-
Posts
1085 -
Joined
-
Last visited
-
Days Won
5
Content Type
Profiles
Forums
Events
Blogs
Gallery
Everything posted by kandiah Thillaivinayagalingam
-
"இலங்கையில் சைவ கோவில்கள் அழிக்கப்படுவதற்கு / தடைசெய்யப்படுவதற்கு மூல காரணம் என்ன?" உண்மையான புத்த போதனையை பின்பற்றுபவனுக்கு [பவுத்தனுக்கு] சாதி இல்லை; கடவுள் இல்லை. புத்தம் என்பதன் பொருளே அறிவு (புத்தி) என்பதுதான். புத்தர் அன்பினை வலியுறுத்தியவர். சாதிகளுக்கு எதிரானவர். ஒரு புத்த பிக்குவின் போதனையால் போர்களே வாழ்க்கையாய் இருந்த அசோகன் இனி போர் புரியமாட்டேன் எனச் சபதம் ஏற்று புத்த சமயம் [பவுத்தம்] தழுவினான். இதனால் புத்தரின் கொள்கையை உலகம் வியந்து வரவேற்றது புத்தருக்குப் பெருமை சேர்த்தது. அன்புதான் உலக ஜோதி, அன்பு தான் இன்ப ஊற்று, அன்புதான் உலக மகா சக்தி என்று மக்களுக்குப் போதித்து வந்தவர் சித்தார்த்தன் எனும் பெயர் கொண்ட புத்த பெருமான். ஒரு சமயம் புத்தரும், அவருடைய சீடர்களும் காட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது ஒரு திருடன் அங்கு வந்து ஒரு கிண்ணத்தை எடுத்துக் கொண்டு ஓடினான். அப்போது அவனது கால், புத்தரின் காலில் பட்டு விட்டது . புத்தர் விழித்துக் கொண்டார். தடக்கியதால் சற்று தடுமாறிய அந்தத் திருடன், சமாளித்து விட்டு வேகமாக ஓடினான். உடனே தன் அருகில் படுத்திருந்த ஒரு சீடனைத் தட்டி எழுப்பினார். பிறகு துணி மூட்டையிலிருந்து ஓர் அழகிய கிண்ணத்தை எடுத்து அவனிடம் கொடுத்தார். ''யாரோ ஒருவன் நம்மிடமிருந்த ஓட்டைக் கிண்ணத்தை எடுத்துக் கொண்டு ஓடுகிறான். பாவம்... அந்தக் கிண்ணம் அவனுக்குப் பயன்படாது. நீ வேகமாக ஓடிச் சென்று இந்தப் புதிய கிண்ணத்தை அவனிடம் கொடுத்து விட்டு வா என்றார் புத்தர். நீண்ட நேரம் ஓடிய பின் திருடனைப் பிடித்தான். ''அன்பனே! சற்று நில்! நீ தூக்கிக் கொண்டு ஓடி வந்தது ஓட்டைக் கிண்ணம். அது எதற்கும் பயன்படாது. அதற்குப் பதில் இந்தப் புதுக் கிண்ணத்தை வைத்துக் கொள். என் குருநாதர்தான் இந்தக் கிண்ணத்தை கொடுத்துவிட்டு வரச் சொன்னார்!'' என்று சொல்லி விட்டுக் கிண்ணத்தை கொடுத்தான் . திருடன் கண்களில் நீர் திரண்டது. அவன் சீடனுடன் நடந்து புத்தரை வந்தடைந்தான்.''என்னை மன்னித்து விடுங்கள்!'' என்று கூறி அப்படியே அவர் கால்களில் விழுந்தான். இன்னும் ஒரு சமயம் புத்தரைப் பல சித்திகள் தெரிந்த சித்தர் ஒருவர் சந்தித்தார். புத்தரிடம் உயிருள்ள சிப்பி ஒன்றைக் கொடுத்த அந்த சித்தர், "இந்த சிப்பிக்குள் விலை உயர்ந்த முத்து உள்ளது. சிப்பியை உடைத்து முத்தை எடுத்துக் கொள்ளுங்கள்" என்றார். அதற்கு புத்தர்,"முத்து எவ்வளவு விலை உயர்ந்ததாக இருக்கட்டுமே! ஓர் உயிரைக் கொல்வது என்பது என்னால் முடியாது! சிப்பியை நீயே எடுத்துச் செல்" என்று சொல்லிவிட்டார். ஆனால், இப்ப புத்தத்தை பூசிக்கும் நாடுகள் - பர்மா, இலங்கை உட்பட புத்தனின் கொள்கைகளிலிருந்து மிகவும் மாறுபட்டு விட்டது. மனிதத்தை புதைத்து விட்டன. சர்வதேச அளவில் மனித உரிமையை பேணுவதில் பின்னோக்கியுள்ள நாடுகளாக மாறி உள்ளன. இவர்களுக்கு புத்தரின் வாக்கு ஏற்றதாக இருக்கும். "ஆசையால் வெற்றி பெற்றவன் அந்தப் போதையால் தவறுகள் செய்து அழிவைத் தேடுவான். ஆனால் தன்னடக்கம் உள்ள மனிதன் அறிவுடன் சிந்தித்து எப்போதுமே இன்பமாக வாழ்ந்திடுவான்." ஆனால் இதை அவர்கள் என்று உணருவார்களோ ?, சரியான புத்தரின் போதனையை படித்து, அதில் பற்றுக் கொண்டு, தேர்ச்சி பெற்று புத்த குருவாக முழுமையாக பரிணமிக்காதவரை, மகாவம்சத்தை உண்மையான வரலாறாகவும், புத்த மதத்தின் போதனையாகவும், துவேஷ மனப்பான்மையை குழந்தையில் இருந்தே வளர்த்தால், எப்படி உண்மையை புரிந்து கொள்வான்? [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
"ஒவ்வொரு நாளும் அநேகமாக இந்தியாவில் இருந்து வெளிவரும் எதாவது ஒன்று அல்லது பல நாளிதழ்களில் பாலியல் வல்லுறவு பற்றிய செய்திகள் அல்லது வழக்குகளைக் காண்கிறோம் அது ஏன் ?" பாரத பூமி புண்ணிய பூமி. அறநெறியும் பண்பாடும் மிக்க பூமி. இங்கேதான் ஞானச் செல்வம் அள்ள அள்ளக் குறையாமல் உள்ளது என நாம் போற்றுகிறோம் ஆனால் அதே நேரத்தில் சமஸ்கிரத புராணங்களையும் நம்புகிறோம் போற்றுகிறோம். இந்த புராணங்கள் கடவுள்களின் கற்பழிப்பை நியாயப்படுத்தும் போது, பெண்கள் எப்படி இந்தியாவில் கற்புரிமையை பாதுகாக்கமுடியும்? இதை நாம் சற்று சிந்திக்க வேண்டும். அது மட்டும் அல்ல 'அர்த்த சாஸ்திரம்' (3,8) இல், ''சூத்திரப் பெண் உயர்சாதி ஆண்கள் இன்பம் அனுபவிப்பதற்கு உரியவள்" என்கிறது. விஷ்ணுவிற்கு துளசி பூஜை செய்கிற ஒவ்வொருத்தரும், ஒரு கற்பழிப்பை கொண்டாடுகிறார்கள்? அதுவும், அந்த பெண்ணின் தவறு என்னவென்றால், அவள் விஷ்ணுவின் பக்தையாம், மேலும் மிகுந்த பக்தியுடன் இருந்தாளாம். இதோ அந்த கதை. ஒரு ஊரில் ஜலந்தர் - பிருந்தா [துளசி] என்ற தம்பதி வாழ்ந்து வந்தனர். பிருந்தா விஷ்ணு பக்தை. ஜலந்தர் சிவன் பக்தன். இந்த விசித்திரமான விஷயத்தை கேள்விப்பட்ட நாரதர், அந்த குடும்பத்தில் சிறிது விளையாடிப் பார்க்க நினைத்தார். என்ன ஜலந்தர்?. நீ பின்பற்றும் சிவபக்தியால் சிவனுடைய மனைவி பார்வதி தேவியையே நீ அடையலாமே... எதற்கு இந்த பிருந்தாவுடன் போராடிக் கொண்டிருக்கிறாய். இந்த பிருந்தாவை விட அந்த பார்வதி எவ்வளவு அழகு தெரியுமோ? ... என ஜலந்தரின் மனதில் பற்றவைத்து விடுகிறார் நாரதர். “சிவனுக்கு சாமவேதம் என்றால் உயிர். எங்கே சாமவேதம் ஒலித்தாலும் மயங்கி அந்தப் பக்கம் போய்விடுவார். நீ என்ன பண்ணு... சாமவேதம் பாராயணம் செய்பவர்களை பிடித்து நல்ல சத்தமாக சாமவேதம் ஒலிக்கச் செய்... அதனைக் கேட்டு சிவபெருமான் மயங்கியிருக்கும் வேளையில் கைலாயத்துக்கு சென்று காரியத்தை முடித்துவிடு ” இதைக் கேட்டு சிவன் லயித்திருக்க... நாரதர் கொடுத்த யோசனைப்படி பார்வதியை போய் கட்டிப்பிடித்து விட்டான் ஜலந்தர், ‘ஸ்வாமீ’ என ஏழுகடல் கொந்தளிக்க கத்துகிறாள். கைலாயத்தில் இப்படி நடக்க ... ஜலந்தரின் வீட்டுத்தோட்டத்தில்?... கணவனைக் காணாது மனைவி பிருந்தா தனித்துத் தவித்திருக்கிறாள். தனது பரம தெய்வமான விஷ்ணுவிடம் தன் கணவன் எங்கே என வேண்டுகிறாள். இதைப் பார்த்த விஷ்ணு... நமது பக்தைக்கு நாம் ஏன் சந்தோஷம் தரக்கூடாது? தன் கணவனை காணோமே என பாவம் தேடிக்கொண்டிருக்கிறாள். நாமே ஜலந்தராக உருவெடுத்து அவளை மகிழ்ச்சிப்படுத்துவோம் என முடிவெடுத்து... கணவன் ஜலந்தர் போலவே உருவம் எடுத்து பிருந்தாவை நெருங்கினார் விஷ்ணு..... தன் கணவர் ரூபத்தில் வந்திருந்த விஷ்ணுவை கட்டிப் பிடித்துக் கொண்டாடினாள். இருவரும் தோட்டத்தில் ரொம்ப இஷ்டமாக இழைந்து கொண்டிருக்கும் நேரத்தில்... நெருக்கமாக இருக்கும் அவர்களுக்கு நெருக்கமாக வந்து பொத்’ தென வந்து விழுந்தது ஒரு தலை. ரத்தம் கொட்ட கழுத்திலிருந்து வெட்டியெடுக்கப் பட்ட அந்தத்தலை, ஜலந்தரின் தலை.... வேதத்தின் மயக்கத்தை... பார்வதியின் கூக்குரல் கலைக்க, ஓடிப்போய் பார்த்தார் சிவன். தன் மனைவியை இன்னொருவன் பலாத்காரப்படுத்துவதா?... என ஜலந்தரின் தலையை சீவியெறிந்தார். அந்த தலையே இந்த தலை! பார்த்தாள் பிருந்தா... தன் உடலோடு [ஒன்று இணைந்தவன்] விழுந்தவன் கணவனா? இல்லை தலைமட்டும் விழுந்தவன் கணவனா? சந்தேகம் அதிகரிக்க... அப்போது திடீர் என உடலோடு கூடிய ஜலந்தர் மறைந்து விஷ்ணுவாகிறார். ‘நான்தான் பக்தையே...’ என அறிமுகம் கொடுக்கிறார். இதைக்கேட்டு பொங்கியெழுந்த பிருந்தா...’ அடப்பாவி... பக்தையை இப்படி பண்ணிவிட்டாயே? என் கணவன் ரூபத்தில் வர நீ யார்? என்கிறாள் ? From "Tulsi Vivah - Wikipedia, the free encyclopedia" [According to Hindu scripture, the Tulsi plant was a woman named Vrinda (Brinda), a synonym of Tulsi. She was married to the demon-king Jalandhar. Due to her piety and devotion to Vishnu, her husband became invincible. Even god Shiva, the destroyer in the Hindu Trinity could not defeat Jalandhar. So Shiva requested Vishnu - the preserver in the Trinity - to find a solution. Vishnu disguised himself as Jalandhar and violated Vrinda. Her chastity destroyed, Jalandhar was killed by Shiva] இந்த கற்பழிப்பை எவரும் கண்டிக்கவும் இல்லை? விஷ்ணுவை தூக்கி எறியவும் இல்லை ? இப்படி பல பல. இவையை, இந்த புராணங்களை இன்னும் போற்றி வாழும் இந்த சமுதாயத்தில் எப்படி மாற்றம் ஏற்படும் ? இதை புராணமாக கூற, நாம் கேட்டு மௌனம் சாதித்து இன்னும் அங்கீகரிக்கின்றோம்? இப்படி அங்கு நடக்கிற கேவலங்களை கேட்டு கேட்டு காது பழகிவிட்டது. இப்படி பெண்களை இழிவு படுத்தும் காட்சிகள் ஏராளம் . "இந்த முள்ளுச் செடி விதைகளை காலம் காலமாக விதைத்துக் கொண்டு அவை வளர்ந்து குத்துகிறது என இடும் முழக்கம் நியாயமானதா? இவற்றை எல்லாம் ஊக்குவித்து வளர்த்துக் கொண்டு அதன் பலன்களை கண்டு பொங்கி எழுவதில் என்ன பயன்?” [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
"போதும் இந்த நரகம்..!" குடிப்பவர்களிடம் ஒரு கவலையும் இல்லா பேரின்ப மனோநிலையை ஏற்படுத்தக் கூடியதாக [a blissful mood… with joy in the [innards][and] happy liver] அதை நீ தயாரித்து எமக்கு அளிக்கிறாய்" என கி மு 1800 ஆம் ஆண்டை அல்லது அதற்கும் முற் பட்ட சுமேரியன் துதி பாடல் [Sumerian Hymn to Ninkasi ] ஒன்று குடியை போற்றுகிறது. அதேபோல இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க இலக்கியமும் புறநானுறு 235 இல், "சிறியகட் பெறினே, எமக்கீ யும் மன்னே; பெரிய கட் பெறினே யாம்பாடத் தான் மகிழ்ந்து உண்ணும் மன்னே;" என்று பெண் புலவரான ஒளவையார் புகழ்ந்து கூறுகிறார். அப்படி என்றால் "போதும் இந்த நரகம்..!" என, என் மனைவி என்னை திட்டுவது எனக்கு புரியவில்லை? ஒருவேளை அவள் ஒளவையார் ஆக இருந்து இருந்தால், அவளும் என்னுடன் சேர்ந்து குடிப்பாளோ, பட்டிணப்பாலை [106-110] சில அடிகளும் சேர ஒரு கற்பனை, எங்கள் அத்தியடி வீட்டின், முன் விறாந்தையில் இருந்த குந்தில் சாய்ந்த படி வந்தது. "துணைப்புணர்ந்த மடமங்கையர் பட்டுநீக்கித் துகிலுடுத்தும் மட்டுநீக்கி மதுமகிழ்ந்தும் மைந்தர்கண்ணி மகளிர் சூடவும் மகளிர்கோதை மைந்தர் மலையவும்" அதாவது,தம் கணவரோடு கூடி இன்புற்ற இள மகளிர், தாம் முன்பு அணிந் திருந்த பட்டாடைகளைத் தவிர்த்து நூலாடைகளை உடுத்தினர். இன்பத்தின் மயக்கத்தால், தாம் அருந்தும் மயக்கம் தராத கள்ளினைக் [மட்டினைக்] கைவிட்டு, மதுவினை குடித்தனர். மதுவுண்ட மயக்கத்தில் கணவர் அணியும் மாலைகளை மகளிர் அணிந்து கொண்டனர். மகளிர் அணியும் கோதையினை (மாலை) ஆடவர் சூடிக் கொண்டனர் என ஒரு கூத்தே கனவில் வந்தது. கண்ணை திறந்து பார்த்தேன், அருகில் மனைவி, ஒரு திருக்குறள் ஒன்றை தூக்கி என் கண்முன் எறிந்தார். இதுவும் 2000 ஆண்டுகளுக்கு முன் எழுதியதே . சத்தப் போட்டு “துஞ்சினார் செத்தாரின் வேறல்லர் எஞ்ஞான்றும் நஞ்சுண்பார் கள்ளுண் பவர்.” (குறள் 926) என்று பாடி காட்டினார். உறங்கினவர் இறந்த வரை விட வேறு பட்டவர் அல்லர், அவ்வாறே கள்ளுண்பவரும் அறிவு மயங்குதலால் நஞ்சு உண்பவரே என்று அவர் என்னை திட்டுவது எனக்கு அப்பத்தான் மெல்ல மெல்ல புரியத் தொடங்கியது. என்னை எதுக்கும் தொட்டுப் பார்த்தேன். நான் இன்னும் சாகவில்லை என்பதை உறுதி படுத்திக் கொண்டேன். எனக்கு வள்ளுவரின் மேல் கோபம் தான் வந்தது. இவருக்கு ஏன் இந்த வேலை ? நேரம் போக ஒரே பசி, மனைவி அறை கதவை மூடிக்கொண்டு உறங்கி விட்டாள். இது மார்கழி முன்பனி காலம். குளிரும் என்னை வாட்ட தொடங்கிற்று. மெல்ல அடுப்படி கதவை திறந்து உள்ளே பார்த்தேன். அடுப்பு வெறிச்சோடி இருந்தது. சட்டி , பானை எல்லாம் கவுண்டு இருந்தன. என்ன செய்வது என்று புரியவில்லை. கிணற்றடிக்கு போய் , வாளியால் தண்ணீர் அள்ளி வயிற்றை கொஞ்சம் நிரப்பினேன். பின், எம் வீட்டுக்கு முன் நின்ற பாண்டி மாங்காயை தட்டி வீழ்த்தி, அதை கடித்துக்கொண்டு, அதே குந்தில், போர்க்கவும் துணி இன்றி கூனிக்குறுகி படுத்துவிட்டேன். "கதிரவன் காலில் ஒளி வீச, காற்று கொஞ்சம் முகத்தை வருட, வயிறு மெல்ல பசி எழுப்ப குந்தில் இருந்து எட்டி பார்த்தேன்!" அறைக்கதவு திறந்து இருந்தது, ஆனால் அவளைக் அங்கு காணவில்லை. அடுப்படி இன்னும் அவள் திறக்கவில்லை. ஆனால் கிணற்றடியில் குளித்த அடையாளம் கண்டேன். அப்படி என்றால் எங்கே ? அப்பத்தான் ஞாபகம் வந்தது, இன்று சனிக்கிழமை. அவள் சனிபகவானை எண்ணி விரதம் இருப்பது வழமை. பொதுவாக காலை எனக்கு சமைத்து தந்து விட்டு தான் ஆலயம் போவாள். இன்று எனோ நேற்றைய கோபம் போல்! நான் தினம் தினம் குடிப்பவன் அல்ல, கொண்டாடம்களில் மட்டும், அல்லது பொதுவாக வெள்ளிக் கிழமைகளில் நல்லாக குடித்து, என் கவலை தீர ஆடுவேன். அதில் என்ன தவறு. என் அறிவுக்கு புரியவில்லை, தேன் மதுவை விடவும் காட்டமான சுரா, சோம பானங்களை தயாரித்து அந்த காலத்திலேயே ஒரு கிளர்ச்சியூட்டியவர்கள் வேதாதி ரிஷிகள் ! அது போகட்டும், ”ஊக்கமளிப்பதும், உற்சாகமளிப்பதுமான இந்த சோமத்தை இந்திரனுக்கு அளியுங்கள்” என அன்று அறை கூவல் விட்டதையும் காண்கிறோம். ”சோமனே, நீ பல பாண்டங்களில் வைக்கப்பட்டிருக்கிறாய், பகல் வேள்வியில் பாலோடும், மாலை வேள்வியில் தயிரோடும் கலக்கப்படுகிறாய், நீ தீரனுக்கு மிக்க மதமளிக்கும் பானமாயிருக்கிறாய்”என்ற வரி எனக்கு நல்லாகவே பிடிக்கும். கொண்டாட்டங்களில் நான் முன்னின்று தீரனாய் இருப்பதும் அதனாலேயே! இது எல்லாம் எங்கே மனைவிக்கு புரியப் போகிறது? "போதை கொள்ளும் அழகை ரசிக்க பேதை உன்னை தினம் நாடி கோதை புனைந்த கூந்தல் வருட கீதை சொல்லி விரதம் இருப்பவளே!" "காதை பொத்தி கண்ணை மூடி கதை கதையாய் புராணம் சொல்லி புதைத்து விடுவாய் ஆசை எல்லாம் பதைத்த உள்ளம் தேடுதே போத்தலை!" போதும் இந்த நரகமென போத்தலில் வாழ்வு நான் காண, போதும் இந்த நரகமென ஆலயம் போகிறவளே, கொஞ்சம் நில் ! யாரால் யாருக்கு நரகம் ? ஏன் சிந்திக்க மாட்டாய்! இருவரின் வாழ்வும் புரிந்துணர்வு இல்லாமல் அழிகிறதே ! நரகம் நாடி போகிறதே!! இந்த உலகில் வாழ்வதே எவ்வளவு சிக்கலாக இருக்கிறது ? எத்தனை பிரச்சனைகள் ? ஒரு நாள் போல் இன்னொரு நாள் இல்லை. ஒரு நாள் மகிழ்ச்சியாக இருக்கிறது... இன்னொரு நாள் துன்பம் வருகிறது. இந்த உலக வாழ்வே இப்படி என்றால் நரக வாழ்வு எப்படி இருக்கும் ? "கொள்ளேன் புரந்தரன், மால், அயன் வாழ்வு; குடி கெடினும், நள்ளேன் என் மனைவியோடு அல்லால்; நரகம் புகினும், எள்ளேன் அவள் அன்பாலே இருக்கப் பெறின்; தேவியே உள்ளேன் பிற மகளீர் உன்னை அல்லாது; என் உத்தமியே !" தேவியே, இந்திரன், திருமால், பிரமன் வாழ்வு எனக்கு வேண்டாம். என் குடியே (குடும்பமே) கெட்டாலும், வேறு ஒருவளுடன் உறவு கொள்ள மாட்டேன். என் மனவியைத் தவிர. நரக வாழ்வே கிடைக்கும் என்றாலும், அதற்காக வருத்தப் படமாட்டேன், அவள் அன்பு இருக்கப் பெற்றால். தேவியே, உன்னைத் தவிர, வேறு மங்கையரை நினைக்க மாட்டேன், எ ன் உத்தமியே என கத்த வேண்டும் போல் இருந்தது, அவள் காதில் விழும் என்றால் ? அப்பொழுது தான் அவள் ஆலயத்தால் வந்துகொண்டு இருந்தாள்! 'சஷ்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும்' என்பது பழமொழி. இந்தப் பழமொழி நாளடைவில் மருவி 'சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும்' என்று மாற்றம் பெற்றுவிட்டது என்று நம்புபவள் என் மனைவி. சஷ்டி திதியிலே விரதமிருந்தால், ‘அகப்பை’ எனப்படும் கருப்பையில் குழந்தை உருவாகும் என்று ஒரு பிரசாங்கமே செய்வாள். பாவங்கள்! இவளிடம் கேட்கும் நண்பர்கள்? இப்படி எத்தனையோ விரதங்கள். சொல்லுவாள். ஆனால் நான் 'சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும்' என்பதைத்தான், இப்படி ஏமாற்றி பிழைக்கிறார்கள் என்பேன். சட்டியும் அகப்பையும் சேர்ந்தால் தானே அதில் செய்ததை [விளைந்ததை] வெளியே எடுக்கலாம் என்பேன். இவன் குடித்து விட்டு உளறுகிறான் என, "போதும் இந்த நரகம்..!" என்பது போல, என்னை விட்டு போய் விடுவார்கள்? ஆமாம். எனக்கும் போதும் இந்த நரகம்..!, என்றவாறு ஒரு உயிரியல் புத்தகத்தை , அவள் வரும் காலடியில் விழும்படி தூக்கி எறிந்தேன். எனக்கு வேறு இனி இருப்பதாக தெரியவில்லை. புத்தகத்தை காலடியில் எறிவது பாவம் என்று குனிந்து எடுத்தவள், அவள் எடுத்த பக்கத்தின் படத்தினதும் அதன் விளக்கத்தையும் பார்த்தவுடன் , அப்படியே நின்று விட்டாள். எனக்கு ஒரே ஆச்சரியம்.. எட்டிப் பார்த்தேன். வெட்கத்தில் தலை குனிந்தபடி, காலால் எதோ தரையில் கிறுக்கினபடி, போதும் இந்த நரகம்..! என , அர்ச்சனை தட்டை , குந்துக்கு அருகில் உள்ள தூண் அருகில் வைத்துவிட்டு என்னையே கண்கலங்கி பார்ப்பதை கண்டேன்! "யாயும் ஞாயும் யாரா கியரோ எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர் யானும் நீயும் எவ்வழி யறிதும் செம்புலப் பெயனீர் போல அன்புடை நெஞ்சம் தாங்கலந் தனவே." என்னுடைய தாயும் அவளுடைய தாயும் யார் யாரோ? என் தந்தையும் அவள் தந்தையும் எந்த முறையில் உறவினர்? நானும் அவளும் எவ்வாறு முன்பு அறிந்தோம்? செம்மண் நிலத்தில் பெய்த மழைநீர் போல, அன்புடைய எம் நெஞ்சம் தாமாக முதல் முதல் ஒன்றுபட்டனவே! இதுவரை நிலவிய இருவரின் நரகமும் எங்கே என்று இருவருக்கும் தெரியவில்லை? "போதும் இந்த நரகம்..!" இருவரின் வாயும் ஒரே நேரம் ஒலித்தது!! [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
"குடியை கெடுத்த குடி" “துஞ்சினார் செத்தாரின் வேறல்லர் எஞ்ஞான்றும் நஞ்சுண்பார் கள்ளுண் பவர்.” (குறள் 926) உறங்கினவர் இறந்தவரை விட வேறுபட்டவர் அல்லர், அவ்வாறே கள்ளுண்பவரும் அறிவு மயங்குதலால் நஞ்சு உண்பவரே ஆவர் என்கிறார் வள்ளுவர். அப்படியான ஒருவர் தான் எங்கள் வீட்டிற்கு பக்கத்தில் வசித்த கந்தசாமி ஆவார். அவர் ஒரு குடிசை வீட்டில் மனைவியுடனும் ஒரு மகளுடனும் வாழ்ந்து வந்தார். அவரின் மகள் பெரிய அழகு ராணி என்று கூற முடியாவிட்டாலும், அவர் ஒரு இளைஞனை பிரமிக்க வைக்கும் ஓரளவு அழகு உள்ளவரே! அவரின் பெயர் ரோஜா என்று எண்ணுகிறேன். மனைவி காலையில் அப்பமும் இடியாப்பமும், தன் குடிசையில் சுட்டு , அயலவர்க்கு விற்பார். மாலையில் இட்டலி, பிட்டு அவித்து விற்பார். ஆனால் கந்தசாமி தொடக்கத்தில் கூலிவேலைக்கு போய் ஓரளவு உழைத்து வந்தாலும், போகப் போக நண்பர்களுடன் சேர்ந்து கொஞ்சம் கொஞ்சமாக குடிக்கப் பழகினார். கந்தசாமியின் இந்த மாற்றத்தை நான் காணும் பொழுது, தொடக்கத்தில், அதன் தன்மை அல்லது போக்கு சரியாக விளங்கா விட்டாலும், பண்டைய சுமேரியாவில், கி மு 1800 ஆம் ஆண்டை அல்லது அதற்கும் முற்பட்ட மதுவை பற்றிய ஒரு சுமேரியன் துதி பாடலின் [Sumerian Hymn to Ninkasi] சில வரிகள் எனக்கு நினைவுக்கு வந்தது. "நின்காசியே, நியே உனது இரு கையாளும் சாராயத்துக்கான இனிக்கும் மாவூறலை [great sweet wort] வைத்து இருக்கிறாய், அதை தேனுடனும் திராட்சை ரசத்துடனும் வடிக்கிறாய், நின்காசி, நீ வடி கட்டும் பெரும் மரத்தொட்டி ஒரு இன்பமான ஒலியை தருகிறது! குடிப்பவர்களிடம் ஒரு கவலையும் இல்லா பேரின்ப மனோ நிலையை ஏற்படுத்தக் கூடியதாக [a blissful mood… with joy in the [innards] [and] happy liver] அதை நீ தயாரித்து எமக்கு அளிக்கிறாய்" [தமிழாக்கம்: கந்தையா தில்லைவிநாயகலிங்கம்] கந்தசாமி, கூலி வேலை முடிந்து வீட்டுக்கு வரும் பொழுது, அவரின் நடையும், தனக்கு தானே சிரித்து, ராஜா மாதிரி ஆனால், தள்ளாடி தள்ளாடி வரும் அவரின் ஒரு கவலையும் இல்லா பேரின்ப மனோ நிலை ஏன் என்பது அப்ப தான் எனக்கு புரிந்தது!. ஆனால் அவர் பிற்காலத்தில் தானே நின்காசி மாதிரி சாராயம் வடிப்பார் என்றோ, அந்த கள்ள சாராயத்தில் என் தந்தையும் தன் உயிரை பறிகொடுப்பர் என்றோ நான் கனவிலும் நினைக்கவில்லை. ரோஜா, தனது சிறுவயதில் நன்றாக படித்ததுடன், மிகவும் மகிழ்வாக எல்லோருடனும் கலகலப்பாக பழகக் கூடியவராகவும் இருந்தார். உடுப்புகளும் ஓரளவு வண்ணம் வண்ணமாக கவர்ச்சியாக உடுப்பார். நாமும் சில வேளை அவர்களிடம் காலை உணவுக்கு அப்பம் வாங்கி உள்ளோம். நானும் தம்பியும் அதை சாப்பிட்டுவிட்டுதான் பாடசாலை போவோம். அப்பத்துக்கு சம்பலும் தருவார்கள். அவரின் மனைவி, அவர் குடிக்க தொடங்கிய பின், சிலவேளை அழுது என் அம்மாவிடம் முறையிடுவார். 'இவர் இப்படியே போனால், காசும் கரையும், உடலும் கரையும் ஏன் வாழ்வே கரையும்' என்பார். நாம் சங்க இலக்கியத்தை பார்க்கும் போது, அங்கு மது பானம் பண்டைய தமிழர் வாழ்வில், ஆண் பெண் இரு பாலாரிடமும், ஒரு முக்கிய பங்கு வகுத்ததை காண முடிகிறது. துணை உணவாக மது புலவர்களுக்கு வழங்கி அரசனும் சேர்ந்து உண்டு மகிழ்ந்ததை, புகழ்பெற்ற சங்க புலவர் ஒளவையார், தனது புறநானுறு 235 இல், "சிறியகட் பெறினே, எமக்கீயும் மன்னே; பெரியகட் பெறினே யாம்பாடத் தான்மகிழ்ந்து உண்ணும் மன்னே;" . என்று எடுத்து உரைக்கிறார். அது மட்டும் அல்ல, பெண்கள் தெளிந்த கள்ளினைக் குடித்து விட்டு, தம் கணவரது நற்பண் பில்லாத பரத்தைமைகளைப் பாடி, காஞ்சி மரத்தின் நீழலில் குரவை [கைகோத்து ஆடப்படும்] ஆடினார் என்று அகநானுறு 336 இல் காண்கிறோம். "தெண் கள் தேறல் மாந்தி மகளிர் நுண் செயல் அம் குடம் இரீஇப் பண்பின் மகிழ்நன் பரத்தைமை பாடி அவிழ் இணர்க் காஞ்சி நீழல் குரவை அயரும்" அப்படியான ஒரு சம்பவத்தை விரைவில் கந்தசாமி வீட்டிலும் காண்பேன் என்று முதலில் நான் நினைக்கவில்லை. ஏனென்றால் குடியை குடி கெடுக்கும் என்று , அவரின் மனைவி கந்தசாமியை பற்றி அடிக்கடி என் அம்மாவுக்கு முறையிடுவதை கண்டுள்ளேன். அப்ப எல்லாம் ரோஜா கூட , தாயின் கையை பிடித்துக்கொண்டு, தனக்கு, அம்மாவும் அப்பாவும் இரவில் தினம் சண்டை என்பதால், காதை பொத்திக்கொண்டு நேரத்துடன் படுக்கைக்கு போவதாகவும், அது தன் படிப்பை, மற்றும் பாடசாலை கொடுத்து விடும் வீட்டு வேலைகளை, முடிக்காமல் போய் விடுவதாகவும், படிப்பில் கவனம் குறைவதாகவும் , தாயுடன் சேர்ந்து என் அம்மாவிடம் முறையிடுவதை கேட்டுள்ளேன். கந்தசாமி ஒரு நாள் கூலி வேலைக்கு போவதை நிறுத்திவிட்டு, தானே சாராயம் காச்சி களவாக வீட்டில் இருந்து விற்க தொடங்கியதை அறிந்தோம். அது எங்களுக்கு அதிர்ச்சியை கொடுத்தது. அமைதியான எம் சுற்றாடல், இனி என்ன பாடு படப்போகுதோ என்று எமக்கு தெரியவில்லை. குடியால் தன் குடியை இப்ப கெடுத்துக் கொண்டு இருக்கும் கந்தசாமி, இனி எத்தனை எம் அயலவர்களை கெடுக்கப் போகிறானோ என்று ஒரே கவலை!. எம் அயலவர் சிலர் காவல் துறையினருக்கு அறிவித்த போதிலும், அவனின் பணம் அவர்களையும் வாங்கி விட்டது என்பதை பின்பு தான் உணர்ந்தோம். அவனுக்கு கையில் பணம் கணக்க புழங்க தொடங்க, வியாபாரம் கலைக்கட்ட, கந்தசாமியை திட்டிய மனைவியும் அதில் பங்கு பற்ற தொடங்கினார். அவரின் நடை உடை கூட கொஞ்சம் கொஞ்சமாக மாறியது. அவர் இப்ப என் அம்மாவுடன் கதைக்கும் பொழுது, மது வாடை அவர் வாயில் காணக்கூடியதாக இருந்தது. ஆனால் இன்னும் கந்தசாமியை திட்டுவதை மட்டும் விடவில்லை. "துணைப்புணர்ந்த மடமங்கையர் பட்டுநீக்கித் துகிலுடுத்தும் மட்டுநீக்கி மதுமகிழ்ந்தும் என்பது போல அவரும் இப்ப இரவு நேரங்களில், கணவனுடன் சேர்ந்து, கொஞ்சம் கூட வெறிக்கக் கூடிய காச்சிய சாராயமும் - இன்பத்தின் மயக்கத்தால் தாம் அருந்தும் மயக்கம் தராத கள்ளினைக் [மட்டினைக் /பீர் ] கைவிட்டு மதுவினை - குடிக்க தொடங்கினார் என் அறிந்தோம். பாவம் ரோஜா அவர் இன்னும் படிக்க வேண்டும், நல்ல உத்தியோகம் எடுக்கவேண்டும், நல்ல குடும்பமாக கௌரவமாக வாழ்வை அமைக்க வேண்டும் என்பதிலேயே இன்னும் இருப்பது போலவே இருந்தது. ஆனால் அதற்கான வாய்ப்பு, இப்ப தாயும் தந்தையுடன் கூடி இரவில் குடித்து இன்புற, எல்லாம் அவளுக்கு தலைகீழாக மாறிவிட்டது. அவரின் முகத்தில் ஒரு கவலை குடிகொண்டதை காணக் கூடியதாக இருந்தது. பொல்லாத காலம், அந்த காலக் கட்டத்தில் தான், இலங்கையில் மிக முக்கியமாக கருதப்படும் பரீட்சையில் ஒன்றான க.பொ.த சாதாரண தரப் பரீட்சையும் நடைபெற்றது. அவளின் முகத்தல் எந்த மகிழ்வையும் காண முடியவில்லை. கடைசிநாள் பரீட்சை எழுத போனவள், வீடு திரும்பவே இல்லை. அவள் பரீட்சை முடிய தன் சக தோழிகளுடன் ஒருவேளை எதாவது உணவு விடுதியிலோ அல்லது எதாவது படம் பார்க்க போய் இருப்பாள் என அன்று இரவும் அவர்கள் தங்கள் வியாபாரத்திலேயே கண்ணும் கருத்துமாக இருந்தனர். ஆனால், யாழ் புகையிரத நிலையத்தில் இருந்து கொழும்பு போகும் கடைசி தபால் புகையிரதம் புறப்பட்டு போகும் பொழுது ஒரு இளம் பெண் தற்கொலை செய்ததால், தபால் வண்டி தாமதமாக புறப்படும் என்ற இரவு செய்தி தான் கந்தசாமிக்கும் மனைவிக்கும் ஒரு சந்தேகத்தை கொடுத்து இருக்கலாம். அப்ப தான் கந்தசாமியின் மனைவி பதைபதைத்து வந்து, என் அம்மாவிடம், என்னை அங்கு போய் பார்க்கும் படி கூறினார். கந்தசாமியும், அவரின் மனைவியும், தங்களுக்கு மட்டும் அல்ல எங்கள் அயலவர்களுக்கும், ஏன் எங்கள் அப்பாவின் சாவிற்கும் காரணமாக இருந்தாலும், ஒருவர் உதவி என வரும் பொழுது மன்னிப்பதே மனித அழகு என்பதாலும், இந்த சூழ்நிலையிலும், தன் பண்பாட்டிலும் பழக்கவழக்கங்களில் சற்றும் மாறாத ரோஜாவின் நல்ல இயல்பும், என்னை அங்கு போய் தேட வைத்தது. "வாய் மடித்து கண் சுழன்று வான் உயர கை அசைத்து வாட்டம் இன்றி துள்ளி சென்றவளே வான் இருண்டும் வராதது எனோ ?" "மணலில் கதிரவன் புதையும் மாலையில் மனதை கல்லாக்கி திங்கள் நன்னாளில் மரணம் தழுவ தொடர்வண்டியின் முன் மடையர் போல் பாய்ந்தது எனோ ?" "செவ்வாய் நீயோ வீடு வந்தாய் செவ் இதழ் நீயோ திறக்கவில்லை செல்வச் செழிப்பாய் பல்லக்கில் வராமல் செத்து சாக்கில் வந்தது எனோ ?" "பள்ளி பையை ரயில் பாதையில் பகுதி பகுதியாக கண்டு எடுத்தேன் பரவி இருந்த இரத்த சொட்டுக்குள் பள்ளி புத்தகம் சிவந்தது எனோ?" "மச்சம் கொண்ட உன் சிறுகால் மல்லாந்து என்னை பார்ப்பதை கண்டேன் மயான அமைதியை விட்டு ரோஜாவே மடிந்தகால் நானென்று சொல்லாதது எனோ?" அது அவளே தான். எனக்கு ஒரே அதிர்ச்சி. என்ன செய்வது என்று தெரியவில்லை. இனி காவற்படை விசாரணை மற்றும் தாய் தந்தையரின் அடையாள உறுதி படுத்துதல் போன்ற நடைமுறைகளுக்கு பின்பே செய்வாய் அவளின் பிரேதம் வீட்டிற்கு கொடுக்கப் படும் என்றார்கள். குடி குடியை மட்டும் கெடுக்கவில்லை, அவர்களின் பரம்பரையே இல்லாமல் ஆக்கிவிட்டது. இனி அவர்கள் திருந்தி தான் என்ன பயன்? நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
"தேவதை" யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்ட இளம் பொறியாளர் ரவி, கொழும்பில் இருந்து லண்டன் செல்லும் விமானத்தில், பல வருட கடின உழைப்புக்குப் பிறகு ஒரு மைல்கல்லாக உணர்ந்த ஒரு பயணத்தைத் தொடங்கினான். அவன் தனது இருக்கையில் அமர்ந்ததும், பயணிகளுக்கு உதவி செய்யும் விமானப் பணிப்பெண்ணை அவனால் கவனிக்காமல் இருக்க முடியவில்லை. விமான அறையின் வரம்புகளை மீறியதாகத் தோன்றும் ஒரு அழகிய அழகை அவள் பெற்றிருந்தாள். அவளது அழகும் வசீகரமும் ரவியை வசீகரித்தது, உண்மையிலேயே அசாதாரணமான ஒருவளை தான் சந்தித்த உணர்வை அவனால் அசைக்க முடியவில்லை. அவளைச் சுற்றி எதோ ஒரு அமைதியும் இனம் தெரியாத அரவணைப்பும் இருந்தது, அது அவனை உள்ளே இழுத்து, அவனை மயக்கியது. ஆனால் எனோ இது கண்டவுடன் ஏற்பட்டது அல்ல, கிட்டதட்ட ஒரு மாதத்துக்கு முன், ஒரு வார இறுதி நாளில், மதிய உணவிற்குப் பின், தொலைக்காட்சியில் செய்திகள் மற்றும் விளையாட்டுகளை பார்த்து இரசித்தபின், ஒரு நல்ல உடலுக்கு ஏற்ற வெப்பநிலையில், தனது அறையில் சிறுதுாக்கம் கொள்ள போதுமான நேரம் அவனுக்கு கிடைத்தது, "பகலிர வடியேன் படுத்தபோ தெல்லாம் தூக்கமாம் பாவிவந் திடுமே இகலுறு கனவாம் கொடியவெம் பாவி எய்துமே என்செய்வோம் என்றே உகலுற உள்ளே நடுங்கிய நடுக்கம் உன்னுளம் அறியுமே எந்தாய்" திருவருட்பிரகாச வள்ளலார் அருளிய திருவருட்பாவில் பகலிலும் இரவிலும் படுத்த போதெல்லாம் தூக்கமாகிய பாவி வந்து சூழ்ந்து கொள்ளுமே என்றும், மாறுபடும் கனவாகிய கொடிய வெவ்விய பாவி வந்து காட்சி தந்து வருத்துமே, இதற்கு என்ன செய்வது என்று, மனதில் நான் அஞ்சி நடுங்கிய நடுக்கத்தை நீவீர் அறியுமன்றோ என்று வினாவினார். ஆனால் ரவிக்கு? ஒரு தேவதை கனவில் தோன்றி, இதயத்தில் பனித்துளி போல விழுந்து, உயிரில் அன்பால் கலந்து, காதலால் உருக்கி, அவனின் உள்ளத்தில் அவள் புகுந்து விட்டாள். ஆனால் முழு உருவமும் ஒன்றாக அவனுக்கு நினைவில் இல்லை, அவள் அவனுக்கு இதுவரை பரிச்சயமானவளாகக் கூடத் தெரியவில்லை. அந்தப் பெண் ஒரு சாதாரணப் பெண்ணைப் போல தோற்றமளிக்கவில்லை, அவள் ஒரு பறவை அல்லது விமானம் போல இருபுறமும் இரண்டு இறக்கைகள் கொண்ட தேவதை. ஆனால் அவள் உண்மையில் யார் என்று இன்னும், நித்திரைக்குப் பின் தேடிக்கொண்டே இருக்கிறான்? ஒரு மாலை பொழுதில், நீண்ட ஒரு மண் தொடர்பாதையில் ஒரு பெரிய மரம் ஒன்று அவன் கண்ணில் தெரிந்தது. அது பசுமையான, பூக்கள் பூத்து குலுங்கிய பெரிய மரம் அங்கு பறவையும் ,தேனீக்களும் அளவுக்கு அதிகமாக இருப்பதைக் பார்த்து மயங்கியும் வியந்தும் நின்றான். அப்பொழுது ஏதோ ஒரு ஒலி அவனை திசை திருப்பியது. என்ன என்று திரும்பி பார்த்தான். அவன் கண்ணுக்கு தெரிவதும் தெரியாதது போலவும் ஒரு மயங்கிய ஒருவம். உற்று கவனித்தான். அது ஒரு மர்மமான பெண், அவளுடைய தலைமுடி சூரியனைப் போல பொன்னிறமாகவும், அவளுடைய தோல் கடற்கரையின் மணல் போல வெண்மையாகவும் இருந்தது. அவள் அணிந்திருந்த முத்துக்கள் போல அவள் புன்னகை பிரகாசமாக இருந்தது. அவள் குறுகிய அழகிய மேலாடையுடன், பாவாடை தாவணியுடன் அவனை நெருங்கினாள். அவளின் சொல்ல முடியாத அழகில் அவனால் நடக்கவோ, முழங்கால்களை அசைக்கவோ முடியவில்லை. அப்படியே திகைத்து நின்றான். அவளின் நீண்ட கூந்தல், மல்லிகைப் பூவுடன் காற்றில் ஆடியது. அப்போது அவள் இடை தாவணிக்குள்ளால் மெல்ல மெல்ல தெரிந்தது. அவள் இடையில் சறுக்கி விளையாடலாம் போல, மூன்றாம் பிறை போன்ற வளைவில் அவள் அழகிய இடை இருந்தது. ஆனால் அது முழுமையாக பார்க்கவிடாமல், மின்னி மின்னி மறைந்துவிட்டது. "அலங்கு இதழ் நெய்தல் கொற்கை முன் துறை இலங்கு முத்து உறைக்கும் எயிறு கெழு துவர்வாய், அரம்போழ் அவ்வளைக் குறுமகள் நரம்பு ஆர்த்து அன்ன தீம்கிளவியளே!" அது மட்டுமா, அசைகின்ற இதழ்களைக் கொண்ட நெய்தல் மலர்கள் நிறைந்த கொற்கை நகரத்தின் கடற்கரை. அங்கே கிடைக்கும் முத்துகளைப் போன்றவை என் காதலியின் பற்கள். அந்த அழகிய பற்கள் பொருந்திய அவளுடைய வாய், செக்கச் சிவந்திருகும். அரத்தால் அராவிச் செய்தது போன்ற அழகான வளையல்களை அவள் அணிந்திருப்பாள். யாழ் நரம்பு ஒலிப்பது போன்ற இனிய சொற்களைப் பேசுவாள் என்று ஐங்குறுநூறு உரைத்தது போல அவனுக்கு அவள் தெரிந்தாள். என்றாலும் முழுமையாக ரசிக்க அவனால் முடியவில்லை, ஏன் என்று அவனுக்குத் தெரியவில்லை? யாரும் அவனை தட்டி எழுப்பவில்லை, தேவையற்ற கடும் சத்தங்கள் எதுவும் ஏற்படவில்லை. ஆனால் அந்த பொறுத்த நேரத்தில் அவன் தூக்கம் கலைந்தது. அவள் முகத்தை நினைவுபடுத்த முயன்றான். அவனால் முழுதாக முடியவில்லை, என்றாலும் யாராலும் பின்பற்ற முடியாத தனித்துவமான புன்னகை அவளிடம் இருந்தது அவனுக்கு ஞாபகம் வந்தது. நீலநிற நீலமணி போல பிரகாசமாக இருந்த அவள் கண்கள், அவன் இன்னும் மறக்கவில்லை. ரவி விமானத்தின் கேபினில் [இருக்கை அறை] உள்ள முழு பகுதியையும் அவன் உள்ளே போகும் பொழுது பெரிதாக கவனிக்கவில்லை, அவன் தனக்கு ஒதுக்கப்பட்ட இருக்கையையும் அதை சூழ்ந்த பகுதியை மட்டும் ஆய்வு செய்தான், ஆனால் அந்த குறுகிய இடத்திலும் யாரோ ஒருவர் அவன் கண்ணில் பட்டார். விமானப் பணிப் பெண்ணாக, ஆனால், அவன் கனவில் கண்ட தங்க முடியுடன். அந்த கனவுத் தேவதை எப்படி இருந்ததோ அதே போலத்தான் அவனுக்கு இருந்தது. அவன் மிகவும் கூர்மையாக கண்களை மூடாமல் அப்படியே அதிசயமாக பார்த்தான். அவளும் வெள்ளை மணலின் தோலைப் பெற்றிருந்தாள். அவள் பெயர் ஒயிலழகி என அவள் மார்பில் தொங்கிக் கொண்டு இருந்த பெயர் அட்டை காட்டியது. அவள் அருகில் வந்த போது, அவன் இதயம் மேலும் கடினமாக உந்தத் தொடங்கியது. அவள் பெயர் தனித் தமிழில் இருந்தது, மேலும் அவளைப் பார்க்க அவனுக்கு ஒரு ஆவலை கொடுத்தது. என்றாலும் அவள் பின்பக்கமாக சமையல் அறைக்கு போய்விட்டாள். இனி விமானம் பறந்து, ஒரு நிலையான நிலைக்கு வந்த பின்பு தான் அவள் சமையலறையிலிருந்து வெளியே வருவாள் என்பதால், அவன் அவளுக்காக காத்திருந்தான். அவன் ஒன்றரை மணி நேரம் காத்திருந்த பிறகு, அவன் சைவ சிறப்பு உணவு கேட்டிருந்ததால், அவள் வெளியே அவன் அருகில் நேரத்துடன், மற்றவர்களுக்கு கொடுக்கும் முன், சாப்பாட்டுடன் வந்தாள். அவள் அவனைப் பார்த்து ஒரு புன்னகையுடன், உங்கள் சைவ உணவு இதோ என்று கொடுத்தாள். அதே கவர்ச்சியான சிரிப்பு! அவன் கனவில் நடந்த ஒவ்வொரு சம்பவமும் அவனுக்கு நினைவிற்கு வந்து, இப்ப காண்பது எல்லாம் ஒரு ஃப்ளாஷ்பேக்காக [flashback / நினைவு மீட்பாக] அவனுக்கு இருந்தது. ரவி தன்னை அறியாமலே, வாய் பிளந்து ஆச்சரியப்பட்டான். விமானம் முன்னேறும் போது, ரவி தன்னால் முடிந்த போதெல்லாம் ஏர் ஹோஸ்டஸைப் பார்த்தான். அப்போதெல்லாம் ஒயிலழகி தன் கவனத்தை திருடுவதைக் கண்டான். அவளிடம் ஏதோ புரியாத பரிச்சயம் இருந்தது, அவனது நினைவுகளின் ஓரங்களில் ஏதோ ஒன்று இழுத்துச் சென்றது. ஒரு சில உரையாடலைத் அவன் அவளுடன் தொடங்கிய பிறகுதான், அவர்களை ஒன்றாக இணைக்கும் இன்னும் ஒரு தொடர்பை ரவி கண்டுபிடித்தான். விமானப் பணிப்பெண் ரவியின் சொந்த ஊரான யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர் என்று அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது. அவள் உடல் மலர்போல் மெல்லியது; பொன்போல் சிவந்த நிறம்; நிலாமுகம்; பிறைநெற்றி; கயல் விழிகள்; முத்துப் பற்கள்; பவள இதழ்; மேகம் போன்ற கூந்தல்; மிக மெல்லிய இடை; அவன் கற்பனையில் மிதந்தான். முதலில், அவர்களின் பரிமாற்றங்கள் தற்காலிகமாக இருந்தாலும், போகப் போக, அது மாற்றம் அடையத் தொடங்கியது. "இளநீரை சுமந்திருக்கும் தென்னை மரமல்ல! மழை மேகம் குடியிருக்கும் குளிர் நிலவும் அல்ல! இங்கும் அங்கும் நீர்பாயும் நீரோடை அல்ல! இதற்கு மேலும் இலக்கியத்தில் வார்த்தை ஏது சொல்ல?" அவன் கண்களை மூடி அவளை ரசித்துக்கொண்டு இருந்தான். "சார் நீங்கள் தூக்கமா ?", ஒரு தேன்போல் தித்திக்கும் மொழி கேட்டு, சட்டென விழித்தான். "கடைக்கணால் கொல்வான்போல் நோக்கி நகைக் கூட்டம் செய்தான் அக் கள்வன் மகன்." என்பது போல, கடைக்கண்ணால் அவளைக் கொல்வதுபோல் பார்த்துப் புன்னகை செய்தான்! . "கண்ணொடு கண்ணிணை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள் என்ன பயனும் இல" ஒருவர் கண்களோடு ஒருவர் கண்கள் மோதின. இருவரின் பார்வைகளும் தாமே பேசிக்கொண்டன. அந்த மௌன அமைதியை கிழித்துக்கொண்டு, ரவி: "உனக்குத் தெரியுமா?, எங்கள் வீட்டிற்கு அருகிலுள்ள மாம்பழத் தோட்டங்களில் பழுத்த மாம்பழங்களின் வாசனை காற்றில் மிதந்து எங்கள் வீட்டிற்கு வரும், அது இன்றும் என்னால் மறக்க முடியாத ஒன்று." என்றான். ஏர் ஹோஸ்டஸ் ஒயிலழகி: "மாம்பழத்தோட்டங்களா? ஓ, எனக்கும் அது ஞாபகம் இருக்கு. மா மரங்கள் பூத்துக் குலுங்கும் போது காற்றில் ஏதோ ஒரு மந்திரம் இருக்கிறது. முழு உலகமும் வண்ணமும் நறுமணமும் கொண்டு உயிர் பெறுவது போல் அதை நானும் உணருவேன்" என்றாள். அவர்களின் உரையாடல்கள் மெல்ல மெல்ல யாழ்ப்பாணத்தில் தங்களுக்குப் பிடித்த குழந்தைப் பருவ நினைவுகளைப் பற்றிய லேசான கேலியிலிருந்து, நேரம் அவ்வப்போது கிடைக்கும் பொழுது அது நீண்டு, வாழ்க்கை, காதல் மற்றும் பிரபஞ்சம் பற்றிய ஆழமான விவாதங்கள் வரை சென்றன. ரவி ஒரு இளம் பொறியியலாளராக தனது அபிலாஷைகளைப் ஒயிலழகியுடன் பகிர்ந்து கொண்டான், அவளும் உலகில் ஒரு மாற்றத்தை உருவாக்குவதற்கான விருப்பத்தால் தூண்டப்பட்ட புதுமைக்கான தனது ஆர்வம் மற்றும் விமானப் பணிப் பெண்ணாக தனது சொந்த பயணங்கள் பற்றியும் பேசினாள். விமானம் பறந்து கொண்டு, ஆனால் இன்னும் தரை இறங்க நேரம் நீண்டு கொண்டே செல்ல, ரவியும் ஒயிலழகியும் ஒருவருக்கொருவர் நெருங்குவதைக் கண்டனர், ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் தொடர்பு ஆழமானது. அவர்கள் அன்பை அதன் தூய்மையான வடிவத்தில், எந்த கட்டுப்பாடுகளாலும் கட்டமைக்கப்படாத ஒரு சுதந்திர வெளியில், எல்லைகளைத் தாண்டிய காதல் பற்றியும் பேசினர். ஹீத்ரோ விமான நிலையத்தில் தரையிறங்கியவுடன், பிரிவின் தவிர்க்க முடியாத தருணம் இருவருக்கும் பெரியதாக இருந்தது. ஆனாலும், பரபரப்பான கூட்டத்தின் நடுவே நின்றுகொண்டிருந்த போது, ரவியும் விமானப் பணிப்பெண், ஒயிலழகியும் ஒரு கணப் பார்வையைப் பகிர்ந்து கொண்டனர், அது மீண்டும் ஒரு முறை இணைவதற்கான மௌனமான வாக்குறுதி போல இருவருக்கும் இருந்தது. ரவி: "இந்த நிமிடம் முடியவேண்டாம். நான் உன்னுடன் எப்பவும் அருகில் இருக்கத் தோணுது" என்றான். ஏர் ஹோஸ்டஸ்: "நேரம் என்பது ஒரு வேடிக்கையான விடயம் , ரவி. அது எப்பொழுதும் புரிந்து கொள்ள முடியாத வழிகளில் வளைந்து நெளிந்து செல்கிறது. ஆனால் நம் இணைப்பு ... அதுதான் வாழ்க்கை! நம்மை எங்கு அழைத்துச் சென்றாலும் தாங்கும் ஒன்று." என்றாள். ரவி: "நான் உன்னை மீண்டும் பார்க்கலாமா?" ஏர் ஹோஸ்டஸ்: "ஆமாம் ரவி. அதுவரை, நாங்கள் பகிர்ந்து கொண்ட நினைவுகளைப் சுமந்து செல்லுங்கள், உடலில் இல்லாவிட்டாலும் உள்ளத்தில் நான் எப்போதும் உங்களுடன் இருப்பேன் என்பதை அறிந்து கொள்ளுங்கள்." என்றாள். பயணிகளின் கடலில் ஏர் ஹோஸ்டஸ் மறைந்து போவதை ரவி கனத்த இதயத்துடன் பார்த்துக் கொண்டிருந்தான், ஒவ்வொரு அடியிலும் அவளது வடிவம் மங்கியது. ஆயினும்கூட, பிரிந்த அந்த தருணத்தில், அவர்களின் இணைப்பு தூரம் அல்லது நேரத்தின் வரம்புகளால் பிணைக்கப்படவில்லை என்பதை அவன் அறிந்தான்! நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
எனது அறிமுகம்
kandiah Thillaivinayagalingam replied to kandiah Thillaivinayagalingam's topic in யாழ் அரிச்சுவடி
அகவை என்பது ஒரு எண்ணிக்கை அவ்வளவுதான்! முக்கியம் வேண்டியது ஆரோக்கியமும் வலிமையையும் நல்ல சிந்தனையும் கருத்தாடலும் அது தான் என் எண்ணம் அது இருக்கும் மட்டும் நீ இளைஞனே ஆகவே நான் மௌனமாகிறேன் -
எனது அறிமுகம்
kandiah Thillaivinayagalingam replied to kandiah Thillaivinayagalingam's topic in யாழ் அரிச்சுவடி
இது தான் நான், யாழ் அத்தியடி வீட்டில் நீங்களே வயதை தீர்மானித்து, உங்கள் ஊகம் சரியா பிழையா என்பதை சரிபாருங்கள். கட்டாயம் நான் ஓய்வு வயதை தாண்டிய ஒருவன் ! -
"முனிவராய் இருந்தவனுக்கு சொர்க்கம் காட்டினர்!" "இருளுக்கும் வெளிச்சத்திற்கும் இடையில் இரவு மெல்ல கீழே இறங்க இனிய விடியலில் நானும் எழும்ப இருவானரமும் ஒருமழலையும் இறங்கும் நேரமிது!" "சிறிய கால்களின் காலடி ஓசை சிறுவர் அறையில் மெல்ல ஒலிக்க சிரமப்பட்டு திறக்கும் கதவின் ஒலி, சித்தம் குளிர என்னைத் தழுவுது!" "கூடத்தில் இருந்த விளக்கில் பார்க்கிறேன் கூரையில் இருந்து படிக்கட்டில் இறங்கினம் கூத்தாடி கண்ணனுடன் நடன ராதை கூற்றுவன் பறித்த அம்மம்மாவாய் வாறா!" "அம்மம்மாவின் பெயரை தனது ஆக்கி பத்தாம் நினைவாண்டில் பிறந்த 'ஜெயா' பெரிய தம்பி 'கலை'யின் கைபிடித்து எதோ ரகசியம் இருவரும் பேசினம்!" "அம்மாவின் நெஞ்சில் சாய்ந்த படி குட்டிமழலை 'இசை' யும் பின்னால் வாரான் என் மடியில் படுத்து சிரிக்கிறான் ஆட்டி ஆட்டி நித்திரை ஆக்கிறேன்!" "சில கிசுகிசு, பின்னர் மௌனம் சின்னஞ் சிறுசுகள் ஒன்றாய் சேர்ந்து சிறுசதி ஒன்றைத் திட்டமிடுகிறார்கள் சிறுஆச்சரியம் தந்து மகிழ்ச்சி தரவே!" "படிக்கட்டில் இருந்து திடீரென விரைந்து பதுங்கி இரண்டு கதவால் வந்து பகலோன் நேரே வந்தது போல பக்கத்தில் வந்து திகைக்க வைத்தனர்!" "மடியின் மேல் 'இசை'க்கு முத்தமிட்டு மற்றவர் நாற்காலியின் கையில் எற மடக்கி பிடித்தனர் தப்ப முடியவில்லை மத்தியில் அகப்பட்டு மருண்டு விழிக்கிறேன் !" "முத்தங்களால் என்னை விழுங்கி விட முதுகில் ஒருவர் ஏறிக் கொள்ள முழக்கமிட்டு மற்றவர் துள்ளிக் குதிக்க முனிவராய் இருந்தவனுக்கு சொர்க்கம் காட்டினர்!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
"சிலுவையை மீண்டும் சுமப்போம்!" "உன்னைக் காட்டி கொடுத்தான் ஒருவன் சிலுவையில் நீ நின்றாய்! அன்னை பூமியில் ஒன்றாய் உண்டவன் சிலகாசுக்கு விலை போனான்!" "அன்று முளைத்த இந்த வஞ்சகன் சிறிதாய் பெரிதாய் வளர்ந்து இன்று எம் மத்தியிலும் வாழ்கிறான் சிரித்து கழுத்தையும் அறுக்கிறான்!" "உன்னைக் நேசித்த உன் தொண்டர்கள் சிலுவையை தோலில் சுமந்தனர்! அன்னை பூமி முழுவதும் உன் சிந்தனையில் வழி காட்டினர்!" "அன்று கண்ட மனித நேயம் சிறிதாய் பெரிதாய் வளர்ந்து இன்று நாம் உரிமையாய் வாழ சிலுவையில் எம்மை அறைகிறோம்!" "உன்னைக் கண்டதால் தியாகம் அறிந்தோம் சிலுவையின் பெருமை உணர்ந்தோம்! அன்னை தெய்வத்தின் அருமை அறிந்தோம் சிறந்த பண்பு கண்டோம்!" "அன்று நம்பி மோசம் போனதால் சிதைந்து மதிப்பு இழந்தோம்! இன்று படும் துயரம் போக்க சிலுவையை மீண்டும் சுமப்போம்!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
"உனக்கு தலை குனியும் !" நேற்று: "சிந்து சம வெளியில் இயற்கை ஒன்றி இவன் இருந்தான் குந்து வைத்து பல மாடி கட்டி நன்று இவன் வாழ்ந்தான் வந்து ஏறு குடிகள் ஆரியராம் வென்று இவன் தாழ்ந்தான் தந்து மயக்கி மனு தர்மத்தால் நேற்று இவன் சூத்திரனானான்!" இன்று: "புராணங்கள் - பொய் புரட்டுகள் இன்று இவன் பழகிவிட்டான் காரணங்கள்- சான்று உண்மைகள் இன்று இவன் விலக்கிவிட்டான் தோரணங்கள்- ஆலாத்தி அபிசேகங்கள் இன்று இவன் வாழ்க்கையாயிற்று சரணங்கள்[முருகா!] - ஸ்கந்தனை கொன்று என்று இவனைக் காப்பற்றுவாய்!" நாளை: "கண்ணை திறந்து கோபுரத்தை பார் சிற்பம் தலை குனியும்! உன்னை அறிந்து வேதத்தை படி தேவர் தலை குனியும்!! பொண்ணை புரிந்து சடங்கை நடத்து மந்திரம் தலை குனியும்!!! விண்ணை மறந்து மண்ணில் நில் மாயை தலை குனியும்!!!!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
- 1
-
"அவளோடு என் நினைவுகள்…" "உன் நினைவு மழையாய் பொழிய என் விழியோரம் கண்ணீர் நனைக்க மென்மை இதயம் அன்பால் துடிக்க அன்பின் ஞாபகம் கதையாய் ஓடுது " "மனக் கடல் குழம்பி பொங்க மவுனம் ஆகி நீயும் மறைய மண்ணை விட்டு நானும் விலக மங்கள அரிசியும் கை மாறியதே!" நிகழ்வு நினைவாற்றல் [Episodic Memory] உண்மையில் ஒருவரின் வாழ்வில் முக்கியமான ஒன்று, ஏனென்றால், அவை தனிப்பட்ட அனுபவங்களை நினைவு படுத்துவதுடன், அவரின் வாழ்வை மற்றும் புரிந்துணர்வுகளை [கண்ணோட்டங்களை] வடிவமைக்கக் கூடியதும் ஆகும். அப்படியான "அவளோடு என் நினைவுகள்…" தான் உங்களோடு பகிரப் போகிறேன். நான் அன்று இளம் பட்டதாரி வாலிபன். முதல் உத்தியோகம் கிடைத்து, இலங்கையின், காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை ஆகிய மூன்று நிருவாக மாவட்டங்களைத் தன்னுள் அடக்கிய தென் பகுதியில் பணியினை பொறுப்பேற்றேன். அது சிங்களவரை 94% அல்லது சற்று கூட கொண்ட ஒரு பகுதியாகும். ஆகவே அங்கு எப்படியாவது சிங்களம் கற்க வேண்டிய அவசியம் எனக்கு இருந்தது. எப்படியாவது புது அனுபவம் புது தெம்பு கொடுக்கும் என்ற துணிவில் தான் அந்த பதவியை நான் பொறுப்பேற்றேன் முதல் நாள், அங்கு உள்ள பணி மேலாளரை சந்தித்து, என் பணி பற்றிய விபரங்களையும் மற்றும் அலுவலகம், தொழிற்சாலை போன்றவற்றையும் சுற்றி பார்க்க அன்று நேரம் போய்விட்டது. என்றாலும் இறுதி நேரத்தில் என் கடமையை ஆற்ற எனக்கு என ஒதுக்கிய அலுவலகத்தில் சற்று இளைப்பாற சந்தர்ப்பம் கிடைத்ததுடன், அங்கு எனக்கு உதவியாளராக இருப்பவர்களின் அறிமுகமும் கிடைத்தது. அங்கு தான் அவளை முதல் முதல் கண்டேன்! அவள் தான் என் தட்டச்சர் மற்றும் குமாஸ்தா [எழுத்தர்] ஆகும். அவளின் பெயர் செல்வி டயாணி பெர்னான்டோபுள்ளே, பெயருக்கு ஏற்ற தோழமையான இயல்பு அவள் தன்னை அறிமுகப் படுத்தும் பொழுது தானாக தெரிந்தது. அழகும் அறிவும் பின்னிப்பிணைந்து அவளை ஒரு சிறப்பு நபராக சொல்லாமல் சொல்லிக்கொண்டு இருந்தது. அவளுக்கு கொஞ்சம் கொஞ்சம் தமிழும் தெரிந்திருந்தது எனக்கு அனுகூலமாகவும் இருந்தது. செம்பொன்னில்செய்து செங்குழம்புச் சித்திரங்கள் எழுதிய இரு செப்புகளை ஒரு பூங்கொம்பு தாங்கி நிற்பது போன்று பொலியும் காட்டு முலைக்கொடி போன்ற அவளின் முழு உருவமும், அதில் வில் போல் வளைந்து இருக்கும் புருவமும் மலரிதழ் போன்ற இனிய சொல் பேசும் சிவந்த வாயும், நல் முத்துக்கள் சேர்ந்தது போன்ற வெண்மையான பல்லும், அசைகின்ற மூங்கில் போன்ற பருத்த தோளும், காந்தள் மலர் போன்ற மெல்லிய விரல்களும், பிறரை வருத்தும்,எழுச்சியும் இளமையும் உடைய மார்பகங்களையும் பிறர் பார்த்தால் இருக்கிறதே தெரியாத வருந்தும் இடையும் யாரைத்தான் விட்டு வைக்கும். அடுத்தநாள் வேலைக்கு போகும் பொழுது, அவளும் பேருந்தால் இறங்கி நடந்து வருவதை கண்டேன். நான் தொழிற்சாலைக்கு கொஞ்சம் தள்ளி அரச விடுதியில் தங்கி இருந்தேன். ஆகவே மோட்டார் சைக்கிலில் தான் பயணம். ஆகவே ஹலோ சொல்லிவிட்டு நான் நகர்ந்து போய்விட்டேன். உள் மனதில் அவளையும் ஏற்றி போவமோ என்று ஒரு ஆசை இருந்தாலும், இன்னும் நாம் ஒன்றாக வேலை செய்யவோ, ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ளவோ இல்லாத நிலையில், அதற்கு இன்னும் நேர காலம் அமையவில்லை என்று அதை தவிர்த்தேன். என் அறையில் நானும், அவளும் ஒரு பியூன் [சேவகன்] மட்டுமே. முதல் ஒன்று இரண்டு கிழமை, எனக்கு அங்கு இதுவரை நடந்த வேலைகள், இப்ப நடப்பவை , இனி என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி அலசுவதிலேயே காலம் போய் விட்டது. நல்ல காலம் எனக்கு கீழ் நேரடியாக வேலை செய்யும் உதவி பொறியியலாளர்கள், மேற்பார்வையாளர்கள் எல்லோரும் ஆங்கிலம் பேசுவார்கள். வேலையாட்களும் மற்றவர்களுடனும் தான் மொழி பிரச்சனை இருந்தது. தொழிற்சாலைக்குள் இவர்களின் உதவி வரப்பிரசாதமாக இருந்தது. அதே போல, அலுவலகத்திற்குள் இவளின் உதவிதான் என்னை சமாளிக்க வைத்தது. மூன்றாவது கிழமை, நான் கொஞ்சம் ஓய்வாக இருந்தேன், அவளின் வேலைகளும் குறைந்துபோய் இருந்தது. பியூன் ஒரு கிழமை விடுதலையில் போய்விட்டார். 'ஆயுபோவான் சார்' என்ற அவளின் குரல் கேட்டு திரும்பினேன். அவள் காபி கொண்டுவந்து குடியுங்க என்று வைத்துவிடு தன் இருப்பிடத்துக்கு போனாள். இது தான் நல்ல தருணம் என்று, அவளை, அவளுடைய காபியுடன் என் மேசைக்கு முன்னால் இருக்கும் கதிரையில் அமரும் படி வரவேற்றேன். அவள் கொஞ்சம் தயங்கினாலும், வந்து அமர்ந்தாள். நாம் இருவரும் அவரவர் குடும்பங்கள், படித்த இடங்கள் மற்றும் பொது விடயங்களைப்பற்றி காபி குடித்துக்கொண்டு கதைத்தோம். அது தான் நாம் இருவரும் முதல் முதல் விரிவாக, ஒருவரை ஒருவர் அறிமுகப் படுத்திய நாள். அவள் ஒருவரின் வீட்டில், ஒரு அறையில் வாடகைக்கு இருப்பதாகவும், ஆனால், நேரடியான பேருந்து இல்லாததால், இரண்டு பேருந்து எடுத்து வருவதாகவும், தன் சொந்த இடம் சிலாபம் என்றும் கூறினாள். அப்ப தான் அவளுக்கு கொஞ்சம் கொஞ்சம் தமிழ் தெரிவதின் காரணம் புரிந்தது. சிலாபம், புத்தளம், நீர்கொழும்பு போன்ற கரையோரப் பகுதிகளில், தங்கள் பாதுகாப்புக்காகப் போர்த்துக்கேயரால் குடியமர்த்தப் பட்ட கத்தோலிக்க மதத்திற்கு மாற்றப் பட்ட தமிழ் பரதவர்களது பிள்ளைகள் முதலில் கத்தோலிக்க பாடசாலைகளில் தமிழில் கற்றார்கள். பிற்காலத்தில் அந்த பாடசாலைகளில் இருந்த தமிழ் மொழிப் பிரிவு மூடப் பட்டு அனைவரும் சிங்கள மொழி ஊடாக கற்க பணிக்கப் பட்டார்கள். எனவே பிள்ளைகள் வளர்ந்து பெரியவர் ஆனதும், வீட்டு மொழியும் இயற்கையாக சிங்களம் ஆகி, முழுமையாக இன மாற்றம் 20 ஆம் நூற்றாண்டில் அடைந்தார்கள் என்று நான் முன்பு படித்த வரலாறு நினைவுக்கு வந்தது. இந்த ஒருமைப்படுத்தலுக்கு (Assimilation) காரணமானவர் ஒரு கத்தோலிக்க மதகுருவே ஆகும்! பேராயர் எட்மன்ட் பீரிஸ் (பிறப்பு 27-12-1897) ஆவர்!! அன்று தொடங்கிய கொஞ்சம் நெருங்கிய நட்பு, நாளடைவில் வளர, அவளின், அழகும், இனிய மொழியும், நளினமும் கட்டாயம் ஒரு காரணம் என்று சொல்ல வேண்டும். அவளும் வீட்டில் இருந்து தானே சமைத்த சிங்கள பண்பாட்டு சிற்றுண்டிகள், சில வேளை மதிய உணவும் கொண்டு வந்தாள். நானும் கைம்மாறாக காலையும் மாலையும் என் மோட்டார் சைக்கிலில் ஏற்றி இறக்குவதும், மாலை நேரத்தில் இருவரும் கடற்கரையில் பொழுது போக்குவதும், சில வேளை உணவு விடுதியில் சாப்பிடுவதுமாக, மகிழ்வாக நட்பு நெருங்க தொடங்கியது. கொஞ்சம் கொஞ்சமாக, அவள் என்னுடன் பயணிக்கும் பொழுது, பின்னால் இருக்கையை பிடிப்பதை விடுத்து, தெரிந்தும் தெரியாமலும், தான் விழாமல் இருக்க, என்னை இருக்க பிடிக்க தொடங்கினாள். "செண்பகப் பூக்களை சித்திரை மாதத்தில் தென்றலும் தீண்டியதே தென்றலின் தீண்டலில் செண்பகப் பூக்களில் சிந்தனை மாறியதே சிந்தனை மாறிய வேளையில் மன்மதன் அம்புகள் பாய்ந்தனவே மன்மதன் அம்புகள் தாங்கிய காதலர் வாழிய வாழியவே!" எளிமையாக, மகிழ்வாக அவள் அழகின் உற்சாக தருணங்கள் மனதை கவர, சந்தோசம் தரும் அவள் உடலின் பட்டும் படாமலும் ஏற்படும் மெல்லிய தொடு உணர்வை [ஸ்பரிசம்] எப்படி வர்ணிப்பேன். பெண்தான் ஆணுக்கு பெரும் கொடை, அவளின் ஒரு ஸ்பரிசம் நமது நாளையே மலர்த்தி விடுகிறது. ஒருவனுக்கு ஒரு வார்த்தை அல்லது உரையாடல் எவ்வளவு நம்பிக்கையை கொடுக்கிறதோ, அதே மாதிரி, நட்பும் பிரியமும் [வாஞ்சையும்] அது நிகழும் தருணங்களின் மேல் மகத்தான உண்மையோடு இருக்கின்றன. அந்த உண்மையிலேயே என் வாழ்க்கை அன்றில் இருந்து மலரத் தொடங்கியது. அதன் விளைவு, ஒரு வார இறுதியில், 1977 ஆகஸ்ட் 13 சனிக் கிழமை, டயாணி பெர்னான்டோபுள்ளே என்ற பவளக்கொடியுடன் நான் பவளப் பாறைகளுக்கு சிறப்பு பெற்ற, காலியிலிருந்து கிட்டத்தட்ட 17 கி.மீ தொலைவில் அமைந்துள்ள, இக்கடுவை (ஹிக்கடுவை) என்ற கடற்கரை நகரம் போனோம். அங்கு எம்மை தெரிந்தவர்கள் எவருமே இல்லை. அது எமக்கு ஒரு சுதந்திரம் தந்தது போல இருந்தது. "வட்டநிலா அவள் முகத்தில் ஒளிர கருங்கூந்தல் மேகம் போல் ஆட ஒட்டியிருந்த என் மனமும் உருக விழிகள் இரண்டும் அம்பு வீச மெல்லிய இடை கைகள் வருட கொஞ்சி பேசி இழுத்து அணைக்க கச்சு அடர்ந்திருக்கும் தனபாரம் தொட்டு என்னை வருத்தி சென்றது!" முதல் முதல் இருவரும் எம்மை அறியாமலே முத்தம் பரிமாறினோம். அப்ப எமக்கு தெரியா இதுவே முதலும் கடைசியும் என்று. ஆமாம். 1977 சூலை 21 இல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணி உறுப்பினர்கள், 23 இடங்களில் போட்டியிட்டு 18 இடங்களில் வெற்றி பெற்று, நாடாளுமன்றத்தில் இரண்டாவது அதிகப்படியான உறுப்பினர்களைக் கொண்ட பெரிய கட்சியாக வந்து, அதன் தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் முதல் முதல் தமிழர் ஒருவர் எதிர்க்கட்சி தலைவராக பதவியேற்றார். இது, இந்த இனிய உறவுக்கும் ஒரு ஆப்பு வைக்கும் என்று கனவிலும் நான் சிந்திக்கவில்லை. தமிழ்ப் பகுதிகளுக்கு வெளியே வாழும் இலங்கைத் தமிழருக்கு எதிராக ஆகஸ்ட் 12 , வெள்ளிக்கிழமை, வன்முறைகள் ஆரம்பித்து விட்டதாக வந்த செய்தியே அது. நாம் உடனடியாக எமது திட்டத்தை இடை நடுவில் கைவிட்டு, எனது விடுதிக்கு திரும்பினோம். அவளிடம் அதற்கு பிறகு பேசுவதற்கும் சந்தர்ப்பம் சரிவரவில்லை. காரணம் தமிழில் கதைத்தால், அது எமக்கு மேலே வன்முறை தொடர எதுவாக போய்விடும். ஆகவே மௌனம் மட்டுமே எமக்கு இடையில் நிலவியது. அவளை அவளின் தற்காலிக வீட்டில் இறக்கி விட்டு, நான் அவசரம் அவசரமாக என் அரச விடுதியில், முக்கிய பொருட்களையும் ஆவணங்களையும் எடுத்துக் கொண்டு, எனக்கு தெரிந்த சிங்கள காவற்படை அதிகாரி வீட்டில் ஒரு சில நாள் தங்கி, பின் யாழ்ப்பாணம் புறப்பட்டேன். அதன் பின் நான் வெளி நாட்டில் வேலை எடுத்து, இலங்கையை விட்டே போய் விட்டேன். நான் யாழ்ப்பாணத்தில் இருந்தும் அதன் பின் வெளிநாட்டில் இருந்தும் அவளுக்கு போட்ட ஒரு கடிதத்துக்கும் பதில் வராததால், அதன் பின் அவள் நினைவுகள் மனக் கடலில் இருந்து கரை ஒதுங்கி விட்டது. என்றாலும் அவளுக்கு என்ன நடந்தது ?, ஏன் பதில் இல்லை என இன்றும் சிலவேளை மனதை வாட்டும். அன்று நான் ஒன்றுமே கதைக்காமல் , காலத்தின் கோலத்தால் திடீரென பிரிந்தது அவசரமாக போனதால், கோபம் கொண்டாளோ நான் அறியேன் `செல்லாமை உண்டேல் எனக்குரை மற்று நின் வல்வரவு வாழ்வார்க் குரை!’ `நீ என்னை விட்டுப் போகவில்லை என்ற நல்ல தகவலைச் சொல்வதானால் என்னிடம் இப்பவே, உடனே சொல், இல்லை போய் விட்டு விரைவில் திரும்பி விடுவேன் என்ற தகவலைச் சொல்வ தென்றால் [கடிதம் மூலமோ அல்லது வேறு வழியாகவோ] நீ வரும் வரை யார் வாழ்வார்களோ அவர்களிடம் போய்ச் சொல்! என்று தான் என் மடல்களுக்கு மறுமொழி போடவில்லையோ?, நான் அறியேன் பராபரமே !! நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
"தைரியமானவள்" வவுனியாவில் உள்ள ஒரு குக்கிராமம் இது. இங்கு பெருமளவில் இந்துக்களையும் சிறிய அளவில் கிறித்தவர்களையும் கொண்டுள்ள போதிலும் மக்கள் மதங்களுக்கு அப்பாற்பட்டு ஒரு குடும்பம்போல் வாழ்கின்ற ஒரு சமாதானம் நிலவும் கிராமம் இதுவாகும். இக் கிராமமானது அங்கு உள்ள ஒரு பெரும் குளத்தைச் சேர்ந்த நிலங்களைக் காடு வெட்டி துப்புரவு செய்து கமம் செய்து உருவாக்கப்பட்டது என்பது வரலாறு ஆகும். அங்கு தான் கமங்களில் கூலிவேலை செய்யும் தாய் தந்தையரின் இளைய மகளாக, அவள் இருந்தாள். கோவலன் கண்ட கண்ணகியின் அழகு கூட இவளுக்கு நிகரில்லை! "மாயிரும் பீலி மணி நிற மஞ்சை நின் சாயர் கிடைந்து தங்கான் அடையவும் ......... அன்ன நன்னுதல் மென்னடை கழிந்து நன்னீர்ப் பண்ணை நளி மலர் செரியவும் ........... அளிய தாமே சிறு பசுன் கிளியே குழளும் யாழும் அமிழ்துங் குழைத்த நின் மழைக் கிளவிக்கு வருந்தின வாகியும் மட நடை மாது நின் மலர்க்கையீ நீங்காது" கரிய பெரிய மயில்கள் உன் தோற்றத்தை கண்டு தோற்று அவைகள் கூட்டை சென்று அடைகின்றன .. அன்னப் பறவைகள் உன் மேன்மையுடைய நடைக்கு பயந்து நன்னீர் பூக்கள் பின் சென்று மறைகின்றன .. பசுங் கிளிகள் குழழின் இசையையும், யாழின் இசையையும்,அமிர்த்தத்யும் கலந்த உன் சொற்களுக்கு போட்டி இட முடியாமல் வருந்தி அதனை கற்பதற்காக உன்னை பிரியாமல் உள்ளன என்றான் கோவலன். ஆனால் இவள் அதற்கும் மேலாக, "அரிசந்திர புராணம்" வர்ணிக்கும் பெண்களின் விழி அழகை அப்படியே கொண்டு இருந்தாள் "கடலினைக் கயலைக் கனையமேன் பினையைக் காவியை கருவிள மலரை வடுவினைக் கொடிய மறலியை வலையை வாழை வெண் ர்ரவுநீன் டகன்று கொடுவினை குடி கொண்டிருபுறம் தாவிக் குமிழையும் குழைyaiயும் சீறி விடமெனக் கறுப்பூர் றரிபரந துங்கை வேலினும் கூறிய விழியால்" ஒப்புமையில் கடலினையும், மீனையும்,அம்பையும், மென்மையான பெண் மானையும் நீலோற்பல மலரையும் கருவிளம் பூவையும், பார்வையால் ஆடவரை துன்புறுத்தி கவர்வதில் கொடிய எமனையும், வலையையும், வாளையும் வென்று முற்றிலும் செவியளவு நீண்டு அகன்று கண்டார் உயிர் உண்ணும் கொடுந்தொழில் நிலை பெற்று இரண்டு பக்கங்களிலும் தாவி குமிழாம் பூ போன்ற மூக்கும், விசம் போல் கருநிறம் பொருந்தி கூரிய வேலை விட கூர்மையான கண்களை உடையவள் இவள். அதனால்தானோ என்னவோ பெயர்கூட ' மலர்விழி' காட்டோடு அண்டிய ஒரு இடத்தில், சிறு குடிசை ஒன்றில் பெற்றோருடனும் ஒரு அண்ணனுடனும் வாழ்ந்து வந்தாள். அவள் பாடசாலைக்கு மூன்று மைல் , காட்டோடும் கமமோடும் நடந்து தான் போவாள். குடிசையும் பெரிய வசதி ஒன்றும் இல்லை. ஆனால், பெற்றோருக்கு கமத்துக்கு கூலிவேலைக்கு போக வசதியான இடமாக இருந்தது. அவள் இப்ப பத்தாம் வகுப்பு மாணவி, பெண்மை பூரித்து துள்ளும் வயது. பாடசாலைக்கு அருகில் ஒரு பெரிய பலசரக்கு கடையும், அதனுடன் கூடிய சிற்றுண்டிச்சாலையும் புடவை கடையும் இருந்தது. இந்த மூன்றுக்கும் முதலாளி ஒருவரே, பெரும் பணக்காரர். அவரின் ஒரு மகன், யாழ் பல்கலைக்கழகத்தில் படித்தவர், பரீடசை எடுத்து விட்டு வீட்டில் மறுமொழி வரும் மட்டும் காத்து இருக்கிறார். எனவே அவ்வவ்போது தந்தைக்கு ஓய்வு கொடுத்து, கடையை கவனிக்க தொடங்கினார். மலர்விழி தோழிகளுடன், பாடசாலை முடிய கடைப்பக்கம் போவார். ஆனால் தோழிகள் வாங்குவதை, மற்றும் அங்கு உள்ளவற்றை பார்ப்பதை தவிர, மற்றும் படி ஒன்றும் வாங்குவதில்லை. அந்த வசதி ஒன்றும் அவருக்கு இல்லை. அது மட்டும் அல்ல, ஒரு சில வினாடிகளே அங்கு நிற்பார். காரணம் மூன்று மைல் நடந்து வீடு போகவேண்டும். அவருடன் ஒரு சில பிள்ளைகளும் சேர்ந்து நடப்பதால், ஆளுக்கு ஆள் துணையாக. கம்பனின் மகன் அம்பிகாபதி போல இந்த முதலாளியின் மகன், சங்கரும் அவளை முதல் முதல் பார்த்தவுடன், அவன் கண்ணுக்கு அவள் உருவம் மனித உருவமாகவே தெரியவில்லை. அவன் கற்பனை கொடியோடும் குளத்தோடும் மீனோடும் உறவாடிற்று “மைவடிவக் குழலியர்தம் வதனத்தை நிகர்‘ஒவ்வா மதியே! மானே!! செய்வடிவைச் சிற்றிடையை வேய்தோளைத் திருநகையைத் தெய்வ மாக இவ்வடிவைப் படைத்தவடி வெவ்வடிவோ நானறியேன்! உண்மை யாகக் கைபடியத் திருமகளைப் படைத்திவளைப் படைத்தனன் நல்கமலத் தோனே! ” பொற்கொடியாளே, வாடாத உன் தலையில் மழைமேகத்தை சுமந்தவளே. பிறை அணிந்த தாமரை முகத்தாளே, நீ கேட்டாள், உனக்காக எதையும் தரத் தயாராக உள்ள கற்பகத்தரு போல் நான் நிக்கிறேன் என்று அவன் சொல்லாமல் அவளிடம் சொல்லிக்கொண்டு தன்னை மறந்து நின்றான். ஒரு சில நாட்கள் ஓட, அவன் மெல்ல மெல்ல அவளுடன் கதைக்க தொடங்கினான். அவனும் அழகில் கம்பீரத்தில் குறைந்தவன் அல்ல. "எண் அரும் நலத்தினாள் இனையள் நின்றுழி, கண்ணொடு கண் இணை கவ்வி, ஒன்றை ஒன்று உண்ணவும், நிலை பெறாது உணர்வும் ஒன்றிட, அண்ணலும் நோக்கினான்! அவளும் நோக்கினாள்." அழகின் எல்லை இது தான் என்று நினைப்பதற்கும் அரிய அழகுடைய அவளை, ஒருவர் கண்களோடு, மற்றொருவர் கண்கள் கவர்ந்துப் பற்றிக் கொண்டு, ஒன்றை ஒன்று கூடி ஒன்று படவும், அவனும் அவளை பார்த்தான். அவளும் அவனை பார்த்தாள். அவளுக்கும் உண்மையில் ஆசை இருந்தாலும், அவளின் நிலைமை, கவனமாக இருக்க வேண்டும் என்று உறுத்தியது. காரணம் இவன் பெரும் பணக்கார பையன், மற்றும் பட்டதாரி ஆகப்போகிறவன். என்றாலும் அவன் வாக்குறுதிகள் நம்பிக்கைகள் கொடுத்து, அவளும் அப்பாவிதானே, நம்பி இருவரும் கொஞ்சம் கொஞ்சம் நெருங்க தொடங்கினார்கள். அவளின் பெற்றோர் கூலி வேலைக்கு போனால், வீடு திரும்ப இரவாகிடும், அண்ணனும் , நண்பர்களுடன் போய்விடுவார். எனவே, சங்கர் இப்ப அவளை தனது மோட்டார் சைக்கிளில் வீட்டில் இறக்குவதும், அப்படியே , அந்த சின்ன குடிசையில் தனிய கதைத்து மகிழ்வதும், சிற்றுண்டிகள், குளிர்பானங்கள் எடுத்துக்கொண்டு போய் இருவரும் அங்கு அவையை அனுபவிப்பதும் என காலம் போகத் தொடங்கியது. அத்துடன் அவன் அவளுக்கு தெரியாத பாடங்களும் படிப்பித்தான். எனவே சிலவேளை பெற்றோர்கள் அறிய வந்தாலும், அது ஒரு சாட்டாகவும் அவர்களுக்கு இருந்தது. ஆனால் அது தான் அவர்களை மேலும் இறுக்கமாக இணைத்ததும் எனலாம். "இசை போன்ற மெல்லிய மொழி இடைவெளி குறைக்க வழி சமைக்க இறைவி நேரே வந்தது போல இதயம் மகிழ பாடம் புகட்டினான்! " "இருசொல் இணைதல் புணர்ச்சி என்று இரண்டு பொருள்பட இலக்கணம் சொல்லி இங்கிதமாய் விளக்கி அவளைத் தழுவி இருவரும் கூடி இன்பம் கண்டனர்!" மறுமொழியும் வர, அவன் மேற்படிப்புக்கு வெளிநாடு போய்விட்டான் அதன் பிறகு தான் அவளின் வாழ்வில் வெறுமை தோன்ற தொடங்கியது. அவளின் உடலிலும் மாற்றம் தென்பட்டது. அவள் இப்ப ஒரு குழந்தைக்கு தாயென மருத்துவரும் உறுதி செய்து விட்டனர். தந்தை அந்த முதலாளியிடம் நடந்தவற்றை சொல்லி, மகளை மருமகளாக ஏற்கும் படி மற்றும் அவரின் மகனின் விலாசத்தை எடுத்தால், அவனுக்கு செய்தி அனுப்பலாம் என்று போனவர்தான், பின் வீடு திரும்பவே இல்லை. அன்று அங்கு போர்க்காலம். ஆகவே உண்மையில் என்ன நடந்தது என்று யாருக்கும் தெரியாது? அண்ணனும் தந்தையை தேட போனவர், இடையில் ஷெல் பட்டு இறந்துவிட்டார். இப்ப தான் அவள் தன் அப்பாவி தனத்தை உணர்ந்தாள். முன்பு, அவனுடன் பழகும் பொழுது தைரியமாக இருந்து இருந்தால், இந்த நிலை வந்திருக்காது. நம்பி கெட்டது அவளை வருத்தியது. "சாது மிரண்டால் காடு கொள்ளாது". அவள் துணிந்து விட்டாள். தைரியம் பெற்றாள். அவளின் கதை அந்த ஊரில் பரவத் தொடங்கியது. அந்த முதலாளி பணத்தை கொடுத்து சமாளிக்க எத்தனித்தார். கருவை கலைக்கும் படியும் வேண்டினார். ஆனால் அவள் இப்ப தைரியமானாள். அதை ஏற்கவில்லை. அவளின் ஒரே குரல், இவன் உங்கள் பேரன், உங்க மகனின் மகன். அதில் மாற்றம் இல்லை. எந்த பேச்சுக்கும் இனி இடமில்லை, பணத்தை அவள் மதிக்கவே இல்லை. தூக்கி எறிந்தாள். தந்தை, அண்ணன் இருவரையும் இழந்துவிட்டாள். இனி தானே தன் வாழ்வை தீர்க்க தைரியமாக புறப்பட்டாள்! கண்ணகி அரசசபையில் தைரியம் கொண்டு போனது போல, ‘தேரா மன்னா! செப்புவது உடையேன்' ஆராய்ந்து பார்க்காத முதலாளி நான் சொல்வதைக் கேள் என, வாயும் வயிறுமாக முதலாளியின் வீட்டின் கதவில் நின்ற காவலாளியிடம் உரக்க சொன்னாள். "வாழ்தல் வேண்டி, ஊழ்வினை துரப்ப, சூழ் கழல் மன்னா! நின் நகர்ப் புகுந்து," கூலி செய்து, எம் கையையால் நாமே வாழ்வதற்காக உன் ஊருக்கு வந்தோம். ஊழ்வினை துரத்திக்கொண்டு வர வந்தோம் என்று துணிச்சலாக கூறினாள். அவளின் துணிவு, புத்திகூர்மை, அழகு, கோபத்திலும் அவளின் நளினம், உண்மையான பேச்சு சங்கரின் தாயை நன்றாகவே கவர்ந்தது. சங்கரின் தாய் அவளை உள்ளே வரும் படி அழைத்து, அங்கு முன் விறாந்தையில் இருந்த சோபாவில் அமரச் சொன்னாள். பின் சங்கரின் தந்தையுடன் எதோ கதைத்தார். அவளுக்கு ஒன்றும் புரியவில்லை. எதாவது தந்திரமோ என்று தைரியமாக, எதையும் எதிர்க்க துணிந்து நின்றாள். இந்த இடைவெளியில், அவர்களின் வேலைக்காரி காப்பி கொண்டுவந்து அவளுக்கு கொடுத்தார். ஆனால் அதை அவள் வாங்க மறுத்தார். சிற்றுண்டி பெற்று தானே இன்று இந்த நிலை என்று அவள் மனது கொதித்துக்கொண்டு இருந்தது. "நெஞ்சே நெஞ்சே துணிந்து விடு நீதியின் கண்களை திறந்து விடு நச்சு பாம்புகள் படமெடுத்தால் அச்சம் வேண்டாம் அழித்து விடு" "பணிந்து பணிந்து இந்த பூமி வளைந்தது குனிந்து குனிந்து குனிந்த கூனும் உடைந்தது வெள்ளி வெள்ளி காசுக்கு விற்பவன் மகனில்லை ஓர் மகனில்லை" அவர்களுக்கு அது புரிந்துவிட்டது. தாய் அவள் அருகில் வந்து, மகனுக்கு தொலைபேசி அழைப்பு விட்டுள்ளோம். எமக்கு உண்மை தெரியாது. அது சரியாக அறிந்ததும் , உன் பிரச்னைக்கு தீர்வு காண்போம் என்றனர். அவளின் துணிந்த பார்வை, தைரியமாக எடுத்த முடிவு, ஒரு பதிலை நோக்கி அசைவதை காண்டாள். சங்கரும் கொஞ்ச நேரத்தால் தொலைபேசியில் வந்தும் வராததுமாக, முதலில் மலர்விழியையே கூப்பிட்டான். அவளுடன் ஏதேதோ கதைதான். வீறாப்புடன், தைரியமாக வந்தவள், தன் வேலை முடிந்தது கண்டு, இப்ப ஒரு மணமகள் மாதிரி கால் விரலால் கொடு போட தொடங்கி விட்டாள். பெற்றோருக்கும் விளங்கிவிட்டது. சங்கரும் பின் பெற்றோருடன் எதோ பயந்து பயந்து கூறிக்கொண்டு இருந்தார். எல்லோர் முகத்திலும் நிம்மதி, மகிழ்ச்சி நிழலிட்டிருந்தது அங்கு ஒரு சுமுக நிலையை ஏற்படுத்தியது. "தைரியம் என்பது பயம் இல்லாதது அல்ல, அதன் மீதான வெற்றி என்பதை அவள் காண்டாள். தைரியமானவள் பயப்படாதவள் அல்ல, அந்த பயத்தை வெல்பவளே" நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
- 1
-
"என் அன்பு மகளே" "யாயே, கண்ணினும் கடுங் காதலளே, எந்தையும், நிலன் உரப் பொறாஅன்; ‘சீறுடி சிவப்ப, எவன், இல! குறு மகள்! இயங்குதி! என்னும்;’யாமே," தாய் தன் மகளை தன் கண் மாதிரி அன்பு செலுத்துகிறாள் அப்பனோ "என் சிறு மகளே, ஏன் நடந்து உன் அழகிய காலை வருத்துகிறாய்?" என கேட்டு தவிக்கிறார். அப்படித் தான் என் அன்பு மகள் எனக்கு அன்று இருந்தாள். அவள் கடைசி பிள்ளை என்பதால் ஒரு படி மேல் அதிகமாகவே செல்லமாக இருந்தாள். அதன் விளைவு எப்படி வரும் அன்று எனக்கு புரியவில்லை. வீட்டில் எப்பவும் அவள் செல்லப்பிள்ளை தான். எனவே அவள் இட்டது தான் சட்டம். என்றாலும் அவளுக்கு என்று ஒரு தனிக் குணமும் உண்டு. அது தான் அவளை மேலும் மேலும் செல்லப்பிள்ளை ஆக்கியது. நல்ல புரிந்துணர்வுடன் இனிமையாக மகிழ்வாக பழகுவாள். எமக்கு ஒரு கவலை என்றால், அவளை பார்த்தாலே போய்விடும். அவளின் குறும்புத்தனம் எவரையும் எந்த நிலையிலும் மகிழ்விக்கும்! "உள்ளம் களிக்க உடனே சிரிக்க உதிர்மா வேண்டுமம்மா! . துள்ளித் திரிந்து துயரை மறந்திடத் துளிமா வேண்டுமம்மா!" அவள் இதை துள்ளி ஆடி பாடும் பொழுது எம்மை அறியாமலே கவலை பறந்திடும். அத்தனை நளினம், தானே கற்று தானே ஆடுவாள்! அவளுக்கு என்று ஒரு பாணி / போக்கு உண்டு !! படிப்பிலும் சூரி , குழப்படி தான் கொஞ்சம் கூட, அத்துடன் பிடிவாதமும் பிடித்தவள், ஆனால் இரக்கம், அன்பு, மரியாதை எல்லாம் உண்டு. நாளும் ஓட, அவளும் பல்கலைக்கழகம் மிகச் சிறந்த பெறுபேருடன் நுழைந்தாள். "இருண்ட மேகஞ்ச்சுற்றி சுருண்டு சுழி எரியுன் கொண்டையாள் குழை ஏறி ஆடி நெஞ்சை சூறையாடும் விழிக் கெண்டையாள் திருந்து பூ முருக்கின் அரும்பு போலிருக்கும் இதழினால் வரிச் சிலையை போல் வளைந்து பிறையை போல் இலங்கு நுதுலினால்" மேகங்கள் சில சுருண்டு சுழித்தது போன்ற கூந்தலுடன்.. காது வரை நீண்டு ஆடவர் மனதை கொள்ளை கொள்ளும் கெண்டை விழியுடன் , அழகான அரும்பை போன்ற இதழுடன், அழகிய வில்லை போல் வளைந்து மூன்றாம் பிறை திங்களை போன்று ஒளி விடும் நெற்றி உடன் அவள் திகழ்ந்தது தான் எமக்கு கொஞ்சம் அச்சத்தை கொடுத்தது. இனி அவள் மிக தூர, வேறு ஒரு நகரத்தில் உள்ள பல்கலைக்கழகம் போகப் போகிறாள். படிப்பை பற்றி பிரச்சனை இல்லை. அது அவளுடன் பிறந்தது. தனிய, அதுவும் இந்த பொங்கி பூரிக்கும் அழகுடன், தந்திரமாக சமாளிப்பாளா என்ற ஒன்று மட்டுமே கொஞ்சம் கவலை அளித்தது. காரணம் அவளுக்கு எல்லாமே நாமே செய்து, எம்மை சுற்றியே பழக்கி விட்டோம் என்பதால். அதுவும் நான் இல்லாமல் எங்கும் தனிய போனதும் இல்லை. கையை இறுக்க பிடித்துக் கொண்டு தான் போவாள். இப்ப தான் எம் வளர்ப்பின் சில சில தவறுகள் தெரிந்தன. ஆனால் இது நேரம் கடந்த ஒன்று! "பூக்களின் அழகை வண்டுகள் அறியும் பூங்கா முழுவதும் மயங்கி திரியும் பூவையரின் அழகை ஆண்கள் அறிவர் பூரிப்பு கொண்டு மயங்கி திரிவர்" அவள் எப்படியும் பாடத்தில் கவனம் செலுத்தி, இவை எல்லாம் சமாளிப்பாள் என்று என் நெஞ்சை நானே தேற்றினேன்! . ஆனால் அவளின் சந்தேகமற்ற தூய மனம், பிள்ளைத்தனம் நிறைந்த இயல்பான குணம், இலகுவாக நம்பும் இரக்க தன்மை அவள் வாழ்வை ஏமாற்றி விளையாடி விட்டது அவள் முதலாம் ஆண்டு விடுதலையில் வந்து என் மடியில் இருந்து , என் கைகளால் தன் முகத்தை பொற்றி அழும் பொழுது தான் தெரிந்தது அவளின் வேதனை.! ஆனால் ஒன்றை கவனித்தேன். இப்ப அவள் நாம் முன்பு கண்ட சின்னப் பிள்ளை அல்ல, அவளின் மற்றும் ஒரு குணமான பிடிவாதம், அவளை நிலைகுலைய வைக்கவில்லை. தன்னை ஆசைகாட்டி மோசம் செய்தவன், அதே பல்கலைக்கழக, அதே மருத்துவ பீடத்தின் மூன்றாம் வகுப்பு மாணவன். பகிடிவதையில் நண்பர்களாகி, காலப்போக்கில் அவனை உண்மையான காதலன் என் அவள் நம்பியதை, அவன் தந்திரமாக தன் ஆசையை தீர்க்க பாவித்துள்ளான் என்பதை அறிந்தோம். ஆனால், 'நான் பார்த்துக்கொள்வேன்' , கவலை வேண்டாம் அப்பா , அவனை என்னால் திருத்தமுடியும். அவனே உங்கள் மருமகன், எனவே கவலை வேண்டாம் என தைரியமாக மடியில் இருந்து இறங்கி படுக்க போனாள். “கற்பும் காமமும் நாற்பால் ஒழுக்கமும் நல்லிதின் புரையும் விருந்து புறந்தருதலும் சுற்றம் ஓம்பலும் பிறவு மன்ன கிழவோள் மாண்புகள்” என்று கற்பு நிலை, ஒழுக்க நிலை, நன்னெறி, பிறரை உபசரித்தல் பெண்ணின் கடமை என்றனர் அன்று. ஆனால் என் மகள் தான் நினைத்தவனையே , தன்னை ஏமாறியவனையே திருத்தி மனிதனாக்கி , தன் துணைவனாகவும் மாற்ற புறப்பட்டாள்!. கட்டாயம் அவள் வெற்றி பெறுவாள். அவளின் துணிவு, இன்றைய அனுபவம், வாழ்வை அலசும் திறன், இப்ப அவள் செல்லப் பிள்ளை அல்ல, ஒரு முழுமையான அறிவு பிள்ளை! என் அன்பு மகளே, தந்தைக்கு உபதேசம் செய்தான் என்கிறது ஒரு புராணம். அது கட்டுக்கதையாக இருந்தாலும், தந்தை மகன் முன் சீடனாகி உபதேசம் கேட்பது என்பது அகந்தை துறந்து மகனின் கருத்து என்ன என்று அறிந்துகொள்ள ஒரு தந்தை தயாராகும் வாழ்க்கைத் தத்துவம் அது. இன்று குடும்பங்களில் பெரும் பிரச்னையாக இருப்பது இந்த சுய அகந்தைதான். வயதில் சிறியவர்கள் பெரியவர்களின் பேச்சைக் கேட்க வேண்டும் என்று அடம்பிடிப்பது. இன்று நீ சொல்லாமலே என் தவறை சுட்டிக்காட்டி விட்டாய். நீ இனி எனக்கு அம்மாவும் கூட! அவளுக்கு இரவு முத்தம் கொடுத்து, முத்தம் வாங்கி நித்திரைக்கு அனுப்பினேன்! "பிரசம் கலந்த வெண்சுவைத் தீம் பால் விரி கதிர்ப் பொற்கலத்து ஒரு கை ஏந்திப், புடைப்பின் சுற்றும் பூந்தலைச் சிறு கோல் ‘உண்’ என்று ஓக்குபு புடைப்ப தெண் நீர் முத்து அரிப் பொற்சிலம்பு ஒலிப்பத் தத்துற்று, 5 அரி நரைக் கூந்தல் செம் முது செவிலியர் பரி மெலிந்து ஒழிய பந்தர் ஓடி, ஏவல் மறுக்கும் சிறு விளையாட்டி அறிவும் ஒழுக்கமும் யாண்டு உணர்ந்தனள் கொல்" தேன் கலந்த வெண்மையான சுவையான இனிய பாலைக் கொண்ட விரிந்த ஒளியையுடைய பொற்கலத்தை ஒரு கையில் ஏந்தியவண்ணம், மென்மையான நுனியைக் கொண்ட சிறிய கோலை உயர்த்தி என் மகளை அச்சமூட்டிக் ‘இதைக் குடி’ என்று அவளுடைய மென்மையாக நரைத்த கூந்தலையுடைய செவ்விதான முது செவிலித் தாயார்கள் கூறவும், அதனை மறுத்துத் தெளிந்த நீரின் முத்துக்கள் பரலாக உள்ள தன்னுடைய பொற்சிலம்புகள் ஒலிக்கப் பாய்ந்து அவள் ஓட, நடைத் தளர்ந்து அவள் பின்னால் ஓட முடியாமல் அவர்கள் இருக்க, அவள் எங்கள் இல்லத்திற்கு முன் இருக்கும் பந்தலுக்கு ஓடி விடுவாள். இவ்வாறு பாலைக் குடிக்க மறுத்த என்னுடைய விளையாட்டுப் பெண், இப்பொழுது எவ்வாறு அறிவையும் ஒழுக்கத்தையும் அறிந்தாள்? எனக்கு இன்னும் வியப்பாகவே அது இருக்கிறது. அந்த வியப்பான பெண் தான் என் அன்பு மகளே !! [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
"பெற்றோர் பிள்ளைகளை உருவாக்கலாம்! பிள்ளைகள் பெற்றோரை உருவாக்க முடியாது!" பெற்றோர் பிள்ளைகளை உருவாக்கலாம் என்பதில் ஐயப்பாடு ஒன்றும் இல்லை. புறநானுறு 312 இல் அப்படித்தான் கூறுகிறது. "ஈன்று புறந்தருதல் என்தலைக் கடனே; சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே;" மகனைப் பெற்று வளர்த்தல் பெண்களின் கடமைகளுள் தலையான கடமையாகும்.அவனைச் சான்றோ னாக்குதல் (வீரன்) தந்தையின் கடமையாகும். இப்படி பெற்றோர் பிள்ளைகளை உருவாக்கலாம். ஆனால் பிள்ளைகள் பெற்றோரை உருவாக்க முடியாது என்பதில் தான் எனக்கு ஒரு சந்தேகம் [1] நாம் இப்ப சொல்லின் கருத்தை பார்ப்போமா ? பெற்றோர் = தங்கள் வாரிசை(குழந்தை) வளர்க்கும் பாதுகாவலர் என்று கொள்ளலாம். அல்லது = பிள்ளை பெற்றவர்கள் / பெற்றோர் என்று கொள்ளலாம். ஆகவே பெற்றோர் என்ற சொல்லே பிள்ளை இல்லாமல் உருவாகாது. பிள்ளை = குழந்தை, குட்டி , குஞ்சு இதில் கவனியுங்கள் பெற்றோர் என்ற சொல் தொடர்பு படுத்தப் படவில்லை [2] மேலும் எப்படி பிள்ளைகளை ஒழுங்காக பெற்றோர்கள் உருவாக்கினார்களோ, அப்படியே, பிள்ளைகள் வளர்ந்து ஒரு நிலைக்கு வந்த பின், கெட்டுப்போன / தீய வழியில் சென்ற பெற்றோர்களை , பிள்ளைகள் நல்லவராக உருவாக்கலாம். இதற்கு உதாரணமாக இரணியன், அவன் மகன் பிரகலாதன் கதையை கூறலாம் ? [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
"பதவி என்பது தோளில் கிடக்கும் துண்டு போல... மானம் என்பது இடுப்பில் கட்டியிருக்கும் வேட்டி போல." வேட்டி எப்பொழுதும் இடுப்பில் தான் கட்டலாம். வேண்டும் என்றால் உயர்த்தி கட்டலாம், மடித்து கட்டலாம் அல்லது கால் சட்டை போல் கட்டலாம் [கோவணம் /nஅரைக்கச்சை மாதிரி ]. எப்படியாயினும் அது இடுப்பின் கீழ் பகுதியை மறைத்து தான் கட்டப்படுகிறது. ஆகவே பொதுவாக மானம் காக்க என அதை கூறலாம். இடுப்பில் கட்டும் துணியான வேட்டியில் இருந்தது தான் "புடைவை, புடவை, அல்லது சேலை" வளர்ச்சி பெற்றது என சரித்திரம் கூறுகிறது . அதாவது பண்டைய காலத்தில் பெண்களும் இடுப்பை சுற்றி துண்டு ஒன்றை தான் கட்டினார்கள். தமது மானத்தை காக்க. உதாரணமாக நக்கீரர், புறநானுறு 189 இல் "உண்பது நாழி, உடுப்பவையிரண்டே" என கூறுகிறார். சால்வையை அல்லது மேல் துண்டை எடுத்து கொண்டால், அதை இடுப்பில் அணியும் வார் மாதிரி இடுப்பில் கட்டலாம், தோளில் போடலாம் அல்லது தலையில் தலைப்பாவாக [கிரீடம் மாதிரி] போடலாம். ஆகவே மேல் துண்டு பல விதமான பாவனையில் உள்ளது என்பது தெளிவாகிறது. இந்த பாவனை தான் பதவியைக் காட்டுகிறது. ஒருவன் உயர்ந்த பதவியில் இருப்பவரிடம் போகும் போது அல்லது அப்படி பட்டவரை சந்திக்கும் போது மேல் துண்டை இடுப்பில் கட்டும் பழக்கம் இருந்துள்ளது. இப்பவும் இருக்கிறது. உதாரணமாக ஆலயத்திற்குள் போகும் போது நம்மவர்கள் இடுப்பில் சால்வை கட்டுவது அதன் தொடர்ச்சியே. அரசனை ஆண்டவனாய் கருதியவர்கள் நம் முன்னோர்கள். "நெல்லும் உயிர் அன்றே; நீரும் உயிர் அன்றே; மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்;அதனால், யான்உயிர் என்பது அறிகை வேன்மிகு தானை வேந்தற்குக் கடனே. -புறநானுறு 186" அரண்மனைக்குள் போகும் போது இடுப்பில் கட்டும் பழக்கம் அன்று தோன்றியது. அது உயர்ந்த பதவியில் இருப்பவரை,அரசனை மதிப்பதாக கருதப்பட்டது. குடும்ப விழாக்களில் எல்லோரும் தோளில் மேல் துண்டை போட்டபடி சாதாரணமாக பழகுவார்கள். காரணம் எல்லோரும் குடும்பத்திற்குள் சம பதவி என்பதே அதன் பொருள். என்றாலும் ஒரு வைபவத்தில் ஒருவர் தேங்காய் உடைத்து ஆரம்பிக்கும் போது, அந்த இடத்தில் அவர் ஒரு கௌரவ பதவி ஒன்றை பெறுவதால் , அந்த மேல் துண்டு தலையில் இடம் பிடிக்கிறது - ஒரு கிரீடம் போல். இதனால் தான் மேல் துண்டை பதவிக்கு உதாரணமாக கருதப்பட்டுகிறது போலும் - அதன் இடத்தை பொறுத்து பதவி அமைவதால். [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
"பதவி உங்களுக்குப் பெருமை தருவதை விட நீங்கள் தான் அதைப் பெருமை படுத்த வேண்டும்." புறநானுறு 75. அரச பாரம்! [படியவர்: சோழன் நலங்கிள்ளி] "மூத்தோர் மூத்தோர்க் கூற்றம் உய்த்தெனப் பால்தர வந்த பழவிறல் தாயம் எய்தினம் ஆயின், எய்தினம் சிறப்புஎனக் குடிபுரவு இரக்கும் கூரில் ஆண்மைச் 5 சிறியோன் பெறின்அது சிறந்தன்று மன்னே! மண்டுஅமர்ப் பரிக்கும் மதனுடை நோன்தாள் விழுமியோன் பெறுகுவன் ஆயின், ஆழ்நீர் அறுகய மருங்கின் சிறுகோல் வெண்கிடை என்றூழ் வாடுவறல் போல நன்றும் 10 நொய்தால் அம்ம தானே; மையற்று விசும்புஉற ஓங்கிய வெண்குடை முரசுகெழு வேந்தர் அரசுகெழு திருவே," பாடலின் பின்னணி: ஒரு சமயம் நலங்கிள்ளி தன் அரசவை அறிஞர்களுடன் கலந்துரையாடிக் கொண்டிருந்த பொழுது எத்தகைய அரசு முறை சிறந்தது என்பது பற்றிப் பேச்செழுந்தது. “பரம்பரை பரம்பரையாக மூத்தோர் இறக்க அதற்கு அடுத்து உள்ள இளையோர் அரசுரிமைப் பெற்று பதவி ஏற்க , பதவி பெறுவது ஒன்றும் பெருமை இல்லை . அது யார் கைக்கு வருகிறது என்பதை பொறுத்து தான் அந்த பதவிக்கே மரியாதை / பெருமை வருகிறது . ஆட்சித் திறனின்றி மக்களுக்கு வரிச் சுமையை அதிகமாக்கும் சிறியோனின் கைகளில் சேர்ந்தால் அது நலிவு அடைகிறது . ஆண்மையும் தகுதியும் உடையவன் கையில் வந்தால் அது பொலிவு பெறுகிறது " என்று தன் கருத்தை இப்பாடலில் நலங்கிள்ளி கூறுகிறான். "ஒரேயடியாக உச்சிக்குப் போய் விட வேண்டு மென்று முயற்சி தான் உலகின் பெரும் துன்பங்களுக்குக் காரணமாக அமைகிறது" உச்சிக்குப் போவது அவ்வளவு பெரிதான விடயம் அல்ல ! தொடர்ந்து முயற்சிக்கும் எவருமே உச்சிக்கு ஒரு நாள் போய்விட முடியும். ஆனால் கடினமானது எதுவென்றால், உச்சியிலே தொடர்ந்து இருக்க முயல்வது தான்! இந்த ஒரு கருத்தை நகைச்சுவையோடு தன்னுடைய புத்தகத்தில் "ஜான் மாக்ஸ்வெல்" சொல்லியிருப்ப தாகப் படித்துள்ளேன் அவர் சொல்லும் கதை இது. ஒரு நாள் ஒரு காட்டு வான்கோழியும், எருதும் சந்தித்துப் பேசிக் கொண்டிருந்தன. எதிரே தெரிந்த உயரமான மரத்தை ஏக்கத்துடன் பார்த்துப் பெருமூச்சு விட்டுக் கொண்டே வான்கோழி சொன்னது: "அந்த மரத்தின் உச்சிக்குப் போய்விட வேண்டும் என்ற ஆசை எனக்கிருக்கிறது! ஆனால் அதற்குத் தேவையான சக்தியோ, சத்தோ என்னிடம் இல்லை." எருது சொன்னதாம்! "என்னுடைய சாணியை கொஞ்சம் சாப்பிட்டுத் தான் பாரேன்! அதில் ஏகப்பட்ட சத்து இருக்கிறது!" வான்கோழியும், நம்பிக்கையோடு சாணியைச் சாப்பிட்டுப் பார்க்க ஆரம்பித்ததாம்! எருது சொன்ன மாதிரியே அது ஊட்டச்சத்து மிகுந்ததாகத் தான் இருந்தது. மரத்தின் அடிவாரம் வரை போகக் கூடிய தெம்பு வந்து விட்டது. மறுநாள், இன்னும் கொஞ்சம் சாணியைச் சாப்பிட மரத்தின் கீழ்க் கிளை வரை போக முடிந்தது. அடுத்தநாள், அதற்கும் அடுத்த நாள் என்று சாணியைச் சாப்பிட்டு, நான்காவது நாள் ஒருவழியாக மரத்தின் உச்சிக் கிளைக்குப் போய் உட்கார முடிந்தது. உச்சிக்குப்போய் உட்கார்ந்த பெருமிதத்தோடு வான்கோழி சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டே சந்தோஷத்தில் குரல் எழுப்பியதாம்! காட்டில் வேட்டையாட வந்த ஒருவன் கண்ணில் பட, துப்பாக்கியால் சுட்டானாம்.. வான் கோழி பணால்! உயரத்திலேயிருந்து, ஒரே தோட்டாவில் கீழே வந்தாயிற்று! [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
எனது அறிமுகம்
kandiah Thillaivinayagalingam replied to kandiah Thillaivinayagalingam's topic in யாழ் அரிச்சுவடி
நான் இங்கு குறிப்பிடுவது 2001 / கட்டாயம் 2004 க்கு முன் கடந்த இருபதுக்கு மேற்பட்ட ஆண்டுகளாக எனக்கு அதனுடன் ஒரு தொடர்பும் இல்லை இலங்கையில் அன்று 55 வயதுடன் ஓய்வு பெறலாம். என்றாலும் நான் வேறு பல காரணங்களால் கொஞ்சம் நேரத்துடன் ஓய்வு பெற்று விட்டேன் -
எனது அறிமுகம்
kandiah Thillaivinayagalingam replied to kandiah Thillaivinayagalingam's topic in யாழ் அரிச்சுவடி
process flow of the cement manufacturing process – palavi operation The Puttalam cement factory, now owned by the Swiss company Holcim Group, is the biggest one in Sri Lanka and is located in the Palaviya G.S. division, just 8 km from Puttalam town. The local population claims that cement dust poses a health hazard [Pollution] to them. For Example, during the 2001-2004 period, they rose up with several protests. The site consists of a dry process cement plant with two kilns -
"நீராடும் நிலா"
kandiah Thillaivinayagalingam replied to kandiah Thillaivinayagalingam's topic in கவிதைக் களம்
"வாலிபத்தில் தவற விட்டவைகளை ... " ஏன் அனுபவித்ததாக இருக்கக் கூடாது? -
டிசம்பர் 2014 இல், ஓக்லாண்ட் இன்ஸ்டிடியூட் [Oakland Institute] ஒரு கள ஆய்வு இலங்கையின் வடக்கு கிழக்கில் நடத்தியது. போரின் பின் அதன் நிழலும், போருக்குப் பிந்தைய இலங்கையில் நீதிக்கான போராட்டம் பற்றியது அது [The Long Shadow of War: the Struggle for Justice in Postwar Sri Lanka,] பருந்து போல நிறைந்த இராணுவ சூழலில் மக்கள் எதிர்கொள்ளும் இன்னல்கள் மற்றும் துயரங்கள் பற்றியது அது. அத்துடன் பல வழிகளில் அரசாங்க நிறுவனங்கள், அரசின் ஆசீர்வாதத்துடனும் பாதுகாப்புடனும் செயல்படுத்தப்பட்ட தீவிரமான நில அபகரிப்பு மீது முக்கிய கவனம் செலுத்தியது. வடக்கு மற்றும் கிழக்கில் பல்வேறு உத்திகள் மூலம் அரசாங்கம் கையாளும் தந்திரங்களையும் அடக்குமுறைகளையும் 2015 ஆண்டு தங்கள் அறிக்கை மூலம் அம்பலப்படுத்தியது அதில் நில அபகரிப்பு மற்றும் இராணுவமயமாக்கல் ஆகியவற்றுக்கு இடையேயான தொடர்பு மற்றும் அதன் தொடர்ச்சியான பயன்பாட்டை வெளிப்படுத்தியது. நீர்ப்பாசனத் திட்டங்கள் மற்றும் வன்முறை போன்ற நில அபகரிப்புக்கான பழைய உத்திகளுடன் புதிதாக புத்த கோவில்கள் அமைத்தல், தொல்பொருள் உருவாக்கம் உள்ளிட்ட புதிய முறைகள், பாதுகாப்புகள், உயர் பாதுகாப்பு வலயங்கள் மற்றும் சிங்களமயமாக்க சிறப்பு பொருளாதார வலயங்கள் என பல வழிகளில் வடக்கு மற்றும் கிழக்கு - தமிழர்களின் பாரம்பரிய தாயகம் - கட்டாயத்தால் பறிப்பட்டுக்கொண்டு இருப்பதை எடுத்துக்காட்டியது. கொழும்பில் எந்த தமிழரும் நிலத்தை அபகரித்து குடியேறவில்லை. அது சிங்களவரின் பாரம்பரிய நிலமும் அல்ல. இலங்கையின் மன்னர் ஆட்சியை எடுத்துக்கொண்டால், Anuradhapura period (377 BCE–1017) Polonnaruwa period (1056–1232) Transitional period (1232–1505) இங்கு Jaffna Kingdom , Kingdom of Gampola , Kingdom of Kotte , Kingdom of Sitawaka , & Vanni Nadu என் நாம் அறிகிறோம் The Kingdom of Kandy was a monarchy on the island of Sri Lanka, located in the central and eastern portion of the island. It was founded in the late 15th century and endured until the early 19th century. Initially a client kingdom of the Kingdom of Kotte, Kandy gradually established itself as an independent force during the tumultuous 16th and 17th centuries, allying at various times with the Jaffna Kingdom, the Madurai Nayak dynasty of South India, Sitawaka Kingdom, and the Dutch colonizers to ensure its survival. / கண்டி இராச்சியம் சேனாசம்பந்தவிக்கிரமபாகு என்பவனால் உருவாக்கப்பட்டது (1467- 1815) கொழும்பு வை எடுத்துக்கொண்டால் பதினாறாம் நூற்றாண்டுக்கு முந்திய காலப்பகுதியில் கோட்டை அரசின் ஒரு பகுதியாகவும், இந்தியத் தமிழர் மற்றும் இசுலாமிய வர்த்தகர்களின் ஒரு தளமாகவும் விளங்கிய இவ்விடம், பொ.ஊ. பதினாறாம் நூற்றாண்டுக்குப் பின்னர், போர்த்துக்கேயரின் வரவுக்குப் பின்னரே முக்கியத்துவம் பெறத் தொடங்கியது. அதாவது இங்கு சிங்களவர் பெரிதாக இருக்கவில்லை . இது உங்களுக்கு ஆச்சரியமாகக் கூட இருக்கலாம் , ஆனால் அதுவே உண்மை . இந்தியத் தமிழர் மற்றும் இசுலாமிய வர்த்தகர்களின் பேச்சு மொழி அதிகமாக தமிழே! 2001 சனத்தொகை கணக்கெடுப்பின்படி கொழும்பு நகர மக்கள் தொகையியல் இன அடிப்படையில் பின்வருமாறு காணப்படுகிறது. இல இனம் சனத்தொகை மொத்த % 1 சிங்களவர் 265,657 41.36 2 இலங்கைத் தமிழர் 185,672 28.91 3 இலங்கைச் சோனகர் 153,299 23.87 4 இலங்கையின் இந்தியத் தமிழர் 13,968 2.17 5 இலங்கை மலேயர் 11,149 1.73 6 பறங்கியர் 5,273 0.82 7 கொழும்புச் செட்டி 740 0.11 8 பரதர் 471 0.07 9 மற்றவர்கள் 5,934 0.96 10 மொத்தம் 642,163 100 இதில் நீங்கள் கவனிக்க வேண்டியது 2001 இல் கூட சிங்களவரை விட [41.36] மற்றவர்களின் கூட்டுத்தொகையே கூட! Traveller Ibn Battuta who visited the island in the 14th century, referred to it as Kalanpu. Arabs, whose prime interests were trade, began to settle in Colombo around the eighth century AD mostly because the port helped their business by the way of controlling much of the trade between the Sinhalese kingdoms and the outside world. It was popularly believed that their descendants comprised the local Sri Lankan Moor community, but their genetics are predominantly South Indian [தென் இந்தியர் - ஆகவே தமிழே அங்கு கூடுதலாக பேசப்பட்டுள்ளது] இதை ஒருக்கா முழுமையாக பாருங்கள். அதைத்தான், இலங்கை அரசு இன்று பின்பற்றுகிறது போல புரிகிறது. Israel’s Occupation: 50 Years of Dispossession [amnesty international அறிக்கை] Since the occupation first began in June 1967, Israel’s ruthless policies of land confiscation, illegal settlement and dispossession, coupled with rampant discrimination, have inflicted immense suffering on Palestinians, depriving them of their basic rights. THE WORST THING IS THE SENSE OF BEING A STRANGER IN YOUR OWN LAND AND FEELING THAT NOT A SINGLE PART OF IT IS YOURS. Raja Shehadeh, Palestinian lawyer and writer நன்றி
-
"நீராடும் நிலா" "வானத்து மதியாய் என்னுடைய காதலியாய் கானத்து குயிலாய் இனிமையின் ஒலியாய் மோனமாய் இருந்து நெஞ்சில் நிறைந்தவளே! ஆனந்தம் எதுவென உன்னில் அறிந்தேன் அனலாய் இதயம் இன்னும் கொத்திக்குதே!" "கிராமத்து மண்ணின் வாசனை தெரியுது கூரான கண்ணனும் என்னைத் துளைக்குது சீரான அழகோ ஆசையைத் தூண்டாதே! நேரான பாதையிலே தலைநிமிர்ந்து போறவளே நீராடும் நிலா நீதானோ என்னவளே!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
"காதல் தந்த தண்ணீர் குடம்"
kandiah Thillaivinayagalingam replied to kandiah Thillaivinayagalingam's topic in கதைக் களம்
எவன் முரடோ அங்கு பாசம் அதிகம் அவன் வெளிப்படையானவன் பயப்பட தேவையில்லை கதை கற்பனை அதனால்த்தான் இடமே இல்லை நன்றி -
"திமிராய் நீ நடப்பாய் தினமும் உன்னைக் காண்போம்" "திமிராய் நீ நடப்பாய் தினமும் உன்னைக் காண்போம் இல்லை எனக்கூறாய் இருப்பதை எமக்கு அளித்தாய் வாழ்வின் பொருளை உன்னில் நாம் கண்டோம் வில்லங்கத்தில் இருப்பவனுக்கு நீ ஒரு கடவுள் நாவிற்கு இனிய சுவையுடன் தினமும் உணவு தந்தாய் யகத்தில் வித்தாகி, மலராகி, காயாகி, கனியாகி, விதையானாய் கண்டதையும் கற்று பண்டிதையாகிய ஒரு பல்கலைக்கழகமே லிங்கவழிபாடு பின் விநாயகர் முருகன் என்றும் முடிவில்லை இங்கிதமாய் பழகிடுவாய் இன்று உன்னை எங்கு காண்போம் கண்டதும் கவர்ந்திடுவாய் கலகலப்பாய் பழகிடுவாய் ஒரு பெரு முற்றுப்புள்ளியை இன்று பொட்டாய் வைத்துவிட்டாய் இருளிற்கு ஒளிவிளக்காய் இருண்டாருக்கு மகா காளியாய், ராகத்தில் மோகனமாய் ராமனின் சீதையாய் சாதனையில் வெற்றி மகளாய் சாந்தோர்க்கு உறுதுணையாய் இத்தனைக்கும் ஒரு வளாய் இறுமாப்பாய் இருந்தாயே திருடியது உன்னை யாரோ? தீயில் சங்கமித்தது ஏனோ?" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
"அன்பு நெஞ்சே அரவணைத்த கையே" "அன்பு நெஞ்சே அரவணைத்த கையே அயராத கண்ணே அலைந்த காலே ஆத்திரம் ஏனோ ஆவேசம் ஏனோ ஆரிடமும் சொல்லாமல் போனது ஏனோ?" "இருப்பாய் என்று இறுமாப்பு கொண்டோம் இருளில் இன்று மருண்டு துடிக்கிறோம் ஈன்ற கன்றுகள் இளைத்து வாடுகின்றன ஈழ மண்ணின் இளைய மகளே? " "உருவம் சுவரில் தீபத்துடன் தொங்குது உயிர்கள் இருந்தும் பிணமாய் நடக்கிறோம் ஊர்கள் மாறி வாரிசு வாழ்கின்றன ஊமையாய் ஊனமாய் எதோ வாழ்கிறோம்? " "எண்ணம் செயல் எல்லாம் நீயே எங்கள் வீட்டு ஆண்டவனும் நீயே ஏக்கம் தவிப்பு சுடுகுது எம்மை ஏமாற்றம் தந்து பிரிந்தது ஏனோ?" "ஐந்து பேராய் ஒன்றாய் இருந்தோம் ஐயம் கொண்டு ஓடியது ஏனோ ஒடிந்து போனோம் ஆடிப் போனோம் ஒழிந்தது ஏனோ அழிந்தது ஏனோ?" "ஓயாத அலையே ஓங்கார தீபமே ஓரமாய் ஒதுங்கி அணைந்தது ஏனோ ஔவை வழியில் பிரிவை பாடுகிறேன் ஔதடம் உண்டோ இவளுக்கு பராபரமே?" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]