Everything posted by ராசவன்னியன்
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
இருக்கும் களையாத குறைகளில் பத்தோடு ஒன்னு பதினொன்னாக இதுவும் இருந்துவிட்டு போகட்டும் ஐயாக்களே..!
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
இரு நாட்கள் முன்பு வரை இப்படித் தான் நிறங்கள் பளிச்சென்று இருந்தன.. தற்பொழுதிருக்கும் வண்ணப் பொட்டிக்கும், முன்பிருந்த நிறப் பொட்டிக்கும் பாரிய வித்தியாசங்களை கண்களால் உணர முடிகிறது..
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
தமிழ்சிறி சொல்வது சரிதான்..! பொட்டி இருக்கு.. ! ஆனால் குறிப்பிட்ட வண்ணங்கள் தான் இல்லை.. அதாவது பளிச்சிடும்(Bright) நிறத்தில் சுத்தமான சிவப்பு, ஊதா, பச்சை, மஞ்சள் போன்ற நிறங்கள் இல்லை..! இவற்றின் மாசுபட்ட நிறம் மாறிய கலவைகள் தான் உள்ளன..!!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பிறந்தநாள் வாழ்த்தருளிய தமிழ் சிறி, குமாரசாமி, வந்தியத்தேவன், பாஞ்ச், ஈழப்பிரியன், சுவி, நிலாமதி, ரதி, சுமேரியர், புங்கையூரன், நுணாவிலன், தமிழரசு, வாத்தியார் மற்றும் யாழ் உறவுகளுக்கு நன்றி..! (சில நாட்கள் உடல்நிலை சரியில்லாததால் நன்றி நவிலல் தாமதமானது.. பொறுத்தருள்க..!) .
-
சென்னை மெட்ரோ ரயில்...
சின்னம்மா பெரியம்மா, சித்தப்பு பெரியப்பு சச்சரவுகளை தீர்க்க காலம் பத்தாது.. சந்துல சிந்துபாடி ரெயில் விட வேண்டியதுதான்! இன்று காலை பேரனுடன் கோயம்பேட்டிலிருந்து விமான நிலையம் வரை சென்னை மெட்ரோ ரயிலில் பயணம் செய்தேன்.. ரயில் பெட்டிகளும், டிக்கட் வழங்கும் வசதிகளைத் தவிர அனைத்து கட்டிட அமைப்புகளும், உள்ளக வேலைப்பாடும், ரயில் தட மேம்பால வழிகளின் வேலைப்பாடும் பல்லிளிக்கிறது. தாழ்ந்த இந்தியத் தரம் பளிச்சிடுகிறது. காக்கைக்கு தன் குஞ்சு பொன்குஞ்சு என திருப்தியடைய வேண்டியதுதான்.
-
சென்னை மெட்ரோ ரயில்...
சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்டப் பணிகள் குறித்த விரிவான திட்ட அறிக்கை மாநில அரசிடம் சமர்பிக்கப்பட்டுள்ளது. இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பணி, 104 கிலோ மீட்டர் தொலைவுக்கு 104 ரயில் நிலையங்களுடன் உருவாக்கப்பட உள்ளது. மாதவரம்-சிப்காட், கோயம்பேடு -கலங்கரை விளக்கம், மாதவரம் - சோளிங்கநல்லூர் உள்ளிட்ட மூன்று வழித்தடங்களில் இரண்டாம் கட்டப் பணிகள் நடைபெற உள்ளது. அதாவது, மாதவரத்தில் இருந்து பாடி, வளசரவாக்கம் மற்றும் மேடவாக்கம் வழியாக சிப்காட் வரை ஒரு தடம் அமைக்கப்பட உள்ளது. கோயம்பேட்டில் இருந்து கலங்கரை விளக்கம் வரை ஒரு தடம். மாதவரத்திலிருந்து பெரம்பூர், லஸ், அடையாறு மற்றும் ECR வழியாக சோளிங்கநல்லூர் வரை ஒருத் தடம் அமைக்கப்பட உள்ளது. விகடன்
-
சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
பொன்னையா 'பொளேர்'- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
அருமை..! நாட்டு நடப்பை மிகத்தெளிவாக சொல்லியுள்ளார்.- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள், நிழலி..- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
வாத்தியாருக்கு- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள், சசி..- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள், விசு- சென்னை மெட்ரோ ரயில்...
ஆலந்துர் மெட்ரோ நிலைய முகப்பு- சென்னை மெட்ரோ ரயில்...
சென்னை 'விமான நிலைய மெட்ரோ ரயில் நிலையம்' - வெளிப்புற தோற்றம்.. ஒப்பீட்டில் 'ஆலந்தூர் மெட்ரோ நிலைய'த்தைவிட உட்புறத்தில் வேலைத் தரமும், அழகும் குறைந்த விமான நிலைய மெட்ரோ நிலையம்.. பல வெளிநாட்டு பயணிகள் பயன்படுத்தக்கூடிய இந்நிலையம், உட்புற வேலைப்பாட்டில் தரம் குன்றி அமைந்தது துரதிஷ்ட்டமே!- சென்னை மெட்ரோ ரயில்...
கவலை வேண்டாம் பாஞ் ஐயா.. தங்கள் சேவை தமிழ் நாட்டிற்கு தேவை.. தீராத பிரச்சனையால் அல்லல்பட்டுக்கொண்டிருக்கும் சென்னை பறக்கு இரயில் திட்டமும்(Madras Rapid Transit System-MRTS), அதன் பின்னனியில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனமும்(CMRL), சென்னை பறக்கும் ரயில் திட்டமும் குழப்பமின்றி இணையும் வழிமுறையையும் வகுக்க தகுந்த ஆலோசகரை(Consultant) தமிழக அரசு தேடிக்கொண்டிருக்கிறதாம்.. ஆழ்ந்த அனுபவமிக்க தாங்கள், அப்பதவிக்கு தகுதியானவர்தான்.. தாங்கள் விண்ணப்பிக்கலாமே! Check here: Hunt for Consultant "In a step ahead for Chennai Metro Rail taking over the Mass Rapid Transit System (MRTS), a consultant will be appointed in about two months for facilitating the process. According to officials of Chennai Metro Rail Limited (CMRL), tenders have been called to appoint the consultant and the process may be completed in about a month. “The consultant will draft the terms with regard to issues such as finance and operations. We had a discussion with the officials of Railways sometime ago. We hope to complete the merger at least in about 3-5 years,” an official said.." contind... அமீரகம் தயார்தான், 'அல்மான்' தான் அல்வா குடுக்குது..!- சென்னை மெட்ரோ ரயில்...
உத்தேசிக்கும் அழகர்கோவில் அணையினால் நிலத்தடி நீரை உயர்த்த(Recharge) பயன்படப்போவதாக அறியும் மாவட்டங்கள், பழைய இராமநாதபுரம் மற்றும் திருநெல்வேலியின் வறட்சியான பகுதிகளான விருதுநகர், சாத்தூர், அருப்புக்கோட்டை மற்றும் விளாத்திகுளம் முதலியன. ஆனால் இவ்வணையின் நீரவரத்திற்கான சாத்தியக்கூறுகள் வைகை ஆற்றின் நீர் உற்பத்தி பகுதிகளாகும்..இவை கேரளா மற்றும் தமிழ்நாட்டின் மாநில எல்லையில் உள்ளது.. ஏற்கனவே முல்லைப்பெரியாறு குடிமிப்பிடி சண்டை முடிந்தபாடில்லை, இதில் வைகை நீர்பிடிப்பு பகுதியில் அரிதாக கிட்டும் உபரி நீரினை அழகர் கோவில் அணைக்கு நீராதாரமாக வழங்க மலையை குடைந்து சுரங்க நீர்வழியமைக்க கேரள அரசும், தமிழக அரசும் இணைந்து செய்ய முன்வருமா? அணை அமைக்கும் சாத்தியக்கூறுகளை பொறியாளர்களாலும், ஆட்சி பீடத்தில் இருப்பவர்களாலும் தீர ஆராய வேண்டிய விடயம்..- சென்னை மெட்ரோ ரயில்...
நீரும் முக்கியம், ரயிலும் முக்கியம்..மறுக்கவில்லை! ஆனால் எந்த வசதியும், அதனை பயன்படுத்திக்கொள்ளப்போகும் மக்கள் தொகையின் அளவைக் கொண்டே அளவிடமுடியும்(ஏழு மாவட்ட பரப்பளவைக் கொண்டு அல்ல) என்பது படிக்காத மேதை அறிவதும் முக்கியம்தானே?- சென்னை மெட்ரோ ரயில்...
ரயில் சேவை துவக்க விழா அழைப்பு.. Source : சென்னை மெட்ரோ ரயில் இணையம்.- சென்னை மெட்ரோ ரயில்...
ஐயா பல ஊர்களில் ரசித்து வாழ்பவர் போலிருக்கு..! நன்றி..ஐயா!! இத்திட்டதிற்காக ஜப்பான் நிதி நிறுவனத்திடம் பெறப்பட்டுள்ள கடனை அடைக்க வேண்டும்.அதே நேரம் சில செளகரியங்களுக்கான விலையையும் கொடுத்தாக வேண்டுமே! மெட்ரோ ரயில் வசதியிலும் சாதாரண ரயில்களைப் போன்று விலையை தீர்மானித்தால், தற்பொழுதிருக்கும் தென்னக ரயில் சேவையைப் போன்றே மிக மட்டமானதாக இருக்கும். சின்னமலை - விமான நிலையம் இடையே மெட்ரோ ரயில் சேவை நாளை தொடக்கம்: முதல்வர் ஜெயலலிதா தொடங்கிவைக்கிறார்.. சின்னமலை - விமான நிலையம் இடையேயான மெட்ரோ ரயில் சேவையை முதல்வர் ஜெயலலிதா நாளை தொடங்கி வைக்கிறார். விமான நிலையத்தில் இருந்து கோயம்பேட்டுக்கு கட்டணமாக ரூ.50 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சென்னையில், 2 வழித்தடங்களில் மொத்தம் 45 கிலோ மீட்டர் தூரத்துக்கு மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில், இரண்டாவது வழித்தடத்தில் ஆலந்தூரில் இருந்து கோயம்பேட்டுக்கு மெட்ரோ ரயில்கள் தற்போது இயக்கப்படுகின்றன. இந்நிலையில் சின்னமலை - விமான நிலையம் இடையே மெட்ரோ ரயில்களை இயக்க, ரயில்வே பாதுகாப்பு ஆணையர் எஸ்.நாயக், கடந்த ஆகஸ்ட் 4-ம் தேதி ஒப்புதல் அளித்தார். இந்த புதிய வழித்தடத்தில் மெட்ரோ ரயில்சேவை வரும் 21-ம் தேதி (நாளை) தொடங்கவுள்ளது. இதற்கான பணிகள் கடந்த 2 நாட்களாக நடைபெற்று வரு கின்றன. இது தொடர்பாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் கூறியதாவது: ஒப்புதல் அளிப்பு சென்னையில் சின்னமலை - ஆலந்தூர் பரங்கிமலை விமான நிலையம் (11 கி.மீ) இடையே உயர்மட்ட பாதையில் மெட்ரோ ரயில்களை இயக்க கடந்த சில மாதங்களாக இறுதிகட்ட சோதனை ஓட்டம் நடைபெற்றது. 9 கி.மீ தூரத்துக்கு மெட்ரோ ரயில் பாதையை ஆய்வு செய்தும், 10 ஆயிரம் பக்கங்கள் கொண்ட பாதுகாப்பு அறிக்கையை ஆய்வு செய்தும் இந்த ரயில் சேவையை தொடங்க ஆணையரகம் ஒப்புதல் அளித்துள்ளது. சின்னமலை விமான நிலை யம் இடையே வரும் 21-ம் தேதி (நாளை) முதல்வர் ஜெயலலிதா, காணொளிகாட்சி மூலம் மெட்ரோ ரயில்சேவையை தொடங்கி வைக்கிறார். விமான நிலையத்தில் நடக்கும் நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு பங்கேற்கிறார். தொடக்க விழாவுக்கான பணிகள் தற்போது, நடைபெற்று வருகின்றன. ரூ.50 கட்டணம் மெட்ரோ ரயில் பயணிகளின் எண்ணிக்கை தற்போது, சராசரியாக 10 ஆயிரமாக இருக்கிறது. இந்த புதிய வழித்தடத்தில் மெட்ரோ ரயில்களை இயக்கும்போது இந்த எண்ணிக்கை 15 ஆயிரமாக உயரும் என எதிர்பார்க்கிறோம். சென்ட்ரல், எழும்பூர், பரங்கிமலை போன்ற முக்கிய பகுதிகளை இணைக்கும்போது பயணிகளின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறோம். 0 - 2 கி.மீ ரூ.10, 2 - 4 கி.மீ ரூ.20, 4 - 6 கி.மீ ரூ.30, 6 - 10 கி.மீ ரூ.40, 10 - 15 ரூ.50, 15 - 20 கி.மீ ரூ.60, 20 - 50 கி.மீ ரூ.70 என மெட்ரோ ரயில் கட்டணத்தை நிர்ணயித்துள்ளோம். எனவே, விமான நிலையத்தில் இருந்து சின்னமலைக்கு ரூ.40 எனவும், விமான நிலையத்தில் இருந்து கோயம்பேட்டுக்கு ரூ.50 எனவும் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட் டுள்ளது. கட்டணக் குறைப்பு பற்றி இதுவரையில் எந்த முடிவும் செய்யவில்லை. இவ்வாறு அவர்கள் கூறினர். பாதுகாப்பு ஆணையர் ஆய்வு பரங்கிமலை மின்சார ரயில் நிலையத்துடன் மெட்ரோ ரயில் நிலையம் இணைந்தால், மக்களின் பயணம் எளிதாக இருக்கும் என்பதால், மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ஆலந்தூர் - பரங்கிமலை இடையேவுள்ள வழித்தடத்தில் இம்மாத இறுதியில் பாதுகாப்பு ஆணையர் ஆய்வு நடத்தவுள்ளார். தி இந்து- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
- கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
எழுத்துருவின் அளவை (Font Size) கூட்டி, குறைக்க வழிவகை செய்தால் நன்று.. அதற்கான பொத்தான் இந்த பதிப்பில்(Current version) முன்பிருந்தது.. பின்னர் நீக்கப்பட்டுள்ளது.. ஒரு பதிவின் தலைப்பையோ, அல்லது முக்கியமான கருத்தை மேற்கோளிட்டு கவனத்தை ஈர்த்து எடுத்தியம்ப, இவ்வசதி அவசியம் இருந்தால் நல்லது..- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
- சென்னை மெட்ரோ ரயில்...
Update: சென்னை 'வண்ணாரப்பேட்டை - விமான நிலையம்' மெட்ரோ வழித்தடத்தில் முதல் பகுதியான சின்னமலை(Little Mount) முதல் விமான நிலையம் (Air Port) வரை கட்டுமான பணிகள் முடிவடைந்து மெட்ரோ ரயில் பாதுகாப்பு ஆணையாளரால் (CMRS) பரிசோதிக்கப்பட்டு வணிக ரீதியான மக்கள் பாவனைக்கு தயாராகியுள்ளது. சென்னை மெட்ரோ ரயில் உயரதிகாரிகள் தெரிவிக்கையில், சின்னமலையிலிருந்து விமான நிலையத்திற்கான 9 கி.மீ வழித்தடம் பொது மக்கள் பாவனைக்கு திறந்து வைக்க தமிழக அரசிற்கு அறிக்கை கொடுத்துள்ளோம். இம்மாதம் ஆகஸ்ட் 16 முதல் 20 வரையிலான திகதிகள் இவ்வழித்தடம் திறக்கப்படலாம் என தெரிவித்துள்ளனர். மத்திய நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.வெங்கையா நாயுடுவும் இந்த திறப்பு விழா நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தி இந்து படங்கள் உதவி: மெட்ரோ ரயில் கை - சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.