Everything posted by ராசவன்னியன்
-
சென்னை மெட்ரோ ரயில்...
-தினகரன்
-
அதிசயக்குதிரை
- சென்னை மெட்ரோ ரயில்...
Update: சென்னையில் சைதாப்பேட்டையை அடுத்துள்ள சின்னமலை மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்து விமான நிலையம் வரையேயான பிறிதொரு வழித்தடத்தில் வரும் செப்டம்பர் மாதம் முதல் ரயில் போக்குவரத்து ஆரம்பிக்கபடுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே சமயத்தில் ஆலந்தூரிலிருந்து பரங்கிமலை(St. Thomas Mount) மெட்ரோ நிலையத்திற்கும் போக்குவரத்து நீட்டிக்கப்படப்போவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் நகரின் மையத்திலிருந்து விமான நிலையம்வரை மெட்ரோ ரயில் போக்குவரத்தைப் பெறும் இரண்டாவது நகரமாக புது தில்லிக்கு அடுத்து சென்னை என்ற பெருமையை தமிழகம் பெறப்போகிறது. http://www.deccanchronicle.com/nation/current-affairs/190616/chennai-next-to-delhi-in-getting-metro-to-airport.html- சென்னை மெட்ரோ ரயில்...
Update: சென்னை மெட்ரோ ரயில் வழித்தடங்களின் மிக முக்கிய சந்திப்பு புள்ளியான ஆலந்தூர் நிலையத்தில் ரயில்களின் வழித்தடங்களை மாற்றி திருப்பிவிட ஏதுவாக மாற்று வழி(லூப் லைன்) வசதி அமைக்கப்பட்டு வருகிறது. இதன்படி, கோயம்பேட்டிலிருந்து வரும் ரயில் பயணிகள் விமான நிலையம் செல்ல, ஆலந்தூரில் ரயிலைவிட்டு இறங்கி வண்ணாரப்பேட்டையிலிருந்து மற்றொரு வழித்தடத்தில் வரும் ரயிலுக்கு மாறத் தேவையில்லை. அவர்கள் பயணிக்கும் அதே ரயிலை மாற்று வழியில் திருப்பி சென்னை விமான நிலையத்திற்கு செலுத்த இயலும். இதனால் பயண நேரம் 30 நிமிடங்கள் குறையும் என சென்னை மெட்ரோ ரயில் அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக செய்தி வெளியிடப்பட்டுள்ளது. செய்தி மூலம்: டைம்ஸ் ஆஃப் இந்தியா.- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
ஆதவனுக்கு பிந்திய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!- பழைய திரைப்பட,நிழற் படங்கள்
மறைந்துபோன பல திரையரங்குகளின் பெயரை சுவரொட்டிகளில் காணும்போது அக்கால நினைவுகளில் மூழ்கி மீள நீண்ட நேரமெடுக்கிறது..!- இன்றைய மாவீரர் நினைவுகள் ..
உயிர்நீத்த அனைத்து தமிழர்களுக்கும் ஆழ்ந்த அஞ்சலிகள்..- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
ஸ்ஸூடாலின் தான் 'சுவி'யா? சொல்லவே இல்லை?- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
Wish you very 'Happy Birthday' Mr.Suvy..!- சென்னை மெட்ரோ ரயில்...
நன்றி டங்கு! பரவாயில்லையே, கட்டமைப்பு வசதிகளைப் பற்றியும் வாசிக்க இங்கே சிலர் இருக்கிறார்களென்பது மகிழ்ச்சியை தருகிறது. . நானும் சிங்கப்பூரில் பயோனியர் மெட்ரோ நிலையத்திலிருந்து லிட்டில் இந்தியா வரை பயணம் செய்துள்ளேன்.. நீங்கள் கூறியுள்ளபடி ந டைமேடை பாதுகாப்பு கதவுகள் அங்கே உள்ளன. துபாய் மெட்ரோவிலும் அனைத்து நிலையங்களிலும் இம்மாதிரி கதவுகளை பொருத்தியுள்ளார்கள்.- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள், அஞ்சரன்- சென்னை மெட்ரோ ரயில்...
சுரங்க நிலையங்களில் மட்டும் பயணிகளின் பாதுகாப்பிற்காகவும், ரயில்முன் பாயும் தற்கொலைகளை தவிர்க்கும் முகமாக நடைமேடைக்கும் வந்து சேரும் மெட்ரோ ரயில் பெட்களிற்கும் இடையே பாதுகாப்பு தடுப்புக் கதவுகள் (Platform Screen Doors) பொருத்தப்பட்டு வருகின்றன. சென்னை அண்ணாநகர் முதல் செனாய்நகர் வரை முதல்முறையாக சுரங்க வழித்தடதின் ஒரு பகுதியாக இவ்வருடம் டிசம்பரில் மெட்ரோ ரயில் இயக்கபடவுள்ளது. அண்ணாநகர் திருமங்கலம் சுரங்க நிலையத்தில் ' நடைமேடை தடுப்பு கதவுகள்'(PSD) நிறுவும் பணி - 'டைம்ஸ் அஃப் இந்தியா' தமிழாக்க சுருக்கம்.- சென்னை மெட்ரோ ரயில்...
சுரங்கப் பாதையில் மெட்ரோ ரயில்: 85 சதவீத பணிகள் நிறைவு! சென்னையில் பல்வேறு இடங்களில் நடைபெற்று வரும் மெட்ரோ ரயில் சுரங்கப் பாதை பணிகள் 85 சதவீதம் நிறைவடைந்துள்ளது என்றும், ஷெனாய் நகரில் பிரம்மாண்டமாக சுரங்க ரயில் நிலையம் அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும் மெட்ரோ ரயில் அதிகாரிகள் தெரிவித்தனர். சென்னையில் ரூ. 20 ஆயிரம் கோடியில் மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. முதல் கட்டமாக, ஆலந்தூர்- கோயம்பேடு இடையிலான மெட்ரோ ரயில் சேவை கடந்த ஆண்டு ஜூன் மாத இறுதியில் தொடங்கப்பட்டது. முதல் வழித்தடத்தில்...: வண்ணாரப்பேட்டையில் இருந்து, விமான நிலையம் வரை முதல் பாதையிலும், சென்ட்ரலில் இருந்து பரங்கிமலை வரை 2-ஆவது பாதையிலும் மெட்ரோ ரயில் இயக்கப்பட உள்ளது. முதல் வழித்தடத்தில் வண்ணாரப்பேட்டை, மண்ணடி, உயர் நீதிமன்றம், சென்ட்ரல், புதிய தலைமைச் செயலகம், எல்.ஐ.சி., ஆயிரம் விளக்கு, ஜெமினி, தேனாம்பேட்டை, சேமியர்ஸ் சாலை, சைதாபேட்டை ஆகிய ரயில் நிலையங்கள் இடம்பெறும். இரண்டாவது வழித்தடத்தில் சென்ட்ரல், எழும்பூர், நேரு பூங்கா, கீழ்ப்பாக்கம் மருத்துவமனை, பச்சையப்பன் கல்லூரி, ஷெனாய் நகர், அண்ணா நகர் கிழக்கு, அண்ணா நகர் டவர், திருமங்கலம் என ஒன்பது ரயில் நிலையங்கள் உள்பட மொத்தம் 19 சுரங்க ரயில் நிலையங்கள் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. தற்போது சுரங்கப்பாதை மெட்ரோ ரயில் பணிகள் 85 சதவீதம் நிறைவடைந்துள்ளன. சோதனை ஓட்டம் திருப்தி: கோயம்பேடு - அண்ணா நகர் டவர் இடையே சுரங்கப் பாதையில் முதல் முறையாக மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் கடந்த அக்டோபரில் நடைபெற்றது. அப்போது, மெட்ரோ ரயில் என்ஜின் மூலம் 2 கி.மீ. தொலைவுக்கு மேற்கொள்ளப்பட்ட சோதனை ஓட்டம் திருப்தி அளித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால், முழுமையாக மெட்ரோ ரயில் சுரங்கப் பாதையில் இன்னும் சோதனை அளவில் இயக்கப்படவில்லை. இந்த நிலையில், எழும்பூர் - சென்ட்ரல் இடையிலான சுரங்கப் பணிகள் விரைவாக நடைபெறுகின்றன. செப்டம்பர் மாதம்: மெட்ரோ ரயில் பணிகள் அனைத்தும் திட்டமிட்டபடி நடந்தால் விமான நிலையம் - எழும்பூர் இடையே வரும் செப்டம்பரில் மெட்ரோ ரயில் சேவை தொடங்கும் என்றும் கூறப்படுகிறது. இந்த வழித்தடத்தில் நாள் ஒன்றுக்கு 15 முதல் 18 மீட்டர் தூரம் வரை டனல் போரிங் இயந்திரம் சுரங்கம் தோண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது. http://www.dinamani.com/edition_chennai/chennai/2016/04/23/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B-%E0%AE%B0%E0%AE%AF/article3395621.ece- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.,நிலா அக்காவ்- சிந்தனைக்கு சில படங்கள்...
அருமையான நற்சிந்தனை.- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
இந்த 'ரெண்டு அக்கா'விற்கான அருமையான விளக்கம் இந்தக் காணொளியில் உள்ளது..!- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பகலவன், புலவருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் !- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
உங்களின் அந்த அற்றாக் படத்தை யாழில் பதிவிட முடியுமா? யாழ்களம் சார்பாக வாழ்த்துக்களை 'பாஞ்' அவர்களுக்கு சொல்லிவிடுங்கள்..சிறி..!- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
ரசிகரை தெரியுமா? யாழ் களத்தில் "தமிழ் படிப்போம்..படிப்போம்" பள்ளியில் சக மாணவராக அறிமுகமாகி, பின்வரிசை வாங்கியில் அமர்ந்து அட்டகாசம் புரிந்த இளம் ரசிகர்.. இளமை துள்ளலுடன், அனுபவ பதிவுகளை பதிந்தும், அவ்வப்போது கவிதைகளையும், நறுக்கான கருத்துக்களையும் எழுதி தாயக நினைவோடு வலம்வரும் யாழ் ரசிகர்.. இன்று(14-04-2016) பிறந்தநாள் காணும் அந்த ரசிகருக்கு, இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..! (Please select 1080P in youtube 'settings' to watch in Full HD)- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள், வாதவூரான்.- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
சுட்டியை தட்டினேன் அன்பரே..அது நீங்கள் சொன்னபடி பின்வாசலில் கொண்டுவந்து நிறுத்திவிட்டது..! உங்கள் 'பார்'ஆளும் மன்ற வழிகாட்டல்கள் புதுமையாக இருக்கிறது..எனக்கும் மேல் சபையில் இருக்கை கிடைக்குமா? மற்றபடி மென்பொருளில் எங்கோ படித்த அந்த வசதியை சொன்னேன். ஏனிந்த ஆதங்க சோகம்? காதல் தோல்வியா?- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம், நிழலி. இந்த கருத்தாடல் மென்பொருளில், ஒவ்வொரு திரியையையும் எந்தெந்த உறுப்பினர்கள் இத்திரியை திறந்து வாசித்தார்களென புள்ளிவிவரணையை அத்திரிகளின் அடியில் தெரிவிக்க வசதி நிச்சயம் இருக்குமே! அந்த வசதியை இயக்கிவிட்டால் போச்சு..! யார் யார் வருகை தந்தார்கள் என அச்சொட்டாக மென்பொருள் சொல்லிவிடும்.. ஆனால் கள உறவுகள் மறைந்திருந்து திரியை பார்த்த மர்மங்கள் அனைவருக்கும் வெளிப்பட்டுவிடும்..- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
என்றும் விரும்பும் இந்தப் பாடலை இசைத்தவாறு நானும் ஜோதியில் கலக்கிறேன்..!- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
இதென்ன திரி? எல்லோரும் தத்துவ மழையாக பொழிகிறீர்கள்?- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
'சுமே அக்கா(?)'வுக்கும் விஷ்வாவுக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்! - சென்னை மெட்ரோ ரயில்...
Important Information
By using this site, you agree to our Terms of Use.