Jump to content
 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

shanthy

கருத்துக்கள உறவுகள்
 • Content Count

  4,281
 • Joined

 • Last visited

 • Days Won

  29

Everything posted by shanthy

 1. உண்மை தான். நான் ஏதாவது குறுக்கு கேள்வி கேட்டால் அவன் சொல்லும் விளக்கம் எனக்கு பயமாக இருக்கும். மேலதிக விளக்கதுதிற்கு நன்றி நாதமுனி.
 2. படுபாவிளெண்டு திட்டப்படாது நாதமுனி.எனது மகனை படுபாவிளெண்டு நீங்கள் சொல்றபோல இருக்கு. எனது மகன் cyber securityமுன்பு தான் யுனி புறொயெக்ட்டில் செய்த ஹக் பற்றிய விடயங்களை சொல்லுவான். எனக்கு பாதி விளக்கம் அவன் சொல்லி தான் புரியும். இரவிரவாக நித்திரை முளித்து செய்த அவனது படிப்பு தான் ஞாபகம் வருகிறது.
 3. மகளுக்கும் மருமகனுக்கும் இனிமையான திருமண நல் வாழ்த்துக்கள்.
 4. அனுபவப் பகிர்வு ஒரு பயண அனுபவத்தை கூடவே தந்திருக்கிறீங்கள். எண்டாலும் மனைவியின் ஆசையை நிறைவேற்றி தப்பி விட்டீர்கள். வாழ்த்துக்கள்.
 5. இந்தக் கவிதையின் சொந்தக்காரன் திரு பற்றி மேலும் அறிந்து கொள்ள கீழ் வரும் இணைப்புக்கு செல்லுங்கள். வாழத்தெரியாதவனின் வாழ்வை கவிதையாகத் தந்த திரு தன் வாழ்வையும் சிறைகளிலும் வதைமுகாம்களிலும் கழித்த வரலாறுகளையும் எழுத வேண்டும். https://ta.m.wikipedia.org/wiki/திருச்செல்வம்_திருக்குமரன்?fbclid=IwAR0NEoeyEROtEaMb_j69MMTCTPhjIHmirGR9ok1TAKpioiGm8Lal7lBShjA
 6. " பார்த்திபன் " இன்று உங்கள் பிறந்தநாள். 24 வயது..., இன்னும் என் கைகளுக்குள் குழந்தையாகவே இருக்கிறாய். கருவிலிருந்து இந்த வினாடி வரையும் நீ போராட்டக்காரனாகவே இருக்கிறாய். உன் குழந்தைக் காலம் உனக்கு மகிழ்ச்சியானதாக இருக்கவில்லை. அம்மாவுக்காக அம்மாவோடு கூட வந்த குழந்தை நீ. அம்மா அழக்கூடாது என்பதற்காகவே எல்லாச் சுமைகளையும் என்னோடு சுமந்தவன். இலகுவாய் கிடைக்க வேண்டியவற்றையும் நீ போராடித்தான் பெற்றாய். நாங்கள்
 7. Saturday, July 4, 2020 குற்றம் 1 ----------+-++---- அன்று குடும்ப நீதிமன்றிற்கு காலை 10.20 மணிக்கு 74வது இலக்க அறைக்கு அழைக்கப்பட்டிருந்தேன். 24.12.2015 என்மீது நிகழ்த்தபட்ட வன்முறைக்கு எதிராக காவல்துறையினரால் வழக்கு பதியப்பட்ட வழக்கு விசாரணை நாளது. திருமதி.ஆனந்தா அவர்கள் 24.12.2015 அன்று நள்ளிரவு ஈடார் ஓபஸ்ரைன் மலைக்கோட்டை தேவாலயத்திற்கு தனது கா
 8. ஞாபகங்கள் எப்பொழுதும் அலாதியானவை. அவை என்றும் மகிழ்ச்சியான மன நிறவையும் சில ஞாபகங்கள் கண்ணீரையும் தருபவை. அப்பாவின் கடவுள் நம்பிக்கையை நீங்கள் கைவிட்டது உங்கள் தேடல் தெளிவு.அதை உங்கள் அப்பா இப்போது இருந்தால் புரிந்து கொள்வார். உங்கள் வீட்டு சட்டம் போல கால் முகம் கழுவி சாமிகும்பிட்டு படித்த நாட்கள் ஞாபகம் வந்து போகிறது. அடுத்த தலைமுறையின் உங்கள் பிள்ளைகளுக்கு ஊரில் நீங்கள் படித்தது போல பின்னேரம் இருட்டு வரத் தொடங்க இருத்தி வைத்து படிப்பிப்பது சாத்தியம் இல்லை. இங்கு வளரும் எங்கள் பிள்ளைகள் புத்திசாலிகள். அவர்கள் கட்டாயத்தின் பெயரில் எதையும் செய்ய வரமாட்டார்கள். அவர்கள் தா
 9. காலக்கடனும் கடமையும். 27. 12. 2019 காலை 10மணிக்கு வவுனீத்தாவும் நானும் பார்த்திபனிடம் போய்க்கொண்டிருந்தோம். மழைத்தூறலுடன் கூடிய மெல்லிய காற்று வீசிக்கொண்டிருந்தது. 4மாதங்களின் பிறகு அவளும் நானும் சேர்ந்த பயணமது. இம்முறை நத்தார் விடுமுறைக்கு பார்த்தி எங்களிடம் வரவில்லை. அவன் விடுமுறையிலும் வேலை செய்து கொண்டிருக்கிறான். சப்பாத்தைக் கழற்றிவிட்டு காலை மடித்து சப்பாணி கட்டியிருந்தபடி கதைத்துக் கொண்டிருந்தாள். சிறுவயது ஞாபகங்கள் முதல் இன்று வரையான அவளது கதைகள் கேட்டபடி காரோடிக் கொண்டிருக்கிறேன். வெளிவரவிருக்கும் அவளது பாடல்களைத் தனது மொபைலில் இருந்து காருக்கு மாற்றிப்
 10. அனுபவங்களே சிறந்த பதிவுகளாகின்றன. இது எனது அனுபவப்பகிர்வு. உங்கள் கருத்திற்கு நன்றிகள் உறவே. எல்லாம் கலந்தது தான் வாழ்வுப்பயணம் சுவியண்ணா. சில அனுபவங்கள் தரும் மனவுளைச்சலைத் தாண்டி வருவது பெரும் சவாலானது. உங்கள் கருத்திற்கு நன்றிகள்.
 11. உங்கள் கருத்துக்களால் என் மகளை உயர்த்திய பெருமாள் , நில்மினி, குமாரசாமி , உடையார்,பகலவன் ,தமிழ்சிறி,அம்பாறை தம்பி தனிக்காட்டு ராஜா,ஜெகதா துரை, பையன் , தமிழினி,உதயகுமார் அனைவருக்கும் மற்றும் விருப்பிட்ட அனைவருக்கும் மிக்க நன்றிகள்.
 12. அம்மாவின் பிரிவுத் துயரில் நானும் பங்கேற்கிறேன். விசுகு மற்றும் அவரது குடும்பத்தினர்க்கும் ஆறுதல்கள்.
 13. 07.02.2020 அன்று Spotify இல் மகள் வவுனீத்தாவின் முதல் பாடல் அல்பம் வெளியாகியுள்ளது. கீழ்வரும் இணைப்பில் சென்று அனைவரும் கேட்கலாம். முதலாவது பாடல் YouTubeஇல் கேட்க https://youtu.be/sVvB4ZfmVvU இரண்டாவது பாடல் இணைப்பு காலம் தந்த என் குழந்தையின் பாடல் வரிகள் இசை குரல் அம்மாவாய் பெருமை கொள்ள வைக்கிறது. அவளது உலகம் நம்பிக்கை அம்மா அண்ணா என்ற இருவரைப் சார்ந்தது. தனது முதல் பாடலை அம்மாவுக்கும் அண்ணாவுக்கும் பரிசளித்திருக்கிறாள். 21வயதிற்குள் வவுனீத்தா கடந்த துயர்கள் அடைந்த மனவலைச்சல்கள் ஏராளம். ஏன் எங்களுக்கு மட்டும் இப்படி துயரங்களே தொடர்கிறது ? பலமுறை அவள் நொந்த
 14. Sunday, April 19, 2020 உலையும் மனசோடு அலையும் இரவு. - சாந்தி நேசக்கரம் - குண்டம்மா ? இன்னும் எவ்வளவு நேரத்தில வாறீங்கள்? அவள் வட்ஸ் அப்பில் எழுதியிருந்தாள். இன்னும் ஒரு மணிநேரத்தில்...பதில் எழுதினேன். றெயின் கொலோன் பிரதான நிலையத்தைத் தாண்டி பிராங்போட் நோக்கி ஓடிக்கொண்டிருந்தது. எத்தைனயோ ஞாபகங்களும் மனசுக்குள் அலைபோலோடி வந்து உடையும் நுரைகளாய் மணலோடு கலந்து போவது போல பிள்ளைகளுடன் வாழ்ந்த காலங்களும் அவர்களுடனான ஞாபகங்களும் வந்து வந்து போய்க்கொண்டிருந்தது. றைன் நதியோரமாக றெயின் ஓடிக்கொண்டிருந்தது. ஆவணிமாதம் ஆற்றோரமெங்கும் பச்சையாகியிருந்த
 15. உங்கள் அன்புக்கு நன்றி அக்கா. உங்கள் அன்புக்கு நன்றி குமாரசாமி. ஓரடி முன்னேற பேரிடி வந்துவிடுகிறது. இன்று நாளையென்று நாட்களை கடக்க வேணடியுள்ளது. உங்கள் அன்புக்கு நன்றி உடையார்.
 16. தற்போது அதிகரித்துள்ள ஆலோசனைக் குறிப்புகள் அதிகம் தான் கிருபன். எனது பிள்ளைகளுக்கு சிறுவயதில் இருந்து தடிமல் காச்சல் வந்தால் முதல் கொடுப்பது மல்லி சின்னச்சீரகம் அவித்த தண்ணீர் தான். கடுமையான இருமல் நீண்டநாள் இருமலுக்கு சிறந்தது சுடுநீரில் கொஞ்சம் இஞ்சிச்சாறு தேன் கொஞ்சம் தேசிக்காய் கலந்து குடித்து பாருங்கள். இருமல் எப்படி அகலும் என்பது புரியும். எதுவும் அளவோடு பின்பற்றினால் பாதுகாப்பு. எம்மவர்கள் தற்போது அதிகம் ஆலோசனையெனும் பெயரில் தரும் ஆலோசனைகள் புலம்பல் தான் அதிகம்.
 17. இந்தத்திரைப்படத்தை வந்த புதிதில் 2தடவைகள் பார்த்தேன். விமலுக்கு இதுவொரு சிறந்த படம் . அதிகம் பேசப்படவில்லை. ஆனால் சமூக அக்கறை மிக்க திரைக்காவியம்.
 18. சித்த ஆயுர்வேதம் மட்டக்களப்பு அறிமுகம். 2019ம் ஆண்டு பதிவுசெய்யப்பட்ட காணொளி இது. https://youtu.be/QVNlnqtfz90 https://youtu.be/QVNlnqtfz90
 19. வணக்கம் பையா, நீங்கள் அனுப்பிய உதவி 52450ஆயிரம் ரூபா கிடைத்தது. உங்கள் உதவியின் மூலமான முன்னேற்ற அறிக்கை திட்ட முன்னெடுப்பின் ஒழுங்கில் அறியத்தரப்படும். நன்றி உறவே. வணக்கம் நில்மினி, பேபால் வசதி இடைநிறுத்தப்பட்டுள்ளது. அதனால் வங்கியிலக்கம் ஊடாக அனுப்ப வாய்ப்பு உள்ளதா அறியத்தாருங்கள். மீதி விபரம் தனிமடலில் அல்லது whatsappஅனுப்பி வைக்கிறேன்.
 20. இதுவே தான் இதன் இணைப்பை தேடினேன். எடுக்க முடியாமல் இருந்தது. இணைப்பை தந்தமைக்கு நன்றி மீரா. நன்றி பையா, உங்கள் உதவி மலசலகூடம் கட்ட பயன்படுத்தப்படும். விபரங்கள் தனிமடலில் அனுப்பியுள்ளேன் பாருங்கள்.
 21. மட்டக்களப்பு மாவட்டத்தில் நேசக்கரம் அமைப்பினால் 2013ம் ஆண்டு சித்த ஆயள்வேத தோட்டம் நிறுவப்பட்டது. 2ஏக்கர் நிலத்தில் உருவான ஆயர்வேத நிலமானது செங்கலடி பிரதேசசெயலர் பிரிவில் பலாச்சோலை எனும் இடத்தில் அமைந்துள்ளது. அருகிவரும் தமிழ் பாரம்பரிய சித்த வைத்தியத்தை மேம்படுத்திப் பேணும் வகையிலும் ஆங்கில வைத்தியத்தால் குணப்படுத்த முடியாத நோய்களைக் குணப்படுத்தும் நோக்கிலும் தமிழ் மாணவர்களுக்கு சித்த வைத்தியப் பயற்சியை வழங்கவும் எம்மால் உருவாக்கப்பட்டதே சித்த ஆயர்வேத மூலிகைத் தோட்டமாகும். ஆயுர்வேத வைத்திய நிலையத்தை உருவாக்கிக் கொள்வதன் மூலம் எமது மருத்துவத்துறையை விருத்தி செய்யக்கூடிய வாய்ப்பினையும
 22. கருத்திட்ட பையன் சுவியண்ணா, பாலபத்திர ஓணாண்டி , குமாரசாமி , நொச்சி அனைவருக்கும் நன்றி. காலம் இக்கடும் துயரையும் கடத்திச் சென்று எல்லோரையும் மீட்க வேண்டும். அனைவரின் அன்புக்கும் நன்றிகள்.
 23. இதுபோன்ற அனுபவத்தை நானும் அனுபவித்திருப்பதால் இதுபற்றி அதிகம் விளக்கத் தோன்றவில்லை. ஒடுகட்டத்தில் நாங்களே போதுமடா சாமியென எல்லாக்கட்டுக்களையும் உடைத்துக் கொண்டு வெளியேறும் தைரியத்தை காலம் தரும். அதுவே என்னையும் வெளியில் கொண்டு வந்தது. இது போல நிலமையில் வாழும் பலரையும் கொண்டு வரும்.
 24. கண்மணியக்கா , காலம் ஒவ்வொருவருக்கும் தனிமையைப் பழகென்று தருகின்ற தண்டனை கொடியது. ஆனால் தனிமையையும் சமாளித்து வெளியேறி வருதலே வெற்றி. முயற்சிப்போம் வெற்றி காண்போம்.
 25. பெற்றோராக எங்களுக்கு உள்ள பயம் தான் தமிழ்சிறி. ஆனால் பிள்ளைகள் உங்களோடு அருகில் இருப்பது ஆறுதலே.
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.