக்கு வந்து பதின்மூன்று வருடங்கள் கடந்துவிட்டது இந்தப்போலி ஜனநாயகவாதிகள் அல்லது தூய ஜனநாயகவாதிகள் இதுவரை சாதித்ததென்ன? இவ்வளவு காலம் கடந்தும் புலிகள் பாசிஸ்டுகள் எனக்கூறிக்கொள்வதைத் தவிர எதைப்பெற்றுக்கொண்டார்கள். நீதியாளர் இளஞ்செழியன் யாழ் குடாநாட்டிலிருந்து மாற்றலாகிச் செல்லுபோது நான் நீதித்துறையில் எந்த இலக்கை நோக்கிச் செல்லவேண்டும் என விரும்பினேணோ குடாநாட்டில் அதை நிறைவேற்றிவிட்டேன் எனக்கூறியிருந்தார். அவர் கூறியது வேறு எதுவுமில்லை போதைவஸ்துக் கடத்தி விற்பவன் கஞ்சா கடத்துபவன் கசிப்புக் காச்சுபவன் இளவாலையில் காலைக்கடன் கழிக்க வந்த பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்து நீதவான் ஏன் அப்படிச்செய்தாய் எனக்கேட்டபோது போதையில் இருந்தேன் பெண்ணைப்பார்த்ததுன் என வெறி ஏறிவிட்டுது எனக்கூறியவனை இப்படியான உதவாக்கரைகளை பிணையில் எடுக்கலாம் எனும் விடையத்தை அறிமுகப்படுத்தினதே தமிழர் பகுதியில் மீண்டும் கொண்டுவந்த நீதி நடைமுறை ஆகும் . இவர்கள் மீண்டும் வெளியில்வந்து தூய வன்முறைகளைக் கட்டவிழ்த்துவிடுவதுதான் தூய ஜனநாயகம். தமிழர் பிரதிநிதிகள் என நாடாளுமன்றம் அனுப்பிய எம்மவர்கள் ஒன்றுசேர்ந்து தமிழர் பகுதியில் நடக்கும் வன்முறை மற்றும் போதைக்கலாச்சாரம் ஆகியவற்றை முடிவுக்குக் கொண்டுவா என நாடாளுமன்றில் கூக்குரலிட வக்கில்லை இதற்குள் பாலஸ்தீனர்களுக்காகக் குரல் கொடுக்கிறார்களாம் தூ.......
  4. இது ஆபத்தான விசையம் காரணம் தமிழ் கட்சிகளுக்கிடையில் இதுவரையில் கொள்கை ரீதியில் எந்த ஒற்றுமையும் காணப்படவில்லை அதாவது அனைத்துத் தமிழ் கட்சிகளும் பிரிந்து நின்றாலும் இறுதி இலக்குபற்றிய ஒரு பொதுவான கருத்தோ அல்லது முடிவோ இல்லாமல் இந்தியாவினது ஏனைய பிற சக்திகளினதும் கைப்பாவையாகச் செயற்படுகிறார்கள் இவர்கள் பொது வேட்பாளரைக் களமிறக்கினால் நிச்சயம் எதிர்காலத்தில் சிங்களத்தரப்பு அதை உதாரணத்துக்கு இழுத்துவிடும் "பாருங்களேன் இவர்களது அரசியல் தீர்வுபற்றி உலக அரங்கில் முன்வைத்த கோரிக்கையைச் சொந்த மக்களே நிராகரித்துவிட்டார்கள் ரணில் தரப்புக்கும் மகிந்த தரப்புக்கும் போடப்பட்ட வாக்குகள் அனைத்தும் இவர்களது தீர்வு வேண்டிய கோரிக்கைகளை நிராகரித்தகாகவே கருதவேண்டும்" எனக்கூறி அனைத்தையும் நடுத்தெருவில விட்டுவிடுவார்கள் முள்ளிவாய்க்கால் முடிவுற்ற கையோடு நடந்த அதிபர் தேர்தலில் சரத் பொன்சேகாவுக்குக்கூட கணிசமான வாக்குகள் வடக்கிலிருந்து பெறப்பட்டது. இப்போதைக்குப் போதாக்குறைக்கு அங்கயன் வடமாகணத்தில் அதிகூடிய வாக்குகளை அதுவும் தேசியத்தலைவர் பிறந்த ஊரை உள்ளடக்கிய உடுப்பிட்டியில் பெற்றுக்கொண்டதும் டக்ளஸ் தனக்கான வாக்கை தக்கவைத்திருப்பதும் விஜயகலா தனக்கு என வாக்கு வங்கி வைத்திருப்பதும் முதலில் கணக்கில் எடுக்கப்படல்வேண்டும் இந்தப் பொது வேட்பாளர் என்பது கிட்டத்தட்ட எண்பது விகிதத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றால்தான் கரிசனைக்கு உட்படுத்தப்படும். அதாவது அவர்கள் இந்ததேர்தலின்மூல வைக்கப்படும் செய்தி அனைத்துத் தரப்புக்கும் கொண்டுபோய்ச்சேர்க்கப்படும். ஆனால் இந்த அரசியல் தற்குறிகளால் எதையும் சாதிக்க முடியாது முறவெளியில் மாட்டுவண்டிச் சவாரிக்குப் பூட்டிய மாடுகள் இடமாகவும் வலமாகவும் இழுத்துகோண்டு ஓடுவதுபோல் இவர்களது அரசியல் இருக்கின்றது.
  5. கடந்த ஒரு வருடத்துக்கு முன்பு பத்தி எழுத்தாளர் நிலாந்தன் அல்லது டிக்ஸன் என்பவரோ ஒரு விடையம் எழுதியிருந்தார் அதில் போர்க்குற்ற் விசாரணையின்போது சம்பந்தன் அவவர்களையும் விசாரணைப் பட்டியலில் சேர்க்கப்படல்வேண்டுமென காரணம் "இந்தியாவும் அமெரிக்காவும் இறுதிப்போர் விடையத்தில் என்னை ஏமாற்றிவிட்டார்கள் ஏனெனில் யுத்தம் முடிந்தபின்னர் புலிகள் இல்லாத சூழலில் தமிழ் அரசியல் தலைமைகள் ஏற்கும்படியான ஒரு தீர்வைத் தருவோம் என்னக்கூறியிருந்தார்கள்" என ஆக தமிழர்மீதான இன அழிப்பு நடவடிக்கையில் சம்பந்தனும் உடந்தையாகவே இருந்துள்ளார் எனக்குறிப்பிட்டுள்ளார். இவர் வினை விதைத்தவர் வினையை அறுக்க வேண்டும் அவர் போர்குற்ற விசாரணை என வரும்வரைக்கும் உயிரோடு இருக்கவேண்டும் பாயோடும் பறியோடும் இழுத்து இழுத்துக்கொண்டு கிடக்கவேண்டும் அதுக்குச் சாதகமாக அரச செலவில் அதி நவீன சிகிச்சை கொடுப்பதற்கு ஏதுவாக ஒரு எம் பி யாகவோ அல்லது எதிர்க்கட்சித் தலைவராகவோ தமிழர்கள் இவரை வைத்திருக்கவேண்டும். இன்றைய நாளில் இயற்கையை நான் வேண்டுவது இதையே. ஆனால் இவரது சந்ததி விளங்காது
  6. கனடாவில விட்ட விளையாட்ட அங்கையும் விட்டிருக்கினம் இனி என்ன ஒரு வெள்ளிக்கிழமை பாங்கு சொன்னவுடன் கோழிச்செவலை கவுணாவத்தையில வெட்டுறமாதிரி வெட்டிப்போடுவாங்கள் இந்தியனுக்கு எங்க போனாலும் கை நமநமக்கும். இங்கையும் இப்படித்தான் ஒரு டெலிபோண் ஒப்பிறேற்றர் கொம்பனிக்கு வந்து உங்கட பில்லுகளது விபரம் தாங்கோ உள்ளுக்குள்ள போறதுக்கு எங்களிடன் அட்மின் இருக்கு உங்கட பில்லை ஒண்டுமில்லாமல் செய்துவிடுகிறம் எண்டு சொல்லி எங்கடையளும் கொடுத்து பிறவிப்பயன் அடைந்ததுKஅல். பிறகு என்ன நடந்ததோ தெரியாது.
  7. உலகில் இப்போது வளர்ச்சியடைந்த நாடாகிய ஜேர்மனி தேசிய உற்பத்திச் சுட்டெண்ணின்படி மைனஸ் ஐந்தில் இருக்கு ரணிலர் திருவோடுகொண்டு ஜேர்மனி வந்தார் அவங்கள் கையை விரிச்சுப்போட்டாங்கள் இப்போ இதுக்குமேல் பசிகிடக்கக்கூடாது யார் கோவிச்ச்சாலும் பரவாயில்லை கொஞ்சமாவது திருவோடை நிரப்புவம் எண்டு சீனாவுக்குப் புறப்பட்டிட்டார் இல்லையென்றால் மழைகாலம் முடிய அடுத்த அரகெலிய தொடங்கிவிடும்.
  8. இவர் எட்டாம் கிளாசைப் பாடசாலையில் தாண்டியிருப்பாரா? கடல்சார் அறிவு கொஞ்சமும் கிடையாதுபோல இருக்கு இந்தாளுக்கு போற போக்கில அடிச்சு விடுகிறார். தமிழர் விடையத்தில் இந்தியா மூக்கைநுளைக்காமல் இருக்க இவர்கள் எதையும் காவுகொடுப்பார்கள்போல இருக்கு. இந்திய மேற்கு மாடத்தின் அதிகாரிகள் அந்த விசையத்தில கொஞ்சம் என்ன நிறையவே வீக் எனக்கேள்விப்பட்டன் ஆகையால் இவர்கள் தங்கள் வீட்டுப் பெண்டுகளையும் .............. போல் உள்ளது ஆனால் கவனம் கதை முடிந்ததும் அவன் கையை உதறிவிட்டுப் போய்விடுவான் பிறகு விட்ட இடத்தில இருந்து தொடங்க வேண்டியதுதான். ஏற்கனவே எங்கட ஊர் லஸ்ஸியா அங்க நாறிப்போய்க் கிடக்கு அப்பனையும் விழுங்கிப்போட்டு எல்லாரையும் அனாதையாக்கிவிட்டு நிக்குது. ஜனனி எனும் பெண் வேண்டாம் சாமி என ஊருக்குத் திரும்பி வந்துவிட்டது. இனிமேல் யாராவது பெட்டியைக் கட்டிக்கொண்டு போனால் இதே கதிதான்.
  9. இதில் சுரேஸருக்குப் பக்கத்தில நிக்கிறவர் பொம்மை வெளியில ஆற்றையோ காணியை ஆட்டையைப்போட்டவரை உள்ளுக்குள்ள தள்ள அவரை வெளிய எடுக்கிறன் எனப் புறப்பட்ட டெலோ தலைவர் சிறீகாந்தா.
  10. இப்படியான தாக்குதலுக்கு எங்கட ஊரில உள்ளூரிலேயே தயாரிக்கக்கூடிய சிறிய ரக ட்ரோன் போதுமா அதை வடிவமைக்கவும் முதல் பிரதியை உருவாக்கி சோதனை செய்ய வெற்றியடைந்தபின்பு பல்லாயிரக்கணக்கில் உருவாக்க ஒரு சில சி என் சி மிசினும் கண்ணாடி இழை மூலப்பொருளும் சின்னச்சின்ன இலத்திரனியல் சிப்ஸ்சும் அதனுடன் கொழுத்திப்போட ஒரு ட்ரோனுக்கு ஒரு கிலோ வெடிமருந்தும் அதன் தொழில் நுட்பமும் இருந்தால் ஒரு ஆட்டு ஆட்டலாம் தவிர இதை சரியான திசையில் அனுப்ப எங்களுக்கே உரிய ஒரு ஜி பி எஸ் தொழில் நுட்பமும் தேவை அடுத்த கட்ட யுத்தம் இப்படித்தான் இருக்கும் இலங்கைத்தீவில். காலப்போக்கில் இது சர்வ சாதாரணமாகும்.
  11. இவர் ஒருவருக்காவது நியாயத்தைப் பற்றிய சிந்தனை இருக்கு நீதித்துறையில் இருந்தால் நேர்மையாக இருக்கவேண்டுமென ஆனால் சில ஜென்மங்கள் இருக்கின்றன உதாரணத்துக்கு தமிழர்க்கு விடுதலை தரவெனப்புறப்பட்ட ரெலோ தலைவர் சிறீகாந்தா பொம்மை வெளிக்காணியக் கள்ள உறுதி முடித்து அபகரித்தவரை பிணையில் எடுக்க யாழ் இந்துக்கல்லூரியில் பாடசாலை அனுமதி பெற்றுக்கொடுக்கக் கையூட்டுப்பெற்று வேலை இடைநிறுத்தன் செய்து விசாரணைக்கு முகம்கொடுத்துவரும் முன்னை நாள் அதிபர் அவருடன் சேர்ந்து ஒரு யாழ்ப்பாணத்துச் சட்டத்தரணி. மல்லாகத்தில் வசிக்கும் கடந்த சிலவருடங்களுக்கு முன்பு இளவாலையில் காலை வேளையில் கடஙழிக்க வந்த பதிண்ம வயதுப்பெண்ணை களவெடுக்கப்போனவிடத்தில் பாலியல் வன்முறை செய்தவரை பிணையில் எடுத்து மேலும் சமூக வன்முறையை ஊரில சசெய் என விட்டிருக்கும் கீர்த்தனா எனும் வழக்குரைஞர். இப்போதுதான் பல்கலைக்கழகத்திலிருந்து வெளிக்கிட்டு கீர்த்தனாவிடம் யூனியராகச் சேர்ந்து இப்போ அதே ரவுடிக்கூட்டத்தின் வன்முறைக்கு துணை புரியும் கீதா எனும் இளம் வக்கீல் இவர்களை விட முல்லைத்தீவு நீதியாளர் இனத்திக்கு நீதியானவர்.
  12. ஒரு நாட்டின் நீதிபதிக்கு அச்சுறத்தல் சகல அதிகாரமும் உள்ள நாட்டின் அதிபர் கண்டும் காணாமலும் விட்டுள்ளார் எனில் இதற்கு அவரும் உடந்தையே, இதில் என்ன கேவலம் எனில் அவர்களது நாடாளுமன்றில் இயற்றப்பட்ட சட்டங்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்ட தீர்ப்பினை விமர்சித்து ஒரு ரவுடி நாடாளுமன்ற உறுப்பினர் அச்சுறுத்தல் செய்கிறார் அதாவது நாட்டின் சட்ட வரை முறைகளைக் கேலி செய்கிறார் அதைப்பார்த்துக்கொண்டு நாட்டின் அதிபரும் நீதி அமைச்சரும் அவருக்கு ஆதரவாக இருக்கிறார்கள் இந்த லட்சணத்தில் தமிழர்களுக்கு அதிகாரப்பகிர்வு என இந்தியக்கனவை எமது கூத்தமைப்பும் விக்கி வகையறாக்களும் காண்கிறார்கள்.
  13. இதுபற்றிய கருத்தை நான் முதலிலும் இணைத்ததாக நினைவிருக்கு இருந்தாலும் மீண்டும் நினைவூட்டுகிறேன். ஈராக் நாட்டில் ஐ எஸ் ஐஎஸ் தீவிரவாதிகளது தாக்குதலுக்கு ஒரு வைத்தியசாலை உள்ளாகியது அங்கு பெரும்தொகயான இந்தியத் தாதியர்கள் பணியிலிருந்தனர் அவர்கள் அனைவரையும் இந்தியா பத்திரமாக மீதும் நடவடிக்கையில் இப்போதைய இந்தியாவின் தேசிய பாதுகாப்பெள ஆலோசகர் அஜித் டொவால் அவர்கள் செய்தார். அது எப்படி எனில் முன்னர் அவர் இராணுவப் புலனாய்வு அதிகாரியாக இருந்தபோது மத்திய கிழக்கு நாடுகளிலுள்ள இஸ்லாமியத் தீவிரவாதக் குழுக்களில் இந்தியாவுக்குச் சாதகமான குழுக்களுடன் தொடர்பிலிருந்தார் அதுபோல் உலகமெங்கும் தங்களுக்குப் பிரச்சனை தரக்கூடிய பிராந்தியங்களில் இருக்கும் தீவிரவாதக்குழுக்களில் தங்களுக்குச் சாதகமான குழுக்களுடன் இந்திய புலனாய்வுத்துறை இப்போதும் தொடர்புகளைப் பேணிவருகிறது, இதற்காக அவர்கள் அக்குழுவுக்கு மறமுகமாக வரையறுக்கப்பட்ட சில உதவிகளை அவர்களுக்கு அருகிலுள்ள இந்தியத் தூதரகங்கள் மூலம் செய்து கொடுப்பார்கள் உதாரணமாக சிறு ஆயுதங்களைப் பெற்றுக்கொள்வதற்கான பாதிகளை அமைப்பது தீவிரவாதக் குழுவின் அங்கத்தவர்கள் அல்லது முகவர்களை ஓரிடத்திலிருந்து வேறி இஅடத்துக்கு மாற்ற உதவுவது இவை போன்றனவாகும். அப்படியான ஒரு குழுவின் தொடர்பாடலின் மூலமே அஜை டோவல் இந்திய மருத்துவத் தொழிலாளர்களை இந்தியாவுக்குக் கொண்டுவந்து சேர்ப்பிதார். அதுபோல் பாகிஸ்தான் கராச்சியில் நடந்த சிறீலங்கா கிரிக்கெட் அணியின்மீதான தாக்குதலிலும் இவரின் பங்களிப்பெ இருக்கு. இப்படியான தொடர்பாடல்கள் இந்தியா மட்டுமல்ல பிராந்தியத்தில் உள்ள அனைத்து பலம்பொருந்திய நாடுகளும் மேற்கொள்ளும் சாதாரண நடைமுறை. அப்போதைய ராஜபக்சக்கள் மைத்திரிக்குத் தெரியாது சீனாவுடன் உள்ள உறவின் காரணமாக மத்திய கிழக்கில் காணப்படும் சீனத்தொடர்புடைய இஸ்லாமியத் தீவிரவாதிகளின் உதவியுடன் அந்தக் குழுக்களால் மூளச்சலவை செய்யப்பட்ட இலங்கையில் வாழும் முஸ்லீம் அடிப்படைவாதிகளைக்கொண்டே இத்தாக்குதல் நடந்துள்ளது. இத்தாகுதல் நடந்தபோது மைத்திரிபால சிறீசேன வெளிநாட்டுப் பயணத்தை மேற்கொண்டார் தாக்குதலுக்கான இலக்கு தமிழர் பகுதியாகவும் தமிழர் அதிகம் வாழும் பகுதியாகவும் அமைந்தது. தாக்குதலுக்குப் பின்பு அப்போது பிரதமராகவிருந்த ரணில் மூப்படைகளது தலைமைச் செயலகத்துக்குப் போயிருந்தார் காரணம் தாகுதல் நடந்ததும் தலைநகர் மற்றும் ஏனைய இடங்களின் பாதுகாப்பில் மிகவும் கேள்விக்குறி இருந்தது முப்படைகளது தளபதிகள் அனேகமாக ராஜபக்சக்களின் கட்டுப்பாட்டிலேயே இருந்தனர் ரணில் தலைமைச்செயலகத்துக்குப்போய் பாதுகாப்பு அதிகாரிகளை ஒன்றுகூட்டுவதற்காக மணித்தியாலக்கணக்கில் காத்திருந்தார் கிட்டத்தட்டத் திட்டமிட்டுத் தனித்துவிடப்பட்டிருந்தார் இவை அனைத்தும் மிகவும் திட்டமிட்டபடிதான் நடந்தது. இவை அனைத்தையும் அமெரிக்கா சார்பான நாடுகளுக்குத் தெரியும் அதனால்தான் ஈஸ்ரர் குண்டுவெடிப்புக்குச் சர்வதேசவிசாரணை தேவை என இப்போது கத்தோலிக்க மேலிடம் கோருகிறது இந்தக்கோரிக்கையின் பின்னால் அமெரிக்காவும் மேற்குலகும் இருக்கு காரணம் இதைவைத்து இராஜபக்ஸக்களை மீண்டும் எழும்பவிடாமல் செய்து சீனாவின் ஆதிக்கத்தைக் கட்டுக்குள் கொண்டுவரவேன்டுமென்பது அல்லது இராஜபக்ஸக்களைக் கட்டுக்குள் கொண்டுவரவேண்டுமென்பதாகும். இதால் தமிழருக்கு எந்தவித பிரயோசனமும் இல்லை காரணம் எனக்கு மூக்குப்போனால் பரவாயில்லை எதிரிக்குச் சகுனபிழை வரவேண்டும் என நினைக்கும் ஒணுக்கும் உதவாத ஒற்றுமையில்லாத தமிழர் தலைமை எனச்சொல்லப்படும் தறுதலைகளே.
  14. விடுதலைப் புலிகளது தாக்குதல்களுக்கான அச்சம் கொழும்பில் அதிகரித்திருந்தபோது சிறீலங்காப் புலனாய்வுத்துறை அப்போது டக்ளஸ் தேவானந்தாவின் உதவியை நாடியது, அகன் பிரகாரம் கொழும்பிலும் அதன் சுற்றுவட்டாரப்பகுதியிலும் காணப்படும் தொலைபேசி உரையாடல்கள் அனைத்தையும் ஒட்டுக்கேட்டு தாக்குதலுக்கான சந்தர்ப்பங்கள் எனக் கருதக்கூடிய உரையாடல்கள் அனைத்தையும் கண்காணித்து அது எந்தப்பகுதியிலிருந்து வருகிறது என அறிந்து கண்ணிமைக்கும் நேரத்தில் ஈபிடிபியும் விசேட அதிரடிப்படை மற்றும் புலனாய்வுத்துறையினர் சுற்றிவளைப்புகளை மேற்கொண்டு கொழும்பில் ஏற்படக்கூடிய தாக்குதல்களைக் கட்டுப்படுத்துவதில் வெற்றியும் கண்டனர், இவைகள் அனைத்தையும் தாண்டியே சாதூர்யமாகப் புலிகளின் தாக்குதல்கள் அமைந்தன. இதில் புலிகள் பாவிக்கக்கூடிய சங்கேதச் சொற்கள் அனைத்தும் பட்டியலிடப்பட்டு அனைத்தும் கணணிமயப்படுத்தப்பட்டு அதிலிருந்து தகவல்களும் திரட்டப்பட்டன இவை அனைத்தையும் திறனாய்வு செய்வதற்கு ஈபிடிபி டக்ளஸ் குழு மலையகத்திலிருந்தும் நூற்றுக்கணக்கில் இளைஞர்களை பெரும்தொகை பணத்துக்காக ஆசைவார்த்தை சொல்லிப் பணிக்கமர்த்தியது. அவர்களில் பலர் நிரந்தரமாக வாக்ணர் கூலிப்படைபோல டக்ளசுடன் பணத்துக்கான படையாகத் தொழில்பட்டனர் மலையக் இளையோரது வறுமையை சிங்களமும் டக்ளசும் பயன்படுத்திகொண்டார். பின்னர் இவர்களில் ப்ரும்பகுதியினர் வடக்குக்கு நகர்த்தப்பட்டு யாழ் நகரப்பகுதியிலும் அதிகளவாணோர் நெடுந்தீவிலும் முகாமில் கிட்டத்தட்ட கைதியாகவே வைத்திருந்தனர் அவர்களில் மாற்றுக்கருத்துடையோர் முரண்டுபிடிப்போரை கொலை செய்துவிட்டு லொறிற் டயர் போட்டு எச்சங்கள் எதுவுமில்லாது டிஸ்போஸ் பண்ணிவிட்டனர் இவைகளைக் கண்டவர்களில் சிலர் இப்போதும் வெளிநாடுகளில் வாழ்கிறார்கள், சரி விடையத்துக்கு வருகிறேன் அரசாங்கமும் டக்ளசும் நினைத்தால் சுமார் மூன்று மாத காலத்துக்குள் போதைப்பாவனை வினியோகம் விற்பனை மற்றும் வலைப்பின்னல்களை இல்லாது ஒழிக்கமுடியும் மேலே கூறியதுபோல் கொழும்பில் அமைக்கப்பட்ட கட்டுப்பாட்டு அறைகளை வடிவமைத்தால் இலகுவாக இதை நிர்மூலமாக்க முடியும். ஏன் இதைவிட மிகவும் நவீன வழிமுறைகள் மற்றும் மென்பொருள்கள் இப்போது புளக்கத்தில் இருக்கு இதை வாசிக்கும் யாராலுமே இந்தப்போதைவஸ்து தொடர்பான அனைத்தையும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரமுடியும், ஆனால் ஒன்று இப்ப்டிச் செயற்பட சிங்களம் அனுமதிக்காது காரணம் அவர்களது நோக்கமே எமது வலுவைச் சிதைப்பது டக்ளசதும் நோக்கமும் அதுவே. பின்னர் எப்படி முடியும்
  15. சிகரங்கள் தொட வாழ்த்துக்கள். என்ன விடையம் எனில் இப்படியான அறிவுஜீவிகளைத் தாய்நாடு தவறவிடுகிறது. உலகின் உன்னதங்கள் அனைத்தையும் எமது நாட்டில் கொண்டுபோய்க் கொட்டவேணும் என இங்கு பலர் எண்ணியதுண்டு ஆனால் ஒருசில புல்லுருவிகளால் அவை அனைத்தும் கானல் நீராகிவிட்டது. பெண்ணே என்றோ ஒரு நாள் உங்களப்போன்றோரது திறமைகள் தங்கள் மண்ணுக்கு வந்து சேரவில்லை என சிங்களம் கவலைப்படும். அதுவும் கூடிய விரைவில். ஒரு நாடு முக்கியமாக எதை இழக்கக்கூடாது எனில் அறிவும் திறணும் சார்ந்த சமூகத்தை. தமிழ்சிறி பெருமைப்படுங்கள்.
  16. தமிழ் மக்கள் அனைவரும் இந்தியாவுக்கு எதிரானவர்களாகக் கட்டுரயாளர் சித்தரிக்கிறார். தவிர இல்லாத புலிகளுக்குமேல் பழிபோட்டு இப்போதிருக்கும் அரசியல் தலைமைகளைத் தப்பிக்கவிடுகிறார். முதலில் ஒன்றைக் கட்டுரையாளரும் அவரது கட்டுரைக்கு உச்சுக்கொட்டுபவர்களும் கவனிக்கவேண்டும். இந்தியா இப்போதும் புலிக்காச்சல் பிடித்து அப்பப்போ உளறிக்கொண்டு இருக்குது. வெறும் போதை வஸ்துக்கூட்டத்தையும் கஞ்சாக் கூட்டத்தையும் புலி எனப் பிரகடனப்படுத்துகிறது. இதில் என்ன வேடிக்கை எனில் இந்திய ஊடகத்துறைக்கு இந்த விசையம் தெரியும் வெளிநாட்டு ஊடகங்களுக்கும் இலங்கையிலுள்ள ஊடகங்களுக்கும் இது தெரியும் ஆனால் அவர்களுக்கும் காசு பார்க்கவேணுமே பத்திரிகையை அச்சுறுத்தல் இல்லாது நடாத்தவேண்டுமே அதுக்காக செய்தி எனும் பெயரில் இவைகளை வெளியிடுகின்றது. இலங்கையிலும் இந்தியாவிலும் ஊடகம் நடாத்துவது யாழ்ப்பாண மல்லிகை பதிப்பிபாளர் திரு டொமினிக் ஜீவா இல்லை தனது மாதந்தச் சஞ்சிகையை அச்செடுத்து கடை கடையாக ஏறி இறங்கி அதை வித்துக் காசு வாங்கி அடுத்த பதிப்புக்கான வேலையைத் தொடங்குவதற்கு. எனது வாழ்நாளில் நான் நேரே கண்ட ஒரு எழுத்துலக ஜாம்பவானை ஆரம்பகாலத்தில் அடையாளம் காணாது விட்டதையிட்டு நான் மனம் வருந்தியதுண்டு ஆனால் அவரை நான் அணுக எண்ணியபோது காலம் என்னை விடவில்லை. மேலே இணைத்துள்ள கட்டுரையை எழுதியவர் டொமினிக் ஜீவாவைப் போல சாமானியர் இல்லை ஒரு போர்க்கப்பலில் இரவு விருந்தைச் சுவைப்பதற்கான தொடர்புகள் அனைத்தையும் கொண்டுள்ளவர். அவரிடம் ஒன்றைக் கேட்டுக்கொள்கிறேன் தமிழ் நாட்டில் புலிகள் தம்மை மீளமைக்க போதை வஸ்து கடத்துகிறார்கள் அந்தக்கசில ஆயுதம் வாங்க முயற்சிக்கிறார்கள் எனப் புலுடாக்கதைகளை விடவேண்டாம் இன்னுமொரு பக்கம் தலைவரது மனைவி பிள்ளை இருக்கிறார்கள் வருகிறார்கள் என பம்மாத்து விடவேண்டாம் அப்படிச்சொல்லும் காசியர் நெடுமாறன் கேணல் கரிகரன் ஆகியோரை பிடித்து உள்ளுக்கை போட்டு விசாரியுங்கோ காரணம் ராஜீவ் காந்தியின் கொலை விசாரணை இன்னமும் முடிக்கப்படாது கிடப்பில கிடக்குது அவர்களுக்குத் தெரிந்த வ்சையத்தை விசாரியுங்கோ. ஆனால் வடக்குக் கிழக்கை இந்தியா தமது இன்னுமொரு மாநிலமாகப் பிரகடனப்படுத்தினால் சிங்களத்தின் நெருக்கடியில் சிக்கித்தவிக்கும் தமிழர் தரப்பு மறுப்பேதும் சொல்லாது எனச் சொல்லச்சொல்லுங்கோ. சும்மா அங்க புலி வருகுது புண்ணாக்கு வருகுது என் இல்லாத புலிகளை அரவழையாதையுங்கோ என அனைத்துத் தமிழர் தரப்பின் சார்பாகவும் கேட்டுக்கொள்ளுங்கோ.
  17. கடல் நீரைக் குடிநீராக்குவது என்பது ஒரு படிமுறையான வடித்தெடுக்கும் முறையாகும் இதில் மிஞ்சமாக வருவது அதிக செறிவுள்ள உப்பு நீராகும் அதாவது எந்தப் பிரதேசத்திலிருந்து கடல்நீரை நன்னீறாக்க எடுஇறோமோ நன்னீராக்கியதன் பின்னரான கழிவுநீர் அதிக செறிவுடைய உப்பைக் கொண்டிருக்கும் அந்தக்கழிவுநீர் அதே கடலில் சிறிது தூரமாக விடப்படும். அண்மையில் யாழிலிருந்து வெளிவரும் ஒரு யூரியூப் காணொளி பார்த்திருப்பீர்கள் அதில் ஓரிரு மாதங்களுக்கு முன்பு பருத்தித்துறையை அண்டிய பகுதியில் முரல்மீன் அதிகமாகப் பிடிபட்டது அது ஒவ்வொரு வருடமும் குறிப்பிட்ட இந்தக்காலத்தில் கரையை நோக்கி இனப்பெருக்கத்துக்காக வருபவை, இப்படி வரும் மீஙளுக்கு சரியான தட்ப வெப்ப நிலையுடன் உப்புச்செறிவுடனும் கடல்நீர் இருக்கவேண்டும் பல லட்சக்கணக்காக கரையை நோக்கி வரும் இந்த முரல் மீன் மீனவர் பிட்பட்டதுபோக மீதமுள்ளவை இனப்பெருக்கத்தில் ஈடுபட்டு பெருவளவான மீன் குஞ்சுகளை உருவாக்கும். இந்த விடையம் யாழ் களத்திலுள்ள அனேகருக்குத் தெரியும் எனினும் நினைவூடுகிறேன். சரி ஏன் இவைகள் குடாநாட்டின் கடல்பகுதியில் அதுவும் வடக்குக் கடலில் வருகிறது எனில், யாழ் களத்தில் இருக்கும் அனேகர் கீரிமலைக் கேணிக்குச் சென்றிருப்பீர்கள் அந்தக் கேணியிலிருந்து மீதமாக வரும் தண்ணீர் ஒரு வாய்க்கால்வழியோடுக் கடலில் கலக்கும் அந்தத் தண்ணியைச் சுவைத்துப்பார்த்தால் சுடிப்பதற்கு உகந்த தண்ணீராக இல்லாதுவிட்டாலும் உப்புக் கணியமாகக் குறைந்த தணியாக இருக்கும் தவிர மாலைப்பொழுதில் கீரிமலைக் கேணியில் குளித்தால் தண்ணீர் சூடாக இருக்கும் காரணம் குடாநாட்டின் சுண்ணாம்புப்பாரைகலூடகப் பயணப்படும் தண்ணீர் சூழலுக்கேற்றவாறு சூடாகின்றது தவிர கேணிக்கு அந்தப்பக்கத்தில் அதாவது மகிந்தவின் மாளிகைக்கு அண்மையில் கீரிமலை இருக்கு அந்தப்பகுதியிலும் கடலுடன் நல்லதண்ணீர் சேர்வதைக்காணலாம் ஆனால் மழைகால்த்தில் நாம் கண்கொண்டு காணலாம். ஆக மீன் வளம் பெருகுவதற்கு கடலில் சில பகுதிகளுல் உப்புச் செறிவு குறைவான நீர் இருக்கவேண்டியது அவசியம் அப்போதுதான் இனப்பெருக்கம் இலகுவாக நடைபெறும் கடல்நீரை நன்னீராக்கும்போது கழிவுநீரை அதே கடலில் கலக்கினால் ( சும்மா இல்லை 24/7 எனும் கணக்கில் வெளியேற்றினால்) அந்தப்பகுதியின் உப்புச்செறிவு அதிகரித்து கடலின் இயற்கைச் சமநிலை மாறி மீன் இனாற்றுப்போகும் வாய்ப்பு அதிகமாகும். மழைநீரைச்சேமிப்பது என்பது இலகுவான விடையம் இப்போது குடாநாடெஙும் கிணற்றுக்குப் பதிலாக குழாய்க்கிணறே வெட்டுகிறார்கள் நீர்த்தேவைக்குத் தவிர பக்கத்திலோ அல்லது சிறிது தூரத்திலோ இன்னுமொறு குழாய்க்கிணறு வெட்டி சிறந்த வடிகால் பொறிமுறையுடன் மழைகாலத்தில் கூரைகளிலிருந்து வடியும் நீரை அந்தக்குளிக்குள் இறக்கினால் சுலபமாக இருக்கும் அண்மையில் நான் ஒரு குளாய்க்கிணறு ஒரு வளவுக்குள்ள இறக்கினானான் கூலியாக நாற்பதாயிரம்தான் முடிந்தது. வடிகால் பொறிமுறையுடன் கிட்டத்தட்ட ஒரு லட்சம் ரூபாய் மட்டில் வரும். ஊருக்குப் போகும் போது நான் இப்படியான பொறிமுறையைப் பரீட்சித்துப்பார்க்க இருக்கிறேன் இங்க இருந்துகொண்டு ஓர்டர் கொடுத்தால் ஒரு உழக்கும் மிஞ்ச்சாது.
  18. இதே போன்றதொரு திட்டம் மருதங்கேணியில் ஆரம்பிக்கப்பட்டு இப்போது அத்திட்டத்திலிருந்து நீர் வினியோகம் நடைபெறுகிறது. தவிர கடல் நீரிலிருந்து நன்னீரைப் பெறும் திட்டமானது ஒரு சில வெளிநாட்டு நிறுவனங்களது காப்புரிமை பெறப்பட்ட பொறிமுறையாகும் இப்பொறிமுறையில் தயாரிக்கப்படும் ஒவ்வொரு லீற்றர் நீரும் கணக்கிடப்பட்டு எந்த நிறுவனம் அந்தப் பொறிமுறைக்கான காப்புரிமையை வைத்திருக்கிறதோ அவர்களுக்கு காப்புரிமைப் பணம் கொடுக்கப்படல்வேண்டும், இப்போது திட்டமிடபட்டு நிறைவேற்றப்படும் குடிநீர்த்திட்டமும் இப்படியாண கட்டண முரைக்குள் கீழ்தான் வரும். சரி யாழ் குடாநாட்டில் இப்படியான திட்டக்ங்களை நடைமுறைப்படுத்தவேண்டுமா அல்லது வேறு திட்டங்களை நடைமுறப்படுத்தமுடியுமா எனில் இதத் தவிர்த்து இயற்கையாகக் கிடைக்கக்கூடிய மழை வெள்ள நீரினைச் சரியான முறையில் சேமிப்பதன்மூலம் இதைவிட நூறுமடங்கு பலனைப்பெறலாம். யாழில்களத்தில் பல வருடங்களுக்கு முன்பே யாழ்ப்பாணத்துக்கான ஒரு ஆறு எனும் பெயரில் ஆனையிறவுக்குப் பின்பக்கத்திலிருந்து ஆனையிறவுக் கடலுக்குள் சேரும் நீரின் ஒருபகுதியைத் திசைதிருப்பி யாழ்குடாநாட்டுக்குக் கொண்டுவருவதற்கான திட்டம் இப்போதும் கிடப்பில் போடப்பட்டுள்ளது. தவிர நாவற்குழியிலிருந்து தொண்டைமனாறு வரைக்குமான கால்வாயை நல்லமுறையில் பாவித்தால் அந்தப்பிரதேசத்திலுள்ள நிலங்கள் வளப்படுவதுடன் அங்கிருந்து காலப்போக்கில் தண்ணீர்பஞ்சம் ஏற்படும் இடங்களுக்கு நீர்ப்பாசனம் செய்யலாம். அதற்காக அமைக்கப்பட்ட துருசுதான் நீண்டகாலமாகப் பராமரிக்கப்படாதிருந்து இப்போது செப்பனிடப்பட்ட செல்வச்சன்னதி முருகன் ஆலயத்துக்கு முன்னால் உள்ளது ஆகும். தவிர ஏழாலை தெற்கு ஏழு கோவிலடியில் ஒரு குளத்து நீர் மழைகாலத்தில் நிரம்பி அது கே கே எஸ் விதியை ஒரு பெரும் மதகின்மூலம் ஊடறுத்து செல்லும் வழியெங்கும் மழைநீரைச் சேர்த்துக்கொண்டு கல்லுண்டாய்வெளியால் பண்ணைப்பக்கத்தில் கடலோடு சேரும் வழுக்கிஆற்றின் மழைகால நீரை சரியான முறையில் சேமித்தால் ஒஎருமளவான குடிநீரை நாம் பெற்றுக்கொள்ளலாம். பின்னாளில் கிருஸாந்தியைக் கொலை செய்து புதைத்த செம்மணிப்பகுதியை விடுதலைப் பிலிகளது பொருண்மிய மேம்பாட்டு நிறுவனம் வரப்புகள் அமைத்து அந்தப்பகுதியில் காலம் காலமாக நெற்பயிரிட்டு வந்த வயல் நிலங்கலில் கடல் நீர் புகுந்ததால் நீண்டகாலமாகப் பயிரிடப்படாது இருந்த வயல்களை அண்டிய பகுதிகளில் கடல்நீர் புகாதிருக்கும் பொறிமுறையை ஏற்படுத்தினதால் இடப்பெயர்வுக்கு முந்தைய காலப்பகுதியில் குறிப்பிட்ட அளவிலான விவசாயக்காணிகளை கடலின் உப்புத் தன்மையிலிருந்து மீதப்பட்டதை சிலர் அறிவர். இப்போது செம்மணியை அண்டிய நாயன்மார்கட்டு மற்றும் இருபாலையின் பின்புறம் ஆகியவற்றின் கிணறுகளில் கடல் நீர் உட்புகுந்து குடிக்கக்கூடியதாகவும் சமையலுக்கு உதவாததாகவும் காணப்படும் துர்ப்பாக்கியம் சிறீலங்கா அரசின் நிர்வாகத்தாலும் அந்த நிவாகத்தில் பங்குகொள்ளும் நீர்ப்பாசன மற்றும் மராமத்துப் பணியாளர்களதும் சுயநலம் கலந்த சோம்பேறித்தனம் மக்களுக்கான சிந்தனை இன்மையாலும் காணப்படுகிறது. தமிழர் தேசத்தின் எமது பிரதிநிதிகளாகத் தெரிவுசெய்யப்படுபவர்கள் எமது உரிமைபற்றிச் சிந்திக்காது அன்றாட வாழ்வியலில் நாம் எதிர்கொள்ளும் சிக்கல்களைத் தீர்கவும் முயற்சிக்காததன் விளைவே இன்று நாம் எதிர்நோக்கும் எல்லாப் பிரச்சனைக்கும் காரணம். யாழ் போதைவஸ்துக் கலாச்சாரத்துக்கு இராணுவமும் சிங்களமும்தான் காஅரணம் எனக்கூறுபவர்கள் நாடாளுமன்றில் எல்லோரும் ஒருமித்து எதிப்புக்குரல் கொடுத்ததற்கான செய்தி எங்காவது இருந்தால் இணைக்கவும்.
  19. ஒரு மிகவும் நன்றாக அறியப்பட்ட, கடந்தகாலத்தில் தம்முடன் இணைந்து பணியாற்றிய, சரி தேர்தல் காலத்தில் தமக்கு எதிரெதிராக நின்றிருந்த ஒரு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு சிறு பிரச்சனை வந்திருக்கு, என்னவிருந்தாலும் ஒரு ஊடக் அறிக்கையையாவது போலியான மனநிலையிலாவது வெளியிடவேண்டும் எனச் சக தமிழ் நாடாளுமன்ற அங்கத்தவர்களுக்கும் தமிழ்த்தேசியம்பற்றி வாய்கிழியப்பேசும் தமைழ்த் தலைமைகளுக்கும் எண்ணம் ஏற்படவில்லையே. விடையம் இப்படி இருக்கையில் நாடாளுமன்றத்தின் மற்றய கட்சியின் உறுப்பினர்கள் குரல் கொடுப்பார்கள் என எப்படி எதிர்பார்ப்பது? நான் நினைக்கிறேன் சக தமிழ் அரசியல்வாதிகள் அவருக்ககக் கண்டனக் குரல் கொடுப்பதால் தமிழ் வாக்காளர்கள் மத்தியில் அவருக்கான செல்வாக்கு அதிகரித்துவிடும் எனும் பயமாகவேனும் இருக்கலாம். தவிர ஏற்கனவே சிங்களவர்கள் திட்டமிட்டே கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை எதிர்கிறார்கள் இதன் காரணமாக தமிழ்தேசியக் கூட்டமைப்பையும் பிற தமிழ் தேசியம் பேசும் கட்சிகளையும் நலிவடையச்செய்து பிரித்தாளும் தந்திரத்தை உபயோகிக்கிறார்கள் எனச்சொல்வதுண்டு. என்ன இருந்தாலும் கஜேந்திர குமார் பொன்னர் இதை விரும்பவே செய்வார் எப்போதாவது வரப்போகும் தேர்தலில் ஒரு சீற்றும் ஒரு போணசும் மிஞ்சும் என நிம்மதியாக இருப்பார் என நினைக்கிறேன்.
  20. ஒரு செய்தி நிறுவனம் என்பது எப்படிச் செயல்படவேண்டும் யாருக்கு ஆதரவாக இருக்கவேண்டும் யாரைப் பாதிக்கக் கூடாது யாரிடம் பகைக்கக் கூடாது எப்படியான செய்தி வெளியிடப்படல்வேண்டும் என்பது தவிர அரசாங்கத்தினுடைய சில கோரிக்கைகளையோ அன்றில் செயல்படும் நாட்டில் செல்வாக்குமிக்கவர்களது கோரிக்கைகளையோ ஏற்றுத்தான் செய்திகளை வெளியிடவேண்டும் தவிர குருபரன் தலைமை ஊடகவியளாளராக இருந்தால் அவரது பார்வைக்கு ஒவ்வொரு செய்தியும் அதாவது பிரச்சனைக்குரியது எனக் கருதப்படும் செய்திகள் அனைத்தும் பார்வைக்கு உட்படுத்தப்பட்டெ வரும் இது தவிர்க்கப்படமுடியாததாகும். அப்படி குருபரனுக்குத் தெரியாது ஒரு பிரச்சனைக்குரிய செய்தி தவறான விதத்தில் பிரசுரமாகுமாயிருந்தால் அச்செய்தி நிறுவனத்தை அவரைத்தவிர வேறு யாரோ மேலாண்மை செய்கிறார்கள் என்பது அர்த்தமாகும். உங்களது கருத்தின்படி குருபரனது கட்டுப்பாட்டில் அந்த நிறுவனம் இல்லை எனப்படுகிறது. அவர் ஒப்புக்குச் சப்பாணியாக இருக்கிறார் என்பதெள அதன் பொருளாகும் உங்களுக்கு அறிமுகமானவராக இருந்தால் ஒரு தடவை கேட்டுத்தெரிந்துகொள்ளுங்களேன் எமக்காக.
  21. ஆதவன் நியூஸ் என்பது யாருடையது எனில் லைக்க சுபாஸ்கரனுடையது தனிப்பட்ட ரீதியில் சிங்களத்தின் இரண்டு தொலைக்காட்சிகள் மற்றும் அரச தொலைக்காட்சியை வாடகைக்கு எடுத்தது இவைகள் தவிர ஆதவன் நியூசும் இவருடையதே இவர் நினைத்தால் தமிழில் ஒரு மிகச் சிறந்த ஊடகமாக இதைக் கொண்டுவரலாம் இதில் வேலைசெய்யும் ஊழியர்கள் இவரிடம்ந் இப்படி இதை நடாத்துகிறீர்கள் சிறப்பாகச் செயல்படலாம்தானே எனக்கேட்டதாக அறிந்தேன் ஆனால் தமிழ் ஊடகமெனில் அரசுக்கு எதிராக எதுவும் சொல்லமுடியாது எல்லத்தையும் பறிச்சுப்போட்டு உள்ளவைத்துவிடுவாஙள் என்பதால் கம்மென்று இருக்கிறார் என நினைக்கிறேன்
  22. மனோ கணேசன் அவர்கள் இந்தியாவில் குடிநீர் தொட்டியில் மனித மலம் கொட்டியதையும் மணிப்பூரில் நிர்வான ஊர்வலம் நடத்தியதையும் மறந்து சந்திரனைபற்றிக்கூறுகிறார். நாடாளுமன்றத்தில் சரத் வீரசேகரா முல்லைத்தீவு நீதவானை மனநோயாளி எனக்கூறியபோது இவர்கள் கண்டணம் தெரிவிக்கவோ அல்லது நீதித்துறையையும் நீதியாளரையும் அவமதித்ததற்கான கண்டனத்தீர்மானத்தையோ அல்லது கவன்யீர்ப்புத் தீர்மானத்தையோ கொண்டுவந்து சிறீலங்கா அரசின் அரசியலமைப்பின் நீதித்துறை சட்டங்களுக்கு அமைவாவ நியமனம் பெற்ற ஒரு நீதியாளரை அவமதித்தது அவரது உரிமையில் மீறல் செய்தது மற்றும் அவரது நீதிஅரிபாலனம் தொடர்பான தீர்ப்புகளை அவரது தனிப்பட்ட சுய அடையாளங்களுடன் விமர்சித்து அவருக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தி தனது சுயத்தினை அழிக்க முற்பட்டது இவைகளுக்காக எந்த நாடாளுமன்ற உறுப்பினர் குரல்கொடுத்தவர். உச்ச நீதிமன்ற நீதிபதியாக மோகன் பீரீசை சட்டரீதியற்று நியமனம் செய்தது பிழை என சிங்களச் சட்டவாளர்கள் வாதாடும்போது சுமந்திரனும் அவர்களுடன் சேர்ந்து போராடினாரே அப்போ முல்லைத்தீவு சிறீலங்காவின் நிர்வாக எல்லைக்குள் இல்லையா பாராளுமன்ற நடைமுறை எதுவுமே தெரியாத அல்லது தெரிந்தும் வாய்மூடி மெளனிகளாக இருக்கும் தமிள் நாடாளுமன்ற உறுப்பினர்கள்தான் எமக்கான உரிமையை எடுத்துத் தருவார்கள் அப்படித்தானே.
  23. ஆதவன் நியூஸ் இப்போது அந்தக்காலத்து இந்துநேசன் "மஞ்சள் பத்திரிகை" ரேஞ்சுக்கு வந்திட்டுது. இதைவிடப் நாலுவீட்டில விழுகிற பழையதைத் திண்டு வாழலாம். இதத்தான் சொல்லுறது பத்திரிகை ............... என்று கடந்த ஒரு கருத்திடுகையில் நான் *** சொல் நீக்கப்பட்டுள்ளது - யாழ் இணையம்கள் என எழுதியதை அவச்சொல்லைப் பாவித்ததென்று நீக்கிவிட்டார்கள்.ஆதலால் இதையும் மட்டுறுத்தினர் சரிபார்த்து மிச்சமிருந்தால் அனுமதிக்கவும்.
  24. கு சா அவர்களே ஒரு முறை நேர்காணலில் ஜெகத் கஸ்பார் அவர்கள் இலங்கைத் தமிழர்கள் தட்டையான மனநிலைகொண்டவர்கள் எனக் கூறியதன் அர்த்தத்தை இதுவரை நான் சரியாகப் புரிந்துகொள்ளவில்லை அதனது உண்மையான அர்த்தம் என்ன என்பதை யாராவது தெரிந்தால் சொல்லுங்கள். சிலவேளை அதுவாக இருக்குமோ இதுவாக இருக்குமோ எனக் குழம்பிப்போவதெள இதுவரை நீடிக்கிறது. ஆனால் இந்தத் திரியில் நீங்கள் எழுதிய கருத்து இப்படியாகவும் இருக்குமோ என எண்ணத்தோன்றுகிடது. பூட்டின் ஒரு மன நோயாளி அந்த மனநோயாளியின் செயல்களை யாரோ ஒருவருக்கு மேலுள்ள கோவத்தின் காரணமாக ஆதரித்து நிற்பது என்பது அபத்தன் இந்தியா சீனா இவை போன்ற நாடுகளது நடுநிலை எனும் பாசாங்குத் தனத்துக்கு ஒப்பானது இந்தச் செயல். உயிர் அழிவு மட்டுமல்லை உலகின் எங்கோ ஒரு மூலையில் வாழும் எமக்கு அறிமுகமில்லாத மனிதர்களும் இந்தப்போரினால் பாதிக்கப்படுகிறான, நேற்றிருந்ததுபோல வாழ்க்கை இன்றில்லை காரணம் இந்தப்போர்தான். சாதாரணமாக தனிப்பட்ட விதத்தில் நான் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளேன் வரையறுக்கப்பட்ட எனது வருமானத்தில் கட்டுபடியில்லாத செலவீனங்களால் எனது அமைதி குலைகிறது. எனது அனைத்துச் செலவினங்களும் மிகவும் திட்டமிட்ட முறையில் நியாயமானதாக இருந்தாலும் சமாளிக்கமுடாதுள்ளது நெருக்கடி நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. இதனால் நிம்மதியாக நித்திரைகொள்ள முடியவில்லை பயம் பயம் பயம் நாளைய விடியல் எப்படியிருக்கப்போகுது எனும் பயம். யுத்தத்தினாலான பயமில்லை சாதாரண நடைமுறை வாழ்வையிட்டுப் பயம் இடுப்பிலிருக்கும் வேட்டியும் உருவப்பட்டுவிடுமோ எனும் பயம் நடுத்தெருவுக்கு வந்துவிடுவோமோ எனும் பயம் கிரேக்கத்தில் நடந்த பொருளாதார மந்தநிலையில் மேல்மாடியிலிருந்து குதித்துத் தற்கொலை செய்தார்களே அவர்கள்போலான மனநிலை எனக்கும் வந்துவிடுமோ எனும் பயம். இந்த உலகவல்லரசுகளது அடாவடித்தனம் சாமானியனை மிகவும் பாதித்துவிட்டது, பாவம் அவன் வளர்ச்சியடைந்த நாடுகளில் வாழ்ந்தாலும் தெருவில் இலவச உணவுக்காக வரிசையில் காத்துக்கிடக்கிறான் இங்குவாழும் புலம்பெயர்ந்தவன் இல்லை இந்த நாட்டின் மைந்தர்கள்தான் அப்படி நிற்கிறார்கள் எங்கள் நிலையும் இதுதான் ஆனால் பிச்சியெடுக்க ரோசம் விடுகிதில்லை எனச் சிலர் புறுபுறுக்கிறார்கள். பூடின் ஒழியவேண்டும் காரணம் இதைத்தவிர வேறி எந்தவித மாற்றீடும் இல்லை.
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.