Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

kandiah Thillaivinayagalingam

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by kandiah Thillaivinayagalingam

  1. "அலைபாயும் மனது நான் அல்ல" / கவிதை - 02 "அலைபாயும் மனது நான் அல்ல அனைத்தையும் துறந்த ஏகாந்தம் நான்! அன்பாய் இவள் இடம் கேட்க அதிகாரம் அற்று அணைத்தவன் நான்!" "ஆழ்ந்த அறிவு பார்த்து இவளை ஆசிரியர் ஆகவும் கொண்டவன் நான்! ஆறுதல் தேடி அடைக்கலம் புகுந்தவளை ஆரவாரம் போடாமல் சேர்த்தவன் நான்!" "அத்திவாரம் வாழ்க்கைக்கு தேவை என அன்றும் இன்றும் உணர்பவன் நான்! அனாதையாய் நிற்கிறேன் என்று வந்தவளை அடக்கமாய் நட்பாய் இணைத்தவன் நான்!" "ஆடைகளை கழட்டுவது போடுவது போல் ஆசைக்கு பெண்களை சேர்ப்பவனல்ல நான்! ஆதிக்கமின்றி பண்பாய் பாசமாய் வந்தவளை ஆனந்தமாய் பற்றுடன் ஏற்றவன் நான்!" "அனைவருக்கும் மேல் இவளை உயிராய் அக்கறையுடன் என்றும் நேசிப்பவன் நான்! அனுபவம் அழகு நிறைந்த அவளை அச்சம் இன்றி கைபிடித்தவன் நான்!" "ஆட்டமாய் ஆடினாலும் கூட்டத்தை சேர்த்தாலும் ஆன்லைன்கடந்த அன்பில் மூழ்பவன் நான்! ஆத்திரம் கொண்டாலும் ஆற அமர்ந்து ஆலோசித்து முடிவு எடுப்பவன் நான்!" "அடுத் தடுத்து துன்பங்கள் வந்தாலும் அறவையிலும் வந்தவளை வாழவைப்பவன் நான்! அந்தரங்கம் மதித்து விட்டுக் கொடுப்புகளுடன் அயிர்ப்புஇன்றி அவளை ஏற்பவன் நான்!" "ஆனந்த வாழ்வின் அர்த்தம் புரிந்து ஆறறிவுகொண்டு அவளை நோக்குபவன் நான்! ஆண்டு பலமாறி கோலம் பலமாறினாலும் ஆதரவு அன்பு குறைக்காதவன் நான்!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] பி கு : அறவை --- உதவியற்ற நிலை [Helplessness] அயிர்ப்பு --- சந்தேகம் [Doubt]
  2. "தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்" / பகுதி: 27 மரணம் ஒவ்வொரு ஆணினதும் பெண்ணினதும் வாழ்வை தொட்டு, முழு மானிட சாதியையும் "தவிர்க்கமுடியாத மாள்வு" என்ற ஒன்றின் கீழ் இணைக்கும் ஒரு இயற்கை நியதி ஆகும். சராசரியாக ஒரு மனிதனின் ஆயுள் காலம் 30,000 நாளாகும். நீங்கள் அதிர்ஷ்டசாலியாக இருந்தால் 40,000 நாள் வாழமுடியும். எனினும் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் இது சுமார் 7000 நாட்களே. அதாவது 20 வருடங்களிலும் குறைவே என்பது குறிப்பிடத் தக்கது. மரணத்தில் இருந்து எவருமே தப்பமுடியாது என்பதை எல்லா சமயங்களும் ஏற்று கொண்டதுடன் அதற்கு பதிலாக நல்ல மாற்று வழியாக மறுமை (இறப்புக்கு பின் உள்ள வாழ்க்கை / afterlife) நம்பிக்கையை கொடுத்துள்ளது. இது, இந்த எண்ணம், தமது அன்புக்கு உரியவர்களை இழந்த பலருக்கும், மரணத்தை எதிர்பார்த்து இருப்பவர்களுக்கும் ஒரு ஆறுதல் கொடுக்கிறது. திருமூலர் தமது திருமந்திரத்தில், மனிதன் இறந்த பிறகு எல்லோரும் கூடி அழுதுவிட்டுப் பின்பு அவனுக்குப் பிணமென்று பெயர்வைத்து, அதை எடுத்துப்போய் சுடுகாட்டிலே வைத்து எரித்துவிட்டு ஆற்றிலோ அல்லது குளத்திலோ மூழ்கி எழுந்து அவனைப்பற்றிய நினைவை ஒழித்து விடுகிறார்களாம் என்று தமிழரின் மரபை அன்று கூறுகிறார். இன்றும் கூட ஒருவர் இறந்துவிட்டால் அன்னாரின் பூதவுடல் மயானத்துக்கு எடுத்துச் சென்று தகனம் செய்யப்படும் என்று தான் சொல்கிறோம். அவரது பெயரைச் சொல்வதில்லை. "ஊரெல்லாம் கூடி ஒலிக்க அழுதிட்டு பேரினை நீக்கிப் பிணமென்று பேரிட்டுச் சூரையங் காட்டிடைக் கொண்டுபோய்ச் சுட்டிட்டு நீரினில் மூழ்கி நினைப் பொழிந்தாரே!" [திருமந்திரம்] பண்டைய தமிழக தமிழர்கள், இறந்தவர்களை கையாளும் மரபு ஒரு கவர்ச்சிகரமாக உள்ளது. மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, மக்கள் வயது முதிர்ந்து, அசைவதை நிறுத்தி, கண் பார்வை, காது கேட்டல் போன்றவற்றை இழக்கும் போது, இவர்களை கிராமத்திற்கு வெளிய ஒரு ஒதுக்கு புறத்திற்கு கொண்டு செல்கிறார்கள். அங்கே மதமதக்கத் தாழி [முதுமக்கட்டாழி] என அழைக்கப்படும் ஒரு சின்ன கல் வீட்டில் அவர்களை விட்டு, அவர்களின் குடுபத்தில் இருந்து ஒரு பெண் தினம் அங்கு சென்று அவருக்கு சாப்பாடு கொடுத்து கவனிக்கிறார். இப்படி அவர் சாகும் மட்டும் தொடர்கிறது. அவர் இறுதியாக சாவை தழுவும் போது, அவரின் குடும்பம் முதுமக்கள் தாழி என்ற பெரிய மட்பாண்டம் ஒன்றில் அவரை உட்கார்ந்து இருக்கும் நிலையில் அவரின் முக்கிய உடமைகளையும் சேர்த்து உள் வைத்து அடக்கம் செய்கிறார்கள். இந்த தாழி [urn/pot] பிரத்தியேகமாக தோண்டிய குழியில் புதைக்கப்பட்டது. பெரிய கற்பலகை [பாறை] அதன் மேல் மூடி வைத்து, மண்ணால் மூடப்பட்டது. இது குப்பை கிளரும் விலங்குகள் அந்த இறந்த மனிதனின் உடலை வெளியே எடுப்பதை தடுப்பதற்கு ஆகும். அத்துடன் ஒரு சின்ன நடுகல் அங்கு நாட்டுகிறார்கள். இது அந்த அடக்கம் செய்யப்பட்ட இடைத்தை அடையாளம் காணவும், வருடாந்த நினைவு சடங்குகளை அங்கு நிறைவேற்றுவதற்கும் ஆகும். மற்றொரு முறையில் அந்த தனிப்பட்ட நபர் இறந்த பின்பு சடலத்தை எரியூட்டி எஞ்சிய சாம்பலை மட்டும் சிறிய கலயத்தில் [குடத்தில்] இட்டுப் புதைத்துள்ளார்கள். அத்துடன் சிலவேளை தனிப்பட்ட நபர் இறந்த பின்னர் உடலை வெட்ட வெளியில் கிடத்தி சில நாள்கள் ஆன பிறகு விலங்குகள், பறவைகள் உண்டது போக எஞ்சிய எலும்புத்துண்டுகளை மட்டும் பொறுக்கி எடுத்து சிறிய அளவிலான மட்பாண்டத்தில் இட்டுப் புதைத்தும் உள்ளனர். பீமண்டபள்ளி கிராமத்தில் 8 அடி நீள ஈமப்பேழை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது இன்றைய சவப்பெட்டியை நினைவூட்டுகிறது. இங்கு எலும்புக்கூடு காணப்பட்டது. அந்த இறந்த மனிதர் மல்லார்ந்த படுக்கை நிலையில் உள்ளார். இன்றைய அவசர காலத்தில், கணவன் மனைவி இருவரும் வேலை, பிள்ளைகள் பாடசாலை, பல்கலைக் கழகம், இடையில் கொண்டாட்டங்கள், விடுமுறைகள் ... கூட்டுக்குடும்பம் என்றால் வயதானவர்களை கவனிக்க குடும்பத்தில் யாராவது ஒருவர் இருப்பர். ஆனால் இன்றோ பலர் தனிக்குடும்ப முறை என்பதும் குறிப்பிடத் தக்கது. இதனால் இப்படி நேரம் இன்றி அலையும் உலகில், தாய் தந்தையரை அல்லது தமது குடும்பத்தில் வாழும் முதியோரை, எப்படி அன்று சின்ன கல் வீட்டில் விடார்களோ, அப்படியே இன்றும் முதியோர் இல்லத்தில் விடுவதை காண்கிறோம். இதில் பெரும் தவறு இருப்பதாக நான் கருத வில்லை. ஆனால், அதோடு நின்று விடுகிறார்கள். முற்றுப் புள்ளி வைத்து விடுகிறார்கள். அங்கு தான் தவறு ஏற்படுகிறது? அன்று அவர் குடும்பத்தின் ஒரு பெண், தினம் அங்கு சென்று அவரை கவனித்தார். எனவே தனிமை அவரை வாட்டி இருக்காது. ஆனால் அங்கு ஒரு உயிர் ஏங்குகிறது என்பதை இன்று அதிகமாக மறந்து விடுகிறார்கள். "கருவறையில் இடம் தந்தேன்..! உன் வீட்டில் நான் வசிக்க.. இல்லையா சிறு அறை.. உள்ளத்தில் ஒரு மூலையில்... ஒருக்கா எம்மை நினைக்க... ஒருக்கா எம்மை பார்க்க .. ஒருக்கா எம்முடன் கதைக்க... " இப்படி அந்த ஜீவன் தவிக்கிறது, ஏங்குகிறது இன்று !. மேலும் பண்டைய தமிழகத்தில் எப்படி இறந்தவர்கள் அடக்கம் செய்யப்பட்டார்கள் என்பதை விரிவாக தெளிவாக ஒரு வரிசை கிரமத்தில் மணிமேகலையும் (6-11-66-69) சொல்கிறது "சுடுவோ ரிடுவோர் தொடுகுழிப் படுப்போர் தாழ்வயி னடைப்போர் தாழியிற் கவிப்போர் இரவும் பகலும் இளிவுடன் றரியாது வருவோர் பெயர்வோர் மாறாச் சும்மையும்" பிணங்களைச் சுடுவோரும் [cremators] வாளா இட்டுப்போவோரும் [leave dead body to decay] தோண்டப்பட்ட குழியி லிடுவோரும் [placed into a hole dug specifically for the burial], தாழ்ந்த இடங்களில் அடைத்து வைப்போரும் [entomb the dead body in small low lying chambers] தாழியினாலே கவிப்போருமாய்ப் [embalm the dead body in burial urn and cover mouth] பல்வேறு வகையாக இறுதிக் கடன்கள் செய்ய, இரவும் பகலுமாகிய இருபொழுதும் வருவோரும் செல்வோரும் செய்யும் ஆரவாரமும் என்று ஐந்துவகையில் இறந்த உடல் அடக்கம் செய்வதை இந்த பாடல் எடுத்து கூறுகிறது. மனிதன் பிறப்பதற்கு முன்பே தொடங்கும் சடங்குகள் அவன் இறந்த பின்பும் இங்கு தொடர்வதை காண்கிறோம். இறந்தோருக்காகச் செய்யப்படும் சடங்குகளே இறப்புச் சடங்குகள், ஈமச் சடங்குகள், ஈமக் கிரியைகள் என வழங்கப்படுகின்றன. நாட்டுப் புறங்களில் ஒருவர் இறந்தவுடன் நிறை மரக்காலில் நெல்லை நிரப்பி அதன்மேல் விளக்கேற்றி வைக்கும் வழக்கம் உள்ளது. இறந்தவரின் உயிர் ஒளியாக - சோதியாக மாறியுள்ளது என்பதைக் குறியீடாய் இச்செயல் உணர்த்துகிறது. இறப்புச் சடங்கில் கொள்ளி வைத்தல் என்பது மிக முக்கியமான சடங்காகும். சுடுகாட்டில் உடலுக்கு எரியூட்டும் முன் இறந்தவரின் மகன் நீர் நிறைந்த கலயத்தைத் தோளில் வைத்து மூன்று முறை உடலை வலம் வந்து குடம் உடைத்துக் கொள்ளி (தீ) வைக்கும் நிகழ்வே கொள்ளி வைத்தல் என்பதாகும். தாய் இறந்தால் தலைமகனும் தந்தை இறந்தால் இளைய மகனும் கொள்ளி வைக்க வேண்டும் என்ற வழக்கம் இன்றும் இருந்து வருகின்றது. ஆதி மனிதர்களிடம் முதன்முதலில் தோன்றிய சடங்குகள் ஈமச் சடங்குகளே என்று கூறுவதுண்டு. இறந்தோரைப் புனிதப் படுத்துவதற்காகவும் இறந்தோரால் எவருக்கும் எத்தகைய தீங்கும் விளையக் கூடாது என்பதற்காகவும் இறப்புச் சடங்குகள் பொதுவாக கடைப்பிடிக்கப் படுகின்றன எனலாம். ஆசாரங்கள், சடங்குகள் போன்றவை பெரும்பாலும் தொன்மையான பழங்குடிவாழ்க்கையிலிருந்து எழுந்தவை. சில நடைமுறை வசதிக்காக உருவாக்கப்பட்டவை, சில குறியீட்டு ரீதியானவை. அவை நம்மை நம்முடைய தொன்மையான இறந்த காலத்துடன் இணைக்கின்றன. இந்த வகையில் நீத்தார் சடங்குகள் ஒரு குறியீட்டு நிகழ்வுகளாகும். அவற்றின் குறியீட்டுச் செயல்பாடுகளை உணர்ந்து செய்வது நம் உள்ளத்தை மலரச்செய்கிறது. வாழ்க்கைக்குப் பொருள் அளிக்கின்றது. அவை இல்லையேல் வாழ்க்கை வெறும் அன்றாட நிகழ்வுகளால் ஆனதாக மட்டும் எஞ்சிவிடும். எனவே சடங்குகளின் தேவையை அவை அளிக்கும் பயன்களைக் கொண்டு மட்டும் மதிப்பிட்டால் போதும். ஆனால் சடங்குகள் ஆசாரங்கள் போன்றவற்றில் ஒரு கவனம் தேவை. பல ஆசாரங்களும் சடங்குகளும் சென்ற நிலப்பிரபுத்துவ காலகட்டம் சார்ந்தவை. ஆகவே அவற்றில் இன்று மானுட சமத்துவம் மனித உரிமை போன்றவற்றுக்குச் எதிரான பல இருக்கலாம். அத்தகையவற்றை முழுமையாக நிராகரிப்பது அவசியம். என்றாலும் நடைமுறைச் சடங்குகளும் மங்கலச் சடங்குகளும் அழகியல் சடங்குகளும் குறியீட்டுச் சடங்குகளும் இல்லாமல் இன்று மனிதன் வாழ்வது கடினம். நாம் பழைய சடங்குகளை தவிர்த்தாலும் கூட புதியவை வந்து சேருகின்றன. உதாரணமாக, மலர்ச்செண்டுகளை அளிப்பது, நாடா வெட்டி திறந்துவைப்பது, படத்திறப்பு செய்வது போன்ற எத்தனை நவீனச் சடங்குகளை நாம் இன்று செய்து கொண்டிருக்கிறோம் என்பதே உண்மை ஆகும். நான் "என் இறுதி சடங்கில்" என்ன நடக்கலாம் , நடக்கும் என்று ஒரு கனவு கண்டேன் இந்த கட்டுரை எழுதும் பொழுது . அதை கீழே தருகிறேன்! "என் இறுதி சடங்கில் என்னை எரிவனம் எடுத்து சென்று எரிக்க என் நேரடி தொடர்பை அறுக்க எல்லோரும் கூடி கதைப்பது கேட்குது" "ஓய்வு எடுக்க பெட்டியில் வைத்து ஒளி தீபங்கள் சுற்றி வைத்து ஒதுங்கி இருந்து தமக்குள் கதைத்து ஒழுங்கு படுத்துவது எனக்கு தெரிகிறது" "சிறந்த ஆடைகளை தேர்ந்து அணிவித்து சிறப்பான அலங்கார பாடை தருவித்து சிறார்கள் கையில் பந்தம் கொடுத்து சிரிப்பு இழந்து தவிப்பதை பார்க்கிறேன்" "நரம்பு நாடி தளர்ந்து போகையில் நம்மைநாடி நோய் வந்து சேர்கையில் நமக்கு பிடித்தவர் இல்லாமல் போகையில் நல்வரமாய் தான் இறப்பு இருக்குது" "மன்னனாய் பிறந்தாயென்று கர்வம் கொள்ளாதே மன்மத அழகனென்று லீலைகள் செய்யாதே மதுபோதையில் தவழ்ந்து முட்டாளாய் வாழாதே மரணத்தை நினைத்து அஞ்சியும் சாகாதே" "நான் தீயில் சங்கமிக்கும் பொழுது நாடகம் ஆடியவாழ்வு முடிவுறும் பொழுது நான் என்னை சற்று பார்த்தேன் நாமம் அற்ற சடலமாகக் கண்டேன்" "உறவினர் நண்பர்கள் முகங்களைப் பார்த்தேன் உவகை இழந்த சிலரைக் கண்டேன் உறக்கம் துறந்த பிள்ளைகளைக் கண்டேன் உரிமை காட்டிட வந்தோரையும் கண்டேன்" "உடம்பு கெட்டால் உயிருக்கு மரியாதையில்லை உயிர் பிரிந்தால் உடம்புக்கு மரியாதையில்லை உலகத்தை விட்டு நான் போகும்தருவாயில் உண்மையை நான் இன்று அறிகிறேன்" "காமம் தெளித்த உடலும் படுத்திட்டு காதல் தந்த மனதும் உறங்கிற்று காதற்ற ஊசியும் வர மறுக்குது காலனின் வருகையால் எல்லாம் தொலைந்திட்டு" "என் பிள்ளைகளிடம் ஒன்று கேட்கிறேன் என் பெயரை மறக்க வேண்டாம் என் பெயர் எம் அடையாளம் எங்கள் இருப்பு இனத்தின் வாழ்வு" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] பகுதி: 28 தொடரும்
  3. இது பல்கலைக்கழகத்தால் வெளிக்கிட்டு பிரம்மச்சாரியாக வேலை செய்யும் பொழுது, ஆனால் இன்று எல்லாம் கனவே !!
  4. எல்லோருக்கும் நன்றிகள்
  5. "நவீன சமுதாயம் வீழ்ச்சியடைகிறதா?" [சீரழியும் சமுதாயம்] பகுதி: 25 9] இல்லாமை தத்துவம் அல்லது நீலிசம் [Nihilism / Letting Yourself Go Culture] நாம் வாழும் சமுதாயம் ஒழுக்கமானதாக இல்லாத போது, நாம் மட்டும் ஏன் ஒரு ஒழுக்கமாக இருக்க வேண்டும் என்ற கேள்வி ஒருவரிடம் எழும் பொழுது, அவர் ஒன்றிலும் கவலை இல்லாதவராக, "நான் எதையும் பற்றி கவலைப்படப் போவதில்லை, எனக்கு, என் வாழ்க்கையின் மீது, கட்டுப்பாடு இல்லை " என்று அவர் எந்த வெட்க உணர்வும் இன்றி அல்லது அதை இழந்து விட்டவராக சொல்லுவதைக் கேட்க்கிறோம். இது தான் எந்த மதிப்புகளையும் மற்றும் தரங்களையும் கொண்டிராத அழியும் ஒரு சமுதாயத்தில் பொதுவாக காண்கிறோம். இவர்கள் வாழ்க்கையின் அர்த்தமுள்ள அம்சங்களில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்டதை மறுத்தலைக் காண்கிறோம். இப்படியான நிலையை 'இல்லாமை தத்துவம்' அல்லது 'நீலிசம்' என்று அழைக்கலாம் என்று சொல்லுகிறார்கள். Nihilism [நிஹிலிசம் அல்லது நீலிசம்], என்பது ஒன்றுமில்லை என்ற பொருள்படும் இலத்தீன் சொல் nihil இருந்து பிறந்த ஒரு சொல்லாகும். உன் வாழ் நாளில், நீ செய்த முயற்சிகளின் பின்னாலோ அல்லது நீ அனுபவித்த துன்பங்களின் பயனாலோ, 'வாழ்க்கை அர்த்தம் அற்றது' என்று சலிப்பு கொண்டு, 'நாம் ஏன் ஏதாவது செய்யவேண்டும், நாம் ஏன் கவலைப்பட வேண்டும்?' என உன் மனம், கட்டாயம் ஒரு கணம் கேட்டிருக்கும். எனவே நாம் அனைவரும் நீலிசம் [நிஹிலிசம்] என்ற தத்துவத்தின் தாக்கத்தை, அது என்ன வென்று தெரியாமலே, உணர்ந்து இருப்போம். அனுபவித்திருப்போம். ஒவ்வொரு முறையும் உங்கள் முன்னேற்றம் அல்லது முயற்சி வீணாகும் பொழுது, "என்ன பிரயோசனம்" [“what’s the point?”] என்று உங்களையே நீங்கள் கேட்டிருக்கலாம். ஏன் என்றால் நாம் ஒரு நாள் கட்டாயம் சாகத்தான் போகிறோம், எனவே அது எதுவும் எமக்குத் தேவையில்லை [none of it will matter] என, உங்கள் வாழ்வில் ஏற்பட்ட, தடைகள் மற்றும் திசைதிருப்பல்கள், துன்பம், ஏக்கம், அபத்தம், தனிமைப்படல் மற்றும் அலுப்பு உள்ளிட்டவையால், நீலிசத்துடன் [நிஹிலிசம்] தெரிந்தும் தெரியாமலும் நீங்கள் மோதியிருப்பீர்கள். உதாரணமாக இந்த கட்டுரையை உங்களுக்கு நான் எழுதும் பொழுது, சில வேளையில், சில சந்தர்ப்பத்தில், இந்த கட்டுரையை எழுதுவதால் என்ன பிரயோசனம் என்று நான் என்னை கேள்வி கேட்டிருப்பேன். நீலிசத்திற்கு ஊடாக போய், அதன் மறு பக்கத்தினூடாக வெளியே வந்து, என்னை இன்று நான் இப்ப இருக்கும் ஒரு நபராக வடிவமைத்துள்ளேன். அது மட்டும் அல்ல, நீலிசத்துடனான என் அனுபவம், என்னை முன்னையதிலும் பார்க்க மிகச் சிறந்த நபராக மாற்றியுள்ளது என்பதும் உண்மையே. பொதுவாக உலகளாவிய இணைய தளத்தில், மற்றும் செய்திகளில், நீலிசம் [நிஹிலிசம்] பற்றிய கருத்துக்கள் பிழையாக அல்லது மோசமாக தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளது என்று எண்ணுகிறேன். இன்று நாம் வாழும் வாழ்க்கை ஒரு ஒரு மோசமான நிலைமையாக காணப்படுகிறது. ஏன் என்றால், மதம் மற்றும் பாரம்பரியம் [religion and tradition] எம் மனதை ஆணையிடுகிறது, அங்கு, 'தானே சிந்திக்கும்' ஒரு சுதந்திர மனிதனை காண முடியவில்லை. ஏனென்றால் எம் சமுதாயம் “மதிப்புகள்”, “ஒழுக்கம்”, “நல்லொழுக்கம்” மற்றும் “நன்மை” [“values”, “morals”, “virtue” and lastly “goodness”] என்ற போர்வைக்குள் எம்மை மூடி, அதற்க்கு கீழ்ப்படி என எமக்கு கோரிக்கை விடுகிறது. இதனால் எம்மில் பலர் கண்மூடித்தனமாக, எந்தவித விளக்கமும் இன்றி, சமுதாயம் அல்லது சமூகம் அல்லது குடும்பம் காட்டிய அந்த வழியை பின்பற்று கிறார்கள். அது மட்டும் அல்ல, உணர்வுபூர்வமாக அது ஏன் என்று தெரியாமல் அவர்களின் வாழ் நாள் முழுவதும் இருக்கிறார்கள். இந்த சங்கிலியை உடைத்து எறியும் முயற்சியையே நீலிசம் தருகிறது எனலாம். இந்த நீலிசம் என்ற தத்துவம், ரஷ்ய இலக்கியத்தின் நாயகரான 'இவான் துர்கனேவ்' [Ivan Turgenev] என்ற எழுத்தாளரால் தன் 'தந்தையரும் தனயரும்' [Fathers and Sons] என்ற புத்தகத்தின் மூலம் பிரபலமானது எனலாம். அந்த நாவலில் முக்கிய பாத்திரமான, பஸாரவ் [Bazarov] ஒரு நீலிசவாதியாகும், இவர் அந்த நாவலில் வரும் தந்தையின் மகனான அர்க்காதியின் நண்பராவார். ஒரு கட்டத்தில், ஒரு போட்டியில், அர்க்காதியின் பெரியப்பாவை சுட்டுவிடுகிறான். அடுத்த கணம் உயிருக்குப் போராடும் அவரைக் காப்பாற்ற முனைகிறான். அவரோ போட்டியின் விதிப்படி நான் இறப்பதுதான் சரியாக இருக்கும் என்கிறார். பஸாரவ் தொடர்ந்து சிகிச்சை அளிக்கிறான். "போட்டி முடிந்துவிட்டது. இப்போது நான் போட்டியாளன் இல்லை, மருத்துவன்'' என்கிறான். இன்னும் ஒரு கட்டத்தில், நிமோனியா காய்ச்சலில் பாதிக்கப்பட்டவனைக் காப்பாற்றும் பொருட்டு போதிய தடுப்பு மருந்துகள் இல்லாமலேயே சிகிச்சை செய்ய இறங்கி, பஸாரவ் உயிருக்கே வினையாக வந்து நிற்கிறது. இப்படி ஆகும் என்பதை உணர்ந்தேதான் அந்தச் சிகிச்சை அளிக்க இறங்குகிறான் பஸாரவ். உயிரைக் காப்பாற்ற வேண்டும் என்பது மட்டுமே அவனுடைய நோக்கமாக இருக்கிறது. மரணத்தை சுகமாக ஏற்கிறான். சாகும் முன்னர் அவனால் மறுக்கப்பட்ட காதலியைச் சந்திக்க விரும்புகிறான். அவளோடு பேசிக் கொண்டிருக்கிறான். "நோய் தீவிரமாகிக் கொண்டிருக்கிறது. நான் உளறுவது போல தோன்றினால் பரிதாபம் பார்க்காமல் என்னிடம் சொல்லிவிடு. நான் சாகும்போதும் கவுரவமாகச் சாக விரும்புகிறேன்'' என்கிறான். நாங்கள் இன்று அதிகமாக அப்படியான ஒரு நீலிச காலத்தில் வாழ்கிறோம். இங்கு பலரிடம் வாழ்க்கை எந்தவொரு நோக்கமும் பொருளும், அல்லது உள்ளார்ந்த மதிப்பும் இல்லாமல் இருப்பதை காண்கிறோம். உண்மையில் நியாயம் என்று எதுவும் இல்லை, உருவாக்கப்பட்ட நியாயம் என்ற மதிப்புகள் உண்மையில் மாயையால் உருவாக்கப்பட்டவை என்று கருதும் காலமாக மாறுகிறது. உண்மையில் நீலிசம் அல்லது நிஹிலிசம் ஒரு கலாச்சார நிலை, அல்லது உளவியல் நிலை [cultural condition or the psychological state] ஆகும். அங்கே, ஏதேனும் உள்ளார்ந்த அல்லது தனித்துவமான மதிப்பு அல்லது பெறுமானம் கொண்டிருப்பதாக அவர்கள் உணரவில்லை. சிலவற்றிற்கு எந்தவொரு பண மதிப்பு என்று ஒன்றும் இல்லை என்று சொல்வதுடன் இதற்கு சம்பந்தம் இல்லை. ஒரு தோட்டம், ஒரு அன்பான செல்ல பிராணி, ஒரு அழகான கழுத்தணி, ஒரு ஆழமான நாவல் அல்லது படம், அல்லது ஒரு நபர், இவைகள் தனக்கு என ஒரு மதிப்பு கொண்டிருப்பதாக கருதவில்லை, அந்த மதிப்புகள் அல்லது பெறுமானம், அந்த மதிப்பை கொடுத்தவர்களுடன் தொடர்புடையது என்றாகிறது என்கிறார்கள். இதன் தீவிர போக்கை தீவிரவாத நீலிசம் [“radical nihilism”] என்று அழைக்கிறார்கள். உதாரணமாக ஒருவர் மதிப்பிற்குரியதாக கருதப் படுபவை எல்லாம், உண்மையில் ஒரு வழக்காறு அல்லது மரபு, அதை விட அதில் வேறு ஒன்றும் இல்லை என்கிறார்கள். ஒரு மௌனமான அல்லது மறைமுகமான, பரீட்சிக்கப்படாத சில அனுமானங்கள் மூலம் ஒருவரின் செயலையும் அவரின் சமூக நடத்தையையும் வழிநடத்தும் ஒரு மறைமுகமான கட்டளை [a tacit, unexamined set of assumptions that directs one’s actions and social behaviour] இது ஆகும் என்கிறார்கள். [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] பகுதி: 26 தொடரும்
  6. "வேலைக்காரியின் திறமை" வேலைக்காரி என்ற சொல்லுக்கு நாம் பணிப்பெண், ஏவற்பெண் அல்லது தொழுத்தை இப்படி பலவிதமாக கூறினாலும் சிலவேளை அவள் ஒரு அடிமை போல நடத்தப்படுவதும் உண்டு. இது மலருக்கு நன்றாகத் தெரியும். அவள் சாதாரண வகுப்பில் இறுதி ஆண்டு படிக்கும் பொழுது, தாயையும் தந்தையையும் ஒரு விபத்தில் இழந்துவிட்டாள். அவளுக்கு இரண்டு தம்பியும் இரண்டு தங்கையும் உண்டு. ஒரு சிறு குடிசையில், அப்பா, அம்மாவின் கூலி உழைப்பில் ஒருவாறு சமாளித்து குடும்பம் இன்றுவரை போய்க்கொண்டு இருந்தது. இந்த திடீர் சம்பவம், அவளுக்கு முழுப்பொறுப்பையும் சுமத்திவிட்டது. அவளுக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. கூலி வேலைக்கு போகும் பக்குவம் அனுபவம் அவளுக்கு இன்னும் இல்லை என்றாலும், சமையல், துப்பரவாக்கள், குழந்தை பராமரிப்பில் ஓரளவு அனுபவமும் திறமையும் உண்டு. கைவசம் இப்ப வீட்டில் இருக்கும் கொஞ்ச காசும் உணவு பொருட்களும் ஒரு கிழமைக்கு தாக்குப்பிடிக்கும், அதற்குள் எப்படியும், படிப்புக்கு முழுக்கு போட்டுவிட்டு, ஒரு வேலைக்கு போகவேண்டும். அப்ப தான் தன் இரு தம்பிகளும் இரு தங்கைகளும் படிப்பை தொடரமுடியும், சாப்பிடமுடியும் என்று அவளுக்குத் தோன்றியது. அதனால், தன் அம்மா அப்பா கூலிவேலை செய்த ஒரு சில இடங்களில், ஏதாவது வீட்டு வேலைகள் கிடைக்குமா என்று விசாரித்து பார்த்தாள். ஆனால் ஒருவரும் அவளை வேலைக்கு சம்மதிக்கவில்லை. அவளுக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. இன்னும் மூன்று நான்கு நாட்கள்தான் ஒருவாறு சாப்பாட்டுக்கு சமாளிக்கலாம். அப்ப தான், அவள் தன் குடிசைக்கு திரும்பும் பொழுது, இளம் தம்பதியர், தம் இரு சிறு குழந்தைகளுடன் காரில் இருந்து இறங்கி, வீட்டுக்குள் போவதைக் கண்டாள். அவர்களின் மூத்த மகள் ஒரு நாலுவயது இருக்கும், சடுதியாக முன் படலை மூடமுன்பு வீதிக்கு ஓடிவிட்டார். நல்ல காலம், மலர் இதைக் கவனித்துக்கொண்டு இருந்ததால், ஓடிப்போய் தூக்கிவிட்டார், இல்லாவிட்டால், வேகமாக வந்த பாரவூர்தியில் நசிங்கிப்போய் இருப்பார். பாரவூர்தியின் சடுதியான நிறுத்தமும், குழந்தையின் அழுகுரலும் பெரும் அதிர்ச்சியை பெற்றோருக்கு கொடுத்தது, என்றாலும் குழந்தை பாதுகாப்பாக மலரின் கையில் இருப்பதைக் கண்டு, அவளுக்கு நன்றி கூறியதுடன், அவளின் உடையையும், முகத்தில் தவழும் சோகத்தையும் பார்த்த அவர்கள், அவளை வீட்டுக்குள் அழைத்து விசாரித்தனர். அப்பொழுதுதான் மலரின் அப்பா, அம்மா இருவரும் சிலவேளை இவர்களின் வீட்டிலும் தொட்டாட்டு வேலை செய்தது தெரியவந்தது. அவர்களும் இவளின் இந்த திறமையை நேராக கண்டதாலும், அவளின் அப்பா அம்மாவின் அறிமுகம் முன்பே இருந்தலாலும், தமக்கு ஒரு வீட்டு உதவியாளராக, வேலைக்காரியாக, காலை பொழுதுக்கு சம்மதித்தனர். எது என்னவென்றாலும், அவளின் வேலையை, நடத்தையை பொறுத்தே நிரந்தரமாக்குவோம் என்று உறுதியும் கொடுத்தனர். அவளுக்கு நல்ல சந்தோசம், வீடு திரும்பியதும் அந்த செய்தியை தன் சகோதரர்களுடன் பகிர்ந்துகொண்டாள். அடுத்தநாள் காலை அவள் கண்விழித்து எழுந்தபோது, அவள் நேற்று வைத்த அலாரம் இன்னும் அலரவில்லை! அலருவதற்கு இன்னும் ஒரு மணித்தியாலம் எஞ்சியிருந்தன. ‘இன்றைக்கும் நீ அலர வேண்டாம்..’ என்பதுபோல், கடிகாரத்தின் தலையில் தட்டி அடக்கி வைத்தாள். அவளின் உடலுக்குள் ஓர் உயிரியல் அலாரம் இருந்ததுபோல் நாலு மணிக்கே எழும்பி விட்டாள். வெளியில் பெய்த மழை, உள்ளே படுக்கையில் குளிர்ந்தது. உடலும்; மனமும் போர்வையில் சுருண்டுக்கொள்ளும் சுகத்தைக் கோரின. எனினும் தான் இன்றில் இருந்து வேலைக்காரி என்ற நினைவு அதை மறுத்தது. அவசரம் அவசரமாக சாப்பாடு தயாரித்துவிட்டு, சகோதரர்களை சாப்பிட்டு விட்டு கவனமாக பாடசாலை போய் வரும்படி கூறி விட்டு, ஆறுமணிக்கு முதலே வேலைக்காரியாக, தன் முதல் நாள் வேலையை தொடங்கினாள். இங்கு சமையல் பெரிதாக இல்லாவிட்டாலும் குழந்தை பராமரிப்பும் வீடு, வளவு துப்பரவாளாலுமே முக்கியமாக இருந்தது. அவளுக்கு அவை ஏற்கனவே பழக்கமாக இருந்ததால், அது அவளுக்கு பிரச்சனையாக இருக்கவில்லை. மேலே இருந்த அறை ஒன்றில், வீட்டுக்கார அம்மா தன் மகளை பாலர் பள்ளிக்கு தயார் படுத்திக்கொண்டு அவளும் தன்னை ஆயத்தமாகிக் கொண்டிருந்த அரவம் கேட்டது. மலர் கொஞ்சம் மேலே எட்டிப் பார்த்தாள். அந்த நாலு வயது பிள்ளை அடம் பிடித்துக்கொண்டு இருந்தது. அவள் நித்திரையில் வரைந்த ஓவியத்தைப் போல் அலங்கோலமாய் இன்னும் வெளிக்கிடாமல் இருந்தாள். தன் நாலு தம்பி தங்கையுடன் பழகிய அனுபவம் நெஞ்சில் வர, 'அம்மா நான் உதவி செய்யவா?' என்று கேட்டவாரே மேலே ஓடிப்போய், அந்த குழந்தையின் கன்னத்தில் தடவிக் கொடுத்துக் கொண்டு, குளியல் அறைக்கு கூட்டிக்கொண்டு போய், பல் துலக்கி வாய் கொப்பளித்து, முகம் கழுவி பின் சாப்பாடு தீத்த தொடங்கினாள். அந்த குழந்தையும் அவளுடன் மகிழ்வாக சேர்ந்து கொண்டது. வீட்டுக்கார அம்மா, அப்படியே திகைத்து இருவரையும் பார்த்துக்கொண்டு இருந்தாள். ‘ நாலு வயசுதான் ஆவுது, அதுக்குள்ளியும் இன்னா பேச்சு!..’ , மலர் தனக்குள் முணுமுணுத்துக் கொண்டாள். அதன் பின் முதலில், சமையல் அறை போய் அங்கு சுத்தம் செய்தாள். பிறகு சட்டிப் பானைகள், சாப்பட்டு பாத்திரங்களை கழுவி வைத்தாள். மீந்தச் சாப்பாட்டை முதலில் குப்பைத் தொட்டியில் கொட்டிவிட்டு பின்னர் உணவு தட்டுகளை பேசினில் [basin] போடாமல், அப்படியே வீட்டுக்காரர்கள் போட்டதால் கவலைகள் நிறைந்துக் கிடந்த அவளின் மனசைப்போல், பேசின் அடைத்துக் கொண்டது. எண்ணைய் மிதக்கும் தண்ணீரைப் பார்க்க அருவருப்பாய் இருந்தது. அடைத்துக் கிடந்த சோற்றை அகற்றிவிட்டு பேசினைச் சுத்தம் செய்து முடித்தாள். ' என்ன மலர் இன்னும் குசினியிலேயா?' வீட்டுகார அம்மாவின் சத்தம் கேட்டு திரும்பினாள். 'இனி காணும் கொஞ்ச நேரம் தம்பியுடன் விளையாடு , நான் சமைக்கப் போகிறேன்' என வீட்டுக்கார அம்மா மலருக்கு ஓய்வு கொடுத்தாள். அப்படியே துப்பரவாக்களும் குழந்தைகளுடன் விளையாட்டுமாக அன்றைய பொழுது மலருக்கு போய்விட்டது. என்றாலும் முதல் நாள் வேலை முடிந்து வீடு திரும்ப இரவு ஏழு மணி கடந்துவிட்டது. என்றாலும் அவர்கள் மிஞ்சிய சாப்பாடுகளை அவளுக்கு வீட்டுக்கு எடுத்துப்போக கொடுத்துவிட்டனர். அவள் அங்கு மூன்று நேரமும் சாப்பிட்டதால், அதை சகோதரர்களுக்கு கொடுத்தாள். கொஞ்சம் கொஞ்சமாக வேலையில் அனுபவம் பெற, கெதியாக அதேநேரம் நேர்த்தியாக துப்பரவாக்கள் செய்ய தொடங்கினாள். இதனால், அவர்களின் மூத்த மகளுக்கு கொஞ்சம் கொஞ்சமாக கணக்கும் தமிழும் மிஞ்சிய நேரத்தில் படிப்பிக்கவும் தொடங்கினாள். அது அவர்களை மிகவும் கவர்ந்தது. மலர் பாடசாலையில் படிக்கும் காலத்தில், ஒரு திறமையான மாணவியாக இருந்தது இதற்கு அவளுக்கு உதவியது. அவளை இப்ப அவர்கள் தங்களின் ஒரு குடும்ப உறுப்பினராக கருத தொடங்கியதுடன், அவளை சாதாரண வகுப்பு பரீட்சைக்கு தனியார் பரீட்சையாளராக தோற்றுவதற்கான உதவிகளையும் வழங்கி, அவளுக்கு தாமே ஓய்வுநேரத்தில் படிப்பித்தனர். இருவரும் பட்டதாரிகள் என்பதால், படிப்பித்தல் அவர்களுக்கு இலகுவாகவும் இருந்தது. மலரின் நேர்மையான திறமை அவளை மீண்டும் படிப்பை தனியார் மாணவியாக தொடர் வைத்தது. நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
  7. முதியோருடன் ஒரு அலசல்: "மனித பார்வை [Human vision]" / பகுதி 02 உங்கள் கண்கள் உலகின் ஜன்னல்கள். கண்களுக்கு பாதிப்புகள் ஏற்படும் போது, அது உங்களுக்கும் மற்றும் உங்கள் உடலுக்கும் கடுமையான பிரச்சனைகளை ஏற்படுத்தக் கூடும். நீங்கள் ஒவ்வொரு நாளும் செயல்படுவதற்கு பார்வை பெரும் பங்காற்றுகிறது. பார்வைக் குறைபாடுகள் (Visual impairment) தொடங்கும் பொழுது நீங்கள் கண்டிப்பாக கண் மருத்துவருடன் கலந்தாலோசிக்க வேண்டும். அதிலும் நீரிழிவு நோய் [diabetes] இருப்பவர்கள் கட்டாயம் ஒரு ஒழுங்காக மருத்துவ பரிசோதனை செய்யவேண்டும். பார்வைக் குறைபாடுகளில் (Visual impairment) பொதுவானதும் மற்றும் வயது தொடர்பான கண் பிரச்சினைகளை பற்றி இனி ஆராய உள்ளோம். அவைகளில் முதன்மையானவை 1] வெள்ளெழுத்து அல்லது கிட்ட பார்வைக் குறைவு [Presbyopia], 2] கண் அழுத்த நோய் (Glaucoma), 3] வறண்ட கண்கள் [dry eyes], 4] வயதுசார் விழித்திரை தேய்மானம் அல்லது சிதைவு [age related macular degeneration], 5] கண்புரை [cataract], & 6] தற்காலிக தமனி அழற்சி [ஜெயண்ட் செல் ஆர்க்டிடிஸ் / temporal arteritis or Giant cell arteritis] ஆகும். முதியோர்களின் கண் பார்வையை பாதிக்கும் இவைகளின் தாக்கங்களை சுருக்கமாக பார்ப்போம் 1] வயதுசார் விழித்திரை தேய்மானம் [age related macular degeneration] -- மங்கலான பார்வை, விம்பத்திரிவு [image distortion], விழித்திரையின் நடுவிலுள்ள குருட்டுத்தன்மை [central scotoma]. 2] கண் அழுத்த நோய் [Glaucoma] -- பார்வை நரம்பு சேதமாவதால் பார்வை இழப்பு நிலைக்கு விரைந்து முன்னேறுவதும், பழைய நிலைக்குத் திரும்பக் கொண்டு செல்ல முடியாததுமான ஒரு கண் நோய் ஆகும். இதனால், சிறிது சிறிதாக கண்பார்வை குறைவு ஏற்படுகிறது 3] கண்புரை [cataract] -- நீரிழிவு நோய் போன்றவற்றின் விளைவாகவும், கண்களில் ஏற்பட்ட காயங்களின் விளைவாகவும் கண்புரை ஏற்படலாம். மங்கலான பார்வை, கண் பிரதிபலிப்பு அல்லது கூசுதல் [glare], ஒரு கண்ணில் மட்டும் ஏற்படும் இரட்டை பார்வை அல்லது இரட்டை நோக்கு குறைபாடு [monocular diplopia] ஆகும் [டிப்ளோபியா [diplopia] நோயாளி என்பது, அவர் அருகில் உள்ள பொருள் இரண்டு உருவங்களாக தோன்றும் ஒரு காட்சி குறைபாடு ஆகும். இது இரண்டு வகையாகும். அதில் ஒன்றுதான் ஒரு கண்ணில் மட்டும் ஏற்படும் இரட்டை பார்வை குறைபாடு ஆகும்] 4] நீரிழிவுசார் விழித்திரைக் கோளாறு [diabetic retinopathy] -- மங்கலான பார்வை, வீரியமான ஒளிபுகாநிலைகள் [கண் மிதவைகள் / floaters], காட்சி புலம் இழப்பு அல்லது குறைபாடு [உங்கள் காட்சி புலத்தில், ஒரு பகுதியை இழத்தல், உதாரணமாக பக்கப்பார்வையிழப்பு / Visual field loss is when you have lost an area of vision in your visual field], மோசமான இரவு பார்வை. [உங்கள் கண்களில் மிகவும் சிறிய புள்ளி போன்ற மிதவைகள் (Floaters), கண்களுக்குள் உள்ள பகுதிகளில் மிதந்து கொண்டிருக்கும். சில மிதவைகள் உங்கள் பார்வையில் நிழல்களாகத் தோன்றலாம். இவை உங்கள் கண்களில் உள்ள திரவத்தில் இருப்பதால் நீங்கள் நகரும் போது இவையும் நகரும். இதனால் உங்கள் பார்வை பாதிக்கப்படும். இவை வயது தொடர்பான மாற்றங்களால் ஏற்படலாம். கண்களில் சேரும் தூசிகள், மற்றும் கண்ணில் உள்ள திரவங்களும் இதற்கு காரணம். இவை கண்களில் காயம் மற்றும் கண் கட்டிகள் ஏற்படும் போதும் உண்டாகலாம்] கண் தனக்கு வேண்டிய பிராணவாயுவை [ஆக்ஸிஜன் / oxygen] கண்ணில் உள்ள நீர் கலந்த திரவத்தின் [aqueous] மூலம் பெறுகிறது. மேலும் கண்ணின் கருவிழிக்கும், வில்லைக்கும் மற்றும் விழித்திரைப்படலத்துக்கும் [கதிராளி; கருவிழித்திரை] உணவூட்டுதல், [கார்னியா, லென்ஸ் மற்றும் ஐரிஸ்], வில்லையினால் வெளியேற்றப்படும் கழிவுப்பொருட்களை அகற்றுதல், உள்விழி அழுத்தத்தை [intraocular pressure] கட்டுப்படுத்துதல் அல்லது சீர்செயிதல், நோய் எதிர்ப்பாற்றல் வழங்குதல் மற்றும் கண்ணின் வடிவத்தை பராமரித்தல் போன்றவை இவைகளின் வேலைகளாகும். ஒரு ஆச்சிரியம் என்னவென்றால், மூளையில் இருக்கும் பகுதிகளில் கண் ஒன்றே, நேரடியாக பார்க்கக் கூடியது. உதாரணமாக, கண்களில் சொட்டு மருந்து ஊற்றி, 'டைலடேஷன்' [Dilatation] எனப்படும் விரிவாக்கம் செய்து, ஒரு கண்அகநோக்கி [ஆப்தல்மஸ்கோப் / ophthalmoscope] மூலம் நேரடியாக கண்களில் உள்ள நரம்புகளை முழுமையாக கண் மருத்துவரால் பார்க்க முடியும். கண்களில் என்ன கோளாறு இருக்கிறது என்பதை இப்படித்தான் கண் பரிசோதனை செய்து அறிகிறார்கள். நீங்கள் பூமியை எடுத்துக்கொண்டால், அது ஒவ்வொரு மைலுக்கும் எட்டு அங்குலம் வளைகிறது. எனவே உங்கள் கண், தரையில் இருந்து ஐந்து அடி உயரத்தில் இருக்கிறது என்று வைத்தால், நீங்கள் பார்க்க கூடிய ஆக்க கூடுதலான தொலைதூர பூமியின் விளிம்பு மூன்று மைலாகும். எமது கண்ணில் உள்ள வில்லை ஒரு குவி வில்லையாகும் [convex lens]. இது நடுவில் தடிமனாகவும் ஓரங்களில் மெல்லியதாகவும் இருக்கும். மனிதர்கள் பலதரப்பட்ட பொருட்களை, நிறங்களை பார்க்கும் இயல்பு உள்ளவர்கள். கட்புலனாகும் நிறமாலை [visible spectrum] என்பது, மின்காந்த நிறமாலையில் [electromagnetic spectrum] உள்ள மனிதக் கண்ணால் பார்க்கக்கூடிய நிறமாலைப் பகுதியாகும். இந்த அலைநீள எல்லையுள் அடங்கும் மின்காந்தக் கதிர்வீச்சு [Electromagnetic radiation] "கட்புலனாகும் ஒளி" அல்லது வெறுமனே "ஒளி" [visible light or simply light] எனப்படுகின்றது. பொதுவான மனிதக் கண், வளியில் 380 தொடக்கம் 780 நானோமீட்டர் [nanometres / 0.000000001 m] அலைநீளம் கொண்ட கதிர்வீச்சுக்களைப் பார்க்கக் கூடியது. ஆகவே ஒரு பொருளில் இருந்து இந்த அலை நீளத்தில் வெளியிடப்படும் ஒளி, எங்கள் கண்ணில் நுழைந்து, கண் வில்லையினூடாக கடந்து, எங்கள் கண்களுக்கு உள்ளே உள்ள விழித்திரையில் விழும் பொழுது, நாம் பொருட்களை காண்கிறோம் எனலாம். ஆகவே விழித்திரையில் பொருட்களின் விம்பம் முதலில் சரியாக விழவேண்டும். அப்ப தான் பொருட்கள் எமக்கு தெரியும். எனவே தான், கண்ணில் வரும் கிட்டப்பார்வை, தூரப்பார்வை போன்ற குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கு நாம் பொதுவாக கண்ணாடி அணிகிறோம். உதாரணமாக, கிட்டப் பார்வை எனும் பார்வை குறைபாட்டில் அருகில் உள்ள பொருட்கள் தெளிவாகத் தெரியும். ஆனால், தூரத்தில் உள்ள பொருட்கள் மங்கலாகத் தெரியும். இந்தக் குறைபாடு உள்ள கண்களில் ஒளியானது விழித்திரைக்கு முன்னதாகவே குவியும். நடுவில் மெல்லியதாகவும் ஓரங்களில் தடிமனாகவும் உள்ள குழி வில்லை (கான்கேவ் லென்ஸை / concave lens) இதற்கு பயன்படுத்தப் படுகிறது. அதே போல, தூரப் பார்வை எனும் குறைபாட்டில், விழித்திரையைத் தாண்டி அதன் பின்னால் குவியும். இதற்கு நடுவில் தடிமனாகவும் ஓரங்களில் மெல்லியதாகவும் உள்ள குவி வில்லை (கான்வெக்ஸ் லென்ஸ் / convex lens) அணிய வேண்டும். மனிதன் பெறத்தக்க அறிவுகளுள் ஒன்று கண்ணின் வழியாகப் பெறப்படும் பார்வைப் புலனாகும். இதை தொல்காப்பியர், தனது நூற்பாவில், “ஒன்று அறிவதுவே உற்று அறிவதுவே இரண்டு அறிவதுவே அதனொடு நாவே மூன்று அறிவதுவே அவற்றொடு மூக்கே நான்கு அறிவதுவே அவற்றொடு கண்ணே ஐந்து அறிவதுவே அவற்றொடு செவியே ஆறு அறிவதுவே அவற்றொடு மனனே நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத்தினரே” என்று 'நான்கு அறிவதுவே அவற்றொடு கண்ணே' என குறிப்பிடுகின்றார். அதே போல, மனித அறிவோடு, கண் நெருங்கிய தொடர்புடையது என்பதை திருவள்ளுவர், கற்றோர் கண்ணுடைய ரென்று சொல்லப்படுவர்: கல்லாதார் முகத்தின்கண்ணே இரண்டு புண்ணுடைய ரென்று சொல்லப்படுவர் என “கண்ணுடையர் என்பர் கற்றோர் முகத்திரண்டு புண்ணுடையர் கல்லா தவர்” (திருக்குறள் – 393) என்று கூறியிருப்பதன் மூலம் நன்குணர முடிகிறது. உறுப்புகளில் முதலிடம் பெறுகின்ற கண்ணை, ஒருவர் தாம் மிக அதிகமாக நேசிக்கும் காதலருக்கும், அவர் வழியாக ஈன்றெடுக்கும் குழந்தைகட்கும் நிகராகக் கருதத் தொடங்கினர். எனவே தான் காதலரை அன்பொழுக அழைக்கின்ற போதும், குழந்தையை அன்போடு விளிக்கும் போதும், “கண்ணே” என்றழைக்கும் மரபு உண்டாயிற்று. உதாரணமாக, சிலப்பதிகாரத்தில் மாதவி, கோவலனை “கண்மணி அனையான்” எனக் குறிப்பிட்டிருப்பது கருதத்தக்கது. “வருந்துயர் நீக்கு எனமலர்க்கையின் எழுதி கண்மணி யனையாற்குக் காட்டுக என்றே மண்உடை முடங்கல் மாதவி யீந்ததும்” (சிலம்பு – புறஞ்சோர் இறுத்தகாதை 74-76) அதேபோல, தாலாட்டு பாடல் ஒன்று கண்ணான கண்ணே கண்ணுறங்கு – என் கானகத்து வண்டுறங்கு” என கூறுகிறது. இப்படி பெருமை பெற்ற கண்ணை, அறிவின் நுழைவாயில் என்று கூறுவது மிகவும் பொருத்தமானது என்று எண்ணுகிறேன். ஆகவே, உடல் உறுப்புகளில், அறிவின் திறவுகோலாக விளங்குவது கண்கள் ஆகையால், அதை முழுமையாக அறிந்து பாது காப்பது மிக மிக அவசியம். [மூலம்: ஆங்கிலத்தில் என் அண்ணா, கலாநிதி கந்தையா சுந்தரலிங்கம் மொழிபெயர்ப்பு: கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
  8. "மதமென்னும் போதை!!" "மதமென்னும் போதை தலைக்கு ஏற மதிகெட்டு நிலை மாறிய போர்த்துக்கேயர் மக்களை கூட்டி பதவிகள் கொடுத்து மரணத்தை காட்டி ஆசைகள் சொல்லி மதம் மாற்றிய யாழ்ப்பாண வரலாறு மனிதா நான் உனக்கு சொல்லவா ?" "எம் மதமும் சம்மதம் என்றாய் எல்லா ஊரும் எம் ஊரென்றாய் எலும்புத் துண்டுக்கும் எச்சில் சோறுக்கும் எம் பண்பாட்டை ஏன்தான் விற்றாய் எருமைமாடாய் குளிர்காய சோம்பேறி பிடித்ததோ?" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
  9. அக்பரில் தானே சாப்பிட்டு இருப்பீர்கள் ,,,, ஆமாம் இறுதி ஆண்டு அங்குதான். அந்தநேரம் என் உடம்பை பார்த்தால் தெரியும். அப்பொழுது எடுத்த ஓர் சில படங்கள் கீழே [checked shirt நான்] "தேடிய இன்பம், ஆடிய நையாண்டி மடியில் கொட்டுது, ஆயிரம் பாடல்கள் வாடிய இதயம், பூக்குது மீண்டும் கூடிய எம்மிடம், குதித்து துள்ளுது" "ஆண்டு ஒன்று அஞ்சி கழிந்தது ஆண்டு இரண்டு நிமிர்த்தி சென்றது ஆண்டு மூன்று துணிந்து நின்றது ஆண்டு நான்கு அறிவால் மலர்ந்தது" "நிறைந்த படிப்பு, இடையில் காதல் குறைந்த கூத்து, மத்தியில் தேர்வு உறைந்தது நெஞ்சம், முடிவு கண்டு திரையும் வீழ்ந்தது, சிமிட்டில் பறந்தது" "நினைவுகளை விட்டு, மறைந்தது பல்கலைக்கழகம் சுனைகளாய் நெஞ்சில், நல்லவை நின்றன நனைக்கவில்லை எம்மை, பாரபட்சமும் இனவெறியும் இணைந்த கைகளாய், நம்மையும் உலகத்தையும் அறிந்தோம்"
  10. "பேரனின் அகவை நாள் இன்று [18/07/2024]" "திரேனின் [Dhiren] பிறந்த நாள் இன்று திரு விழாவா பெரு விழாவாவென திகைத்து இவன் வியந்து பார்க்க திரேனின் [Dhiren] பிறந்த நாள் இன்று !" "தில்லைக் கூத்தனின் பேரன் இவன் திசைமுகனை குட்டிய முருகன் இவன் திருந்தலரை கலக்கும் வீரன் இவன் திருமகள் அருள்பெற்ற குழந்தை இவன் !" "தித்திக்கும் இனிப்புகள் ஒரு பக்கம் தீஞ்சுவை பலகாரம் மறு பக்கம் திசை நான்கும் பேரிசை முழங்க திரேனின் [Dhiren] பிறந்த நாள் இன்று !" "திங்கள் மறைந்து ஞாயிறு மலர திலகம் இட்டு மங்கையர் வாழ்த்த திருநாள் இது இவனின் பொன்நாள் திரேனின் [Dhiren] பிறந்த நாள் இன்று !" "தின் பண்டம் வந்தோரை மகிழ்விக்க திறமையான அலங்காரம் காற்றில் ஆட திருப்தி கொண்டு இவனும் மகிழ திரேனின் [Dhiren] பிறந்த நாள் இன்று !" "திங்கட்குடையோன் இவனோ என மயங்க தினகரனும் முகிலில் மறைந்து நிழல்தர தீந்தமிழில் வாழ்த்துக்கள் எங்கும் ஒலிக்க திரேனின் [Dhiren] பிறந்த நாள் இன்று !" "அச்சம் தவிர்த்து துணிந்து நின்று அழகு வார்த்தைகள் நாவில் தவழ அன்பு ஒன்றால் உலகை ஆள அறிவு பெற்று உயர்ந்து எழுகவே!" "ஆராய்ந்து உண்மை கண்டு விளங்கி ஆக்கமான செயலில் ஈடு பட்டு ஆலமரம் போல் நிழல் கொடுத்து ஆனந்தமாக வாழ தாத்தாவின் ஆசிகள்!" "ஆகாயத்தில் அம்மம்மாவின் வாழ்த்து கேட்குது ஆகாரம் பலபல சுவையில் இருக்குது ஆசி பெற்று அறிஞனாய் வளர்ந்து ஆதிரனாக என்றும் ஒளிர வேண்டும்! "இளமை கல்வி மனதில் நிற்கும் இனிதாய் உணர்ந்தால் அறிவு சிறக்கும் இணக்கம் கொண்ட கொள்கை எடுத்து இதயம் சேர வாழ வேண்டும்!" "ஈன்ற பெற்றோரை நன்கு மதித்து ஈரக் கண்ணீர் சிந்த விடாதே ஈவு இரக்கம் காட்ட வேண்டும் ஈனப் புத்தி என்றும் வேண்டாம்!" "உலகம் போற்றும் வாழ்வு எட்ட உள்ளம் வைத்து ஆற்ற வேண்டும் உரிமை உள்ள ஒரு மனிதனாக உயர்ந்து நின்று வாழ வேண்டும்!" "ஊக்கம் வேண்டும் பற்று வேண்டும் ஊரார் எண்ணம் அறிய வேண்டும் ஊமையாய் என்றும் காலத்தை கழிக்காமல் ஊன்றுகோலாய் அறிவைப் பயன்படுத்த வேண்டும் !" "ஒன்பதுஆண்டு மகிழ்ச்சியின் மகுடம் இன்று ஆச்சரியமானவரே பாலகனே கனவுகள் சிறகடிக்கட்டும்! உயர்ந்து வாழ்வதைப்பார்க்க அம்மம்மா இல்லையென்றாலும் அவளுடையகருணை உனக்கு என்றும் பாதுகாப்புகவசமே!" "காற்றின் கிசுகிசுக்களில் அம்மம்மாவின் குரல் உன்னை வழிநடத்தும் கலங்கரை விளக்கமே! விண்மீன்கள் சிமிட்டும் அம்மம்மாவின் ஆசீர்வாதம் இரவும் பகலும் உன்னை அடையுமே!" "பொன்னான இந்நாளில் வானிலிருந்து ஒருவாழ்த்து அன்பான அம்மம்மாவின் கருணை மழையே! பட்டாம்பூச்சி பறப்பதைப்போன்ற இலகுவான இதயமே காலைக்கதிரவனாய் உந்தன் நாள் பிரகாசிக்கட்டுமே!" "குட்ட குட்ட குனியக் கூடாது குடை பிடித்து வாழக் கூடாது குறை இல்லாத வாழ்வு இல்லை குரோதம் வேண்டாம் அமைதி ஓங்கட்டும்!" "பதினெட்டு ஏழில் பிறந்த அழகனே பகலோன் போல உலகில் பிரகாசித்து பகைவர்கள் அற்று கவலைகள் அற்று பல்லாண்டு நீ வாழ வாழ்த்துகிறேன்!" "ஒழுக்கம் கொண்ட அழகுப் பேரனே ஒன்பது அகவை இன்று உனக்கு ஒல்லாரையும் மதித்து நடக்கும் பேரனே ஒற்றுமை கொண்ட பண்பாடு மலரட்டும்!" தாத்தா [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]
  11. கி மு 1750 ஆண்டை சேர்ந்தது என கருதப்படும், இரண்டாவது யேல் சமையல் பலகையில் [YBC 8958], ஒரு சின்ன பறவை ஒன்றில் சமைத்த உணவு பற்றி பதிவிட்டுள்ளது "தலையையும் பாதத்தையும் அகற்று, உடலை விரித்து பறவையை கழுவு, பின் இரைப்பை, இதயம், கல்லீரல், நுரையீரல் போன்றவற்றை பிடுங்கி ஒதுக்கி வை, பின் இரைப் பையை பிரித்து துப்பரவு செய்,அடுத்து, அந்த பறவையின் உடலை அலசி [கழுவி] அதை தட்டையாக கிடத்து, ஒரு சட்டி எடுத்து அதற்குள் பறவையின் உடலையும் இறப்பையையும் மற்றும் இதயம், கல்லீரல், நுரையீரலையும் போட்டு பின் அடுப்பில் வைக்கவும்" இப்படி போகிறது. அதன் பின், "முதலாவது கொதித்தலின் அல்லது கொழுப்பில் பழுப்பாய் வறுத்த பின், மீண்டும் சட்டியை நெருப்பில் வை, புதிய தண்ணீரால் சட்டியை கழுவு, பாலை நன்றாய் அடிச்சு சட்டியில் விட்டு பறவையுடன் நெருப்பில் வை, பின் சட்டியை எடுத்து வடி, சாப்பிட முடியாத பறவையின் பகுதிகளை வெட்டி ஏறி, மற்றவைக்கு உப்பு சேர், அவையை சட்டியில் பாலுடனும் கொஞ்ச கொளுப்புடனும் இடு, மேலும் இதனுடன் சில ஏற்கனவே கழுவி உரித்து வைக்கப்பட்ட அரூத அல்லது அருவதா என்ற மூலிகையை சேர், அந்த கலவை கொதிக்கத் தொடங்கியதும், அதனுடன் துண்டு துண்டாக வெட்டப்பட்ட அல்லது நறுக்கிய லீக்ஸ், மற்றும் உள்ளி, சமிடு [ரவை?], போதுமான வெங்காயம் சேர்த்து கொள்," என்று சமையயலை முடிகிறது. அப்படி என்றால், இப்ப 4000, ஆண்டுகளுக்கு பின்பும் எதற்கு குழப்பம் ? "கோழிக் குழம்பு தான் என்று கரண்டியை விட்டு விட்டு எடுத்தனர். எதுவுமே கரண்டியில் வரவில்லை. சில இலைகள் மட்டுமே கரண்டியில் வந்து கொண்டிருந்தது. .... ???" ஒருவேளை "பின் சட்டியை எடுத்து வடி, சாப்பிட முடியாத பறவையின் பகுதிகளை வெட்டி ஏறி, மற்றவைக்கு உப்பு சேர், அவையை சட்டியில் பாலுடனும் .... " அப்படி என்றால் கோழியின் [பறவையின்] சாப்பிட முடியாத பகுதி போக , ஒன்றும் மிஞ்சவில்லை போலும் ?? பாவம் "மாறி சுமேரியன் சமையல் பலகையை பார்த்துவிட்டார் போலும்" "என்ன குழம்பு என்று கேட்டனர். கோவாக் குழம்பு என்று பதில் வந்தது. ... " ஆமாம் வேறு என்ன பதில் சொல்ல முடியும் ?? மன்னித்து விடுங்கள் !!
  12. முதியோருடன் ஒரு அலசல்: "மனித பார்வை [Human vision]" / பகுதி 01 உலக சுகாதார நிறுவனம் (World Health Organization), கண் பார்வையின்மை மற்றும் பார்வைக்குறைபாடு பற்றி உலக அளவில் கவனத்தை ஈர்ப்பதற்காகவும் பார்வையிழப்பு பற்றிய விழிப்புணர்வினை மேம்படுத்துவதற்காகவும் ஒவ்வொரு வருடமும் அக்டோபர் [October] மாதம் இரண்டாவது வியாழக்கிழமை வரும் தேதியை உலக கண் பார்வை தினமாக அறிவித்து, கண் நலம் பற்றிய செய்திகளை பரப்புகிறது. எனவே நாமும் ஒரு விழிப்புணர்வினை ஏற்படுத்த மனித பார்வையை பற்றிய இந்த கட்டுரையை மிகவும் இலகுவாக சாதாரண மக்களுக்கும் மற்றும் முதியோருக்கும் புரியக் கூடியதாக இருக்க வேண்டும் என்ற ஒரு நோக்கில் எழுதி சமர்ப்பிக்கிறோம். "பறவையை கண்டான் விமானம் படைத்தான் பாயும் மீன்களில் படகினை கண்டான் எதிரொலி கேட்டான் வானொலி படைத்தான்" என்கிறார் கவியரசு கண்ணதாசன். வானில் சிறகடிக்கும் பறவையை போல தானும் பறக்க வேண்டும் என்ற அவாவால், பல முயற்சிகளை மேற்கொண்டு, படிப்படியாக விமானம் உருப்பெற்றது என்பது வரலாறு. அது போலவே, மனிதன், எப்படி எம் கண் தொழிற்படுகிறது என கண்டு, அதை மையமாக வைத்து, எல்லா வகையான நிழற்படக் கருவி [கேமரா] மற்றும் அது போன்ற பல சாதனங்களை படைத்தான். கண் உண்மையில் மிகவும் உணர்திறன் கொண்ட மற்றும் மென்மையான உறுப்பு [most sensitive and delicate organ] ஆகும். இது உலகத்தை காணவும் மற்றும் எமது மூளை பெரும் செய்திகளில், கிட்ட தட்ட 4/5 பகுதிகளுக்கு பொறுப்பாக உள்ளது. அதனால் தான் மற்ற புலன்களிலும் விட, இது முதன்மை பெறுகிறது எனலாம். உதாரணமாக இருட்டில் இருந்து கொண்டு ஒரு பூட்டை திறந்து பாருங்கள். அப்போது தெரியும் பார்வையின் அவசியம். எனவே ஐந்து புலன்களிலும் பார்வை மிக முக்கியமான ஒன்றாகும். ஆகவே பார்வை எப்படி தொழிற்படுகிறது என சுருக்கமாக கூறின் - 'நாம் பார்ப்பது நம் கண்களின் வழியே ஒரு செய்தியாக நமது மூளைக்குச் செல்லுகிறது. அங்கு அந்த செய்தி மூளையினால் – நீள, அகலங்கள், குறுக்கு, நெடுக்குத் தோற்றங்கள், வண்ணங்கள் என்று எல்லாம் – அலசப்பட்டு நாம் பார்க்கும் பொருளை நம்மால் அறியமுடிகிறது எனலாம். நாம் இதுவரை கூறியதில் இருந்து, பார்வை என்ற புலன் உணர்ச்சி கண்ணின் வழியாக உண்டாகக் காரணி ஒளி ஆகும். ஆகவே ஒளியின் தன்மைகள், பண்புகள், போன்றவற்றை சுருக்கமாக பார்ப்போம். ஒளி ஒரு வெற்றிடத்தினூடாகவும் அல்லது வேறொரு ஓர் ஒளிபுகும் ஊடகத்தில் இருந்து இன்னொரு ஓர் ஒளிபுகும் ஊடகத்தினுள் பயணிக்கக் கூடியது. அதனால் தான் நாம் சந்திரன், சூரியன் மற்றும் விண்மீன்களை பார்க்கக் கூடியதாக உள்ளது. இது ஒரு மின்காந்த அலையாகும். ஒரு வெற்றிடத்தில் 300,000 கிமீ / வி [299 792 458 m / s] வேகத்தில் நகரக்கூடியது. இதுவே, எதாவது ஒன்று நகரக் கூடிய மிக அதிக வேகமாகும். அணு மற்றும் மூலக்கூறுகளை ஒரு குறிப்பிட்ட வெப்ப நிலைக்கு சூடேற்றும் பொழுது ஒளி சக்தியை வெளியிடக்கூடியவை. உண்மையில் ஒளியை நாம் காண முடியாது, ஆனால் அதன் தொடர்பு அல்லது எதிர் விளைவுகளை மட்டுமே உணர முடியும். பிரபஞ்சத்தின் படைப்பில் மனிதனுக்கு அழகு சேர்ப்பது, குறிப்பாக முகத்திலேயே அழகான பகுதி, எதுவென்றால் கண்கள் என்றுதான் அனைவரும் கூறுவோம். அதுவும் அடர்த்தியான‌ கண் இமை ரோமங்கள் மற்றும் புருவங்களுடன் பெரிய கண்களாக இருந்தால் அழகு மேலும் அதிகரிக்கும். உணர்வு உறுப்பைச் சார்ந்த கண்கள் நமது உடலின் கண்ணாடி ஆகும். நிழற்படக்கருவியிலுள்ள பிம்பத்தேக்கியைப் (film) போன்று இயங்கும், விழித்திரை (ஒளிமின் மாற்றி / retina), கண்ணின் பின்புறத்தில் உள்ளது. நம் கண்களின் இந்த பகுதியில் மில்லியன் கணக்கான செல்கள் உள்ளன [கம்பு செல்கள் (ROD CELLS) & கூம்பு செல்கள் (CONE CELLS)], அவை ஒளி உணர்திறன் கொண்டவை மற்றும் அவை நரம்பு தூண்டுதலின் வடிவத்தில் ஒளி தகவல்களை மாற்றும் திறன் கொண்டவை, இதனால் இவை மூளைக்கு பரவும்போது, நாம் எதையாவது பார்க்கிறோம் என்பதை புரிந்து கொள்கிறோம். இங்கு நாம் ஒளியின் எதிர்விளைவுளின் நன்மையை காண்கிறோம். நாம், நம்மை சுற்றி உள்ள பொருட்களை எம் கண்ணால் பார்க்கிறோம். எனினும், ஒரு இருண்ட அறையில் எதையும் நாம் பார்க்க முடிவதில்லை. ஏனென்றால், நாம் பார்க்க இருக்கும் பொருளில் இருந்து ஒளி கட்டாயம் எம் கண்ணுக்கு வரவேண்டும். அப்பதான் அதை பார்க்க முடியும். மேலும் மொத்த அல்லது முழுமையான பிரதிபலிப்பு அல்லது எதிரொளிப்பு [Total or complete reflection], நாம் பார்க்க வேண்டிய பொருளை காட்டாது. காரணம் வெவ்வேறு [ஒளிவிலகல் குறிப்பெண்கள் -Refractive indexes - கொண்ட] ஊடகங்களின் குறுக்கே ஒளி செல்லும் பொழுது, ஒரு குறிப்பிட்ட எல்லைக் கோணத்தை விடப் பெரிய கோணத்தில், அது மற்ற ஊடகத்திற்குள் புக எத்தனிக்கும் பொழுது, அது கடந்து செல்ல முடியாத ஒரு நிலைக்கு வந்து, அது முற்றிலும் பிரதிபலிக்கிறது அல்லது திரும்பி தன் முதல் ஊடகத்திற்குள்ளேயே போகிறது. ஆகவே அதை நாம் பார்க்க இயலாமல் போகிறது. மனித கண்கள் மூன்று அடிப்படை நிறங்களை உணரக் கூடியனவாக இருக்கின்றன. அவை சிவப்பு, பச்சை, நீலம் ஆகும். ஆகவே கண்ணுக்குப் புலப்படும் நிறமாலையிலுள்ள நிறங்கள் சிவப்பு, செம்மஞ்சள், மஞ்சள், பச்சை, நீலம் , கரு நீலம், உதா [Red, orange, yellow, green, blue, indigo and violet] ஆகும். சாதாரண மனிதனின் கண், ஒரு பொருளை பார்க்கும் பொழுது, அது கீழே கொடுக்கப்பட்ட ஒரு வரிசையில் தொழிற்படுகிறது 1] நாங்கள் பார்க்கும் பொருள் ஒளியை பிரதிபலிக்கிறது. 2] கண்ணின் முன் பகுதியில் உள்ள கருவிழிப்படலம் [கார்னியா / கருவிழி / cornea] ஊடாக ஒளி கண்ணுக்குள் நுழைகிறது. 3] ஒளி கண்ணின் நீர்மயவுடநீர் [aqueous humour] ஊடாக சென்று, கண் பாவைக்குள் [Pupil] நுழைந்து கண்ணின் வில்லையை [lens] அடைகிறது. [கண்ணின் முன்புற உள் பகுதியில், கருவிழி மற்றும் கண் வில்லைக்கு இடையில் அமைந்துள்ள பெட்டியில் அடைக்கப்பட்டுள்ள திரவத்தை நீர்மயவுடநீர் [நீர் நகைச்சுவை / aqueous humour] என்பர். இது ஒரு திரவ பிளாஸ்மாவின் [a transparent water-like fluid similar to plasma] வகையாகும். இது விழி முன்னறை மற்றும் விழி பின்னறை என இரு பகுதிகளைக் கொண்டுள்ளது] 4] கண் வில்லை [Lens / a transparent biconvex structure in the eye] இருபுற குவி அமைப்பை கொண்டது. தொலைவு மற்றும் அண்மை ஒளி மூலத்திலிருந்து வரும் ஒளி கற்றையை, கண்ணின் பின் உள்ள விழித்திரையில் [(Retina] விழச் செய்ய தானியங்கியாக கண் வில்லை தன் குவி அமைப்பை மாற்றிக்கொள்ளும் தன்மை கொண்டது. 5] கண்ணாடியுடனீர் [ vitreous body, It is often referred to as the vitreous humour or simply "the vitreous"] என்பது கண்ணின் பாவைக்கும் விழித்திரைக்கும் இடையே உள்ள பகுதியில் நிறைந்த தெளிவான திரவம் ஆகும். இது நிறமற்ற, ஒளி ஊடுருவக்கூடிய ஜெலட்டின் திரவம். இது அளவு மொத்த கண்ணின் அளவில் ஐந்தில் நான்கு பங்கு அளவு கொண்டதாகும். இது விழிக்கோளம் அல்லது கண் விழியின் [eyeball] சுற்று வடிவத்தை [round shape] பராமரிக்கிறது 6] ஒளி அதன் பின், கண்ணின் பின்புறத்தை அடைந்து, விழித்திரை [retina] தாக்குகிறது. விழித்திரை என்பது நமது கண்ணில் உட்கடைசி உறையாகும். இது மைய நரம்பு மண்டலத்தின் ஒரு பகுதியாகும். கருவிழிப்படலம், திரவம், வில்லை, கூழ்ம திரவம் வழியாக வரும் ஒளியானது இதில் படுகிறது. இந்த ஒளி சில மின்வேதி மாற்றங்களை உண்டு செய்து மூளைக்குத் தகவல்களை அனுப்புகிறது. 7] இறுதியாக, மூளையின் பெருமூளைப் புறணியில் [cerebral cortex] உள்ள பார்வைப் புறணி (காட்சி புறணி / visual cortex), விழித்திரையினால் அனுப்பப்பட்ட துாண்டுதல்களின் [impulses] உட்பொருளை அறிந்து, அதை எமக்கு வெளிப்படுத்துகிறது அல்லது அந்த குறிப்பிட்ட விம்பத்தை உருவாக்கி, நாம் பார்க்கத் தருகிறது. [படம், நானும் அண்ணாவும், அண்ணாவை பார்க்க அவரின் நாட்டுக்கு சென்றபொழுது] [மூலம்: ஆங்கிலத்தில் என் அண்ணா, கலாநிதி கந்தையா சுந்தரலிங்கம் மொழிபெயர்ப்பு: கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] பகுதி 02 தொடரும்
  13. "FOOD HABITS OF TAMILS" PART / பகுதி: 25 "பண்டைய சங்க தமிழரின் உணவு பழக்கங்கள் தொடர்கிறது" / "Food Habits of Ancient Sangam Tamils continuing" பேரியாழ் வாசிக்கும் பாணனொருவன் வறுமையால் வாடும் இன்னொரு பாணனைத் தொண்டைமான் இளந்திரையன் என்னும் மன்னனிடம் ஆற்றுப் படுத்துவதாக அமைந்த, பழைமை வாய்ந்த பெரும்பாணாற்றுப்படையில் மேலும், கரும்பினைப் பிழிவதற்கு எந்திரத்தைப் பயன் படுத்தியுள்ளனர் என்ற தொழில் நுட்பத்திறனும் கூட புலனாகின்றன. நீ மேலும் நெல்மணி விளையும் கழனிகளை அடுத்து கரும்புத் தோட்டங்கள் வழியே செல்வாயானால், அங்கு யானை பிளிறுவது போல் கரும்பை நெரிக்கும் எந்திரத்தின் ஓசை கேட்கும். அங்கே கரும்புப் பாலை கட்டியாகக் காய்ச்சுவார்கள். ஆகவே நீ அவ்விடம் சென்று கரும்புப் சாறு பருகலாம் என்று அறிவுறுத்துகிறார்.[எந்திரம் சிலைக்கும் துஞ்சாக் கம்பலை, விசயம் அடூஉம் புகை சூழ் ஆலை தொறும், கரும்பின் தீம்சாறு விரும்பினிர் மிசைமின், 260-262] மூங்கிலைப் பரப்பி அதன் மேல் வெண்மையான கிளைகளை வைத்து, தாழை நாரினைக் கொண்டு கட்டி, அதன்மேல் தருப்பைப் புல்லை வைத்து வேய்ந்த குடிசைகளில் வாழும் நெய்தல் நில மீனவர், தாமே குற்றாத அரிசியில், பெரிய வாய் அகன்ற பாத்திரத்தில் தயாரித்த மதுவையும், சுட்ட மீனையும் பாணனே உனக்கு அமுதாக படைப்பர், நீயதை உண்ணலாம் என்று கூறுகிறார். அது மட்டும் அல்ல, அவர்களின் வீட்டு வாசலிலே பறி எனும் மீன் பிடிக்கருவிகள் எப்போதும் கிடக்குமாம் என்று அடையாளமும் காட்டுகிறார். [வல்வாய்ச் சாடியின் வழைச்சுஅற விளைந்த, வெந்நீர் அரியல் விரல் அலை நறும்பிழி, தண் மீன் சூட்டொடு தளர்தலும் பெறுகுவிர், 279-281]. தொல்காப்பியர் வாகைத் திணையில் “அறு வகைப்பட்ட பார்ப்பனப் பக்கமும்“ எனக் குறிப்பிட்ட பார்ப்பார்கள் இருக்கைக்கு சூரியன் மறையும் தருவாயில் நீ போகும் போது, நறிய நெற்றியினையும், வளையலை அணிந்த கையினையும் உடைய பார்ப்பனி, இராஜான்னம் என்ற பறவைப் பெயர் பெற்ற உயர்ந்த நெற்சோற்றையும், மாதுளம் பிஞ்சைப் பிளந்து, மிளகுப் பொடியும், கறிவேப்பிலையையும் கலந்து பசும் வெண்ணெயிலே வேகவைத்து எடுத்த பொரியலையும் வடுமாங்காயினையும், தம்மை நாடிவந்த உனக்கு கொடுத்து உபசரிப்பர் என்கிறார். [வயின்அறிந்து அட்ட, சுடர்க்கடை பறவைப் பெயர்ப்படு வத்தம், சேதா நறுமோர் வெண்ணெயின் மாதுளத்து, உருப்புற பசுங்காய்ப் போழொடு கறி கலந்து, கஞ்சக நறுமுறி அளைஇ பைந்துணர், நெடுமரக் கொக்கின் நறுவடி விதிர்த்த, தகைமாண் காடியின் வகைபடப் பெறு குவிர், 304-310]. பல அடுக்கு மாளிகைகளைக் கொண்ட செலவ மிக்க கடற் கரை பட்டணத்தே நீ இளைப்பாறும் போது, குறுகிய காலையுடைய ஆண் பன்றியின் இறைச்சியோடு களிப்புமிக்க கள்ளையும் பெறுவீர் என்கிறார். [குறுந்தாள் ஏற்றைக்,கொழு நிணத் தடியொடு கூர்நறாப் பெறுகுவீர், 344-345]. கலங்கரை விளக்குப் பகுதியைத் தாண்டிச் சென்றால் உழவர்களின் தனி மனைகளை நீ அடையலாம். அந்தத் தனிமனை தென்னங் கீற்றுகளால் வேயப்பட்டிருக்கும். அங்கு அவர்கள் விருந்தாக உனக்கு பலாச்சுளை, இளநீர், மரத்திலேயே பழுத்த வாழைப்பழம், பனை நுங்கு, முதிர்ந்த சேப்பங் கிழங்கு [Taro root] அவியல் மற்றும் ருசிகரமான இனிய இனிப்பு பண்டங்கள் முதலானவை பெறுவாய் என்கிறது. [தண்டலை உழவர் தனி மனைச் சேப்பின், தாழ்கோட் பலவின் சூழ் சுளைப் பெரும்பழம், வீழ் இல் தாழைக் குழவித் தீம்நீர், கவை முலை இரும்பிடிக் கவுள் மருப்பு ஏய்க்கும், குலை முதிர் வாழைக் கூனி வெண்பழம், திரள் அரைப் பெண்ணை நுங்கொடு பிறவும், 355-360]. இறுதியாக நீ அரண்மனையை அடையும் போது, அரசன் தொண்டைமான் இளந்திரையன், உனது கிழிந்துள்ள ஆடைகளை நீக்கி விட்டு, புத்தாடைகளை உடுத்திக் கொள்ளச் செய்வான். சமையல் தொழிலில் வல்லவர்களால் செந்நெல் அரிசியொடு பலவகையான புலால் துண்டுகளைச் சேர்த்துச் சமைத்த உணவை தருவான். மேலும் நல்ல மணமும், இனிய சுவையும் கொண்ட அமுதத்தை ஒத்த சிற்றுண்டிகளோடு பிறவும் விண்மீன்போன்ற வெள்ளிக் கலங்களில் பரப்பி தானே எதிர்நின்று உபசரித்து உம்மை உண்ணச் செய்வான் என்கிறார். [நின் அரைப்,பாசி அன்ன சிதர்வை நீக்கி, ஆவி அன்ன அவிர்நூற் கலிங்கம், இரும்பேர் ஒக்கலொடு ஒருங்கு உடன் உடீஇ, கொடுவாள் கதுவிய வடுஆழ் நோன்கை, வல்லோன் அட்ட பல் ஊன் கொழு ங்குறை, அரிசெத்து உணங்கிய பெருஞ்செந் நெல்லின், தெரிகொள் அரிசித் திரள்நெடும் புழுக்கல், அருங்கடித் தீம்சுவை அமுதொடு பிறவும், 468-475]. 500 அடிகளைக் கொண்டு அமைந்த சிறப்புமிக்க இந்த பெரும்பாணாற்றுப்படையில் மேலும், மதுவின் செய் முறை விளக்கப் பட்டு இருப்பதுடன் [275-281], பட்டிணப்பாலையில் [106 -110], கணவரோடு கூடி இன்புற்ற இள மகளிர் மதுவை அருந்தி மயக்கத்தில் கொண்டாடியதையும் நாம் காணலாம். "அவையா அரிசி அம்களித் துழவை மலர்வாய்ப் பிழாவில் புலர ஆற்றி பாம்பு உறை புற்றின் குறும்பி ஏய்க்கும் பூம்புற நல்அடை அளைஇ தேம்பட எல்லையும் இரவும் இருமுறை கழிப்பி வல்வாய்ச் சாடியின் வழைச்சு அற விளைந்த வெம்நீர் அரியல் விரல் அலை நறும்பிழி" பெரும்பாணாற்றுப்படை (275-281) அதாவது, குற்றாத தவிடெடுபடாத அரிசியைக் அழகினையுடைய களியாகத் துழாவிக் சமைத்த கூழை, வாயகன்ற தாம்பாளத்தில் [தட்டில்] உலர வைப்பார். நல்ல நெல் முனையை இடித்து அக் கூழிற் கலப்பர். அக் கலவையை இனிமை பிறக்கும் படி இரண்டு பகலும் இரண்டு இரவும் கழித்து வலிய வாயினையுடைய சாடியின் கண்ணேயிட்டு, வெந்நீரின் வேகவைத்து நெய்யரியாலே வடிக்கட்டி, விரலாலே அலைத்துப் பிழியப் பட்ட நல்ல வாசனையுள்ள "கள்" என்கிறது. "துணைப் புணர்ந்த மடமங்கையர் பட்டு நீக்கித் துகில் உடுத்து, மட்டு நீக்கி மது மகிழ்ந்து, மைந்தர் கண்ணி மகளிர் சூடவும், மகளிர் கோதை மைந்தர் மலையவும்" பட்டிணப்பாலை [106-110] அதாவது, தம் கணவரோடு கூடி இன்புற்ற இள மகளிர், தாம் முன்பு அணிந்திருந்தப் பட்டாடைகளைத் தவிர்த்து நூலாடைகளை உடுத்தினர். இன்பத்தின் மயக்கத்தால் தாம் அருந்தும் மயக்கம் தராத கள்ளினைக் [மட்டினைக்] கைவிட்டு மதுவினை குடித்தனர். மதுவுண்ட மயக்கத்தில் கணவர் அணியும் மாலைகளை மகளிர் அணிந்து கொண்டனர். மகளிர் அணியும் கோதையினை (மாலை) ஆடவர் சூடிக் கொண்டனர் என்கிறது. நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] பகுதி : 26 தொடரும் "FOOD HABITS OF TAMILS" PART: 25 "Food Habits of Ancient Sangam Tamils continuing" Though the people of New Guinea were probably the first to domesticate sugarcane, sometime around 8,000 BC. the extraction and purifying technology techniques were developed by Indians. Originally, people chewed sugarcane raw to extract its sweetness, but later they discovered how to crystallize sugar, probably carried out through the simple process of crushing cut-pieces of cane by a heavy weight and boiling the juice extracted and stirring until solids formed. These solids being of uneven shapes and sizes were called jaggery [Sarkara / chakkarai]. Even Perumpanattuppadai describes one of such sugar cane mills found during the Sangam period in Tamil Nadu, in lines 260-262, as "they will also get sugarcane juice, as much as they desire from the noisy sugar cane mills where cane juice was boiled to make jaggery" [எந்திரம் சிலை க்கும் துஞ்சாக் கம்பலை, விசயம் அடூஉம் புகை சூழ் ஆலைதொறும், கரும்பின் தீம்சாறு விரும்பினிர் மிசைமின்]. In the neithal region where fishermen live, they will see short roofed huts covered with thatched tarpai grass. Fish baskets lie in front of the huts and when the bards stay there, fisherwomen will serve them a drink made from a mash of un-pounded boiled rice mixed with fine powdered sprouts of rice, cooled in large wide mouthed pots for two days to sweeten it along with fried fish [வல்வாய்ச் சாடியின் வழை ச்சுஅற விளைந்த, வெந்நீர் அரியல் விரல் அலை நறும்பிழி, தண் மீன் சூட்டொடு தளர்தலும் பெறுகுவிர்]. When they get to the Brahmin settlements at sunset they will get well cooked rice that bears the name of a bird along with fresh pomegranate cooked with butter made from the milk of a red skinned cows, and fresh curry leaves and black pepper. They will also give fragrant pickles made with tender green mangoes [வயின்அறிந்து அட்ட, சுடர்க்கடை பறவைப் பெயர்ப்படு வத்தம், சேதா நறுமோர் வெண்ணெயின் மாதுளத்து, உருப்புற பசுங்காய்ப் போழொடு கறி கலந்து, கஞ்சக நறுமுறி அளைஇ பைந்துணர், நெடுமரக் கொக்கின் நறுவடி விதிர்த்த, தகைமாண் காடியின் வகைபடப் பெறுகுவிர்]. At the seashore town there are many storied mansions where there is abundant food. They will get abundant toddy with fatty meat of the boar with short legs [குறுந்தாள் ஏற்றைக், கொழு நிணத் தடியொடு கூர்நறாப் பெறுகுவீர்]. When they leave these behind and go to the groves where farmers live in huts with roofs made of thatched coconut palm leaves, they will get big jackfruits that grow in clusters and sweet water from young coconuts and alluring plantain fruits. They will also receive young pulpy fruit of the palmyra palms and other dainty sweets to eat [தண்டலை உழவர் தனி மனைச் சேப்பின், தாழ்கோட் பலவின் சூழ் சுளைப் பெரும்பழம், வீழ் இல் தாழைக் குழவித் தீம்நீர், கவை முலை இரு ம்பிடிக் கவுள் மருப்பு ஏய்க்கும், குலை முதிர் வாழைக் கூனி வெண்பழம், திரள் அரைப் பெண்ணை நுங்கொடு பிறவும் ]. And finally when the bards reach the palace of the patron, he will ask them to remove your old clothing and give fine clothing with bright threads and then serve them meat dishes cooked by a talented cook with strong hands. He will also serve large fine red rice and special sweet dishes that are spread in silver bowls [நின் அரைப், பாசி அன்ன சிதர்வை நீக்கி,ஆவி அன்ன அவிர்நூற் கலிங்கம், இரும்பேர் ஒக்கலொடு ஒருங்கு உடன் உடீஇ, கொடுவாள் கதுவிய வடுஆழ் நோன்கை, வல்லோன் அட்ட பல் ஊன் கொழுங்குறை, அரிசெத்து உணங்கிய பெருஞ்செந் நெல்லின், தெரிகொள் அரிசித் திரள்நெடும் புழுக்கல், அருங்கடித் தீம்சுவை அமுதொடு பிறவும்]. Also we found from Perumpanatruppadai [275-81], a recipe for brewing & from Pattinappaalai [106 -110], how young women at nights, enjoy with their husbands at bed, while they drinking toddy. "when you are hungry, you will receive cool fish dishes and fine, fragrant liquor that is made by making a mash of unpounded, boiled rice spread on pots with wide mouths to cool, mixed with fine, tender leaves whose back sides look like the combs of termite mounds where snakes live, stirred twice morning and night with fingers in a jar with firm mouth, and aged and filtered with warm water" Perumpanatruppadai [275-281] "Delicate women who unite with their husbands wear cotton instead of silk and drink wine instead of toddy. Men wear women’s garlands and women wear men’s garlands" Pattinappaalai [106 -110] Thanks [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] PART : 26 WILL FOLLOW
  14. குறளோடு கவிபாடு - "குறள்: 413" & "குறள்: 628" "குறள்: 413" "அறிவு பரந்து கிடக்கும் உலகில் அயராது அதைத் தேடி சுவைக்க அக்கம் பக்கம் யார் நின்றாலும் அச்சம் துறந்து கேள்வி கேட்டு அமுது ஞானத்தை செவி உண்ணட்டும்!" "குறைந்த உணவை நிறைவாக அருந்தி குற்றமில்லா உயர்ந்த அறிவு கொண்ட குறைகள் அற்ற ஆன்றோர் போல் குமிழி வாழ்வில் நிறைவு அடைய குன்றாய் நிலைக்க கேட்டு அறிவாய்!!" "குறள்: 628" "இன்பம் கண்டும் துள்ளிக் குதிக்காதவன் துன்பம் வருகினும் துவண்டு விடான்! வண்ணவண்ணக் கனவில் மகிழ்ந்து உறங்குபவன் சின்னசின்ன தோல்வியிலும் தன்னை இழப்பானே கூனிக்குறுகி மூலையில் ஒதுங்கி விடுவானே!" "எண்ணம் நல்லதாய் வாழ்வை நோக்குபவன் திண்ணம் கொண்ட கொள்கை உடையவன் மண்ணில் விழுந்தாலும் எழுந்து நிற்பானே! விண்ணை முட்டும் மகிழ்வு வருகினும் கண்ணைத் திறந்து உண்மை அலசுவானே!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
  15. எல்லோருக்கும் நன்றிகள்
  16. "உயிரே போனாலும் பெண்களை விட மாட்டோம் என்னும் சபரிமலை பக்தர்களுக்கு... " எல்லா சமயங்களும் மக்களுக்கு உண்மையை யும், நேர்மையையுமே போதிப்பதாகவும் அவை சகோதரத்துவத்தை வலியுறுத்துவதாகவும் ஆனால் மனித ர்கள் தான் தங்களுக்குள் சாதி, வர்க்க, பாலின பிரிவுகளை ஏற்படுத்திக் கொள்வதாகவும் கூசாமல் பொய் சொல்லும் மதவாதிகளை, நீதியின் தீர்ப்பின் பின்பும், சபரிமலை ஐயப்பன் கோவில் சுற்றாடலில், பெண்களை போகவிடாமல் தடுத்து நடைபெறும் அடாவடித்தனமும், அறிக்கைகளும், எச்சரிக்கைகளும், வன்முறைகளும் அம்பலப்படுத்தி இருக்கின்றது. இதற்கு திருவாங்கூர் தேவஸ்தானம் மற்றும் கேரள அரசின் நடவடிக்கைகள் உடந்தையாகவும் உள்ளன. பத்து அகவைக்கும் ஐம்பது அகவைக்கும் இடைப் பட்ட காலத்தில் பெண்களுக்கு பொதுவாக மாத விடாய் வரும் காலம் என்றும், அதனால் அவர்கள் ஐயப்பனை நேரில் வந்து வழிபடுவதை விரும்பவில்லையாம் ? ஏனென்றால் அப்படி வழிபட வரும் பொழுது ஒருவேளை அவர்களுக்கு மாதவிடாய் வந்து விடுமோ என்ற பயமாம் ? யாருக்கு இந்த தீட்டும் அருவருப்பும் ? - ஐயப்பனுக்கா, நிர்வாகத்திற்க்கா அல்லது ஆண் பக்தர்களுக்கா ?? முதலில் ஐயப்பனை பார்ப்போம், அரக்கர்களின் அரசனான மகிசாசுரனின் வதத்திற்கு பிறகு, அவரின் தங்கை மகிசீ என்பவர் அதற்கு காரணமான தேவர்களை பழிக்கு பழி வாங்க முடிவு செய்தாள். எனவே பிரம்மாவை நோக்கி கடுந் தவமியற்றி, அதனால் பிரம்மா மகிழந்து, சிவனுக்கும் திருமா லிற்கும் பிறக்கும் குழந்தையால் மட் டுமே மகிசீக்கு மரணம் ஏற்படும் என்று ஒரு வரம் கொடுத்தாராம். அப்படி ஆண் ஓரினச் சேர்க்கை மூலம், அதாவது ஹோமோ செக்சில் பிறந்தவரே ஐயப்பன் ஆவார். தமிழ்நாட்டிலும் இலங்கையிலும் ஐயனார் வழி பாடும் ஐய்யப்பன் வழிபாடும் ஒருங்கே சேர்த்து பார்க்கப்பட்டாலும் இரண்டுக்கு மிடை யில் முக்கிய வித்தியாசங்கள் உண்டு. ஐய்யப்பன் வழிபாடு கேரளத்தில் இந்து சமய பிராமண முறையைத் தழுவியது, அதற்கு வழமை போல் பிராமணர்களின் ஒரு புராணக் கதையே உண்டு. ஐயனார் வழிபாடு தமிழர் மத்தியில் காணப்படும் ஒரு சிறுதெய்வ அல்லது ஒரு சிறு காவல் தெய்வ வழிபாடு ஆகும். ஆகவே இரண்டும் ஒன்றல்ல. மத்திய ஆசியாவில் இருந்து நாடோடியாக வந்த ஆரியர்கள், திராவிடர்களை / தமிழர்களை வென்ற பின்பு, பண் டைய திராவிடர்களின் சமயத்திலும் மாற்றம் மெல்ல மெல்ல எற்பட்டது. பண்டைய கால தமிழர்கள் போர் மற்றும் காதலில் சிறந்து விளங்கிய, “இளமை’ கடவுளை வணங்கினர். அக் கடவுளுக்கு இளமை, இளைஞன் எனும் பொருள்பட முருகு அல்லது முருகன் என்ற திராவிட பெயர்கள் வழங் கப்பட்டன [முருகு விம்மிய மொய் குழலேழை (சீவ.)] . அக்கடவுள், வடஇந்தியர்கள் வணங்கிய போர்கடவு ளான “ஸ்கந்தா’வோடு ஒத்து காணப்படுகிறது. அது போலவே வேதங்களில் 'உருத்திரன்; என்று ஒருவ ரைப் பற்றிப் பேசப் படுகின்றது! இவரைச் சிவனு டன் சேர்த்துவிட்டார்கள். உதாரணமாக, தமிழரின் சிறப்புக் கடவுள்கள், ஆரியக் கலப்புக்குப் பின்னர், முருகன்→ ஸ்கந்தன்/சுப்பிரமணியன் ஆனான்! திருமால்→ விஷ்ணு ஆனான்!சிவன்→ ருத்திரன் ஆனான்! கொற்றவை→பார்வதி/துர்க்கை ஆனாள்! உதாரணமாக சுத்த தமிழ்க்கடவுளான முருகனை, பிராமணர்கள் கந்தனாக்கி விட்டார்கள். சுப்ரமண் யனாக்கி விட்டார்கள். ஏன்... பரமசிவன் - பார்வதி யின் மகனாக்கி விட்டார்கள். தமிழர்களின் சைவ மதம் வைதீக பிராமண மதத்துக்குள் உள் வாங்கப் பட்டது.. அடிமைப் படுத்தப் பட்ட மக்களை, வென்ற வர்களின் கலாச்சாரத்திற்குள் உள்வாங்கிய வரலாறு தான், பிற்கால இந்து மதத்தின் வரலாறு ஆகும். தென்னிந்தியர்களின் நாட்டார் தெய்வங்களை எல்லாம், இந்து மதத்திற்குள் உள்வாங்கி னார்கள். அவற்றிற்கு, சமஸ்கிருதப் பெயர்கள் சூட்டப் பட்டன. தமிழரின் நாட்டார் தெய்வமான முருகன், சுப்பிரமணியன் என்று பெயர் மாற்றி இந்து மதக் கடவுளர்களில் ஒருவரானார். அதனால் தான், தமிழரை விட அதிகமாக ஆரிய மயப் பட்ட, மலையாளிகளும், கன்னடர்களும், "சுப்பிரமணியக் கடவுள்" என்றே அழைக்கின்றனர். முருகனும், சுப்ரமணியனும் வேறு வேறு என்பதை, தமிழ் இந்துக்களும் [சைவர்களும்] உணர்வ தில்லை. எந்த சிவன் தன் உடலில் பாதியைத் தன் மனைவி க்கு கொடுத்து ஆணும் பெண்ணும் சமம் என்று உலகத்திற்கே சொன்னதாக கூறப்பட்டதோ, அதே சிவன் தான் இவர் என்பதும் குறிப்பிடத் தக்கது. அப்படி என்றால் பெண் பங்கு தேவையில்லை என்று ஒரு நாடகம் ஆடி மறுத்தளிப்பு செய்வாரா ? கொஞ்சம் யோசியுங்கள் சபரிமலை பக்தர்களே ? மற்றது படைத்தல் தொழில் செய்யும் பிரமனுக்கு ஒரு உயிர் உற்பத்திக்கு ஆணும் பெண்ணும் அவ சியம் என்பது தெரியாமல் போய்விட்டதா ? அல்லது தன் தொழிலையே மறந்து போய் அல்லது சிவனையோ அல்லது திருமாலையோ பெண் என்று நினைத்தாரா ? எப்படி 'சிவனுக்கும் திருமாலிற்கும் பிறக்கும் குழந்தை' என்று சொன்னார் ? யாராவது ஒரு பக்தராவது சிந்தித்தீர்களா ? இல்லை உங்களுக்காவது அறிவு, அனுபவம் இல்லையா ? ஆனால் பெண்களை ‘தீட்டு’ என்று புறக்கணிக்கும் கொடுமைக்கு எதிராக அன்றே கலகம் செய்தவர் தமிழ் தாய் தந்த திருமூலர் என்பது எத்தனை பேருக்கு அல்லது எத்தனை சபரிமலை பக்தர் களுக்கு தெரியும்? தாம் மலையாளி, தமிழ் தெரியாது என்று சொல்ல முடியாது? ஏனென்றால், திருமூலர் காலத்தில் , சங்க காலத்தில் ,ஏன் இந்த புராண ஐயப்பன் காலத்தில், நீங்கள் தமிழ் சேர நாட்டு மக்கள் என் பதும் தெரியாதா ? அவர் தனது ஒரு பாடலில் [2551], “பிறரைத் தீண்டுவது தமக்குத் தீட்டு! தீட்டு!” என்று கூறுபவர் சிறிதும் அறிவிலார். தீட்டு ஏற்படுத்தும் இடத்தை அவர்கள் அறிந்திலர். தீட்டு என்ன என் பதை மெய்யாக அறிந்து கொண்ட பின்பு, மனித உடலே உண்மையில் பெரிய தீட்டு என்பதை அவர்கள் அறிந்து கொள்வார்கள் என்கிறார். அதாவது பெண்கள் தீட்டு என்றால் அதிலிருந்து உருவான மானுடமும் தீட்டு என்கிறார் திருமூலர் அன்றைய சேர நாட்டு ,ஆனால் இன்றைய ஐயப்பன் பக்தர்களை நோக்கி ? "ஆசூசம் ஆசூசம் என்பார் அறிவிலார் ஆசூசம் ஆம்இடம் ஆரும் அறிகிலார் ஆசூசம் ஆம்இடம் ஆரும் அறிந்தபின் ஆசூசம் மானிடம் ஆசூசம் ஆமே." இன்னும் ஒரு பாடலில்,[2552], தம்மை உள்ளபடி உண ர்ந்து கொண்ட தத்துவ ஞானிகளுக்கு ஆசூசம் என் னும் தூய்மையின்மை என்பது கிடையாது என அடித்து கூறுகிறார். "ஆசூச மில்லை அருநிய மத்தருக்கு ஆசூச மில்லை அரனை அர்ச் சிப்பவர்க்கு ஆசூச மில்லையாம் அங்கி வளர்ப்போர்க்கு ஆசூச மில்லை அருமறை ஞானிக்கே." அதே போல, வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் (1839 நவம்பர் 22 - 1898 சூலை 5) கூட, திரு மூலர் வழியில் தீட்டிற்கு எதிராக உரத்துக் குரல் எழுப்பினார். அவர் காலத்திலும் பெண்கள் மாத விடாய் காலத்தில் கோயில்களுக்குச் செல்லக் கூடாது என்று பழைமைவாதிகள் கூறி வந்தனர். இதற்கு பதிலடி தரும் வகையில் தனது ‘புலவர் புராணம்’ நூலில், “வீங்கு புண் முலையாள் மாதவிடாயினள் ஒருத்தி வேட்கை தாங்குறாது இரங்கி அன்னோன் சரண் பணிந்து அதனைச் சொன்னாள் ஏங்குறேல் பெரு நெருப்பிற்கு ஈரம் இன்றே என்றானே!” அதாவது, பெரு நெருப்பாகிய இறைவனுக்கு தீட்டு இல்லை என்பதை திருஞான சம்பந்தர் கதை மூலம் எடுத்துரைத்தார். அப்படி என்றால் எப்படி ஐயப்பனுக்கு தீட்டு வரும் ?, கொஞ்சம் யோசியுங்கள் தாம் ஐயப்பன் பக்தர் என்று கூறுபவர்கள் ?? மற்றது ஐயப்பனை 'மாளிகை புரத்தம்மா' என்ற அழகி மணம் செய்ய விரும்பிய பொழுதும் அதை உதறி தள்ளி, ஒரு பிரம்மச்சரியத்தை தொடர்ந்து கடைபிடித்தவராம். என்றாலும் எப்பொழுது முதல் தரம், வரும் பக்தர்கள் இல்லாது ஒழியுதோ (devotee visiting Sabarimala for first time) அன்று உன்னை மணப் பேன் என்று, அவளுக்கு உறுதி கொடுத்தார், அந்த காதல் தேவி அதை ஏற்று இன்னும் அந்த சபரிமலையிலேயே காத்திருக்கிறாளாம் என்று நம்புவதுடன், அவரின் சிலையும் அங்கு வைக்கப்பட்டுள்ளது. அத்துடன் அவளும் ஒரு மணப்பெண் என்பது குறிப் பிடத் தக்கது, இது இன்னும் இந்த பக்தர் களுக்கு தெரியாதா ? அவளை ஏன் இன்னும் சபரிமலையில் இருந்து துறத்தவில்லை ? அவளை எப்படி சபரி மலையில் வைத்து வழிபடமுடியும் ?, சிலர் பெண் கள் சபரிமலைக்கு போவது பிரம்மச்சரியத்தில் இருக்கும் ஐயப்பனுக்கு இடைஞ்சல் என்கிறார்கள் , அப்படி என்றால் அவர் அவ்வளவு மனக் கட்டுப்பாடு இல்லாதவரா ? அனுமானும் பிரம்மச்சரி தான், ஆனால் எந்த பெண்களும் போகலாம் வழிபடலாம் , அது எவ்வாறு அல்லது அனுமான் ஐயப்பனை மாதிரி இல்லாமல், உறுதியான மனக் கட்டுப்பாடு உள்ளவர் என்று ஐயப்பனை குறைத்து கூறுகிறீர்களா?? சிலர் பெண்களின் சுகாதார மற்றும் உடல் நிலையை கருத்தில் கொண்டு மலை ஏறி வழிபடுவதை தடுத்து கட்டுப்பாடில் கொண்டு வந்ததாக கூறுகிறார்கள், இது இந்த நவீன வசதிகள் படைத்த இன்றைய உலகில் ஒரு முற்றிலும் பொருந்தா வாதமாகும்? ஒரு சமயம் என்பது நீதி, அன்பு, மானிடம், சம உரிமை என்பனவற்றினை முலமாக, அடிப்படை யாக கொண்டிருப்பதுடன் உயர் மனித நேயத்தை, இயல்பை திருப்தி படுத்தக் கூடியதாகவும், தனது படைப்பின் உயிர்களுக்கிடையில் வேறு பாட்டை காட்டாமல், அது கருப்போ வெள்ளையோ உயரமோ குட்டையோ பணக்காரனோ ஏழையோ எல்லோரிட மும் ஒரே தன்மை, நிலைபாட்டை உடையதாக இரு க்க வேண்டும் என்பதை தயவு செய்து உணருங்கள் . "எங்கு அன்பு உள்ளதோ அங்கு வாழ்வு உண்டு" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
  17. "எங்கள் பள்ளிக்கூடம்" [இடைக்காடு மகாவித்தியாலயம்] இலங்கையின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள அழகிய ஒரு யாழ்ப்பாணக் கிராமமான அச்சுவேலி பிரதேசத்தில் உள்ள இடைக்காட்டில் எங்கள் பள்ளிக்கூடம் முதலில் ஒரு திண்ணைப் பாடசாலையாக 1925 இல் முப்பது பிள்ளைகளுடன் பண்டிதர் திரு சுவாமிநாதர் இராமசாமி அவர்களைத் தலைமை ஆசிரியராகக் கொண்டு, தேற்றாவடி திரு சுப்பர் முருகுப்பிள்ளை ஆசிரியரின் இல்லத்தில் உருவானது. பின் ஓலைக்கொட்டிலில் அமரர் பண்டிதர் திரு க இராமசாமி அவர்களைத் தலைமை ஆசிரியராகக் கொண்டு இன்று எங்கள் பாடசாலை அமைந்து உள்ள இடத்தில் நூறு பிள்ளைகளுடன் இடைக்காடு புவனேஸ்வரி ஆரம்ப பாடசாலையாக உருவானது. அப்பொழுது அது ஓரளவு பின்தங்கிய நிலையில், ஆனால் அறிவின் கலங்கரை விளக்கமாக அதை மாற்றக்கூடிய ஆர்வமும் நம்பிக்கையும் உள்ள ஆசிரியர்களையும் முதல்வரையும் தன்னகத்தே கொண்டு இருந்தது. நான் அங்கு உயர்வகுப்பின் விஞ்ஞான பிரிவில் படிக்கும் மாணவன். என் பெயர் அறிஒளி. என் அப்பா நிலவுகளட்டியில் ஒரு தோட்டக்காரர். ஓரளவு வசதியான குடும்பம். பல தசாப்தங்களுக்கு முன்பு நிறுவப்பட்ட எங்கள் பள்ளி, எளிமையான தொடக்கத்தைக் கொண்டிருந்தாலும், பின் அது இடைக்காடு மகாவித்தியாலயமாக தலை நிமிர்ந்து நிற்கிறது. என்னுடன்தான் முதல் முதல் விஞ்ஞான உயர் வகுப்பு அங்கு 1977 / 1978 இல் ஆரம்பித்து முழுமை அடைந்தது. இது அர்ப்பணிப்புள்ள ஆசிரியர்கள், ஆர்வமுள்ள மாணவர்கள் மற்றும் யாழ் கல்வித்துறையின் ஒத்துழைப்பினாலும் சாத்தியமானது. என்றாலும் வரையறுக்கப்பட்ட வளங்களின் சவால்கள் மற்றும் அன்று வட பிராந்தியத்தை பாதித்த ஒரு கொந்தளிப்பான வரலாற்றின் நிழல் அல்லது பதட்டமான சூழல் இருந்தபோதிலும், எங்கள் பள்ளி கிராமத்தின் குழந்தைகளுக்கு தரமான கல்வியை வழங்குவதில் உறுதியாக இன்றுவரை நற்பெயருடன் இயங்குகிறது. பல ஆண்டுகளாக, எங்கள் பள்ளி பல தடைகளை எதிர்கொண்டது. இப்பகுதி பின்னாட்களில் மோதல்களால் பாதிக்கப்பட்டு, மாணவர்கள் தவறாமல் கலந்துகொள்வதை கடினமாக்கியது, மேலும் உள்கட்டமைப்பை பராமரிப்பதில் தொடர்ந்து சவால்கள் இருந்தன. எவ்வாறாயினும், பள்ளி சமூகத்தின் மீள்தன்மை அசைக்க முடியாததாக இருந்தது. அதற்கான முக்கிய காரணம் அன்று நானும் உயர் வகுப்பில் கற்றுக் கொண்டு இருந்த சக மாணவர்கள் எல்லோரும், எங்கள் நிலைமையை புரிந்து, கட்டாயம் அகில இலங்கை ரீதியில் உயர்வகுப்பிலும் அதே போல சாதாரண வகுப்பிலும் சாதனைகளை புரியவேண்டும் என்பதில் ஒத்த கருத்தில் இருந்து, அதன்பொருட்டு ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் சமூகத் தலைவர்களின் குழு ஒன்றை நாம் ஒன்றாக அமைத்தது ஆகும். அது ஒரு திருப்புமுனையாக மாறி, கிராமத்தை நல்ல நிலைக்கு மீட்டெடுக்கவும், குழந்தைகளுக்கு ஒளிமயமான எதிர்காலத்தை உறுதி செய்யவும் கல்வியே முக்கியம் என்பதை கிராமவாசிகளுக்கு உணர்த்தவும் ஒரு தளமாக இன்றுவரை அமைந்துள்ளது. இதனால், புதிய வகுப்பறைகள், நூலகம், ஆய்வகம் மற்றும் விளையாட்டு மைதானம் ஆகியவற்றைக் கட்டுவதற்கு உள்ளூர் வணிகங்கள் மற்றும் சமூக உறுப்பினர்கள் உதவி புரிந்தனர். இந்த சூழலில் தான், நான் என் சக மாணவர்களுடன் உதவி கேட்டு, எங்கள் அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையின் மருத்துவரின் அரச விடுதிக்கு சென்ற பொழுதுதான் நான் அவளை முதலில் சந்தித்தேன். அவள் அந்த மருத்துவரின் மகள். அவள் கொழும்பில் பிறந்து வளர்ந்து, இன்று தந்தையின் வேலை மாற்றத்துடன் எங்கள் பிரதேசத்துக்கு வந்துள்ளாள். என்றாலும் அவள் யாழ்ப்பாண வேம்படி மகளீர் கல்லூரியில் தான் தன் சாதாரண வகுப்பை தொடருகிறாள். பெயர் முழுமதி. அந்த முதல் சந்திப்பில் தான் என் நெஞ்சு முதல் முதல் அல்லாட தொடங்கியது. அதுவரை நான் காதல் என்ற ஒன்றை நினைக்கவேயில்லை. இத்தனைக்கும் எங்கள் பாடசாலை ஒரு கலவன் பாடசாலை. ஒருவேளை அவள் என் சக மாணவிகளில் இருந்து கொஞ்சம் வேறுபட்ட பாணியில், வித்தியாசமாக நகர்புறத்து நாகரிக அலங்காரத்தில், உடையில் இருந்தது, பேசியது ஒரு காரணமாக இருக்கலாம். எனினும் அவளின் கோலம் ஒரு தமிழ் பெண்ணின் அடையாளமாகவே இருந்தது. 'புறம் தாழ்பு இருண்ட கூந்தல், போதின் நிறம் பெறும் ஈர் இதழ்ப் பொலிந்த உண்கண்' அவள் பின்புறம் இருண்டு தொங்கும் கூந்தலை கொண்டு இருந்ததுடன் பூ மொட்டு போல் இரண்டு மையுண்ட கண்களையும் உடையைவளாக இருந்தாள். என்றாலும் செய்யக் கருதிய எங்கள் பாடசாலையின் வளர்ச்சிக்கான மற்றும் ஒரு தகுதி அல்லது பெருமை பெரும் செயலை முற்றிலும் முடிக்காமல் இடையே அதற்கு ஊறு செய்தால் அதன் பயனை அடையாமையோடு இகழ்ச்சியையும் தரும் என்ற ஒரு அக உணர்வு பொங்க, காதல் அன்பிற்கும் கடமைக்கும் இடையேயான தவிப்பு நிலையாகி, உறுதி கொஞ்சம் தளர்ந்து என் அறிவு ஊசலாட தொடங்கியது. தந்தை மருத்துவர் வந்து எங்களை சந்திக்க எடுத்த ஒரு சில மணித்துளிகளில் அவள் ஒரு புத்திசாலித்தனமான மற்றும் ஆர்வமுள்ள மாணவி என்பதையும், கவர்ந்து இழுக்கும் ஒரு வசீகரம் கொண்ட அழகையும் அவளிடம் நான் கண்டேன். மருத்துவரிடம் நாம் கதைக்கும் பொழுது, வேம்படி மகளீர் கல்லூரி யாழ் கோட்டைக்கு அருகில் இருப்பதால், அவரின் இயல்பான பயத்தையும் அறிந்தேன். எனவே ஏன் அவளை தற்காலிகமாக எங்கள் பாடசாலையில் சேர்க்கக் கூடாது என்று ஒரு கேள்வி கேட்டு, நாம் விடை பெற்றோம். என்ன ஆச்சரியம், அடுத்த கிழமை அவள் எம் பாடசாலைக்கு சாதாரண வகுப்பில் சேர்ந்து அங்கு வந்தது மட்டும் அல்ல, என்னைத் தேடி வந்து என்னிடம் முதல்நாள் ஆசீர்வாதமும் பெற்றாள். ' உங்களால் தான் நான் இங்கு சேர்ந்தேன், இங்கு தனியார் வகுப்புகள் இல்லை, என் அப்பா ஓரே பிஸி, எனக்கு தெரியாததை நீங்க தான் சொல்லித்தரவேண்டும்' என்ற சிறு வேண்டுதலுடன் விடை பெற்று தன் வகுப்புக்கு போனாள். அந்த திரும்பி போகும் பொழுது அவள் பார்த்த பார்வை இன்னும் என்னால் மறக்க முடியாது. 'கண்ணின் கடைப்பார்வை காதலியர் காட்டிவிட்டால் மண்ணில் குமரர்க்கு மாமலையும் ஓர் கடுகாம்' என்று கூறிய புரட்சி கவிஞர் பாரதிதாசன் தான் எனக்கு ஞாபகம் வந்தது. கண்கள் இதயத்தின் நுழைவாயில். காதலின் தூதுவன். பழக்கம் வரக் காரணமாகி, ஒழுக்கம் பிறழவும் காரணமாயிருப்பது ஐம்புலன்கள்தானே? அதிலும் பெண்களின் கண்கள் போர் செய்யவல்ல அம்புகள். அது என் நெஞ்சில் துளைத்து என்னை துன்புறுதத் தொடங்கியது. 'முலையவர் கண்ணெனும் பூச லம்பு' என்று கம்பரின் மதிப்பீடு எனக்கு உண்மையானது! நாங்கள் இருவரும் கொஞ்சம் கொஞ்சமாக எமக்கிடையில் பகிரப்பட்ட அறிவுசார் நலன்களால் பிணைத்தோம், அவளுக்கு தெரியாத, விளங்காத பாடங்களை போதிக்கும் பொழுது, தெரிந்தும் தெரியாமலும் எங்கள் இதயங்களையும் அங்கு ஊற்றினோம். எண்ணற்ற மணிநேரங்களை செலவழித்ததால் எங்கள் தொடர்பு ஆழமடைந்தது. காலப்போக்கில், எங்கள் நட்பு இன்னும் ஆழமான ஒன்றாக மலர்ந்தது. கல்வி மற்றும் வாழ்க்கையின் சிக்கல்களை ஒன்றாகக் கடந்து, ஒருவருக்கொருவர் முன்னிலையில் நாங்கள் ஆறுதல் கண்டோம். எங்கள் காதல் உணர்ச்சிகளின் சூறாவளி, பகிரப்பட்ட கனவுகள் மற்றும் பரஸ்பர மரியாதை ஆகியவற்றின் கலவையாகும். ஆயினும்கூட, நான் மற்றொரு அன்பான - எங்கள் பள்ளிக்கூடத்தின் புனிதமான அரங்குகளுக்குள் அறிவைப் பின்தொடர்வதில், அதை 1979 இல் பெருமையாக்கி, முதல் முதல் அங்கிருந்து பொறியியல், மருத்துவ, விஞ்ஞான பீடங்களுக்கு நானும் சக மாணவர்களும், விஞ்ஞான பிரிவு ஆரம்பித்த முதல் ஆண்டிலேயே தெரிவாக வேண்டும் என்பதில் ஒரு நீடித்த பேரார்வம் மாற்றம் இன்றி இருந்தது. எனது ஆர்வத்தைத் தூண்டிய வழிகாட்டிகளையும், என்னை புதிய உயரத்திற்குத் தள்ளிய சகாக்களையும், வளர்ச்சியை ஊக்குவிக்கும் துடிப்பான கல்விச் சமூகத்தையும் நான் அங்கு கண்டேன். பள்ளியின் பெயர் கௌரவம் மற்றும் எதிர்கால நற்பெயர் வாய்ப்புக்கு அது அவசியமாக இருந்தது. மேலும் அந்த பெயரை பிரகாசமாக பிரகாசிக்க வைக்க நான் உறுதியாக இருந்தேன். முழுமதி மீதான என் காதல் ஆழமானதால், நான் ஒரு சங்கடத்தை எதிர்கொண்டேன். எனது காதல் தோழி மற்றும் எனது கல்வி ஆகிய இரண்டிலும் எனது பக்தியை, அன்பை சமநிலைப்படுத்துவது சவாலானது. இரவு நேர, என் கூடுதலான பாடம் மீட்டல் மற்றும் எங்கள் உறவின் உணர்ச்சிகரமான இணைப்பு சில சமயங்களில் மோதின. இந்த இரண்டு காதல்களுக்கிடையேயான மென்மையான சமநிலையை என்னால் பராமரிக்க முடியுமா என்று நான் கேள்வி எழுப்பிய தருணங்கள் பல இருந்தன. இறுதியில், கல்வியின் மீதான எனது காதல் எனது பள்ளியின் பெயரைப் பற்றியது மட்டுமல்ல, தனிப்பட்ட வளர்ச்சி, அறிவுசார் ஆய்வு மற்றும் அறிவைப் பின்தொடர்வதற்கான அர்ப்பணிப்பு என்பதை நான் உணர்ந்தேன். இந்த காதல் என் எதிர்காலத்தில் ஒரு நீண்ட கால முதலீடாக இருப்பதுடன், அதேசமயம் முழுமதி மீதான என் காதல், அழகாக இருந்தாலும், முதலில் வாழ்க்கைக்கான அத்திவாரம் தேவை என்பதை உணர்ந்தேன். இறுதியில், முழுமதியும் நானும் தற்காலிகமாக சுமுகமாகப் பிரிந்து செல்ல முடிவு செய்தோம், கற்றல் மீதான எம் இருவரின் ஆர்வமும் எங்கள் பள்ளி மீதான எமது அர்ப்பணிப்பும் அசைக்க முடியாததாகவே இருந்தது. ஆனால் நான் அவளுக்கு தனிப்பட்ட பாடப் பயிற்சி கொடுப்பது தொடர்ந்தது. நான் தேர்ந்தெடுத்த துறையில் மற்ற சக மாணவர்களுடன் 1979 இல் பொறியியல் துறைக்கு தேர்ந்து எடுக்கப் பட்டேன். என்னைத் தொடர்ந்து முழுமதியும் 1981 இல் மருத்துவ பீடத்துக்கு தெரிவானாள். அதுவும் நான் படிக்கும் பேராதனை பல்கலைக்கழகத்துக்கே! மீண்டும் எம் காதல் ரோலர்கோஸ்டர் [Roller Coasters] போல், பயங்கரமான வீழ்ச்சி ஒரு முறை இருந்தாலும், அவையைத் தாண்டி நாம் மகிழ்வாக பேராதனை வளாகத்தில் உச்சத்தில் இப்ப இருக்கிறோம். எங்கள் பள்ளிக்கூடம் கூட இப்ப உச்சத்தில்!! நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.