Everything posted by ராசவன்னியன்
-
கூழைக் கும்பிடு எப்படியிருக்கும்?
- தமிழ் இல்லையா..?
வாட்ஸ் அப்பில் வந்த அருமையான செய்தி: ஐந்து மாநிலங்களின் கழிவுகளை சுமந்தாலும் கங்கைதான் புனித நதி, காவிரி அல்ல! ஐவரைக் கலந்தாலும் பாஞ்சாலிதான் பத்தினி, கண்ணகி அல்ல! பல மொழிகள் கலந்திருந்தாலும் இந்தியும், சமற்கிருதமும்தான் உயர்ந்தவை, தமிழ் அல்ல! உலகின் முதல் மாந்தனாக இல்லாத போதும் ஆரியனே உயர்ந்தவன், தமிழன் அல்ல! மனித வாழ்வியலுக்கான உலகப் பொதுமறையாக போற்றப்பட்டாலும் மகாபாரத, இராமாயண புராணப் புரட்டுகளே உயர்ந்தவை, திருக்குறளோ, சங்க இலக்கியங்களோ அல்ல! எத்தனை ஆண்டுகள் கடந்தாலும் ஆரிய இந்துத்துவா கழிசடைகள் ஆளும் இந்தியாவின் பார்வை இதுதான்! இது மாறாது, தமிழினம் இதை உணர்ந்துள்ளது! ஆகையால்தான் தமிழ்த்தேச விடுதலையே தமிழ்த்தேசியம் என்று இறுதி செய்துள்ளது நிகழ்கால தமிழர் வரலாறு..! .- கணேஷ் மாமா லொள்ளு..!
ஆர்ப்பாட்டம், அமர்க்களமில்லாத கிராமத்து 'லொள்ளு' இக்கலைஞனுடையது..!- மதுரை மாநகரம்
- மதுரை மல்லிகை வாசம்..
மதுரையை ஆண்ட பாண்டியர்கள் எங்கிருந்து வந்தனர்? மதுரையை ஏன் தலைநகராக கொண்டு ஆட்சி புரிந்தனர் என்பதை பார்ப்போம். பாண்டியர்கள் முதலில் ஆட்சி செய்த இடம் கொற்கை. லெமூரியா கண்டத்தின் நடுவே பழம் பாண்டியர்களின் கொற்கை அமைந்திருந்தது. அவர்களின் வாழ்விற்கும், செழிப்புக்கும் காரணமாக கொற்கை துறைமுகம் இருந்தது. கடல் வாணிபத்தால் இத்துறைமுகம் புகழ் பெற்றது. கடல் தங்களை வாழவைக்கும் கடவுளாக பாண்டியர்கள் கருதியதால், சின்னமாக மீனை வைத்துக் கொண்டனர். இரண்டு மீன்களின் இருபுறமும் உள்ள கண்கள் தெரிய வேண்டுமென்பதற்காக செங்குத்தாக நிற்பது போல் அமைத்தனர். எதிலும் தாங்கள் உறுதியாக நிற்பவர்கள் என்பதை காட்ட இச்சின்னத்தை தேர்ந்தெடுத்தனர். கொற்கையை ஆண்ட சடவர்மன் வீரபாண்டியன், இலங்கையில் போர்தொடுத்து வென்று, திரிகோணமலை பாறையில் மீன்கொடியை பொறித்தான். பிற்காலத்தில் டச்சுக்காரர்கள், அந்த பாறையை பெயர்த்தெடுத்து, தூய பெரடரிக் கோட்டை சுவர் மீது வைத்தனர். பாண்டிய மன்னர்கள் வாணிப செலாவணிக்காக காசுகளை அச்சடித்தனர். கொற்கை துறைமுகம் கடல்கோளால் சீரழிய, பழைய காயலுக்கு துறைமுகம் இடம்பெயர்ந்தது. இங்கும் கடல்கோளால் 4 கி.மீ., தூரத்தை கடல்கொண்டது. இப்படி அடிக்கடி ஏற்பட்ட கடல் கோள்களில் இருந்து தப்பிக்க, பாண்டியர் தலைநகரை மதுரைக்கு மாற்றினர். கொற்கையை ஆண்ட கடைசி மன்னர் முடத்திருமாறன். மதுரையை பாண்டியர்கள் ஆண்டாலும், கொற்கையை அவர்களது வாரிசுகள் ஆண்டனர். கொற்கை, பழைய காயலில் இருந்து பாண்டியர் தலைநகரம் மதுரைக்கு இடமாறியதை பிளினி போன்ற பேராசிரியர்கள் தங்கள் நூலில் குறிப்பிட்டுள்ளனர். அழகர் கோவிலில் உள்ள பிராமி கல்வெட்டில் மதுரையை "மதிரய்' என சமணர்கள் குறிப்பிட்டுள்ளனர். கி.பி. 1310 முதல் பாண்டியர்களுக்கு சோதனை காலமானது. குலசேகர பாண்டியன் வாரிசுகள் சுந்தரபாண்டியன், வீரபாண்டியன் இடையே வாரிசுரிமை போர் மூண்டது. இதை பயன்படுத்தி டில்லி சுல்தான் அலாவுதீன் கில்ஜி படைத்தளபதி மாலிக்காபூர் மதுரையில் படையெடுத்ததை தொடர்ந்து, கி.பி.1330 -78ல் முகமதியர் ஆட்சி நடந்தது. பின், விஜயநகர அரசர் குமார கம்பணன் மதுரையை வென்று ஆட்சியை நிறுவினார். இதைதொடர்ந்து நாயக்கர் ஆட்சி நடந்தது. 14ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் நெல்லை பகுதிக்கு சென்ற பாண்டிய மன்னர்கள், தென்பாண்டி நாட்டை குறுநில மன்னர்களாக ஆட்சி செய்தனர். கி.பி.17ம் நூற்றாண்டு வரை இவர்களது சந்ததியினர் கொற்கை, தென்காசி, கரிவலம் வந்தநல்லூரில் ஆட்சி செய்தனர். பாண்டியர் மன்னர்களில் கி.பி.1422 - 63 வரை ஆட்சி செய்த சடையவர்மன் பராக்கிரம பாண்டியன் குறிப்பிடத்தக்கவர். இவர் சேர மன்னனை வென்றார். தென்காசியில் கோயில் எழுப்பினார். 17ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பாண்டிய மன்னர்களின் ஆட்சி முடிவுக்கு வந்தது. இருந்தாலும், மதுரை என்றாலே "பாண்டிய நாடு' என்ற பெருமையை தந்தவர்கள் பாண்டிய மன்னர்கள்தான். -படித்தது.- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
அடிமைகள் உடம்பில் ரத்தம் எதற்கு..? தினம் அச்சப்பட்ட கோழைக்கு இல்லம் எதற்கு..?- அணிகள் இணைப்பா..? எங்களுக்கு தெரியாது..! ஒரே மாதிரி சொல்லும் ஓ.பி.எஸ் அணியினர்!
அணிகள் இணைப்பா..? எங்களுக்கு தெரியாது..! ஒரே மாதிரி சொல்லும் ஓ.பி.எஸ் அணியினர்! சென்னை: அதிமுக அணிகள் இணைப்பு நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், 4 மணி நேரத்திற்கும் மேலாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வீடுகளில் ஆலோசனை கூட்டங்கள் நடைபெற்றன. அணிகள் இணைப்பு குறித்து முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தனது ஆதரவாளர்களுடன் தனது இல்லத்தில் ஆலோசனை நடத்தினார். இதேபோன்று முதல்வர் பழனிசாமி, முக்கிய அமைச்சர்களுடன் தனது கிரீன்வேஸ் இல்லத்தில் ஆலோசனை நடத்தினார். 4 மணிநேரம் இப்படி நடைபெற்ற ஆலோசனை கூட்டம் இரவு 9.15 மணியளவில் நிறைவடைந்தது. இதன்பிறகு ஓ.பி.எஸ் இல்லத்தில் இருந்து வெளியேறிய அவர் ஆதரவு மூத்த நிர்வாகிகளான பி.ஹெச்.பாண்டியன், பொன்னையன், மதுசூதனன் ஆகியோர் ஒரே மாதிரி வார்த்தைகளைத்தான் கூறினர். அணிகள் இணைப்பு குறித்து தங்களுக்கு எதுவும் தெரியாது என்றும், அதுகுறித்து பன்னீர்செல்வம்தான் முடிவெடுத்து அறிவிப்பார் எனவும் கூறி கலைந்து சென்றனர். பன்னீர்செல்வமும் இதுவரை எதுவும் தெரிவிக்காத நிலையில் அதிமுக தொண்டர்கள் இடையே பெரும் பரபரப்பு நிலவி வருகிறது. தட்ஸ்தமிழ்- மதுரை மல்லிகை வாசம்..
- மதுரை மாநகரம்
- சென்னை மெட்ரோ ரயில்...
இன்று வட பழனி - அரும்பாக்கம் இடையே சென்னை மெட்ரோ இரயிலின் என்ஜின் பழுதால், பயணிகள் அருகேயுள்ள அடுத்த ரயில் நிலையத்திற்கு நடந்து செல்லும் காட்சி..! Typical Indian quality of operation & maintenance..?- சென்னையின் முகம்..
- சென்னையின் முகம்..
கருத்திற்கு நன்றி..! எனக்கு மதுரைக்கு அடுத்தபடியாக சென்னை பிடிக்கும்.. தமிழகத்திற்கு வெளியே மிகவும் பிடித்த நகரம் சிங்கப்பூர் மற்றும் யாழ்ப்பாணம். சுயநலமில்லாத தமிழுணர்வுள்ள தலைமை தமிழகத்திற்கு வாய்த்தால் இழந்த தமிழகத்தின் சிறப்பும், சென்னையின் பொலிவும் மீளும். கிந்தியாவுடன் இணைந்ததால் இழந்த தமிழகத்தின் திருப்பதி, இடுக்கி போன்ற பகுதிகள் மீட்கப்பட வேண்டும். யாழ்ப்பாணம் இதுவரை சென்றதில்லை.. கூகிள் எர்த் மூலம் அடிக்கடி பார்ப்பதால், நகரத்தின் பகுதிகளை என்னால் நினைவில் சுழலவிட்டு (Visualize) உணர இயலும்.- "சினிமா... பைத்தியங்கள்" என்றால் இவர்கள் தான்.
ஜல்லிகட்டு போராட்டத்திற்கு கூடியதை பார்த்து சிறிது நம்பிக்கை வந்துள்ளது.. மந்தைகளை மேய்க்க சரியான தலைமை இல்லை.. அதற்கும் காலம் வரும்.- சென்னையின் முகம்..
- சென்னையின் முகம்..
- மதுரை மாநகரம்
- சோழனின் தஞ்சை
- மதுரை மாநகரம்
- சென்னையின் முகம்..
- பூங்கதவே, தாழ் திறவாய்..?
"பூங்கதவே தாழ் திறவாய்..பூவாய் பெண் பாவாய்.." எனப்பாடியும் கதவு திறக்காதது ஏன்..? ஏது சூட்சமம் உள்ளதா..? பெண் ஏதும் அறியாதவரா?- மனைவியை சமாளிப்பது எப்படி..?
- மனைவியை சமாளிப்பது எப்படி..?
- அடிப்பியா..? அப்பன் மவனே.. சிங்கம்டா!
அடிப்பியா..? அப்பன் மவனே.. சிங்கம்டா! 1940ல் வெளிவந்த 'சகுந்தலை' படத்தில் வரும் இந்த நகைச்சுவை காட்சி திரையுலகில் சாகாவரம் பெற்ற மிகவும் முக்கியமான காட்சியாக இன்றளவும் பேசப்படுகிறது. இரண்டு செம்படவர்கள் ஒரு மீனுக்காக சண்டை போட்டுக் கொள்கிறார்கள். ஒரு கட்டத்தில் ஒருவர் மற்றவரை அடிக்க ஆரம்பிக்கிறார். அடிபட்டவர் திருப்பித் தாக்காமல் "அடிப்பியா, அப்பன் மவனே, சிங்கம்டா..!" என்று தனது வீரத்தைப் பறை சாற்றுவார். முதலாமவர் மறுபடியும் அடிப்பார். அப்போதும் பதிலாக இதே வசனம்தான். ஆனால் அடிபட்டவரின் குரல்பாவத்தில் வேறுபாடு. இப்படி அடிப்பவர் அடித்துக்கொண்டே இருக்க அடிபடுபவர் மறுபடியும், மறுபடியும் இதே பதிலை வேறுவேறு பாணியில் சொல்ல, கடைசியில் அது அழுதுகொண்டே சொல்வதுபோல் முடியும். இலங்கை வானொலியில் இந்த ஒலிச்சித்திரத்தை அடிக்கடி கேட்டுள்ளேன்.. என்.எஸ்.கிருஷ்ணன் மற்றும் டி.எஸ்.துரைராஜ் நடித்த இக்காட்சி அருமையான நகைச்சுவை யாழ் உறவுகளுக்காக..!- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
duraisamygounderramamoorthy (64 years old) கண்ணுபட போகுதையா... துரைசாமி கவுண்டரே..!Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.
- தமிழ் இல்லையா..?