Everything posted by shanthy
-
கரும்புலி நாள் சிறப்பிதழ்
கரும்புலிகள் சிறப்பிதழ் நன்றியோடு தேசக்காற்று....! தேசக்காற்று இணையத்தில் சென்று மாவீரர்களின் விபரங்கள் நினைவுகள் பகிர்வுகள் யாவற்றையும் பார்க்கலாம். இதுவரையில் வெளிவராத பல்வேறு வகையான தேசத்தின் நினைவுகள் வீரம் செறிந்த விடுதலை வரலாற்றின் பாதையில் தங்களை அர்ப்பணித்தவர்களுக்கான ஒரேயொரு இணையத்தளம்....! http://thesakkaatu.com/doc1767.html கரும்புலி நாள் சிறப்பிதழ் ----------------------------------------------------- தமிழீழ விடுதலைப்போராட்ட வரலாற்றில் 1987 ஆம்ஆண்டு யூலை மாதம் 05 ஆம்நாள் கரும்புலி கப்டன் மில்லரின் தாக்குதலுடன் கரும்புலிகள் சகாப்தம் தொடங்கிவைக்கப்பட்டது. அடிமுடி தெரியாத அற்புத மாமனிதர்கள் கரும்புலிகள் நெல்லியடி மத்திய மகாவித்தியாலயத்தில் நிலைகொண்டிருந்த சிறீலங்காப்படையினர் மீது மில்லர் கரும்புலித்தாக்குதல் நடத்தி இன்று 25 ஆண்டுகள் கடந்துவிட்டன. தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் ஒவ்வொரு திருப்புமுனைகளிலும் கரும்புலிகளின் நாமம் உள்ளது. அந்தவகையில் கடலிலும் எதிரிக்கு தக்க பாடத்தை கொடுத்தார்கள் கடற்கரும்புலிகள். இவ்வாறு விடுதலைப்போரின் போராட்டப் பாதைகளில் தடைநீக்கிகளாக கரும்புலிகள் காணப்பட்டார்கள். 2000ஆம் ஆண்டு கட்டுநாயக்கா வான்படைத்தளம் மீது சென்று கரும்புலித்தாக்குதல் நடத்தப்பட்டது. இவ்வாறு சிறீலங்காவின் தென்பகுதியில் பல நிழற்கரும்புலிகள் தாக்குதல்களை நடத்தி வீரவரலாறானார்கள். 2007ஆம் ஆண்டு அனுராதபுரம் வான்படைத்தளம்மீது எல்லாளன் நடவடிக்கை என பெயர்சூட்டப்பட்ட கரும்புலித்தாக்குதலில் 21 கரும்புலி மறவர்களால் மேற்கொள்ளப்பட்டது. இத்தாக்குதல் தரையிலும் கடலிலும் நடத்தப்பட்டுக்கொண்டிருந்த அதேவேளை, 2009ஆம் ஆண்டு வான்கரும்புலிகளும் தாக்குதலை நடத்தினார்கள். முள்ளிவாய்கால் மண்ணிலும் எத்தனையோ கரும்புலிகள் வீரவரலாறானார்கள். வெளியில் தெரியாத அந்த அற்புதமனிதர்களையும் நாங்கள் நினைவிற்கொள்கின்றோம். http://thesakkaatu.com/doc1767.html
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
வாழ்த்திய அனைவருக்கும் இதயம் நிறைந்த நன்றிகள். நமக்கு பிடிச்ச ஐஸ்கிறீமை படமாகத் தந்த தமிழ்சிறி நன்றிகள். அடுத்த முறை உங்கள் நகரம் வரும் போது நிச்சயம் கதவு தட்டப்படும் படத்தில் போட்ட ஜஸ்கிறீம் தந்தா சரி. அடைப்புக்குறியில் கேள்விக்குறிபோட்ட அண்ணாச்சி ஒரு சம்பிரதாயத்துக்குத் தான் அக்கா எண்டு சொல்றீங்கள். ஆனால் எனக்கு நீங்க அண்ணாச்சி அதை மறக்கப்படாது கண்டியளோ ?
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
லைக் போடேக்க உந்த பயம் இருந்திருக்க வேணும்.சரி இந்தமுறை மட்டும் மன்னிப்பு தருகிறேன்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
சுண்டலுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். உந்த லைக்கை நான் போட்டுக்குடுக்கமா விடப்போறதில்லை. சூரியன் மிது இடிமழை பொழியும் காட்சியை நெதர்லாந் கடலலைகள் காவிவரும் அழகை காணாமல் விடப்போவதில்லை. ஏனடா தம்பி இப்பிடி நல்லநாள் அதுவுமா சுண்டலின்ரை வாழ்க்கையில கலியாணகாற்று வீசட்டுமெண்டு வாழ்த்தாமல் இப்படி.....
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
சுமேயக்காவிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
யாயினிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். யாயினியின் உதவியால் 3பல்கலைக்கழக மாணவர்கள் படிப்பை முடித்துள்ளார்கள். கடந்த வருடம் முதல் ஒரு மாணவி யாயினியின் உதவியால் படித்துக் கொண்டிருக்கிறார். தன்னை வெளிப்படுத்த வேண்டாமென யாயினி கேட்டு உதவிக்கொண்டிருக்கிறார். இத்தகைய கருணையாளர்களை ஒளித்து வைக்க வேண்டாம் எல்லாரும் அறிய வேண்டும் என்பதால் இங்கு தெரியப்படுத்தியுள்ளேன். நேசக்கரத்தின் வளர்ச்சியிலும் பயனாளிகளின் வளர்ச்சியிலும் யாயினியின் பங்கு அளப்பரியது. எல்லாவற்றுக்கும் நன்றி தங்கையே.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
தமிழ்ப்பொடியனுக்கு வாழ்த்துக்கள்.
-
தோல்வியில் மீளுவோம்
இக்கவிதையை கொப்பியடித்து தனதாக சொந்தம் கொண்டாடியிருப்பவர் தான் ஒரு பத்திரிகையாளனென்று முகப்புத்தகத்தில் தன்னை அறிமுகப்படுத்தியிருக்கிறார்.
-
தோல்வியில் மீளுவோம்
இக்கவிதை ஏற்கனவே இங்கு இணைக்கப்பட்டது. அதன் இணைப்பு கீழே இணைத்துள்ளேன் நீலப்பறவை. இக்கவிதையை எழுதிய கவிஞர் நிக்சன் என்பவர். ஆனால் நீங்கள் கொடுத்திருக்கும் தொடுப்பில் உள்ளவர் தனது கவிதை போல முகப்புத்தகத்தில் இணைத்துள்ளார். http://www.yarl.com/forum3/index.php?showtopic=116677
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இணையவனுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
தமிழச்சிக்கு இனிய பிறந்ததின வாழ்த்துகள். விஜயகுமாருக்கு இனிய பிறந்ததின வாழ்த்துகள்.
-
இனிமேல் உங்களுக்கு பாடம் எடுக்க மாட்டன்.
தொடருங்கோ நீதிமதி "அதுவொரு கனாக்காலம்"
-
கேணல் சாள்ஸ் நினைவுநாள்
சொன்னால் முடியாத சரித்திரமாக… “என்னால் முடியும்” கேணல் சார்ள்ஸ் ச.பொட்டு (பொட்டு அம்மான் ) நினைவுப் பதிவு பலதடவைகள் இணைக்கப்பட்டுள்ளது. பார்க்க: http://www.yarl.com/...showtopic=37433 http://www.yarl.com/...showtopic=64513 http://www.yarl.com/...showtopic=73706 http://www.yarl.com/...showtopic=79943 கேணல் சாள்ஸ் வீரவணக்க உரை ச.பொட்டு http://youtu.be/GgvnZdeCidk 05.01.2008 அன்று சிறிலங்கா படையினரின் கிளைமோர் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட விடுதலைப் புலிகளின் படைய புலனாய்வுப் பிரிவுப் பொறுப்பாளர் கேணல் சாள்ஸ் (அருள்வேந்தன்) உட்பட்ட மூன்று மாவீரர்களின் 5ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். மன்னார் மாவட்டம் பள்ளமடுப்பகுதியில் சிறிலங்கா படைகளின் ஆழஊடுருவும் படைப்பிரிவு நடாத்திய கிளைமோர்த் தாக்குதலில் கேணல் சாள்ஸ் அவர்களுடன் லெப்டினன்ட் வீரமாறன், லெப்டினன்ட் காவலன் ஆகியோரும் வீரச்சாவைத் தழுவிக்கொண்டனர். தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இந்த மா வீரர்களை இன்றைய நாளில் நினைவு கூறுகின்றோம். அத்துடன் இன்றையாய நாளில் வீர காவியமான அனைத்து மாவீரர்களுக்கும் வீரவணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறோம். கேணல் சாள்ஸ் நினைவூட்டல் http://youtu.be/racf-3AZNog நியானி: திருத்தம் செய்யப்பட்டுள்ளது
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் சகாறா.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
அன்னிலிங்கத்திற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் சபேசன்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
விசுகுவுக்கு, இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள். ஜீவாவுக்கு பிந்திய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள். மற்றும் துன்னையூரானுக்கும் பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.
-
மேஜர் சிட்டுவின் நினைவு நாள் இன்று 01-08-1997
சிட்டு 15ம் வருட நினைவுகளோடு ‘சிட்டு’ சிரிப்பு நிறைந்த மகிழ்ச்சியின் உறைவிடம் நீ. நீயழைந்த காற்றும் நீ நடந்த நிலமும் நினது நினைவுகள் நிறைந்து மௌனித்துக் கிடக்கிறது. கனவுகளோடும் கலையாத நினைவுகளோடும் நீ நிறைந்த இசையும் பாடல்களும் உயிர்ப்பின் இருப்பாய் ஈரமாய்…… இசை நிறையும் திசையெல்லாம் உன்னை ஏந்தியிருக்கிறது ஒலிக்கதிர்கள்….. தீயின் சுவடுகள் மீதேறிய உனது கால்களும் மூச்சும் 01.08.1997அன்று ஓய்வெடுத்து உறங்கிய நாள் கடந்து இன்றுன் நினைவுகள் 15ம் ஆண்டைத் தொட்டு நிற்கிறது. ஆற்ற முடியாச் சோகத்தை இந்த நூற்றாண்டு தந்துவிட்டுச் சலனமின்றி நகர்கிற இந்நாட்கள் பற்றிச் சொல்வதானால்…….???? நீயுறங்கிய நிலம் மீது பேயுலவித் திரிகிறது….. அமைதியைக் கொன்று போட்டவர்கள் உனதும் உனது தோழர்களும் தாங்கிய கனவுகள் மீதும் காலூன்றி உங்கள் கனவுகள் சிதைகிற பொழுதுகளிவை….. ஊழித்தீமூட்டி உனதும் உன்போன்றோரின் கனவுகளும் நிலமிழந்து நின்மதியிழந்து அலைகிறது. நீங்கள் தா(தூ)ங்கிய இடங்களும் தோற்றுப் போய் நீங்கள் எதிர்த்துக் களமாடியவர்கள் கைகளிலே…. எனினும் நம்பிக்கைகள் த(து)ளிர்க்கிறது. நாங்கள் நேசித்த உங்கள் கனவுகள் மெய்த்திடக் காலமெங்கள் கண்ணீரைத் துடைக்குமென்று நம்புகிறோம்….. அதுவரை காத்திருங்கள் உங்கள் அனைவருக்கும் அன்று தீயெடுத்துத் தீப்பந்தமேந்தித் துயர் கரைப்போம். (01.08.2012.மேஜர் சிட்டு இவ்வுலகைவிட்டுப் பறந்து 15 ஆண்டுகள் நிறைகிறது. ஒரு போராளியாக பாடகானாக நடிகனாக தமிழர் தேசத்தின் விடுதலைக்காக ஓயாது உழைத்த ஒரு போராளி. 75இற்கு மேற்பட்ட தேசப்பாடல்களைப் பாடியவர். கலைஞனாய் இயங்கியவன் 01.08.1997அன்று களத்தில் வீரச்சாவைத் தழுவிக்கொண்டான்)
-
லெப். கேணல் ராதா நினைவு நாள் இன்று ...
எங்கள் ஊர் முனையில் உயிர் விதைத்து எங்கள் ஊர்காத்த தளபதியே உன்னையிழந்த அந்தநாள்....எங்கள் ஊரின் செம்பாட்டு மண்மீது உனது உடல் சரிந்த நாள்....இன்றும் நினைவுகளில் நிறைகிறது.... தளபதி ராதா அவர்கள் குப்பிளான் கற்கரைப்பிள்ளையார் கோவில் மேற்கு வீதியில் எதிரியின் சூடுபட்டு வீரச்சாவடைந்தார். ராதா அவர்களின் குருதி தோய்ந்த மண்ணை அருகில் நின்ற ஒரு போராளி அவர் இறந்த இடத்திற்கு அண்மையில் இருந்த புளியமரத்தின் அடியில் போட்டு மூடியதாக சொல்வார். ஒருகாலம் ஊர் நிலமைகள் சரியாகிற போது ராதா வீரச்சாவடைந்த பிள்ளையார் கோவில் மேற்கு வீதிக்கு ராதா வீதியெனப் பெயர் வைக்க வேண்டுமென்றும் சொல்வார். ராதா உயிர்விட்ட வீதி ராதாவீதியாக வழிகிடைக்குமா என்பதே கேள்வியாக அந்த வீரனின் நினைவுகள் சுமக்கும் அந்த வீதி காத்திருக்கிறது.
-
மேஜர் சிட்டுவின் நினைவு நாள் இன்று 01-08-1997
அமுதமழையில் நனையும் பொழுதில்.... பாடலைப் பாடியவர் மேஜர் சிட்டு. 01.08.1997அன்று ஜெயசிக்குறுய் சமரில் வீரச்சாவடைந்த சிட்டு 70ற்கு மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார்.
-
மேஜர் சிட்டுவின் நினைவு நாள் இன்று 01-08-1997
விழிகள் கரைய உருகியுருகி தினமும் அழுகின்றோம். பாடலைப் பாடியவர் மேஜர் சிட்டு. 01.08.1997அன்று ஜெயசிக்குறுய் சமரில் வீரச்சாவடைந்த சிட்டு 70ற்கு மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார்.
-
மேஜர் சிட்டுவின் நினைவு நாள் இன்று 01-08-1997
அலைபாடும் இசையோசை கேட்கலியா.... பாடலைப் பாடியவர் மேஜர் சிட்டு. 01.08.1997அன்று ஜெயசிக்குறுய் சமரில் வீரச்சாவடைந்த சிட்டு 70ற்கு மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார். ***நீமறைந்து போனாலும் உனது ஞாபகங்களை என்றும் சுமக்கும்உ னது தோழமைகள் உனது குரலுக்கு வசமான உலக இசைவிரும்பிகளும் உனது குரலையும் உனது நினைவுகளையும் காலமுள்ள வரையும் காத்துச் செல்வோம்***
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
அவர் நக்கல் அடித்தால் நாங்களும் திருப்பி அடிப்பதால் ஏதாவது நன்மை வந்துவிடுமா ? அர்யுன் கீழ்த்தரமாக விமர்சிக்கிறார் என்றால் அதுவே ஒட்டுமொத்த தமிழர்களின் விமர்சனமா ? நீங்கள் ஒருபக்கத்தை மட்டும் பார்த்திருப்பதற்கு நான் என்ன செய்ய முடியும் விசுகு. நான் நேசிப்பது பிரபாகரன் என்ற தலைவனை அவர் வளர்த்த எல்லாவல்ல மாவீரர்கள் போராளிகளை. அவர்களை யாரோ ஒருவர் விமர்சிக்கிறார் என்பதற்காக அவரை சோத்துப்பாசல் பருப்புப்பாசலென்று பட்டம் தெளிக்கமாட்டேன். ஏனெனில் தலைவர் பிரபாகரனும் அவர்கள் வளர்த்தவர்களும் வஞ்சம் தீர்த்தலையே திருப்பி காறித்துப்புவதையோ தங்கள் பணியாகக் கொள்ளவில்லை. நீங்கள் அவர்களை நேசிப்பதாக சொல்லிக்கொண்டு சோற்றுப்பாசல் பருப்புப்பாசல் என திருப்பித் துப்புவது தலைவர் பிரபாகரனையும் அவர் வளர்த்த எல்லாரினது தியாகங்களையும் கொச்சைப்படுத்துவது போலிருக்கிறது. இன்னா செய்தாரை ஒறுத்தல்... துறவறவியலில் திருவள்ளுவர் ஒரு அற்புதமான திருக்குறளை நமக்கெல்லாம் தந்திருக்கிறார்- இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண நன்னயஞ் செய்து விடல். நாமெல்லாம் சாமியார் அல்ல. சாமியார்களே ஒன்றையும் விடுவதில்லை என்பதைத் தற்போதைக்கு மறந்து விடுவோம். இந்தக் குறளுக்கு பரிமேலழகர் அழகான உரை தந்திருக்கிறார்- இன்னா செய்தாரை ஒறுத்தல் - தமக்கு இன்னாதவற்றைச் செய்தாரைத் துறந்தார் ஒறுத்தலாவது: அவர் நாண நல் நயம் செய்துவிடல் - அவர் தாமே நாணுமாறு அவர்க்கு இனிய உவகைகளைச் செய்து அவ்விரண்டனையும் மறத்தல். (மறவாவழிப் பின்னும் வந்து கிளைக்கும் ஆகலின் , மறக்கற்பால ஆயின. அவரை வெல்லும் உபாயம் கூறியவாறு . இவை மூன்று பாட்டானும் செற்றம் பற்றிச் செய்தல் விலக்கப்பட்டது.) இதன் பொருள் சமகால தமிழில் இப்படி புரிந்து கொள்ளப்படலாம் (சொற்குற்றம் பொருள் குற்றம் காணும் பெரியவர்கள் பண்பான மொழியில் என்னை இடித்துரைத்துத் திருத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்) இன்னா செய்தாரை ஒறுத்தல் - தான் விரும்பத்தகாத விஷயங்களை செய்தவர்களை சாமியார்கள் தண்டிப்பது எப்படி என்றால் அவர் நாண நல் நயம் செய்து விடல் - அப்படி செய்தவர்களே வெட்கப்படுமாறு அவர்கள் மகிழ்ச்சியடைந்து சிரிக்கும்படியான செயல்களைச் செய்து நல்லது கெட்டது இரண்டையும் மறந்து விட வேண்டும் (இந்த நல்லது கெட்டது இரண்டையும் மறக்காமல் இருந்தால் திரும்பத் திரும்ப வம்பு வழக்கு தொடரும் என்பதால் இவ்விரண்டும் மறக்கத் தக்கதாயின. அதனால்தான் இந்த ஐடியா தரப்படுகிறது. தண்டிப்பது, நல்லது செய்வது, அப்புறம் எல்லாவற்றையும் மறப்பது இதிலெல்லாம் கோபத்துக்கு இடம் தரக்கூடாது). பரிமேலழகர் எவ்வளவு அழகா சொல்லி இருக்கிறார் பார்த்தீர்களா? ஏன் தேவை இல்லாமல் நாம் வன்மம் வைத்து பகை செய்ய வேண்டும்? இந்தக் குறளுக்கு முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் ஒற்றை வாக்கியத்தில் நச்சுன்னு சொல்லிட்டாரே- "நமக்குத் தீங்கு செய்தவரைத் தண்டிப்பதற்குச் சரியான வழி, அவர் வெட்கித் தலை குனியும்படியாக அவருக்கு நன்மை செய்வதுதான்." கோபத்தை விட்டோம்னா நாம அவங்க வெட்கப்படணும்னு நினைத்து நல்லது செய்ய மாட்டோம், அவங்க சந்தோஷமா இருக்கணும்னு நெனச்சு நல்லது செஞ்சுட்டு, அதையும் மறப்போம். அதுதான் குறள் வழி. நட்பு வழி. பகை அழிப்போம். நட்பு வளர்ப்போம். இக்கருத்தை வளங்கிய தளத்தின் இணைப்பு :- http://www.sasariri.com/2011/04/blog-post_8783.html
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
இங்கு தொடர்ந்து அர்யுன் அவர்களை பலர் சோத்துப்பாசல் என்று எழுதிக் கொண்டிருப்பதனையும் இனிமேல் நிறுத்த நிர்வாகம் விதியமைக்க வேண்டும். அர்யுனும் ஒரு முன்னாள் போராளிதான். அவரும் தாயகக்கனவோடுதான் ஆயுதம் தூக்கப்போனோர். அவரது தெரிவும் தலைமையும் தவறானது என்பதற்காக தொடர்ந்து சோத்துப்பாசல் துரோகி போன்ற அர்தத்தத்தில் சாடுவதையும் சாடுவோர் கவனித்து நிறுத்திக் கொள்வதே சக கருத்தாளனுக்கு நாம் கொடுக்கும் மதிப்பு.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இணையவனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.