Everything posted by ராசவன்னியன்
-
கருணாநிதியின் புன்னகை தரிசனம்... உற்சாகத்தில் திமுக தொண்டர்கள்!
கருணாநிதியின் புன்னகை தரிசனம்... உற்சாகத்தில் திமுக தொண்டர்கள் சென்னை: திமுக தலைவர் கருணாநிதியின் புன்னகை தரிசனத்தை எட்டு மாதம் கழித்து பார்த்த தொண்டர்கள் உற்சாகமடைந்தனர். உடன்பிறப்பே என்று முரசொலியில் எழுதினாலும் சரி, மேடையில் அவர் அழைத்தாலும் சரி திமுக தொண்டர்களுக்கு உற்சாகம் கிளம்பிவிடும். விசில் அடித்து கரஒலி எழுப்பி தங்களின் அன்பை வெளிப்படுத்துவார்கள் திமுக தொண்டர்கள். முதுமை காரணமாக உடல் நலம் குன்றியதால் கடந்த டிசம்பர் மாதம் முதலே கருணாநிதியை பொது இடங்களில் காண முடியவில்லை. அவரது அறிக்கைகள், எழுத்துக்களையும் படிக்க முடியாத தொண்டர்கள் சற்றே சோர்ந்துதான் போய்விட்டனர். வீட்டிற்குள் கருணாநிதி திமுக தலைவர் கருணாநிதி கடந்த டிசம்பர் மாதம் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியதில் இருந்தே வீட்டிற்குள்தான் இருக்கிறார். குடும்ப உறுப்பினர்கள், முக்கிய அரசியல் கட்சித்தலைவர்கள் தவிர வேறு யாருமே அவரை சந்திக்கவில்லை. தொண்டர்களின் கவலை முரசொலி நாளிதழில் கருணாநிதியின் உடன்பிறப்பே கடிதம் காணாத தொண்டர்களின் சோர்வை போக்க அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் புகைப்படத்தை மட்டுமே பதிவேற்றி வந்தார் திமுக செயல்தலைவர் ஸ்டாலின். பிறந்தநாள் கொண்டாட்டம் கருணாநிதியின் பிறந்தநாள் ஜூன் 3ஆம் தேதி கொண்டாடப்பட்டது. அன்றைய தினம் அவரது குடும்பத்தினர் கேக் வெட்டி கொண்டாடினர். அவர் கேக் சாப்பிடும் காட்சிகள் அடங்கிய வீடியோ டுவிட்டர் பக்கத்தில் பதிவேற்றினர். ஜொலிக்காத கொண்டாட்டங்கள் சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்ற வைரவிழா கொண்டாட்டத்தின் போதும் கருணாநிதி வருவார் என்று தொண்டர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் அவரில்லாமலேயே விழா கொண்டாடப்பட்டது. இதேபோல முரசொலி பவளவிழாவும் கருணாநிதி இல்லாமலேயே கடந்து போனது. இந்த விழாவிற்கு வந்த தொண்டர்கள் கருணாநிதியின் குரலை கேட்கமலேயே ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். வாழ்த்துக் கடிதம் முரசொலி பவளவிழா கொண்டாட்டத்திற்கான கருணாநிதி வாழ்த்துக்கடிதம் அனுப்பியிருந்தார். அந்த கடிதத்தைப் படித்து உற்சாகமடைந்தனர் தொண்டர்கள். மழை வந்து தொண்டர்களின் உற்சாகத்தை தடுத்தது. செயற்கை உணவுக்குழாய் மாற்றம் இன்று காலையில் கருணாநிதி மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு பொருத்தப்பட்டிருந்த செயற்கை உணவுக்குழாயை 6 மாதத்திற்கு ஒருமுறை மாற்ற வேண்டும் என்பதால் இன்றைக்கு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். செயற்கை உணவுக்குழாய் மாற்றப்பட்டு மீண்டும் அவர் வீடு திரும்பினார். தொண்டர்களுக்கு தரிசனம் கடந்த 8 மாதகாலம் வீட்டிற்குள்ளேயே மருத்துவர்கள், குடும்ப உறுப்பினர்களின் கண்காணிப்பில் இருந்து வந்த கருணாநிதி இன்று தொண்டர்களுக்கு தரிசனம் அளித்தார். அவரின் புன்னகை தரிசனத்தைக் கண்டு தொண்டர்கள் உற்சாக முழக்கமிட்டனர். புன்னகை முகம் தினசரி செய்தித்தாள்களிலும், தொலைக்காட்சிகளிலும் அவரது அறிக்கை, பேட்டிகள் முக்கியமாக இடம் பெறும். கடந்த 8 மாதகாலமாக எந்த அறிக்கையும் எழுதவில்லை. இன்று மீண்டும் கருணாநிதியை ஊடகங்கள் படம் பிடித்து ஒளிபரப்பியதும் வெளியூரில் இருந்த தொண்டர்களும், அவரின் புன்னகை முகத்தைப் பார்த்து உற்சாகமடைந்துள்ளனர் தற்ஸ்தமிழ் விதி வலியது..
- நீரில் மிதந்தது இளமேனி..
-
இந்த நேசம், பாசம் நாளும் வாழ்க..!
பொடியர் நல்லாவே பாடி அசத்தியுள்ளார்..
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இன்று எழுபதையடையும்(?) கள்ளுக்கடை நாயகன், 'முனைவர்'. குமாரசாமி அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்..!- 'ஓனர்' எங்கேயப்பு..?
- தொட வரவோ..?
கொலம்பியாவிலுள்ள 'அன்டோனியோ நரினோ' உள்ளூர் போக்குவரத்து விமான நிலையம் மலை மீது அமைந்துள்ளது.. விமானிகளுக்கு விமானத்தை இறக்கும் போதும், ஏற்றும் போதும் மிகச் சவாலாக உள்ள விமான நிலயம் இதுவாகவே இருக்கும்.. ஆனால் பயணிகளுக்கு மிக த்ரில்லான அனுபவத்தை தருகிறது. Enjoy this thrilling cockpit view..!- என்ன என்ன வார்த்தைகளோ..!
- என்ன என்ன வார்த்தைகளோ..!
- சமையல் செய்முறைகள் சில
இப்பொழுதான் தமிழ்நாட்டில் 'அயிட்டங்கள்' பற்றிய சர்ச்சை ஓய்ந்துள்ளது..!- பரிசை வென்ற துபாய் 'நகர வளர்ச்சி' படங்கள்!
இன்றைய கலீஜ் டைம்ஸில் வெளியான துபாயின் 'நகர வளர்ச்சி'க்கான இப்படங்கள் தெரிவு செய்யப்பட்டு உலகளவில் பரிசை வென்றுள்ளது..! துபாய் 'மெரீனா' 'புர்ஜ் அல் அராப்' துபாய் 'மிராக்கிள் கார்டன்' மாலையில் பாலையின் சாலை 'ஜுமைரா லேக்' பகுதி ஷேக் சையத் சாலை, துபாய் கால்வாய் அருகே! கலீஜ் டைம்ஸ்- தனுஷ்கோடி...உன்னைத் தேடி!
52 வருடங்களுக்குப் பின் புதிதாக திறக்கப்பட்ட சாலை மூலம் சிதைந்த தனுஷ்கோடி நகரையும் தாண்டி, அரிச்சல்முனை வரை பொதுமக்கள் தங்கள் சொந்த வாகனத்திலேயே சென்றுவர தற்பொழுது வசதியேற்பட்டுள்ளது.. இந்துக்களுக்கு இனி காசி-ராமேஸ்வரம் என்றிருந்த நிலை மாறி, காசி-தனுஷ்கோடி என மாறும் நாள் வெகுதொலைவில் இல்லை.- தனுஷ்கோடி...உன்னைத் தேடி!
'அரிச்சல்முனை'யில் அமைந்துள்ள கண்காணிப்பு கோபுரத்தின் மீது ஏறி எடுத்துள்ள இந்தக் காணொளி, தனுஷ்கோடியின் மிக குறுகிய நிலப்பரப்பையும், புதிதாக அமைக்கப்பட்ட தார் சாலையையும் காட்டுகிறது.. Must watch..! கிந்தியாவின் ராசதந்திரத்திற்கு(?) தமிழ்நாடு பலிகடாவாகி கொண்டிருக்கிறது..! கருத்திற்கும், வருகைக்கும் நன்றி, டங்கு, சுவி மற்றும் தமிழ் சிறி..!- என்ன என்ன வார்த்தைகளோ..!
- மதுரையின் வளர்ச்சி..
மானம் காத்த மதுரை நதிக்கரை நாகரிகங்கள் தோன்றிய காலம் முதல் நைல் நதி நாகரிகம், சிந்துநதி நாகரிகம் என உலகம் முழுதும் இருக்கக்கூடியதைப் போன்று, 2000ம் ஆண்டு பழமையான, இன்றும் உயிரோடு இயங்கிக் கொண்டிருப்பது மதுரை, அதன் வைகை நதிக்கரையில் தான்.சில ஊர்கள் காலவரலாற்றில் மறைந்துவிட்டன. பெரிய நகரங்கள் இடம்பெயர்ந்து விட்டன. புராண, வரலாற்று, இலக்கியக் காலம் துவங்கி இன்று வரை திரைத்துறையா... பேச்சுத்துறையா.... எந்தத் துறையிலும் கலை, இலக்கியம் சார்ந்த விஷயங்களில் முன்னோடியாக இருப்பது, மதுரையின் வேர்கள் தான்.மதுரைக்கு நிறைய பெயர்கள் உண்டு. கடம்பவனம், ஆலவாய், நான்மாடக்கூடல், மருதை, மதிரை, மதுரை... சொல்லிக் கொண்டே போகலாம். மதுரையின் பெயர்க்காரணங்களை கல்வெட்டு, புராண, இலக்கிய காலம் தொட்டு ஆதாரமாகச் சொல்லமுடியும்.கல்வெட்டுச் சான்று: தொல்லியல் துறை அறிஞர் வேதாச்சலம் கூற்றுப்படி கல்வெட்டுக்களில் 'மதிரை' என்று தான் கூறப்படுகிறது. அழகர்கோவிலில் உள்ள கல்வெட்டிலும், திண்டுக்கல் நிலக்கோட்டை அருகிலுள்ள அணைப்பட்டி (சித்தர்கள் நத்தம்) கல்வெட்டிலும் 'மதிரை' என்றே குறிப்பிடப்படுகிறது. சிலப்பதிகாரத்தில் பாண்டிய நாடு மதுரைக் காண்டம் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. இன்னமும் கிராமப்புறங்களில் சொல்வழக்கில் உள்ள சொல் என்ன தெரியுமா? 'நாங்க மருதக்காரங்க' தான். இலக்கியத்திலும் எடுத்துக்காட்டு: பத்துப்பாட்டில் ஒன்றான மதுரைக்காஞ்சியை, இரண்டாம் நூற்றாண்டில் மாங்குடி மருதனார் எழுதினார். இந்தக்காலத்தில் நூல் வெளியீட்டு விழா நடத்துவது போல, அந்தக்காலத்தில் நூல் அரங்கேற்ற விழா நடத்தப்பட்டது. அரங்கம் ஏற்றுக்கொண்டால் தான் நூலாக வெளியிடமுடியும். அத்தகைய சிறப்புமிக்க மதுரைக்காஞ்சியை மாங்குடி மருதனார், திருவோண நன்னாளில் அரங்கேற்றம் செய்தது மதுரையில் தான்.மதுரைக்காஞ்சியில் மதுரையின் இரவும், பகலுமான முழுநாள் நிகழ்வை நேர்முக வர்ணனையாக கூறியிருப்பார் மாங்குடி மருதனார். தூங்காநகரம் என்ற பெயர் தானாக வந்ததில்லை. அங்காடிகள் என்றால் கடைகள்; அல் என்றால் இரவு. மதுரைக்காஞ்சியில் 'அல்லங்காடி' என குறிப்பிடப்பட்டிருக்கும்.புராணமும் புகழ்பாடும்: சிவபெருமானின் 64 திருவிளையாடல்களில் 60 விளையாடல்கள் நிகழ்த்திய இடம் மதுரை தான். வீதிகள் தோறும் திருவிளையாடல் நடந்ததாக கூறப்படுகிறது. ஆதரவற்ற கிழவிக்காக பிட்டுக்கு மண் சுமந்து, மன்னனிடம் பிரம்படி பட்ட சிவபெருமானின் திருவிளையாடல் நடந்ததும் இங்கு தான். மதுரை மக்களுக்காக சிவபெருமானே பிரம்படி பட்டதாக கூறுவதுண்டு. திருவிளையாடல் புராணத்தில் ஆலவாய், கூடல் காண்டம் என்ற பெயர்கள் இடம்பெற்றுள்ளன. ஏடு நின்ற வரலாறு: ஏழாம் நூற்றாண்டில் சமண மதம் மேலோங்கி நின்றது. சைவ சமயத்தை நிலைநாட்ட வந்த திருஞானசம்பந்தர், சமணர்களோடு போராடி, அனல்வாதம், புனல்வாதம் செய்தது மதுரையில் தான். எந்தசமயம் உயர்ந்தது என்பதை நிறுவ, தங்கள் மதத்தின் பெருமைகளை திருஞானசம்பந்தரும், சமணர்களும் ஏடுகளில் எழுதி வைகையாற்றில் இட்டனர். ஞானசம்பந்தரின் ஏடு வைகையாற்றில் எதிரேறிச் சென்று சோழவந்தான் அருகே திருவேடகம் என்ற ஊரைச் சேர்ந்தது. அந்த ஊர் இன்றும் திருவேடகம் என்றழைக்கப்படுகிறது. சமணர்களின் ஏடு நீரின் வழியே சென்று திருப்பாச்சேத்தியில் சேர்ந்தது என்பர். ஆற்றோடு போன இடம் திருப்பாச்சேத்தி. அதாவது பாட்டு போய் சேர்ந்த இடம் என்று பொருள்.இப்போதும் நம் வீட்டு திருமணப் பத்திரிகைகளில் 'மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்...' என்ற பாடலை, அச்சிடுவதுண்டு. ஆலவாய் அண்ணலும், அங்கையர்க்கண்ணி குடியிருக்கின்ற, மதுரை மீனாட்சி கோயிலில் வைத்து, திருஞானசம்பந்தர் இப்பாடலை பாடினார். எத்தனை நூற்றாண்டுகளை கடந்து, இந்த உறவு இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.சைவம் மட்டுமல்ல... வைணவத்தில் பெரியாழ்வார் பொற்கிழி பெற்ற இடம் மதுரை. திருவில்லிபுத்தூரில் வடபத்திர சாயியாக காட்சி தரும் பெருமாள், பெரியாழ்வார் கனவில் வந்து, பாண்டியநாட்டின் தலைநகராகிய மதுரை சென்று, 'எது மெய்ப்பொருள் என நிலைநிறுத்துவாயாக' என்று சொன்னாராம். மதுரை கூடலழகர் பெருமாள் கோயிலில், பெரியாழ்வார் அப்பாடலை பாடிய போது, 'பொற்கிழி' வளைந்து கொடுத்து, 'இதுதான் உண்மையான மெய்ப்பொருள்' என்று காட்டியதாம். அதைத்தான் மெய்காட்டும் பொட்டல் என்றழைத்தனர். இப்போது மேங்காட்டு பொட்டல் என்றழைக்கப்படுகிறது, என்கின்றனர். தரையில் கை வை: புராணரீதியாக சொன்னால், தடாதகை பிராட்டியாகிய அன்னை மீனாட்சியை மணமுடித்த சொக்கநாதர், தான் உருவாக்கிய குண்டோதரனுக்கு உணவளிக்கச் சொல்வார். ஆனால் அவனது உணவுப்பசியை தீர்க்கமுடியாமல், அன்னை தவிக்கும் போது, குண்டோதரனை 'தரையில் கை வை' என்றாராம். பொங்கிப் பாய்ந்தது வைகை. குண்டோதரனின் தாகம் தீர்க்க உருவான வைகை நதிக்கு, வேறெந்த நதிக்கும் இல்லாத பெருமையும் உண்டு.''நாரியிடப்பாகருக்கு நஞ்சளித்த பாவியென்று...வாரியிடைப்புகுதாயே வையையே!'' என்று, தனிப்பாடல் கூறுகிறது. இந்தப் பாடலின் அர்த்தம் நம் மதுரையைப் பற்றிய, வைகையைப் பற்றிய பிரமிப்பை ஏற்படுத்தும். தேவர்களும், அசுரர்களும் வாசுகி என்ற பாம்பைக் கொண்டு, பாற்கடலை கடைந்தார்களாம். அப்போது வெளிவந்த நஞ்சைக் கண்டு தேவர்கள் பயந்தோடினர். தேவர்களுக்கு அமிர்தத்தை வழங்கி விட்டு, அந்த நஞ்சை சிவபெருமானே உண்டாராம். 'சிவனுக்கே நஞ்சு கொடுத்தது கடல் தான். எனவே, எந்தக் காலத்திலும் நான் கடலோடு கலக்க மாட்டேன்' என்றதாம், வைகை நதி. தமிழகத்தில் கடலில் கலக்காத ஒரே நதி வைகை தான். வெள்ளம் பெருகினாலும், வைகை நதி ராமநாதபுரம் கண்மாயில் தான் கடைசியாக கலக்கிறது. சிவபெருமானால் உருவாக்கப்பட்ட மானமிகுந்த மதுரையின் புண்ணியநதியாம் வைகையில், இப்போது சாக்கடை கலந்து சங்கடம் தருவது வேதனை கதை. மதுரையின் பெருமை: 2000ம் ஆண்டுக்கு முந்தைய புலவர்கள் வாழ்ந்த இடம் மதுரை தான். மணிமேகலை நூலை எழுதிய மதுரை கூலவாணிகன் சீத்தலைச்சாத்தன் மதுரைக்காரர் தான். கூலவாணிகம் என்றால் நவதானியம் என்று அர்த்தம். இப்போதும் கீழமாசி வீதிப் பகுதிகளில் நவதானியம் விற்கப்படுகிறது. மதுரையில் இளநாகனார் போன்ற புலவர்கள் வாழ்ந்தனர். கர்நாடக இசையுலகில் அசைக்கமுடியாத இடம் பெற்ற எம்.எஸ்.சுப்புலட்சுமியின் முழுப்பெயர் மதுரை சண்முகவடிவு சுப்புலட்சுமி தான். தூத்துக்குடியில் பிறந்து புதுச்சேரியில் இறந்த, நாடக உலகின் தந்தை சங்கரதாஸ் சுவாமிகள், நாடகம் வளர்த்தது மதுரையில் தான். நாடகக்கலை வளர்த்த மதுரையில் (தமுக்கம் மைதானம்) அவருக்கு சிலை உள்ளது. பாடலுக்கு மணி ஐயர், மதுரை சோமு, நாதஸ்வரத்திற்கு சேதுராமன், பொன்னுசாமி... இவர்களின் பெருமையும் மதுரையைச் சார்ந்தது தான்.மதுரையில் தான் நான்காம் தமிழ்ச்சங்கத்தை பாண்டித்துரை தேவர் உருவாக்கினார். மீனாட்சியம்மன் கோயில் கட்டிய வரலாற்றை எடுத்துக் கூறும் 'கோயில் திருப்பணி மாலை' என்ற நூலை, பின்னாளில் பாண்டித்துரை தேவர் பதிப்பித்தார். இப்போதும் தமிழ்ச்சங்க ரோட்டில் சங்கம் தமிழ்ச்சங்கமாக, செந்தமிழ்க் கல்லூரியாக உள்ளது. தமிழின்பால் கொண்ட பற்றின் காரணமாக தனது பெயரை மாற்றிக் கொண்ட பரிதிமாற் கலைஞர் என்ற சூரிய நாராயண சாஸ்திரி, மதுரைக் கல்லூரிப் பள்ளியில் படித்தவர் தான். சினிமாவுக்கு முன்னோடி: மதுரை சேதுபதி பள்ளியில் ஆசிரியராக பாரதியார் பணியாற்றிய போது, 'தனிமை இரக்கம்' என்ற அவரது கவிதை, விவேகபானு பத்திரிகைக்காக மதுரையில் இருந்து தான் அச்சேறியது. தமிழ் சினிமாவின் முதல் பேசும் படம் காளிதாஸ், 1931ல் வெளிவந்தது. தமிழ் சினிமாவிற்கு பாட்டெழுதிய முதல் மதுரைக்காரர், மதுரகவி பாஸ்கரதாஸ். கோயில், இலக்கியம், இசை, நாடகம், பாட்டு... எல்லாமே மதுரையைச் சுற்றி தான். மதுரைக்காரன் என்று சொல்வதில் பெருமையில்லை. மதுரையின் பெருமையை உணர்ந்து, மதுரையின் பெருமைக்கு காரணமான வைகை நதியின் அருமை உணர்ந்து செயல்படுபவர்கள் தான், உண்மையான மதுரைக்காரர்கள். இதுதான் மதுரைக்கு பெருமை. பைய... பைய...: இன்னமும் மதுரைக்காரர்களின் பேச்சில் 'பைய' என்ற வார்த்தை இடம்பெறுவதுண்டு. யாராவது வேகமாக ஓடினாலோ, நடந்தாலோ, தடுக்கி விழுந்தாலோ, 'பைய... பார்த்து போ' என்பார்கள். இந்த வார்த்தையை ஏழாம் நூற்றாண்டிலேயே திருஞானசம்பந்தர் பயன்படுத்தியிருக்கிறார். ஏடுகளின் பெருமையில் திருஞானசம்பந்தரிடம் தோற்றுப் போன சமணர்கள், அவர் மதுரையில் தங்கியிருந்த மடத்திற்கு தீவைக்கின்றனர். 'மன்னனின் ஆதரவு இருப்பது தானே, இந்த நெருப்பிற்கு காரணம். இந்த நெருப்பின் வேகம் மன்னனைச் சென்று சேர வேண்டுமென நினைக்கிறார், திருஞானசம்பந்தர். 'பையவே சென்று பாண்டியர்க்கு ஆகவே' என்று பாடுகிறார். சமணர்கள் மடத்திற்கு வைத்த நெருப்பு, மெல்லச் சென்று பாண்டியனைச் சேரட்டும் என்பதாக அர்த்தம். மதுரை 'தூங்காநகரம்' மட்டுமல்ல... சொற்களால் சாகாநகரம் என்பதும் உண்மை தான். http://www.dinamalar.com/news_detail.asp?id=1052316- மதுரையின் வளர்ச்சி..
''இனிய முரண் ஏதாவது...?'' "மதுரையில் பெருமுயற்சிக்குப் பிறகு பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டபோது அதற்கு 'மதுரை மீனாட்சி அம்மன் பெயரை வைக்க வேண்டும்’ என ஒரு சாராரும் 'பாண்டிய மன்னனின் பெயரைச் சூட்ட வேண்டும்’ என்று இன்னொரு சாராரும் வாதிட்டனர். ஆனால், காமராஜர் அதனை மறுத்து 'அது மதுரைப் பல்கலைக்கழகம் என்றே இருக்கட்டும். மதுரை என்றாலே எல்லோருக்கும் தெரியும்’ எனப் பெயர் சூட்டினார். பக்தவத்சலமும் அதை ஆமோதித்தார். ஆனால், மதுரைப் பல்கலைக்கழகத்துக்கு இப்போது என்ன பெயர் தெரியுமா? 'மதுரை காமராஜர் பல்கலைக்கழகம்’. யார் பெயரையும் சூட்ட வேண்டாம் எனச் சொன்ன காமராஜர் பெயரே மதுரைப் பல்கலைக்கழகத்துக்குச் சூட்டப்பட்டது இனிய முரண்தானே?'' -விகடன் இதழில் வெளியான துணுக்கு.- என்ன என்ன வார்த்தைகளோ..!
- என்ன என்ன வார்த்தைகளோ..!
- "அரிய... புகைப் படங்கள்"
மதுரை மாநகரில் இயக்கப்படும் பேருந்துகளில் தமிழிலும் வண்டி எண்கள்.. பழைய மதுரை..- ?????????
- என்ன என்ன வார்த்தைகளோ..!
- என்ன என்ன வார்த்தைகளோ..!
- 4K என்றால் என்ன?
Ultra-high-definition television என்பதன் சுருக்கம் ‘UHDTV’. 4K(2160p) மற்றும் 8K(4320p) ‘Pixels’ தரம் கொண்டது என்கிறார்கள். இதைப் புரிந்துக் கொள்ள டிஜிட்டல் பற்றிய சில தகவல்களை அறிந்திருக்க வேண்டும். பெரும்பான்மையோருக்கு அவை தெரிந்திருக்கும் அல்லது இத்தளத்தை தொடர்ந்து வாசித்து வருபர்கள் ‘அடுத்த தலைமுறை 'HD' தொழில்நுட்பம்’ என்னும் கட்டுரையைக் கடந்து வந்திருப்பதன் மூலம் அறிந்திருப்பீர்கள். சுருக்கமாக HDTV என்பது.. 1080p - 1920×1080p (approximately 2.1 megapixels per frame) 1080i - 1920×1080i (approximately 2.1 megapixels per frame) 1440×1080i (approximately 1.6 megapixels per frame) 720p - 1280×720p (approximately 0.9 megapixels per frame) [The letter "p" here stands for progressive scan while "i" indicates interlaced] 4K UHDTV என்பது .. 2160p - 3840 × 2160 (approximately 8.3 megapixels per frame) 8K UHDTV என்பது .. 4320p - 7680 × 4320 (approximately 33.2 megapixels per frame) 1080p HDTV ஐ போன்று பதினாறு மடங்கு (yes.. 16 times) அதிக பிக்சல்கள் கொண்டது 8K UHDTV என்கிறார்கள். ஏறக்குறைய ஒரு IMAX (15/70mm IMAX) படத்திற்கான தரம் கொண்டது என்கிறார்கள். ஒலியில் 22.2 surround sound அமைப்பு கொண்டதாம். 4K UHDTV-ஐ UHDTV1 என்றும் 8K UHDTV-ஐ UHDTV2 என்றும் அடையாளப் படுத்தியிருக்கிறார்கள். நொடிக்கு 24, 25, 50, 60 ,120 ஃபிரேம்கள் மாறும் தகுதிக் கொண்டது. ஜப்பானிய நிறுவனமான ‘NHK Science & Technology Research Laboratories’ 2003-இல் இதற்கான கேமராவை வடிவமைத்து இத்தொழில்நுட்பத்தை பரிந்துரைத்தது. பல கட்ட மாறுதலுக்குப்பிறகு 2007-இல் ‘UHDTV’-க்கான ‘SMPTE’ தரம் நிர்ணயிக்கப்பட்டது. 2015 - 2020 ஆண்டுகளுக்குள்ளாக பொது பயன்பாட்டிற்கு கொண்டு வந்துவிட வேண்டும் என்று இலக்கு நிர்ணயித்துக் கொண்டிருக்கிறார்கள். ஜப்பானிலும் சீனாவிலும் 2013-2014 -க்குள்ளாக வீடுகளுக்கு வந்துவிடும் என்கிறார்கள். 2006-இல் NHK நிறுவனம் ‘450 inch’ (11.4m) தொலைக்காட்சித் திரையில் தங்களுடைய UHDTV விடியோவை திரையிட்டு காட்டிவிட்டார்கள். (பெரும்பான்மையாக நம் வீடுகளில் இருப்பது 21inch TV) Aptina Imaging, RAI, BSkyB, Sony, Samsung, Panasonic Corporation, Sharp Corporation, Toshiba போன்ற டிஜிட்டல் இமேஜிங் நிறுவனங்கள் 2008-இலிருந்து ‘UHDTV’ தொழில்நுட்பத்தில் ஈடுபடத்துவங்கிருக்கின்றன. 2011-இல் SHARP நிறுவனம் NHK-வுடன் இணைந்து ‘85inch LCD display’(7680 × 4320 pixels at 10 bits per pixel) அறிமுகப்படுத்தியது. ஏப்ரல், 2012 -இல் NHK நிறுவனம் Panasonic-வுடன் இணைந்து ‘145inch (370 cm) display (7680 × 4320 at 60 fps)-வை அறிமுகப்படுத்திருக்கிறது. இது 33.2 million 0.417 mm square pixels தரம் கொண்டது. மே, 2012-இல் NHK நிறுவனம் உலகின் முதல் ‘ultra-high definition shoulder-mount camera’-வை கொண்டுவந்தது. அதே மாதம் ‘33.2 megapixel video at 120 fps’ தரத்தில் இயங்கும் கேமராவாக மேம்படுத்தப்பட்டிருக்கிறது. பெரிய திரையில் காட்சிப்படுத்தப்படுவதால் நொடிக்கு 120 ஃபிரேம்கள் என தரம் நிர்ணயித்திருக்கிறார்கள். 2012, ஒலிம்பிக்கின் போது லண்டன் நகரத்தில் ‘15 meter wide screens’ அமைக்கப்பட்டு, போட்டிகளின் காட்சியை UHDTV பிம்பங்களாக திரையிடப்பட்டன. இச்சேவையை BBC நிறுவனம் அளித்திருக்கிறது. மே, 2012 -இல் Sony நிறுவனம் உலகின் முதல் ‘Consumer-Prosumer 4K 3D Projector’-ஐ அறிமுகப்படுத்திருக்கிறது. ஆகஸ்ட், 2012-இல் LG நிறுவனம் உலகின் முதல் ‘3D UHDTV / 4K system’ தொலைக்காட்சியை அறிமுகப்படுத்தியது. மேலும் பல தகவல்கள், தெரிவிக்கும் செய்தி யாதெனில்.. அடுத்த ஆண்டுக்குள்ளாக உலகின் பல நாடுகள் UHDTV ஒளிபரப்பிற்கு மாறிவிடுவார்கள். கொரியா போன்ற நாடுகளில் கூட இவை வந்துவிடும் எனத் தெரிகிறது. பல சேட்டலைட் தொலைக்காட்சிகள் தங்கள் ஒளிபரப்பை HDTV-லிருந்து UHDTV-க்கு மாற்றத் தயாராகயிருக்கிறார்கள். சில தொலைக்காட்சிகள் நேரடியாக 8K UHDTV தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த நினைக்கின்றன. தேவையற்ற இடைச்சொருகளாக 4K UHDTV தவிர்த்து விடுவதற்காக. உலகின் கதை இப்படிப் போய் கொண்டிருக்க.. இங்கே இந்தியாவில் என்ன கிடைக்கிறது? என்பது நாம் அறிந்ததுதான். தொலைக்காட்சியே இப்படி என்றால், திரைப்படம் சார்ந்த தொழில்நுட்பங்கள் எங்கே போகும் என்பதைக் கற்பனை செய்துப்பாருங்கள். டிஜிட்டல் தொழில்நுட்பம் எல்லாவற்றையும் புரட்டிப்போட்டுக்கொண்டிருக்கிறது. வருங்காலத்தில் எல்லா திரைப்படங்களும் 3D படங்களாக இருக்கும் மேலும் அவை IMAX படங்களாகவும் இருக்கும் என்பதாகத்தான் நினைக்கத் தோன்றுகிறது. திரையரங்கில் Projector-மூலம் திரையிடுவது போய், LCD Display-க்களாக மாறிவிடவும் சாத்தியமிருப்பதை இந்த UHDTV தொழில்நுட்பம் நமக்கு சுட்டிக்காட்டுகிறது. ஒளியுலகம் 4K துல்லிய ஒளியில் துபாய் நகரத்தை இங்கே காணலாம்..!- என்ன என்ன வார்த்தைகளோ..!
- என்ன என்ன வார்த்தைகளோ..!
- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.