Jump to content

பிழம்பு

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    11370
  • Joined

  • Days Won

    2

Everything posted by பிழம்பு

  1. தனிநாடு கோரிக்கைக்கு ஆதரவளிக்கவில்லை - சரத்வீரசேகரவின் கேள்விக்கு சுரேன் சுரேந்திரன் பதில் தனிநாடு கோரிக்கைக்கு ஆதரவளிக்கவில்லை என உலகதமிழர் பேரவையின் பேச்சாளர் சுரேன்சுரேந்திரன் தெரிவித்துள்ளார் என ஐலண்ட் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. தமிழீழ விடுதலைப்புலிகளிற்கு ஆதரவளிக்கின்றீர்களா என நாடாளுமன்ற உறுப்பினர் சரத்வீரசேகர கேள்வி எழுப்பியவேளை சுரேன் சுரேந்திரன் இதனை தெரிவித்துள்ளார். நேற்று நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற சந்திப்பின்போது சுரேன் சுரேந்தின் இதனை தெரிவித்துள்ளார் நேற்றைய சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சரத்வீரசேகர நாட்டின் ஒற்றையாட்சிக்கு ஆபத்து ஏற்பட்டபோதெல்லாம் அதற்கு எதிராக பௌத்த மதகுருமார்கள் அணிதிரண்டுள்ளனர் என சுட்டிக்காட்டியுள்ளார். நாட்டை 2500 வருடங்களாக பௌத்தமதகுருமார் காப்பாற்றியுள்ளனர் என சுட்டிக்காட்டியுள்ள அவர் இந்த காலத்தில் 17 படையெடுப்புகள் இடம்பெற்றன விடுதலைப்புலிகள் பிரிவினைவாத போரில் ஈடுபட்டார்கள் எனவும் தெரிவித்துள்ளார். அரசியல் நோக்கங்களை அடைவதற்காக அப்பாவி பொதுமக்களை கொலை செய்வதே பயங்கரவாதம் ஆகவே பயங்கரவாதத்திற்கான காரணம் நியாயப்படுத்தப்பட்டாலும் பயங்கரவாதத்தை நியாயப்படுத்த முடியாது நாங்கள் முழுமையாக பயங்கரவாதத்தை தோற்கடித்துள்ள போதிலும் விடுதலைப்புலிகளை நினைவுகூருவதற்கு மேற்குலக நாடுகள் அனுமதிக்கின்றன எனவும் அவர் தெரிவித்துள்ளார். நீங்கள் விடுதலைப்புலிகளை ஆதரிக்கின்றீர்களா என்ற சரத்வீரசேகரவின் கேள்விக்கு உலக தமிழர் பேரவையின் பேச்சாளர் நாங்கள் தனிநாட்டு கொள்கையை ஆதரிக்கவில்லை நாங்கள் அதற்கு ஆதரவளித்திருந்தால் நான் இங்கு வந்திருக்கமாட்டேன் என தெரிவித்தார் என ஐலண்ட் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. தனிநாடு கோரிக்கைக்கு ஆதரவளிக்கவில்லை - சரத்வீரசேகரவின் கேள்விக்கு சுரேன் சுரேந்திரன் பதில் | Virakesari.lk
  2. இலங்கையில் யுத்த குற்றங்களில் ஈடுபட்ட அதிகாரிகளிற்கு எதிராக தடைகளை அறிவிக்கவேண்டும் என பிரிட்டனின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் விடுத்த வேண்டுகோள்களிற்கு பிரிட்டனின் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் ஆன் மேரி டிரெவெல்யன் உறுதியான பதிலை வழங்கதவறியுள்ளார். இலங்கையின் மனித உரிமை நிலவரம் குறித்து இடம்பெற்ற கடுமையான விவாதங்களின் போது பிரிட்டனின் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் ஆன் மேரி டிரெவெல்யன் உறுதியான பதிலை வழங்கதவறியுள்ளார். கென்சவேர்ட்டிவ் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழர்களிற்கான அனைத்து கட்சி நாடாளுமன்ற குழுவின் தலைவருமான எலியட் கோர்ல்பேர்ன் அமைச்சர நோக்கி நேரடியாக பின்வரும் கேள்வியை எழுப்பினார். இலங்கையின் உயர் சமூகத்தை சேர்ந்த யுத்த குற்றங்களில் ஈடுபட்டனர் என நம்பகதன்மை மிக்க குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ளவர்களிற்கு எதிராக தடைகளை விதிப்பதற்காக பிரிட்டனின் வெளிவிவகார அமைச்சு ஆதாரங்களை ஆராய்கின்றது என சபைக்கு உறுதி செய்யுங்கள் டிரெவெல்யன் பின்வருமாறு பதிலளித்தார். நம்பகதன்மை மிக்க உள்நாட்டு பொறுப்புக்கூறல் செயன்முறை குறித்தஇலங்கையின் மக்கள் மற்றும் பாதிக்கப்பட்ட குழுக்களின் கரிசனையை நாங்கள் ஏற்றுக்கொள்கின்றோம் . இந்த கரிசனைகளிற்கு தீர்வை காணுமாறு நாங்கள் இலங்கை அரசாங்கத்தை தொடர்ந்து வலியுறுத்துகின்றோம் நான் அங்கு விஜயம் மேற்கொண்டவேளை இது குறித்த கரிசனையை எழுப்பினேன் மனித உரிமைகள் குறித்தும் நீதி விடயங்கள் குறித்தும் சிவில் சமூகத்தின் உறுப்பினர்களிடம் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டேன் என தெரிவித்துள்ளார். இலங்கையில் யுத்த குற்றங்களில் ஈடுபட்ட அதிகாரிகளிற்கு எதிராக தடைகள் ; உறுதியான பதிலை அளிக்க தவறினார் பிரிட்டன் அமைச்சர் | Virakesari.lk
  3. பறந்துகொண்டிருந்த விமானத்தில் இலங்கை சிறுமி பாலியல் துஷ்பிரயோகம் : 49 வயதான இந்திய பிரஜை கைது விமானத்தில் வைத்து இலங்கையை சேர்ந்த சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக குற்றம்சாட்டப்பட்ட இந்திய பிரஜை கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் 49 வயதுடைய இந்திய பிரஜையாவார். பாதிக்கப்பட்ட சிறுமி இலங்கையை சேர்ந்த 8 வயதுடையவராவார். இன்று புதன்கிழமை (13) சவுதி அரேபியாவிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த ஸ்ரீ லங்கன் ஏர்லைன்ஸ் விமானத்திலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் விமான பணியாளர்களிடம் விடுத்த முறைப்பாட்டின் அடிப்படையில் குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் குறித்த விமானத்திலிருந்து கட்டுநாயக்கவை வந்தடைந்து மீண்டும் இந்தியாவை நோக்கி புறப்படவிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். சிறுமி பரிசோதனைக்காக விமான நிலைய பொலிஸாரால் நீர்கொழும்பு பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். கைதுசெய்யப்பட்டவர் கொழும்பு கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். https://www.virakesari.lk/article/171654
  4. (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) காலனித்துவ ஆட்சியில் படுகொலை செய்யப்பட்ட எட்வர்ட் ஹென்றி பேதிரிஸ் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க மூவரடங்கிய குழு நியமிக்கப்பட்டுள்ளதை போன்று லசந்த விக்கிரமதுங்க, ஜோசப் பரராஜசிங்கம், ரவிராஜ், மகேஸ்வரன் படுகொலை தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள விசேட குழு நியமிக்கப்பட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தினார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை (13) இடம்பெற்ற அமர்வின் போது விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் உரையாற்றுகையில், இந்த ஆண்டு மார்ச் 21,செப்டெம்பர் 09,ஒக்டோபர் 04,ஒக்டோபர் 18,நவம்பர் 24, நவம்பர் 30, டிசெம்பர் 06 மற்றும் டிசெம்பர் 08 ஆகிய திகதிகளில் இருபத்தேழு இரண்டின் கீழ் முக்கிய பிரச்சினைகளை முன்வைத்தேன். ஆனால் இதுவரை பதில் கிடைக்கவில்லை. அடுத்த ஆண்டு பாராளுமன்ற கூட்டத்தொடரின் முதல் வாரத்திலாவது இந்த கேள்விகளுக்கு பதிலளியுங்கள். காலனித்துவ ஆட்சியில் படுகொலை செய்யப்பட்ட எட்வர்ட் ஹென்றி பேதிரிஸ் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள மூவரடங்கிய குழுவை அமைச்சரவை நியமிக்கப்பட்டுள்ளதை வரவேற்கிறோம்.ஹென்ரி பேதிரிஸ் படுகொலை மிலேட்சத்தனமானது. உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்தால் படுகொலை செய்யப்பட்டவர்கள்,,சண்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க, ரிச்சட் சொய்சா,முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான ஜோசப் பரராஜசிங்கம்,ரவிராஜ்,மகேஸ்வரன் படுகொலை மற்றும் சாகரிகா கோமஸ்,பிரேம கீர்த்தி அல்விஸ் ஆகியோர் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு உண்மை பகிரங்கப்படுத்தப்பட வேண்டும். காலனித்துவ ஆட்சியில் படுகொலை செய்யப்பட்ட எட்வர்ட் ஹென்றி தொடர்பில் காட்டும் அக்கறை அண்மை காலத்தில் படுகொலை செய்யப்பட்டவர்கள் விவகாரத்தில் செலுத்த வேண்டும் என்றார். ஜோசப் பரராஜசிங்கம், ரவிராஜ், மகேஸ்வரன், லசந்த ஆகியோரின் படுகொலை : விசேட விசாரணைக் குழுவை நியமியுங்கள் - எதிர்க்கட்சித் தலைவர் | Virakesari.lk
  5. உலகத்தமிழர் பேரவையின் முயற்சி ஒடுக்குமுறை அரசாங்கத்துக்கு 'வெள்ளையடிக்கும்' செயற்பாடு - கஜேந்திரகுமார் (நா.தனுஜா) தமிழர் தாயகப்பகுதிகளில் திட்டமிடப்பட்ட இனவழிப்பு நடவடிக்கைகளும், தமிழர்களுக்கு எதிரான அடக்குமுறைகளும் மேலோங்கியுள்ள சூழ்நிலையில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை மையமாகக்கொண்டு உலகத்தமிழர் பேரவையினால் அண்மையில் முன்னெடுக்கப்பட்டிருக்கும் முயற்சியை அரசாங்கத்துக்கு 'வெள்ளையடிக்கும்' செயற்பாடாகவே தாம் கருதுவதாக தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். அதுமாத்திரமன்றி அடுத்த ஆண்டு பாராளுமன்றத்தேர்தல் நடைபெறவுள்ளது. அதில் இதுவரை காணாத பாரிய சரிவொன்றைச் சந்திக்கநேரும் என்பதால் தமது வாக்குவங்கியைப் பாதுகாத்துக்கொள்ளும் அதேவேளை, தமது உதிரிகளான உலகத்தமிழர் பேரவையின் ஊடாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு அங்கீகாரத்தை வழங்கும் மறைமுக நடவடிக்கையில் கூட்டமைப்பு ஈடுபட்டிருப்பதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். ஒவ்வொரு தனிநபரும் சமாதானமாகவும், கௌரவத்துடனும், நம்பிக்கையுடனும், எவ்வித பயமும் சந்தேகப்படுதலுமின்றி சமமான உரிமைகளை அனுபவித்து வாழக்கூடிய ஒரு இலங்கை உருவாக்கப்படவேண்டும் என்ற தொனிப்பொருளை மையப்படுத்திய 'இமயமலை' பிரகடனம் உலகத்தமிழர் பேரவையின் ஊடகப்பேச்சாளர் சுரேன் சுரேந்திரனால் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கடந்த வாரம் கையளிக்கப்பட்டது. அப்பிரகடனத்தை முற்றாக நிராகரித்தும், உலகத்தமிழர் பேரவையின் செயற்பாட்டைக் கண்டித்தும், இவ்விடயத்தில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தியும் இன்று புதன்கிழமை (13) கொழும்பிலுள்ள தனது இல்லத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் கூறுகையில்: பௌத்த தேரர்கள் உள்ளிட்ட தரப்பினருடன் நேபாளத்தில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையை அடுத்து, கடந்த ஏப்ரல் 27 இல் கைச்சாத்திடப்பட்ட 6 அம்சங்களை உள்ளடக்கிய 'இமயமலை' பிரகடனத்தைக் கடந்த வாரம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கையளித்துள்ள உலகத்தமிழர் பேரவை உறுப்பினர்கள், அதுகுறித்து இலங்கையில் பதிவுசெய்யப்பட்டுள்ள பல்வேறு அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளையும் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர். அதுமாத்திரமன்றி இலங்கையிலுள்ள வெளிநாட்டு இராஜதந்திரிகளையும் சந்தித்து அப்பிரகடனத்துக்கு அங்கீகாரம் கோரியுள்ளனர். முதன்முதலாக உலகத்தமிழர் பேரவை உருவாக்கப்பட்டபோது, அது பல்வேறு அமைப்புக்களையும் உள்ளடக்கியதோர் குடை அமைப்பாகவே காணப்பட்டது. அதன்படி அவ்வமைப்பு உருவாக்கப்பட்டபோது அதில் அங்கம்வகித்த (பின்னர் அதிலிருந்து விலகிய) பல அமைப்புக்கள் ஒன்றிணைந்து இப்பிரகடனத்தைக் கண்டித்தும், விமர்சித்தும் அறிக்கை வெளியிட்டுள்ளன. குறிப்பாக உலகத்தமிழர் பேரவையானது புலம்பெயர் தமிழர்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாகத் தம்மைக் காண்பித்துக்கொள்வது தவறு எனவும் அவ்வமைப்புக்கள் சுட்டிக்காட்டியுள்ளன. இவ்வாறானதொரு பின்னணியில் உலகத்தமிழர் பேரவையின் ஊடகப்பேச்சாளர் சுரேன் சுரேந்திரன் எம்மைச் சந்தித்து இதுகுறித்துக் கலந்துரையாடுவதற்கு அனுமதி கோரியிருந்தார். இருப்பினும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் மத்திய குழு அக்கோரிக்கையை அடியோடு நிராகரித்ததுடன், அதற்கான காரணங்களைத் தெளிவுபடுத்தி அவருக்குரிய பதிலும் அனுப்பிவைக்கப்பட்டது. மாவீரர் நாளில் தமது அன்புக்குரியவர்களை நினைவுகூருவதற்கு ஒன்றுகூடியவர்களுக்கு எதிராகத் தற்போதைய அரசாங்கம் பயங்கரவாதத்தடைச்சட்டத்தைப் பிரயோகிக்கின்றது. வட, கிழக்கு மாகாணங்களில் தமிழ்மக்களுக்கு எதிரான திட்டமிட்ட இனவழிப்பு அரங்கேற்றப்பட்டுவருகின்றது. இவ்வாறு அடக்குமுறைகள் மேலோங்கியுள்ள சூழ்நிலையில், ரணில் விக்ரமசிங்கவை மையப்படுத்தி உலகத்தமிழர் பேரவையினால் முன்னெடுக்கப்பட்டிருக்கும் இம்முயற்சியை அரசாங்கத்துக்கு வெள்ளையடிக்கும் செயற்பாடாகவே நாங்கள் பார்க்கின்றோம். அதுமாத்திரமன்றி முன்னைய காலங்களில் தமிழர்களின் நலன்களுக்கு விரோதமாக செயற்பட்டுவந்த உலகத்தமிழர் பேரவை, இன்னமும் அதிலிருந்து மாறவில்லை என்பதையும் இந்நகர்வு வெளிப்படுத்துகின்றது. உலகத்தமிழர் பேரவையின் இந்த நடவடிக்கைகளை தமிழ்த்தேசியக்கூட்டமைப்பினர், குறிப்பாக இரா.சம்பந்தனும், எம்.ஏ.சுமந்திரனும் அங்கீகரித்திருப்பதாகத் தெரிகின்றது. கடந்த காலங்களிலும் கூட்டமைப்பு உலகத்தமிழர் பேரவையுடன் மிகநெருங்கிய உறவைப் பேணிவந்திருப்பதுடன், கூட்டமைப்பிலிருந்து வேறுபடுத்திப் பார்க்கமுடியாத அதன் தொடர்ச்சியாகவே பேரவை இயங்கிவருகின்றது. தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவாக செயற்படுவதாகக் கடந்த காலங்களில் கடுமையான விமர்சனங்கள் எழுந்திருந்தன. அதன் விளைவாகவே கடந்த 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றத்தேர்தலில் கூட்டமைப்பின் வாக்குவங்கி வெகுவாகச் சரிவடைந்தது. எனவே எதிர்வரும் ஆண்டு பாராளுமன்றத்தேர்தலும் நடைபெறவுள்ள நிலையில், அதில் இதுவரை காணாத பாரிய சரிவொன்றைச் சந்திக்கநேரும் என்பதால் கூட்டமைப்பு 'நல்ல பிள்ளையாக' செயற்பட முயற்சிக்கின்றது. அதன்படி தமது வாக்குவங்கியைப் பாதுகாத்துக்கொள்ளும் அதேவேளை, தமது உதிரிகளான உலகத்தமிழர் பேரவையின் ஊடாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு அங்கீகாரத்தை வழங்கும் மறைமுக நடவடிக்கையில் கூட்டமைப்பு ஈடுபடுகின்றது. 'இமயமலை' பிரகடனத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள 6 அம்சங்களும் வட, கிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழ்மக்களுக்கோ அல்லது வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் உள்ளிட்ட பாதிக்கப்பட்ட தரப்பினருக்கோ அல்லது அண்மையில் தமது அன்புக்குரியவர்களை நினைவுகூர்ந்தமைக்காகப் பயங்கரவாதத்தடைச்சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்டவர்களுக்கோ எவ்வகையிலும் பயனளிக்காது. மாறாக அவை தமிழர் தாயகப்பகுதிகளில் திட்டமிட்ட விதத்தில் இடம்பெற்றுவரும் இனவழிப்பை மூடிமறைத்து, அதனை நேர்மறையான விதத்தில் காண்பிப்பதற்கும், தற்போதைய அரசியலமைப்பில் உள்ள விடயங்களை நடைமுறைப்படுத்துமாறு வலியுறுத்துவதன் ஊடாக தமிழ்மக்களுக்குப் போலியான நம்பிக்கையைக் கொடுப்பதற்கும், பொறுப்புக்கூறலுக்கு முற்றுப்புள்ளிவைத்து போலியான நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்பும் வகையில் அரசாங்கம் முன்னெடுத்துவரும் செயற்பாடுகளுக்கு ஆதரவளிப்பதற்கும், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு முழுமையான அங்கீகாரத்தை வழங்குவதற்குமே பங்களிப்புச்செய்யும். எனவே இதனை முற்றாக நிராகரிக்கவேண்டுமெனவும், இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபட்டால் பாரிய பின்விளைவுகளைச் சந்திக்கநேரும் என்ற பாடத்தை அவர்களுக்குப் புகட்டவேண்டும் எனவும் தமிழ்மக்களிடம் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கின்றோம் என்றார். உலகத்தமிழர் பேரவையின் முயற்சி ஒடுக்குமுறை அரசாங்கத்துக்கு 'வெள்ளையடிக்கும்' செயற்பாடு - கஜேந்திரகுமார் | Virakesari.lk
  6. புலம்பெயர் இலங்கையர்கள் என்ற அடையாளத்தை உறுதிப்படுத்துங்கள் - சஜித் பங்காளிகள் சகிதம் கோரிக்கை. ஆர்.ராம் புலம்பெயர் தமிழர்கள் என்ற அடையாளத்திலிருந்து விடுபட்டு 'புலம்பெயர் இலங்கையர்கள்' என்ற அடையாளத்தினை உறுதிப்படுத்துங்கள் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச உலகத் தமிழர் பேரவையினரிடத்தில் கேட்டுக்கொண்டுள்ளார். இதன்போது, புலம்பெயர் இலங்கையர்கள் என்ற அடையாளத்தினை உறுதிப்படுத்தவதற்கு நீண்ட தூரம் பயணிக்க வேண்டியுள்ளதாகவும், அதற்கான முதல் படியே இமயமலை பிரகடனம் என்றும் உலகத் தமிழர் பேரவையினர் பதிலளித்துள்ளனர். உலகத் தமிழர் பேரவை மற்றும் சிறந்த இலங்கைக்கான சங்க மன்றம் ஆகியவற்றின் பிரதிநிதிகளுக்கும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச தலைமையிலான எதிரணியின் பங்காளிகளுக்கும் இடையில் இன்று செவ்வாய்க்கிழமை (12) எதிர்க்கட்சித் தலைவரின் இல்லத்தில் சந்திப்பு நடைபெற்றது. இதில், பேராசிரியர்.ஜீ.எல்.பீரிஸ், லக்ஷ்மன் கிரியெல்ல, ரஞ்சித் மத்தும பண்டார, ஏரான் விக்கிரமரட்ன, தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், திகாம்பரம், உதயகுமார், வேலுகுமார், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம், தௌபிக் மற்றும் இலங்கை தமிழரசு கட்சியின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் எம்.பி ஆகியோர் பங்கேற்றிருந்தனர். இதன்போது, உலகத் தமிழர் பேரவையினால் இமயமலை பிரகடனம் கையளிக்கப்பட்டதோடு, அதனை செயற்பாட்டு ரீதியில் வெற்றி பெறச் செய்வதற்கான ஆழமான கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டன. மதிய போசன விருந்துபசாரத்துடன் நடைபெற்ற குறித்த கலந்துரையாடல் தொடர்பில் உலகத் தமிழர் பேரவையின் ஊடகப் பேச்சாளர் சுரேன் சுரேந்திரன் தெரிவிக்கையில், சஜித் பிரேமதாசவுடன் நடைபெற்ற சந்திப்பானது மிகவும் முக்கியமானதாக அமைந்தது. அவரது தலைமையிலான எதிரணியின் பங்காளிக்கட்சிகளின் தலைவர்களான மனோ கணேசன், ரவூப் ஹக்கீம் மற்றும் முக்கிய உறுப்பினர்களும் பங்கேற்றிருந்தனர். இந்த நிலையில், அவருடனான உரையாடலின்போது, இமயமலை பிரகடனத்தை நான்கு பீடாதிபதிகளுக்கும் கையளித்து அவர்களிடமிருந்து ஆதரவினையும், ஆசீர்வாதத்தினையும் பெற்றுக்கொண்டமையானது முக்கியமானதொரு விடயம் என்று சுட்டிக்காட்டினார். அத்தோடு குறித்த பிரகடனத்தின் உள்ளடகத்தில் காணப்படும் விடயங்களில் மூன்றில் இரண்டு பகுதியானது தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் காணப்படுவதால் அதனை ஏற்றுக்கொள்வதில் எந்தவிதமான தடைகளும் இல்லை என்றும் குறிப்பிட்டார். அதேநேரம், ஒருசில விடயங்கள் சம்பந்தமாக இன்னமும் ஆழமான கலந்துரையாடல்கள் அவசியமாக இருப்பதாக கூறியதோடு, அதற்கான முன்னெடுப்புக்களில் ஐக்கிய மக்கள் சக்தி உள்ளிட்ட எதிரணியினர் முழுமையான ஒத்துழைப்புக்களை வழங்குவார்கள் என்றும் கூறினார். இதேநேரம், அவரைப் பொறுத்தவரையில், அனைவரும் இலங்கையர்கள் என்ற அடையாளத்தினை உறுதி செய்து அனைத்தின பிரஜைகளும் சமமானவர்கள் என்பதை நிலைநிறுத்துவதே இலக்காக உள்ளதாக குறிப்பிட்டார். அந்த வகையில், புலம்பெயர் தமிழர் அமைப்பு என்பது புலம்பெயர் இலங்கையர் அமைப்பு என்ற அடையாளத்தினையே பிரதிநிதித்துவம் செய்ய வேண்டும் என்று எம்மிடம் எதிர்பார்ப்பதாகவும், அதனை ஒரு முக்கிய கோரிக்கையாக முன்வைப்பதாகவும் தெரிவித்தார். அச்சமயத்தில், புலம்பெயர் இலங்கையர் என்றோ அல்லது உள்நாட்டில் இலங்கையர்கள் என்ற அடையாளத்தினை உறுதிப்படுத்துவதற்கோ நாமும் அர்ப்பணிப்புடன் செயற்படுவதோடு, அந்த அடையாளத்தை உறுதிப்படுத்துவதற்கு நீண்ட பயணம் அவசியமாக உள்ளது. அந்தப் பயணத்தின் முதல் கட்டமாகவே இமயமலை பிரகடனம் காணப்படுகிறது என்ற விடயத்தினை சுட்டிக் காண்பித்தோம் என்றார். இதனையடுத்து, குறித்த குழுவினர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையை அவரது கொழும்பு வாசஸ்தலத்தில் சந்தித்ததோடு அமரபுர நிக்காயவைச் சேந்த வல்பொல விமலஞான தேரர், மாகல்லே நாகித மகா தேரர் பேராசிரியர் கந்தேகொட விமலதம்மே மகா தேரர், வாஸ்கடுவ மஹிந்த வம்ச மகா தேரர், பள்ளிகந்தே இரத்தினசார மகா தேரர், நிந்தனே சந்தவிமல மகா தேரர் ஆகியோரையும் சந்தித்தனர். இதில், கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையுடனான சந்திப்பின்போது, போர் உக்கிரமடைந்த காலத்தில் தான் போரை நிறுத்துவதற்காக தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனை சந்திப்பதற்கு கடுமையான முயற்சிகளை மேற்கொண்டதாகவும், அதேபோன்ற மறைந்த மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை ஊடாக பல நடவடிக்கைகளை முன்னெடுத்ததாகவும், இருப்பினும் அந்த முயற்சிகள் அனைத்தும் தோற்றுப்போனதாக கர்தினால் குறிப்பிட்டதாக அதன் பேச்சாளர் சுரேன் சுரேந்திரன் தெரிவித்தார். அதேநேரம், கடந்த காலத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவான தீர்மானங்கள், செயற்பாடுகளை ஏன் எடுத்திருந்தீர்கள் என்று கேள்வி எழுப்பியபோது, அவ்வாறான அணுகுமுறையின் ஊடாக இனங்களுக்கு இடையிலான பிரச்சினைகள் உட்பட அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வினை எட்ட முடியும் என்று கருதியதாக பதிலளித்ததாகவும் குறிப்பிட்டார். தற்போது எம்மால் கையளிக்கப்பட்ட இமயமலை பிரகடனத்தினை அமுலாக்குவதற்கு பொருத்தமான சூழல்கள் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்ட அவர், அதற்காக தான் ஆயர் பேரவையின் ஒத்துழைப்புக்களையும் பெற்றுக் கொடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுப்பதாகவும் குறிப்பிட்டார். மேலும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் பின்னணியில் மூன்றாவது கரமொன்று உள்ள நிலையில் அந்தச் சம்பவம் தொடர்பில் உண்மைகள் கண்டறியப்பட்டு பகிரங்கப்படுத்தப்பட வேண்டும் என்றும் அனைத்துப் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் நீதி கிடைப்பதற்கு தான் முழுமையான ஆதரவினை வழங்குவதாகவும் கூறியுள்ளார். இதனையடுத்து அமரபுர நிக்காயவின் தேரர்களை கொட்டாஞ்சேனை திபதுதேமராமய தாய் விகாரையில் சந்தித்த உலகத் தமிழர் பேரவை தலைமையிலான குழுவினர், அங்கு பிரித் வழிபாடுகளிலும் ஈடுபட்டனர். இதன்போது, நாட்டில் பிரிவினைவாத சிந்தனையை தோற்றுவித்து குழப்பங்களையும் பதற்றங்களையும் தோற்றுவிப்பது இலகுவானது. ஆனால் ஐக்கிய இலங்கைக்குள் இணைந்து வாழ்வதற்காக தீர்மானித்து முன்வருவது கடினமானதொரு பணியாகும். அந்தக் கடினமான பணியை உலகத் தமிழர் பேரவை முன்னெடுத்துள்ளமையை வரவேற்பதோடு, அந்த சிந்தனை மாற்றத்தின் மூலம் தற்போது ஏற்பட்டுள்ள சூழலை நன்மைகளை அளிக்கும் முகமாக பயன்படுத்த வேண்டும் என்று தேரர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர் என்ற சுரேன் சுரேந்திரன் மேலும் தெரிவித்தார். புலம்பெயர் இலங்கையர்கள் என்ற அடையாளத்தை உறுதிப்படுத்துங்கள் - சஜித் பங்காளிகள் சகிதம் கோரிக்கை | Virakesari.lk
  7. (எம்.மனோசித்ரா) பயங்கரவாதத் தடை சட்டம் அநாவசியமாகப் பயன்படுத்தப்படுவதை அங்கீகரிக்க முடியாது. இலங்கையில் தமிழ் மக்கள் கண்ணியத்துடன் வாழ்வதை எமது அரசாங்கம் உறுதி செய்யும். எனவே காசாவுக்கு ஆயுதம் வழங்கும் நாடுகள் மனித உரிமைகள் தொடர்பில் எமக்கு கற்பிக்கத் தேவையில்லை என்று வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார். ஜனாதிபதி ஊடக மையத்தில் வெள்ளிக்கிழமை (08) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், இலங்கைக்குள் மனித உரிமைகளை பாதுகாப்பதை நாம் பார்த்துக் கொள்கின்றோம். எம்மை விமர்சிக்கும் நாடுகளில் என்ன மனித உரிமைகள் இருகின்றன? காசாவில் 14 000 பேர் கொல்லப்பட்டுள்ளனர். அதனை நிறுத்துமாறு கூறுகின்றார்களா? மாறாக ஜனாதிபதி அங்கு சென்று ஆயுதங்களையும், நிதியையும் வழங்குகின்றார். எனவே இவ்வாறான நாடுகளின் இரட்டை நிலைப்பாட்டை எம்மால் ஏற்றுக் கொள்ள முடியாது. ஆனால் இலங்கையிலுள்ள மக்கள் கண்ணியத்துடன் வாழ்வதை நாம் உறுதி செய்ய வேண்டும். பயங்கரவாதத் தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவதை நானும் அங்கீகரிக்கவில்லை. நீதி அமைச்சராக பதவி வகித்த போது, நான் இது தொடர்பான சட்ட திருத்தமொன்றையும் முன்வைத்திருக்கின்றேன். ஏனைய நாடுகளின் அழுத்தங்களால் நாம் இதனைக் கூறவில்லை. எமது நாட்டிலுள்ள தமிழ் மக்கள் கண்ணியத்துடன் வாழ்வதற்கான சூழலை நாம் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். அதே வேளை பிரிவினைவாத நிலைப்பாடுகளுக்குள் செல்ல வேண்டாம் என்று தற்போதுள்ள இளம் தலைமுறையினரிடம் கேட்டுக் கொள்கின்றோம். பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தாம் பிரிவினைவாதத்தை விரும்புபவர்கள் இல்லை என்று தெரிவித்துள்ளமை வரவேற்கத்தக்கதாகும். ஆனால் இலங்கைக்கு வெளியிலுள்ள புலம்பெயர் தமிழர்கள் தமது வாக்கு வங்கிகளுக்காக பிரிவினைவாதத்தை ஆதரிக்கின்றனர். இங்கிலாந்தில் ஹமாஸ் தொடர்பில் எந்த நடவடிக்கைகளையும் முன்னெடுக்க முடியாது. ஆனால் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பை கௌரவிக்கும் வகையில் நினைவேந்தல்கள் இடம்பெறுகின்றன. இது இரட்டை நிலைப்பாடில்லையா? எனவே தான் இவர்களின் கருத்துக்களை எம்மால் ஏற்றுக் கொள்ள முடியாது என்று குறிப்பிடுகின்றோம். இதன் அரத்தம் மக்கள் பாகுபாடாக நடத்தப்பட வேண்டும் என்பதல்ல. இங்கும் நிச்சயம் மாற்றங்கள் ஏற்பட வேண்டும். பயங்கரவாதத் தடை சட்டம் மாற்றப்பட வேண்டும். அது அநாவசியமாக பயன்படுத்தப்படக் கூடாது. நினைவேந்தல்களை செய்வதில் பிரச்சினையில்லை. பிரபாகரனை நினைவு கூர்வதற்கு அவரது பெற்றோருக்கு உரிமையுண்டு. ஆனால் விடுதலைப் புலிகள் அமைப்பை பெருமைப்படுத்த அனுமதிக்க முடியாது. தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பை பெருமைப்படுத்துவது நாட்டில் வன்முறையைத் தூண்டும். ஒருமித்த நாட்டுக்குள் அதிகபட்ச அதிகாரப்பகிர்வை அங்கீகரிக்கின்றோம். உரிமைகளுக்காக அமைதியாகப் போராடுவதில் தவறில்லை என்றார். காசாவுக்கு ஆயுதம் வழங்கும் நாடுகள் மனித உரிமைகள் தொடர்பில் இலங்கைக்கு கற்பிக்கத் தேவையில்லை - அலி சப்ரி | Virakesari.lk
  8. யாழ்ப்பாணம் இனியபாரதி. யாழ்ப்பாணத்தில் சர்வதேச தரத்தினாலான சதுரங்கப் போட்டி இன்று வெள்ளிக்கிழமை காலை ஆரம்பமானது. குறித்த போட்டியானது எதிர்வரும் 12ஆம் திகதி செவ்வாய்க்கிழமை வரை இடம்பெறவுள்ளது. யாழ்ப்பாணம் - காங்கேசன்துறை வீதியில் அமைந்துள்ள செல்வா பலாஸில் நடைபெறும் போட்டியின் ஆரம்ப நிகழ்வில் , யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் எஸ். சிறிசற்குணராஜா பிரதம விருந்தினராக கலந்துகொண்டார். இந்திய துணைத்தூதராக அதிகாரி ஸ்ரீ ராம் மகேஷ், இலங்கை சதுரங்க கழகத்தின் தலைவர் லக்ஸ்மன் விஜேசூரிய , ஞானம் பவுண்டேசனின் உப தலைவர் சுந்தரம் அருமைநாயகம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர், "யாழ்ப்பாண சர்வதேச சதுரங்க போட்டி 2023" என்ற தலைப்பில் யாழ் மாவட்ட சதுரங்க சம்மேளனத்தினால் நடாத்தப்படும் இந்த போட்டியில் 800க்கும் மேற்பட்ட வீர வீராங்கனைகள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது. சர்வதேச தரத்தில் நடத்தப்படும் சதுரங்க போட்டியில் 150 இற்கு மேற்பட்டவர்களுக்கு பரிசு கிடைக்கும் விதமாக வரையறுக்கப்பட்டுள்ளதுடன் சகல வயது பிரிவிலும் இருபாலரும் கலந்து பரிசில்கள் பெறுவதற்கான வாய்ப்புக்கள் அதிகம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த போட்டி சர்வதேச போட்டியாக அமைந்துள்ளதால், எமது பிரதேசத்தில் உள்ள சதுரங்க வீரர்கள் தங்களின் சர்வதேச தரத்தை கூட்டுவதற்கு இது மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளது என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். (ச) JaffnaNews யாழில் ஆரம்பமான சர்வதேச சதுரங்க போட்டி! (newuthayan.com)
  9. (புதியவன்) யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விளையாட்டு விஞ்ஞான அலகின்வெள்ளிவிழா உதைபந்தாட்டத்தில் யாழ். சென். பற்றிக்ஸ் கல்லூரி சம்பியனானது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விளையாட்டு விஞ்ஞான அலகின் இருபத்தைந்தாவது ஆண்டு வெள்ளி விழாவை முன்னிட்டு, பாடசாலைகளுக்கு இடையில் 19 வயதுக்குட்பட்டவர்களுக்கான உதைபந்தாட்டப்போட்டியில் போட்டியின் இறுதியாட்டம் கடந்த நான்காம் திகதி யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இந்த இறுதியாட்டத்தில் சென். பற்றிக்ஸ் கல்லூரியை எதிர்த்து சென்.ஹென்றீஸ் கல்லூரி மோதியது. பரபரப்பாக நடைபெற்ற இந்த இறுதியாட்டத்தில் இரு அணிகளும் குறிப்பிட்ட நேரத்துக்குள் கோல் எதையும் போடாமையால் ஆட்டம் சம நிலையில் முடிந்தது. இதனால் வெற்றி தோல்வியைத் தீர்மானிப்பதற்காக வழங்கப்பட்ட சமநிலை தவிர்ப்பு உதையில், சென்.பற்றிக்ஸ் கல்லூரி 4:2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விளையாட்டு விஞ்ஞான அலகின் வெள்ளிவிழா சம்பியன் கிண்ணத்தைச் சுவீகரித்தது. (ஐ) யாழ். பல்கலைக்கழக உதைப்பந்தாட்டத்தில் சம்பியனானது சென். பற்றிக்ஸ் (newuthayan.com)
  10. தமிழர் தேசத்தை ஆக்கிரமிக்க அரச மரத்துடன் இணைந்தது கண்டல்! (புதியவன்) இதுவரை தமிழர் தேசத்தை ஆக்கிரமிக்கும் மரமாக வெள்ளரசு மரம் இருந்து வருகின்ற நிலையில், அதற்கு பக்கத் துணையாக இன்று கண்டல் தாவரங்களும் இடம்பிடித்திருக்கின்றன. அராலி தொடக்கம் பொன்னாலை வரையும் மற்றும் காரைநகர் பிரதேசம் போன்ற இடங்களில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் கடற்படையினரால் கண்டல் தாவரங்கள் நாட்டப்பட்டன. தொடர்ந்து அரச திணைக்களங்கள் பிரதேசத்திலுள்ள கடற்றொழிலாளர்கள் மற்றும் பொதுமக்களின் பங்குபற்றலுடன் இந்த மரங்களை கடலுக்குள் மற்றும் கடற்கரையோரமாக நாட்டினர். அந்த மரங்கள் ஓரளவு வளர்ந்து தங்களை நிலைப்படுத்திக்கொண்ட தற்போதைய நிலையில், காடுகளை பராமரிக்கவேண்டிய வனவளங்கள் பாதுகாப்புத் திணைக்களம் குறிப்பிட்ட கடற்கரையை ஆக்கிரமிக்க முனைப்புக்காட்டி வருகின்றது. இங்கு நாட்டப்பட்ட கண்டல் தாவரங்களைப் பராமரிக்கப்போகின்றார்கள் என்றும் மேலதிக கண்டல் தாவரங்களை நாட்டப்போகின்றார்கள் என்றும் குறிப்பிட்ட இடங்களை தங்களுக்கு வழங்குமாறும் மாவட்டச் செயலகத்திற்கு புள்ளிவிபரங்கள் மற்றும் வரைபடங்களுடன் வேண்டுகோளை அனுப்பியிருக்கின்றனர். விரைவில் அதை வர்த்தமானியில் வெளியிடப்போவதாகவும் தெரியவருகின்றது. கடந்த சில வாரங்களுக்கு முன்னர் காரைநகருக்கு சென்ற மேற்படி வனவளங்கள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகள் கண்டல் தாவரங்கள் நாட்டப்பட்ட இடங்களைப் பார்வையிட்டு அளவிட முயன்றனர் எனவும் அதற்கு தாம் அனுமதிக்கவில்லை எனவும் அங்குள்ள சமூகமட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர். தற்போது, அராலி தொடக்கம் பொன்னாலை வரையான கடற்கரையோரத்தையும் பொன்னாலை துருத்திப்பிட்டியையும் தாம் சுவீகரிக்கப்போகின்றார்கள் எனவும் மேற்படி திணைக்களம் தெரிவித்திருக்கின்றது. இதுவரை தொல்லியல் திணைக்களமும் அரச மரமும் தமிழர் நிலங்களை ஆக்கிரமித்துக்கொண்டிருந்த நிலையில் தற்போது வனவளங்கள் பாதுகாப்புத் திணைக்களமும் கண்டல் தாவரங்களும் தமிழர் நிலங்களை ஆக்கிரமிக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளது. தென்னிலங்கையில் வேறு எங்கும் வனவளங்கள் பாதுகாப்புத் திணைக்களம் கடற்பிரதேசத்தை ஆக்கிரமித்தது இல்லை. ஆனால், வடக்கில் இந்தச் செயற்பாட்டைத் தொடங்கியிருக்கின்றது. இவ்வாறான நிலையில், குறிப்பிட்ட கடற்பிரதேசமே தமது வாழ்வாதாரம் எனத் தெரிவித்துள்ள பிரதேச மக்கள் இதை எவரும் ஆக்கிரமிக்க அனுமதிக்கப்போவதில்லை எனவும் அவ்வாறான நிலை வந்தால் பெரும் எதிர்ப்பு நடவடிக்கைகளில் தாம் ஈடுபடுவார்கள் எனவும் தெரிவித்துள்ளனர். (ஐ) தமிழர் தேசத்தை ஆக்கிரமிக்க அரச மரத்துடன் இணைந்தது கண்டல்! (newuthayan.com)
  11. பூசாரி மனைவியுடன் தகாத உறவு: ஒருவர் படுகொலை, சகோதரிக்கு காயம் Mayu / 2023 டிசெம்பர் 08 , மு.ப. 11:11 - 0 - 221 பேய், பிசாசு, ஆவிகளை விரட்டியடிக்கும் பௌத்த பத்தினி தெய்வ வழிபாட்டு ஆலயத்தில் நோய்யை குணப்படுத்துவதற்காக சென்ற சகோதரன், சகோதரி மீது ஆலய பூசாரி மேற்கொண்ட தாக்குதலில் சகோதரன் உயிரிழந்துள்ளதோடு சகோதரி படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மட்டக்களப்பு - வாகரை மாங்கேணி பிரதேசத்தில் பௌத்த பத்தினி தெய்வ வழிபாட்டு ஆலயத்தில் புதன்கிழமை (6) குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் தாக்குதலை மேற்கொண்டவர் தலைமறைவாகியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். மட்டக்களப்பு புனானை பிரதேசத்தைச் சேர்ந்த 58 வயதுடைய அனுரா ஜெயலத் என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளதுடன் அவரது சகோதரியான 61 வயதுடைய சுமிதா ஜரங்கனி என்பவரே படுகாயமடைந்த நிலையில் மட்டு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த நபருக்கு காலில் மின்சார தாக்குதலால் ஏற்பட்ட நோயை குணப்படுத்துவதற்காக பேய் பிசாசு ஆவிகளை விரட்டியடிக்கும் மாங்கேணி பிரதேசத்திலுள்ள பௌத்த பத்தினி தெய்வ வழிபாட்டு ஆலயத்திற்கு அடிக்கடி சென்று நோயை குணப்படுத்தில் ஈடுபட்டு வந்துள்ளனர். மேலும் சம்பவம் தொடர்பில் பொலிஸாரின் விசாரணைகளில்: பூசகரின் மனைவியுடன் நோயை குணப்படுத்துவதற்காக சென்ற நபர் தொடர்பு வைத்திருந்ததன் காரணமாக, பூசகர் மனைவியை கத்தியால் தாக்க முற்றபட்ட நிலையில் அவர் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். இதனையடுத்து, மனைவியுடன் தொடர்புபட்டவர் மீதும் அவரது சகோதரி மீதும் காரின் மீதும் மேற்கொண்ட தாக்குதலில் நபர் உயிரிழந்ததுடன் காரையும் அடித்து சேதப்படுத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி தலைமறைவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வாகரை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர். Tamilmirror Online || பூசாரி மனைவியுடன் தகாத உறவு: ஒருவர் படுகொலை, சகோதரிக்கு காயம்
  12. வி.ரி.சகாதேவராஜா கொழும்பு, கொச்சிக்கடை பொன்னம்பலவாணேஸ்வரர் ஆலய வளாகத்தில் நிறுவப் பட்டிருந்த சுவாமி விவேகானந்தரின் சிலை அங்கிருந்து அகற்றப்பட்டுள்ளது. கடந்த ஒரு தசாப்த காலமாக அங்கிருந்த சுவாமி விவேகானந்தர் சிலை இவ்வாறு திடீரென அகற்றப்பட்டுள்ளது. உலகம் போற்றும் வகையில் இந்து மதத்தை அமெரிக்காவில் முழங்கிய பின் 1897 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 15 ஆம் தேதி சுவாமி விவேகானந்தர் கொழும்பில் வந்து இறங்கினார். அப்பொழுது அங்கிருந்த பெரிய தனவான்களும் இன்னும் பலரும் பொன்னம்பலம் ராமநாதனின் தலைமையில் தம்பையாவின் உதவிகளுடன் சுவாமி விவேகானந்தரின் வருகையை இலங்கை முழுவதும் மாபெரும் வகையில் கொண்டாடினர். சுவாமி விவேகானந்தருடைய வருகையை ஒட்டி பல இடங்களில் வரவேற்கும் தோரணங்களும் பூரண கும்பங்களும் வைக்கப்பட்டு சகல மரியாதைகளுடன் அருள்மிகு பொன்னம்பலவானேஸ்வரர் திருக்கோவிலுக்கு அழைத்துச் சென்றனர். சுவாமி விவேகானந்தரை, இந்த உலகத்திற்கு வழிகாட்டுவதற்காக வந்த திருஞானசம்பந்தரின் அவதாரமாகவே இலங்கை மக்கள் கருதியதாக அன்றைய செய்தித்தாள்கள் செய்தியை வெளியிட்டிருந்தன. இத்தகைய மாபெரும் சிறப்பு வாய்ந்த சுவாமி விவேகானந்தரின் வருகை பொன்னம்பல வாணேஸ்வரர் திருக்கோவிலில் கல்வெட்டாக பொறிக்கப்பட்டிருந்தது. 2013 ஆம் ஆண்டில் அந்த கல்வெட்டு கோவிலில் இருந்து அகற்றப்பட்டது. இது தொடர்பாக கோவில் நிர்வாகத்தை இந்து அமைப்புகளும் பொதுமக்களும் ராமகிருஷ்ண மிஷன் உட்பட செயல் அலுவலர்களும் தொடர்பு கொண்ட போது கல்வெட்டுக்கு பதிலாக சுவாமி விவேகானந்தரின் திருவுருவச் சிலையை வைப்பதாக அன்றைய நிர்வாக உறுப்பினர்கள் தெரிவித்தனர். அதற்கமைய கடந்த 2014 மேமாதம் முதலாம் திகதி வீரத்துறவி சுவாமி விவேகானந்தரின் 150 ஆவது ஜனன தினத்தை முன்னிட்டு இந்த சிலை ஆலய நிர்வாகம் கேட்டுக் கொண்டதற்கமைய கொழும்பு ராமகிருஷ்ண மிஷனால் வழங்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டது. சிலை அகற்றப்பட்டமை தொடர்பாக ராமகிருஷ்ண மிஷன் மற்றும் இந்திய அரசு சார்ந்த உயர்மட்டக் குழுக்கள், இந்து ஸ்வயம் சேவக அமைப்பு இன்னும் பல இந்து அமைப்புகள் கோயில் நிர்வாகத்திடம் கவலையையும் அதிருப்தியையும் தெரிவித்துள்ளன. அதற்கு 'மனிதர்களின் சிலையை நாம் ஆலயத்தில் வைப்பதில்லை' என்று ஆலய நிர்வாகம் எழுத்து மூலம் பதிலளித்திருப்பதாக கூறப்படுகிறது. எவ்வாறாயினும், இந்தியா காசி வாரணாசி ராமகிருஷ்ண மிஷன் கிளையில் இருந்து முன்னாள் கொழும்பு ராமகிருஷ்ண மிஷன் தலைவர் அவர்கள் சிலை அகற்றியமையை ஒட்டி இரண்டு பக்க கடிதத்தை நிர்வாகிக்கு அனுப்பியிருந்தார். அவருக்கும் அதே பதில் வழங்கப்பட்டிருக்கின்றது . இது தொடர்பாக இந்து அமைப்புகள் கவலை தெரிவித்து இருக்கின்றன. ஆலயத்திற்கு வெளியே வளாகத்தில் உள்ள சுவாமி விவேகானந்தர் ஒரு மனிதர் என்றால் ஆலயத்திற்கு உள்ளே உள்ள 64 நாயன்மார்களும் மனிதர்கள் தானே. அப்படியானால் அவர்களது சிலைகளும் அங்கிருந்து அகற்றப்படுமா? என்ற கேள்விகளும் எழுப்பப்பட்டுள்ளன. இதனை சுமுகமாக தீர்த்து வைப்பதற்கு பலரும் முயற்சி எடுத்து வருகின்ற பொழுதும் ஆலய நிர்வாகம் விடாப்படியாக இருப்பதாக கூறப்படுகிறது. Tamilmirror Online || கொழும்பில் சுவாமி விவேகானந்தர் சிலை மாயம்
  13. மத்ரஸா மாணவன் மரணம் ; சிசிடிவி கமராவின் வன்பொருள் மாயம் மத்ரஸாவில் சிசிடிவி கமராவின் வன்பொருள் (HARD DISK) மாயமான விடயம் தொடர்பில் சாய்ந்தமருது பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். மத்ரஸா மாணவனின் மரணமானது கொலையா அல்லது தற்கொலையா என்ற சந்தேகத்துடன் புலன் விசாரணை முன்னெடுத்து வரும் சாய்ந்தமருது பொலிஸார் இவ்விடயம் குறித்து கவனம் செலுத்தியுள்ளனர். மத்ரஸா பாடசாலை மாணவனின் மரணமானது கழுத்து நெரிக்கப்பட்டதால் ஏற்பட்டுள்ளதாக அம்பாறை பொது வைத்தியசாலை மரண விசாரணை அதிகாரி சி.ரி.மகாநாம நேற்று வியாழக்கிழமை (07) அறிக்கையிட்டுள்ள நிலையில் மேற்படி விசாரணையில் திருப்பம் ஏற்பட்டுள்ளது. சிசிடிவி கமராவின் சேமிப்பகம் வன்பொருள் மீட்கப்பட்டால் உண்மைகள் பல வெளியாகும் என பொலிஸார் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். மேலும், குறித்த மத்ரஸா மாணவனின் மரணமானது கொலையா அல்லது தற்கொலையா என்ற சந்தேகத்துடன் விசாரணை தொடர்ந்த வண்ணம் உள்ளது.அத்துடன் மாணவனின் மரண விசாரணைக்காக சாய்ந்தமருது பொலிஸாரால் அம்பாறை பொது வைத்தியசாலைக்கு அழைத்து செல்லப்பட்ட மத்ரஸா நிர்வாகியாகிய மௌலவி கைது செய்யப்பட்டு மீண்டும் பொலிஸ் நிலையம் ஒன்றின் தடுப்பு காவலில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளார். அத்துடன் இன்று (8) கல்முனை நீதிவான் நீதிமன்றில் சட்ட நடவடிக்கைக்காக ஆஜர்படுத்தப்பட்டுள்ளார். செய்திப்பின்னணி 13 வயது சிறுவன் சடலமாக மீட்பு-குர்ஆன் மத்ரஸா நிர்வாகி கைது-சாய்ந்தமருது பகுதியில் சம்பவம் 13 வயது மாணவன் தூக்கில் தொங்கிய நிலையில் மலசல கூடத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது சந்தை வீதியில் அமைந்துள்ள 3 மாடி கட்டடம் ஒன்றில் நடாத்தப்படும் மத்ரஸா ஒன்றில் கடந்த செவ்வாய்க்கிழமை (05) இரவு மட்டக்களப்பு மாவட்டம் காத்தான்குடி பகுதியைச் சேர்ந்த எம்.எஸ். முஸ்அப் (வயது-13) எனும் கல்வி கற்று வந்த மாணவனே தூக்கில் தொங்கி உயிரிழந்த நிலையில் இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார். மத்ரஸாவில் மஹ்ரீப் தொழுகைக்கு ஏனைய மாணவர்கள் கலந்து கொண்ட நிலையில் மரணமடைந்த மாணவன் அங்கு காணப்படாததன் காரணமாக சில மாணவர்கள் தேடிய நிலையில் மலசல கூடத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் அம்மாணவன் மீட்கப்பட்டு சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை மரணமடைந்த மாணவனின் பெற்றோர் உறவினர்கள் தூக்கில் தொங்குவதற்கு எமது பிள்ளை கோழையல்ல எனவும் ஏதோ ஒன்று நடைபெற்றுள்ளதை ஊகிக்க முடிவதாகவும் முறையான விசாரணை அவசியம் என கேட்டுக்கொண்டனர். இதனையடுத்து, மத்ரஸா மாணவனின் மரணத்தில் சந்தேகம் என குறித்த மத்ரஸாவினை சுற்றி பொதுமக்கள் குவிந்தமையினால் சாய்ந்தமருது பொலிஸ் பொறுப்பதிகாரி சம்சுதீன் தலைமையிலான பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று நிலமையை கட்டுப்பாட்டினுள் கொண்டு வந்தனர். மேலும், குறித்த மாணவனின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பொதுமக்கள் ஒன்று கூடி குறிப்பிட்ட மத்ரஸாவின் நிர்வாகி மீது தாக்குதல் மேற்கொள்ள தயாராகிய வேளை மேலதிக பொலிஸார் அவ்விடத்திற்கு அழைக்கப்பட்ட நிலையில், சாய்ந்தமருது பொலிஸாரால் மத்ரஸா நிர்வாகியாகிய மௌலவி கைது செய்யப்பட்டு அழைத்து செல்லப்பட்டார். இது தவிர குறிப்பிட்ட மத்ரஸாவின் நிர்வாகி மீது ஏற்கனவே பல பொலிஸ் முறைப்பாடுகள் இருப்பதாகவும் மாணவனின் மரணம் தற்கொலையல்ல என கூறி பொதுமக்கள் குழப்பத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை, அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சிறுவர் நன்னடத்தை பாடசாலையில் தங்க வைக்கப்பட்ட நிலையில் உயிரிழந்த 15 வயது சிறுவனின் மரணம் தொடர்பில் அப்பாடசாலையின் மேற்பார்வையாளரான பெண் கடந்த சனிக்கிழமை (2) அன்று சந்தேகத்தில் கல்முனை தலைமையக பொலிஸாரால் கைது செய்யப்பட்டு பெண்ணை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமையும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது. மத்ரஸா மாணவன் மரணம் ; சிசிடிவி கமராவின் வன்பொருள் மாயம் | Virakesari.lk
  14. பாலசுப்ரமணியம் காளிமுத்து பதவி,பிபிசி தமிழ் 6 டிசம்பர் 2023 மிக்ஜாம் புயல் காரணமாக தமிழ்நாட்டின் தலைநகரான சென்னை மிகுந்த பாதிப்பை சந்தித்துள்ளது. திங்கள்கிழமை தொடங்கி 24 மணி நேரத்தில் சென்னையில் அதிகபட்சமாக பெருங்குடியில் 45 செ.மீ மழை பதிவாகியுள்ளது. இந்த நிலையில் இந்த மழையால் ஏற்பட்ட சேதம் குறித்தும் மேற்கொள்ளப்பட்ட வடிகால் பணிகள் குறித்தும் எதிர்கட்சிகள் கேள்வி எழுப்பியுள்ளதால் இந்த நிகழ்வு அரசியல் பிரச்னையாகவும் உருவெடுத்துள்ளது. குறிப்பாக, திமுக அரசால் திட்டமிடப்பட்ட 4000 கோடி ரூபாய் மதிப்பிலான மழைநீர் வடிகால் பணிகள் என்ன ஆனது என்ற கேள்வியை எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட எதிர்கட்சி அரசியல் தலைவர் எழுப்பியுள்ளனர். திமுக அரசால் கொண்டு வரப்பட்ட 4000 கோடி ரூபாய் மதிப்பிலான மழைநீர் வடிகால் திட்டம் இந்த மழையில் கைகொடுத்ததா? திமுகவும் எதிர்கட்சிகளும் சொல்வது என்ன? எடப்பாடி பழனிசாமி கேள்வி சென்னையில் கடந்த வாரம் பெய்த மழை குறித்து X சமூக வலைதளத்தில் கடந்த நவம்பர் 30ம் தேதி பதிவிட்ட எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி,"சுமார் நான்காயிரம் கோடி ரூபாய் மதிப்பில் சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் மேற்கொண்டதாக மார்தட்டும் விடியா திமுக அரசின் இரண்டரை ஆண்டு கால ஆட்சி இதுவரை ஒரு புயலை கூட சந்திக்கவில்லை. ஆனால் இந்த சாதாரண மழைக்கே சென்னை மிதக்கிறது. நிர்வாகத் திறனற்ற "திமுக மாடல் ரோடு", "இரண்டரை ஆண்டு கால விடியா திமுக ஆட்சிக்கு இதுவே சாட்சி" என்பது போல் இன்று சென்னை முழுவதும் வெள்ளத்தில் மூழ்கி தவிக்கிறது" எனத் தெரிவித்தார். இந்நிலையில், செவ்வாய்க்கிழமை அன்று செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி 4 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் மழைநீர் வடிகால் பணிகள் நடைபெற்றதாக கூறியது என்ன ஆனது என கேள்வி எழுப்பினார். மேலும் பேசிய அவர், "வானிலை மையம் எச்சரித்த போதும் திமுக அரசு திட்டமிட்டு நடவடிக்கை எடுக்கவில்லை. மழை வெள்ள பாதிப்புகளை அரசு திட்டமிட்டபடி செயல்படுத்தவில்லை. தற்போது சரியான திட்டமிடல் இல்லாத காரணத்தால், மக்கள் இன்னல்களை சந்திக்கின்றனர். " எனத் தெரிவித்தார். முகாமில் உணவு, மருத்துவ வசதிகள் கிடைப்பதில்லை. உணவு, மருத்துவ வசதி கிடைக்காமல் மக்கள் அவதிப்படுகிறார்கள் எனத் செய்தியாளர்களிடம் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். எடப்பாடி பழனிசாமிக்கு முதல்வர் ஸ்டாலினின் பதில் என்ன? டிசம்பர் 4-ஆம் தேதி பத்திரிக்கையாளர்களை சந்தித்த முதலமைச்சர் ஸ்டாலின், "4000 கோடிக்கு மழைநீர் வடிகால் பணிகள் செய்தும் சென்னை மிதக்கிறது என எதிர்கட்சி தலைவர் பேசியிருக்கிறார். இந்த பிரச்னையை நான் அரசியாலாக்க விரும்பவில்லை. இருந்தாலும் சொல்கிறேன், 4000 கோடிக்கு பணிகள் நடந்த காரணமாகத்தான் 47 ஆண்டுகளாக இல்லாத அளவுக்கு மழை பெய்தும் சென்னை இப்பொழுது தப்பித்திருக்கிறது. இதற்கு அந்த நான்காயிரம் கோடியை திட்டமிட்டு செலவு செய்ததே காரணம்" எனக் கூறினார். அவர் மேலும் கூறுகையில், "அதிமுக ஆட்சி காலத்தில் எதுவும் செய்யவில்லை. ஆனால், திமுக ஆட்சிக்கு வந்து 2 ஆண்டுகளில் இந்த பணிகளை செய்திருக்கிறோம்." என்றார். பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் அறிவிக்கப்படுமா என்றக் கேள்விக்கு மத்திய அரசிடம் 5000 கோடி நிவாரண நிதி கேட்டுள்ளதாகவும் அதைப்பொறுத்தும் மாநில அரசின் நிதிநிலைமையை பொறுத்தும் நிவாரணம் குறித்து முடிவெடுக்கப்படும்" என முதல்வர் தெரிவித்தார். 5 டிசம்பர் 2023 மிக்ஜாம் புயல் தமிழ்நாட்டில் என்னென்ன பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது? – படங்கள்4 டிசம்பர் 2023 பட மூலாதாரம்,GETTY IMAGES "முதல்வர் ஸ்டாலின் விளம்பரம் செய்கிறார்" கோவை தெற்கு சட்டமன்ற தொகுதியின் உறுப்பினரான பாஜகவின் வானதி சீனிவாசன், 4000 கோடி ரூபாய் திட்டத்தால்தான் பாதிப்பு குறைவாக உள்ளதாக முதல்வர் எப்படி கூறுகிறார் எனக் கேள்வி எழுப்பியுள்ளார். அவர் தனது X பதிவில், "4000 கோடி பணிகளால் தான் பாதிப்பு குறைவு என மீண்டும் விளம்பரத்தில் இறங்கியுள்ளார் முதல்வர் ஸ்டாலின். 2015-ல் 28 முதல் 34 சென்டிமீட்டர் மழை பெய்தது. தற்போது பெருங்குடியில் மிக அதிகமாக 45 சென்டிமீட்டர் பெய்துள்ளது. ஆனால் சென்னை முழுவதும் பரவலாக 20 முதல் 30 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. கடந்த 2015 ஆம் ஆண்டை விட பாதிப்பு அதிகம். அப்படி இருக்கையில் 4000 கோடி பணிகளால்தான் பாதிப்பு குறைவு என கூறுவது எப்படி?" எனக் கேள்வி எழுப்பியுள்ளார். "சரியான திட்டமிடல் இல்லாமல் பணம் செலவழிக்கப்படுகிறது" இந்த விவகாரம் குறித்து அறப்போர் இயக்கத்தைச் சேர்ந்த சாம் பொன்ராஜிடம் பிபிசி தமிழ் பேசியது. அவர் கூறுகையில், "4000 கோடி ரூபாய் எப்படி செலவு செய்யப்பட்டது என்று எனக்கு தெரியவில்லை. ஆனால் செலவு செய்யப்பட்ட பணம் திட்டமிடலோடு செலவு செய்யப்படவில்லை. வடிகால் எங்கே இறங்குகிறது எங்கே ஏறுகிறது என்பது போன்ற திட்டமிடல் திமுக அரசிடம் ஆரம்பத்தில் இருந்தது. ஆனால், செயல்பாட்டில் அந்த திட்டமிடலோடு பணிகள் செய்யப்படவில்லை" எனத் தெரிவித்தார். மேலும் கூறுகையில், "இந்த மழையில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து நிறைய பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதற்கு முக்கியமான காரணம் சாலையின் உயரம் அதிகமானதே. புதிதாக சாலைகள் போடும்பொழுது ஏற்கனவே இருக்கும் சாலையை எடுத்துவிட்டுதான் புதிய சாலை போட வேண்டும் என அரசாணை வெளியிடப்பட்டது. ஆனால், சாலை போடும் அதிகாரிகள் அதை கண்காணிப்பதில்லை. இது குறித்து மக்கள் முறையிட்டால் உங்களது வீட்டை உயரப்படுத்திக்கொள்ளுங்கள் என அலட்சியமாக பதிலளிக்கிறார்கள்" என அவர் கூறினார். மேலும், "கடந்த அதிமுக ஆட்சியில் சரியான திட்டமிடல் இல்லாமல் வடிகால் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. திமுக அரசு வந்த புதிதில் அவர்களிடம் எப்படி வடிகால் பணிகள் அமைக்கவேண்டும் என்ற திட்டம் இருந்தது. ஆனால், அந்த திட்டமிடல் செயல்பாட்டில் பிரதிபலிக்கவில்லை" என சாம் பொன்ராஜ் தெரிவித்தார். பட மூலாதாரம்,X/SAMPONRAJ "உண்மையான இரும்புப் பெண்மணி மேயர் ப்ரியாதான்" இது குறித்து திமுகவின் செய்தித்தொடர்பாளர் சரவணனிடம் பிபிசி தமிழ் பேசியது. அவர் கூறுகையில், "45 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மழை பெய்துள்ளது. கடந்த ஆட்சிகாலங்களில் இப்படி மழை பெய்திருந்தால் சென்னையின் மையப்பகுதிகளிலேயே இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டிருக்கும். ஆனால், தற்போது சென்னையின் புறநகர்ப்பகுதிகளில் தண்ணீர் தேங்கியிருக்கலாம் ஆனால் மையப்பகுதிகளில் சில மணி நேரங்களிலேயே தண்ணீர் வடிந்துவிட்டது" எனக் கூறினார். மேலும்," 4000 கோடி ரூபாய் மழைநீர் வடிகால் திட்டம் என்பது மாநகராட்சி பகுதிகளுக்கு மட்டும்தான். அதனால்தான் நகரின் மையப்பகுதிகளில் நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார். எதிர்கட்சிகளான அதிமுக மற்றும் பாஜகவின் விமர்சனங்களுக்கு பதிலளிக்கையில்,"பாஜகவின் ஒரு கிலோமீட்டர் சாலையையே 250 கோடி ரூபாய்க்கு அமைத்த கட்சி. 2021-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் 1000 கோடி ரூபாய் செலவு செய்து வடிகால் பணிகள் செய்ததாக எடப்பாடி பழனிச்சாமி கூறினார். ஆனால், அதே ஆண்டு பெய்த மழையில் சென்னை பாதிக்கப்பட்டது." என அவர் தெரிவித்தார். மேலும் பேசிய அவர்,"சென்னை மாநகராட்சியின் பணிகளை விமர்சிப்பவர்கள் மேயர் பிரியா ராஜனின் உடல்மொழியையும் அவர்கள் பேசுவதையும் நக்கல் அடிக்கிறார்கள். அவர் ஒரு பட்டியலினத்தைச் சேர்ந்த பெண். அவர் ஒரு பெண் என்பதாலேயே விமர்சிக்கப்படுகிறார். அவர் இந்த நேரத்தில் சிறப்பாக பணி செய்து வருகிறார். உண்மையான இரும்புப்பெண்மணி என்றால் அது பிரியா ராஜன்தான்." என திமுகவின் சரவணன் தெரிவித்தார். சம்பர் 2023 ஜஞ்ஜிரா: சிவாஜி முதல் ஆங்கிலேயர் வரை யாராலும் இந்த கோட்டையை பிடிக்க முடியாதது ஏன்?29 செப்டெம்பர் 2023 பட மூலாதாரம்,GETTY IMAGES வெள்ள பாதிப்பிற்கு காரணம் கடல் சீற்றம் - ஆணையர் ராதாகிருஷ்ணன் கடந்த இரண்டரை ஆண்டுகளில் மட்டும் 3031 கிலோமீட்டர் தூரத்திற்கு மழை நீர் வடிகால்கள் சென்னையில் போடப்பட்டு உள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் கூறுகிறார். மேலும் அவர் கூறுகையில்,“சென்னை பெருநகரின் அடையாறு, கொசஸ்தலை ஆறு, கூவம் நதி, பக்கிங்காம் கால்வாய் வழியாக கடலில் மழை நீரை வெளியேற்ற வடிகால் வசதிகள் செய்யப்பட்டு உள்ளன. ஆனால், இந்த மிக்ஜாம் புயலால் எதிர்பாராத நிகழ்வாக சில மணி நேரங்களிலேயே அதிக அளவு மழை கொட்டி உள்ளது.” என தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில். “சென்னையில் உள்ள 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மழைநீர் வடிகால்கள் வழியாக மழை நீர் சென்று நான்கு பெரிய வடிகால் பாதை மூலம் கடலை நோக்கி செல்கிறது. இருந்தாலும், கடல் பரப்பிலிருந்து 100 கிலோ மீட்டர் தொலைவில் புயல் நிலை கொண்டு இருப்பதால் கடல் சீற்றம் ஏற்பட்டு வெள்ள நீரை உள்ளே ஏற்றுக் கொள்ளாமல் எதிர்த்து தள்ளி வெள்ள நீர் நகருக்குள் திரும்பி வருவதால் வெள்ள பாதிப்பு ஏற்பட்டு வருகிறது,”என அவர் தெரிவித்தார். கடல் மழை நீரை ஏற்றுக் கொண்டால் மட்டுமே வெள்ள பாதிப்புகள் தவிர்க்கப்படும் என்றும் அதனை எதிர் நோக்கி கண்காணித்து வருகிறோம் என்றும் அவர் தெரிவித்தார். சென்னை வெள்ளம்: ரூ.4000 கோடி என்ன ஆனது? அரசியலாக்கப்படுகிறதா சென்னை மழை? - BBC News தமிழ்
  15. சாரதா வி பதவி,பிபிசி தமிழ் 5 டிசம்பர் 2023 புதுப்பிக்கப்பட்டது 6 மணி நேரங்களுக்கு முன்னர் சென்னையை தாக்கிய மிக்ஜாம் புயல் பல்வேறு பகுதிகளை தீவிரமாக பாதித்துள்ளது. குறிப்பாக நீர் நிலைகளுக்கு அருகில் இருக்கக் கூடிய பகுதிகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் வீடுகளுக்குள் புகுந்த மழைநீர் நான்கு அடிக்கும் குறையாமல் இருந்தது. இந்த புயல் கடந்த எட்டு ஆண்டுகளில் சென்னை பார்க்காத அளவுக்கான அதிகனமழையை கொடுத்துள்ளது. இந்த புயல் மற்ற புயல்களிலிருந்து சில காரணிகளால் வேறுபட்டுள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மிக்ஜாம் புயல் எப்படி வித்தியாசமானது? புயல்கள் கரைக்கு எவ்வளவு அருகில் இருக்கிறதோ அவ்வளவு அதிகமாக அதன் தாக்கம் இருக்கும். மிக்ஜாம் புயல், சென்னைக்கு மிக அருகில், வெறும் 90 கி.மீ தொலைவில் வங்கக் கடலில் நிலைக் கொண்டிருந்தது. இது கடந்த ஆண்டு ஏற்பட்ட மண்டஸ், மற்றும் பிற புயல்களை விட சென்னைக்கு மிக நெருக்கமாக இருந்தது. பொதுவாக புயல்கள் நகர்ந்து கொண்டே இருக்கும், ஆனால் மிக்ஜம் புயலின் போது, கவனிக்க வேண்டிய மிக முக்கியமான விசயம், புயல் நகராமல் ஒரே பகுதியில் நிலைக் கொண்டிருந்தது. கிட்டத்தட்ட 18 மணி நேரமாக சென்னைக்கு அருகில் வங்கக் கடல் பகுதியில் நிலைக் கொண்டிருந்தது புயல். அந்த நேரத்தில் தான், அதாவது திங்கள்கிழமை அதிகாலை முதல் இரவு 9 மணி வரை விடாது மழை பெய்த நேரம். இது மற்ற புயல்களின் போது வழக்கமாக நேராத ஒன்று. அது மட்டுமல்லாமல் புயல் நகர்ந்து செல்லும் வேகமும் மிக குறைவாக இருந்தது. இதன் காரணமாகவும் சென்னையில் அதி கன மழை பெய்துள்ளது. பொதுவாக மணிக்கு 10 முதல் 18 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும், மணிக்கு வெறும் 7 கிலோமீட்டராக மெதுவாக சென்றது, மேலும் 5 கிலோமீட்டர் வேகத்தில் கிட்டத்தட்ட ஸ்தம்பித்து நின்றது என்று வானிலை ஆய்வு மைய தகவல்கள் கூறுகின்றன. 5 டிசம்பர் 2023 சென்னை வெள்ளம்: பாதுகாப்பாக இருக்க இதையெல்லாம் செய்யவே செய்யாதீர்கள்!5 டிசம்பர் 2023 பட மூலாதாரம்,IMD வெள்ளம் கடலுக்குள் செல்ல விடாமல் மிக்ஜாம் புயல் தடுத்தது எப்படி? கிரிக்கெட் ஆட்டத்தில் எப்படி, நின்று ஆடினார் என பேட்ஸ்மேன்கள் குறித்து கூறப்படுமோ, அது போல மிக்ஜம் புயல் சென்னைக்கு மிக அருகிலேயே நின்றுக் கொண்டு நகரவும் இல்லாமல் அதன் தாக்கத்தை சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள மாவட்டங்களில் காண்பித்துள்ளது. சென்னை அதிகனமழை பெறுவதற்கான காரணங்கள் இவை என்றால், பெய்த மழை நீர் வடியாமல் இருந்ததற்கு மற்றொரு காரணம் உள்ளது. மிக்ஜம் புயல் சென்னை கரையை ஒட்டி நிலைக் கொண்டிருக்கும் போதே, அது தீவிரமடைந்தது. இதன் காரணமாக இரண்டு விசயங்கள் நடந்தன. ஒன்று நீடித்த கனமழை பெய்தது. மற்றொன்று, கடல் கொந்தளிப்புடன் இருந்ததால், ஆறுகளிலிருந்து செல்லும் மழைநீர் கடலில் கலக்க வழியில்லை. அதாவது, அடையாறு, கூவம், ஆறுகள் வழியாக பெருக்கெடுத்து ஓடிய மழை நீர், கடலுக்குள் கலக்கவிடாமல், கடலில் நிலைக்கொண்டிருந்த தீவிர புயல் தடுத்துக் கொண்டிருந்தது என வானிலை ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். எனவே இந்த ஆறுகளில் வடியாத நீர், அருகில் உள்ள பகுதிகளில் வெளியேறியது. சென்னையில் திங்கட்கிழமை 24 செ.மீ. மழை பெய்தது, 2015 ஆம் ஆண்டில் பதிவான 29 செ.மீ. மழையை விட சற்று குறைவு. இருப்பினும், இந்திய வானிலை ஆய்வு மையம் 21 செ.மீ. மற்றும் அதற்கு மேற்பட்ட மழையை 'அதீத கனமழை' என்று வகைப்படுத்துகிறது, இது தற்போதைய நிலைமையின் தீவிரத்தன்மையைக் குறிக்கிறது. 2015 ஆம் ஆண்டு வெள்ளம், முக்கியமாக செம்பரம்பாக்கம் ஏரியின் வெள்ளக்கதவுகள் திறக்கப்பட்டதால் ஏற்பட்டது, தற்போதைய வெள்ளம் சூறாவளி புயலின் நேரடி விளைவாகும். ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணி முதல் திங்கட்கிழமை மாலை வரை 35 மணி நேரத்தில், நுங்கம்பாக்கத்தில் 43 செ.மீ. மழை பெய்தது. இந்த விளைவுகளிலிருந்து இன்னும் மீளாத இந்த நகரம், மிக்ஜாம் தாக்கத்திலிருந்து வெளிவர இன்னும் சில நாட்கள் ஆகலாம். செம்பரம்பாக்கம் ஏரி : 2023-ல் நிலை என்ன? 2015 பெருவெள்ளத்தின் போது செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து ஒரே நேரத்தில் திறந்துவிடப்பட்ட 29000 கன அடி நீரே வெள்ளத்துக்கு முக்கிய காரணமாக இருந்தது. அதன் பிறகு, செம்பரம்பாக்கம் ஏரி நீர் மிகவும் எச்சரிக்கையுடனே திறந்து விடப்படுகிறது. மிக்ஜம் புயலின் தாக்கம் தொடங்கிய போது, திங்கட்கிழமை காலை 4 மணிக்கு, ஏரியின் நீர்மட்டம் 21.01 அடியாக பதிவானது, இது அதன் அதிகபட்ச கொள்ளளவான 24 அடிகளுக்கு அபாயகரமான அளவில் நெருக்கமாக இருந்தது. ஏரிக்கு நீர் வரத்து 6,881 கன அடியாக இருந்தது. மாலை 5 மணிக்குள், நீர்மட்டம் 22.41 அடியாக உயர்ந்தது. எனவே, நீர்வளத் துறை உபரி நீரை விநாடிக்கு 6,000 கன அடி வீதத்தில் திறந்து விடப்பட்டது, பின்னர் படிப்படியாக வெளியேற்றப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்பட்டது. மற்றொரு முக்கியமான நீர்நிலையான பூண்டி ஏரியும், அதன் நீர்பிடிப்பு பகுதியிலிருந்து சுமார் 6,000 கன அடி நீர் வரத்து காரணமாக 17,000 கன அடி நீரை வெளியேற்றி வந்தது. இந்த நடவடிக்கைகள் ஆபத்தான வெள்ளம் போன்ற சூழலை தவிர்க்க அவசியம் என்றாலும், சென்னையில் ஏற்கனவே சவாலான புயல் சூழலை மேலும் சவாலாக்கியது. செம்பரம்பாக்கம் ஏரி : 2015-ல் நிலை என்ன? 2015 டிசம்பரில், தற்போது மிக்ஜம் புயல் பாதிப்பிலிருந்து வேறுபட்ட ஒரு பேரழிவு வெள்ளத்தை சென்னை எதிர்கொண்டது. செம்பரம்பாக்கம் ஏரி, அதன் முழு திறனுக்கு அருகில் இருந்தபோது, அடையாற்றில் திடீரென வேகமாக தண்ணீரை வெளியேற்றத் தொடங்கினர். அப்போது தான் நெருக்கடி தொடங்கியது. 2015 டிசம்பர் 1 அன்று, தொடர்ச்சியான மழையால் ஏரியில் 3,396 மில்லியன் கன அடி நீர் நிரம்பியது. மாலைக்குள், கால்வாய் உடைப்பு ஏற்படும் அபாயம் இருப்பதாக பொறியாளர்கள் கருதியதால், 29,400 கன அடி தண்ணீரை வெளியேற்றினர். அதற்கு முன்பு வரை 900 கன அடி நீர் மட்டுமே வெளியேற்றப்பட்டது. திடீரென 30 மடங்கு நீரின் அளவு அதிகரிக்கப்பட்டது. மிக்ஜம் புயல் காரணமாக சென்னையில் எட்டு பேர் உயிரிழந்துள்ளனர், 18,729 பேர் நிவாரண முகாம்களில் உள்ளனர். செவ்வாய்க்கிழமைக்குள், நகரில் உள்ள முக்கிய சாலைகள் திறக்கப்பட்டன, சுமார் 5,000 மாநகராட்சி ஊழியர்கள் சுத்தம் செய்தல் மற்றும் மீட்பு பணிகளுக்காக மற்ற மாவட்டங்களிலிருந்து அழைத்து வரப்பட்டனர். சுமார் 170 விமானங்கள் ரத்து செய்யப்பட்ட பிறகு செவ்வாய்க்கிழமை அதிகாலையில் விமான சேவைகள் மீண்டும் தொடங்கியது, ஆனால் புறநகர் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டன. சென்னை மெட்ரோ ரயில் அதிகரிக்கப்பட்ட எண்ணிக்கையிலான சேவைகளுடன் இயங்குகின்றன. மேடவாக்கம், கீழ்க்கட்டளை, முடிச்சூர் போன்ற தாழ்வான பகுதிகள் உட்பட பல பகுதிகள் 3-4 அடி தண்ணீரில் மூழ்கின. சென்னை வெள்ளம் கடலுக்குள் கலக்க முயன்றபோது மிக்ஜாம் புயல் என்ன செய்தது? - BBC News தமிழ்
  16. லூசி வில்லியம்சன் பதவி,மத்திய கிழக்கு செய்தியாளர், ஜெருசலேம் 6 டிசம்பர் 2023, 10:04 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் அக்டோபர் 7ஆம் தேதி ஹமாஸ் தாக்குதல்களின்போது பாலியல் வன்முறை மற்றும் பெண்கள் கொடூரமாக சிதைக்கப்பட்டதற்கான ஆதாரங்கள் பிபிசிக்கு கிடைத்துள்ளன. எச்சரிக்கை: பாலியல் வன்முறை மற்றும் பெண்கள் மீதான பாலியல் தாக்குதல் குறித்த விளக்கங்கள் உள்ளன. ஹமாஸ் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் உடல்களைச் சேகரித்து அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டிருந்த பலர், மனிதர்களின் உடைந்த இடுப்பு எலும்புகளுடன் கூடிய உடல்கள், காயங்கள், வெட்டுக் காயங்களுடன் கூடிய உடல்கள் மற்றும் பலர் பாலியல் வன்கொடுமை தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டதற்கான பல அறிகுறிகளைக் கண்டதாகவும், குழந்தைகள் மற்றும் பதின்மவயதினர் முதல் ஓய்வூதியம் பெறுவோர் வரை பாதிக்கப்பட்டிருப்பதாகவும் எங்களிடம் தெரிவித்தனர். நோவா இசை விழாவில் நேரில் கண்ட சாட்சியின் காணொளியை செய்தியாளர்களுக்கு இஸ்ரேலிய போலீஸார் காட்டினர். அதில், பாதிக்கப்பட்ட ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, உடல் சிதைக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது தொடர்பான ஆதாரங்கள் உள்ளன. தாக்குதல் நடந்த நாளில் ஹமாஸ் காட்சிப்படுத்திய காணொளியில் பெண்கள் நிர்வாணமாக்கப்பட்டு ரத்தம் தோய்ந்த நிலையில் கிடந்த சம்பவங்கள் பதிவாகியுள்ளன. ஹமாஸ் குழுவினர் பெண்களை பாலியல் ரீதியாகத் தாக்குதல் தொடுத்ததாகவும் அந்தக் காட்சிகளின் மூலம் தெரிய வந்துள்ளது. சில பாதிக்கப்பட்ட பெண்கள், தங்கள் சொந்தக் கதைகளைச் சொல்வதற்காகவே உயிர் பிழைத்துள்ளனர் என்றே நாங்கள் நம்ப வேண்டியிருக்கிறது. தாக்குதல் நடந்த பகுதியில் கிடந்த உடல்களைச் சேகரித்தவர்கள், பிணவறை ஊழியர்கள் மற்றும் உயிரிழந்த பெண்களின் கடைசி தருணங்கள் ஒன்றாக இணைக்கப்பட்டுள்ளன. இந்தத் தாக்குதலின்போது நோவா இசைத் திருவிழா நடந்த தளத்தில் இருந்த ஒரு பெண்ணை ஹமாஸ் குழுவினர் பதிவு செய்த ஒரு பயங்கரமான காட்சியை பத்திரிக்கையாளர்களிடம் போலீசார் தனிப்பட்ட முறையில் காட்டியுள்ளனர். ஹமாஸ் போராளிகள் ஒரு பெண்ணைக் கூட்டுப் பலாத்காரம் செய்து அவரைச் சிதைப்பதைப் பார்த்ததை ஒரு சாட்சி விவரித்தார். கடைசியாக அவரைத் தாக்கியவர் அவரை பாலியல் பலாத்காரம் செய்து, அப்போதே தலையில் சுட்டுக் கொன்றார். பட மூலாதாரம்,BBC/NIK MILLARD படக்குறிப்பு, ஹமாஸ் போராளிகள் அக்டோபர் 7 அன்று நோவா இசைத் திருவிழாவை நடந்த போது தாக்குதல் நடத்தி நூற்றுக்கணக்கானவர்களைப் படுகொலை செய்தனர். இந்த வீடியோவில், சாட்சி எஸ் என்று அழைக்கப்படும் பெண், தாக்குதலுக்கு உட்பட்டவர்களை ஹமாஸ் குழுவினர் ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு கடத்துவதையும், பின்னர் அவர்கள் அந்தப் பெண் மீது பாலியல் தாக்குதல் செய்வதையும் சைகை மூலம் தெரிவிக்கிறார். "அப்போது அந்தப் பெண் உயிருடன் தான் இருந்தார்," என்று சாட்சி எஸ் கூறுகிறார். "அவர் முதுகில் இருந்து இரத்தம் கசிந்துகொண்டிருந்தது." இத் தாக்குதலின் போது பாதிக்கப்பட்டவரின் உடலின் பாகங்களை ஆண்கள் எவ்வாறு துண்டித்தனர் என்பதை அவர் விரிவாகக் கூறுகிறார். "அவர்கள் அவருடைய மார்பகத்தை வெட்டி தெருவில் எறிந்தார்கள்," என்று அவர் கூறுகிறார். "அதன் பின் அவர்கள் அதனுடன் விளையாடிக் கொண்டிருந்தார்கள்." பாதிக்கப்பட்ட பெண், ஹமாஸ் சீருடையில் இருந்த மற்றொரு நபரிடம் பகிர்ந்துகொள்ளப்பட்டார். அவர் மீது தொடர்ந்து தாக்குதல் நடந்தது. "சீருடையில் இருந்த அந்த ஆண், அப்பெண்னை பாலியல் வன்புணர்வு செய்துகொண்டு, அச்செயலை முடிப்பதற்குள் பெண்ணின் தலையில் சுட்டுக் கொலை செய்தார். பின்னர் அவர் தன்னுடைய ஆடைகளைக் கூட முழுமையாக அணிந்துகொள்ளவில்லை. பாலியல் தாக்குதலின் போது ஒரு பெண் மிகக்கொடூரமாக இப்படி சொலை செய்யப்பட்டார்." அந்த இசைத் திருவிழா நடைபெற்ற தளத்தில் இருந்து நாங்கள் பேசிய ஒரு சாட்சி, "கொலை செய்யப்படுவது, பாலியல் வன்புணர்வு செய்யப்படுவது, தலை துண்டிக்கப்படுவது போன்ற சத்தம் மற்றும் அலறல்களை" கேட்டதாகக் கூறினார். அவர் கேட்ட கூச்சல்கள் மற்ற வகையான வன்முறைகளைக் காட்டிலும் பாலியல் வன்கொடுமையைத்தான் குறிக்கின்றன என்பதை, அதைப்பார்க்காமல் எப்படி உறுதியாகக் கூற முடியும் என்ற எங்கள் கேள்விக்கு, அந்த நேரத்தில் கேட்ட போது, அது நிச்சயமாக பாலியல் வன்தாக்குதலாக மட்டுமே இருந்திருக்கும் என்று அவர் கூறினார். ஒரு ஆதரவு அமைப்பின் மூலம் அவர் வெளியிட்ட அறிக்கை அதை "மனிதாபிமானமற்றது" என்று விவரிக்கிறது. "சில பெண்கள் இறப்பதற்கு முன் வன்புணர்வு செய்யப்பட்டனர், சிலர் காயம் அடைந்தபோது அதே கொடுமைக்கு உட்படுத்தப்பட்டனர், மேலும் சிலரின் உயிரற்ற உடல்களுடன் ஹமாஸ் குழுவினர் பாலுறவு கொண்டனர்," என்று அவரது அறிக்கை கூறுகிறது. "நான் உதவி செய்ய மிகவும் விரும்பினேன். ஆனால் என்னால் எதுவும் செய்ய முடியவில்லை. பட மூலாதாரம்,BBC/DAVE BULL படக்குறிப்பு, அக்டோபரில் நடந்த ஹமாஸ் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் இஸ்ரேலியர்கள் இன்னும் தாக்குதல் நடத்தி வருகின்றனர். பாலியல் வன்கொடுமையை நேரில் கண்ட பல சாட்சிகள் தங்களிடம் இருப்பதாக காவல்துறை கூறுகிறது. ஆனால் எத்தனை பேர் என்பது குறித்து மேலும் விளக்கம் அளிக்கவில்லை. நாங்கள் அவர்களிடம் பேசியபோது, அவர்கள் இன்னும் எஞ்சியிருக்கும் பாதிக்கப்பட்டவர்களை நேர்காணல் செய்யவில்லை எனக் கருதப்படுகிறது. இஸ்ரேலிய நாட்டின், ‘பெண்களுக்கு அதிகாரமளித்தல் துறை‘ அமைச்சர் மே கோலன் பிபிசியிடம் பேசியபோது, பாலியல் வன்புணர்வு மற்றும், பாலியல் கொடுமைக்கு ஆளான சிலர் அந்தத் தாக்குதல்களில் இருந்து தப்பியதாகவும், அவர்கள் அனைவரும் தற்போது மனநல சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறினார். "ஆனால் மிக மிகக் குறைவான எண்ணிக்கையிலானவர்கள் மட்டுமே இப்படித் தப்பினர். பெரும்பான்மையானவர்கள் கொடூரமாகக் கொல்லப்பட்டனர். அவர்களால் என்னுடனோ, அரசிடமோ, அல்லது ஊடகத்திடமோகூட எதுவும் பேச முடியாது," என்று அவர் கூறினார். ஹமாஸால் குழுவினர் காட்சிப்படுத்திய காணொளிகளில், ஒரு பெண்ணின் கைவிலங்கு மற்றும் கைகளில் வெட்டுகளுடன் பிணைக் கைதியாக பிடிக்கப்பட்ட காட்சிகள் மற்றும் அவரது கால்சட்டையின் இருக்கையில் ஒரு பெரிய ரத்தக் கறை படிந்த காட்சிகளும் அடங்கும். மற்ற காட்சிகளில், போராளிகளால் அழைத்துச் செல்லப்பட்ட பெண்கள் நிர்வாணமாக அல்லது அரை ஆடையுடன் இருப்பதாகத் தெரிகிறது. இதுபோன்ற கொடூரத் தாக்குதலுக்குப் பிறகு பல இடங்களில் இருந்து வரும் புகைப்படங்கள், பெண்களின் உடல்கள் இடுப்பிலிருந்து கீழே நிர்வாணமாக இருப்பதைக் காட்டுகின்றன, அல்லது அவர்களின் உள்ளாடைகள் ஒரு பக்கமாகக் கிழிக்கப்பட்டு, கால்கள் சிதறி, அவர்களின் பிறப்புறுப்பு மற்றும் கால்களில் காயத்தின் அறிகுறிகளுடன் தவிப்பதைக் காட்டுகின்றன. "இராக்கில் உள்ள ஐஎஸ்ஐஎஸ் குழு, போஸ்னியாவில் செயல்பட்ட விதத்தில் இருந்து பெண்களின் உடலை எப்படி ஆயுதமாக்குவது என்பதை ஹமாஸ் கற்றுக்கொண்டதைப் போல் உணர்கிறேன்," என்று ஹீப்ரு பல்கலைக்கழகத்தின் டேவிஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் இன்டர்நேஷனல் ரிலேஷன்ஸின் சட்ட நிபுணர் டாக்டர் கோச்சாவ் எல்காயம்-லெவி கூறினார். "பெண்களை எப்படி கொடுமைப்படுத்தவேண்டும் என்பது பற்றி அவர்களுக்குத் தெரிந்த விவரங்களை அறிந்துகொள்வது என்னை உறைய வைக்கிறது. அவர்களின் உடல் உறுப்புகளை வெட்டுவது, பிறப்புறுப்பைச் சிதைப்பது, பாலியல் வன்புணர்வு போன்றவற்றை அறிவது திகிலூட்டுகிறது." பட மூலாதாரம்,BBC/DAVE BULL படக்குறிப்பு, "இராக்கில் உள்ள ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பிடம் இருந்து, பெண்களின் உடல்களை எப்படி ஆயுதமாக்குவது என்பதை ஹமாஸ் கற்றுக்கொண்டது போல் உணர்கிறேன்," என்று கோச்சாவ் எல்காயம்-லெவி கூறினார். "பாலியல் வன்புணர்வுகளை அவர்கள் பார்த்ததால் அவர்களது மனநலம் மிகவும் கடினமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள குறைந்தது மூன்று சிறுமிகளுடன் நான் பேசினேன்," என்று அமைச்சர் மே கோலன் என்னிடம் கூறினார். "அவர்கள் இறந்தது போல் நடித்திருக்கிறார்கள். அவர்கள் அங்கு நடந்த அனைத்தையும் பார்த்தார்கள். எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டிருந்தார்கள். அவர்களால் சமாளிக்க முடியாத கொடூரங்கள் அங்கே அரங்கேறின." இஸ்ரேலின் காவல்துறைத் தலைவர் யாகோவ் ஷப்தாய் பேசும்போது, தாக்குதல்களில் இருந்து தப்பிய பலர் பேசுவதற்கு இயலாத நிலையில் இருப்பதாகவும், அவர்களில் சிலர் தாங்கள் பார்த்த அல்லது அனுபவித்ததைப் பற்றி ஒருபோதும் சாட்சியமளிக்க மாட்டார்கள் என்று, தான் நினைத்ததாகவும் கூறினார். "இளைஞர்கள் மற்றும் பெண்கள் 18 பேர் மனநல மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஏனெனில் அவர்கள் இனி செயல்பட முடியாது," என்று அவர் கூறினார். மற்றவர்கள் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. உயிர் பிழைத்தவர்களைச் சுற்றியுள்ள குழுக்களில் ஒருவர், பிபிசியிடம் பேசுகையில் ஏற்கெனவே சிலர் தங்களைக் கொன்றுவிட்டதாகக் கூறினார். தாக்குதல்களுக்குப் பிறகு பணியமர்த்தப்பட்ட தன்னார்வ உடல் சேகரிப்பாளர்கள் மற்றும் ஷூரா ராணுவத் தளத்திற்கு அடையாளம் காண வந்தவுடன் உடல்களைக் கையாண்டவர்களிடமிருந்து பெரும்பாலான சான்றுகள் கிடைத்துள்ளன. ஜக்கா என்ற மத அமைப்பில் தன்னார்வத் தொண்டு செய்யும் உடல் சேகரிப்பாளர்களில் ஒருவர், பெண்கள் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டது மற்றும் சிதைக்கப்பட்டதற்கான அறிகுறிகளை என்னிடம் விவரித்தார். ஒரு கர்ப்பிணிப் பெண்ணைப் பிடித்த ஹமாஸ் குழுவினர் அவரைக் கொல்வதற்கு முன்பு அவரது வயிற்றைக் கிழித்து, வயிற்றுக்குள் இருந்த கருவை குத்திக் கொன்றனர் என்று அவர் தெரிவித்தார். பிபிசியால் இந்தச் சம்பவத்தை நேரடியாகச் சரிபார்க்க முடியவில்லை. மேலும் இஸ்ரேலிய ஊடக அறிக்கைகள் ஹமாஸ் தாக்குதல்களின் அதிர்ச்சிகரமான பின்விளைவுகளில் பணியாற்றிய தன்னார்வலர்களின் சில சாட்சியங்களை கேள்விக்குள்ளாக்கியுள்ளன. நச்மென் டிக்ஸ்டெஜ்னா என்ற மற்றொரு நபர், கிப்புட்ஸ் பீரியில் இரு பெண்களின் உடல்கள், கைகள் மற்றும் கால்கள் கட்டிலில் கட்டப்பட்ட நிலையில் இருப்பதைப் பார்த்து எழுத்துப்பூர்வ சாட்சியம் அளித்துள்ளார். "ஒருவர் தனது பிறப்புறுப்பில் கத்தியை வைத்து பாலியல் ரீதியாக பயமுறுத்தப்பட்டார் என்பதுடன், அவரது அனைத்து உள் உறுப்புகளும் குத்திக் குதறப்பட்டன," என்று அவரது அறிக்கை கூறுகிறது. இசைத் திருவிழா நடைபெற்ற இடத்தில் அமைக்கப்பட்டிருந்த சிறிய தங்குமிடங்கள், "பெண்களின் உடல் குவியல்களால் நிரம்பியிருந்தன. அவர்களின் ஆடைகள் மேல் பகுதியில் கிழிந்திருந்தன. அதே நேரம் அந்த உடல்களின் கீழ் பகுதி முற்றிலும் நிர்வாணமாக இருந்தன. அந்த உடல் குவியல்களை உன்னிப்பாகப் பார்த்தபோது அவர்களது தலைகளில் நேரடியாக மூளையைக் குறிவைத்து துப்பாக்கி சூடு நடத்தப்பட்டிருப்பது தெளிவாகத் தெரிகிறது," என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தாக்குதல் நடந்த இடங்களில் இருந்து நூற்றுக்கணக்கான உடல்கள் தன்னார்வலர்களால் மீட்கப்பட்டுள்ளன. பட மூலாதாரம்,BBC/DAVE BULL படக்குறிப்பு, மே கோலன் பேசுகையில், "முதல் ஐந்து நாட்கள் வரை ஹமாஸ் குழுவினர் இஸ்ரேலில்தான் இருந்தனர்,” என்றார். இந்த கொடூரத் தாக்குதல்களுக்குப் பிறகு அந்தத் தொடக்க கால குழப்பமான நாட்களில், சில பகுதிகளில் அப்போதும் தாக்குதல் நடந்துகொண்டிருந்தது. அங்கே இருந்த குற்றக் காட்சிகளை கவனமாக ஆவணப்படுத்துவதற்கான தேவை மற்றும் தடயவியல் சான்றுகளை எடுப்பதற்கான தேவைகள் அதிகமாக இருந்தபோது, இப்பணிகளை மேற்கொள்வதற்கான வசதிகள் மட்டுப்படுத்தப்பட்டதாகவோ அல்லது தவறவிடப்பட்டதாகவோ புலனாய்வாளர்கள் ஒப்புக்கொள்கிறார்கள். "முதல் ஐந்து நாட்களுக்கு, ஹமாஸ் ஆயுதக் குழுவினர் இஸ்ரேலில்தான் இருந்தனர்," என்று தொடர்ந்து பேசிய மே காலன் கூறினார். "அதோடு எல்லா இடங்களிலும் பல நூற்றுக்கணக்கான உடல்கள் இருந்தன. அந்த உடல்கள் அனைத்தும் உறுப்புகள் சிதைக்கப்பட்ட நிலையிலேயே இருந்தன. பல உடல்கள் தீக்காயங்களுடன் இருந்தன." "இது ஒரு பாரிய உயிரிழப்பு நிகழ்வு" என்று போலீஸ் செய்தித் தொடர்பாளர் டீன் எல்ஸ்டுன் செய்தியாளர்களிடம் பேசியபோது கூறினார். "முதல் விஷயம், பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காண்பதில் அதிக கவனம் செலுத்தவேண்டும். குற்றம் நடந்த இடத்தில் நடத்திய விசாரணையில் இருந்துதான் தகவல்கள் கிடைக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. அவர்களுடைய உறவினர்கள், அவர்களுக்கு என்ன ஆனது என்பதை அறியத் துடித்துக்கொண்டுள்ளனர்." ராணுவத்தின் ஷூரா தளத்திற்கு உடல்கள் அடையாளம் காண கொண்டு வரப்பட்டன. அந்த தளத்தில் பணியாற்றுபவர்கள் புலனாய்வாளர்களுக்கு மிக முக்கியமான சில ஆதாரங்களை வழங்கியுள்ளனர். உடல்களை அடையாளம் காண அங்கு அமைக்கப்பட்ட கூடாரங்கள் மற்றும் குளிரூட்டப்பட்ட கப்பல் கொள்கலன்களின் தற்காலிக மையத்தில் இருந்து இந்த ஆதாரம் வெளியாகியுள்ளது. நாங்கள் சென்றபோது, மருத்துவமனை தள்ளுவண்டிகள், ஏராளமான உடல்களைச் சுமந்தவண்ணம் இருந்தன. அந்த வண்டிகள் இறந்தவர்களை அடைத்து வைத்திருந்த கொள்கலன்களுக்கு முன்னால் நேர்த்தியாக வரிசையாக நின்றன. காஸா மீது இஸ்ரேலின் குண்டுவீச்சைத் தொடர்ந்தபோது, போர் விமானங்கள் தலைக்கு மேல் கர்ஜித்தன. இங்குள்ள குழுக்கள் எங்களிடம் வன்புணர்வு மற்றும் பாலியல் வன்முறையின் தெளிவான ஆதாரங்களைத் தாங்கள் கண்டதாகக் கூறின. தொடர்ச்சியான வன்முறை துஷ்பிரயோகத்தால் உடைந்த இடுப்பு எலும்பு உட்பட ஏராளமான ஆதாரங்களைக் கண்டதாகத் தெரிவித்தது. "நாங்கள் எல்லா வயதில் உள்ள பெண்களையும் பார்த்தோம்," என்று தடயவியல் குழுவில் இருப்பவர்களில் ஒருவரான கேப்டன் மாயன் பிபிசியிடம் பேசிய போது கூறினார். "பாலியல் வன்புணர்வுகளில் பாதிக்கப்பட்டவர்களை நாங்கள் பார்த்தோம். எங்களிடம் நோயியல் நிபுணர்கள் உள்ளனர். அவர்கள் காயங்களைப் பார்க்கிறார்கள். மேலும் அவர்கள் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டதை நாங்கள் அறிவோம்." அவர் கையாண்ட உடல்களில் எந்த விகிதத்தில் இதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன என்று நான் அவரிடம் கேட்டேன். அவர், "ஏராளமாக" என்றார். "எல்லா வயதிலும் ஏராளமான பெண்கள் இந்த கொடூரத்துக்கு உட்படுத்தப்பட்டிருக்கின்றனர்." பட மூலாதாரம்,BBC/DAVE BULL படக்குறிப்பு, நோவா இசைத் திருவிழா நடந்த தளத்தில் குப்பைகள் தரையில் குவிந்துள்ளன. பாதிக்கப்பட்டவர்களின் உடல்கள் சிதைக்கப்பட்டிருப்பதால், எத்தனை பேர் உயிரிழந்தனர் என்பதைக் கண்டுபிடிப்பது மிகவும் கடினம். "இது நிச்சயமாக ஏராளமானோர் இப்படி சிதைக்கப்பட்டதைத் தான் காட்டுகிறது," என்று அங்கு பணிபுரியும் மற்றொரு ராணுவ வீரர், தனது முதல் பெயரான அவிகயில் என்பதை மட்டும் பயன்படுத்துமாறு கேட்டுக்கொண்டு தெரிவித்தார். "சொல்வது கடினம். சில எரிந்த உடல்களை நான் கையாண்டிருக்கிறேன். அவர்கள் என்ன செய்தார்கள் என்று எனக்கு முன்பே தெரியாது. மேலும் கீழே பாதி காணாமல் போன உடல்கள் கிடந்தன. அவர்கள் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டதால்தான் உடல்கள் அப்படி இருந்தனவா என்பதும் எனக்குத் தெரியாது. ஆனால் பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார்களா என்பதற்குப் போதுமான ஆதாரங்கள் உள்ளன. போதுமானதை விட அதிகம்." "சில நேரங்களில் பல உடல்கள் மிகச் சிறிய பகுதியுடன் மட்டுமே இருக்கின்றன," என டாக்டர் எல்காயம்-லெவி என்னிடம் கூறினார். "ஒருவேளை அந்த உடல்களில் உள்ள ஒரு விரல், கால் அல்லது கை, அல்லது வேறு ஏதேனும் உறுப்பைக் கொண்டு அவர்களை அடையாளம் காண முடியும். ஆனால் ஏராளமான உடல்கள் முற்றிலும் எரிக்கப்பட்டுவிட்டன. எத்தனை பேர் இப்படி கொடூரத்துக்கு உட்படுத்தப்பட்டனர் என்பதை எப்போதும் துல்லியமாகக் கணிக்க முடியாது என்று நான் சொல்ல விரும்புகிறேன்." "டஜன் கணக்கான" பாதிக்கப்பட்டவர்களின் அடிப்படையில் இங்கே பணிபுரிபவர்களில் சிலர் தனிப்பட்ட முறையில் பேசுகிறார்கள். ஆனால் ஆதாரங்கள் இன்னும் கிடைத்துக்கொண்டிருக்கின்றன. அதனால் அந்த எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும் என அவர்கள் எச்சரிக்கின்றனர். டாக்டர் எல்காயம்-லெவி தலைமையிலான குழுவினர், பாலியல் குற்றங்கள் குறித்த சாட்சியங்களைச் சேகரித்து வரும் நிலையில், அக்டோபர் 7 அன்று நடந்தது மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் என்பதை விளக்கப் போதுமான ஆதாரங்கள் இருப்பதால், அதை உலக நாடுகள் முறையாக விசாரித்து ஏற்றுக்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளது. "நாங்கள் திட்டவட்டமான ஆதாரங்களைப் பார்க்கிறோம்," என்று அவர் என்னிடம் சொன்னார். "எனவே இது தற்செயலானது அல்ல. அவர்கள் தெளிவான உத்தரவுடன் வந்தனர். இது இனப்படுகொலை போன்ற ஒரு கொடூர வன்முறைத் தாக்குதல் தான்." ஷூரா ராணுவ தளத்திற்கு வந்த உடல்களில் வன்முறையின் அடையாளங்கள் இருப்பதை அவிகயில் ஒப்புக்கொள்கிறார். "ஒரே இடத்தைச் சேர்ந்த பெண்களின் குழுக்களுக்கு இதேபோன்ற முறையில் வன்முறைகள் நடத்தப்பட்ட மாதிரிகள் உள்ளன," என்று அவர் கூறினார். "ஒரு விதத்தில் வன்புணர்வு செய்யப்பட்ட பெண்களின் தொகுப்பாக இந்த உடல்கள் இருக்கலாம். ஆனால் அனைத்து உடல்களிலும் ஏற்பட்டிருக்கும் காயங்களில் ஒற்றுமைகள் இருப்பதை நாங்கள் காண்கிறோம். மேலும், பலமுறை வன்முறை செய்யப்படாத உடல்களாகவே இருந்தாலும், ஒரே மாதிரியாக பலமுறை துப்பாக்கியால் சுடப்பட்ட ஒரு வித்தியாசமான தொகுப்பாகவே அந்த உடல்கள் இருந்தன. எனவே வெவ்வேறு குழுக்களைச் சேர்ந்த தாக்குதல்தாரிகள் தனித்தனி பாணியில் சரியான திட்டத்துடன் தாக்குதல் நடத்தியிருப்பதாகத் தெளிவாகத் தெரிகிறது.” "இது ஒரு திட்டமிட்ட, நன்கு திட்டமிடப்பட்ட தாக்குதல்" என்று காவல்துறைத் தலைவர் யாக்கோவ் ஷப்தாய் செய்தியாளர்களிடம் கூறினார். பட மூலாதாரம்,BBC/DAVE BULL படக்குறிப்பு, "அக்டோபர் 7 அன்று இஸ்ரேல். அதற்கு முந்தைய நாளில் எப்படி இருந்ததோ, அப்படியிருக்கவில்லை," என காவல் துறைத் தலைவர் தலைவர் யாக்கோவ் ஷப்தாய் கூறுகிறார். விசாரணையில் ஈடுபட்டுள்ள இஸ்ரேலின் சைபர் கிரைம் பிரிவைச் சேர்ந்த டேவிட் காட்ஸ், ஹமாஸ் குழுவினரின் தாக்குதலின் ஒரு பகுதியாக பாலியல் வன்கொடுமைகள் திட்டமிடப்பட்டிருந்ததா என்பதைத் தெளிவாகக் கூற முடியாது. இருந்தாலும், தாக்குதல் நடத்திய ஹமாஸ் குழுவினர் அவர்களுடைய செல்போனில் பேசிய விவரங்கள், அவர்கள் பாலியல் வன்கொடுமை குறித்து ஏற்கெனவே திட்டமிட்டிருந்தனர் என்பதைக் காட்டுகின்றன என்றார். "அதை நாங்கள் ஏற்கெனவே நிரூபித்துவிட்டதாகக் கூறுவது பொறுப்பற்றதாக இருக்கும். ஆனால், தற்செயலாக எதுவும் நடக்கவில்லை என்பதையும், இந்த குற்றங்கள் அனைத்தும் ஏற்கெனவே திட்டமிட்டு நடத்தப்பட்டன என்பதையும் உறுதியாகக் கூற முடியும்." பாலியல் வன்முறை திட்டமிட்டு நடத்தப்பட்டது என்பதற்கு வலுவூட்டும் ஆதாரங்கள் ஹமாஸ் ஆயுதக் குழுவினரிடம் இருந்து கிடைத்திருப்பதாக இஸ்ரேல் அரசும் சுட்டிக்காட்டுகிறது. பிடிபட்ட சில போராளிகளிடம் நடத்திய விசாரணைகள் குறித்த தரவுகள் வெளியிடப்பட்டுள்ளன. அதில் பெண்கள் மிகச் சரியாக இந்த நோக்கத்திற்காகக் குறிவைக்கப்பட்டதாக பிடிபட்டவர்கள் கூறுகின்றனர். கடந்த வாரம், ஐ.நா. அமைப்பைச் சேர்ந்த பெண்களின் குழு ஓர் அறிக்கையை வெளியிட்டது. அந்த அறிக்கை "ஹமாஸின் மிருகத்தனமான தாக்குதல்களை சந்தேகத்திற்கு இடமின்றி கண்டித்தது" என்பதுடன் "அந்தத் தாக்குதல்களின்போது பாலின அடிப்படையிலான அட்டூழியங்கள் மற்றும் பாலியல் வன்முறைகள் பற்றிய பல தரவுகள் பீதியை ஏற்படுத்தின," எனத் தெரிவித்துள்ளது. சர்வதேச பெண்கள் உரிமை அமைப்புகள் தமது கூற்றுக்கு ஆதரவளிக்க அதிக நேரம் எடுத்ததாக டாக்டர் எல்காயம்-லெவி கூறினார். "இது மனிதகுலம் அறிந்த மிகவும் தெளிவாக ஆவணப்படுத்தப்பட்ட கொடூரம்," என்று அவர் என்னிடம் சொன்னார். "அக்டோபர் 7 அன்று, ஒருநாளைக்கு முன்பு இஸ்ரேல் எப்படியிருந்ததோ, அதேபோல் கண்விழிக்கவில்லை" என்று காவல்துறைத் தலைவர் யாக்கோவ் ஷப்தாய் கூறினார். இங்கு பெண்களுக்கு என்ன நடந்தது என்ற திகிலுக்கு மத்தியில், ஷூரா ராணுவ தளத்தில் உடல்களை அடையாளம் காணும் பிரிவைச் சேர்ந்த கேப்டன் மாயன் கூறுகையில், "அவர்களின் கண் இமைகளில் உள்ள மஸ்காரா மற்றும் அன்று காலையில் அவர்கள் அணிந்திருந்த காதணிகள் தான் மிகவும் வேதனையை அளித்த தருணங்கள்,” என்றார். ஒரு பெண்ணாக அவருக்குள் அது என்ன தாக்கத்தை ஏற்படுத்தியது என்று நான் கேட்டேன். "பயங்கரவாதம்," என்று ஒற்றை வார்த்தையில் அவர் பதிலளித்தார். "இது எங்களுக்கு உண்மையில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது." ஹமாஸ் மிருகத்தனமாக இஸ்ரேல் பெண்கள் மீது நடத்திய பாலியல் தாக்குதல்: அக்டோபர் 7இல் என்ன நடந்தது? - BBC News தமிழ்
  17. இனியபாரதி. சமாதானத்தின் செய்தியை தலதா மாளிகையிலிருந்து நல்லூர் நோக்கி எடுத்தும் செல்லும் பயணம் 100 இளைஞர் அமைப்புக்களால் முன்னெடுக்கப்பட்டது. சர்வமத தலைவர்களின் ஆதரவுடன் ஜனநாயக இளைஞர் காங்கிரஸ் உள்ளிட்ட 100 இளைஞர்கள் அமைப்புக்கள் கண்டி தலதா மாளிகை தொடக்கம் நல்லூர் கந்தசுவாமி கோவில் வரை உள்ள சர்வமத தலைவர்களுக்கு சமாதானத்தின் செய்தி மற்றும் கோரிக்கைகளை முன்வைத்தல் வேலைத்திட்டத்தை முன்னெடுத்திருந்தனர். நேற்று முன்தினம் திங்கட்கிழமை கண்டி தலதா மாளிகை மற்றும் கண்டி சிறீ நாட்ட தேவாலத்திற்கருகாமையில் இந்த செயற்திட்டத்தை ஆரம்பித்த இளைஞர்கள் நேற்று பிற்பகல் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தை வந்தடைந்தனர். குறித்த இந்த வேலைத்திட்டம் அன்பிற்கும் நட்புக்குமான வலையமைப்பின் ஏற்பாட்டில் ஆரம்பிக்கப்பட்டுள்மை குறிப்பிடத்தக்கது. (ச) சமாதானத்தின் செய்தியை தலதா மாளிகையிலிருந்து நல்லூருக்கு எடுத்தும் செல்லும் பயணம் இளைஞர் அமைப்பு. (newuthayan.com)
  18. Published By: DIGITAL DESK 3 06 DEC, 2023 | 09:26 AM கல்முனை, சாய்ந்தமருது பிரதேசத்தில் உள்ள குர்ஆன் மதரஸாவில் இருந்து தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்ட சிறுவனின் மரணத்தில் சந்தேகம் வெளியிட்டு நேற்று செவ்வாய்க்கிழமை (05) இரவு பொதுமக்கள் மதரஸாவை முற்றுகையிட்டு குழப்பத்தில் ஈடுபட்டனர். சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, காத்தான்குடி பிரதேசத்தைச் சேர்ந்த 13 வயதுடைய எம்.எஸ்.முஷாப் எனும் மாணவனே தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டு சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலையில் சடலமாக சேர்க்கப்பட்டுள்ளார். இந்த மரணம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை சாய்ந்தமருது பொலிஸார் மேற்கொண்டுவருவதுடன் குறித்த மதரஸாவின் நிர்வாகியையும் பொலிஸார் கைது செய்துள்ளனர். அந்த மாணவனின் மரணம் தற்கொலையல்ல கொலையாகவே இருக்கும் என்றும் அந்த மதர்ஸாவின் நிர்வாகி மீது ஏற்கனவே நிறைய பொலிஸ் முறைப்பாடுகள் இருப்பதாகவும் கூறி பொதுமக்கள் குழப்பத்தில் ஈடுபட்டனர். களத்திற்கு வருகைதந்த சாய்ந்தமருது பொலிஸார் மதராஸாவின் மான்பை பேணும்விதமாக மக்கள் கலைந்து செல்லுமாறும், இந்த மரணம் தொடர்பில் நியாயமான விசாரணையை முன்னெடுக்க பொலிஸார் தயாராக இருப்பதாகவும், தடயியல் பொலிஸாரையும், நீதவானையும் வரவழைத்து மேலதிக நடவடிக்கைகளை எடுக்கவுள்ளதாவும் பொதுமக்களுக்கு வழங்கிய உறுதியையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். மதரஸாவில் இருந்து மீட்கப்பட்ட சிறுவனின் சடலம் : மதரஸாவின் நிர்வாகி பொலிஸாரால் கைது | Virakesari.lk
  19. Published By: VISHNU 06 DEC, 2023 | 12:02 PM யாழ்ப்பாணம் - தெல்லிப்பழை மற்றும் மல்லாகம் பகுதியில் வன்முறை சம்பவங்களில் ஈடுபட்ட வன்முறை கும்பல் பயணித்த வாகனம் முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பகுதியில் மீட்கப்பட்டுள்ளதுடன், புதுக்குடியிருப்பில் மறைந்திருந்த இரு சந்தேகநபர்களையும் பொலிஸார் கைது செய்துள்ளனர். தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக, திங்கட்கிழமை (05) இளைஞன் ஒருவர் மீது வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்ட பின்னர் அங்கிருந்து, ஹயஸ் ரக வாகனத்தில் காங்கேசன்துறை - யாழ்ப்பாண வீதியில் தப்பியோடி மல்லாகம் பகுதியில் , வாகனத்தை விட்டு இறங்கி வன்முறையில் ஈடுபட்டு, வீதியில் சென்றவர்களை வாள்களை காட்டி அச்சுறுத்தி அட்டகாசத்தில் ஈடுபட்டனர். அது தொடர்பில் மல்லாகம் சந்தியில் கடமையில் நின்ற பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து , பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்த போது , வன்முறை கும்பல் வாகனத்தில் ஏறி தப்பி சென்றுள்ளனர். தப்பியோடிய வாகனத்தை நோக்கி பொலிஸார் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட போதிலும், வன்முறை கும்பல் தப்பியோடி இருந்தது. சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வந்த நிலையில், யாழில் இயங்கும் வன்முறை கும்பலை சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டு, நீதிமன்றங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ள சந்தேகநபர் ஒருவரை தெல்லிப்பழை பொலிஸார் செவ்வாய்க்கிழமை (6) பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து விசாரணைகளை முன்னெடுத்து, வாக்கு மூலங்களை பதிவு செய்த பின்னர் அவரை விடுவித்து இருந்தது. அதேவேளை, தெல்லிப்பழையில் வாள் வெட்டுக்கு இலக்காகி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் இளைஞன் கொடுத்த வாக்கு மூலத்தின் அடிப்படையில், வன்முறையில் ஈடுபட்ட கும்பலை பொலிஸார் அடையாளம் கண்டு இருந்தனர். அத்துடன் , தெல்லிப்பழை முதல் சுன்னாகம் வரையிலான வர்த்தக நிலையங்களில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு (CCTV) கமரா பதிவுகளை ஆய்வு செய்ததன் மூலம், வன்முறை கும்பல் பயணித்த வாகனத்தை அடையாளம் கண்டு இருந்தனர். அதன் அடிப்படையில் தீவிர விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், வாகனத்துடன், சம்பவத்துடன் தொடர்புடைய நபர்கள் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் , பதுங்கி இருந்தப்பதாக பொலிஸாருக்கு கிடைக்க பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் , சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் வாகனத்தை மீட்டதுடன், அங்கு பதுங்கியிருந்த இருவரையும் கைது செய்து யாழ்ப்பாணம் அழைத்து வந்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். அதேவேளை குறித்த வன்முறை சம்பவமானது, யாழ்ப்பாணத்தில் இயங்கி வரும் இரண்டு வன்முறை கும்பலுக்கு இடையில் நீண்ட காலமாக நிலவி வரும் மோதல் சம்பவத்தின் தொடர்ச்சியே என பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. யாழில். வன்முறையில் ஈடுபட்டு பதுங்கியிருந்த இருவர் கைது ; வாகனமும் மீட்பு | Virakesari.lk
  20. தனியார் பல்கலைக்கழகம் ஒன்றில் பட்டப்படிப்பை மேற்கொள்ளும் 18 வயது மாணவனை சொகுசு காருடன் கடத்திச் சென்று பலவந்தமாக மாணவனுக்குச் சொந்தமான காணி ஒன்றை பதிவு செய்ய முயற்சித்த தனியார் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மூன்று மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கொஹுவல பொலிஸார் தெரிவிக்கின்றனர். கடத்தப்பட்ட மாணவன் சிகிச்சைக்காக களுபோவில போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சந்தேக நபர்களால் கடத்தப்பட்ட காரும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. கடத்தப்பட்ட மாணவன் கடந்த 4ஆம் திகதி தனது தந்தையை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இறக்கி விட்டு வீட்டுக்கு வந்துள்ளார். பின்னர் களுபோவில ஆசிரி மாவத்தையில் உள்ள தனது வீட்டிலிருந்து வெளியேறிய போது கடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். தெஹிவளை மாநகர சபைக்கு அருகாமையில் மாணவன் பயணித்த சொகுசு காரின் பாதையை வேன் ஒன்று குறுக்கே மறித்து வேனிலிருந்து இறங்கிய நான்கு இளைஞர்கள் குறித்த காருக்குள் ஏறி அந்தக் காரை மாணவனுடன் கடத்திச் சென்றுள்ளமை விசாரணைகளில் தெரிய வந்துள்ளது. காருடன் கடத்தப்பட்ட தனியார் பல்கலைக்கழக மாணவன் : தெஹிவளையில் சம்பவம்! | Virakesari.lk
  21. (எம்.மனோசித்ரா) கொழும்பு பாதுகாப்பு பேரவை உடன்படிக்கை, புரிந்துணர்வு ஒப்பந்தம் மற்றும் தலைமையக ஒப்பந்தத்தில் கையொப்பமிட அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இந்து சமுத்திரத்தின் பிராந்தியப் பாதுகாப்பு உள்ளிட்ட உறுப்பு நாடுகளின் பொதுவான பாதுகாப்புக்குள்ள அச்சுறுத்தல்கள் மற்றும் சவால்களுக்கு முகங்கொடுப்பதற்காக உறுப்பு நாடுகளின் பெறுமதிகளுக்கு மதிப்பளித்து இயங்குகின்ற ஒரு பேரவையாக கொழும்பு பாதுகாப்பு பேரவை தாபிக்கப்பட்டுள்ளது. தற்போது இப்பேரவையில் இந்தியா, மாலைதீவு, மொரிசீயஸ் மற்றும் இலங்கை போன்ற நாடுகள் உறுப்பு நாடுகளாகவும், பங்களாதேஷ் மற்றும் சீஷெல்ஸ் போன்ற நாடுகள் அவதானிப்பு நாடுகளாகவும் செயலாற்றுகின்ற பிராந்திய அமைப்பாகும். இப்பேரவையின் பணிகளை மிகவும் முறைமைப்படுத்துவதற்காக உடன்படிக்கையொன்றில் கையொப்பமிடுவதற்கும், கொழும்பு நகரில் தாபிப்பதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள குறித்த அமைப்பின் செயலகத்திற்குரிய புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் உறுப்பு நாடுகளிடையே கையொப்பமிடுவதற்கும், மற்றும் செயலகத்தின் பணிகளுக்குரிய தலைமையக ஒப்பந்தமொன்றில் இலங்கை மற்றும் தலைமையக ஜெனரலுக்கும் இடையே கையொப்பமிடுவதற்கும் பாதுகாப்பு அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. கொழும்பு பாதுகாப்பு பேரவை உடன்படிக்கையில் கையெழுத்திட அரசாங்கம் நடவடிக்கை | Virakesari.lk
  22. வட்டுக்கோட்டை இளைஞன் படுகொலை வழக்கில் மூன்று பொலிஸ் சாட்சிகள் மற்றும் இரண்டு சிவில் சாட்சிகள் யாழ்.நீதவான் நீதிமன்றில் செவ்வாய்க்கிழமை (5) தமது சாட்சியங்களை பதிவு செய்துள்ளன. வட்டுக்கோட்டை பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட நாகராசா அலெக்ஸ் எனும் இளைஞன் சித்திரவதைகளுக்கு உள்ளன நிலையில் கடந்த 19ஆம் திகதி உயிரிழந்துள்ளார். அது தொடர்பிலான வழக்கு விசாரணைகள் யாழ்.நீதவான் நீதிமன்றில் நீதவான் ஏ.ஏ. ஆனந்தராஜா முன்னிலையில் நடைபெற்று வருகின்றது. அந்நிலையில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வழக்கு விசாரணைகளின் போது , நவம்பர் 08ஆம் திகதி முதல் 12ஆம் திகதி வரையில் பொலிஸ் நிலையத்தில் கடையாற்றிய பெண் பொலிஸ் உத்தியோகஸ்தர் உள்ளிட்ட மூன்று பொலிஸ் சாட்சியங்கள் தமது சாட்சியை பதிவு செய்தன. அத்துடன் உயிரிழந்த இளைஞனின் சகோதரி மற்றும் , உயிரிழந்த இளைஞன், அவருடன் கைதான இளைஞன் ஆகிய இருவருடன், பிறிதொரு சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு, ஒரே சிறைக்கூடத்தில், தடுத்து வைக்கப்பட்டு இருந்த இளைஞனும் மன்றில் தோன்றி சாட்சியம் அளித்தனர். அதனை அடுத்து வழக்கினை நாளை மறுதினம் வெள்ளிக்கிழமைக்கு நீதவான் ஒத்திவைத்தார். அதேவேளை வெள்ளிக்கிழமை அடையாள அணிவகுப்பு நடத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. வட்டுக்கோட்டை இளைஞன் படுகொலை : 3 பொலிஸ் சாட்சி உள்ளிட்ட 5 சாட்சியங்கள் பதிவு | Virakesari.lk
  23. எழிலன். யாழ்ப்பாணம் - சாவகச்சேரியில் உள்ள தேவாலயத்திற்கு ஞாயிறு ஆராதனைக்கு செல்லவில்லை எனப் பங்குத் தந்தை ஒருவரால் தாக்கப்பட்ட சிறுமி ஒருவர் சாவகச்சேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கொடிகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் உள்ள தேவாலயம் ஒன்றின் பங்குத் தந்தையே இவ்வாறு சிறுமியைத் தாக்கியதாக கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. சிறுமியின் தந்தை கத்தோலிக்கராக உள்ளபோதும் தாயார் சைவ சமயத்தைச் சேர்ந்தவர் என்ற வகையில் சிறுமி தேவாலயத்திற்குச் செல்வது கிடையாது. தந்தையாருடன் சில சமயம் தேவாலயம் சென்று வரும் பழக்கம் உடையவர் என்றும் இருந்தபோதும் கடந்த சில நாட்கள் தேவாலயம் செல்லாத சிறுமியை அழைத்து தாக்கியதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன் காரணமாக சாவகச்சேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுமியை இன்று மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. (ச) தேவாலய ஆராதனைக்கு செல்லாததால் பங்குத் தந்தையால் தாக்கப்பட்ட சிறுமி; மருத்துவமனையில் அனுமதி! (newuthayan.com)
  24. இனியபாரதி. அதிகரித்துள்ள போதைப்பொருள் பாவனையால் நுரையீரல் மற்றும் இருதய "வால்வு" ஆகியவற்றில் கிருமி தொற்றுக்கு உள்ளாகி யாழ்,போதனா மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வருவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக மருத்துவமனை வட்டாரம் தெரிவித்துள்ளது. அதில் பெருமளவானோர் 25 வயதிற்கும் குறைந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது. வெளிநாடுகளுக்கு செல்வதற்காக இளையோர் பலர் மருத்துவ சான்றிதழ்களை பெற்றுக்கொள்வதற்காக போதனா மருத்துவமனைக்கு மருத்துவ பரிசோதனைக்காக வருகின்றனர். அவ்வாறானவர்களுக்கு பரிசோதனைகளை மேற்கொள்ளும் போது நுரையீரல் மற்றும் இருதய வால்வு ஆகியவற்றில் கிருமி தொற்றுக்கள் ஏற்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. அது தொடர்பில் அவர்களிடம் பெற்றுக்கொண்ட தகவலின் அடிப்படையில அவர்கள் ஊசி மூலம் போதைப்பொருளை நுகர்வது கண்டறியப்பட்டது. அதேவேளை சுவாசிக்க முடியாமல் சிரமத்துடன் கடும் காய்ச்ச்சலுடனும் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வரும் இளையோருக்கு மேற்கொண்ட பரிசோதனையில் அவர்களுக்கும் இருதய வால்வில் தொற்று ஏற்பட்டுள்ளமை கண்டறியப்பட்டது. அவர்களும் ஊசி மூலம் போதைப்பொருளை நுகர்பவர்கள். இவ்வாறாக தினமும் சராசரியாக மூவர் மருத்துவமனைக்கு சிகிசிச்சைக்கு வருகின்றனர் என தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை கடந்த ஒரு வருட காலத்தில் யாழ்ப்பாணத்தில் ஊசி மூலமான போதைப்பொருள் நுகர்வினால் 15க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. (ச) போதைப்பொருள் பாவனையால் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு - மருத்துவமனை வட்டாரம் தகவல்! (newuthayan.com)
  25. -சென்னை வெள்ளம் | அடையாறு ஆற்றில் பாயும் 40,000 கனஅடி நீர் - கரையோர வீடுகள் பாதிப்பு சென்னை: சென்னை அடையாறு - ஆற்றில் பல்வேறு இடங்களில் இருந்து வரும் 40,000 கனஅடி தண்ணீர் பாய்வதால், வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. இதனால், சைதாப்பேட்டை உள்ளிட்ட தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அடையாறு ஆற்றின் கரையோர வீடுகள், கட்டிடங்கள் பலவும் நீரில் மூழ்கியுள்ளன. தென்மேற்கு வங்கக் கடல்பகுதிகளில் நிலவிய மிக்ஜாம் புயல் ஞாயிற்றுக்கிழமை மாலை வட தமிழக கரையை சுமார் 250 கி.மீ. தொலைவில் நெருங்கியபோது, சென்னை மற்றும் புறநகர் மாவட்டங்களான திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகியவற்றில் பலத்த காற்றுடன் விட்டுவிட்டு மழை பெய்தது. புயல் மேலும் நெருங்கிய நிலையில் இரவு முழுவதும் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. விடிய விடிய மழை கொட்டித் தீர்த்தது. காலையில் காற்றின் வேகம் அதிகரித்ததுடன், மழையின் தீவிரமும் அதிகரித்து அதி கனமழையாக கொட்டியது. இடைவிடாது கொட்டிய இந்த கனமழையால் சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் தண்ணீர் தேங்கி குளம்போல காட்சியளித்தது. இதனிடையே செம்பரம்பாக்கம் உள்ளிட்ட நீர்தேக்கங்களில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீரும் நகரின் பெரும்பாலான பகுதிகளில் புகுந்ததால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக முடங்கியது. அடையாறு ஆற்றின் கரையோரத்தில் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களுக்கு சென்னை மாநகராட்சியுடன் ஒருங்கிணைந்து, காவல் துறை மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை அறிவிப்பு செய்யப்பட்டிருந்தது. மேலும், அடையாற்றின் கரையோர பகுதிகளான ஈக்காட்டுத்தாங்கல், ஜாபர்கான்பேட்டை, சைதாப்பேட்டை உள்ளிட்ட குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் சூழந்ததால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். செம்பரம்பாக்கத்தில் திறக்கப்பட்ட தண்ணீரின் காரணமாக சென்னையின் பல்வேறு பகுதிகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. இந்த நிலையில், பல்வேறு இடங்களில் இருந்துவரும் நீர்வரத்தால், அடையாறு ஆற்றின் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், அடையாற்றில் 40,000 கனஅடி தண்ணீர் பாய்ந்து செல்வதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அடையாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக சைதாப்பேட்டை, ஈக்காட்டுதாங்கல், ஜாபர்கான்பேட்டை உள்ளிட்ட குடியிருப்புப் பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்தது. பொதுமக்கள் குற்றச்சாட்டு: அடையாற்றின் கரையோரத்தில் வசிக்கும் மக்களுக்கு சென்னை மாநகராட்சி மற்றும் காவல் துறை தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தாலும், பொதுமக்கள் தரப்பில் போதுமான முன்னறிவிப்பு செய்யப்படவில்லை என்று மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். திங்கள்கிழமை இரவு 7.30 மணி முதல் அதிகரிக்க தொடங்கிய வெள்ள நீரில் சைதாப்பேட்டை திடீர் நகர் பகுதியை சூழ்ந்துள்ளது. இந்தப் பகுதியில் வசித்த 200-க்கும் மேற்பட்டவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டு, அருகில் இருக்கும் திருமண மண்டபத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். கடந்த 2015-ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தில் மிகவும் பாதிப்புக்குள்ளான பகுதிகளில் இதுவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. ஆபத்தை உணராமல்... - இதனிடையே, அடையாறு ஆறு பாயந்து ஓடுவதை வெவ்வேறு பகுதிகளில் உள்ள பாலங்களின் மேல் ஆபத்தை உணராமல் மக்கள் பார்வையிட்டு வருகின்றனர். சைதாப்பேட்டை மற்றும் ஈக்காட்டுத்தாங்கல் பகுதியில், அடையாற்றில் ஓடும் வெள்ளத்தைப் பார்க்க ஆர்வமாக திரண்டுள்ள மக்கள், பலரும் வெள்ளத்தை தங்களது செல்போனில் படம்பிடித்து வருகின்றனர். பொதுமக்களின் பாதுகாப்பு கருதி அந்தப் பகுதியில் காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை வெள்ளம் | அடையாறு ஆற்றில் பாயும் 40,000 கனஅடி நீர் - கரையோர வீடுகள் பாதிப்பு | 40,000 cubic feet water release in Adayar river: Evacuation of people living in low-lying areas - hindutamil.in
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.